Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

விகடகவி உங்கள் சிறு சிறு தூறல்கள் இப்போது பெரும் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது களத்தில். வாழ்த்துக்கள்.

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்.. பின்னூட்டல்களுக்கும்.. நன்றிகள்

தூறல் நாள் -12

கட்டிக்கொண்டு கிடந்து

கதைகள் பேசுவாள்..இதழ்

முத்தங்கள் பேசும்போது

விழிமூடிக்கிடப்பாள்..

பிரியும்போது அழுது நடிப்பாள்..

அவள் போலிக்காதலியென்றாள்..

"அண்ணா"என்றும் அபத்தமாய் அழைப்பாள்

கெட்டவனுக்கு வாய்ப்புகள் அதிகம்..

மௌனிகளுக்கு வாய்ப்புகள் நிரந்தரம்

நல்லவனுக்கு வாய்ப்புகள் குறைவு

மிகவும் நல்லவனென்றால்.. வாய்ப்புகளே இல்லை..

என்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா..

உயிர் வாழத்ததான்..

என் மௌனம் குமைந்து கொண்டிருக்கிறது..

உள்நின்று கனன்றுகொண்டிருக்கிறது..

ஆத்திரமாய்க் குமுறிக்கொண்டிருக்கிறது

இது எரிமலையாய் வெடித்தால்... நான்..

வாழ்வின் எல்லைவரை ஓடஓட விரட்டப்படுவேன்..

ஏனென்றால்..இது வீதிப்பையன்களின் அட்டகாசஉலகம்.

அம்மா..

ஒரு விடயத்தை

உன்னிடம் மறைத்துவிட்டேன்..

சொல்லநினைத்தேன்..

உன் மனம் உடைந்து விடுமோ

என்ற அச்சத்தில் தவிக்கிறேன்..

அம்மா..

உனக்குப் பிடிக்காத உன் தம்பியின்..

மகளை எனக்குப் பிடித்தது..

ஏனம்மா..

  • தொடங்கியவர்

தூறல் நாள் -13

உன்பார்வைக்கும்

என் பார்வைக்கும்..

விழுந்த முடிச்சு...

திருமண முடிச்சாகமாறும்..

என கனாக்கண்டேன்..

இப்போது உன் நினைவு முடிச்சுகள்..

என் கழுத்தை நெரிக்கிறது...

என் இரத்தத்தின் சத்தங்கள்..

அவளுக்கு கேட்கிறதாம்...

"ஆகா என்ன கேட்கிறது?"

என்று கேட்டேன்..

நிறைய பெண்களின்.. பெயர்

காதில் விழுந்ததாம்..

அட.. நான் என்ன செய்வேன்..

என் சுயரூபத்தை நாக்கைத்தவிர

எல்லாம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்..

Edited by vikadakavi

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்

உங்கள் கவிதைகளின் ரசிகை நான்,இடஹியும் ரசித்தேன்!!

வாழ்த்துக்கள் விகடகவி

  • தொடங்கியவர்

தூறல் நாள் -14

வரவுக்கு மீறிய செலவாய்..

ஒரு முத்தத்திற்கு பதிலாக

ஒன்பது முத்தம் தந்தேன்..

செலவாளி என்று தப்பர்த்தம்

செய்து கொள்ளாதே.. செல்லமே..

திருமணத்திற்கு பிறகு வருமானம்..

அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..

மெதுமெதுவென்றிருந்தாலும்..

அந்தப் பிஞ்சுவிரல்கள் ஐந்தும்..

என் விரலை இறுக்கமாய்..

பற்றிக்கொண்டபோது..

குளிர்ச்சியான நீர்வீழ்ச்சியொன்று

இதயச்சாரலின் ஓரமாய்.. அடடா..

குழந்தை உலகின் முதல் அதிசயம்!!.

சந்தித்தவேளை வயதை

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

பேசியவேளை

யோசிக்கவேயில்லை

வாசித்துவிட்டேன் உன்னை

மன்னித்துவிடு (சின்னப்) பெண்ணே..

எல்லாவற்றிற்கும் விலையுண்டு..

என்று நினைத்தவன் நான்..

பணத்துக்கு பாசமும் அடிமை

என்றிருந்தவன் நான்..

ஆனால் அன்பே உன் குணத்தால்..

இன்முகத்தால்..புன்சிரிப்பால்

..

உன்பால் என்னை சுழலவிட்டாயே..

நீ என்னை செல்லநாய்க்குட்டிபோல்

செய்தனையே.. பணம் பாதாளம் பாயுமாம்

பெண்.. பாதாளத்தில் பல்லாங்குழி ஆடுவாள்..

நீ காதலிக்காமல் போனதும் கவலையில்லை

நீ என்னைத்திட்டியதும் கவலையில்லை

நீ என்னை மறந்ததும் கவலையில்லை

இன்னும் நீயென்னை தவறாகத்தான்

புரிந்து கொண்டிருக்கிறாயே என்ற

நினேவேதான் என் நெஞ்சில் நெருஞ்சி முள்.

முதல்நாள்

தொட்டுக்கொண்டோம்

இரண்டாம் நாள்..

ஒட்டிக்கொண்டோம்..

மூன்றாம் நாள்

கட்டிக்கொண்டோம்..

நான்காம் நாள்..

அவள் கொடுத்த

எச் ஐ விக்கு நான்..

கூலி கொடுத்தேன்..

வேலை விடுமுறையில்..

வாழ்க்கை விடுமுறையும்

வந்து சேர்ந்ததே..

  • தொடங்கியவர்

தூறல் நாள் -15

மின்னிக்கொண்டிருக்கும்

மூக்குத்திப்பூவில்தான்

உன் அழகு ஒளிந்துகொண்டிருக்கிறது..

ஏனென்று கேட்கிறாயா..

ஏதாவது ஒன்று தகுதி குறைவான

ஒன்றோடு ஒப்பிடப்படும்போதுதானே..

மெய்யான தரம் தெரிகிறது..

உன் கண்கள் அந்த வைரக்க்லை

விட அழகாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன..

இதே சாலையோரத்தில்

அம்மா..அப்பா விரல்பிடித்து

நடை பழகினானாம்

இதே சாலையோரத்தில்

பள்ளிப்பையோடு இவன்

துள்ளி ஓடி வருவானாம்..

இதே சாலையோரத்தில்

அவனைக்காண இவன்

காத்துக்கிடப்பானாம்..

இதே சாலையோரத்தில்

அவளோடு சேர்ந்து

நெருங்கி நடந்தானாம்..

இதே சாலையோரத்தில்

அவர்கள் திருமண

ஊர்வலம் நடந்ததாம்..

இதே சாலையோரத்தில்

கர்ப்பிணியான அவன் மனைவி..

குண்டில் சிதறுண்டு மடிந்தாளாம்..

இதோ இப்போது

இதே சாலையோரத்தில்

இவன் உருக்குழைந்து..

உடைகிழிந்து..

பைத்தியமாய்..

அழுதுகொண்டிருக்கிறானாம்..

இதே சாலையோரத்தில் இன்னும்..?

நெஞ்சு பொறுக்குதில்லையே..

எல்லோரையும்.. அழகாய்க் காட்டும்.

இந்தக் கண்ணாடி என்னை மட்டும்.

இவ்வளவு.......

அம்மா குளியலறையில்க்

கத்திக்கொண்டிருந்தார்.

"இந்தக் கண்ணாடி எப்ப உடைந்தது?"

நல்லவேளை இன்னும் யாரும்..

எப்படி உடைந்தது என்று

கேட்கவில்லை..

கண்ணுக்குள் தூசு விழுந்தது..

வலித்தது

கலங்கினேன்..

குணமாகிவிட்டது.

கண்ணுக்குள் நீ விழுந்தாய்..

இனித்தது..

சிரித்தேன்...

குணமாகவில்லை!!..

  • தொடங்கியவர்

தூறல் நாள் -16

நான் தூங்கிய பிறகு விழித்து...

நான் விழிக்கமுன்.. தூங்குவாள்..

என் மனைவியல்ல..அவள்

என் கனாப்பெண் அவள்..

என் பாடலை நான்..

கேட்கமுடியாது...

அப்பாடலை பிறர்

சகிக்கமுடியாது..

அந்த ஞானசூனியம்

என் குறட்டைதானாம்..

நினைவுகளாய்.. என்னை

நிரப்பிவிட்டு நீ

எட்டியிருக்கிறாய்.-என்னை

மறந்து இருக்கிறாய்..

என்னுடன் பேச விரும்பாமல்..

இருக்கிறாய்..-எதுவம்

புரியவில்லை பெண்ணே..

என் தவிப்பை எதற்காக

தாராளமாக்குகிறாய் என்பது

அவள் விழிகள்

நீர் சிந்தினால்

என்னுள்ளம் உடைந்துவிடுகிறது..

அவள் நீலக்கடலில் குளித்து

நிலவில் ஒளி வாங்கி

பூக்களின் வாசம் கொண்டு

பூவிதழ் நெளிந்து.

புன்னகை தந்து

காதல் வளர்த்தவள்..

அவள் மனமுடைந்தால் என்

இதயம் நொருங்கிப்போகாதா என்ன?..

சாதனை செய்வதற்காக..

பேனாவைத் தூக்கினேன்..

சோதனை செய்கிறேன்.. புரிகிறது..

என் எழுத்துகளைப் படிக்கும்..

அன்பர்கள் பொறுமையை..

இதுவும் சாதனை என்று எண்ணினாலும்..

மன்னிக்க வேண்டுகிறேன்..

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

விகடகவி மாம்ஸ் சிறு தூறள்கள் தற்போதுமழையாக அல்லவா பொழிகிறது :D மிகவும் நன்றாக இருக்கிறது மழையில் நனைய!! :D

அப்ப நான் வரட்டா!!

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

எல்லா தூறல்களும் ஒரு வித இதமான தாலாட்டு.. அதிலும் இது சூப்பர் விகடகவி. தொடரட்டும் உங்கள் தூறல்.

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூறல்கள்

தினம் தினம்

பெருந்துளியாய்

நெஞ்சினை நிறைக்கின்றது

வரிவரியாய்

வடிக்கும் கவிதைஅழகு

தூரலில் நனைய

தொடர்ந்திடட்டும்

தினசரி தூரல் தினமும் என் மனதை கவர்ந்துள்ளது...

தொடரட்டும் .....

  • தொடங்கியவர்

தூறல் நாள் -17

என் கனவுத்தோட்டத்து தேவதேயே..

நான் காலார நடக்கையில்..

உன்னை உள்ளுர நினைக்கிறேன்..

தொட்ட இடம் இன்பம் சுரக்க -விரல்

பட்ட இடம்மின்சாரம் தெறிக்க..

கட்டழகைக் கட்டியணைக்க -காளை

முட்ட வரக் கன்னி சிரிக்க..

இதே தோட்டம்தான்..அடிப்பெண்ணே

இதே மரநிழல்தான்..அன்று

என்னிளமைக்காட்டாறில் - இன்ப

மீன்பிடித்த கைகாரியே..பூவே

பொய்க்கோபம் உனக்கேனடி..வா

ஊர் உறங்குகிறது..

ஓசையே இல்லை..

தூக்கம் வராமல்

புரளும் எனக்கே..

என்னிதயத்துடிப்பு கேட்க..

உற்றுக்கேள்..

உனக்கு கேட்காது

சுவற்றுப் பல்லியே..

எனக்கு கேட்கிறது..

நாளைக்குப் பரீட்சை முடிவு..

நான் சித்தியா இல்லை

மீண்டும் அடுத்த சித்திரையா?

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூரல்

தினம் தினம்

தூரல் விழாமல்

இருப்பதும் ஏனோ விகடகவி.

  • தொடங்கியவர்

மனதில் இப்போது..

கடும் கோடை..

வரண்டு போனது

கற்பனையல்ல..என்

இதயக் கார்மேகங்கள்..

தூரல்..இனி மெல்ல மெல்ல

வந்து விழும் க..பி

  • தொடங்கியவர்

தூறல் நாள் -18

குழந்தை குற்றமென்று

தெரியாமல்.. முகத்தில் கீறும்

வலித்தாலும் இனிக்கும்..

நீயும் குழந்தை போல்தானே..

அன்பே இதயத்தில் கீறினாய்

வலியில் உயிர் போகிறது..

வானவில்லின்

வளைவு அழகா..

வளைந்து கிடக்கும்..

வண்ணமழகா..

வண்ணவொளி

வந்து விழுவதழகா..

வளைவதழகா..என்றெல்லாம் என்னை

வாயோயாது கேட்கும் என்

வருங்காலத் துணையே..

வாடாதவுந்தன்

வதனமேயழகு..

வருத்தம் தந்திடாத

வளமான இதயமழகு..

வற்றிடாத சிரிப்பழகு..

வசீகர விழியழகு

வாய் மொழிவேன் நீயேயழகு!!!

என் பாதங்கள்

நடந்து தேய்ந்தவை..

என் விழிகள்..

எதிர்பார்த்திருந்து ஓய்ந்தவை

என் முதுகு

உன் காலடி தேடியே கூன்கண்டது

என் கைகள் கைத்தடி

தாங்கித் தான் வலுக்கொண்டது..

இந்த வெண்நரை கூட

உன்னிடம் சமாதானம்தான் பேச வந்தது..

என் கன்னக்குழி

உன்னிடம் அழகாக

சிரித்துக்காட்டசொன்னது..

முப்பதில் சொன்னாய்

காத்திருக்கச் சொல்லி..

அறுபதாகியும்

காதலியே பார்த்திருக்கிறேன்..

ஆள் வரவில்லை...

எனக்குத் தெரியும்

நீ வருவாய்

என் சமாதியில் பூப்போட..

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

நாங்கள் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டோம் கவிஞரே!!! :lol::wub:

  • தொடங்கியவர்

வரும்வழியில் அமிழ்ந்து

போனாலும்..நுரைகள்..

அலையாய்.. என்றோ

ஓர் நாள் கரை சேரும்..

இந்தக் காதலும்..

ஓர் நதள் கரை சேரும்..

அம்மாகிட்ட சொல்லமாட்டீங்க..

ம்கூம் மாட்டீங்க அம்மாவைத்தான் உங்களுக்கு தெரியாதே.. :lol:

  • தொடங்கியவர்

தூறல் நாள் -19

கொலைவாள் விழி கொண்டு

அலைபாயும் மனதை அறுத்தாள்..

வலை வீசிப்பிடித்தாள்..என்

நிலையின்று அவள் நிழல் போல

உலகில் வென்ற காதல்நிலையிதுதானோ..

அருகில் இருந்தபோது

உணராத ஆத்ம நெருக்கத்தை

பிரிந்து விலகி தூரமாகிய அந்த

ஆத்ம தேடலில் உணர்ந்தேன்..

அவள் அவனை நினைத்துக்கொண்டிருந்தாள்

அவன் அவளை விதைத்துக்கொண்டிருந்தான்

ஆனால் இருவர் விற்பனைக்கும் பெற்றோர்கள்

ஊர்ஊராய் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தூங்கமுன் புதுமலராய் இருந்தவள்..

தூக்கம் கலைந்த போது..இதழ்

கலைந்த ரோஜாவானாள்.. கேளாமல்

ஜன்னலின் வழி வந்த விடியலின்

வெளிச்சம் காட்டியது.. இந்த

இதழ் கலைந்த ரோஜா அழகோ அழகென்று..

தொலைக்காட்சி விளம்பரமொன்று

தமிழைக்கொன்றுகொண்டிருந்தது..

.

விளம்பரத்தில் வேற்று தேச அழகி-இளம்

தமிழனைக் கொன்றுகொண்டிருந்தாள்.

தினசரி தூறல்கள் மாம்ஸ் தினசரி என் நெஞ்சை தளுவி சென்றதால் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது :( அவ்வளதிற்கு நன்றாக இருந்தது மாம்ஸ் :( ....எல்லாம் சரி ஜம்முபேபி காதலிக்கும் போது நீங்க தான் கவிதை எழுதி தரவேண்டும் நான் வந்து என்ட பெயரை போட்டு கொடுப்பேன் என்ன மாமோய்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தூறல் நாள் -20

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

முத்தம்

பத்துவயதில் ச்சீ என்றாய்..

பதினாறில் வெட்கப்பட்டாய்..

பதினெட்டில் ஓடிஒளிந்தாய்..

பத்தினியாகி பரவசப்பட்டாய்..

உற்றவளாய் ஒட்டிக்கொண்டாய்..

பெற்றவளாய் விலகிக்கொண்டாய்..

முத்தம் மொத்தத்தில் என்தேவியே..

தந்ததெல்லாம் தங்கமாய்..

பெற்றதெல்லாம்பொன்னாய்..

தெருவுக்குத்தெரியாத தேவதை வரமாய்..

நினைவுகளில் இனிய சுகமாய்..

நன்றிகள் கோடி என் நாயகியே..

தூதுகள் செல்ல

நூறு கிளிகள்..

ஆயிரம் வழிகள்..

வாசலைக் காதலி

நீயே அடைத்துவைத்திருந்தால்

அடி காதல் எங்ஙனம் வாழும்?..

சிலநேரங்களில் உனக்கு காதல்

பொங்கினால்.. பார்வைச் சாரலிலும்

முத்தத்தேன் மழையிலும் நனைத்துவிடுகிறாய்..

ஆனால் பானையில் பொங்கும்போது

அகப்பையால் துலாவி அடக்கிவிடுவது போல்

எனக்கு காதல் பொங்கும்போது மட்டும்...

சப்பென்று அடக்கிவிடுகிறாயே.. ஏனன்பே..

எல்லாப் பெண்களுமா இப்படி?..

மழையில்லாமலே குடைபிடித்தேன்..

குடைக்குள் இருந்து கொண்டே

நனைந்தும்போனேன்..எல்லாம்..

உன்னை நினைத்துக்கோண்டே..

நடந்ததால்தான்!!!..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் -21

வெள்ளை வல்லூறுகள்

பெற்ற "சொனிக்" கழுகுகள்..

தீமுட்டை போட்டு -ஈழத்தின்

அழகுப்பூங்காக்களைக்

கருக்கிப்போகிறது..

பூங்காவில் வாசத்தோடிருந்த...

வனப்போடிருந்த...

வாலிபத்தோடிருந்த..

கனவோடிருந்த..

கண்குளிரவிருந்த..

எவ்வளவு பூக்கள்.

மண்ணோடு மண்ணாக

சருகாகி..எரியுண்டு போயின..

பராசக்தியே..வல்லூறுகளைக்

கொல்ல வல்லமை கேளேன்

இனி உன்னிடம்..

கேட்டுக் கேட்டுத்தான்

நீ தந்தாயா என்ன?..

என்னால் முடிந்ததைச் செய்கிறேன்..

மூத்தவர் முடிவெடுக்கட்டும்..

திசைகள் அதிர ஒரு

தமிழ்பேரிகை..முழங்கட்டும்.

எனக்குள் அழுகிறேன்

ஈழம் எரிகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சர்வ தேசம் சிரிக்கின்றது..

எனக்குள் அழுகிறேன்

உறவுகள் மறைகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சந்தோசம் மறக்கினறது..

எனக்குள் அழுகிறேன்

துயரங்கள் உறைகின்றது..

அழுகை வற்றிப்போன

கண்கள் சிவக்க..

சிரித்தவனை வெறித்தேன்..

மௌனமாக இருக்கிறான்..

எரித்தவனை முறைத்தேன்..

போருக்கு வருகிறான்..

நொந்து சாவதிலும் - மானத்துடன்..

வென்றிடச் சாவதே மேலென

போருக்குச்சித்தமானேன்..

போர்..போர்..போர்..போர்..

எழுத்துகளாளேனும் இதம் தரத்தான்

நான் ஏதோ ஏதோ எழுதுகிறேன்..

என் தேசத்து இரத்த வாடையும் அழுகுரலையும்..

நான் மறக்கவில்லை..உள் விழுங்கிக்கொண்டிருக்கிறேன்..

தினமும் குமைந்துகொண்டிருக்கிறேன்..

வீரமாய்ச் சொல்லலாம் நான் பாரதியில்லையே..

அழுகையைச் சொல்லலாம் இணியழக் கண்ணீர் இல்லயே..

பிறந்த மண்ணையும்.. பெற்ற தாயையும்

எந்நிலை மாறினம் எக்கணமும் மறவேன்..

என்னையும் என் தட்டச்சையும் கோபித்துக்கொள்ளாதீர்கள்!..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

நீ பேசினால்

ரணங்கள் குணமாகும்..

நீயெதிர் தோன்றினால்

மரணங்கள் சுகமாகும்..

நீ என்னோடு இணைந்தால்..

ஏய் அழகியே..

நான்தான் கடவுள்!!!

விழிகளின் அருகே

நீ இருந்தென்ன..

விரல்தொடும்

உரிமை தந்தென்ன

நீர் ஊறா நிலமாய்..

நெஞ்செல்லாம் கல்லாய்..

வாசம் தராப் பூவாய்..

வண்ணமில்லா காத்தாடியாய்..

வளையாத வில்லாய்..

யோசித்துப் பார்

நீ ஏன்தான் எனக்கு?

உன்னை யாரும் குற்றம் சொல்வதில்

எனக்கு சம்மதமே இல்லை

என் தேவதை நீ..

நானேதான் குற்றவாளி..

எனக்கு உன் சந்தோசம்தான்

கடைசி ஆசை..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

உங்க கவிதை அழகு

பெண்ணை தூசாக உவமித்து அழகாக வந்திருக்கிறது

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு..(பேபியோட பேச்சே ஆயிரம் கவிதை..பிறகேன்.. பேபிக்கு கவிதை..)

நன்றி கபி..(நான் எல்லா பெண்ணையும் தூசா சொல்லலை..அவளை மட்டும்தான்)

  • தொடங்கியவர்

தூறல் நாள் -23

அம்மா...

அரவணைப்பிற்கும்..

அன்பிற்கும் மட்டுமல்ல

என் வாழ்க்கை முழுவதற்குமே..

ஆதாரம் நீதான் தாயே..

தடுமாறும் என்னை

தடம் மாறச் செய்யுமோ..

உன் பிரிவு என்று

கவலைப்படுகிறாயாமே..

கண்ணைப் பிடுங்கியபின்

என் தூக்கத்தைப் பற்றி

கவலையேனடி? ..

இருட்டுக்குள்

இருந்துகொண்டே

நிலவை ரசித்தேன்..

நிலவுக்கு ஆசைப்பட்டு

நிம்மதியைத்தொலைத்தேன்..

நிம்மதியைத் தேடி

நெடுந்தூரம் நடந்தேன்..

நெடுந்தூரம் தாண்டியபின்

நான் மறக்க நினைத்தவளை

நினைக்க மறக்கவில்லலை

என்ற மெய்நிலையறிந்தேன்!

அன்பே..

உன்னுடைய

ஒவ்வொரு முத்தமும்

சேமிப்புக் கணக்கில் சேரும்..

அதிக பட்ச வட்டியாய்..

கூட்டு வட்டி தருகிறேன்..

என் கணக்கை

நடைமுறைக்கணக்காய் வைத்துவிடு

அடிக்கடி வைப்பு செய்வதும்..

எடுத்துக்கொள்வதும்..

மொத்த வியாபாரி எனக்கு அவசியம்!

சில உண்மைகளை

அறிந்துகொள்ள-மனிதனே..

ஊமையாயிரு..

உன் ஊமைவேடம்

கலைந்துவிட்டால்

உண்மையாயிரு..

முயற்சிக்கு..தூக்கம்

முட்டுக்கட்டை..

களைப்புக்குத் தூக்கம்

பஞ்சுமூட்டை

காதலுக்குத் தூக்கம்

வருவதேயில்லை

கணவனான மனிதனுக்கு

தூக்கமேயில்லை

நிஜத்தில் நடிப்பவர்களை

வெறுக்கிறேன்..

வாழ்க்கை என்ன

நாடகமா?..

நிஜம் மறைப்வர்களைக் கண்டு

பயப்படுகிறேன்..

எதை நம்புது?..

மெய்யான என் முகம்

பிடிக்கவில்லை பலருக்கு

பிடித்த ஒரு சிலருக்காகவாவது

உண்மையிருக்கிறேனே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.