Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகம் கேளாத இனிய பாடல்கள்

Featured Replies

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

  • Replies 388
  • Views 71.1k
  • Created
  • Last Reply

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே "மந்தார மலரே மந்தார மலரே" இந்தப் பாட்டு இருந்தா ஒட்டிவிடுங்கோ.

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

Edited by Nada

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல..

பாடல்கள் எல்லாம் அருமை. சிலபாடல்கள் நான் இன்று வரை கேட்காதவை.கேட்க மிக இனிமையாக உள்ளது.

சில பாடல்கள் நல்ல பாடம். ஏனையவை தளத்தில் சுட்டவை தான். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

Song: thavikkuthu thayanguthu

Film: nadhiyai thEdi vandha kadal

Singers: Jayachandhran, S.P.Shailaja

MD: IR

Lyrics: Gangai Amaran

Song: http://www.dhool.com/cgi-bin/stream.pl?url...com/sotd/885.rm

Lyrics:http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=227

பழைய பாடலா புதிய பாடலா? இரண்டும் உள்ளது

பழைய பாடல் ஜெயசந்திரனுடையது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்,

மந்தார மலரே.. இங்கே..

Song: thavikkuthu thayanguthu

Film: nadhiyai thEdi vandha kadal

Singers: Jayachandhran, S.P.Shailaja

MD: IR

Lyrics: Gangai Amaran

Song: http://www.dhool.com/cgi-bin/stream.pl?url...com/sotd/885.rm

Lyrics:http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=227

நுணாவிலான், இது மிகவும் பிரபலமான பாட்டாச்சே.. நாங்கள் அதிகம் கேளாத இனிய பாடல்களையல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம். :lol: ஒருவேளை நீங்கள் இந்தப் பாடலை அதிகம் கேட்காமல் இருந்திருக்கலாம். :icon_mrgreen: உங்கள் வேட்டையை மேலும் தொடருங்கள். பாடலைத் தரும்போது தொடர் இலக்கம் இடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார். சிந்து நதியோரம் பாடல் சுமார் ரகம் என்று எனக்குப்படுகிறது. சுசீலாவும் ஜெயச்சந்திரனும் தங்களுக்கு வசதியில்லாத சுதியில் பாடுகிறார்கள். அதனால் இனிமை கெடுகிறது என்பது என் கருத்து.

மாலைமயங்கினால் பாடல் சிறீனிவாஸுடன் பாட ஷைலஜாவுக்கு நல்ல வாய்ப்பு.

யாராவது பிள்ளையார் படத்திலிருந்து "மரகத தோரணம் வாசலில் அசைந்திட மன்னவன் வரவு கண்டேன்" பாடல் வைத்துள்ளீர்களா? யேசுதாஸ், சுசீலா பாடியது!

ஈஸ், நானும் அப்படித்தான் நினைத்தேன். பல தடவை கேட்டபின் மெட்டு, குறிப்பாக சரணத்தில் இனிமையாக இருக்கிறது. சில தடவைகள் கேட்டுப் பாருங்களேன். :icon_mrgreen:

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் 9:

பாடல்: ஒரு காதல் சாம்ராஜ்யம்

படம்: நந்தா என் நிலா (1977)

இசை: வீ. தட்சிணாமூர்த்தி

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், ??

மிகவும் இனிமையானதொரு பாடல். ஜெயச்சந்திரனின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கீழ் ஸ்தாயியிலும் மேலேயும் பாட இனிமையாக உள்ள குரல் அவருடையது.

இனி பாடல் இங்கே..

டங்குவார்

நல்ல விடயம் செய்கின்றீர்கள். பாராட்டுக்கள் பல அருமையான பாடல்களைக் கேட்கக் கூடியதாகவிருக்கின்றது.

மேலும் நீங்கள் தற்போது இணைத்துள்ள ஒரு காதல் சாம்ராஜ்யம் என்ற பாடலில் பெண்குரல் கலா என்று நினைக்கின்றேன். இவர் அகத்தியர் படத்தில் இடம்பெற்ற தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற பாடல் பாடியவர். சில எம்ஜி ஆரின் படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மரகத தோரணம் வாசலில் அசைந்திட

பாடியவர்கள் கே.ஜே.ஜேசுதாஸ் சுசீலா

படம் பிள்ளையார்

http://rapidshare.com/files/87531027/Nada-...ha_Thoranam.mp3

நன்றி வசம்பு,

நீங்கள் சொல்வது சரியென்று நினைக்கிறேன். T.K.கலா தானே. அந்த நேரத்தில் ஞாபகத்துக்கு வரவில்லை. :mellow:

ஆமாம் T.K.கலா தான்.

டங்குவார் அண்ணா!!

எல்லா பாடல்களும் அருமை நீங்கள் இணைத்த பாடல்கள் ஒன்றையும் நான் இதுவரை கேட்கவில்லை நல்ல பாடல்கள் இனிமையான பாடல்கள் :o ...அத்தோட நேக்கு ஒரு கெல்ப் பண்ணுறியளோ எனக்கு ஒரு பாட்டு நல்ல விருப்பம் தொட்டாசிணுங்கி படத்தில இருந்து.. :rolleyes:

"மனமே தொட்டா சினிங்கி தானே

நிழலே உன் பின்னால் நிலையில்லை

நிலவே யாருக்கும் இங்கு முகமில்லை

கடல் தன் அலைகளை புரிந்ததில்லை

இது தான் உலகின் நியதியடி!!

நேக்கு இந்த பாட்டும் ரொம்ப பிடிக்கு நல்ல வரிகள் ஏலுமேன்றா இந்த பாட்டை தரமுடியுமா எல்லா இடத்திலையும் தேடி பார்தாச்சு எடுக்க முடியவில்லை :mellow: ...இதில ஆம்பிளை குரல் அன்ட் பொம்பிளை குரல் இருக்கு எதுவென்றாலும் பரவாயில்லை ..நன்றி டங்குவார் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

மிக்க நன்றி நடா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா அங்கிள் என்று பேபி சொல்லிவட்டுது இனியும் மருமகனுக்காக பாடலை இணைக்காமல் விட்டால் நல்லாஇல்லை.

அதனால் மருமகனுக்காக

ஆண்குரலில் மனமே தொட்டா சிணுங்கிதானே பாடல் ஆண்குரலில்

http://rapidshare.com/files/87569440/Nada-...anameThotta.mp3

பெண்குரல்தான் பிடிக்குமென்றால் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் தேவையென்றால் சொல்லுங்கள் மருமகனே

அப்ப நான் தரட்டா :னு :னு :னு :னு :னு

Edited by Nada

அட நேக்கு ரொம்பவும் பிடித்த பாடலை இணைத்தமைக்கு தாங்ஸ் நடா அங்கிள் :mellow: அது சரி உங்களுக்கு மகள் இருக்கே ஏன் கேட்கிறேன் என்றா சும்மா தான்...(மருமோண் என்று ஆசையா கூப்பிடுறியள் அது தான் :rolleyes: )..!!

இல்லை நடா அங்கிள் இது காணும் நீங்க கஷ்டபடவேண்டாம் தேடி :lol: ...ஆம்பிளை குரலில் தான் நான் மேல சொன்ன வரிகள் எல்லாம் வருது சூப்பர் வரிகள் எவ்வளவு நாள் தேடி நடா அங்கிள் மூலம் உந்த பாட்டு கிடைத்திருக்கு தாங்ஸ் நடா அங்கிள்!! :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்# 10

படம் : தனியாத தாகம்

பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகி

http://maravantu.blogspot.com/2005/12/1_12.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் 11:

பாடல்: தேனில் ஆடும் ரோஜா

படம்: அவர் எனக்கே சொந்தம் (1977)

இசை: இளையராஜா

பாடியவர்: P. சுசீலா

இளையராஜா இசையுலகுக்கு அறிமுகமாகி அடுத்த ஆண்டு வெளிவந்த படம் அவர் எனக்கே சொந்தம். இப்படத்தில் தேவன் திருச்சபை மலர்களே, சுறாங்கனி போனற பிரபலமான பாடல்களும் இடம்பெற்றன. தேனில் ஆடும் ரோஜா ஒரு இனிமையான இசைத்தாலாட்டு. படத்தில் ஒரு பெண் தன் மகளுக்காகப் பாடும் பாடல் இதுவென்றும் அக்கணத்தில் பிள்ளையில்லாத பக்கத்து வீட்டுப் பெண் ஏக்கத்துடன் பார்ப்பதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது.

பாடலின் தொடக்கமாக வரும் சந்தூர் இசை படம் முழுவதும் ஒரு நுட்பமாக உபயோகிக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ராஜாவின் பல பாடல்களில் இம்மாதிரியான ஒரு முறைமை இருப்பது வழக்கம்.

இப்போது பாடல் இங்கே..

நன்றி

Edited by Danguvaar

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

பாடும் அபாழுதெல்லாம் அதையேபாடு.

இந்தப் பாடலை ஒட்டி விடுங்கோ.

அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே,

இளையராஜாவுடன் ...... இந்தப்பாடலையும் ,

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓகோ

பொண்ணை தொட்ட உள்ளம்

இங்கும் இன்ப வெள்ளம்

எங்கே அந்த சொர்க்கம்.

இந்தப்பாடல் எனக்கு வேணும், டங்குவார்.

இறைவன்,

நீங்கள் கேட்ட இந்தப் பாடலை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும் பகுதியில் இணைத்திருக்கிறேன்.

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.