Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யா-எலவில் குண்டு வெடிப்பு - அமைச்சர் டி.எம்.தசநாயக்க பலி

Featured Replies

  • தொடங்கியவர்

இப்ப ஒரு மெய்க்காப்பாளரும் இறந்துவிட்டாராம்.

முதலில் வந்த செய்திகளில் அமைச்சருக்கு சிறுகாயத்துடன் அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார் என பாதுகாப்பு அமைச்சின் இணையமும், அமைச்சர் ஆபத்திலிருந்து தப்பியதாக சிறிலங்காவின் படைய இணையமும் தெரிவித்திருந்தன.

ஆனா இப்போது அமைச்சர் உயிரிழந்திருக்கிறார். உண்மையில் நம்பத்தான் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜா-எல க்ளைமோரின் உண்மையான இலக்கு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே என்கிறது புலனாய்வுத் துறை

ஜா-எல பிரதேசத்தில் நடிகை ருக்மனி தேவியின் உருவச் சிலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட க்ளைமோர் தாக்குதலின் இலக்கு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் டி.எம்.தஸநாயக்க பயன்படுத்திய லான்ட் க்ளுஸ்னர் வாகனத்தைப்

போன்ற வாகனத்தையே ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் (ஒரே நிறம்) பயன்படுத்துவதாகவும், அத்துடன் அவர் இந்தப் பாதையில் அடிக்கடிப் பயணிப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டு போதிலும், அவர் வழமையாக தமது லான்ட் க்ளுஸ்னர் வாகனத்திலேயே பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்தக் க்ளைமோர் குண்டு நடிகை ருக்மணி தேவியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் உள்ள பாழடைந்துள்ள காணியொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தக் க்ளைமோர் குண்டு தொலை இயக்கக் கருவியின் மூலம் இயக்கி வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

lankadissent.com/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் கீழ் மகிந்தவின் கிழக்கின் உதயம் திட்டத்திற்கு அமைய கிழக்கையும் சிங்கள பெரும்பான்மை மயமாக்கி மேன்மைப்படுத்த உழைத்த அமைச்சர் இவர் என்று மகிந்த புகழாரம் சூட்டியுள்ளார்.

It is no accident that Minister Dissanayaka who was targeted in this cowardly attack was spearheading the work of rehabilitation and reconstruction in the Eastern Province, since its liberation from the clutches of the LTTE by the armed forces of our country. As State Minister for Nation Building, he made it his mission to restore normalcy to the lives of all of our people in the Eastern Province, irrespective of ethnicity or religion, who had been living under the oppressive yoke of the terrorist LTTE for nearly two decades.

http://www.lankaenews.com/English/news.php?id=5189

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Lake House அருகாமையில் சிறிது நேரத்துக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை

:) சிறிலங்கா தேசத்துக்காக இறக்கும் அந்த தேசத்தின் புதல்வர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!! :)
  • கருத்துக்கள உறவுகள்

ஜா-எல க்ளைமோரின் உண்மையான இலக்கு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே என்கிறது புலனாய்வுத் துறை

இது புலனாய்வுத் துறை வெளியிட்டதோ, அல்லது அரசாங்கத்தின் செய்தி என்பது தெரியவில்லை. தாங்கள் பலமாக இருக்கின்றோம். ஜெயராஜ் பொனார்ண்டோப் பிள்ளையை இலக்கு வைத்தவர்கள், வேறு ஒருவரைத் தாக்கி நன்றாக ஏமாந்து விட்டார்கள் என்று காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இப்படியான தாக்குதலைச் செய்கின்றவர்கள் மூலம் சிங்கள மக்களுக்கு ஏற்படுக்கின்ற போர்ப் பயத்தைக் குறைத்து தெம்பை ஏற்படுத்தி, தமிழ்மக்களைக் கொல்வதற்கான வழிகளைச் சிங்கள அரசு கொண்டு செல்லலாம்.

நாளைக்குஒரு செய்தியாக , 4 நாட்களுக்கு முன் வந்த மகிந்த ராஜபக்சாவை இலக்கு வைத்துத் தான் கிளைமோர் வைக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்தினவர்கள் ஏமாந்து விட்டார்கள் எனச் சிங்கள அரசு சப்பை கொட்டலாம்.

Edited by தூயவன்

இது புலனாய்வுத் துறை வெளியிட்டதோ, அல்லது அரசாங்கத்தின் செய்தி என்பது தெரியவில்லை. தாங்கள் பலமாக இருக்கின்றோம். ஜெயராஜ் பொனார்ண்டோப் பிள்ளையை இலக்கு வைத்தவர்கள், வேறு ஒருவரைத் தாக்கி நன்றாக ஏமாந்து விட்டார்கள் என்று காட்டுவதற்காகத் தான் இப்படி ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.

இதன் மூலம், இப்படியான தாக்குதலைச் செய்கின்றவர்கள் மூலம் சிங்கள மக்களுக்கு ஏற்படுக்கின்ற போர்ப் பயத்தைக் குறைத்து தெம்பை ஏற்படுத்தி, தமிழ்மக்களைக் கொல்வதற்கான வழிகளைச் சிங்கள அரசு கொண்டு செல்லலாம்.

நாளைக்குஒரு செய்தியாக , 4 நாட்களுக்கு முன் வந்த மகிந்த ராஜபக்சாவை இலக்கு வைத்துத் தான் கிளைமோர் வைக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்தினவர்கள் ஏமாந்து விட்டார்கள் எனச் சிங்கள அரசு சப்பை கொட்டலாம்.

இது புலிவருகிறது என்ற கதையாகிவிடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள் எப்படிப் புலி வரும் என்று தெரியவில்லை.

அம்பாந்தோட்டையில் இராணுவ அணி மீதான தாக்குதலுக்கும், பொதுமக்கள் மீதான படுகொலைக்கும் ஜேவிபியினர் தான் காரணம் எனச் சிங்கள அரசு கைது செய்திருந்தது.

இதற்கும் ஜேவிபிக்காரர் பொறுப்பாக இருக்கலாம்.

யார் செய்தாலென்ன... நடப்பது ஒண்டும் நல்லதாப்படேல்ல... எல்லாரும் கொஞ்சம் கவனமாயிருப்பது நல்லதென்று அடியேனின் சின்ன அட்வைஸ்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.