Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி

Featured Replies

பெரியார் சிலைகளை கட்டுகின்ற செலவில் மலசலகூடங்களை கட்டலாம் என்ற மதனராசாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

அதே போன்று இந்தக் கோயில்களை பாடசாலைகள், தொழிற்கூடங்களாக மாற்ற வேண்டும்.

எத்தனையோ பிள்ளைகள் மரநிழல்களில் இருந்து படிக்கின்றார்கள்.

கோயில்களை பாடசாலைகளாக மாற்றிய பிறகு, உள்ளே இருக்கும் சிறிய அறைகளை மாணவர்களுக்கான மலசலகூடங்களாக மாற்றலாம்.

அந்த அறைகளை மலசல கூடங்களாக மாற்றும் போது கட்டுமானப் பணி அதிகம் செய்யவேண்டிய தேவை இருக்காது. அந்த அறைகளில் தண்ணீர் வெளியேறுவதற்கான வழிகள் எல்லாம் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சபேசன் அண்ணா

வாயிற்கு வாய் தலைப்பைத் திசை மாத்தாதேங்கோ எண்டு கதைப்பியள். ஆனால் நீங்கள் பெரியாரைப் பற்றிக் கதைச்சால் உடனே திரும்பவும் கோவிலைப் பற்றித் தான் கதைக்கின்றியள்.

நீங்கள் யார். பகுத்தறிவாளர்கள். ஊருக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டவர்கள். ஆனால் இந்து மதத்தைச் சார்ந்தவங்கள், பிற்போக்குவாதிகள். திருந்தமாட்டதவங்கள். இதைத் தான் பெரியாரும் பல தடவை சொல்லியிருக்கார்.

அப்படியிருக்கேக்க பகுத்தறிவாளர் நீங்கள் முதலில் ஒண்டைச் செய்து காட்டவேணுமோ, அல்லது அந்தப் பிற்போக்குவாதிகள் முதலில் செய்ய வேணுமோ? பிற்பேர்ககுவாதிகள் எண்டு நீங்கள் சொல்லுற ஆட்களை முதலில் செய்து அவைக்குப் பின்னால் தான் நாங்கள் செய்வம் எண்டது இழுக்காக இல்லையோ?

முதலில் பெரியருக்குச் சிலை கட்டுற காசில் 4 கக்கூஸ் கட்டி, வேணுமெண்டால் பெரியாரை நினைவுபடுத்துறதற்கு, கொமோட்டைப் பெரியாற்ற வாய் மாதிரிச் செய்து நினைவுத் தூபியாக்கலாம்.

என்ன சொல்லுறியள்.

அதை விட மேலே நீங்கள் சொன்ன விடயம் ஒண்டுக்கும் இப்ப பதில் சொல்லணும்.

கோவிலில் சிலையிருக்கின்ற வரை பெரியார் சிலை வாறது எதிர்வினை எண்டமாதிரிச் சளாப்புறியள். உங்கட கருத்துப்படி பார்த்தால் மூடநம்பிக்கையை அழிக்க வேணுமென்றால் நாங்களும் மூடநம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்ற மாதிரித் தான் பொருள்படுது.

நான் விவாதத்தை திசை திருப்பவில்லை.

நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டதோடு, இன்னும் ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறேன்.

ஆனால் நீங்கள் சொல்கின்ற யோசனை செலவு கூடியது.

நான் சொன்ன யோசனை செலவு குறைந்தது.

நீங்கள் சொன்ன யோசனையில் மலசலகூடம் மட்டும்தான் இருக்கிறது.

நான் சொன்ன யோசனையில் மலசலகூடத்தோடு பாடசாலையும் இருக்கிறது.

அத்துடன் உங்களுடைய யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான வழியும் என்னுடைய யோசனையில் இருக்கின்றது.

கோயில்கள் பாடசாலைகளாக மாறினால், மாணவ சமுதாயத்திடம் அறிவு பெருகும். பல கழிப்பறைகளை கொண்ட பாடசாலையில் படித்த மாணவ சமுதாயம், அனைத்து மக்களுக்கும் நல்ல கழிப்பறைகள் வேண்டும் என்பதை உணருவர்.

ஆகவே வீணாக சிலைகளை அமைக்காது, பல மலசலகூடங்களை கட்டுவார்கள்.

பார்த்தீர்களா? நான் வாதத்தை திசை திருப்பவே இல்லை. உங்களுடைய யோசனையை நடைமுறைப்படுத்தவும், மக்களின் அறிவு பெருகவும் அருமையான யோசனையை கூறியிருக்கிறேன்.

......அதை விட மேலே நீங்கள் சொன்ன விடயம் ஒண்டுக்கும் இப்ப பதில் சொல்லணும்.

கோவிலில் சிலையிருக்கின்ற வரை பெரியார் சிலை வாறது எதிர்வினை எண்டமாதிரிச் சளாப்புறியள். உங்கட கருத்துப்படி பார்த்தால் மூடநம்பிக்கையை அழிக்க வேணுமென்றால் நாங்களும் மூடநம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்ற மாதிரித் தான் பொருள்படுது.

மதனராசா மாமாவிடம் ஒரு கேள்வி,

சிலைவைக்கிறதெல்லாம் மூடநம்பிக்கை என்றால் மாவீரருக்கு சிலை வைப்பது தவறோ? அது மக்களுக்காக வாழ்ந்து மறைந்த சில போராளிகளின்டை கொள்கைகளை, அர்ப்பணிப்புகளை, போராட்டங்களை நினைவூட்டிற ஒரு அம்சமெல்லோ? அதை மறக்காம இருக்கத்தான் அவை வைக்கப்படுது என்டால்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலோசனை கொடுக்குறதில சபேசன் அண்ணையாக்கள் திறமைசாலிகள் எண்டதை நான் அறிவேன். காலம் காலமாக திராவிடத்தின்ர பெயரில் நடத்தினது அது தானே. அதை அடிக்கடி நிருபிச்சு புல்லரிக்க வைக்கின்றியள். ஆனால் செயல்திட்டத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக நில்லுங்கோ எண்டால் ஆலோசனை கொடுக்கின்றதோட முடிச்சுக் கொள்ளுறியளே.

முதலில் நீங்கள் கட்டி வழிகாட்டியாக நில்லுங்கோ.

---

சாணக்கியன் மருமோன்

பிள்ளையார் சிலையை உடைச்சுப் போட்டு சிலைகளே வேண்டாம் எண்டு சொன்னது பெரியாரே தவிர, புலிகள் இல்லை கண்டியளோ. ஊருக்கு உபதேசம் செய்யக்க தங்களுக்கும் அப்படித் தான் நடக்க வேணும் எண்டு பகுத்தறிஞ்சு பிடிக்காமல் போச்சு கண்டியளோ. பரிதாபம்

புலிகள் கடவுள் மறுப்பையோ, அல்லது திராவிடக் கொள்கை தான் எங்கட கொள்கை எண்டு தூக்கிக் கொண்டு திரியல்ல. தமிழனுக்கு எது தேவை எண்டு உணருகினமோ அதை மட்டும் தான் ஏற்கினம். எனவே அது அவைக்குப் பொருந்துமெண்டு தெரியல்ல. உருவங்களை வழிபடுறதில்லை எண்டு சொன்ன முஸ்லீம்கள் கஃபாவைச் சுத்திச் சுத்தி வழிபடுறதும், கிறிஸ்தவங்கள் ஜேசுவையும், சிலுவையையும் கும்பிட வேண்டி வந்ததையும் இப்ப சொல்லித் தான் ஆகணும்.

யார் எங்கே எப்போது வேறுபடுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஒரு இலக்கியத்தை தூக்கி போடுங்கள் பார்க்கலாம்?

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு சைவர்களால் எழுதப்படவில்லை.

ஆலோசனை கொடுக்குறதில சபேசன் அண்ணையாக்கள் திறமைசாலிகள் எண்டதை நான் அறிவேன். காலம் காலமாக திராவிடத்தின்ர பெயரில் நடத்தினது அது தானே. அதை அடிக்கடி நிருபிச்சு புல்லரிக்க வைக்கின்றியள். ஆனால் செயல்திட்டத்தில் மக்களுக்கு வழிகாட்டியாக நில்லுங்கோ எண்டால் ஆலோசனை கொடுக்கின்றதோட முடிச்சுக் கொள்ளுறியளே.

முதலில் நீங்கள் கட்டி வழிகாட்டியாக நில்லுங்கோ.

---

சாணக்கியன் மருமோன்

பிள்ளையார் சிலையை உடைச்சுப் போட்டு சிலைகளே வேண்டாம் எண்டு சொன்னது பெரியாரே தவிர, புலிகள் இல்லை கண்டியளோ. ஊருக்கு உபதேசம் செய்யக்க தங்களுக்கும் அப்படித் தான் நடக்க வேணும் எண்டு பகுத்தறிஞ்சு பிடிக்காமல் போச்சு கண்டியளோ. பரிதாபம்

புலிகள் கடவுள் மறுப்பையோ, அல்லது திராவிடக் கொள்கை தான் எங்கட கொள்கை எண்டு தூக்கிக் கொண்டு திரியல்ல. தமிழனுக்கு எது தேவை எண்டு உணருகினமோ அதை மட்டும் தான் ஏற்கினம். எனவே அது அவைக்குப் பொருந்துமெண்டு தெரியல்ல. உருவங்களை வழிபடுறதில்லை எண்டு சொன்ன முஸ்லீம்கள் கஃபாவைச் சுத்திச் சுத்தி வழிபடுறதும், கிறிஸ்தவங்கள் ஜேசுவையும், சிலுவையையும் கும்பிட வேண்டி வந்ததையும் இப்ப சொல்லித் தான் ஆகணும்.

பெரியார் சிலை கல்லால் செய்யப்பட்டது.பெரியார் சிலை உடைத்தாலும் பில்ளையார் சிலையை உடைத்தாலும் கல்லுத் தான் வரும்.கடவுள் வரமாட்டார்.பெரியாருக்குச் சிலை வைப்பவர்கள் அவர் தம்மைக் காப்பார் என்றோ இல்லை அவர் சகலகலா வல்லவர் என்றோ அவருக்குக் லஞ்சம் குடுத்தால் தங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொடுப்பார் என்றோ நினைப்பதில்லை.இந்த அடிப்படையைக் கூட விளங்கிக் கொள்ளாமல் புல்லரிக்க வைக்கிறியள்.பெரியார் சிலைகளே வேண்டாம் என்றாரா கடவுள்கள் வேண்டாம் என்றாரா? இது கல்லால் ஆன சிலை இதற்கு ஒரு சக்தியும் கிடையாது என்பதற்காகாத் தான் உடைத்தார்.இதையே உங்களால் விளாங்கிக் கொள்ள முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு சைவர்களால் எழுதப்படவில்லை.

ஐம்பெருங் காப்பியங்கள் எதுவுமெ சைவர்களால் எழுதப்படவில்லை.

1. சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்

சேர இளவரசனாக இருந்து சமணத் துறவியாக மாறியவர்.

2. மணிமேகலை - கூல வாணிகன் சாத்தனார்

புத்த மதத்தை விளக்க வந்த நூல்.. எனவே கூல வாணிகன் சாத்தனார் சைவனாக இருக்கச் சாத்தியமில்லை!

3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்: ஜைன மதத்தைச் சேர்ந்தவர்

நூல் அறம், பொருள், இன்பம், வீடு நிலைகளை விளக்குகின்றது. காப்பியத் தலைவன் சீவகன் தன் அறிவால், ஆற்றலால் எட்டுக் கன்னியரை மணம் முடிக்கிறான்!! சிற்றின்பத்தை விடப் பேரின்பம்தான் சிறந்தது என்பதை உணர்ந்து (எட்டுப் பேரிடம் பட்ட ஆக்கினைகளால் இருக்குமோ) முடிவில் துறவறம் ஏற்கிறான்!!

4. வளையாபதி - நூல் ஆசிரியர், வேறு தகவல்கள் இல்லை.

இதனை ஜைன மத நூல் என்பர்..

கதை: வைசியன் ஒருவன் கீழ்ஜாதிப் பெண்ணை மணம் முடித்ததனால், அவனைச் சார்ந்தோர் வெறுக்க, அவன் வெளிநாடு சென்று விடுகின்றான். அவனுடைய மகன் வளர்ந்து, பெரியவனாகி புகார் நகரம் வந்து தந்தையைக் கண்டுபிடித்துத் தாயிடம் சேர்ப்பிக்கின்றான்!

சாதாரண தமிழ்ப் படக் கதை :lol:

5. குண்டலகேசி - ஆசிரியர் நாதகுத்தனார். புத்த மதத்தைப் பரப்ப வந்த நூல்.

கதை: வணிக குலத்தில் தோன்றிய குண்டலகேசி, கள்வன் ஒருவனைக் காதலித்து மணம் முடிக்கின்றாள். ஒருநாள் ஊடல் காரணமாக அவள் அவனைக் கள்வன் என்று கூற, அவன் சினங்கொண்டு, அவளை வஞ்சகமாக மலையுச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முயற்சிக்கின்றான். அவனது திட்டத்தை முன்பே அறிந்த குண்டலகேசி, அவனை வலம் வருவதுபோல் சுற்றிவந்து அவனையே மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்றுவிடுகின்றாள். பின்னர் மனம் வருந்தி துறவு பூண்டு, பிற சமயங்களையும் வென்று புத்த தரிசனம் கண்டு முக்தி பெறுகின்றாள்.

கொஞ்சம் உல்டா பண்ணி நல்ல ஹீரோயின் வைத்துப் படம் எடுத்தால் சில்வர் ஜூப்ளிதான்! :lol:

யார் எங்கே எப்போது வேறுபடுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஒரு இலக்கியத்தை தூக்கி போடுங்கள் பார்க்கலாம்?

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு.

பொதுவான இறைவனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்றால்.. அவரது காலத்திலே வேறு சமயங்களும் தமிழுள் புகுநஇதுவிட்டனவா?

'காப்பு' இல்லாத பண்டைய ஆக்கங்கள் எதையாவது கொண்டுவாருங்கள்.. காப்பு பொதுவாக இறைவனைக் குறித்ததாக இருக்குமென்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

மண்டிக்கள்ளுக் குடிச்சாலும், மப்பில விழுந்தெழும்பினாலும்... சைக்கிளில ஏத்திவிட்டால் ஆடாம அசையாம.. வீட்டு படலையடில போய் இறங்குற வல்லமையும் நம்மாக்களுக்குத்தான் இருக்கு.. அதுபோதும்தானே?! :lol:

சங்க காலத் தமிழர் சமயம்

சங்க காலத் தமிழர் சமயம், சைவமும் இல்லை, வைணமும் இல்லை, ஆசீவகமே என்பது பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் கருத்து. இந்தக் கருத்தை எண்ணற்ற இலக்கிய, வரலாற்று, மானிடவியல், புவியியல் சான்றுகள் தந்து ஐயத்திற்கு இடமின்றி நிறுவுகிறார். இந்தியாவில் முதன் முதல் நிறுவப்பட்ட சமயம் ஆசீவகமே என்பதும் அதை நிறுவியவர்கள் தமிழர்களே என்பதும் இவர் கருத்து. சங்கப் புலவர்களான மதுரை ஓலைக் கடையத்தனார் நல்வெள்ளையரின் தற்செயலியம், பக்குடுக்கை நன்கணியாரின் இயல்புக் கோட்பாடு, மற்கலி கோசாலரின் ஊழியல் என்னும் மூன்று கோட்பாடுகளும் இணைந்து உருவானதே ஆசீவகம்.

ஐயனார் வழிபாடே தமிழின் தொன்மையான வழிபாடு என்பதும் ஐயனார் கோவில்களில் மூன்று கோலங்களில் அமர்ந்திருப்போர் ஆசீவகத்தின் நிறுவனர்கள் மூவருமே என்பதும் இன்றைய தமிழகத்திலுள்ள சிவன், திருமால், பிள்ளையார் கோயில்கள் பல தொடக்கத்தில் ஐயனார் கோவில்களாக இருந்தவைதாம் என்பதும் இவர் தெரிவிக்கும் உண்மைகள். சிலப்பதிகாரத்தில் வரும் பாசாண்டச் சாத்தன் முழு முதற் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி, சாத்தன் ஐயனாரே என்று விளக்கியுள்ளார். சாத்தானுக்கு இந்த ஏற்றத்தை நல்கும் சிலப்பதிகாரம் சைவக் காப்பியமே அல்ல என்பதும் ஆசீவகத்தைப் பின்பற்றுவது என்பதும் இவரது மற்றொரு முடிவு.

சமணர் என்னும் சொல் ஆசீவகம், சமணர் இருகூறாரையுமே குறிக்கும் பொதுச் சொல்லாயினும் அது சிறப்பாக ஆசீவகர்களையே குறிக்கும். அருகர் என்ற சொல் சைனரையும் பவுத்தரையும் குறிக்கும். ஆசீவகர் வாழ்ந்து வந்த இடம் பாழி எனப்படும். அருகரின் வாழிடம் பள்ளி எனப்படும், பாழிகள், பள்ளிகள் அனைத்தையும் திருஞானசம்பந்தர் இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு சிவாலயங்களை உருவாக்கினார். அவர் காளாமுகச் சைவத்தைச் சேர்ந்தவர். காளமும் வைதீகச் சார்புடையது. அப்பரது சமயமான காபாலிகம் உலகாய்தம் சார்ந்தது, மிகவும் தொன்மையானது இறுதியில் வைதீகத்தால் விழுங்கப்பட்டது. அப்பர் பற்றிய கட்டுரையில் இவ்வுண்மைகள் விளக்கப்படுகின்றன.

கொற்றவையே தமிழகத்தின் பழமையான தெய்வம். அவளுக்குரிய அடையாளங்கள் பலவும் சிவன் மேலேற்றிச் சொல்லப்பட்டன. ஆயினும் தமிழரின் தாய்வழிச் சமுதாயத்தில் கொற்றவைக்கு இருந்த தலைமை முருகனுக்கு மாறியது என்று விளக்குகிறது ஒரு கட்டுரை.

தமிழ் நாட்டின் சமூகவியல் வரலாறு முறையாக எழுதப்படுவதற்கான முயற்சிகள்கூடத்தொடங்கப் படாத இந்த நிலையில் இத்தகைய அரியதொரு ஆராய்ச்சி நூலினை வழங்கிய பேராசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

"சங்காலத் தமிழர் சமயம், க. நெடுஞ்செழியன், பக்க்ம 196, விலை ரூ.90/-

சித்தண்ண வாயில்

பாண்டியன் கிரிவல்லபனின் ஆட்சியில் வெளியிட்ட கல்வெட்டில் "அண்ணல் வாயில்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் சித்தர்களாகிய அண்ணல்கள் கோயில்கொண்டுள்ள இவ்வூரின் பெயர் "சித்தண்ண வாயில்" என்று கொள்வதே முறை, "சித்தன்னவாசல்" என்பது பொருத்தமாகப்படவில்லை என்று கூறும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அண்ணல்கள் என்று குறிப்பிட்டுள்ள ஆசீவகர்களின் பெருமைகளை விரிவாக உரைக்கிறார். அவர்கள் பேரண்டங்களின் தோற்ற ஒடுக்கங்களை அறிவியல் நோக்கில் கண்டுணர்ந்த சாங்கியக் கோட்பாட்டினர். கடுந்தவ நெறியை மேற்கொண்டவர்கள். அரசவையில் இடம்பெற்றிருந்தவர்கள். அவர்களே சமணர் என்றழைக்கப்பட்ட ஆசீவகர் அழிவெண்பிறப்பைக் கடந்த ஆசீவக சமய நிறுவனர்களின் சிலைகளும் ஓவியங்களுமே சித்தண்ணவாசலில் இருப்பன என்பது ஆசிரியர் கண்ட முடிவு. சித்தண்ண வாயில் மற்கலி கோசாலர் வீடு பேறடைந்த இடமாக இருக்கலாம் என்று இவர் கருதுவது பொருத்தமாகவேபடுகிறது.

ஆசீவகம் தொடக்கத்தில் சைன பவுத்த சமயங்களுக்குக் கடும் போட்டியாகத் திகழ்ந்தாலும் காலப்போக்கில் பவுத்தத்திற்கும் ஆசீவகத்திற்கும் நல்லுறவு ஏற்பட்டது. ஆனால் ஜைன-ஆசீவக எதிர்ப்புக் குறையவில்லை. ஆசீவகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் காபாலிக காளாமுகத்தவர்களின் வன்முறையால் நிலை குலைந்து போயிற்று. அதேபோல் வைதிக நெறியினரான காளாமுகத்தினரின் கொடுமை வைணவத்தையும் தாக்கிற்று. எனவே இவ்விரு சமயங்களுக்கும் தற்காலிகமாக இணக்கம் ஏற்பட்டது. இதனையே சிற்பங்களுக்கு இடையே உள்ள நாமங்கள் காட்டுகின்றன என்பது இவரது முடிவு.

சைனர்களின் முதல் திருத்தங்கரராகப் போற்றப்படும் ஆதிநாதர் சைனர்களாலும் சைவர்களாலும் ஆசீவகர்களாலும் ஒரு சேரப் போற்றப்படுகிறார். அவர் ஒரு பொது மரபின் மூல ஊற்று. எனவேதான் மற்கலி கோசாலர் தாம் தோற்றுவித்த சமயத்திற்கு ஆதிநாதரை முதல் திருத்தங்கரராக ஏற்றுக்கொள்கிறார் என்பது இந்த நூலில் தெளிவாக்கப்படும் ஒரு உண்மை.

ஆழமான-நடுநிலைமையான ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நூல்களை அறிவுலகம் வரவேற்குமாக.

சித்தண்ண வாயில், க. நெடுஞ்செழியன், பக்கம் 120, விலை ரூ.60,

மூன்று நூல்களும் வெளியீடு, பாலம், இ/7, பாரத் அடுக்ககம், ஆர்.வி. நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600 102.

- பேராசிரியர் அ. அய்யாசாமி

-தென்செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showt...&pid=295821

  • கருத்துக்கள உறவுகள்

மேற் தரப்பட்ட நூல் விமர்சனம் இடைச் செருகல்களுடன் லாவகமாக நடுநிலை என்ற சொற்பதம் வைத்து பின்னப்பட்ட ஒரு வேடிக்கை மிகு கட்டுரை..!

மெகாலிதிக் கற்காலத்தில் ஐயனார் முருகன் கொற்றவை மற்றும் நாகா வழிபாடுகள் இருந்துள்ளன. அவை அடிப்படையில் இந்து சமய முறைகளை ஒட்டி அமைந்திருந்ததால் இந்து சமயத்துள் உள்வாங்கப்பட்டுள்ளன. கொற்றவையின் அடையாளங்கள் சிவனுக்கு வழங்கப்படவில்லை. கொற்றவை துர்கையாக தனித்து வழிபடப்படுகிறாள். இன்று சைவ நூல்களில் கொற்றவை ஐயனார் முருகன் நாகா போன்ற கடவுள்களின் வழிபாட்டு வரலாறுகள் இடம்பெற்றிருக்கின்றன..!

"Megalithic culture attached great importance to the cult of the dead and ancestors. It is also likely that certain gods later absorbed into the Hindu pantheon, such as Aiyanar (or Sastha), Murugan (the later Kartik), Korravai (Durga), Naga deities, etc., were originally tribal gods of this period."

தமிழர்களின் ஆரம்பகால வழிபாடுகள் இந்து மத ஆதிக்கத்தால் அழிக்கப்பட்டது போன்ற கருத்துக்கள் அபந்தமானது. இந்து மதம் பண்டைய வழிபாட்டு முறைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மதம் என்பதை இது தெளிவாக காட்டி நிற்கிறது. அதுதான் இந்துமதத்தின் தோற்றத்தின் உண்மையும் ஆகும். முன்னர் வழிபட்ட எல்லாக் கடவுள்களும் இன்று வழிபடப்படுகின்றனர்.

சங்க காலத்தில் (இது மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னானது) இந்து மதத்தின் ஓர் அங்கமான சைவம் செழிப்புற விளங்கி இருக்கிறது. சைவம் ஏனைய வழிபாட்டு முறைகளூடு சிவனை முழுமுதலாக்கி வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் சைவத்தின் சாயல் எங்கும் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது. மணிமேகலை மாதவியின் மகள். மாதவி பரதக் கலையில் சிறந்தவள். பரதம் சிவனுக்காக ஆடப்படும் ஒரு கலை வடிவமும் கூட..! ஆக.. இலக்கியங்கள் சைவத்தின் சாயலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தாங்கி இருந்திருப்பதுடன் ஏனைய வழிபாட்டு அம்சங்களையும் மத அனுட்டானங்களையும் காலவோட்டதிற்கு இணங்க எடுத்துச் சொல்லியுள்ளன..!

"During the Sangam age, Hinduism, including Vedic Brahminism, had become a popular religion among the people. Siva, Muruga, Krishna, Balarama and Kali were some of the popular deities among the Hindus. The division of the Sangam landscape into five regions, is also apparent in religion - with each region having had its own patron deity"

உசாத்துணை..

http://en.wikipedia.org/wiki/Ancient_Tamil_religion

Edited by nedukkalapoovan

சிந்துவெளியிலே காணப்பட்ட முந்திய முதல் தோற்ற சைவசமயப் பண்புகளை நாம் பார்த்துக்கொண்டு வரும் பொழுது திடீரென அது சிதைவுற்றுவிடுவதைக் காண்கிறோம். கி.மு.1500-ம் ஆண்டளவிற்குப் பின்னர் சிந்துவெளி நாகரிகம் வரலாற்றிலிருந்து மறைந்து விடுகிறது. ஏறத்தாழ அக்காலப் பகுதியில் அலையலையாக இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகததின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது காய்த்தல் உவத்தவற்ற ஆராய்ச்சியாளர் முடிவாகும்.9 ஹரப்பா என்னும் நகரமே வேதத்திலே ஹரியூப்பியா (R.V.627.5) என்று வடமொழி வடிவில் இடம்பெற்றிருப்பதாகக் கோசாம்பி என்னும் அறிஞர் கருதுவர். "பென்னாலாய பலிபீடத் தூண்கள்" அமைந்த நகரம் என்று அது குறிப்பிடப்படும். சிந்துவெளி மக்களின் அழிவிற்குப் பின்னர் அதே இடங்களில் ஆரியர் குடியிருந்தனர் என்பதற்குரிய சான்றுகளைச் சில ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.10 வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக் கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடைப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும். பெண் தெய்வம் (அன்னை) சிவன், இலிங்கம், முதலிய தெய்வங்களை இந்திரம் வென்றதுடன் சிந்துவெளி நாகரிகத்தின் சுற்று மதில்களும், கோட்டைச் சுவர்களும், அரண்களும், அகன்ற வீதிகளும், அன்னை ஆலயமும், தானியக் களஞ்சியமும் மண்ணோடுமண்ணாயின. நீண்ட நாடகம் ஒன்றின் முதலாம் அங்கம் முடிவடைந்ததுபோல மேடையில் திரை வீழ்கிறது. வெற்றி வீரனான இந்திரனும் அவனது சகாக்களும் சோமபானம் அருந்திக்களிக்கும் எக்காளச் சிரிப்பு மட்டும் எமக்குக் கேட்கிறது. ஆனால் மீண்டும் திரை விலகும்போது தோற்றவர்களை மட்டமின்றி வென்றவர்களையுமே காணவில்லை. வேதகாலத்திற்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். இந்திரன், வருணன், மித்திரன், பிரஜாபதி, மத்திகவன் முதலிய கடவுளர்கள் முதலிடம் இழந்து பின் வரிசைகளில் காணப்படுகின்றனர். சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி முதலிய புதிய தெய்வங்கள் நமது மதிப்பையும் கவனத்தையும் கவருகின்றனர்.

சிந்துவெளி நாகரிகம் சிதைவுற்று ஆயிரம் ஆண்டுகளுக்குத் தென்னிந்திய வரலாறு எவ்வாறிருந்தது என்று இன்றைய நிலையிற் கூற முடியாமலிருக்கிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவிலே திரைவிலகும்போது திராவிட மக்கள் ஓரளவு நாகரிகம் பெற்றுத் தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம்.11

கி.மு.எட்டாம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலே தமிழ் மக்கள் சிறுசிறு கூட்டங்களாகப் பலதரப்பட்ட நாகரிகநிலையில் வாழத் தொடங்கிவிட்டனர் என நாம் கொள்ளலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் மெல்ல மெல்ல ஆரிய மக்களுடைய தொடர்பு தமிழ் மக்களுக்கு ஏற்படலாயிற்று. எனினும் இன்னு நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கியங்கள், அகழ்பொருள் சான்றுகள் முதலியவற்றின் துணைகொண்டு பார்க்கும்போது சாதாரண தமிழ் மக்கள் தமக்கென அமைந்த தெய்வ வழிபாட்டு முறையினையே கிறித்து அப்தத்தின் தொடக்கம்வரை பெரும்பாலும் கடைப்பிடித்து வந்தனர் என்று கூறத் தோன்றுகின்றது. சில சங்க இலக்கியங்களிலே ஆரியத் தெய்வங்கள் ஆங்காங்கு குறிக்கப்படுவது உண்மையே. அவை அரசர், வணிகர், சமயக்கணக்கர் முதலிய உயர் வகுப்பினரால் ஆங்காங்கு வணங்கப்பட்டிருக்கலாம். பொதுமக்கள் கொற்றவை, முருகன் முதலிய பழந்தெய்வங்களையே வணங்கிவந்தனர். பழைய இலக்கியங்களை நுணுகிப் பார்ப்போருக்கு இவ்வுண்மை புலப்படும்.12 கொற்றவை பழந்தமிழ் மக்களின் வெற்றித் தெய்வம். சிந்துவெளிப் பெண் தெய்வத்திற்கும் கொற்றவைக்குமுள்ள உண்மையான தொடர்பினை இன்றைய ஆராய்ச்சி நிலையில் தெளிவாகக் கூறுவதற்கில்லை. எனினும் தொடர்பு நெருங்கியதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. இது பற்றி மார்ஷல் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.13

"அன்னை" அல்லது "பேரன்னை" பிற்காலத்திலே தோன்றியசக்தியைத் தோற்றுவித்த மூலப் பொருளின் (பிரகிருதி) முதலுருவாகும். அவளுடைய பிரதிநிதிகளே கிராம தேவதைகள் அல்லது கிராமச் சிறுபெண் தெய்வங்கள். அவற்றின் பெயர்களும் தலசரிதைகளும் கணக்கிலடங்கா. எனினும் அவை யாவும் ஒரே பொருளையே குறிக்கின்றன. அந்த மூலசக்தியே வளத்தின் தெய்வம். இப்பெண் தெய்வங்கள் யாவும் ஆரியர்க்கு முற்பட்ட, ஆரியரல்லாத இன மக்களிடையே செல்வாக்குடையவாயிருந்தன என்பதில் ஐயமில்லை. ஆரியருக்கு முற்பட வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் சிலர், இந்து சமயத்தை ஏற்கவில்லை. அத்தகைய மக்களிடையே பெண் தெய்வ (அன்னை, தாய்) வழிபாடு நிலைத்துள்ளது. மார்ஷல் அவர்களின் இக்கூற்றானது மறைந்துவிடவில்லை என்பதை நினைவுறுத்துகின்றது. இதனையொட்டி ஏரன்பெல்சு14 என்பார் இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளிடையே நிலவும் முக்கிய பெண் தெய்வங்களின் நீண்ட பட்டியல் ஒன்றினைத் தயாரித்துள்ளார். பிலிமக்கா, புடுபுடிக்கி, தார்ஜி, டொம், கடவா, கங்கதிக்கரை, ஒக்கரை, கங்கை, கொல்லா, அத்தி, ஏலவை, இதிகை என்று நீண்டு செல்கிறது அப்பட்டியல்.

பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வமே என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் பலவற்றில் கொற்றவை வழிபாட்டுமுறை கூறப்படுகின்றது. அச்சம் பொருந்திய பண்பையுடைய கொற்றவையை வெறியாட்டு முறையினால் பழந்தமிழர் வழிபட்டனர். பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் வரைவிலக்கணமும் விளக்கமும் கொடுக்கும் தொல்காப்பியமும் வரைவிலக்கணமும் விளக்கமும் கொடுக்கம் தொல்காப்பியமும், கொற்றவைநிலை என்னும் தலைப்பில் கொற்றவைக்குப் பலிகொடுத்து வணங்குதலைக் குறிப்பிடுகின்றது. சிந்துவெளி நாகரிகப் பெண் தெய்வம் பிற்கால இந்து சமயத்தில் "சக்தி" யாக மிளிர்ந்தது என்று நாம் கொள்ள முடியுமானால், பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும், சக்தியாக, சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம், இதனைச் சிறிது ஆராய்வோம்.

பழந்திராவிடரின் மற்றொரு தெய்வம் முருகன் அல்லது வேலன். பிற்காலத்திலே கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்றெல்லாம் பெயர்பெறுகின்றான். ஆரியரது தந்தை வழி நாகரிகம் தமிழகத்திலே கலந்து கலாசாரப் பிணைப்பு ஏற்பட்ட காலத்திலே இந்த உருமாற்றம் ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு.15 சிவனின் மகன் என்றும், தேவசேனாபதி என்றும், கார்த்திகேயன் என்றும், ஆரிய ஜதீகம் கூறும். எனினும் பல தமிழ் இலக்கியங்கள் இதே முருகனை தாய்வழி உரிமை பெறுத் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. இச்செய்தி மிக முக்கியமானது என்று நாம் கருதல்வேண்டும். "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ"16 என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"17 என்றும் துருமுருகாற்றுப்படைப் புலவர் பாடுகின்றார். "பைம்பூட்சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்வி" என்று பெரும்பாணாற்றுப்படை பாடுகின்றது. இத்தகைய பழைய குரல்களைக் கேட்கும்போது கொற்றவை, செல்வி, முதலிய பெயர்களுடன் உயரிடம் வகித்த பழம்பெரும் பெண்தெய்வத்தின் பெருமிதத் தோற்றம் நமக்குத் தோற்றுகிறதல்லவா? சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம். தாயக்கு இருந்த முக்கிய இடத்தையும் நாம் தெளிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையிலேயே சைவம் தென்னிந்தியாவிலே அல்லது தமிழ்கூறுநல்லுலகத்திலே வளர்ந்தது என்று நாம் கொள்ளல் வேண்டும். சிவன் பரம்பொருளாகவும் முழு முதற்றெய்வமாகவும் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்தே சைவசித்தாந்தம் தத்துவ வடிவில் உருப்பெற்றது என்பது உண்மையே. எனினும், பிற்காலத்திலே சைவம் சித்தாந்தமாக வடிவம் பெற்றபொழுது மறைமுகமாகப் பெண்தெய்வம் (சக்தி) முக்கிய இடம் பெற்றுவிட்டது. சிவனே முழு முதற் பொருளாகக் கொள்ளப்பட்டாலும் "இறைவன் தனது சித்சக்தியைக் கொண்டே மாயையைத் தொழிற்படுத்துவான் என்பதே சைவ சித்தாந்திகள் கொள்கை. இறைவன் வேறு அவனது சக்தியும் ஒன்று. இன்னொரு விதத்தில் அவை இரண்டும் வேறு என அவர்கள் கூறுவர்.19 இந்த இடத்திலே சாங்கிய மதத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள பல ஒற்றுமைகள் வேற்றுமைகள் சிந்திக்கற்பாலன.

பழந்தமிழ் நூல்களையும் அகழ்பொருள் ஆராய்ச்சிகளையும் சான்றாகக் கொண்டு தென்னிந்தியாவிலே சைவ சமயத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்ந்து நூலொன்று எழுதிய சி.வி.நாராயண ஐயர் ஓரிடத்திலே மேல்வருமாறு கூறுவார்.20 "தொல் காப்பியத்திலே வேதகாலத் தெய்வங்கள் சில மதிப்போடு கூறப்படுவதிலிருந்தே பொதுமக்கள் மத்தியில் அவை எவ்வளவு தூரம் இடம் பெற்றிருந்தன என்பது புலனாகும். (அக்காலப்) பொது மக்கள் புதிய தெய்வங்களில் நம்பிக்கை கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், அதே சமயத்தில் காலாகாலமாக வந்த தமது சொந்த வழிபாட்டு முறைகளையும் அவர்களாற் கைவிட முடியவில்லை. எனவே, புதிய தெய்வங்களையும் பழைய முறையிலே சேர்த்து வழிபட்டனர்."

சிந்துவெளி நாகரிகம்பற்றிய செய்திகளும், சங்க இலக்கியம், தொல்காப்பியம் முதலிய நூல்களின் கால ஆராய்ச்சியும் தெளிவு பெறாத காலத்திலே சி.வி.நாராயண ஐயர் தமது நூலை எழுதினார். அதுமட்டுமன்று. தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் பலவற்றிற்குக் காலத்தால் முந்தியது என்னும் அடிப்படைத் தவறையும் அவர் கொண்டிருந்தார். அது அவரைப் பல தவறான முடிவுகளுக்குக் கொண்டுசென்று விட்டது.

சங்க இலக்கியங்களை நுணுகி ஆராயின் தமிழ் நாட்டிலே சமயம் எவ்வாறு வளர்ச்சியும் மாற்றமும் அடைந்து வந்தது என்பது புலனாகும். கொள்ளவை, முருகன் ஆகிய பழந்தெய்வங்களோடு நாகரிகக் கலப்பின் பயனாக சில பழைய தெய்வங்கள் புதிய உருவிலும், சில புதிய தெய்வங்கள் பழைய வடிவிலும் தோன்றுவதையும் காணலம். இவற்றையெல்லாம் காலவகைப்படி 'பகுத்துப் பார்த்தாலன்றிச் சமய வளர்ச்சியின் படிமுறைகளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளல் முடியாது. அதுமட்டுமன்று. ஆரியக் கலப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும், இலகுவான காரணம் கூறிவிடமுடியாது. எத்துணைப் பிற பண்பாட்டுக் கலப்பு வந்து சேர்ந்தாலும், இருந்த பண்பாட்டிலும் சில குறைபாடுகளோ தேவைகளோ இருத்தல் வேண்டும். கொற்றவைக்கு அடுத்தபடியாக நாம் சற்றுமுற்றும் பார்க்கும்போது முருகன் வடிவம் தென்படுகிறது. கூட்டாக மனிதன் வாழ்ந்த பூர்வீக (Primitive) நிலையில் வேட்டையாடுதல், மிருகங்களைக் கொல்லுதல் முதலிய செயல்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாயிருந்தன. அது உண்மை, அதே செயல்களைச் சில வேளைகளில் செய்து பார்த்தபோது கூத்து அல்லது ஆட்டம் பிறந்தது. உண்மை வாழ்க்கையில் செய்யும் ஒன்றை அவிநயித்துச் செய்து பார்க்கும்போது மனதிலே எழுச்சியும் துணிவும் களிப்பும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒருவன் செய்யும்போது அவனிடம் மந்திர சக்தி இருப்பதாகப் புராதன மனிதன் நம்பினான். அதற்கு அஞ்சினான். இந்த அடிப்படையிலேயே புராதன தமிழகத்திலே வேலன் என்னும் ஒருவன் தோன்றினான் என நாம் ஊகிக்கலாம். உண்மை நிகழ்ச்சி பொய்மையாக, மன எழுச்சியுடன் மனிதனாற் செய்யப்படும் பொழுது கலையும் பிறந்து விடுகிறது. இன்றுகூடத் தாழ்ந்த சாதியினர் என்று கூறப்படுபவர்களிற் பலரும், ஆதித்திராவிடர் எனப்படுபவர்களும் வெறியாடுவதைக் காணும் போது பண்டைய வெறியாட்டு வழிபாட்டைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்ளலாம்.

"மாரியம்மன் வந்து கரகமாடல், பேய் பிசாசுகளை அகற்றுபவன் ஆடும் ஆட்டம், கோயில்களில் மிருகபலி கொள்ளும் ஐயனார் ஆடும் ஆட்டம் முதலியன தெய்வமேறி ஆடுதலின் பாற்படும். இவ்விநோதக் கூத்துக்கள் வேட்டுவர், இடையர், மழவர் முதலிய பாமர மக்களின் விநோதத்திற்கென வகுக்கப்பட்டன" என்று கூறுகின்றார் பி.கோதண்டராமன்.21 பாமர மக்களுக்கென வகுக்கப்பட்டன என்பது சரியன்று. பாமர மக்களால் வகுக்கப்பட்டன என்பது பொருந்தும். இந்த உண்மையின் துணைகொண்டு பார்க்கும்போது பண்டையத் தமிழிலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாட்டு முறை (வெறியாட்டம்) மிகப் புராதனமானது என்பதும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் புலனாகும். "வெறியாட்டு என்பது, பெரும்பான்மை முருக குறமகளும் தெய்வமேறி ஆடுங் கூத்தாகும். வேலன் ஆடுங் கூத்தை வேலனாடல் என்பர். முருக பூசனை செய்வோன் முருகனுக்குரிய வேலை ஏந்தி, அதைத் தனக்கு அடையாளமாகக் கொண்டருப்பதால் அவனுக்கு வேலன் என்னும் பெயர் வந்தது. அவர் தெய்வமேறி ஆடுவதனால் வெறியாட்டாளன் என்றும், அந்த ஆவேசத்தால் குறி சொல்லுவதனால் படிமத்தான், தேவராளன், சன்னத்தக்காரன் எனப்பலவாறாகவும் அழைக்கப்படுகின்றான். அவன் ஆடும்போது கண்ணி, கடம்பம், காந்தள், கார்காலத்துக் குறிஞ்சி, அலரி, ஆகிய முருகனுக்குரிய மலர்களுள் ஒன்றை அணிந்து கொள்வான். முருகனே அவன் உடலில் நின்று ஆடல்புரிகிறான் என்பது பக்தர்களின் கொள்கையாதலால் அவனை "வெறி புரி ஏதில் வேலன்" என்றும், "பொய்யா மரபினூர் முருவேலன்" என்றும் நூல்கள் கூறும்."22 "வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே" என்றும் "வேலகைக் கொடுத்து வெளிதுவிரித்துடீஇ" என்று "நெடுவேல் வாய்ந்த மார்பின்" என்றும் இவை போலப் பிறவும் சங்க இலக்கியங்கள் பல வற்றில் காணப்படுகின்றன. வேல் இரும்பினால் ஆக்கப்படுவது. சிந்துவெளி நாகரிக மக்கள் இரும்பு எனும் உலோகத்தை அறியாதவர். இரும்புக் காலம் தென்னிந்தியாவிலே ஏறத்தாழ கி.மு. ஏழான் நூற்றாண்டு அளவிலேயே திடீரெனத் தொடங்குகிறது; புதிய கற்காலத்தின் தொடர்ச்சியாக அது காணப்படவில்லை என்று ஹைமண்டோவ் என்னும் ஆராய்ச்சியாளர் கருதுவர். மைசூர் இராச்சியத்திலுள்ள பிரம்மகிரி, சந்திரகிரி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ் ஆராய்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டே அவர் அவ்வாறு கூறுவர். அதனைப் பிரமாணமாகக் கொண்டு ஒரு கணம் நாம் சிந்தித்துப் பார்த்தால் சங்க கால இலக்கியங்கள் நேர்முக வருணனையாகவோ அல்லது பழைய "இன நினைவுகளாக"வோ கூறும் செய்திகள், குறிப்பாக வேல்பற்றிய செய்திகள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்படாமற் போதல் புலனாகும். முருக வணக்கத்தின் தொன்மையை இது உறுதிப்படுத்தும். வேட்டுவ வாழ்க்கை மனித வளர்ச்சியின் மிக முற்பட்ட நிலைகளில் ஒன்று. உணவு சேகரிக்கும் நிலை அது. அது குறிஞ்சி நில வாழ்க்கையாக-ஒழுக்கமாக-தமிழரிடையே குறிக்கப்பட்டு வந்துள்ளது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்றோன்றி மூத்த குடி" எனத் தமிழர் தம்மைக் கூறிக்கொள்வதும் இதனை அடிப்படையாகக் கொண்டே. இத்தகைய குறிஞ்சி நில வாழ்க்கைக்குத் தெய்வமாக அமைக்கப்பட்டுள்ளான் முருகன்.

"சேயோன் மேய மைவரை உலகமும்"

என்று தொல்காப்பியத்திலே பிற்கால இலக்கண ஆசிரியர் குறிப்பிடுவர்.

கொறறவையாகவும், சேயோனும் (முருகன்) பழம்பெருந்தெய்வங்களாக இருந்தமையாற்றான் சிவவழிபாடு சிறப்புற்ற காலையில் கொற்றவை சிவனின் சக்தியான மலைமகனாகவும், முருகன் ஆலமர்ந்த கடவுளின் மகனாகவும் புதிய உறவுமுறையும் குலமுறையும் பெறுகின்றனர். தமிழ் நாட்டிலே சிவ வழிபாடு பெருவழக்கமாகப் பெற முருகவழிபாடு குறைவதாயிற்று."23

"மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமண லுலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே"24

என்று கிறித்துவிற்குப் பின் ஏறுத்தாழ ஐந்தாம் நூற்றாண்டளவிற் றோன்றிய பழந்தமிழ்ப் பேரிலக்கணம் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கு நிலப்பாகுபாடு காட்டுகிறது. மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நான்கு தெய்வங்களையும் கூறும் இந்நூல் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைக் குறிப்பிடவில்லை. சங்க நூல்களில் மிகச் சில இடங்களிலேயே சிவனைப்பற்றிய குறிப்புக்கள் இடம்பெறுகின்றன.25 ஆனால் சிவன் என்னும் பெயரோ, அவன் இன்ன நிலத்துக்கரியவன் என்றோ கூறுப்படவில்லை. இலக்கியத்திற்குரிய பொருளை அல்லது மனிதனையும், அவனது சுற்றுச்சார்பையும், வகுத்துப் பிரித்த தொல்காப்பியம் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பொருளைப் பாகுபடுத்துகிறது. பொருளின் அடிப்படையில் அமைந்த ஒரு பாகுபாட்டினை நாம் இங்குக் காணலாம். கருப்பொருள் என்பது திணைக்குரிய தெய்வத்தைத் தவிர, உணவு, விலங்கு, மரம், புள், பறை, யாழ், தொழில் என்பனவற்றையும் கூறுவதனால் இவ்வுண்மை புலப்படும்.

சைவசமயத்தின் தொன்மைதேடித் தொல்காப்பியத்தைத் துருவியாராயும்போது சிவன் கருப்பொருளிலே இடம்பெறாமையைக் கண்டோம். இது கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஆரிய வழக்கிலும் வேதகால முடிவிலேயே சிவன், விட்டுணு, பிரம்மா முதலிய இட்ட தெய்வங்களை சிறப்படைந்தன. பக்தி மார்க்கத்தின் தொடக்கத்தைக் காட்டுவதுபோலப் பகபத்கீதையில் கண்ணன் தன்திதெய்வமாக்கப் படுகின்றான்; அதைப்போலவே, சிவனும் காலகதியிலே தனக்கென ஒரு குலுமுறை இணைக்கப்பெறுகின்றான். வேத வழக்கிற்குப் பிற்பட்ட இதிகால புராண காலத்திலேயே சிவ, விட்டுணு வழிபாடு சிறப்படைந்தது. எனவே தமிழ் ��

பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்

கலாநிதி க. கைலாசபதி

பகுதி 1

http://www.yarl.com/forum/index.php?showto...p;mode=threaded

நந்தி, நாகம் முதலியவற்றோடு (இவை ஆரியருக்கு முற்பட்ட குலங்களின் சின்னங்கள்) தொடர்பு படுத்தப்பட்டுச் சிவன் தோன்றும் போது பௌராணிக வழக்கு வலுத்துவிடுகிறது. இந்தக் காலப்பகுதிற்குரிய சிவனையே தமிழிலக்கியங்களிலே நாம் காண்கிறோம்.

பத்துப்பாட்டிலே நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.26 அக்குறிப்புகள் பௌராணிக மரபை நன்குணர்ந்து காணப்படுகின்றன. முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள். முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் புறநானூற்றிலே கூறப்படுகின்றது. எனினும் தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத் யிலே "அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை"என்னும் முடிவிற்கு குடிகளாகவும் (Tribes and Clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன. பூசாரிகள், குருமார் எவருமின்றி மக்கள் பலியிடுதல், வெறியாடல் முதலிய முறைகளினால் தாமே கூட்டாக வழிபட்ட நிலையிலே சமுதாயக் கடவுளர் தேவையாயிருந்தனர். ஓரளவிற்கு, இந்திரன், பிரஜாபதி முதலிய தெய்வங்கள் வேதகால ஆரியருக்கு உகந்தவராயிருந்ததைப் போல, சமூகத்திலே தனி உடைமையும், ஆட்சி நிலைமையும் தோன்றியபோது தனிப்பட்ட இட்ட தெய்வங்களும் வகுப்புகளுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் உருப்பெற்றன. அந்த நிலையிலேயே சிவன், விட்டுணு முதலிய தெய்வங்கள் சிறப்புறத் தொடங்கின. கோயில் வழிபாடும், புறச்சமயங்களின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பக்திமார்க்கமும், சமுதாயத்திலே ஏற்பட்ட வர்க்க முரண்பாடுகளும் தனித்தெய்வங்கள் தோன்றுவதற்கு அனுசரணையாக விருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இப்பண்புசங்கமருவிய காலத்தில் அதாவது கிறித்துவிற்குப் பின் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் தோன்றுகிறது. சிவன், விட்டுணு ஆகிய இருதெய்வங்களைப்பற்றி இன்னோர் உண்மையையும் நாம் இவ்விடத்தில் அவதானிக்கலாம். சிவன், விட்டுணு ஆகிய இரு தெய்வங்களும் சிறப்புற்ற காலையிலே, அவ்விரண்டும் தமக்கு முன்னிருந்த பல சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் தம்முடன் பல்வேறு வகைகளிலே தொடர்புபடுத்தி இணைத்து ஈடுணையற்ற தனிப்பெருந் தெய்வங்களாகப் பரிணமித்தன. இதற்கு கருவியாகப் பிராமணர் அமைந்தனர். ஆரியரல்லாத கூட்டத்தைச் சேர்ந்த, கிருஷ்ண (கறுப்பு)னும், சுமேரியத் தெய்வங்களோடு ஒப்பிடக்கூடிய நாராயண, வேதக்கடவுள், விஷ்ணு ஆகிய மூன்று வேறுபட்ட தெய்வங்களும் மகாபாரதத்திலே ஒரு தெய்வமாக இணைக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்படுகின்றன. அன்றைய இந்தியாவிற்கு இத்தகைய முயற்சிகள் கலாசார ஒருமைப்பாட்டை அளித்தன.27 இதைப்போலவே சிவனும் புதிய பழைய பண்புகளையெல்லாம் சேர்த்துத் தனிப்பெருந் தெய்மாகத் தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சிந்துவெளி நாகரிகத்தில் உதித்த சிவன் மிருகங்கள் புடைசூழப் பசுபதியாகி, கூட்டு வாழ்க்கையில் கணங்கள் சூழப் பூதகனங்களுக்குத் தலைவனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைகள் மணாளனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைமகள் மணாளனாகி, மாதொரு பாகனாகி, கார்த்திகேயன் தந்தையாகி, பழைமையையும் புதுமையையும் தன்னுள்ளடக்குவதை நாம் காணலாம். தனியுடைமையை யடிப்படையாகக் கொண்டு சைவமும், வைணவமும் செழித்தோங்கிய படியாற்றான், உடைமைகளுக்கு எதிராக இருந்த சமண, பௌத்த சமயங்களுடன் மோதின. எனினும் இந்திய வரலாற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது காலப்போக்கிலே சிவ வழிபாடு பெரிய நிலக்கிழார்கள், பிரபுக்கள் முதலியவர்களுக்கு உரியதாவும், வைணவம் சிறுபொருள் உற்பத்தியாளர், விவசாயிகள் முதலியோர் மத்தியில் பெருவழக் குள்ளதாயும் இருப்பதைக் கவனிக்கலாம். சிவ-வைணவ மதப்பூசலின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது.28

சங்க காலத்தைப் பார்க்கும் போதும் இவ்வுண்மை தெளிவாகும். திராவிடரின் ஆரியருக்கு முற்பட்ட, வேறுபட்ட வழக்குகளும், ஆரியரின் வேதவழக்கும் முட்டிமோதிக்கலப்பதைச் சில சங்ககால, சங்கமருவியகால இலக்கியங்கள் எமக்குக் காட்டுகின்றன என்பதுண்மையே. அது இயல்பான கலாசார இயக்கவிதியின் பாற்படுவது, எனினும் சமணம், பௌத்தம் தமிழ்நாட்டிலும், மெல்ல மெல்லப் பெருவழக்குற்றத்தைத் தொடர்ந்து வைதிக சமயமும் வலுவடைவதற்குரிய வழி வகைகளைக் கண்டது. அந்தப் பண்பின் விளைவாகவே பக்திமார்க்கமும், இட்டதெய்வமும், தனிப்பெருந் தெய்வமும் தமிழகத்திலும் தோன்றின. காரைக்காலம்மையார் பிரபந்தங்களில் தெளிவாக இப்பண்பினைக் காணலாம். அதற்கு முதற்படியாகப் பத்துப் பாட்டிலும் "இரட்டைக்" காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலையிலும் சமயங்கள் அருகருகே யிருந்து "போட்டி"யிடுவதை நாம் காணலாம். கோயில்கள். விகாரைகள், பள்ளிகள் பெருமளவில் கட்டப்பட்டதும் போட்டிக்கு ஏதுவாக இருந்தது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலே அந்தணர் பள்ளியும், சமணப்பள்ளியும், பௌத்தப்பள்ளியும் சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகரை நாம் காண்கின்றோம். சிலப்பதிகாரத்திலும் இதன் தருக்க ரீதியான வளர்ச்சியைக் காணலாம்.

இவ்வாறு "உடனிருந்து வாழும்' நிலையைப் பயன்படுத்திச் சமணமும், பௌத்தமும் ஒருபடி மேற்சென்றபோதுதான் வைதிக சமயங்களுக்கும் அவைதிக சமயங்களுக்கும் இடைய நேரடியான துவந்தயுத்தம் மூண்டது. அதற்குரிய அடிப்படைக் பொருளாயதக் காரணங்களை ஆராய இது சந்தர்ப்பமன்று. எனினும், ஒன்றுமட்டும் கூறலாம்.

ஓயாத போர், கொள்ளை, மரணம், கட்டுப்பாடற்ற ஆண்பெண் உறவு. மிதமிஞ்சிய மது, மாமிச ஊண் முதலியவற்றின் இருப்பிடமான புராதனத் தமிழகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டு வந்த சாந்தம், சமாதானம், ஒழுக்கம், பெண் வெறுப்பு, அரசுநெறி, கட்டுப்பாடு, புலால் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு முதலிய பண்புகளைத் தொடக்கத்தில் இலகுவாகவும் விருப்பத்துடனும் ஏற்றது. காலத்தின் தேவையை, வந்த சமயங்கள் நிறைவேற்றின. எனினும் இதே துறவறச் சமயங்கள் ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் அடிப்படையில் மன்னருக்கு ஆதரவு அளித்துத் தமது பள்ளிகள், விகாரைகள் முதலியவற்றிற்காகப் பெரும் அளவில் பொருளும் நிலமும் சேர்த்த போது-தமது முற்போக்கையிழந்து போது- அது தமிழக மக்களுக்குச் "சுமை"யாக மாறியது. பள்ளிகள் பெரிய நிலவுடைமை நிறுவனங்களாக மாறின. சமணத்தையும் பௌத்தத்தையும் சிறப்பாக ஆதரித்தவர் அக்காலத் தமிழக வணிக வர்க்கத்தினர். ஏனெனில் பலம் வாய்ந்த அரசாட்சியில் பொருளீட்டி வாணிபஞ் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதே சமயத்தில் கொல்லாமையையும் கடைப்பிடிக்க முடிந்தது. நிதிக்குப்பை நிறைந்த செல்வர் சமணத்தை ஆதரிப்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். சமண, பௌதத பள்ளிகள்பெரும் நிலவுடைமை நிறுவனங்களாகிச் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் எழுதிய அங்கதநாடக நூலாகிய "மத்த விலாசப் பிரகசனம்" என்னும் நூல் மூலம் அறியலாம். தமது செல்வாக்கினால் அவர்கள் (சமண பௌத்தர்) நீதி பரிபாலனத்திற்கூடத் தலையிட்டனர் எனத் தெரிகிறது.

சமயக்குரவர் சமண பௌத்தரைத் தாக்கும் போது காணப்படும் வேகத்தின் அடிப்படை இங்கேதானிருக்கிறது. "ஆனைமாமலை ஆதியானிடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கள்" என்றும், நாயன்மார் பின்னார் தாக்குவது இதன் காரணமாகவே என்பது தெளிவு.

இதற்கு முன்னோடியாக, விடிவெள்ளியாகத்தான் காரைக்காலம்மையார் தமது திருப்பதிகங்களிலே சிவனைக் கருணையின் பிழம்பாகவும், கோபத்தின் சின்னமாகவும், அழிவின் சக்தியாகவும் கொண்டாடுகின்றார். பொது மக்களும் பங்கு கொண்டு வழிபடும் வண்ணம் சிவனது பண்புகளைத் தமிழகத்து வழிபாட்டு முறைகளுக்கேற்ப பாடுகிறார் அம்மையார். அதுமட்டுமன்று. சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே வரிப்பாடல்களைக் காணப்படும் கிராமியக் கவிதைகளையும் அனுசரித்துக் கட்டளைக் கலித்துறை விருத்தம் முதலிய பாமரச் சுவை பொருந்திய இசைப்பாடல்களையும் பாடத் தொடங்கினார். சைவ சமய மறுமலர்ச்சி பக்திப் பிரவாகமாகத் தமிழகத்திலே ஓடப் போகிறது என்பதைக் காட்டி நிற்பவர் அம்மையார். அவர் வழியிலேயே நாயன்மார் சென்று பக்தி நிலையை உச்சிக்குக் கொண்டு சென்றனர். தமிழகத்திலே பக்தியானது பொருளாதார-சமூக-அரசியல்-சமயப் பேரியக்கமாக மாறியது. அது கண்டு மன்னரும் பக்கம் மாறினர்.

"வீடறியாச்சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தி லமண் பள்ளியொடு பாழிகளுங்

கூடவிடித்துக் கொணர்ந்து குணதர வீச்சரமெடுத்தான்"

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப் பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கள் கட்டினான் என்று பெரிய புராணம் பாடும். எனினும் அது பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்துக்குரிய உண்மையாகும்.

"ஆபுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார்சடைக்கரந் தார்க்

கன்பராகில் அவர்கண்டீர்

நாம் வணங்கும் கடவுளாரே"

என்னும் நிலை ஏற்பட்டதும், சிவன் தென்னாடுடைய தனிப் பெருந் தெய்வமாகமாறி விடுகிறான்.

பெயர் தெரியாச் சிந்துவெளிக் கடவுள் பெயரும் குணமும் பெற்றுச் சிதம்பர நாதனாகி விடுகிறான்.

அடிக்குறிப்புகள்

1. Chandra, R.P. Indo-Aryan Races, P.150

2. Encyclopaedia of Religion and Ethics, P 115

3. மறைமலையடிகள், சைவசித்தாந்த ஞானபோதம், பக்.18

4. மறைமலையடிகள் சை.சி.ஞா.பக்.217. எனினும் அவர் சிவலிங்க உண்மைக்கு வேறு விளக்கங்கொடுக்க முனைவர். அது வரலாற்று நோக்கோடு இயைபற்றுக் காணப்படுகின்றது.

5. K.N. Sastri: New Light on the Indus Civilizaiton p.15

6. D.D. Kosambi: An introduction to the Study of Indian History. P.60

7. G.Subramaniapillai: Tree worship and Ophiolatary p.3

8. S.K. Dikshit: The Mother Goddess p.2

9. Wheeler: The Indus Civilization 18 Kosambi ISIH p.68. D.Chattopadhyaya; Lokayata p.58.

10. V. Gorden Child: The Aryans

11. C.f. Haimendorf: Man in india xxix (1949) 152-57

12. சு.வித்தியானந்தன்: தமிழர் சால்பு பக்.106

13. J.Marshal: Mohenjodaro and the Indus Civilization Vol.1 p.51

14. O.R. Ehrenfels: Mother Right in India p.79-80

15. வித்தியானந்தன் : தமிழர் சால்பு பக்.121

16. திருமுருகு: அடி 258

17. திருமுருகு: 259

18. பெரும்பாணா: 458-9

19. கி.லக்குமணன்: இந்திய தத்துவ ஞானம பக்.369

20. C.V. Narayana Iyyer: Origin and Early History of Saivism in South India p.105

21. பி.கோதண்டராமன்: "பண்டைத் தமிழரின் வெறியாடடு" கோபாலகிருஷ்ணமாசார்யர் அறுபதாண்டு நிறைவுவிழா மாலை பக்.3-166

22. கோதண்டராமன்: பக். 3-167

23. வித்தியானந்தன் பக்.124

24. வித்தியானந்தன்: பக்.115

26. வித்தியானந்தன்: பக்.126

27. Kosambi: ISIH: p.245-46

28. Kosambi: ISIH : p.246

-------------

http://noolaham.net/library/books/01/97/97.htm

மேற் கூறிய வரலாற்று ஆதாரங்கள் எல்லாம் சொல்வது.தமிழர்கள் பண்டைய காலம் தொட்டு பல்வேறு விதமான மத நம்பிக்கைகளையும் தெய்வ வழிபாட்டையும் கொண்டிருந்தனர் என்பதுவும், தென் நாட்டிற்கு ஆரியரின் வருகையின் பின்னால் , ஆரியரின் ஆகம மத நம்பிக்கைகள் புராணக் கதைகள் மூலம் புகுத்தப்பட்டு இருக்கின்ற கடவுளர்களே ஆரியரின் ஆகம மதத்திற்குள் உள்வாங்கப் பட்டனர்.இதனாலையே இன்று இந்து சமயம் என்று சொல்லப்படுகிற சமயத்தில் ஏராளம் கடவுளர்களும், நம்பிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரணான சித்தாந்தங்களும் இருக்கின்றன.

இன்றிருக்கும் இந்து மதம் என்பதே ஆதியில் இருந்தும் தொடர்ச்சியாக வந்தது என்று சொல்பவர்கள் ஒன்றில் அறிவிலிகள், வரலாற்றைப் புரிந்து கொளாதவர்கள் அல்லது வேண்டுமென்றே உண்மைகளை மறைக்க விரும்புபவர்கள்.

இன்றைய இந்து மதத்தின் சாதிய வழிபாட்டு அடிப்படைகளின் மூலம் ஆரியரின் ஆகம மதம்.இந்த ஆகம மததிற்கு எதிராக உருவாகிய அல்லது சுயமாகத் தொழிற்பட்ட மதங்களே உலகாயுதம்,கபாலிகம்,வைணவம்,சம

ஆகா. அப்படியென்றால் சைவர்கள் என்று தம்மை சொல்பவர்களும் அல்லது இந்துக்கள் என்று தம்மை சொல்வர்களும் மதம் மாறியவர்களோ? :lol:

மதமும் கடவுளும் மனிதரால் ஆக்கப்பட்டவை.வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கடவுளர்கள் வணங்கப்பட்டனர்.அன்று கொற்றவையை வணக்கிய தமிழன் இன்று சத்திய சாய்பாபவை வணங்கிறான் நாளை யாரை வணங்குவான் என்று எவருக்கும் தெரியாது.

முன்னர் சாக்தம்,உலகாயுதம், சமணம், வைணவம் ,சைவம் என்னும் சமயங்களைப் பின் பற்றிய தமிழன் இன்று இந்து சமயம் கிருத்துவ சமயம் இசுலாமிய சமய நெறிகளைப் பின் பற்றுகிறான். நாளை வேறு சமயங்களைப் பின் பற்றலாம் அல்லது சமய நம்பிக்கைகள் அற்ற சித்தர் வழி முறைகளையோ தெய்வ நம்பிக்கை அற்ற உலகாயுத நம்பிக்கைகளையோ அல்லது அல்லோலுயா பாடி பெந்தோகொஸ்து மதத்தையோ பின் பற்றலாம்.

மேற்கூறிய சமய நம்பிக்கைகளைத் துறந்து தமிழன் அறிவியற் பார்வை உடையவனாக வரலாற்றை வரலாறாகப் பார்ப்பானாகில் இந்த உலக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துவான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிஹி என்னவோ நேரே பாத்து வந்தவன் மாதிரிக் கதையளக்குறியள் நாரதர். வடிவாகப் பார்த்தியள் எண்டால் தெரியும், திருஞானசம்பந்தர் காலத்தில் கூடச் சிவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுறதில்லை. தாயுமானவன், எம்பெருமான் என்று தான் அழைப்பினம். இதற்குள்ள கந்தையாடா பெயரைத் தேடிக் கொண்டு திரிந்து ஆராய்கின்றியளாம்.

மற்றது ஒருவருடைய வழிபாடு எப்ப வந்தது எண்டது குறித்து வெக்கப்படுறதற்கு ஒண்டுமில்லை. இந்த ஆராய்வு எண்டது உண்மையாக இருக்கலாம். பொய்யாக இருக்கலாம். வெறுமனே தமக்குக் கிடைத்த கொஞ்ச ஆதாரங்களை மட்டும் வைச்சுக் கொண்டு ஆராய்வுக் கட்டுரையாக மட்டும் எழுதப்பட்டிருக்கு. அவ்வளவு தான்.

மதம் மாறுதல், வேறு ஒரு கொள்கையைப் பின்பற்றுதல் எண்டது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். அலெக்சாண்டர் லெபனானைக் கப்பற்றிய பின்னர் தான், மேலைத்தேசயருக்கு, கிறிஸ்தவம் பரவினது. அதற்கு முதல் எதேன்ஸ், லீனஸ் என்ற தெய்வங்களைத் தான் அவை கும்பிட்டுக் கொண்டிருந்தவை. இளைஞன் பல்லைக்காட்டி வெக்கப்படுற மாதிரி அதில் ஒண்டுமில்லை.

பாலைவனத்தில் பிறந்த ஜேசுவிற்கும், பனியில் சறுக்குகின்ற கிறிஸ்மஸ் தாத்தாவிறகும் என்ன சம்பந்தம். இரு பண்டிகைகள் ஒண்டாகிப் போனது தான் காரணம்.

அது போல இஸ்லாமும் வந்தது கிபி 1000 சொச்சத்தில் தான். அதுக்காக இஸ்லாமியர் வெக்கப்பட்டுக் கொண்டு ஓடிக் கொண்டு திரியல்ல.

மற்றது சமய நடவடிக்கைகள் மேற்கொள்வதால ஒருவன் அறிவுரீதியாக இல்லை எண்ட நாரதரின் வாத் சொல்லுறமாதிரிப் புத்திசாலித்தனமாக இல்லை. ஒருவன் படிக்காதற்குப் பக்தி தான் காரணம் எண்டு பறைஞ்சால் அதுக்காக எந்த விவாததத்துக்கு;ம நான் வரத் தயார்.

படிப்பறிவில்லாதவன் தான் நாஸ்திகம் கதைக்கின்றான் ஏனென்றால் படிக்காமல் பாஸ் பண்ணலாம் என்ற நம்பிக்கை கொண்டு திரிஞ்சதால் தான் அந்த நிலை. அதை அவர்களின் கருத்துக்களில் பல தடவை கண்டிருக்கேன். பரிட்சை பாஸ் பண்ண வைக்க உந்தக் கடவுளால் முடியவில்லை. கடவுள் பொய் என்று விம்மி விம்மி அழுவதைப் பார்த்திருக்கேன். பெரியாரும் 4ம் கிளாசுக்கு மேல் படிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியார் சிலை கல்லால் செய்யப்பட்டது.பெரியார் சிலை உடைத்தாலும் பில்ளையார் சிலையை உடைத்தாலும் கல்லுத் தான் வரும்.கடவுள் வரமாட்டார்.பெரியாருக்குச் சிலை வைப்பவர்கள் அவர் தம்மைக் காப்பார் என்றோ இல்லை அவர் சகலகலா வல்லவர் என்றோ அவருக்குக் லஞ்சம் குடுத்தால் தங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொடுப்பார் என்றோ நினைப்பதில்லை.இந்த அடிப்படையைக் கூட விளங்கிக் கொள்ளாமல் புல்லரிக்க வைக்கிறியள்.பெரியார் சிலைகளே வேண்டாம் என்றாரா கடவுள்கள் வேண்டாம் என்றாரா? இது கல்லால் ஆன சிலை இதற்கு ஒரு சக்தியும் கிடையாது என்பதற்காகாத் தான் உடைத்தார்.இதையே உங்களால் விளாங்கிக் கொள்ள முடியவில்லை?

பெரியார் அப்ப தனக்குச் ரோட்டு முழுக்கச் சிலை வைச்சு, பாலாலையும், பூவாலையும் அபிசேகம் செய்கின்றதை விரும்பினவரோ? உந்தக் கோதாரி எனக்குத் தெரியாமல் போச்சு.

மற்றது எங்கட பெரியார் பக்தர்கள் பெரியார் எல்லாம் வல்லவர், அவர் தமிழனுக்கு எல்லாம் செய்தவர், என்று எல்லாம் வாயால புகழேக்க ஏதும் சக்தி இருக்கும் எண்டு தான் மாறி விளங்கீட்டன். கோவிக்காதையுங்கோ.

ஹிஹி என்னவோ நேரே பாத்து வந்தவன் மாதிரிக் கதையளக்குறியள் நாரதர். வடிவாகப் பார்த்தியள் எண்டால் தெரியும், திருஞானசம்பந்தர் காலத்தில் கூடச் சிவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுறதில்லை. தாயுமானவன், எம்பெருமான் என்று தான் அழைப்பினம். இதற்குள்ள கந்தையாடா பெயரைத் தேடிக் கொண்டு திரிந்து ஆராய்கின்றியளாம்.

ஹி ஹி உது நான் ஆராய இல்லை, சில பேராசிரியர் மார் இருந்து ஆதர்ங்களின் அடிப்படையில ஆரன்ச்சு எழுதினது, கீழ அவர் எங்க இருந்து எடுத்த ஆதரங்கள் எண்டும் ஒரு பட்டியல் போட்டிருக்கித்றார் ஒருக்க வாசிச்சுப்பாருங்கோ.சும்மா ரோட்டில நிண்டு கனிதையா ,பொன்னையா எண்டு வெறியில கதைக்கிற மாதிரி சொல்லேல்ல. நீங்கள் சிவன்,பிரம்மா, பிள்ளையார் எல்லாரையும் நேரில பாத்திட்டே கதைக்கிறியள்?

மற்றது ஒருவருடைய வழிபாடு எப்ப வந்தது எண்டது குறித்து வெக்கப்படுறதற்கு ஒண்டுமில்லை. இந்த ஆராய்வு எண்டது உண்மையாக இருக்கலாம். பொய்யாக இருக்கலாம். வெறுமனே தமக்குக் கிடைத்த கொஞ்ச ஆதாரங்களை மட்டும் வைச்சுக் கொண்டு ஆராய்வுக் கட்டுரையாக மட்டும் எழுதப்பட்டிருக்கு. அவ்வளவு தான்.

உங்களுக்கு இது பொய் எண்டு பட்டா ஆதாரத்தோட கருதுக்களை முன் வையுங்கள்.சும்மா பொய்யாவும் இருக்கலாம் உண்மையாவும் இருக்கலாம் எண்டு சொல்லுறது ஒரு பொருந்தமும் இல்லாத கதை.எதாவது உருப்படியா தெரிச்சா எழுதுங்கோ.

மதம் மாறுதல், வேறு ஒரு கொள்கையைப் பின்பற்றுதல் எண்டது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். அலெக்சாண்டர் லெபனானைக் கப்பற்றிய பின்னர் தான், மேலைத்தேசயருக்கு, கிறிஸ்தவம் பரவினது. அதற்கு முதல் எதேன்ஸ், லீனஸ் என்ற தெய்வங்களைத் தான் அவை கும்பிட்டுக் கொண்டிருந்தவை. இளைஞன் பல்லைக்காட்டி வெக்கப்படுற மாதிரி அதில் ஒண்டுமில்லை.

பாலைவனத்தில் பிறந்த ஜேசுவிற்கும், பனியில் சறுக்குகின்ற கிறிஸ்மஸ் தாத்தாவிறகும் என்ன சம்பந்தம். இரு பண்டிகைகள் ஒண்டாகிப் போனது தான் காரணம்.

அது போல இஸ்லாமும் வந்தது கிபி 1000 சொச்சத்தில் தான். அதுக்காக இஸ்லாமியர் வெக்கப்பட்டுக் கொண்டு ஓடிக் கொண்டு திரியல்ல.

எல்லாம் மனிதன் உருவாக்கிய மதங்கள் தான்,இங்கே ஒருவரும் இசுலாம் பற்றியோ அன்று கிரிந்துவம் பற்றியோ ஒன்றும் ஒப்பிடுச் சொல்லவில்லையே? ஏன் உங்கள் மதத்தை உயர்த்த மற்ற மதங்களும்ம் அப்படித் தான் எண்டு இழுக்கிறியள். நாங்கள் சொல்வது எல்லா மதங்களும் இப்படித் தான் என்பதே.

மற்றது சமய நடவடிக்கைகள் மேற்கொள்வதால ஒருவன் அறிவுரீதியாக இல்லை எண்ட நாரதரின் வாத் சொல்லுறமாதிரிப் புத்திசாலித்தனமாக இல்லை. ஒருவன் படிக்காதற்குப் பக்தி தான் காரணம் எண்டு பறைஞ்சால் அதுக்காக எந்த விவாததத்துக்கு;ம நான் வரத் தயார்.

படிப்பறிவில்லாதவன் தான் நாஸ்திகம் கதைக்கின்றான் ஏனென்றால் படிக்காமல் பாஸ் பண்ணலாம் என்ற நம்பிக்கை கொண்டு திரிஞ்சதால் தான் அந்த நிலை. அதை அவர்களின் கருத்துக்களில் பல தடவை கண்டிருக்கேன். பரிட்சை பாஸ் பண்ண வைக்க உந்தக் கடவுளால் முடியவில்லை. கடவுள் பொய் என்று விம்மி விம்மி அழுவதைப் பார்த்திருக்கேன். பெரியாரும் 4ம் கிளாசுக்கு மேல் படிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியார் அப்ப தனக்குச் ரோட்டு முழுக்கச் சிலை வைச்சு, பாலாலையும், பூவாலையும் அபிசேகம் செய்கின்றதை விரும்பினவரோ? உந்தக் கோதாரி எனக்குத் தெரியாமல் போச்சு.

மற்றது எங்கட பெரியார் பக்தர்கள் பெரியார் எல்லாம் வல்லவர், அவர் தமிழனுக்கு எல்லாம் செய்தவர், என்று எல்லாம் வாயால புகழேக்க ஏதும் சக்தி இருக்கும் எண்டு தான் மாறி விளங்கீட்டன். கோவிக்காதையுங்கோ.

சமயத்துக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இது இப்படிதான் என்று முடிந்த முடிபாகக் கூறுபவை மதங்கள்.இல்லை இது அப்படியா என வினா எழுப்பி ஆராய்வது அறிவியல்.அறிவியற் பார்வை என்பது மதங்களின் முடிந்த முடிபு என்பதற்கு நேர் எதிரான நிலைப்பாடு.அதனால் தான் மதச் சிந்தனை என்பதற்கும் அறிவியற் சிந்தனை என்பதற்க்கும் முரண்பாடு கலீலியோ டார்வின் காலத்தில் இருந்து இன்று வரை இருக்கிறது.எல்லாத் தருணங்களிலும் அறிவியற் சிந்தனையே வெற்றி பெற்றுள்ளது.மதச் சிந்தனைகள் தொடர் தோல்விகளைக் கண்டு வருகின்றன.இங்கே படியாதவன் படித்தவன் என்பதல்ல பிரச்சினை, அறிவியல் ரீதியாக பகுத்து அறியும் அற்றலைப் பயன் படுத்துகிறோமோ என்பதே பிரச்சினை.பெரியார் நான்காம் வகுப்பு படித்திருக்கலாம் ,பிரபாகரன் ஆறாம் வகுப்புப் படித்திரிக்கலாம் ஆனால் அதற்கும் அவர்களின் ஆளுமைக்கும் சிந்தனைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

படிக்கும் வகுப்பால் ஒருவனது அறிவை எடை போடடுவது சிறு பிள்ளைத் தனமான கருத்து.பல அறிஞர்கள் பாடசலைக்கு வெளியே முறை சரா முறைகள் மூலமே தங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டுள்ளதைக் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது போல.. ஆரம்பத்தில் ஐயனாரை வணங்கிய தமிழர்கள்.. கொற்றவையை வணங்கிய தமிழர்கள்.. சிவனை உமாதேவியாரை.. முருகனை வள்ளி தெய்வயானையை வணங்கியவர்கள்.. ஏன் ராமசாமியையும் அவரின் இரண்டு பொண்டாட்டிமாரையும் வணங்கப்படாது. அப்படி வணங்கிறது பகுத்தறிவின் பாற்பட்ட அறிவியல் முதிர்ச்சியை நாகரிக உயர்சியை தமிழர்கள் உலகில் பிரதிபலிப்பத்தை காட்டும். அதை கைலாசபதி ஐயா போன்ற மாக்ஸியவாதிகளின் கட்டுரைகளால் நாங்கள் நிறுவுவோம் அல்லவா..!

ராமசாமியின் திருவிளையாடல்களை கைலாசபதி ஐயா மணிசங்கர் ஐயரை வைச்சு சாடும் போது.. மாக்ஸியவாதி அப்படி எல்லாம் சொல்லுவது வியப்பில்லை என்போர்.. இங்கே.. கைலாசபதி ஐயாவின் 3 தசாப்தங்களுக்கும் முந்தைய கட்டுரைகளோடு கட்டிப் புரள்வதும் ஏன். எல்லாம் ரமாசாமிக்கு 90 அடியில சிலைவைச்சு அவரின் மனிசிமாருக்கு 45 அடியில சிலைவைச்சு.. அபிசேகம் செய்யத்தான்..!

எல்லாம் உருவ வழிபாட்டின் அறிவியல் மயப்படுத்தலாக காண்பிக்கப் போறம் பாருங்கோவன். எங்கட அறிவியல் புரட்சி.. ராமசாமியின் தலையில் இருந்து பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்தி சந்திரமண்டலத்தைக் குடையப் பயன்படாட்டி..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.