Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் நாம் விடும் தவறுகள்

Featured Replies

தமிழழைப் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் நாம் விடும் தவறுகள் பற்றி இதில் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

இதை என்னால் மட்டும் செய்ய முடியாது. தமிழறிவு உள்ள கள உறவுகளும் கை கொடுத்தால்தான் முடியும்.

இன்றைக்கு தைத் திருநாள்.

இதற்கு "வாழ்த்துகள்" சொன்னவர்களை விட "வாழ்த்துக்கள்" சொன்னவர்கள் அதிகம்.

இது நாள் வரை நானும் "வாழ்த்துக்கள்" என்றே சொல்லி வந்தேன்.

ஆனால் அண்மையில் கலைஞர் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்ற திரைப்பட விழாவில், "வாழ்த்துக்கள்" என்ற பெயர் தவறு என்றும் அதில் "க்" வரக்கூடாது என்றும் சொன்னார்.

இப்பொழுது அப் படத்தின் பெயர் "வாழ்த்துகள்" என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இதை எம்மில் பெரும்பாலானோர் கவனிப்பது இல்லை. வானொலி, தொலைக்காட்சி, மேடை, ஊடகங்கள் என்று அனைத்து இடங்களிலும் "வாழ்த்துக்கள்" சொல்லி மகிழ்வோம்.

"வாழ்த்துக்கள்" என்று "க்" போட்டுச் சொன்னால் என்ன அர்த்தம் வரும்?

பனங்கள், தென்னங்கள் போன்று ஒருவகையான கள் என்ற அர்த்தம் வரும். அதாவது "வாழ்த்துக் கள்" என்று வரும்.

"வாழ்த்து" என்று சொல்லின் பன்மையை நாம் குறிக்க விரும்பினால், அங்கே "க்" வராது. வாழ்த்துகள் என்றே வரும்.

அதே போன்று "கருத்துக்களில் மாற்றங்கள்" என்பதும் தவறு.

"கருத்துகளில் மாற்றங்கள்" என்பதே சரி!

இதே போன்று தமிழில் நாம் நிறைய தவறுகளை அறியாது விடுகின்றோம். இவ்வாறான தவறுகளை இங்கே சுட்டிக் காட்டி எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

இதற்கு மற்றைய களஉறவுகளின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றேன்.

  • Replies 55
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவை அய்ரோப்பா என்று எழுதுவதும் தவறு தான். ஐயை நீக்க வேண்டும் என்று நினைத்துத் தமிழைச் சிதைக்க முனைபவர்கள், மெய்யெழுத்தோடு, ஐ புணர்ந்து வரும் அனைத்துச் சொற்களையும் பாவிக்க இயலாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கலை என்பது, கல்அய், விலை என்பது, வில்அய் என்றும், மரை என்பது மரஅய் என்று தான் பிறகு எழுத வேண்டும்.

  • தொடங்கியவர்

தூயவன் இங்கும் வந்து எமது பிரச்சனையை தொடர வேண்டுமா?

நான் "ஐரோப்பா" என்றுதான் எழுதுகிறேன். தந்தை பெரியார் முன்மொழிந்தார் என்பதற்கான அனைத்தையும் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படிப் பின்பற்றினால் அது பகுத்தறிவும் இல்லை.

தந்தை பெரியார் தமிழை இலகுபடுத்துவதற்காக சில முன்மொழிவுகளை செய்தார். ஆனால் இன்றைக்கு கணணியில் "அய்" என்று எழுதுவதை விட "ஐ" என்று எழுதுவதுதான் நேரம் குறைவானதும் இலகுவானதும் ஆகும்.

நான் இங்கே தொடங்கி வைத்தது வேறு ஒன்று. நீங்கள் சொல்வது வேறு ஒன்று.

தயவு செய்து இதற்குள் வந்து குழப்பாது, உங்களுடைய நல்ல பங்களிப்பை தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தவறாக எழுதுவதைப் பற்றிச் சொல்ல விழைகின்றபோது, இதை மட்டும் எப்படித் தவிர்க்க முடியும். அதுவும் பிழை தானே?

உங்களைக் குற்றம் சாட்டவில்லையே. பொதுவாகத் தானே சொன்னேன். தவறு விடுபவர்கள் திருத்திக் கொள்ளட்டும்.

  • தொடங்கியவர்

நாம் அறியாது விடுகின்ற தவறுகளைப் பற்றித்தான் நான் இங்கே எழுத விரும்புகின்றேன்.

"அய்ரோப்பா" எழுதுபவர்கள் தெரிந்துதான் அப்படி எழுதுகின்றார்கள். "தமிழில் தேவையில்லாமல் நிறைய எழுத்துக்கள் இருக்கின்றன, அவைகளை குறைக்க வேண்டும்" என்ற சிந்தனையோடு அவர்கள் அப்படி எழுதுகிறார்கள்.

அவர்கள் ஒரு மாற்றம் வேண்டி அப்படிச் செய்கிறார்கள். அது சரியா தவறா என்பது தனியான ஒரு விவாதம். ஆனால் அவர்கள் அறியாமல் அப்படி எழுதவில்லை.

அவர்கள் ஒளவையார் என்பதை அவ்வையார் என்று எழுதுவார்கள்.

அத்துடன் இதை தமிழ் இலக்கணம் அனுமதித்திருக்கிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

"போலி" (போல வருவது போலியாகும்) என்ற தலைப்பில் மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி, மொழியிறுதிப்போலி என்று மூன்று பிரிவாக இதைத் தமிழ் இலக்கணம் வகுக்கின்றது.

இதைத் தவறு என்று தமிழ் இலக்கணம் சொல்லவில்லை.

ஆகவே இந்தத் தலைப்பில் நாம் அறியாது விடுகின்ற தவறுகள் பற்றியே நான் தொடர விரும்புகின்றேன்.

தயவுசெய்து ஒத்துழைக்கவும்!

இப்படி பல தவறுகள் நமது அன்றாட வாழ்க்கையில் நடப்பது இப்போது இயல்பாகிவிட்டது. அதனை முடிந்தவரை தவிர்ப்பதே நம் மொழிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

பல வானொலிகள், தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள்; செய்திகளை வாசிப்பது என்று ஆரம்பிக்கின்றார்கள். அவர்களுக்கே தாம் உயர்திணையா, அஃறிணையா என்ற சந்தேகமுள்ளது போலுள்ளது. உண்மையில் செய்திகள் வாசிப்பவர் என்றே ஆரம்பித்திருக்க வேண்டும்.

Edited by Vasampu

சபேசன் உந்த க் விவகாரம் போல் பல பிழைகள் விடுகிறனான். உதுகளிற்கு பொதுவாக விதிகளை பட்டியில் இட்டால் நல்லம். கணனியில் தமிழில் இலக்கண பிழைசுட்டிகாட்டி (grammar checker) ஒன்று உருவாக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

வசம்பு சுட்டிக்காட்டியது போன்று செய்திகள் வாசிப்பது.. என்று சொல்லி ஒரு நபரின் பெயரைக் குறிப்பிடுகின்ற வழக்கம் அனைத்து தொலைக்காட்சி வானொலிகளிலும் உள்ளது.

இதிலே எனக்கு சிறு சந்தேகம் உண்டு.

"திணைபால் வழுவமைதி" என்று ஒரு விடயம் இருக்கிறது.

உதாரணம்: மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா

இங்கே மூர்க்கன் என்ற உயர்திணை "விடா" என்று அஃறிணையோடு முடியும்.

இப்படியான திணைபால்வழுவமைதிக்குள் இந்த "செய்திகள் வாசிப்பது..." என்பது அடங்குமா என்று சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இப்பொழுது நாம் விடுகின்ற இன்னும் ஒரு தவறு பற்றி சொல்கிறேன்.

"சின்னத் திரை"

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி பேசுகின்ற போது வெகு இயல்பாக பயன்படுத்தப்படும் சொல் இது. ஆனால் இது தவறான சொல் ஆகும்.

"சின்ன திரை" என்பதுதான் சரி. "த்" இங்கே வரக் கூடாது.

ஏன் வரக் கூடாது?

இதை விளக்க ஒரு சொல்லை உதாரணம் எடுப்போம்

"வண்ணத் திரை" : இதனுடைய அர்த்தம் வண்ணம் உள்ள திரை என்பதாகும்.

சின்னத் திரை": இதனுடைய அர்த்தம் சின்னம் உள்ள திரை என்பதாகும்.

"சின்னம்" என்ற ஒரு சொல் இருக்கின்றது. அச் சொல் திரை என்ற சொல்லுடன் இணையும் போதுதான் "சின்னத் திரை" என்று வரும்.

ஆகவே "சின்னத் திரை" என்று சொன்னால் அதனுடைய அர்த்தம் மாறி விடுகிறது.

நாம் குறிப்பிடுகின்ற "சின்ன" என்ற சொல் "சிறிய" என்பதன் மருவலாகும்.

சிறிய திரை = சின்ன திரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே போல அப்துல் கமீதுவை ஈயடிச்சான் காப்பி அடிக்கும் ஜிப்ரி, அபர்ணா சுதன், ஈஸ்வரதாசன் போன்ற "அன்பு அறிவிப்பாளர்களும்" நடத்தியது என்பதை நடாத்தியது என்கிறார்கள். இதில் எது சரி?

Edited by me_tamilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிலர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றார்கள்.

சபேசன் முழு விதிகள் அல்லது விதிவிலக்குகளை பட்டியல் இடச்சொல்லிக் கேட்டா பொங்கலுக்கு பயறு போட்டமாதிரி தொட்டன் தொட்டனாக உதாரணம் தாறியள்.

  • தொடங்கியவர்

முதலில் இப்படி உதாரணங்களை சொல்வது நல்லது என்று நினைக்கின்றேன். இப் பொழுதே விதிகளை எழுதினால் ஏதோ இலக்கணப் பாடம் மாதிரி இருக்கும். எத்தனை பேர் ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் இப்படி சில சொற்களை உதாரணம் தருவதுதான் படிப்பவர்களை கவரும் என்று நினைக்கிறேன்.

வணக்கம் சபேசன் அண்ணா

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து பார்ப்பவன் நான். ஆனால் கருத்துக்கள் எதுவும் எழுத விரும்புவது இல்லை.ஆனால் இம்முறை எழுதுகிறேன்.ஏனென்றால் நான் நேசிக்கும் தமிழ் பற்றியது என்பதால்...

விடயத்துக்கு வருவோம்

செய்திகள் வாசிப்பது என்பது முற்றிலும் தவறானது. அது வசம்பன் அண்ணா சொன்னதுபோல்

உயர்திணை சொல் அல்ல. செய்திகள் வாசிப்பவர்(இரு பாலாருக்கும் பொருந்தும்) என்பதுதான் சரியானது.

சின்னத்திரை என்பது சின்னம்+திரை அல்ல, சின்னன்+ திரை= சின்னத்திரை (சின்னனாக உள்ள திரை)

உ+ம் , சின்னன்+தம்பி = சின்னத்தம்பி பெரிய+தம்பி= பெரியதம்பி

சின்னன்+கடை = சின்னக்கடை பெரிய+கடை = பெரியகடை

க்,ச்,ட்,த்,ப்,ற் இந்த வல்லின எழுத்துக்கள் மெல்லின,இடையின மெய்யெழுத்துக்களுடன்

சேரும் போது அவ்வெழுத்துக்கள் அங்கே தோன்றும்.

சின்னன்+மாமி = சின்னமாமி பெரிய+ மாமி = பெரியமாமி

சின்னன்+ வெங்காயம் = சின்னவெங்காயம் பெரிய+ வெங்காயம் = பெரியவெங்காயம்

தமிழ் என்ற எழுத்துக்குள் வல்லினம்,மெல்லினம்,இடையினம் மூன்றும் இணைந்துள்ளது.வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு மட்டும்தான் உண்டு.

மீண்டும் சந்திப்போம்.

மருமகன்

பேசாமல் நீங்கள் எழுதாமலேயே இருந்திருக்கலாம். காரணம் நீங்களும் குளம்பி மற்றையவர்களையும் குளப்ப முயல்கின்றீர்கள்.

உயர்திணை, அஃறிணை என்பதனையும் ஆண்பால், பெண்பாலையும் தவறான புரிதல் அடிப்படையில் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.

உ+ம் : ஆசிரியன்-ஆண்பால், ஆசிரியை- பெண்பால், ஆசிரியர்- பொதுப்பால்

அதே போல் சிறிய + திரை = சின்னதிரையே யொழிய நீங்கள் எழுதியது போல் சின்னன் + திரையல்ல சின்னன் என்பது பேச்சு வழக்கிற்கு மட்டுமே பாவிப்பது.

உ+ம்; தேங்காய் = தேங்கு + காய் அல்ல தென்னை + காய் தான்.

  • தொடங்கியவர்

மருமகன்,

"சின்னன்" என்பது பேச்சு வழக்கில் உள்ள ஒரு கொச்சைச் சொல். "சிறிய" என்பதன் மருவல் "சின்ன"

அத்துடன் நீங்கள் சொன்னது மாதிரியான புணர்ச்சிகள் நான் அறிந்தவரை தமிழில் இல்லை.

நீங்கள் சொன்னது போன்று பார்த்தாலும் இப்படித்தான் வரும்

சின்னன் + திரை = சின்னற்றிரை

சின்னன் + தம்பி = சின்னற்றம்பி

சின்னன் + அம்மா = சின்னனம்மா

இலக்கணத்தில் "மெய்யீற்றுத் திரிபுகள்" என்ற பகுதியில் இதனுடைய விளக்கத்தை நீங்கள் அறியலாம்.

நிலைமொழியில் "ம்" என்பது இறுதியாக வந்து வருமொழியில் "த்" என்பது தொடக்கமாக இருந்தால், "ம்" என்பது "த்" என்று திரியும்.

உதாரணங்கள்

வண்ணம் + திரை = வண்ணத் திரை

வண்ணம் + தோட்டம் = வண்ணத் தோட்டம்

நீலம் + தலை = நீலத் தலை

காலம் + தடை = காலத் தடை

சின்னம் + திரை = சின்னத் திரை

நல்ல விடயம்.. தொடருங்கள்.. பலசமயங்களில் தவறானவைகளை வாசிப்பதனால் தவறாகவும் எழுத நேரிடுகிறது. இதேபோல.. ல, ழ.. பாவனை விவகாரம்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.. தொடருங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க O/L க்கு 40 MCQ செய்வதற்காக மட்டும் படித்த கொஞ்ச இலக்கணம் தான். அதுகூட மண்டையை விட்டு மாயமாய் மறைந்துவிட்டது.

சரி சபேசன் அப்போ சின்ன + திரை என்ற இரு சொற்களை சேர்த்து ஒரு சொல்லாக எழுதவே தமிழ் இலக்கணத்தில் இடமில்லையா?

ஆனால் சொல்லும் போது "த்" விழாவிட்டால் அந்த நயமே கெட்டுவிடுமே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. :wub: பூனை படுத்திட்டுதெண்டால் பெருச்சாளி கில்லி விளையாடக் கூப்பிடுமாம்..! :wub:

ஐயாமாரே.. சின்னத்திரை, சின்னதிரை எல்லாமே தவறு. புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் இதை அணுகவேண்டும்.

நிலைமொழி: சிறுமை

வருமொழி: திரை

நிலைமொழி+வருமொழி ==> சிறுமை+திரை

ஈறுபோதல் என்றவிதிப்படி நிலைமொழியின் ஈற்றிலுள்ள 'மை' அழிந்து

சிறு+திரை ஆகும். அதற்குமேல் மாறாது. ஆகவே சிறுதிரை என்பதே சரி.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... நல்ல விடயம் எழுதியிருக்கெண்டு வந்து பார்தால், ஒவ்வொருத்தரும் மாறி மாறி எழுதி இருக்கிறதையும் குளப்பி வீடுவீர்கள் போலுள்ளது. பறவாயில்லை தொடருங்கோ.

நடாத்துனர் / நடத்துனர்சரியானது?

வணக்கம் வசம்பண்ணே

நீங்கள் சொன்னால் சரிதான் நான் எழுதாமல் இருப்பதுதான் நல்லம்.

இனிமேல் இதில் எழுதமாட்டேன்.

வாசிப்பது ------ அஃறிணை ஒன்றன்பால்

வாசிப்பதுகள்---------- அஃறிணை பலவின்பால்

வாசிப்பவன் -------- உயர்திணை ஆண்பால்

வாசிப்பவள் ---------- உயர்திணை பெண்பால்

வாசிப்பவர் ------------- உயர்திணை பொதுப்பால்( ஒருமை)

வாசிப்பவர்கள்---------- உயர்திணை பொதுப்பால் ( பன்மை )

இதை வாசித்துப் பாருங்கள் நான் எழுதியதின் அர்த்தம் புரிந்திருக்கும்.

புரியவில்லையா? மன்னித்துக்கொள்ளுங்கள்.

தேங்காய் ----- தெங்கு+ காய் ( தேங்கு+காய் அல்ல) சரிதானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவு படிப்பிச்சு முடிஞ்சுது இப்பதமிழ் படிப்பிக்க வெளிக்கிட்டாச்சு!நல்ல விடயம் உண்மையாக மனதார வரவேற்கின்றேன்.

ஆனால் இந்த பகுதிக்குரியவரின் ஒருசில விளக்கங்களை பார்க்கும் போது எனக்கு தமிழ் இலக்கணம் கற்றுவித்த சட்டாம்பியாரை பார்த்து நாக்கை பிடுங்கி சாகிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது. :lol::D:D:lol:

அவரின் உள்நோக்கம் தெரியாமல் ஒருசிலர் பாராட்டுக்கள் வேறு கொடுக்கின்றனர். :)

இப்பகுதிக்குரியவரின் போலிமுகம் வெகு விரைவில் கிழித்தெறியப்படும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த பகுதிக்குரியவரின் ஒருசில விளக்கங்களை பார்க்கும் போது எனக்கு தமிழ் இலக்கணம் கற்றுவித்த சட்டாம்பியாரை பார்த்து நாக்கை பிடுங்கி சாகிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலுள்ளது.

என்ன கேள்வி கேட்க போறிங்க

  • தொடங்கியவர்

மருமகன்,

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

"செய்திகள் வாசிப்பது..." என்ற விடயத்தில் வசம்பு சொன்னதோ, அல்லது நீங்கள் சொன்னதோ தவறு என்று சொல்லவில்லை. அநேகமாக உங்கள் இருவருடைய கருத்தும் சரியாகத்தான் இருக்கும்.

என்றாலும் "திணைபால்வழுவமைதி" என்பதன் காரணமாக எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் "சின்னத் திரை" என்பதற்கு நீங்கள் தந்த விளக்கம் (சின்னன் திரை) தவறு.

அதே வேளை "தேங்காய்" என்பதை நீங்கள் பகுத்த விதம் சரி என்பதுதான் என்னுடைய கருத்து

தென்னை + காய் = தென்னங்காய்

தெங்கு + காய் = தேங்காய்

அடுத்தது டங்குவார் சொன்னதைப் பார்ப்போம்.

சின்ன" என்பது ஒரு கொச்சையான சொல். அந்த வகையில் "சின்ன திரை" என்பதும் தவறு என்று சொல்வது ஏற்கத்தக்கதுதான்.

ஆனால் நான் இங்கே சொல்வது "சின்னத் திரை" என்று "த்" போட்டு சொல்கின்ற போது, அதனுடைய அர்த்தமே மாறி விடுகின்றது என்பதைத்தான்.

"சிறிய திரை" என்பதைத்தான் "சின்ன திரை" என்று சொல்வார்கள். அந்த வகையில் "த்" வராது. இதைத்தான் நான் சொல்கிறேன்.

இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும். நான் ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். இப் பகுதியயை என்னால் மட்டும் தனியாகத் தொடர முடியாது. நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்ல. மற்றைய கள உறவுகளும் இணைந்தால்தான் சரியாக செய்யலாம்.

ஆகவே எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை பதிந்து விவாதித்து தீர்வு காண்பதுதான் சிறந்தது.

புதிதாக வேறு ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

நாம் எல்லோரும் "அல்ல" என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகின்றோம். நானும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் எல்லோரும் தவறாகப் பயன்படுத்துகின்றோம்.

மேலே நான் எழுதிய ஒரு வசனத்தைப் பார்ப்போம்.

நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்ல - இது தவறு

நான் ஒன்றும் தமிழ்ப் பேராசிரியன் அல்லன் - இதுதான் சரி

அவள் நல்ல பெண் அல்லள் - பெண்பால் என்றால் "அல்லள்" என்றும் பலர்பால் என்றால் "அல்லர்" என்றும் வரும்.

"அல்ல" என்பது அஃறிணையின் பன்மைச் சொற்களுக்கு மட்டும்தான் வரும்.

உதாரணம்

மரத்தில் இருப்பவை குரங்குகள் அல்ல (பன்மை)

ஒரு குரங்கு என்றால் "அன்று" என்று வரும்

மரத்தில் இருப்பது குரங்கு அன்று (ஒருமை)

இதிலே இன்னும் ஒரு முக்கியமான விடயம் உண்டு. "அல்ல - அன்று" போன்றவை வருகின்ற போது வசனம் முடியாது.

மரத்தில் இருப்பவை குரங்குகள் அல்ல, அவைகள் பறவைகள்.

மரத்தில் இருப்பது குரங்கு அன்று, அது ஒரு பறவை.

அதாவது "அல்ல" என்று சொல்கின்ற போது, மறுக்கப்பட்ட விடயம் எது என்று சொல்ல வேண்டும்.

"இல்லை" என்று சொல்கின்ற போதுதான் வசனம் முடியும்.

மரத்தில் பறவைகள் இல்லை.

(கவிதைகளில் "அல்ல" பாவிக்கின்ற போது, வசனத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மிகுதியை வாசகரிடம் விடலாம்)

அச்சியந்திர காலத்துக்கு முன் எழுத்திலக்கியத்துக்கு மட்டுமல்ல பிறப்புக்கும் இறப்புக்கும் நோய்க்கும் மருந்துக்கும் சாத்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் பாடல்கள்தான் வரி வடிவம் கொடுத்தன. அதனால், தொல்காப்பிய இலக்கண விதிமுறைகள் ஏறக்குறைய முழுவதும் செய்யுள் அமைப்புக்கானதே அன்றி உரைநடைக்குரியது அல்ல.

நவீன தமிழ் உரைநடைக்கு வரலாறு அதிக பட்சம் இரண்டு நூற்றாண்டைத்தாண்டாது. பொதுவாக செய்யுள்களில் ஓசைநயத்துக்காக சொற்களை இணைப்பதால் புணர்ச்சி விதிகள் தெளிவாக இல்லாவிட்டால் பொருள் மயக்கம் அல்லது குழப்பம் வர வாய்ப்புகள் அதிகம். செய்யுள் மொழிக்காக வகுக்கப்பட்ட இலக்கண விதிகளை உரைநடைக்குள் நிறுவமுனையும் போது பல இடங்களில் அமைதி கண்டாலும் சில இடங்களில் நெருடவே செய்கின்றன.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு சொல்ல கனதூரம் போகவேண்டியதில்லை. ஏற்கனவே விவாதத்தில் இருக்கும் 'சின்னத்திரை' அல்லது 'சின்ன திரை' சிறப்பான உதாரணமாகும். சின்னத்திரை என்பதை பிரித்தேயாக வேண்டுமென்றால் சின்ன + திரை என்பதே மிகப்பொருத்தமானது. சின்னன்+திரை என்பதும் சின்னம்+திரை என்பதும் பொருள் குழப்பம் உடையன. அடுத்து 'சின்னத்திரை' சரியா அல்லது 'சின்ன திரை' சரியா என்பதைப்பார்ப்போம்.

என்னால் இப்போ நினைவு கூர முடியவில்லை அதை தொடக்கியது குமுதமா விகடனா அல்லது வேறு பத்திரிகையா என்பதை. ஆனால் சமாச்சாரம் ஒன்றும் ரொக்கெற் விஞ்ஞானம் அல்ல. உரைநடையில் சொற்களை உடைக்கும் போது 'சின்னத்திரை' என்பதை 'சின்ன திரை' என்பதாக எழுதுவதாகும். 'சின்ன' என்பது பேச்சு வழக்கு சொல்லாகினும் அதற்கு தனித்த அர்த்தம் உண்டு.

சில உதாரணங்கள்

வகை-1

என்பதைப்பார்ப்போம் = என்பதை பார்ப்போம்

நூற்றாண்டைத்தாண்டாது = நூற்றாண்டை தாண்டாது

வகை-2

சமாச்சாரமொன்றும் = சமசாரம் ஒன்றும்

குழப்பமுடையன = குழப்பம் உடையன

வகை-3

பாகல் காய் 'எனவெழுத' முடியாது = பாகல் காய் 'என எழுத' முடியாது

அனுகூலங்கள்' நிறையவுண்டு' = அனுகூலங்கள் ' நிறைய உண்டு'

வகை-4

பார்த்ததில்லை = பார்த்தது இல்லை

வகை-5

பொருட்குழப்பம் = பொருள் குழப்பம்

பெருங்கடல் = பெரும் கடல்

அந்த பகற்பொழுது போயிற்று = அந்தப்பகல் பொழுது போயிற்று.

(இவைகளில் சுவாரசியமான ஒரு நுண்ணிய பொருள் மாற்றமும் நிகழ்கிறது)

வகை-6

பாவற்காய் = 'பாவல் காய்' என எழுத முடியாது.

அகல்விளக்கு = அகல் விளக்கு (அகற்விளக்கு என எழுதுவது தவறு)

பொருட்குழப்பம் வராதபடி இவ்வகையாக சொற்களை புணர்த்தாமல் தனித்தனியாகவும் தேவையாயின் புணர்த்தி கூட்டாக எழுத அனுமதிப்பது தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

'தமிழ்ச்சொற்கள்' என்பதை 'தமிழ்ச் சொற்கள்' என்பதைவிட 'தமிழ் சொற்கள்' என்றெழுதுவதால் 'கூகிள்' பெருங்கடலில் அகல நீந்த வாய்ப்பு இருப்பினும் ஆழ நீந்த தேடல் தொழில் நுட்பம் இன்னும் அகலப்படுத்தப்பட வேண்டும்.

கூகிள் தேடலின் முடிவுகள் சொல்லும் தொகை இன்றைய நிலவரம்.

1. தமிழ்ச்சொற்கள் ----> 1090

2. தமிழ்ச் சொற்கள் ----> 13400

3. தமிழ் சொற்கள் ------> 213000

இனிவரும் காலத்தில் வாசிப்பு என்பதும் ஒரு திரை சார்ந்த நிகழ்வாகவும் அனுபவமாகவும் தீவிரமாக மாறிவிடும் என்பதால், வாசகன் தனக்குரிய முறையில் எழுத்தாக்கங்களை கண்களின் பார்வைக்கு கொண்டுவர, சொற்களை பொருட்குழப்பம் வராதபடி உடைந்து எழுதுவதில் அனுகூலங்கள் சில உண்டு.

ஆக,

இலக்கண விதிமுறைகளை மென்மையாக கையாளுதல், தேவைக்கேற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி கொள்ளல் கணினி தொழில் நுட்பவளர்ச்சியின் அதியுட்ச பலாபலன்களை உள்வாங்க தமிழுக்கு வாய்ப்பாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.