Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் இரட்டை வேடம்

[02 - January - 2008] [Font Size - A - A - A]

ஷ்ரீலங்கா பிரச்சினையைப் பொறுத்தவரை ஷ்ரீலங்காவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளாக் மற்றும் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் அரசாங்கத்துக்கு சார்பாக ஒருபுறமும் எதிராக ஒருபுறமுமாக இரட்டை நிலைப்பாட்டையே முன்பிருந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு செயற்படும் அமெரிக்கர்களை நம்ப வேண்டுமா என்பதே கேள்விக்குறியாகும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பைப் படுகொலை செய்வதற்கு அல்-ஹைடா பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் முயற்சி பற்றிய விசாரணைகளுக்கு அமெரிக்கா உதவி அளித்த முறையைக் குறிப்பிடலாம்.

இந்தக் கொலைத்திட்டம் பற்றிய விசாரணையை மேற்கொண்டவர் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தராகிய கயான் என்பவர் ஆகும். இவர் சம்பந்தப்பட்ட வெடிகுண்டுப் பாவனை பற்றி விசேட அமெரிக்க அதிகாரிகளை இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்து குறித்த வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளவே மேற்படி அல்-ஹைடா குண்டுத்தாக்குதல் நடத்திய நிலையங்களுக்கு அவர்கள் சென்று பரிசோதனைகள் விசாரணைகளை மேற்கொண்டு நான்கு வாரங்களுக்குள் தமது பாதுகாப்பு அறிக்கையை கயானிக்குச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையைப் படித்த கயானி திடுக்கிட்டார். ஏனெனில், அந்த அறிக்கையில் வெடிகுண்டு இரசாயனப் பொருட்களின் பெயர் விபரங்கள் மட்டுமே தரப்பட்டிருந்தனவே அன்றி அது வெடிகுண்டுத் தாக்குதல் பற்றிய அறிக்கையாக இருக்கவில்லை. இவ்வாறு அல்-ஹைடாவுக்குச் சார்பாக அமெரிக்க அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தது போலவே இப்போது ஷ்ரீலங்காவிலும் அமெரிக்கா இந்த விதமாகத்தான் செயற்படுகிறது.

இவ்வாறு 2002 ஆம் ஆண்டு புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் இந்து சமுத்திரப் பிராந்திய கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஷ்ரீலங்காவுக்கு வந்து அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் ரஷ்யத் தயாரிப்பான மிக் தாக்குதல் விமானங்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அமெரிக்க உற்பத்திகளான விமானங்களையே வாங்கும்படி சிபாரிசு செய்தனர். ஆனாலும், ஷ்ரீலங்கா விமானப்படையினர் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் விசேடமானதும் சக்திவாய்ந்ததுமாக இருப்பவை AN-32 வகை விமானங்களும் MI-24 மற்றும் MI-35 மிக்வகை யுத்த ஹெலிகொப்டர்களும் ஆகும்.

ஆனால், அமெரிக்க அரசும் அதன் நட்பு நாடுகளான "நேட்டோ" வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளும் முன்னாள் ரஷ்ய சார்பு வார்சோ ஒப்பந்த நாடுகளுக்கு ரஷ்யத்தயாரிப்பான ஆயுதங்களை அழிக்கும்படியும் மேற்கு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்து பயன்படுத்தும்படியும் வற்புறுத்தி வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவின் குறிக்கோள் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதே. அமெரிக்காவின் சிபாரிசுப்படி நடந்து கொண்டிருந்தால் தற்போது புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஷ்ரீலங்கா படையினரால் மேற்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு இந்து சமுத்திர பிராந்திய அமெரிக்க இராணுவ அதிகாரிகளின் சிபாரிசு என்ற பொறியில் அரசு சிக்கவில்லை. இதேவேளை,அண்மையில் அமெரிக்கா ஷ்ரீலங்காவுக்கு யுத்த ஆயுங்கள் நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதைப்போலவே ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்தகாலகட்டத்திலும் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவந்த "பெல் 212" ஹெலிகொப்டர்களுக்கு அத்தியாவசிய உதிரிப்பாகங்களை வழங்கவும் அப்போது அமெரிக்க அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு தமது நிபந்தனைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தி வருவதைப்போன்றே ஷ்ரீலங்கா மீதும் அவ்வாறான அழுத்தங்களை ஏற்படுத்த முனைகிறது.

ஆனால், அமெரிக்க அரசின் ஷ்ரீலங்கா அரசு மீதான நிபந்தனையையோ கோரிக்கைகளையோ நிறைவேற்ற அமெரிக்கத் தூதுவருக்கு முடியாமல் உள்ளது. செச்னியப் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய இராணுவ ஜெனரல் மொல்பென்ஸ்கோவ் தலைமையில் இராணுவக் குழுவொன்று அண்மையில் ஷ்ரீலங்கா பாதுகாப்பு உயர்பீடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ரஷ்யாவிடம் இருக்கும் விமானத்திலிருந்து விமானத்தைத் தாக்கும் மிசைல் ஏவுகணைகளைக் (Air to Air Missiles) கொண்டுசென்று தாக்குதலை நடத்தக்கூடிய மிக் வகை ரஷ்ய விமானங்கள் மூலம் புலிகளின் சிறிய ரக விமானங்களை இலகுவில் தாக்கி அழிக்கமுடியும். இதற்கான ஆயுத மற்றும் விமான உதவிகளை வழங்க ரஷ்யா தற்போது முன்வந்திருப்பது அமெரிக்காவுக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

செச்னியப் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட ரஷ்ய விமானப்படையினால் "பியல் எயார்" குண்டுகள்( Fuel Air Bomb) விசேடமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 520 கிலோ வரை நிறைகொண்ட இந்தக் குண்டுகள் மூலம் பாரிய பதுங்குகுழிகளை முற்றாகத் தகர்க்க முடியும்.அத்துடன், ரஷ்யப் படையினர் குளோநஸ்( Glonass) எனப்படும். செய்மதிமூலமாக படையினர் நிலையத்தை அறிந்துகொள்ளும் உயர் தொழில்நுட்பக் கருவியைப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் செலுத்தப்படும் வாயுவிலிருந்து பதுங்கு குழிகளில் இருக்கும் எதிரிகள் தப்பமுடியாது.

இவ்வாறான ரஷ்ய யுத்த ஆயுதங்கள் "மிக்" விமானங்கள் யுத்த உபகரணங்கள் நவீன தொழில்நுட்பங்களை ஷ்ரீலங்கா அரசு ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யக்கூடாது எனவும் அமெரிக்க உற்பத்திகளான யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வாங்கவேண்டும் எனவும் முன்னரே இந்து சமுத்திர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு அறிக்கை விடுத்திருந்தது.

இந்த அமெரிக்க சிபாரிசு அறிக்கைக்கு ஏற்ப அவ்வாறு மேற்கு நாடுகளிடமிருந்து யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதென அப்போதுள்ள பாதுகாப்பு அமைச்சின் உயர்பீடம் அமெரிக்காவுக்கு தெரிவித்துவிட்டது. இதற்குக் காரணம் அப்போது பாதுகாப்பு அமைச்சு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகத்தின் கீழ் இருந்துவந்ததே ஆகும். இவ்வாறு அமெரிக்கா அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஷ்ரீலங்கா மீது ஆயுதங்களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துவது முன்னைய காலகட்டத்திலிருந்தே நிகழ்ந்துவருகிறது.

திவயின விமர்சனம்: 30.12.2007-

thinakural.com

ஓம் ஓம் சொறி வெள்ளையள் இரட்டை வேடம் வயித்துக் குத்தை நம்பினாலும் நம்ப முடியாத வடக்கத்தையான் இரட்டை வேடம் மோட்டுச் சிங்களவன் இரட்டை வேடம் ஆனா தமிழர் எண்டா எப்பவும் கூழ்முட்டை வேடம் தான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32871&hl=

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் சொறி வெள்ளையள் இரட்டை வேடம் வயித்துக் குத்தை நம்பினாலும் நம்ப முடியாத வடக்கத்தையான் இரட்டை வேடம் மோட்டுச் சிங்களவன் இரட்டை வேடம் ஆனா தமிழர் எண்டா எப்பவும் கூழ்முட்டை வேடம் தான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32871&hl=

நீங்கள் ஏனண்ணோய் வானத்துக்கும் பூமிக்கும் பாயறியள். பழக்க தோசத்தில் உதுவும் ரிவிஜி (refugee) தமிழன் எழுதினதென்று நினைச்சியள் போல. உது சிங்கள திவயினல வந்த இரட்டை வேடம் அண்ணாச்சி..! :icon_idea::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நம்புவது போல இல்லை ஜனாதிபதியுடன் சிரிச்சு பேசும் ஒருவரை இப்படி அம்பலப்படுத்தமாட்டார்கள் இதற்குள் தந்திரம் இருப்பதாகவே எண்ணுகின்றேன்

-------------------

kurukaalapoovan

அட உங்கள் தீர்கதரிசனம் எங்கை நாங்கள் எங்கை.

"இது நம்புவது போல இல்லை ஜனாதிபதியுடன் சிரிச்சு பேசும் ஒருவரை இப்படி அம்பலப்படுத்தமாட்டார்கள் இதற்குள் தந்திரம் இருப்பதாகவே எண்ணுகின்றேன்" ===============================================================================

அட உங்கள் தீர்கதரிசனம் எங்கை நாங்கள் எங்கை.

அது ஈழவன் எழுதிய கருத்து

ரிவியூஜி மந்தைகள் இப்ப சுயமாக தேடல் செய்து எழுதுவது பழந்த தமிழர்களான இந்துக்கள் எப்படி அடுக்குமாடி விமானங்கட்ட முன்னோடியாக சிந்தனையில் இருந்தவை. சிந்தனையில் எப்படி முன்னோடியாக ஏவுகணை விட்டவை என்று ஏப்பம் விடும் அறிவியல் கட்டுரைகளில் தானே.

மிச்சத்துக்கு சிங்களவன் எழுதுறதை மொழிபெயர்த்து போட்டு

தலைவருக்கு காயமாம் என்று அங்கலாய்ப்பினம்.

சள்ஸ் அன்ரனி தான் அதுக்கு தலைவரம் இதுக்கு தலைவராம் அடுத்த தலைவராம் என்றால் அட சும்மாவா புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற இரை மீட்பினம்.

மதிவதனி அக்கா தான் அடுத்த தலைவி என்றா அதுவும் சரி தானே என்று இரை மீட்பினம்.

பிறகு பிரபாகரன் குடும்ப அரசியல் நடுத்துகிறார் என்றால் அது பிரச்சாரம் எண்ணுவினம்.

திவயினவின் எழுத்துக்கள் வழமையாக சிரிப்போம் சிறப்போமிற்கு போவது ஊர்புதினம் பகுதியில் இருக்கு என்றால் அதில் சொல்லப்பட்டிருப்பவையில் உள்ள உடன்பாடு தானே காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திவயினவின் எழுத்துக்கள் வழமையாக சிரிப்போம் சிறப்போமிற்கு போவது ஊர்புதினம் பகுதியில் இருக்கு என்றால் அதில் சொல்லப்பட்டிருப்பவையில் உள்ள உடன்பாடு தானே காரணம்.

ஏன் அப்படி நோக்க வேண்டும்?. எதிரி என்ன சொல்கிறான் என்பதை நாங்கள் உற்று நோக்க வேண்டும் என்பதற்காகவே போடப்பட்டது.அத்துடன் இச்செய்தி இலங்கையில் களத்தில் நிற்கும் மக்கள் வாசிக்கும் தினகுரலில் பதியப்பட்டது.ஆகவே அனேகமான அங்கு தமிழ் மக்கள் இச்செய்தியை வாசிப்பார்கள்.

வாசிப்பவர்கள் சுத்த அறிவிலிகள் என்று எடை போடுவது தான் பிழை.தனிய தமிழ் ஊடக செய்திகளை போட்டு (எல்லாம் ஈ அடிச்சான் கொப்பி என்பது வேறு) ஒமோம் என்று கோயில் மாடுகள் போல் தலையாட்டாமல் பலவகைப்பட்ட செய்தியூடங்களின் செய்திகளை வாசிப்பதன் மூலம் தான் நாம் எங்கு நிற்கிறோம், எப்படி நாங்கள் எப்படி இவர்களின் பொய்பிரச்சாரங்களை முறியடிக்கலாம் என்ற அறிவாவது வரும்.

அதைவிட்டு விட்டு இச்செய்தியை ஏன் நகைச்சுவை பகுதிக்கு மாற்ற வேண்டும் என அடம் பிடிக்கிறீர்கள்?.

இதென்ன கூத்து? குண்டுவெடிச்சா அமரிக்கா கண்டிக்குதாம்... தமிழ் எம்பியும் அந்த நேரத்தில கொல்லப்பட்டதால அமரிக்காவுக்கு வருத்தம் வேற... உதுல உவங்கள் அமரிக்கா இரட்டை வேடமாம்.... ஆனால் அமரிக்கா இலங்கைக்கு ஆதரவாம்.

இன்னும் நிறையச் சொல்லக்கிடக்குது.... சீனா, பாக்கிகள், இந்தியா....ஜ்யோ ஏராளம்...ஏராளம்...

இன்னும் எளுதத்தான் விருப்பம்.... ஆனால் இந்த தமி(ல்) ஆங்கில தட்டெளுத்து தடுக்குது....

தமிழ்ஊடகங்களில் வரும் செய்திகளை வாசித்தால் நம்பவும் இலகுவாக இருக்கும் மனதுக்கும் எப்பவும் ஆறுதாலாக இருக்கும். எதிரியின் மேலுள்ளது போன்ற சில செய்திகள் தான் திருப்தியானதாக இருக்கு. மிச்சங்களை சிரிப்போம் சிறப்போமிற்குள்ள போட்டாத்தான் ஆறுதல் அடைய வேணும்.

நெடுந்தீவுச் சமர் வந்து முக்கி பணி ஒன்றை முடித்து விட்டு வந்த கடற்புலிகளின் படையணிகள் மோட்டுச் சிங்களவன் சொறிஞ்சு அடி வேண்டியிருந்த கதை தெரியும் தானே.

அந்த முக்கிய பணி என்ன? இந்தியாவில் இருந்து புலிகள் ஆயுதம் கடத்தியிருக்க மாட்டார்கள். அப்போ? யாரே முக்கியமான ஒருவர் இந்தியாவில் இருந்து (சிகிச்சை முடிந்து திரும்பி) வந்திருக்கிறார். அது தான் அன்று கடற்புலிகள் முடித்த முக்கியமான பணியா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஊடகங்களில் வரும் செய்திகளை வாசித்தால் நம்பவும் இலகுவாக இருக்கும் மனதுக்கும் எப்பவும் ஆறுதாலாக இருக்கும். எதிரியின் மேலுள்ளது போன்ற சில செய்திகள் தான் திருப்தியானதாக இருக்கு. மிச்சங்களை சிரிப்போம் சிறப்போமிற்குள்ள போட்டாத்தான் ஆறுதல் அடைய வேணும்.

நெடுந்தீவுச் சமர் வந்து முக்கி பணி ஒன்றை முடித்து விட்டு வந்த கடற்புலிகளின் படையணிகள் மோட்டுச் சிங்களவன் சொறிஞ்சு அடி வேண்டியிருந்த கதை தெரியும் தானே.

அந்த முக்கிய பணி என்ன? இந்தியாவில் இருந்து புலிகள் ஆயுதம் கடத்தியிருக்க மாட்டார்கள். அப்போ? யாரே முக்கியமான ஒருவர் இந்தியாவில் இருந்து (சிகிச்சை முடிந்து திரும்பி) வந்திருக்கிறார். அது தான் அன்று கடற்புலிகள் முடித்த முக்கியமான பணியா?

தாங்கள் சிந்திக்கிறதுதான் சரி. மற்றவன் என்ன சிந்திச்சாலும் அது தனக்கு அவமானம்.. இப்படித்தான் கொஞ்சப் பேர் தங்களைப் பற்றிய அபரிமிதமான கற்பனையில.. தாங்கள் சிந்திக்கிறதைப் பற்றியே...உளறிக் கொண்டு...?! :icon_idea:

அட எங்க குண்டு வெடிச்சாலும் இந்த குடும்பச்சண்டை முடியாது போல கிடக்குது....

எம்பி மகேஸ்வரனைச் சுட்டுட் டாங்களாங்கோய்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட எங்க குண்டு வெடிச்சாலும் இந்த குடும்பச்சண்டை முடியாது போல கிடக்குது....

இல்லை, இந்த குறுக்காபோவான், யாழ் வாசகர்களை மந்தைகள் போல் கருதுவதை என்னால் சீரணிக்க முடியவில்லை.

திருந்தாத்து களை திருத்த முனைவது முட்டால் தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருந்தாத்து களை திருத்த முனைவது முட்டால் தனம்.

அறிவால் மற்றவர்களை நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.