Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டால்த்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் புலம்பெயர் தேசத்தில் நடந் உண்மைச்சம்பவங்கள் பலவற்றை முன்னர் கதையாக்கியிருந்தேன் அவற்றின் பதிவுகள் வைத்திருக்கவில்லை இந்தக் கதையும் நான் யாழில் போட்டிருந்ததுதான் இன்று கூகிழில் மேய்ந்த பொழுது இந்தக் கதை கிடைத்தது இப்போ பல புதியவர்கள் யாழில் இருப்பதால் திரும்ப இதை இணைக்கிறேன்

நன்றி

புதன்கிழமை, 31 ஆவணி 2005 யாழ்

பட்டால்த்தான்

கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன். எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி... அதுக்கு பிறகு நாலு நாளா ஆளைக் காணேல்லை. உன்ரை கான்ட் போனுக்கும் அடிச்சுப்பாத்தன். வேலை செய்யேல்லை. என்னடா உன்ரை கோலம்? தலைமயிருக்கு கலரும் அடிச்சு... காதிலை தோடு... கோலம் மாறிப்போய் வந்திருக்கிறாய். எங்கை போனனி?"

"இல்லை மச்சான் சிவா. ஒரு கிழைமை லீவுதானே... அதுதான் நானும் இவள் நத்தாசாவும் கொலண்டுக்குப் போனனாங்கள். இப்பதான் வந்தனாங்கள். அதுதான் என்ரை கான்ட் போனையும் நிப்பாட்டி வைச்சிருந்தனான். அது சரி... நீயென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?"

"அது ஆர் நத்தாசா?"

"அது தான் மச்சான் அண்டைக்கு என்னேடை பஸ்சிலை கண்டாய், அவள்தான்.."

"ஓ சண்முகநாதா! அந்த ஊதினா பறந்து போற மாதிரியொருத்தி... உயரமா வெள்ளை தலைமயிர்... அவளோ?"

"ஓம்... அவள்தாண்டா சிவா."

"அது சண்முகநாதன்...."

"நிப்பாட்டு மச்சான். எத்தினைதரம் சொல்லியிருக்கிறன், என்ரை முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிடாதையெண்டு. சண் எண்டு சுருக்கமா கூப்பிடு. உன்னாலை என்ரை பிரெஞ்சுகார சினேகிதர் எல்லாம் என்னை நக்கல் அடிக்கிறாங்கள். உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் கேட்கமாட்டாய்."

"சரி சரி. சண் கேவிக்காதை. பழகிப்போட்டுது. அதுதான்ரா சின்னனிலையிருந்து நீயும் நானும் சினேகிதம். கூப்பிட்டுப் பழகிப்போட்டுது. அதுசரி. பிரெஞ்சுகாரனும்தான் கல்லு, மண், முட்டாள் எண்டு பேர் வைச்சிருக்கிறான். அதை நாங்கள் நக்கலடிக்கிறமா? அதைவிடு. நானும் நீ ஏதோ பொழுது போக்கா உந்த வெள்ளையளோடை சினேகிதமா திரியிறாய் எண்டுதான் நினைச்சனான். ஆனா உன்ரை போக்கு பிழையாய் தெரியிது. சொல்லுறனெண்டு கோவிக்காதையடா. ஊரிலை உன்ரை மனிசி... பிறந்து இன்னமும் நேரை உன்ரை முகத்தைப் பாக்காத உன்ரை பிள்ளை. உதுகளை விட்டிட்டு நீ வெள்ளைக்காரிக்கு பின்னாலை திரியிறாய். அதுகள் பாவமல்லோ?"

"ஆஆ... தொடங்கிட்டான்ரா... மச்சான் சிவா, உன்ரை புத்திமதியைக் கொஞ்சம் நிப்பாட்டு. ஏதோ அந்த நேரம் வீட்டுக்காரர் கலியாணம் செய்யச் சொன்னதாலை தெரியாத் தனமா கட்டிப்போட்டன். அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்? மனிசி பிள்ளையை இஞ்சை கூப்பிடச் சொல்லுறியா?.உனக்கே தெரியும் என்ரை மனிசி ஒரு சுத்த பட்டிக்காடு அதுக்கு இஞ்சத்தைய நாகரீகங்கள் சரிவராது அதை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்? அதுமட்டுமில்லை, பிரெஞ்சுக்காரியை பிடிச்சாத்தான் மச்சான் பாசையும் கெதியா பிடிக்கலாம். வேணுமெண்டா நீயும் ஒண்டு பிடியன்.."

"...."

"அண்டைக்கு படம் அனுப்பியிருக்குதுகள். மனிசி எண்ணை வைச்சு தலையை வழிச்சிழுத்து... பிள்ளைக்கு நெத்தியிலை கன்னத்திலை மூக்கிலையெண்டு பொட்டு வைச்சு... வாழைப் பாத்திக்கை நிண்டு படம் எடுத்து அனுப்பியிருக்கிதுகள். என்னெண்டு கேட்டா கதலி வாழை குலைபோட்டு வடிவாயிருக்காம். அதுதான் படமெடுத்தவையாம். அப்ப இதுகளை இஞ்சை கூப்பிட்டு என்ன செய்ய சொல்லுறாய்?"

"அடேய் சண்... உன்ரை கதையைப் பாத்தால் எங்கடை அரைவாசிப்பேர் வெளிநாட்டுக்கு வந்திருக்கேலாது. ஏன் நீகூடத்தான் ஊரிலை நீ எப்பிடி திரிஞ்சனியெண்டு கொஞ்சம் நினைச்சு பாத்தனியே? ஏதோ எங்கட சனம் இங்கை வந்து இந்த நாடுகளிற்கும் ஏத்தமாதிரி தங்களைக் கொஞ்சம் மாத்திகொண்டுதானே வாழுதுகள். நான் முடிஞ்சா பாசையை படிச்சு பிடிக்கிறன். இல்லாட்டி தெரிஞ்சதை கதைச்சுப்போட்டு போறன். உப்பிடித்தான் பாசை பிடிக்கவேணுமெண்டில்லை... உன்ரை மனிசி பட்டிக்காடு என்டுறாய். அந்தப் பட்டிக்காட்டாள் தந்த சீதன காசிலைதான் நீ வெளிநாடு பாத்தனி. அதைவிட உனக்கு ஒண்டரை வயசிலை ஒரு பொம்பிளைப் பிள்ளையும் இருக்கு. உன்ரை மனிசி உன்னிலை எவ்வளவு அன்பிருந்தபடியா உன்ரை பேரையே சுருக்கி உன்ரை மகளுக்கும் சண்முகி எண்டு பேர்வைச்சிருக்கும். கொஞ்சம் யோசி மச்சான்."

"சிவா, எனக்கு உன்ரை புத்திமதி கேக்க நேரம் இல்லை. உன்ரை மனிசி வரப்போகுதெண்டு சொன்னனி. அதாலை நானும் உன்னோடை இனி வீட்டிலை இருக்கேலாது. நானும் நத்தாசாவும் ஒரு வீடு எடுத்திருக்கிறம். நேரம் கிடைக்கேக்கை நான் வந்து என்ரை சமான்களை எடுக்கிறன். அதை சொல்லத்தான் வந்தனான். போட்டுவாறன்."

"டேய் சண். கோவிக்காதை. ஏதோ நல்ல சினேதன் எண்ட உரிமையிலை கனக்க கதைச்சுப்போட்டன். வந்தனி பங்குஆட்டிறைச்சி வாங்கி கறிவைச்சிருக்கிறன். சாப்பிட்டு போவன். ஏதோ உன்ரை புத்திக்கெட்டினபடி நட."

"சிவா, இதுதான்... இதுதான்... பங்குஆடு... மாதக் கடைசியிலை சீட்டு, வட்டி, கலியாணம், காதுக்குத்து எண்டு இப்பிடியே வாழ்ந்து கொண்டிருங்கோ. நான் போட்டுவாறன்."

சண் கோபமாக வெளியேறினான். 'கடவுளே! நீதான் இவனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேணும்' என்று நினைத்தபடி தான் மனைவிக்கு எழுதிக்கொண்டிருந்த கடிதத்தை தெடர்ந்தான் சிவா.

சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வரவேற்பு வீட்டில், "ஹாய் சிவா!" என்று ஒரு குரல்.

சிவா திரும்பிபாத்தான்.

"டேய் சண், எப்பிடியடா இருக்கிறாய்? உன்னைக் கண்டு கனகாலம். என்ரை மனிசி வந்ததுக்கு... மற்றது பிள்ளை பிறந்ததுக்கு எண்டு உனக்குச் சொல்லுவமெண்டு உன்ரை கான்ட் போனுக்கு அடிச்சனான். வேலை செய்யேல்லை. வேறை ஆக்களையும் விசாரிச்சனான். நீ வேறை இடத்தை போட்டாயெண்டு சொன்னாங்கள். எப்பிடியிருக்கிறாய்? எங்கை உன்ரை நம்பரைத் தாவன். உன்ரை வீட்டுக்காரரும் உன்னை தேடி என்னட்டை அடிக்கடி விசாரிச்சபடி..."

"வீட்டுகாரரின்ரை கரைச்சல் தாங்கேலாமைதான் சிவா நான் நம்பரை மாத்திப்போட்டன். என்ரை நம்பரைத் தந்தா நீ கட்டாயம் வீட்டுகாரரிட்டை குடுத்துடுவாய். உன்ரை நம்பர் என்னட்டையிருக்குதானே? ஏதும் தேவையெண்டால் நான் அடிக்கிறன். மற்றது தற்செயலா அண்டைக்கு இவன் ரவி கண்டிட்டு தன்ரை கலியாணத்திற்கு கட்டாயம் வரவேணுமெண்டு அடம் பிடிச்சான். நத்தாசாவும் எங்கட கலியாணத்தைப் பாக்க வேணுமெண்டு கேட்டாள். அதுதான் வந்தனான்" என கூறிக்கொண்டிருக்கும்போதே நத்தாசா அங்கு வந்தாள். சிவா தன்னையும் தன்மனைவி பிள்ளையையும் அவளிற்கு அறிமுகம்செய்து வைத்தான்.

விருந்து தொடங்கியது. பலவகை மதுக்களும் பரிமாறப்பட்டது. இசை மெல்லமெல்ல உயரத் தெடங்க கொஞ்சம் கொஞ்சமாக பலரும் நடனமாடத் தொடங்கினர். நத்தாசாவும் சண்ணும் ஆடத் தொடங்க அவர்களே அந்த விருந்தில் முக்கிய பாத்திரமானார்கள்.

பலரின் கண்களும் அவர்களையே பார்த்தபடியிருந்தன.

"என்ன சொன்னாலும் சண் மச்சகாரண்டா... பார். பிடிச்சாலும் பிடிச்சான் புளியம் கொம்பா பிடிச்சிருக்கிறான்" என்று ஒருவர் கூறியது சண்ணின் காதில் விழுந்தது.

இன்னெருவர், "அங்கைபார்... வளவளவெண்டு உடம்பு... என்னமா ஆடுறாள்? நீயும் இருக்கிறியே சோத்தை திண்டு திண்டு அரிசி ழூட்டை மாதிரி... ம்ம்ம்.. சண் குடுத்து வைச்சவன்" என்றார்.

சண்ணிற்கோ தலைகால் புரியாத மகிழ்ச்சி. மட மடவென்று விஸ்கியை உள்ளே இறக்கிக்கொண்டு விழுந்து பிரண்டு ஆடிக்கொண்டிருந்தான்.

மறுநாள் மதியம் நத்தாசா சண்ணை நித்திரையிலிருந்து எழுப்பினாள்.

"சண், எழும்பு. வெளியிலை போய் ரெஸ்ரோரண்டிலை சாப்பிட்டிட்டு இரவுக்கு நாங்கள் வழமையா போற கிளப்பிற்கு போகலாம்."

சண் தலையை நிமிர்த்திப் பாத்தான்.

"ஆஆ... தலையிலை கல்லை வைச்சமாதிரி பாரமா இருக்கு. ராத்திரி கனக்க அடிச்சிட்டன். சரியா தலையிடிக்கிது. நத்தாசா கட்டாயம் இரவுக்கு கிளப்பிற்கு போகத்தான் வேணுமோ?"

"சண், என்ன கேள்வி? ஒவ்வொரு சனிக்கிழைமையும் வழமையா போறதுதானே? மருந்து குளிசை இரண்டை போடும். எல்லாம் சரியாயிடும். நாளைக்கும் லீவுதானே? நல்லா படுத்து நித்திரை கொள்ளலாம்."

'சொன்னா இவள் கேக்கவா போறாள்?' என நினைத்தவாறே போய் சில குளிசைகளை வாயில் போட்டு தண்ணிகுடித்துக் கொண்டு தயாரானான்.

இருவரும் ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு உலாவி விட்டு, இரவு பதினொரு மணியளவில் வழக்கமாகச் செல்லும் இரவு விடுதிக்குள் நுழைந்தனர்.

சண்ணிற்கு தலைவலி தீராமல் நெற்றியை கையால் பிடித்தபடியே உள்ளே நுழைந்ததும், ஒரு விஸ்கி ஐஸ் சொன்னான்.

"நத்தாசா உனக்கு என்ன வேணும்? நான் திருப்பி விஸ்கி குடிச்சாத்தான் தலையிடி நிக்கும்." நத்தாசா, "சம்பெய்ன்" என்றாள். இருவரும் தங்கள் குடிவகைகளை பொற்றுக்கொண்டதும் கிளாசோடு கிளாசை முட்டி அளவு சரியாக இருக்கிறதா எனப்பார்த்து விட்டு (சின் அல்லது சியஸ்) மதுவை அருந்தினர்.

"வா சண் ஆடலாம்..." நத்தாசா சண்ணின் கைகளை பிடித்தாள்.

"இல்லை நத்தாசா... எனக்கு இண்டைக்கு ஆடுற மனநிலையில்லை. உடம்பு சரியில்லை. நீ போய் ஆடு நான் பிறகு வாறன்."

நத்தாசா ஆடப்போய்விட்டாள். சண் இன்னொரு விஸ்கிக்குச் சொல்லிவிட்டு நத்தாசாவின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கறுப்பினத்தவன் (ஆபிரிக்கன்) நத்தாசாவிடம் வந்து, "நான் உன்னுடன் ஆடலாமா?" என்றான். "தாராளமாக" என்று நத்தாசா அனுமதித்தாள். இருவரும் பக்கம் பக்கமாக நின்று ஆடிக்கொண்டிருந்தனர். நிமிடங்களை மணித்தியாலம் விழுங்கிக்கொண்டிருந்தது.

சண் தனது எட்டாவது கிளாசை முடித்து விட்டு ஒன்பதாவதிற்குள் நுழைந்தான். இப்போ அவனிற்கு தலைவலி போய் போதை தலையில் கிறுகிறுத்தது. நிமிர்ந்து நத்தாசாவை பார்த்தான். அவளிற்கும் அந்த கறுப்பனிற்குமான இடைவெளி குறைந்து கறுப்பன் நத்தாசாவை பின்புறமாக கட்டிபிடித்தபடி காற்றுக்கூட புகமுடியாத நெருக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தான்.

சண் எழுந்தான். சற்றுத் தடுமாறியவன் சதாகரித்துக்கொண்டு நத்தாசாவிடம் போய், "வா நத்தாசா வீட்டிற்கு போகலாம்" என்றான்.

"என்ன சண் இப்பதானே இரண்டுமணி? என்ன அவசரம்? கொஞ்சம் பொறு போகலாம்."

"இல்லை நத்தாசா, என்னாலை நிக்கேலாது. போவம் வா" என்று அவளின் கையை பிடித்த இழுத்தான்.

அப்போ அவளுடன் ஆடிக்கொண்டிருந்த கறுப்பன் சண்ணிடம், "ஏய் என்ன அவளை இடஞ்சல் செய்கிறாய்?" என்று கேட்க, சண் அவனை தள்ளிவிட, விழப்போன கறுப்பன் தட்டுத்தடுமாறி எழுந்து, கைவிரல்களை மடக்கி சண்ணின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

"அம்மா..." சண் தன்னையறியாமல் தமிழில் கத்தியபடி கீழேவிழ, நத்தாசாவும் கத்த, விடுதி வாசல் காவலாளி வந்து மூவரையம் வெளியேற்றினான். வெளியே வந்த சண்ணிற்கு உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கடதாசியினால் வாயை பொத்தியபடி போய் காரில் ஏற, நத்தாசா காரை ஒட்டியபடி, "சண் நீயேன்..." என ஆரம்பித்தாள்.

"நத்தாசா! இப்ப ஒண்டும் கதைக்காதை. என்னாலை கதைக்க ஏலாது. வீட்டை போய் கதைப்பம்."

வீட்டிற்கு வந்ததும் கண்ணாடியில் போய்ப் பார்த்தான். கீழ் உதடு வெடித்து வீங்கியிருந்தது. "பாவிப்பயல். தன்ரை சொண்டுமாதிரியே எனக்கும் வீங்கவைச்சிட்டான்" என்றவாறு போய் ஒர் ஐஸ் கட்டியை எடுத்து உதடுகளில் ஒற்றியடி, இன்னொரு ஐஸ் கட்டியை கிளாசில் போட்டு கொஞ்சம் விஸ்கியை ஊற்றினான்.

"சண், போதும் நிப்பாட்டு. நீ கனக்கக் குடிச்சதாலைதான் கிளப்பிலையும் பிரச்சனை."

"என்ன... என்னாலை பிரச்சனையோ? நான் வரச் சொல்லேக்கை வந்திருந்தா ஒரு பிரச்சனையும் வந்திருக்காது. உனக்கு அந்த கறுப்பனோடை ஆடவேணும். அதுதான் பிரச்சனை."

இருவருக்குள்ளும் வார்த்தைகளில் வன்முறை முற்றி அசிங்கங்களாய் வந்து விழுந்தன.

"என்னடி சொன்னனி? என்ரை பிறப்பையா கேவலமாய் பேசிறாய்?" என்றபடி சண் கையை ஓங்க...

"என்ன அடிப்பியா? அடி பாப்பம். வெளியே போடா தமிழ்நாயே" என்று நத்தாசா கத்த, சண்ணிற்கு அப்போதான் ரோசம் பொங்க, அவளின் கன்னத்தில் ஓங்கியறைந்தான்.

அவளும் கத்தியபடி சண்ணை நகங்களால் கீறித்தள்ள, இவர்களின் சத்தத்தில் அக்கம் பக்கத்தவர்கள் விழித்து கொள்ள, வீட்டின் அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டு, சண் கதவைத் திறந்தான்.

பக்கத்து வீட்டுக்காரர், "இப்ப நேரம் என்ன நாங்கள் நித்திரை கொள்வதில்லையா? சத்தத்தைநிறுத்துகிறீர்களா அல்லது பொலிசுக்கு போன்பண்ணவா?" என்று கேபமாய் கேட்க, அந்த தருணம் பார்த்து, நத்தாசா சண்ணை வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டாள்.

"நத்தாசா கதவைத் திற" எனக் கத்திப் பார்த்தான். அந்த கட்டிடத்திலிருந்த மீதிப் பேரும் விழித்துக்கொள்ள நிலமை மேசமாவதை உணர்ந்த சண் கதவிற்கு காலால் ஓங்கி உதைந்துவிட்டு, கீழிறங்கி வந்து கட்டிடத்தின் படிகளில் அமர்ந்தவாறு காற்சட்டைப் பைக்குள் கைவிட்டான். 'அப்பாடா நல்லவேளை சிகரற்றாவது பொக்கற்றுக்கை கிடக்கு' என்றவாறு ஒரு சிகரற்ரை பற்றவைத்து ஒரு இழுவை இழுத்துவிட காவல்துறை வாகனமொன்று அவனருகில் வந்து நின்றது.

'போச்சுடா வந்திட்டாங்கள். பக்கத்துவீட்டுகாரன் ஆரோ அடிச்சிட்டாங்களா? இல்லை இவள் நத்தாசா தான் அடிச்சு கூப்பிட்டாளோ தெரியாது' என்று நினைத்தபடியிருக்க, ஒரு அதிகாரி அவனிடம் வந்து, "வணக்கம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்" என்றார்.

"என்ரை அடையாள அட்டை மேலை வீட்டிலை இருக்கு. எனக்கும் என்ரை நண்பிக்கும் ஒரு சின்னப் பிரச்சனை அதுதான்..." என்று இழுக்க ஒரு அதிகாரி அவனை சுவருடன் சாத்தி வைத்து காலிலிருந்து தலைவரை தடவி சோதனை போட்டுவிட்டு,

"நத்தாசா என்று ஒரு பெண்தான் எங்களை வரவழைத்தார். அவரா உங்கள் நண்பி? வாருங்கள் மேலே உங்கள் வீட்டிற்கு போகலாம்" என்றவாறு

அவனையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போனார்கள். நத்தாசா அழுதழுது அடித்ததாக முறையிட்டாள். அவர்கள் ஒரு கடதாசியில் விபரங்களை எழுதிக்கொண்டு, நாளை ஞாயிற்றுக்கிழைமை விடுமுறைநாள். எனவே திங்கட்கிழைமை காலை நத்தாசாவை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு சண்ணிற்கு விலங்கடித்து கொண்டு போய் விட்டார்கள். திங்கள் காலை ஒரு காவலதிகாரி வந்து சண்ணை அழைத்தகெண்டு போய் ஒரு மேலதிகாரி முன் இருத்தினார். மேலதிகாரி சில சம்பிரதாய பெயர் விபர கேள்விகளை கேட்டுவிட்டு, "உங்கள் நண்பி காலை வந்தார். உங்களிற்கு நல்ல காலம். அவர் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் நீங்கள் இனி அவர் இருக்குமிடத்திற்கு போகவோ வேறு வழிகளில் அவரிற்கு தொந்தரவு கொடுக்கவோ கூடாது. உங்கள் கைத்தொலை பேசியும் பணப்பையையும் அவர் கொண்டு வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறார். மேலதிகமாக ஏதும் உங்கள் உடமைகள் அவரிடம் இருந்தால் நீங்கள் எங்களின் உதவியுடன் தான் அவற்றை பெற்று கொள்ளலாம். உங்களை எச்சரித்து விடுவிக்கிறேன். நீங்கள் போகலாம்" என்றார்.

சண் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். நல்ல வேளை அவள் வழக்கு போடேல்லை தப்பிட்டன் இனி அவள் இருக்கிற பக்கமே போகக்கூடாது, எல்லாத்திற்கும் ஒரு கும்பிடு என்று நினைத்துக் கொண்டு, 'இப்பை எங்கை போறது?' என யோசித்தவாறு கைத்தொலைபேசியை எடுத்து சிவநாதனின் இலக்கத்தில் அமத்தினான்.

"ஹலோ நான் சண். எங்கை வேலையிலையே நிக்கிறாய்? கொஞ்சம் பிரச்சனை மச்சான். இப்ப றோட்டுக்கு வந்திட்டன். என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை அதுதான் உன்க்கு அடிச்சனான்."

"உதெல்லாம் நான் எதிர்பாத்ததுதான்டா சண். சரிசரி. எனக்கு இன்னும் ஒரு மணித்தியாலத்திலை வேலை முடிஞ்சிடும். எங்கை நிக்கிறாயெண்டு சொல்லு. நான் வந்து உன்னை ஏத்துறன்."

சிவா போய் சண்ணை தனது வண்டியில் ஏற்றி தனது வீட்டிற்குக் கூட்டிப்போனான். போகும் வழியில் சண் நடந்தவைகளை சிவாவிற்கு கூறிக்கொண்டே வீடுபோய் சேர்ந்தனர்.

"சண், இரண்டு நாளாய் நீ பொலிசிலை வடிவா சாப்பிட்டோ நித்திரையோ கொண்டிருக்கமாட்ாய். போய் குளிச்சுட்டுவா. நேற்று பங்கு ஆடுவாங்கின்னான்... மனிசி அந்தமாதிரி கறி வைச்சிருக்கு. சாப்பிட்டு வடிவா நித்திரையை கொள்ளு. இந்தா துவாயும் உடுப்பும்."

சண் நன்றாக குளித்து உடை மாற்றிகொண்டு கண்ணாடியில் ஒரு முறைபார்த்தான். காதிலும் நாக்கிலும் குத்தியிருந்தவையெல்லாத்தைய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவை தந்த மோகனிற்கு நன்றிகள் . ஆனால் முந்தி யாழிலை பக்கம் பக்கமாய் நல்ல பிள்ளை மாதிரி எழுதின சியாம் எண்டவர் தான் இப்ப இந்த துன்பம் பிடிச்ச சாத்திரி எண்டு கனபேர் யோசிக்க போகினம். :lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவை தந்த மோகனிற்கு நன்றிகள் . ஆனால் முந்தி யாழிலை பக்கம் பக்கமாய் நல்ல பிள்ளை மாதிரி எழுதின சியாம் எண்டவர் தான் இப்ப இந்த துன்பம் பிடிச்ச சாத்திரி எண்டு கனபேர் யோசிக்க போகினம். :):)

நீங்களே உங்களை பிடிச்சு குடுத்திட்டிங்கள் போல இருக்கு. சியாமின்ரை கதைக்கு சாத்திரி பின்னூட்டம் குடுக்க இல்லை போல... ஒர சிரிப்போட விட்டுட்டார் போல இருக்கு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டால்தான். பட்டுத் தெளிந்துவிட்டார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவை தந்த மோகனிற்கு நன்றிகள் . ஆனால் முந்தி யாழிலை பக்கம் பக்கமாய் நல்ல பிள்ளை மாதிரி எழுதின சியாம் எண்டவர் தான் இப்ப இந்த துன்பம் பிடிச்ச சாத்திரி எண்டு கனபேர் யோசிக்க போகினம். :):lol:

உங்க பழைய பதிவை வாசிக்க கிடைச்சது சந்தோசம் சாத்திரி.

மோகனும் தலையில கையை வைச்சே பழைய இணைப்பை தேடிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் மட்டுமல்ல மனித உணர்வுகளும் தொடர்கதைதானே இன்றும் எத்தனையோ சண்களும்

சண்முகிகளும் எம் மத்தியில். பட்டால்தான் திருந்துவார்கள். உங்கள் படைப்புத் திறனுக்குப்

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதையை தந்த சாத்திரிக்கு நன்றிகள்.மேலும் பல கதைகளை தர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொன்னவர்களிற்கு நன்றிகள் நான் முன்னர் எழுதிய கதைகள் எங்காவது இணையங்களில் பதிவுகள் கிடைத்தால் தேடியெடுத்து போடுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.