Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடிதம் -திரைப்படம் திரைக்கு வாருங்கள்

Featured Replies

http://www.wmmfilm.com/ - New uppdates and New trailer attached. காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008

Kadhal kaditham movie coming soon (for other countries)

யாழ்கள உறவுகளுக்காக முதன் முதலாக காதல் கடிதம் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இணையத்தளத்தை இங்கே இணைக்கின்றேன். இந்தக் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் திரைக்கு வருவதற்கு படாத பாடு பட்டு ஒரு மாதிரி திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு தாய் தந்தைக் பிள்ளையை பெற்று வளர்த்து பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப்பாறுவது போன்ற அனுபவம் கிடைக்கும். ஒரு இறுவட்டோடு ஆரம்பிக்கப் பட்ட கலைப் பயணத்தால் ஒரு திரைப்படம் உருவானது.

எங்கடை மக்கள் என்ன திரைக்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரவா கொடுக்கப் போகின்றார்கள். எங்க இலவசமாய் இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம் என்றுதான் காத்திருப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் பெரிய மனசு வைத்து திரையரங்கில் பார்க்க வந்தால் எங்கள் பெரு மூச்சின் வலி புரியும். இதன் பின் உழைத்த கலைஞர்கள் பட்ட கஸ்ரங்கள் கொஞ்ச நஞ்சமில்லை!!

இப்போதைக்கு இந்த இணையத்தளத்தை பார்வையிடுங்கள் திரைக்கு வாருங்கள் பிறகு பேசலாம்.:lol:

அன்புள்ள பரணீ மற்றும் என் அருமை யாழ்கள உறவுகளுக்கு யேசு பாலன் பிறந்தநாளில் இனிப்பான செய்தியும் நத்தார் வாழ்த்துக்களும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ(புதிய) குமரன் திரையரங்கிலும், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் முதலில் வெளிவர இருக்கின்றது. இதே நேரம் தமிழகத்திலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

Edited by Tamizhvaanam

புகைப்படங்களை பார்க்க அழகாய் இருக்கு.

இலவசமாய் விஜய் படம் ரஜனி படம் பார்க்கலாம் என்று சொல்லுங்கள் கட்டாயம் வாலைக் கிளப்பிக்கொண்டு வருவார்கள் இதுதான் எம்மாக்கள்

காதல் கடிதம் மக்கள் ஆதரவைப் பெற்று வளர என் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்கடிதம் திரைக்காவியமாக வெளிவரவுள்ளதாக அறிந்த காலம் முதல் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திந்தேன். 2004ம் ஆண்டு இசைத் தட்டு வெளிவந்த போதே மிகுந்த ஆவலுடன் வாங்கி இசைத்தட்டு தேயும் வரை இரசித்து கேட்டிருக்கிறேன். இத் திரைக்காவியம் திரைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

புகைபடங்கள் யாவும் அருமையாக இருகிறது "காதல் கடிதம்" திரைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகிறேன்....காதல் கடிதம் அமோக வெற்றியை பெற வாழ்த்துகள்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர் சினிமா முயற்சிகள் நல்லது. வாழ்த்துக்குரியது. ஆனால் அவர்கள் எந்த பாதைியில பயணம் செய்கிறார்கள் என்பது முக்கியம்.

பலரும் கோடம்பாக்கம் பாதையையே பயன்படுத்துகின்றனர்.

காதல் கடிதமும் அந்தப் பாதையிலேயே பயணம் செய்கிறதாக சந்தேகம் உள்ளது.

ஈழத்து சினிமா அல்லது புலம் பெயர்ந்தோர் தமிழ் சினிமா என்பது கோடம்பாக்க பாதைக்கு எதிர்திசையில் நடைபோடும்போதே வெற்றி பெறும்.

இதை உணராமல் கோடம்பாக்க பாதையை தெரிவு செய்வோர் தங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவது அர்த்தமற்றது.

அவர்களை தோற்கடிப்பதே ஈழச்சினிமா, புலம்பெயர் தமிழ்சினிமா ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டியது.

கோடம்பாக்கம் என்பது நச்சு சினிமா, நாசகார சினிமா, தமிழர்களை அழிக்கும் சினிமா என்பதை உணரும்போதே எமக்கான சினிமா தோன்றும்.

  • தொடங்கியவர்

மேலே கருத்துக் கூறிய அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தி.ஆபிரகாம் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள். நீங்கள் குறிப்பிடுகின்ற எங்கள் தாயகம் சார்ந்த சினிமா என்பதற்கான விதிமுறைகளை இங்கே குறிப்பிட முடியுமா..?

கோடம்பாக்கம் குப்பை என்றால் அந்தக் குப்பைகளை உள்வாங்கப் பழகிய எம் மக்களை என்ன சொல்ல..?

நீங்கள் கூறுகின்ற எங்கள் சினிமாவின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?

எங்கள் சினிமாவிற்கான தளம் எங்கே உள்ளது?

இதுவரை வந்துள்ள நல்ல தரமான தொழில்நுட்ப ரீதியாக வளமான எத்தனை சினிமா படைப்புகள் எம்மவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கூறுகின்ற தரமான படைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தானே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கோடம்பாக்கத்தை குறைகூறாதீர்கள். அவர்கள் தங்களுக்கு தேவையானதை செய்கின்றார்கள்.

இப்படி கேள்வி கேக்கின்ற நீங்கள் எங்கள் சினிமாவை உருவாக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிதான் என்ன?

என்னைப் பொறுத்தவரை தரமான சினிமாவை உருவாக்குவதற்கு தமிழகத்தை பின்பற்றலாம். அல்லது இரான் சினிமாப் படங்களைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற எத்தனையோ நல்ல திரைப்படங்களைப் பின்பற்றி அதன் தொழிநுட்பத்தோடு பயனிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏன் என்றால் எங்களிடம் இதுவரை சிறந்த சினிமாவை தொடர்ச்சியாக கையாளக் கூடிய அல்லது இந்தக் காலகட்த்தோடு போட்டி போட்டு திரைப்படம் தயாரிக்ககூடிய நிறுவனங்கள் இல்லை.

சும்மா வெறுமன விமர்சனங்களை அள்ளி வீசி உருவாகின்ற சினிமாக்களைகூட தடுப்பதற்கான முயற்சிகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளிலும் சரி தாயகத்திலும் சரி எத்தனை கலைஞர்கள் தொடர்ந்து இந்த முயற்சியில் தங்களை ஐக்கியமாக்கி இருக்கின்றார்கள். இப்படியே எங்கள் சினிமா என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி எங்கள் சினிமா வளரும்.? இந்த முயற்சிக்கான என்னுடைய சிறிய பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றவன் என்ற முறையில் சொல்கின்றேன்.

தமிழகத்தில் இருந்து வருகின்ற..நல்ல படங்களைத் தேடிப் பாருங்கள். நீங்கள் சொல்கின்ற குப்பையிலும் நல்ல திரைப் படங்கள் பூத்துக்கொண்டுதானே இருக்கின்றது.

உங்கள் எண்ணங்களுக்கு நன்றிகள். காதல் கடிதம் குப்பையாகாது என்பதை நீங்களே பார்த்துவிட்டுச் சொல்லுங்காலம் மிக விரைவில் வரும்.

எப்போது திரைக்கு வரும் என கூறமுடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வசிகரன். உங்கள் முதல் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியது நேற்றுப்போல இருக்கிறது. அதன்பின் உங்கள் காதல்கடிதல் இசைத்தட்டு உதயாவின் இசையில் வந்து பிரபலமானது. படம் வருகிறது என்றீர்கள். சென்ற கோடையில் சென்னையில் விளம்பரத் தட்டி பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது உங்கள் கனவு திரைக்கு வருகிறதாக அறிந்து மகிழ்ச்சி. முற்கூடியே ஊகிக்க முடியாதாயினும் படம் நன்றாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். முதல் முயற்ச்சி என்பதால் பாரட்டுகளில் உற்சாகம் பெற்றும் விமர்சனங்களி இருந்து கற்றுக் கொண்டும் தொடர்ந்து செல்லுங்கள். உங்களுக்கு என் ஆதரவும் நல்வாழ்த்துகளும்.

Edited by poet

  • தொடங்கியவர்

அன்புள்ள செயபாலன் அண்ணாவிற்கும், பரணிக்கும்(மிக விரைவில் வரும்):lol: நன்றிகள்

உங்களுடைய வாழ்த்துக்கள். அருமையான கருத்துக்களோடு உங்களுடைய அணிந்துரை வழங்கலுக்கு என்றும் நன்றியுடையவன். எனது அடுத்த புத்தகத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மிகவிரைவில் அதுவும் வெளிவரும் என்றென்றும் உங்கள் கருத்துகளை வாழ்த்துக்களை உள்வாங்கி மகிழ்பவன் நான்.

என்னுடைய மூன்று படைப்புகள் புதிய ஆண்டில் வெளிவர இருக்கின்றது. காதல் வானம் இந்த ஆண்டில் வெளிக்கொணர தாமதமாகும் ஆகையால், பூக்கும் புத்தாண்டில் வெளிவரும்.

காதல் கடிதம்- திரைப்படம் ( பல கலைஞர்களின் கூட்டு முயற்சி)

காதல் வானம்- இசைத்தொகுப்பு ( பல கலைஞர்களின் கூட்டு முயற்சி)

காதல் கடிதம்- ஆவணப்படம் ( பல கலைஞர்களின் கூட்டு முயற்சி)

இத்தோடு எனது இரண்டாவது புத்தகம்.

மீண்டும் பரணிக்கும், உங்களுக்கும் எனது நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிப்பணி

நன்றி.

Edited by Tamizhvaanam

வணக்கம் வசீகரன்

காதல் கடிதம் திரைப்படம், ஆவணப்படம் என இரண்டு முகங்கள் கொண்டதுபோல் தெரிகின்றது. நல்ல விடயம். அதைப்பற்றி சிறு விளக்கம் தர முடியுமா ?

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அன்புள்ள பரணீ மற்றும் என் அருமை யாழ்கள உறவுகளுக்கு யேசு பாலன் பிறந்தநாளில் இனிப்பான செய்தியும் நத்தார் வாழ்த்துக்களும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ(புதிய) குமரன் திரையரங்கிலும், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் முதலில் வெளிவர இருக்கின்றது. இதே நேரம் தமிழகத்திலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வசீகரன். பாராட்டுக்கள். பிரான்சில் ஓடும்போது திரையில் பார்க்கவே விருப்பம். :lol::D

திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் வசீகரன்.

முதலில் கரம் கொடுப்போம்.

பின்னர்

விமர்சனங்களை முன் வைப்போம்.

அதுவே நாளைய சினிமா வளர வழி செய்யும்.

வணக்கம் வசீகரன்

வாழ்த்துக்கள்

திரைக்கு வரும்போது கட்டாயம் அங்கு சழூகமளிப்பேன்.

கனவுகள் நிஜமாகும்

நட்புடன் பரணீதரன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் திரைப்படம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள். வவுனியா- கொழும்புக்கிடையிலான பாடல் ஒளிப்பதிவு செய்தபோது, அது பற்றித் தனியார் ஊடகங்களில் பங்களிக்க அழைப்பு விடுத்ததாக நினைவு.

உங்கள் நாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து இத்திரைப் படத்தை இணையத்தில் பத்தோடு பதினொன்றாக தரவிறக்க செய்து பார்க்காதீர்கள். திரைக்கு சென்று பார்த்தால் தான் அதன் முழுமை கிடைக்கும்.

உங்களுடைய திரைப்படம் மட்டுமல்ல, ஏனைய படங்களைக் கூடத் தரவிறக்கி அல்லது களவாகப் பார்ப்பது என்பது மிகவும் தவறான ஒன்று தான். ஒவ்வொரு கலைஞனும் கஸ்டப்பட்டு உருவாக்குவதை ஒரு நொடியில் சிதைப்பது என்பது அக்கலைஞனுக்கு (முக்கியமாக எம்மவர்கள் யாராவது இப்படிச் செய்தால்) எம்மவர்கள் மீது மட்டமான சிந்தனையை உருவாக்கும்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும்,

பிறந்திருக்கும் 2008 ஆங்கிலப் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலர வாழ்த்துகின்றேன்.

தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகள் இன்னல் களைந்து நிரந்தரமான சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் இந்த ஆண்டு வழி சமைக்கவேண்டும் என்று ஆண்டவனை இறைஞ்சுகின்றேன்.

தூயவன் நீங்கள் கூறியது போல் இன்றுவரை ஒரு படத்தைக்கூட நான் இணையத்தில் பார்த்தது இல்லை. காரணம் நீங்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களை உற்று உணர்ந்து என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கின்றேன், உழைக்கின்றேன். அன்பு கலந்த நன்றிகள் தூயவன் பரணீ இருவருக்கும் உரித்தாகட்டும்.

என்றும் அன்புடன்

உங்கள் யாழ்கள உறவு

வசீகரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.