Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் இராணுவ வெற்றிகள் மிகைப்படுத்திய பொய்கள் - இக்பால் அத்தாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து

இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார்.

இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தினந்தோறும் பெரிய அளவில் இழப்புக்களை சந்திப்பதாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வெளியிட்ட இக்பால் அத்தாஸ், இலங்கையின் தற்போதைய அரசு மட்டுமல்லாமல், முந்தைய அரசுகள் வெளியிட்ட இத்தகைய புள்ளி விபரங்களை கணக்கிட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூட தற்போது இருக்க மாட்டார்கள் என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று கூறுவது நம்பக்கூடியதாக அல்ல.இப்படிக் கூறியிருக்கிறார் பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அத்தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவரீதியில் புலிகளை வெல்ல முடியும் என்று படைத்தளபதிகளும் மற்றும் அரசுத் தலைவர்களும் கூறியுள்ளனர். அடுத்து உடனடியாக போர் மூளுமா என்று கூற இயலாது. ஆனால் நிச்சயமாக போர் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையிலும் பல வெளிநாடுகளி லும் ஸ்ரீலங்கா இராணுவம் பலம் மிக்கதாகி விட்டது போன்ற கருத்து நிலவுகின்றது.

உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பதை ஊடகங்களில் எழுதமுடியாது என்பது இதற்கு முக்கியமான ஒருகாரணம். மேலும் "பயங்கரவாதத்தை இதோ ஒழித்துக் கட்டுகிறோம்" என்று கூறி கடந்த 20 வருட காலப்பகுதியில் சொன்னவர்கள் பலர்.

என்னைப் பொறுத்தவரையில் புலிகள் பலமிழந்துவிட்டார்கள் என்று கூறுவது நம் பக்கூடியதாக இல்லை. அவர்கள் இன்னமும் முழு பலத்துடன் உள்ளதாகவே நான் கருதுகிறேன் .

தினமும் இவ்வளவு புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை கூறிய எண்ணிக்கையின்படி பார்த்தால் இப்போது ஒரு புலிவீரர்கூட இருக்க முடியாது. இப்படி அத்தாஸ் மேலும் கூறினார்.

tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலம் இழந்துவிட்டார்கள் என்பது நம்பக்கூடியது அல்ல இராணுவ ஆய்வாளர் அத்தாஸ் கருத்து

[sunday January 06 2008 04:25:02 AM GMT] [யாழினி]

விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று கூறுவது நம்பக்கூடியதாக அல்ல.இப்படிக் கூறியிருக்கிறார் பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் வெளிநாட்டுச் செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அத்தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவரீதியில் புலிகளை வெல்ல முடியும் என்று படைத்தளபதிகளும் மற்றும் அரசுத் தலைவர்களும் கூறியுள்ளனர். அடுத்து உடனடியாக போர் மூளுமா என்று கூற இயலாது. ஆனால் நிச்சயமாக போர் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையிலும் பல வெளிநாடுகளி லும் ஸ்ரீலங்கா இராணுவம் பலம் மிக்கதாகி விட்டது போன்ற கருத்து நிலவுகின்றது.

உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பதை ஊடகங்களில் எழுதமுடியாது என்பது இதற்கு முக்கியமான ஒருகாரணம். மேலும் "பயங்கரவாதத்தை இதோ ஒழித்துக் கட்டுகிறோம்" என்று கூறி கடந்த 20 வருட காலப்பகுதியில் சொன்னவர்கள் பலர்.

என்னைப் பொறுத்தவரையில் புலிகள் பலமிழந்துவிட்டார்கள் என்று கூறுவது நம் பக்கூடியதாக இல்லை. அவர்கள் இன்னமும் முழு பலத்துடன் உள்ளதாகவே நான் கருதுகிறேன் .

தினமும் இவ்வளவு புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இதுவரை கூறிய எண்ணிக்கையின்படி பார்த்தால் இப்போது ஒரு புலிவீரர்கூட இருக்க முடியாது. இப்படி அத்தாஸ் மேலும் கூறினார்.

tamilwin.com

அது தானே செய்த பாம்பை அடிக்கிறம் எண்டு எவ்வளவு காலத்துக்கு சொல்லுறது... கெட்டி காறனை அடிச்சம் எண்டு எழுதினால்தானே இன்னும் சிறப்பு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வேளைகளில் எம்மை நாம் முட்டாளாக்குவது போல ஆக்கங்கள் உருவாகும்

இப்படியான செய்திகளால் தான் நாம் இன்னமும் ஆனந்தசங்கரி அஜித் ரஜனிக்காந்த டக்கிளஸ் போன்றவர்களின் பிறந்ததினங்களை கொண்டாடத் தொடங்காது இருக்கிறம். அந்தவகையில் தமிழ்த் தேசியத்திற்கு தொண்டு செய்யும் இக்பால்அத்தாசை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் உண்மையான பலத்தை அறிந்தவர்கள் சிங்கள அரசும் அவர்களின் இராணுவமும் மட்டுமே!

பலம், பலவீனங்கள் அறியப்படக்கூடிய வகையில் புலிகள் அமைப்பு இருக்குமாயின், அது அழிக்கப்படுவதற்கு இலகுவாக இருக்கும். யாருக்குமே அறிந்துகொள்ள முடியாதிருக்கும் இந்த விடயத்தை அத்தாஸ் வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறார். புலிகளின் பலம் என்பது மரபுப் போருக்கு முகங்கொடுக்க முடியாவிட்டால் கெரிலாப் போரினை முன்னெடுப்பதுதான்.

சிறீலங்காவும் கொரிலாப்போர்முனையில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது ஆழஊடுருவும் படையணி மூலம். சிறீலங்கா இயலாமையின் வெளிப்பாடக அன்றி அதை ஒரு மேலதிக மூலோபாயமாக கைய்யாழுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவும் கொரிலாப்போர்முனையில் நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது ஆழஊடுருவும் படையணி மூலம். சிறீலங்கா இயலாமையின் வெளிப்பாடக அன்றி அதை ஒரு மேலதிக மூலோபாயமாக கைய்யாழுகிறது.

ஐயா எல்லாம் அறிஞ்சவரே.. உலக நாடுகள் எல்லாம் தங்கள் தங்கள் இராணுவத்துக்க கெரில்லாப் போர் முறைகளையும் கையாள்கின்றன தான்.

சிறீலங்காப் படை இன்றல்ல எப்போ தமிழர்களுடன் சண்டை ஆரம்பிச்சுதோ அப்பவோ கெரில்லாப் போர் முறையை ஆரம்பித்துவிட்டனர். அத்தோடு பல அதிரடித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று இந்திய இராணுவத்துக்கு முன். அடுத்தது இந்திய இராணுவத்துக்கு பின். இந்திய இராணுவத்துக்கு முன்னான காலத்தில் வான்வழி (கெலிக்கொப்டர்கள் வழி) தரையிறங்க அதிரடி கொமோண்டோ தாக்குதல்கள் பலவற்றைக் குடாநாட்டில் சிறீலங்கா இராணுவம் செய்திருந்தது. வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் உண்மை புலப்படும். அதில் சுதுமலை தரையிறக்கம் முக்கியமானது.

வன்னியின் தரைத்தோற்றம் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணிக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் வசதியானது. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்க கிரீன் பரேட் காட்டுப்புற கெரில்லாப் போர் படைப்பிரிவினர் கூட இருந்து சிறீலங்காப் படையினருக்கு பல யுக்திகளைக் கற்றுக் கொடுத்தனர். அதன் பலாபலங்கள் இன்றும் இருக்கத்தான் செய்யும்.

இவ்வாறான படைநடைவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கு விசேட சலுகைகளும் பதவி உயர்வுகளும் இலகுவாகக் கிடைப்பதால் சிங்கள இளைஞர்களும் ஆசைவார்த்தைகளுக்கு எடுபட்டு இவ்வாறான படைப்பிரிவுகளின் இடம்பெற்று அதிஸ்டங்களையும் அள்ளிச் செல்கின்றனர் தான்.

சிறீலங்கா இராணுவத்தின் யுக்திகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளினது. அதனடிப்படையில் சிறீலங்கா இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.அதேபோல் வன்னிக் காட்டுக்குள் அங்குலம் அங்குலமா போராளிகளை நிறுத்தி ஊடுருவல்களைத் தடுக்கவும் முடியாது. ஆனால் தளபதிகளின் நடமாட்டங்களைப் பாதுகாப்பான பாதைகளினூடு செய்வது சிறந்தது. சில பாதைகளை முழு நேரக் கண்காணிப்பில் வைப்பது நல்லம்.

அதுமட்டுமன்றி வன்னிக்குள் ஊடுருவியுள்ள அரச புலனாய்வாளர்களும் இந்த ஆழ ஊடுருவும் அணியினர் மற்றும் விமானப்படையினருடன் ஒத்துழைக்காமல் இலக்குகளை சரிவர இனங்காண்பதும்.. தாக்குதலை நடத்த தெரிவு இடங்களை தெரிவு செய்வது எப்பவும் எதேச்சையானது என்றிருக்க முடியாது. விடுதலைப்புலிகளுக்கும் இவை நங்கு தெரிந்திருக்கும். அவர்கள் இவற்றைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டுதான் இருப்பர்.

அவர்களால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் தான் இந்த இழப்புகள் ஏற்படுகின்றன. சில தளபதிகளின் அதிக பட்ச நம்பிக்கை என்பதும் அவர்களை மரணத்துள் தள்ளியுள்ளது.

எதிரி பற்றிய சரியான எடைபோடல்கள் அவசியம் தான். ஒரு சில தாக்குதல்களின் அடிப்படையில்.. எதிரி பற்றிய பிரமிப்பான தோற்றம் காட்டுதல்.. அதை வைத்து போர்க்களத்தை விட்டு விலகியுள்ள மக்களுக்கு ஒரு வெற்றிச் சாத்தியமற்ற போரில் புலிகளும் வன்னி மக்களும் ஈடுபடுவதாகக் காட்ட முனையுதல் என்பதை தொடர்சியாக சிலர் விமர்சனம் என்ற போர்வையில் நாசூக்காகச் செய்ய முனைவதை இட்டும் கவனம் அவசியம்..!

இப்படிப்பட்டவர்கள் கூட மக்கள் மீதான அரசு சார்பு அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சார்பு உளவியல் போரை மக்களோடு இருந்து போராட்டம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டிறம் என்ற நிலையில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு.. மக்களின் போராட்ட உணர்வியலை சிறுகச் சிறுக அவர்களே உணரா வண்ணம் சாகடிக்க செய்யலாம். இப்படியான யுக்திகளை கிட்லர் செய்தவர்.

இவை தொடர்பில் மக்கள் கவனமாக இருப்பதுடன் செய்திகள் விமர்சனங்களை கூர்ந்து கவனித்து நோக்குதல் அவசியம். தமிழ் தேசியச் சார்பு என்ற உளறலுக்குள் கூட அதை நசுக்கக் கூடிய நச்சு விதைகள் இருக்கலாம்.

கடந்த கால வரலாற்றுப் பாடங்களை எடுக்கோளாக்கி நோக்க வேண்டும். சிறீலங்காப் படை மட்டுமல்ல.. கெரில்லாப் போரை வன்னிக் காடெங்கும் நடத்திய பெருமை இந்திய கூர்கா ரெஜிமெட்டுக்கும் உண்டு..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா இராணுவத்தின் யுக்திகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளினது. அதனடிப்படையில் சிறீலங்கா இராணுவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.அதேபோல் வன்னிக் காட்டுக்குள் அங்குலம் அங்குலமா போராளிகளை நிறுத்தி ஊடுருவல்களைத் தடுக்கவும் முடியாது. ஆனால் தளபதிகளின் நடமாட்டங்களைப் பாதுகாப்பான பாதைகளினூடு செய்வது சிறந்தது. சில பாதைகளை முழு நேரக் கண்காணிப்பில் வைப்பது நல்லம்.

இவை தொடர்பில் மக்கள் கவனமாக இருப்பதுடன் செய்திகள் விமர்சனங்களை கூர்ந்து கவனித்து நோக்குதல் அவசியம். தமிழ் தேசியச் சார்பு என்ற உளறலுக்குள் கூட அதை நசுக்கக் கூடிய நச்சு விதைகள் இருக்கலாம்.

கடந்த கால வரலாற்றுப் பாடங்களை எடுக்கோளாக்கி நோக்க வேண்டும். சிறீலங்காப் படை மட்டுமல்ல.. கெரில்லாப் போரை வன்னிக் காடெங்கும் நடத்திய பெருமை இந்திய கூர்கா ரெஜிமெட்டுக்கும் உண்டு..! :rolleyes:

சிறீலங்கா இராணுவத்தின் யுக்திகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளினது.

அனேகமாக உங்கள் ஆக்கங்களில் அமெரிக்காவை ஈழத்தமிழரின் எதிரியாக காட்ட முயல்வது போல தெரிகிறது :lol:

ஆனால் இப்போ அமெரிக்கா தான் ஈழத்தமிழரை காப்பாற்றப்போகின்றது. அதற்கேற்ப நகருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெக்ஷ், அமெரிக்கா எப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாறுவதாகச் சொல்லியிருக்கிறது ? நீங்கள் இலங்கைக்கு அமெரிக்க ராணுவ உதவிகளின் கட்டுப்பாடு பற்றிச் சொல்ல வருகிறீர்களா ? அது ஈரானுடன் இலங்கை நெருங்கிச் செல்வதால் அமெரிக்கா ஒரு சிறு தட்டுத் தட்டியிருக்கிறது, அவ்வளவுதான். மற்றும்படி நீங்கள் நினைப்பது போல அமெரிக்கா உடனே வந்து தமிழருக்கு உதவப்போவது கிடையாது. மேலும் இந்தத் தடைகள் எல்லா உதவிகளுக்கும் பொறுந்தாது. சில உதவிகள் இந்தத் தடைக் காலத்திலும் தங்கு தடையின்றி நடக்க அநுமதி உண்டு.

இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி காலம் காலமாக வாய் கிழியக் கத்தும் அமெரிக்காவா எமக்கு உதவப் போகிறது ? அன்றுதொட்டு இலங்கைச் சிங்கள பேரினவாத அரசுகளுக்கு முண்டு கொடுத்து இனழிப்பிற்கான ஆலோசனைகளையும் கொடுத்துவரும் அமரிக்காவா எமக்கு உதவப் போகிறது ? இதை பாலச்தீனர்களிடம் போய் அமெரிக்கா இச்ராயேலிற்கு எதிராக பாலச்தீனர்களுக்குத்தான் இனி உதவப் போகிறது என்று சொல்வதற்குச் சமம். செய்து பாருங்கள்!

சிறீலங்கா இராணுவமோ இந்திய இராணுவமோ ஆழஊடுருவும் முறையிலான தொடர் முயற்சிகளை சந்திரிக்கா காலத்திற்கு முன்னர் நடத்தவில்லை. ஒன்றிரண்டு முயற்சிகளோடு அவை நிறுத்தப்பட்டிருக்கு. அவற்றின் வெற்றியும் பெரிதாக இருக்கவில்லை.

வேறு இராணுவங்கள் பாவிக்கைவில்லை சிறீலங்கா தான் கண்டுபிடிச்சது என்று சொல்லவில்லையே. பொதுவாக நாடுகளின் விசேடபடைகள் என்பது எதிரி நாடுகளின் கொரிலாப்போராளிகள் எதிர்ப்புக்குழுக்களோடு களத்தில் நிற்பவர்கள்.

சிறீலங்காவின் ஆழஊடுருவும் படையணி கூலிக்கு மாரடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களையும் திட்டமிட்டு இயக்கி நிர்வகித்து காணும் வெற்றிகளிற்கு ஏற்ற பரிசுகள் பதிவிகளை வழங்கும் தலமையின் கீழ் இருக்கிறார்கள். எல்லாரும் வெறும் கூலியை மட்டும் நோக்காக கொண்டவர்களாக இருந்தால் இப்படி இயங்க முடியாது. இங்கு தான் சிங்களவனும் ஓர்மத்தோடு போர்புரியத் தொடங்குகிறான் என்பதை தமிழர் உணரவேண்டும்.

தமிழர்கள் தற்பொழுது கொண்டிருக்கும் உளவியல் மாயைகளில் சில:

-1- சிங்களவன் மோடன்

-2- சிங்களவன் எல்லாரும் கூலிக்காகக் தான் சண்டை பிடிக்கிறான்.

-3- ஆழஊடுருவும் அணியின் தாக்குதல்களின் சில தான் வெற்றியடைந்தது என்பது.

இங்கு எழுதுபவை எவையும் புலிகளிற்கோ தாயகத்தில் உள்ள மக்களிற்கு தெரியாது என்றல்ல. புலம்பெயர்ந்த மக்கள் கொண்டுள்ள சில மூடநம்பிக்கைகளை கலைத்து எமக்கு முன்னுள்ள சவால்கள் பலமடங்கானவை. அவற்றிற்கேற்ற பங்களிப்புகளை பலமடங்காகச் செய்தால் தான் இனிவரும் சந்தர்ப்பங்களிலாவது வெற்றி நிச்சயமாகும் என்பதற்காகவே.

போராட்டத்தில் பங்களிக்கும் எல்லோரும் போராட்டம் பற்றிய உண்மை நிலையை அவரவரால் செய்யக் கூடிய (அல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிற) பங்களிப்புகளிற்கு ஏற்ப அறிய வேண்டியது அவசியம். இது களமுனையில் இருக்கும் போராளிகள், அவர்களை வழிநடத்தும் தளபதிகள், களமுனைத் தொண்டர் படைகள், தாயகத்து மக்கள், புலம்பெயர்ந்த மக்கள் என்று ஒவ்வொருவரு தரப்பும் அறியவேண்டியவை என்பது வேறு வேறான ஆழ அகலம் கொண்டது.

அவரவர் பணிகள் பங்களிப்புகளிற்கு எற்ற விளக்கங்கள் விபரங்கள் உண்மைநிலைகள் தான் ஒவ்வொருவரையும் தமக்கான பணிக்கு தயார்படுத்த பங்களிக்க உதவும். இந்தவகையில் புலம்பெயர்ந்தவர்களை புலிகளின் பலம் பற்றியும் சிங்களவனின் மோட்டுத்தன்மை பற்றியும் கற்பனை உலகில் வைத்திருக்கும் இன்றைய முயற்சிகள் பாதகமானவை.

தாயகத்தில் தினம் தினம் அழிவுகள் அவலங்களை கண்ணால் கண்டு அனுபவிப்பவர்களிற்கு எதிரியின் பலவீனங்கள் பற்றியும் எமது தந்திரோபாய அமைதி, பின்னகர்வுகள், பலங்கள் பற்றி சிலதைக் கூறி அவர்களது நம்பிக்கையை உள உரணைப் பேணுவது அவசியம். ஏற்கனவே பல முறை எழுதியது போல் இந்த அவசியம் புலம்பெயர்ந்தவர்களிற்கு இல்லை. ஆனால் தாயகத்து மக்களிற்கும் புலம்பெயர்ந்தவர்களிற்கும் போராட்டம் பற்றி களநிலவரம் பற்றி ஒரேவிதமான கண்ணோட்டங்களில் ஆக்கங்கள் உருவாகுதல் தொடர்கிறது.

புலிகள் பலமாக இருக்கிறார்கள், சிங்களவன் மோடன் கூலிக்கு மாரடிக்கிறான் புலிகள் அடிக்கத்தொடங்கின ஓடிவிடுவான் என்று எழுதினால் தான் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் நம்பிக்கையோடு இருப்பார்கள் என்றால் அப்படிப்பட்ட புலம்பெயர்ந்தவர்களால் புலிகள் எதிர்பார்க்கும் எமது போராட்டம் இன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்கும் பங்களிப்புகளைச் செய்ய முடியாது. உணர்வுரீதியாக அவர்களை மயக்கமான நிலையில் வைத்திருந்தால் தான் போராட்டத்திற்கு ஆதரவு தருவார்கள் என்றால் அப்படியானவர்களிடம் அறிவியல்ரீதியான பங்களிப்புகளை எதிர்பார்க்க முடியாது. இந்த முரண்நிலை மாறவேண்டும்.

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தற்பொழுது கொண்டிருக்கும் உளவியல் மாயைகளில் சில:

-1- சிங்களவன் மோடன்

-2- சிங்களவன் எல்லாரும் கூலிக்காகக் தான் சண்டை பிடிக்கிறான்.

-3- ஆழஊடுருவும் அணியின் தாக்குதல்களின் சில தான் வெற்றியடைந்தது என்பது.

நான் நினைக்கிறேன் 70களின் தமிழ் அரசியல்வாதிகளின் கண்ணோட்டத்தோடு நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று. காரணம் தமிழ் மக்களில் பலரும் இப்போ அறிவார்கள் சிங்கள தேசத்தின் இன அழிப்பு நில ஆக்கிரமிப்பின் சகலவிதமான நகர்வுகளையும் அவற்றின் பின்னணிகளையும்..! இந்த நிலையில் சிங்களவனை மோடன் என்று சொல்லிக் கொண்டு கச்சை கட்டின தமிழர்கள் இன்னும் உலகில இருப்பினம் என்று நான் நினைக்கல்ல..!

சிங்களவன் ஓர்மத்தோட சண்டை பிடிக்கிறான் என்றீங்க. அவன் ஓர்மமாச் சண்டை பிடிக்க அவனுக்குள்ள அரசியல் இராணுவத்தேவையென்ன..??! சிங்கள அரசின் தேவைக்குத்தான் சண்டை நடக்கிறது என்பதை சிங்கள இராணுவத்துக்குள்ளேயே வீரர்கள் நங்கு அறிவார்கள்..! நீங்கள் அறியாதது வியப்புக்குரியதல்ல. அப்படிக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

சிங்கள இராணுவ வீரர்கள் போர் முன்னெடுப்புக்களைச் செய்கின்ற போது வெற்றிகளைப் பெற தூண்டப்படுகின்றனர். அவற்றுக்கு சிங்கள அரசின் தேவை இருக்கிறது. அதற்கேற்ப அதிநவீன இராணுவ தளபாட மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகள் என்ற உற்சாகமூட்டும் பலமான பின்புலம் சிங்களப் படையினருக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு முறை விடுதலைப்புலிகள் கைது செய்த படைவீரன் சொன்னது.. கவச அங்கிகளை அணிந்து கொண்டு நீங்கள் டாங்கிகளுக்குப் பின்னால் நடந்து போக வேண்டியதுதான்.. உங்களுக்கு சண்டை பிடிக்கவே தேவை இருக்காது என்று சொல்லித்தான் தங்களை போர் முனைக்கு அழைத்து வந்ததாக... இப்படியான ஒரு தயார்படுத்தலின் கீழ்தான் பல சிங்கள வீரர்கள் இராணுவத்தில் இருக்கின்றனர்.

ஓர்மமுள்ள படையினர் என்றால் எதற்காக வடக்குக் கிழக்கில் செயற்படும் படையினருக்கு ஏனைய பகுதிகள் உள்ளவர்களை விடக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும்.

எமது போர் விமானங்கள் புலிகளை அழிக்கும்.. ஆட்லறிகள் பல்குழல் செலுத்திகள் புலிகளை துவம்சம் செய்யும் நீங்கள் டாங்கிகளின் பின்னால் சுட்டபடி நகர வேண்டியதுதான்.. அப்படி நகர்ந்துதான் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். பாருங்கள் எம்மவர்களில் சிலர் காயமடைய 100 புலிகள் இறக்கிறார்கள். அந்தளவுக்கு எமது போரிடும் ஆற்றல்.. இருக்கிறது. அந்தளவுக்கு இலகுவானதாக இருக்கிறது களம் இப்படித்தான் சிங்களப் படையினரில் பலருக்கு யுத்தகளம் காண்பிக்கப்படுகிறது. இப்படியான காரணங்களாலும் தான் கடந்த காலங்களில் புலிகளின் ஓர்மம் வெளிப்பட்ட தாக்குதலை அடுத்து சிங்களப் படைகள் பின்வாங்க வேண்டிய தேவை எழுந்தது.

ஆழஊடுருவும் பணியை இந்திய கூர்கா ரெஜிமெட் பல தடவை வன்னிக் காட்டுக்குள் செய்துள்ளது. அதற்கு எதிராக நடைமுறைக்கு வந்ததுதான் ஜொனி மிதிவெடிகள். அப்போ எல்லாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்.. நிர்வாகம் என்பதெல்லாம் சுருங்கி இருந்ததுடன் இப்படியான நகர்வுகளின் முக்கியத்துவம் மக்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இன்று கள பரிமானம் வேறுபட்டது.

காட்டுப்புறச் சூழலில் புலிகளுக்குத் தெரியாமல் நகர்ந்து சென்று தாக்குதல் நடத்தலாம் என்ற கணிப்பின் பேரிலும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பிரதேசங்களில் வாழும் சிறீலங்கா உளவாளிகளின் தகவலின் பெயரிலும் தான் கிளைமோர்கள் வெடிக்கின்றன.

சமீப ஆண்டுகளில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கங்கை அமரனின் வீரமரணத்தோடு ஆரம்பித்து கேர்ணல் ராஜன் ஈறாக இப்போ கேர்ணல் சாள்ஸின் வீரமரணம் வரை அதுவும் சமாதான காலத்தில் நிகழ்ந்த கிளைமோர்கள் காவுகொண்ட புலி வீரர்களின் எண்ணிக்கையே அதிகம். அதனால் ஆழ ஊடுருவும் அணி பற்றிய செய்திகளும் முக்கியம் பெற்றுள்ளதன் விளைவு.. ஆழ ஊடுருவும் அணிபற்றிய அச்சம் எழக் காரணமாயுள்ளது. அது சில மிகைப்படுத்தல்களுக்கும் உதவியாக உள்ளது. அரசுக்கும் படைக்கும் உற்சாகமாகவும் அமைகிறது. இதைத் தடுக்க வேண்டியது கட்டாயம்.

ஆக வன்னி செய்த சில தளர்வுகளை சிறீலங்காப் புலனாய்வுத்துறை தனக்குச் சாதமாக்கிக் கொண்டு.. ஆழ ஊடுருவும் படையணியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி.. குறிப்பாக அமெரிக்காவின் வியட்நாம் போர் யுக்தியின் வழி.. இது தொடரப்படுகிறது..! இது மிகப் பழைய யுக்தி என்றாலும் இதைச் சமாளிப்பதற்கு நிறைந்த ஆட்பலத்தை விரயமாக்க வேண்டி இருக்கும் என்பதால் பரந்த நிலத்தொடர்புள்ள கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இவ்வகைப் போர்முறைகளுக்கு வெற்றிகள் கிடைப்பது போர் செய்யும் ஓர்மத்தின் விளைவல்ல.

சிறீலங்காப் படையினரின் போர் ஓர்மம் என்றால்.. ஆகாய கடல் வெளித்தாக்குதலில் புலிகளின் ஆனையிறவு மீதான முற்றுகையை உடைக்க செய்த தரையிறக்கங்களும் போர் ஓர்மத்தின் விளைவுகளாகக் காட்டப்படலாம். அதற்கு முன்னர் ஜே ஆர் காலத்திலேயே பல வான்வழித் தரையிறக்கங்களை மேற்கொண்டு புலிகளை வலிந்து சண்டைக்கிழுத்து போரிட்டத்தையும் காட்டலாம்.

கள நிலைமைக்கு ஏற்ப சிறீலங்கா இராணுவத்தினர் இராணுவ யுக்திகளைப் பயன்படுத்துவதில் திறமையுள்ளவர்கள் தான். போர் ஓர்மம் ஏற்பட்டுப் போர் புரிய வேண்டிய அரசியல் சமூக பொருளாதாரத் தேவைப்பாடு சிறீலங்காப் படையினருக்கு கிடையாது. விடுதலைப்புலிகளுக்கு உள்ளது போன்ற ஒரு போரியல் அவசியம் அவர்களுக்கு இல்லை..! அவர்களுக்கு தங்கள் குடும்பம் குட்டி என்று அமைதியாக வாழ ஓய்வெடுக்க ஒரு இடமுண்டு என்பது தெரியும். அது ஓர்மத்தை ஊட்டாது. ஆனால் தமிழ் மக்களை புலிகளைப் பொறுத்தவரை நிலை வேறு. அவர்களுக்கு போர் செய்தால் தான் வாழ்வு என்ற நிலை. அங்குதான் ஓர்மம் பிறக்கும்.

சிறீலங்காப்படையினர் கூலிக்காக உழைப்பவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் தங்களின் அரசுக்கான போர் வெற்றிகளை ஈட்டுவதில் தயக்கங்களோடு செயற்படுபவர்கள் என்றும் இல்லை. ஆனால் சிறீலங்காப் படைகளின் கனரக தரைப்படை உபகரணங்களும் விமானப்படையும் செயழிலக்கச் செய்யப்படும் போது சிறீலங்கா படையினரின் போர் ஓர்மம்.. என்பதன் உண்மை புலப்படும்..! அதுவே ஜெயசிக்குறுவிலும் நிகழ்ந்தது.. எனியும் நிகழும்.

சில கிளைமோர்கள் வெடிக்கின்றன தான். அதற்கு எல்லாம் ஆழ ஊடுருவும் அணிதான் பொறுப்பு என்றுமில்லை. சில கிளைமோர்கள் இராணுவ உளவாளித்தமிழர்களாலும் இயக்கப்படுகின்றன. அதற்காக தமிழர்கள் இராணுவத்துக்காக ஓர்மத்துடன் புலிகளுடன் சண்டை இடுகின்றனர் என்று காண்பிக்க முடியாது.

விடுதலைப்புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ வளம்.. ஆளணி வளம் என்பதைக் கணக்கிட்டு.. சிங்கள மற்றும் அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் இராணுவ ஜெனரல்களின் வழிநடத்தலின் கீழ் உற்சாகமூட்டலின் கீழ் செய்யப்படும் ஆழ ஊடுருவும் அணிகளின் நடவடிக்கைகள் சிங்களப் படையின் போரியல் ஓர்மச் செயற்பாடு என்பதிலும் சிங்களப்படை தங்கியுள்ள தனதாக்கியுள்ள நவீன போரியல் உபகரண.. மற்றும் உதவிகளின் வெளிப்பாடு என்று நோக்குதலே சாலப் பொருந்தும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இராணுவத்தின் யுக்திகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளினது.

அனேகமாக உங்கள் ஆக்கங்களில் அமெரிக்காவை ஈழத்தமிழரின் எதிரியாக காட்ட முயல்வது போல தெரிகிறது

ஆனால் இப்போ அமெரிக்கா தான் ஈழத்தமிழரை காப்பாற்றப்போகின்றது. அதற்கேற்ப நகருகின்றது

அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது நலனின் தேவைக்கு ஏற்பதான் எதிரியும் நண்பனும். அந்த வகையில் ஈழப்போராட்டத்தை அமெரிக்க நலனுக்காக பயன்படுத்த அமெரிக்க நினைக்கலாம்.. தமிழர்களுக்கும் அமெரிக்க உதவி தேவைப்படலாம். ஆனால் அமெரிக்கா எப்பவும் நமக்கு நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. காரணம்.. அமெரிக்க நலன் காலம், சூழல், தேவை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும்..!

உ+ம்: ஒரு காலத்தில் ஈராக்கின் சதாம் வெள்ளைமாளிகையின் செல்லப்பிள்ளை. இறுதியில் அதனாலேயே தூக்கிலும் போடப்பட்டார். :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படைகளுக்கு ஓர்மமிருக்கிறது என்பதைக் காட்டிலும், தமிழின அழிப்பு என்பதே முதன்மையானது என்பது எனது கருத்து. தனியே சம்பளத்துக்காக மட்டுமே சிங்களப் படைகள் யுத்தத்தில் ஈடுபடுகின்றன என்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று தெரியவில்லை. கோப்பேக்கடுவ, விஜய விமலரட்னே, லக்கி அல்கம போன்ற சிங்களத் தளபதிகளை இன்றும் சிங்களவர் புகழ்வதைப் பார்க்கிறோம். தனியே சம்பளம் மட்டும் ஒருவனை சாவதற்கு துணிய வைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இந்தக் காரணி ஏதுவாக அமைந்து விடக் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படைகளுக்கு ஓர்மமிருக்கிறது என்பதைக் காட்டிலும், தமிழின அழிப்பு என்பதே முதன்மையானது என்பது எனது கருத்து. தனியே சம்பளத்துக்காக மட்டுமே சிங்களப் படைகள் யுத்தத்தில் ஈடுபடுகின்றன என்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி என்று தெரியவில்லை. கோப்பேக்கடுவ, விஜய விமலரட்னே, லக்கி அல்கம போன்ற சிங்களத் தளபதிகளை இன்றும் சிங்களவர் புகழ்வதைப் பார்க்கிறோம். தனியே சம்பளம் மட்டும் ஒருவனை சாவதற்கு துணிய வைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இந்தக் காரணி ஏதுவாக அமைந்து விடக் கூடாது.

சிங்கள அரசுத்தலைமையும் அதன் தளபதிகளும் இன அழிப்புக்கான திட்டங்களைச் செயற்படுத்துகின்றனர் என்பது தான் யதார்த்தமானது. ஆனால் கடைநிலைச் சிப்பாய்க்கு இன அழிப்பு என்பது அவசியமான ஒன்றாக இல்லை. தமிழன் இருந்தால் என்ன அழிந்தால் என்ன அவனுக்கு வாழ வழி இருக்கிறது. அவனைப் பொறுத்தவரை கவர்ச்சிகரமான வாழ்வுக்கு ஏற்ப வருவாய் தரும் சலுகைகள் தரும் இடமாக இராணுவம் இருக்கிறது.

தமிழனை அழிக்கப் போறன் என்று கிளம்பும் சாதாரண சிங்களச் சிப்பாய்கள் சிறீலங்கா இராணுவத்தில் குறைவு. ஆனால் தமிழனை அழிக்கப் போறன் என்று புறப்படும் தமிழ் துரோகிகள் அதிகம்..! சிங்கள அரசுத் தலைமையும் இராணுவத்தலைமையும் இன அழிப்புக் கொள்கையோடு செயற்படுகின்றன.. அதற்கு கருவிகளாக சிங்களச் சிப்பாய்கள் இருக்கின்றனரே தவிர.. அவர்களுக்கு இன அழிப்பைச் செய்ய வேண்டிய தேவை இல்லை. மாத்தறை சிங்களவன் எதுக்கையா.. மட்டக்களப்பில சண்டை பிடிக்க வேணும்.

இடம்பெயர்ந்து லண்டன் வந்த ஒருவனுக்கே தாயகத்துக்காக சண்டை பிடிக்கனும் என்ற உணர்வு இல்லாத நிலை வரும் போது...????! :lol::D

சரி ஓர்மம் என்ற சொல் தவறாக இருக்கலாம். நான் சொல்ல வந்தது வருவது சிங்களத்தின் சாதாரண படைகள் முதல் இடைநிலை அதிகாரிகள் வரை எல்லோரும் வேலையில்லாத்திண்டாட்டத்தில

சிறீலங்கா இராணுவமோ இந்திய இராணுவமோ ஆழஊடுருவும் முறையிலான தொடர் முயற்சிகளை சந்திரிக்கா காலத்திற்கு முன்னர் நடத்தவில்லை. ஒன்றிரண்டு முயற்சிகளோடு அவை நிறுத்தப்பட்டிருக்கு. அவற்றின் வெற்றியும் பெரிதாக இருக்கவில்லை.

உங்களுக்கு யார் இந்த தகவல்களை தந்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.

இலங்கை படைகளின் தரை இரங்குதல் பதுங்கி தாக்குதல் என்பன பிரமதாச காலத்தில் அட்டகாசமாக நடந்தது. அனேகமாக கிழக்கு மாகான போராளிகள் யாரையாவது கேட்டீர்கள் எண்றால் சொல்வார்கள்... அதோடை புளொட் ராசிக், மோகன் குழு என்பன என்ன செய்து வந்தன இராணுவத்துக்கு எந்த வகையான பலத்தை கொடுத்தார்கள் என்பது வெளிச்சம். இப்போ இருக்கும் இராணுவ வகைகள் எல்லாம் அந்த வளிகள் மெருகேற்ற பட்டு வன்னிக்குள் தாக்குதல் நடத்தும் வளிகளாக இருக்கிறது.

முக்கியமாக புலிகளுக்கு பிரச்சினையாக இந்திய இராணுவத்தின் பரா இராணுவ குழுவை எப்படி மறந்தீர்களோ ? திருநெல்வேலியில் பரசூட்மூலம் இரகசியமாக தரை இறங்கி பல்கலைக்களக வளாகத்துக்குள் நிலை எடுத்த 28 இந்திய இராணுவத்தை கொலை செய்த நிகள்வுதான் முதலாவது இந்திய இராணுவத்துக்கு எதிரான புலிகளின் முதல் தாக்குதலே. இது மட்டும் அல்ல யாழ்ப்பாணதை கையகபடுத்திய இந்திய இராணுவம் முதலில் சிறைய குழுக்களை ஒவ்வொரு இடங்களுக்கும் அனுப்பிய பின்னர்தான் மரபுவளி இராணுவத்தை அந்த இடத்தை நோக்கி நகர்த்தியது.

இதை எல்லாம் விட்டு சந்திரிக்காவின் அரிய கண்டு பிடிப்புதான் ஆழ ஊடுருவும் படை எண்ட மட்டிலை கதை சொல்லாதேங்கோ.

இந்த ஆழ ஊடுருவும் போர் முறையை அமெரிக்கா வியட்னாமிலை செய்து தோற்று போன பழைய மெந்தை கள்ளுத்தான். இப்படியான தங்களின் வெற்றியைதான் பெரிய வியட்நாம் வெற்றிகளாக அமரிக்கா சித்தரிக்கிறது.

ஆரம்பத்தில் கடினமான விடயம் எண்டாலும் தந்திரோபாய மாற்றங்கள் வரும் போது, விளக்கை நாடிவரும் விட்டில்களில் நிலையை எதிரிக்கு ஏற்படுத்த முடியும்.( மன்னார், வவுனியாவில் நடை பெறும் சண்டைகள் அந்தவகை) இஸ்றேலிய வளிவகையன் line, Ring defence system வகையராக்கள் தூண்டில் போல தாக்குதலுக்கு போகும் ஒருவரை தனது எல்லைக்குள் வரவளைத்து வெடி பொருள்களால் குளிக்க வைப்பது என்பதுக்கும், Offence System எண்று எதிரே என்ன் இருக்கிது என்பது தெரியாமல் போய் மாட்டி கொள்வதுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

எதில் பலம் இருந்தாலும் பலவீனமும் இருக்கும்.

Edited by அகிலன்

புலிகள் பலமிழந்தார்களோ அல்லது இராணுவம் பலம் பெற்றார்களோ என்பது ஒருபுறம் இருக்க,புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டிய வேலை நிறையவே இருக்கிறது. சிங்கள் அரசு மேற்கொண்டு வரும் பொய் பிரச்சார த்தினை ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருமித்து எதிர்த்து திலீபன் போன்று உண்ணாவிரதம்கள் செய்து, மெருகூட்டும் போதுதான் பிறநாட்டவன் சிந்திப்பான், இவர்கள் ஒற்றுமையான ஒரு இனம் ஆகவே சிங்கள் அரசின் கபட வேலைகளை ஒரு ஓரத்தில் தள்ளி வைப்பான்.

அண்ணா போராட்டம் என்று வெளிக்கிட்டா, யாரும் உயிருடன் நாளை இருப்பர்கள் என்று நினைப்பதும் இல்லை, அதே போல நாளை செத்துப்போவர்கள் என்று அவர்கள் மனங்களை கீழே தாழ்த்துவதுமில்லை. அப்படி மரணம் அவர்களை தேடி வந்தாலும் கவலைப்படுபவர்கள் புலிகள் அல்ல. ஆனால் புலிகள் கவலைப்படுவது, எம்மை புலம் பெயர்ந்த மக்கள் மறந்துவிட்டார்களே என்பதைத்தான்.

சிங்களவன் மோடன் கூலிக்கு மாரடிக்கிறான். ஓயாத அலைகள் 5 தொடங்கினவுடன் எல்லாத்தையும் போட்டுட்டு சாறியும் சறத்தையும் கட்டிக் கொண்ட ஓடிவிடுவங்கள் இல்லாட்டி அதுகள் கிடைக்காட்டி உரிஞ்சு போட்டு கோவணத்தோடை ஓட்டம் எடுப்பன் என்றியள்.

புலிகளின் பலத்தை ஒருவரும் அறியமுடியாது. அவர்களின் பலமே மரபுவழியில் முடியாவிட்டால் கொரிலாமுறையில் குடுக்கிறான் எண்டியள்.

அப்ப சிங்களவனும் கொரிலாமுறையில செய்யிறான் தானே எண்டா. சா சா அது உலகத்து இராணுவம் எல்லாம் செய்தது தான் என்றியள். பிரேமதாச காலத்துக்கு முதல் ஜேஆர் காலத்தில இருந்தே செய்யிறாங்கள் அதுகளை மெருகேற்றி ( உலகத்து உதவிகளை கூட ஒழுங்காக பாவிக்கத் தெரியாத உந்த கூலிக்காக மாரடிக்கிற மோட்டுச் சிங்களவங்கள் தான்) இப்ப வன்னிக்கை நடத்திறாங்கள் அவ்வளவு தான் என்றியள்.

ஆரம்பத்தில கடினமாக இருக்கு பிறகு தந்திரோபாய மாற்றங்கள் வரும்பொழுது... எதில் பலம் இருந்தாலும் பலவீனமும் இருக்கும்...

எது ஆரம்பமாக இருக்கு ஜேஆர் பிரேமதாச காலமா அல்லது மெருக்கேற்றப்படும் முறைகளா? ஆரம்பம் என்று சொல்லும் அளவிற்கு வேகமாக மெருகேற்றி மாற்றங்களை சிங்களவன் கொண்டுவருகிறானா?

அது எப்படி குறிக்கோள் இல்லாது கூலிக்கு மாரடிப்பவன் அப்படி வேகமாக இயங்குகிறான்? அவனுடைய அரசியல் தலமை வேறு சுயலாபத்திற்காக மாத்திரம் முடிவெடுக்கிறது என்று திருப்த்தியடைகிறோமே.

குறுக்கால போகும் அண்ணா, எனக்கு நீங்கள் சொல்லியதில் 50 வீதமே விழங்கியது. நீங்கள் சொல்லியதில் தவறு ஏதும் இல்லை.ஆனால் பல விடயங்களை விளுங்கிவிட்டீர்கள்.

ஈழதமிழரின் புலிகள், இன்று வளர்ந்து பெரும்விரூட்சமாக கிளைகள் விட்டு இருக்கும் ஆலமரம். அன்று, உலக நாடுகளிற்கு பயந்து பயந்து தமிழரை கொன்று குவித்த சிங்கள அரசுகளும் அதன் கூலிப்படைகளும், இன்று அதே வெளிநாடுகளின் ஆதரவினூடு தமிழரை கொன்று குவிக்கிறது.

பெரும் படையாக இருக்கும் எந்த இராணவத்தினையும் வேறொருஅணி மறைந்திருந்து கெரில்லா முறைமூலம் தாக்கலாம். அது பரினாம வளர்ச்சி வரும் போது புலிகளுக்கு பெரிதான இழப்பாக அது தெரிந்திருந்தாலும், இலகுவாக ரீக்கவறி பண்ணக்கூடியது. ஒரு தளபதியின் வழிகாட்டலில் பண்பட்டு, பணியாற்றிய அடுத்த கட்ட தளபதிகள் இருக்கும் போது, புலிகளால் இந்த இழப்புக்களை ஈடுசெய்ய முடியக்கூடியதாக இருக்கும்.

இப்போது சிங்கள இராணவ தளபதி ஒருவர் இறக்கும் போதும் இதே நிலைமை இன்று சிங்கள இராணுவத்தில் இருக்கவேண்டும். காரணம் சிங்கள் இராணுவமும் களத்தில் போராட்ட சண்டை அனுபவம் கொண்ட இராணுவ வீரர்களைக்கொண்டு இருக்கிறது. ஆகவே போர் என்று வரும் போது இது தவிர்க்கமுடியாது. இரண்டு பக்கங்களும் இப்படிப்பட்ட இழப்புகள் வருவது சகஜம். படைகள் பெரிய அளவில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி குறிக்கோள் இல்லாது கூலிக்கு மாரடிப்பவன் அப்படி வேகமாக இயங்குகிறான்? அவனுடைய அரசியல் தலமை வேறு சுயலாபத்திற்காக மாத்திரம் முடிவெடுக்கிறது என்று திருப்த்தியடைகிறோமே.

அப்ப அண்ணாச்சி என்ன சொல்ல வாறியள். சிங்களவன் ஓர்மத்தோட இயங்கத் தொடங்கிட்டான்.. எனவே தமிழர்கள் எனி துண்டக் காணம் துணியக் காணம் என்று ஓட வேண்டியதுதான் என்றீங்களோ.. இல்ல தமிழர்களுக்கு ஓர்மம் வளர்க்க மந்திர உச்சாடணம் செய்யனும் என்றீங்களோ..??!

ஓர்மமுள்ள சிங்களவன் படையை விட்டு ஓடினது (விலகினது இன்னொரு தொகை) கிட்டத்தட்ட மொத்தப் படை எண்ணிக்கையில் 33%. சாதாரண சிங்களப் படையினர் புலிகளை விட தாம் கொண்டுள்ள ஆயுத பலத்தாலும் சர்வதேசப் படைத்துறை உதவிகளாலும் தான் களத்தில இன்னும் நிற்கினமே தவிர ஓர்மத்தோட தமிழனை அழிச்சிடுவம் என்று இன்னும் புறப்படல்ல..!

சிங்களத் தளபதிகளிலும் எல்லோருக்கும் தமிழின அழிப்பு பிரதானம் அல்ல அவ்வாறு எல்லோரும் செயற்படவும் இல்லை. காசு பார்க்கிறதுதான் பிரதானம். எந்தத் தளபதி ஊழல் செய்யேல்ல. எந்தப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரி பணம் பார்க்கல்ல..???!

அடிப்படையில் சிங்கள இராணுவம் தமிழின அழிப்புக்கான ஓர்மத்தை கொண்டிருந்தால் 1986 இலேயே புலிகள் ஏ கேயோட இருந்த காலத்திலேயே புலிகளையும் தமிழர்களையும் அழிச்சுப் போட்டிருக்கலாம்..!

புரூண்டி போல இலட்சக்கணக்கில தமிழர்களைக் கொன்று புதைத்திருக்கலாம்..! சிங்கள அரசுத் தலைமைக்கும் சிங்களப் படைக்கும் தமிழின எதிர்ப்பு என்பது சிங்கள தேசத்தில் தமிழருக்கு எதிரான ஒரு மனோநிலையை சிங்களவர்களிடம் வளர்த்து வைத்து அதன் மூலம் தமது அரசியல் பொருளாதார நலங்களை பேணுவதுதான் முன்னணில இருந்திருக்கிறது..!

தமிழின குடித்தொகைப் படுகொலை என்பது கூட சிங்களவர்களை இனவெறி நிலையில் வைச்சிருக்கத்தான். முற்றாகத் தமிழனை குடித்தொகை எண்ணிக்கை ரீதியில் அழிக்கனும் என்று நினைச்சிருந்தா எப்பவோ அழிச்சு ஒழிச்சிருக்கலாம்.

தமிழின அழிப்பு என்பது தமிழனை முற்றுமுழுதாக குடித்தொகை ரீதியில் படுகொலை செய்வதல்ல சிங்கள அரசின் நோக்கம். தமிழர் தமது நிலவுரிமை.. அரசியல் ஆட்சியுரிமை கோராத நிலையை நோக்கி தமிழர்களை வைத்தல் என்பதுதான் சிங்கள அரசின் தமிழின அழிப்பு என்பதாக உள்ளது..! புரூண்டி படுகொலைகளை உலகம் கண்டித்த அளவுக்கு சிங்களவர்களின் தமிழின அழிப்பு என்பது உலகை உலுக்கக் கூடிய வகையில் இருக்கவில்லை.

குடித்தொகை ரீதியில் தமிழர்கள் 80 ஆயிரம் பேர் தான் 30 வருட போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழர்களின் நிலவுரிமை கோரிக்கைகள் ஆட்சியுரிமைக் கோரிக்கைகள் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களின் பெரும்பான்மைப் பலம் என்பன சிங்கள அரசால் கிட்டத்தட்ட முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டே உள்ளது..! இதைத்தான் சிங்கள அரசு எதிர்பார்த்தது. இதற்காகத்தான் சிங்களப் படை காவல் நிற்கிறது. ஆக்கிரமிப்புச் செய்கிறது.

10 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் ஓடிக் கொண்டிருப்பது சிங்களவனுக்குத் தெரியாமல் இல்ல. அவனே விட்டான் ஓடுங்கடா என்று. அதுவும் இன அழிப்புத்தான். ஓடி ஓடி நாமே எமது இனத்தின் பெரும்பான்மைப் பலத்தை அழிச்சமே அதைவிட சிங்கள இராணுவம் அழிச்சது சொற்பம்..! :lol:

ஆனால் புலிகளின் தலைமை புலம்பெயர்ந்து ஓடிய தமிழர்களின் பலத்தை தனக்கு சாதமாக்கிக் கொண்டதுதான் சிங்கள அரசு எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.

ஓடிற தமிழன் போராட்டத்தை விட்டே ஒதுங்கிடுவான் என்று எதிர்பார்த்த சிங்களத் தலைமையின் சிந்தனைக்கு புலிகள் செயல்வடிவம் கொடுக்காமல்.. ஓடிய தமிழர்களை பிந்தொடர்ந்து ஈழத்தின் நிலையை அவர்களுக்கு உணர்த்தியதன் வெளிப்பாடே புலம்பெயர்ந்த தமிழர்களும் ஈழப்போராட்டமும் என்ற புதிய பரிமானம் தோற்றம் பெற வழிவகுத்தது..!

இன்றைய வன்னி ஆக்கிரமிப்பு என்பதும்.. புலிகளை அழிப்பதாகச் சொல்லி தான் வருகிறது. காரணம்.. புலிகள் மட்டுமே சிறீலங்காவில் தமிழர்களுக்கு ஆட்சியுரிமையும் நில உரிமையும் கோரவும் அதற்கும் தமிழருக்கும் பாதுகாப்பும் வழங்கக் கூடிய சக்தியாக உள்ளனர். மற்றைய எவரும் அந்தத் தகுதியில் இல்லை என்பதை சிங்கள அரசு ஏற்படுத்திவிட்டது.

புலிகளை அழித்துவிட்டால் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக தமது ஆட்சி அதிகார அலகுக்குள் வைத்திருக்கலாம் என்பதுதான் சிங்கள அரசின் திட்டமே தவிர.. 100% தமிழர்களை குடித்தொகை ரீதியா அழிப்பது அல்ல அவர்களின் இலக்கு. அப்படி செய்வது எனி சர்வதேச அரங்கில் சாத்தியமும் இல்லை..!

இப்போ... புரிய வேண்டும் சிங்களப் படைக்குள்ள இன அழிப்பு ஓர்மத்தின் தேவை என்ன என்பதை..??!

சாதாரண சிங்களச் சிப்பாயின் ஓர்மம் என்பது.. களத்தில் சாதிப்பதால் சலுகை பெறுவதும் பதவி உயர்வு பெறுவதும்.. நல்ல சம்பளம் பெறுவதும் தான் முதன்மையானதாக உள்ளது. அதுவும் நல்ல பலமான இராணுவ பின்புலத்தோடு தமது இராணுவத்தைக் கட்டி வைத்துக் கொண்டுதான் சிங்களப் படை களத்தில் குதித்திருக்கிறது.

ஏன் அவசர அவசரமாக சிங்களப் படை தன்னை மேம்படுத்துகிறது. அதன் தேவையென்ன..??!

1.புலிகளின் இராணுவ பலம் தனது இராணுவ பலத்தை விஞ்சிடக் கூடாது. புலிகள் பலம் பெற்றால் அது தமிழ்மக்களின் நிலவுரிமை ஆட்சியுரிமை கோரிக்கைகளை வலுப்படுத்தும். அது தனக்கு ஆபத்தானது என்று நினைக்கும் சிங்கள அரசுத் தலைமையும் அதனை ஒட்டி நிற்கும் இராணுவத் தளபதிகளும்.

2. புலிகளின் ஆயுத பலத்துக்கு அஞ்சி சண்டைக்களத்தை விட்டு படையினர் ஓடும் நிலையை தவிர்க்கவும். 30 - 40 ஆயிரம் படையினர் படையைவிட்டு ஓடிவிட்ட நிலையில் இவ்வளவு பொய்ப் பிரச்சாரங்கள் மிகைப்படுத்திய வெற்றிப் பிரதாபங்கள்.. ஆயுத தொழில்நுட்ப முன்னேற்றங்கள்.. பகிரங்க சர்வதேச ஒத்துழைப்புக்கள் என்று பலமான நிலையின் மத்தியிலும் ஓடிய படையினரில் வெறும் 5000 படையினர்தான் மீள இணைக்க முடிந்துள்ளது.

3. புதிய ஆயுதக் கொள்வனவுகளோடு பெறப்படக் கூடிய ரகசிய வருவாய்கள். (அதுதாங்க ஊழல். ஓரிரவிலேயே பல சிங்களத் தளபதிகள் கோடீஸ்வரராகி விடுகின்றனரே)

இவ்வளவு வெற்றிப் பிரதாபங்கள்.. ஆயுதப் பல கண்காட்சிகள்.. சர்வதேச இராணுவ வல்லுனர்களின் நேரடி அரவணைப்புக்களும் ஆலோசனைகளும்.. பலமான கடற்படை.. விமானப்படை.. என்று எவ்வளவோ வசதிகளோடுதான் சிறீலங்காப் படையினர் களத்தில் நிற்கின்றனர். இதில் ஒன்று தகர்ந்தால் கூட அவர்களின் (குறுக்காலபோவன் அண்ணாச்சி இனங்காட்டிய) ஓர்மம் சிதைந்து சின்னாபின்னமாகும்..! :D

தமிழ் மக்களின் கடமை புலிகளைப் பலப்படுத்துவதுதான். புலிகளால் மட்டும் தான் சாதிக்க முடியும். அநாவசிய விமர்சனங்களை வைச்சு.. சிங்களப் படை ஓர்மத்தோட துள்ளி வருகுது.. தமிழர் அழிஞ்சினம்.. என்று கதையளக்காம.. இன்னொரு தளபதி நோக்கி கிளைமோர் நகர வழிவிடாமல் செய்ய உள்ள மாற்றுவழிகளை இனங்காணவும்.. புலிகளின் இராணுவ ஆளணி.. மற்றும் பொருளாதார பலத்தை அதிகரிக்கச் செய்து தமிழர்கள் தங்கள் இன இருப்பை ஈழத்தேசத்தில் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையே இன்றைய அவசியம். அதைவிட முக்கியமான ஒன்று.. களத்திலும் புகலிடத்திலும் உளவாளிகளை துவம்சம் செய்யும் நிலையை ஒவ்வொரு தமிழனும் உறுதியாக பொறுப்பாக்கிக் கொள்ளுதல்.

உளவாளிகள் பற்றிச் சந்தேகமோ.. தகவல்களோ கிடைப்பின் உடனுக்குடன் விடுதலைப்புலிகளுக்கு அறிவியுங்கள். குறிப்பாக களத்தில் உள்ள மக்கள்..! இது கிளைமோர்கள் வெடிப்பதில் குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கைக் குறைப்பைச் செய்யும்.. அத்தோடு.. கிளைமோர்கள் விமானத்தாக்குதல்களின் வீரியத்தின் ஏன் ஓர்மத்தின் அளவைக் கூட மாற்றி அமைக்கும். விடுதலைப்புலிகளுக்காக மட்டுமன்றி உங்கள் தேசத்தின் நலன் கருதி உங்கள் உறவுகளின் பாதுகாப்புக் கருதி.. தமிழர் தேசத்துள் ஊடுருவியுள்ள உளவாளிகளை இனங்காட்டும் பணியை உளப்பூர்வமான இதய சுத்தியுடன் அர்ப்பணிப்புடன் செய்ய முன்வாருங்கள்..!

தளபதிகள் போராளிகள் செய்யும் நகர்வுகள் பற்றிப் பிறரிடம் பேசாதீர்கள். உங்களுடன் நெருங்கிப் பழகி நம்பிக்கை வளர்த்தவர்கள் கூட உளவாளிகளாக இருக்கலாம். ஏன் உங்கள் கணவர் மனைவியர் காதலன் காதலி கூட அப்படி இருக்கலாம். எனவே இது தொடர்பில் ஒவ்வொரு தமிழின உணர்வுள்ள தமிழனும் உணர்ந்து செயற்படும் போது அதுவும் சிங்களவனின் கிளைமோர் ஓர்மத்தை (குறுக்காலபோவனின் பாசையில்) கட்டுப்படுத்த முக்கியமான ஒரு நடவடிக்கையாக அமையும்.. என்பது நிச்சயம்..! இது போராளிகளுக்கு போர்களத்தில் நின்று செய்யும் உதவியை விட மேலானதாக இருக்கும்..! :o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது நலனின் தேவைக்கு ஏற்பதான் எதிரியும் நண்பனும். அந்த வகையில் ஈழப்போராட்டத்தை அமெரிக்க நலனுக்காக பயன்படுத்த அமெரிக்க நினைக்கலாம்.. தமிழர்களுக்கும் அமெரிக்க உதவி தேவைப்படலாம். ஆனால் அமெரிக்கா எப்பவும் நமக்கு நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. காரணம்.. அமெரிக்க நலன் காலம், சூழல், தேவை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும்..!

உ+ம்: ஒரு காலத்தில் ஈராக்கின் சதாம் வெள்ளைமாளிகையின் செல்லப்பிள்ளை. இறுதியில் அதனாலேயே தூக்கிலும் போடப்பட்டார். :D:lol:

இதை தான் அமெரிக்க எதிர்பாளர்களுக்கு தெரியும். ஆனால் இதே போல ஓரு நிலையில் தமிழீழத்திலும் அது போன்ற செயல் நடந்தது :D:o . அப்போ புலிகள் அந்த முடிவை எடுக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும்?

Edited by tamillinux

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை தான் அமெரிக்க எதிர்பாளர்களுக்கு தெரியும். ஆனால் இதே போல ஓரு நிலையில் தமிழீழத்திலும் அது போன்ற செயல் நடந்தது :D:o . அப்போ புலிகள் அந்த முடிவை எடுக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும்?

நான் எடுத்தாண்ட உதாரணம் சமகாலத்தில் உலகம் அவதானிக்கக் கூடியதாவே அமெரிக்கா நடந்து கொண்ட ஒன்று தொடர்பானது. அது மக்களுக்கு கூடிய விளக்கம் அளிக்கக் கூடியது என்பதால். :lol:

ஒழிச்சுமறைச்சு அரைகுறையாச் சொன்னா.. உண்மையா பொய்யா என்று கூட இனங்காண முடியாது. அதெல்லாம் கருத்துப்பகர்வல்ல..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.