Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய

மாயக்கனவுகள் வெளியேற

நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.

மினுங்கிய மின்சாரமற்று

தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று

செப்பனிடப்பட்ட தெருவற்று

மாவற்று - சீனியற்று - மருந்தற்று

ஏனென்று கேட்க எவருமற்று

கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.

கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்

வீட்டு மூலையில் வீசிவிட்டு

மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்

விறாந்தையின் தரைவிரிப்புகளையும்

மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்

அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு

பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.

விடுவிக்கப்பட்ட ஊர்களை

விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து

ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல

மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.

இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து

மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.

இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி

தாய்நிலம் வாய்திறந்து பாடும்

விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.

மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி

எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி

கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இணைப்புக்கு நன்றி வினோ!

ஏக்கமும், எதிர்பார்ப்பும்

இழப்புகளின் வலியுமென

கவிஞரின் கவித்துவம்

வரிகளாய் வழிகிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி

முதுகிற் பாரச் சிலுவை சுமந்த

பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.

இயேசுவே

எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி

ஆலமுண்ட நீல கண்டனே

எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு

அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு

அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?

புத்தபெருமானே

வெள்ளம் வருகுதென்றாயினும்

சொல்ல வேண்டாமா..?

எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்

நாம் தான் தனித்துப்போனோம்

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிக்கப்பட்ட ஊர்களை

விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து

ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல

மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.

இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து

மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.

இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி

தாய்நிலம் வாய்திறந்து பாடும்

விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.

மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி

எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி

கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

விமர்சனமமும் சுயவிமர்சனமும் அரசியல் இராணுவ வெற்றியின் அடிப்படைகள் மட்டுமல்ல கலைகளின் சரியான சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையுமாகும். கடந்த கால மாக்கிசிய அரசியலிலில் இருந்து தோழன் புதுவையும் நாங்களும் அதனைத்தான் கற்ற்றுக்கொண்டோம். புதுவையின் மேற்படிவரிகள் சமகாலம் பற்றிய அரசியல் இராணுவ ஆய்வுகளிலும் மேற்கோளாகக் காட்டப் படும் என்பதில் சந்தேகமில்லை. புதுவைக்கும் துணவியாருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்

நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்

கதையற்ற கலைப்படைப்பு என்பதால்

பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்

நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.

இடை வேளையுடன் திரை விழுந்தது.

ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை

திருத்தியெழுதப்பட்டதை

அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை

குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.

கொட்டட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதயக் குழிக்குள் இறங்கும் வரிகள். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேரடியில் காலையிலே...

பாடலாசிரியர் புதுவை இரத்தினதுரை

தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே

நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்

காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே

கண்டு மனமிரங்கவில்லை முருகா

கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை

கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு

தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்

வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்

துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே

வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ

ஏறி வந்த தேர் இருக்கு, இழுத்து வந்த வடம் இருக்கு

எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்

உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ

வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்

வல்ல புலி வெல்லுமடா முருகா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது

நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென

எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி

புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.

சிங்கக் கொடியேற்றும் போது

நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?

கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்

உள்ளே வந்துள்ளான்

கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.

வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை

இங்கு காணவில்லை.

சந்தக் கவிஞர்களல்லவா

உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.

வாசலில் நிற்க வைக்கவும்.

சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.

குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய

காட்டாற்று வேகக் கதைக்காரன்

வீட்டுக்கு வந்தள்ளார்.

பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்

பழைய பேப்பர் வழங்குக

அவர் பாடநூல் அச்சிடட்டும்..

பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே

உமக்கு என்ன நடந்தது

உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை

உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது போராடும் பூமி...

இது போராடும் பூமி...

புலிகளின் காலம்...

பிரபாகரன் வழிகாட்டி.!

இன்றும் எங்கள் வானத்தில்

வெள்ளிநிலவு பாலை அள்ளித்தான் சொரிகிறது

விண்மீன்கள் கண்தூங்கவில்லை

இலுப்பைமரம் பூத்துக் கொட்டுகிறது

ஆழக்கிணறேதும் ஊற்றடைத்துப் போகவில்லை.

குண்டும் குழியுமான பாதையெனிலும்

இன்றும் பயணம் நடக்கிறது

இது தமிழீழம்

எல்லாம் நடக்கும்

விஜேதுங்காவுக்கு ஒரு வினா

உன்னால் முடியுமா தம்பி?

எங்களுக்கு வித்தே வேண்டாம்

நாங்கள் வேரிலிருந்தே முளைவிடும் சாதி

எங்களைக் கூட்டிக்குவித்து தீயிடு

மறுநாள் சாம்பலிலிருந்து பிறப்போம்.

வெட்டிச் சரித்துப் புதைத்திடு

மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும்

இது தமிழ்ச்சாதி

இங்கே

குண்டு சுமந்து வானூர்தி வட்டமிடும்

குழிகள் தேடி எவரும் ஓடுவதில்லை

போட்டுவிட்டு "புக்காரா" போகும்

புழுதியைத் தட்டிவிட்டு

அந்த இடத்திலேயே மீண்டும் பாய்விரிப்போம்

சிதறிப்போன சுவரின் கற்களை எடுத்தே

அடுப்பு மூட்டி சமையல் தொடங்குவோம்.

விஜேதுங்கா!

என்னடா பொடியா செய்யப் போகிறாய்?

இது தமிழ்சாதி

தீக்குளித்தும் தோல்கருகாச் சாதி

கண்களினால் சுவாசித்து

மூக்கினால் பார்க்கும் வித்தியாசமானவர்கள்

மலைகளில்லையென்று நாங்கள் தளரவில்லை

ஆறுகளில்லையென்று அந்தரித்துப் போகவில்லை

ஆழக் கிணறுவெட்டி நீரள்ளிக்குடிகின்றோம்

ஆக மூன்றுமாதங்களே இங்கு மழைபொழியும்

என்றாலும் பச்சை நிறத்தில் தான்

எங்கள் மண் பாவாடை கட்டியுள்ளது

இது தமிழ்சாதி

தெருப்புழுதியில் கயிறு திரித்து

தேரிழுக்கும் சாதி

அப்பு விஜேதூங்கா!

என்னசெய்யும் உத்தேசம்

படைகளை நடத்தி தடகளப் போட்டியா?

நல்லது நாளை சந்திப்போம்.

வெற்றிக் கிண்ணத்துடன் பேசுவோம்.

எதிரியை வாவென்று கடிதம் எழுதியாச்சு

தமிழனே! நீ என்ன செய்கின்றாய்.

பூச்செடிகளுக்கு முள்ளும்

பறவைகளுக்குச் சொண்டும்

மிருகங்களுக்குக் கொம்பும் ஏன் கொடுக்கப்பட்டது?

போராட வழங்கிய போர்க்கருவிகள் அவை.

"அழிக்கவருபவனை அழித்துவிடு"

கீதையின் சாரமே இதுதான்.

நிமிர்ந்து நிற்பவையே நிலைக்கும்

விழுந்து கிடப்பன யாவும் மிதிக்கப்படும்

தலை நிமிர்ந்த பனைகளைத் தறிக்கக்கூடாது

சட்டமே வந்துவிட்டது

ஆனால்...

முல்லைக்கொடியை மிதிக்கக் கூடாது என்று

ஏன் எவரும் குரலெழுப்பவில்லை?

காலில் விழுந்து கிடப்பவைகளை

எவரும் கணக்கெடுத்துக் கொள்வதில்லை

அதனால் தான்.

மனிதர்களுக்கும் இது பொருந்தும்.

தமிழனே!

மணிமுடிதரித்த உன் தலையில்

வெய்யிலுக்குத் தொப்பி போடவும் வெட்கப்படுகின்றாய்

ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் உலாவந்தவனே!

அச்சுமுறிந்த சைக்கிள்தானும் உன்னிடம் இல்லையா?

ஊருக்கெல்லாம் துணி நெய்து கொடுத்தவனே!

கோமணத்துண்டுக்கும் வழியற்றுப் போனாயா?

வாழும் வழிகள் ஆயிரம் சொன்னவனே!

ஆளும் உரிமையை மட்டும் யாரிடம் கொடுத்தாய்?

கொம்பும், முரசும், பேரிகையும் எங்கே?

கவசமும், வேலும், கைவாளும் எங்கே?

இவற்றையெல்லாம் எறிந்துவிட்டு

அன்னதானமடத்தில் என்னடா செய்கிறாய்?

இந்தமண்ணில் உனக்கொரு வரலாறு வேண்டும்.

இருந்தாய், வாழ்ந்தாய் என்பதற்கு

அடையாளம் வேண்டும்.

உன் தலைமுறைக்கு ஒரு சரித்திரம் இருக்கட்டும்.

உயிர் என்ன உயிர்.

அதைக்காட்டு பார்க்கலாம்.

உருவமற்ற ஒன்றுக்காக ஏன் அச்சப்படுகின்றாய்

எத்தனை காலம் வாழ்ந்தாய் என்பதில்

பெருமை கிடையாது

எப்படி வாழ்ந்தாய் என்பதே மகிமைக்குரியது

. குறவணன் புழுவும், கும்புடுபூச்சியும் கூட

பூமியில்தான் வாழ்கின்றன.

யார்தான் கணக்கில் எடுத்தார்கள்?

போருக்கு வாவென்று

எதிரிக்குக் கடிதம் போட்டாச்சு

நீ புறப்படு.

பீளைசாறிய கண்களைத் திறந்துபார்

பாயைச் சுருட்டி அசைவிலேபோடு

தாயிடம் விடைபெறு

உன் தங்கை எங்கே?

உனக்குமுன் அவள் களத்துக்குப் போய்விட்டாள்

வெளியே பார் வெய்யில் அடிக்கிறது

இது போராடும் பூமி...

புலிகளின் காலம்...

பிரபாகரன் வழிகாட்டி.

::::புதுவை இரத்தினதுரை::::

(சித்திரை 1994)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.