Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் கையில் உலக பங்குச் சந்தை வியாபாரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க என்ற ஏகாதபக்திய வல்லாதிக்க சக்தி இராணுவ ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியில் ஜனநாயகம் என்ற போர்வையிலும் பொருளாதார ரீதியில் உலக மயமாக்கம்.. பங்கு வர்த்தகம் என்று உலகையே தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

கடந்த சில தினங்களாக உலகப் பங்குச் சந்தைகளில் வியாபாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட சில நாடுகள் பங்கு சந்தை வியாபாரத்தை இடைநிறுத்தி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் முக்கிய காரணம்.. அமெரிக்காவில் நிகழும் பொருளாதார தளம்பல் நிலைதான்..! ஆக உலகம் தற்போது அமெரிக்காவின் பிடியில் வசமாகச் சிக்கிவிட்டுள்ளது..! அமெரிக்கா ஆட்டி வைப்பது போல ஆட வேண்டிய நிலைக்கு உலகம் விரும்பியோ விரும்பாலமோ இலக்காகி விட்டுள்ளது..!

பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி அமெரிக்காவோடு புதிய உறவாடலை தொடங்கி இருக்கும் இந்தியா போன்ற நாடுகள்.. இந்தத் தளம்பலால் கொஞ்சம் ஆடித்தான் போயுள்ளன. இது அமெரிக்கா தனது நலனுக்காக செய்யும் தளம்பல் நிலையே ஆகும்..! :):)

--------------------

_44371644_sydneystocks203ap.jpg

Global stock market slump deepens

Global share prices have continued to fall sharply on Tuesday amid fears that a recession in the US will lead to a global economic slowdown.

"The recent falls were triggered by fears of a global recession, after growing concern that a proposed US stimulus package, which would involve about $145bn (76bn pounds) in tax cuts to encourage spending, might not be enough.

Dominique Strauss-Kahn, the head of the International Monetary Fund, said the global economic situation was "serious" and that all countries in the world were suffering in the wake of a slowdown in US growth."

http://news.bbc.co.uk/1/hi/business/7201658.stm

Edited by nedukkalapoovan

கவனித்தேன்......... நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தெரியுதெல்லே அவன் ஆரெண்டு?எனக்கும் அவனை பிடிக்காதுதான் அதுக்காக என்ரை பிள்ளையளை பட்டினி போடேலுமே?பத்தோடை பதினொண்டாய் நிண்டு காரியத்தை பெறோணும் நெடுக்கு?

உலகமே ஆடிப்போய் நிக்குதெல்லே?

ஏன் ஐரோப்பாவே கொஞ்சநேரம் கலங்கிப்போச்சுது?

அதுசரி நெடுக்கு உங்கடை பிடல் காஸ்ரோ இதை பற்றி என்ன சொன்னவர்? :)

தேர்தல் வைச்சு திருப்பியும் பாராளுமன்றத்துக்கு வந்துட்டாராம். :)

அதொண்டுமில்லை அவருக்கு வருத்தமெண்டு ஆரோ சொன்னாங்கள் அதுதான் கேட்டனான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் இழப்புகள் தொடரும் நிலையில் அமெரிக்க வட்டி விகிதம் குறைப்பு

அமெரிக்க மத்திய வங்கி, நாட்டின் பொருளதாரத்தில் நம்பிக்கையை பெருக்கும் ஒரு துணிச்சலான நடவடிக்கையில், அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்திருக்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதாலும், வளர்ச்சி குறித்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களாலும் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

இந்த வட்டி வெட்டு அசாதாரணமான அளவு பெரியது என்றும், இது அமெரிக்காவில் வளர்ச்சி குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி உண்மையான கவலைகள் இருப்பதை பிரதிபலிப்பதாகவும் பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்.

இந்தச் செய்தி வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்த ஐரோப்பியச் சந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் நியூயார்க்கின் பிரதான பங்குச்சந்தையான , டௌ ஜோன்ஸ், இன்று வர்த்தகத்துக்காகத் திறந்தபோது, சுமார் மூன்று சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது.

bbc/tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குசா தாத்தா பயப்பாதேங்கோ, நெவெம்பரில கிலரி வாறா, அடுத்த எட்டு வருசத்துக்க வேல்டு எக்கணமிய அடிச்சு நிமித்திட மாட்டாவோ?

அமெரிக்கா குடியரசு கட்சி தோக்கப்போற தருணத்திலதான் இதுவள் நடக்கிது, ரிசெசனாம், உவனுகள்தான் காசுகள சுருட்டிபோட்டு எங்களுக்கு வண்டில் விடுறாங்களோ?

அதென்னண்டு சனநாயக கட்சிவாற நேரத்தில மாத்திரம் ரிசெசனுகள் வாறது??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியுதெல்லே அவன் ஆரெண்டு?எனக்கும் அவனை பிடிக்காதுதான் அதுக்காக என்ரை பிள்ளையளை பட்டினி போடேலுமே?பத்தோடை பதினொண்டாய் நிண்டு காரியத்தை பெறோணும் நெடுக்கு?

உலகமே ஆடிப்போய் நிக்குதெல்லே?

ஏன் ஐரோப்பாவே கொஞ்சநேரம் கலங்கிப்போச்சுது?

அதுசரி நெடுக்கு உங்கடை பிடல் காஸ்ரோ இதை பற்றி என்ன சொன்னவர்? :)

தேர்தல் வைச்சு திருப்பியும் பாராளுமன்றத்துக்கு வந்துட்டாராம். :)

அதொண்டுமில்லை அவருக்கு வருத்தமெண்டு ஆரோ சொன்னாங்கள் அதுதான் கேட்டனான் :D

எல்லாரும் ஆடிப்போனவை.. ஆனால் மத்திய கிழக்கு மட்டும் கவலையே இல்லாமல் இருக்குது..!

நான் கம்னியூசம் பேசிற ஆளில்ல. நான் அமெரிக்க ஜனநாயகத்தை விழுந்தடிச்சு வரவேற்கிறவனும் அல்ல.

ஆனால் கஸ்ரோவின் அரசியல் கொள்கையில் அவர் வல்லாதிக்கத்தை எதிர்கொண்ட விதத்தை பாராட்டுறன். அவரை விட கியூப மக்கள் செய்த/ செய்கின்ற தியாகத்தை வியக்கிறன்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ஆடிப்போனவை.. ஆனால் மத்திய கிழக்கு மட்டும் கவலையே இல்லாமல் இருக்குது..!நான் கம்னியூசம் பேசிற ஆளில்ல. நான் அமெரிக்க ஜனநாயகத்தை விழுந்தடிச்சு வரவேற்கிறவனும் அல்ல.

ஆனால் கஸ்ரோவின் அரசியல் கொள்கையில் அவர் வல்லாதிக்கத்தை எதிர்கொண்ட விதத்தை பாராட்டுறன். அவரை விட கியூப மக்கள் செய்த/ செய்கின்ற தியாகத்தை வியக்கிறன்..! :)

அவங்க எதுக்குத்தான் எப்பதான் என்னத்துக்காகதான் கவலைப்பட்டாங்க?

அந்த நாட்டு மககளும் எங்களை மாதிரித்தான் ஓசி வாழ்க்கை வாழுறாங்க :)

பலஸ்தீனம் இவ்வளவு கஸ்ரப்படுது?இந்த அரபுக்காரங்க என்ன பண்ணுறாங்க?

ஏன் நேத்து முந்தநாள் எல்லாம் கரண்ட் தண்ணி மருந்து இல்லாம கஸ்டப்பட்டாங்க

இந்த அரபுக்காரங்க என்ன பண்ணிணாங்க ஏன் அந்த ஈரான் காரரு எங்க போனாரு

இல்ல அந்த சிரியாக்காரரு எங்க போனாரு

சும்மா போங்க நெடுக்கு :lol:

கியுபா மக்களை யார் வெளியில் கதைக்க விட்டது?கதைக்க விட்டால்த்தானே உண்மைபொய் வெளியில் வரும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு வல்லரசுகளுக்கு பேரிடியை அல்லது தலையிடியை வழங்கி இருக்கு.

யாரை கேட்டு ரொக்கட் விடுறிங்க நீங்க விட்டால் நான் இப்படியெல்லாம் செய்வேன் இது தான் தொலை துர சிந்தனை என்பதா :)

அவங்க எதுக்குத்தான் எப்பதான் என்னத்துக்காகதான் கவலைப்பட்டாங்க?

அந்த நாட்டு மககளும் எங்களை மாதிரித்தான் ஓசி வாழ்க்கை வாழுறாங்க :)

பலஸ்தீனம் இவ்வளவு கஸ்ரப்படுது?இந்த அரபுக்காரங்க என்ன பண்ணுறாங்க?

ஏன் நேத்து முந்தநாள் எல்லாம் கரண்ட் தண்ணி மருந்து இல்லாம கஸ்டப்பட்டாங்க

இந்த அரபுக்காரங்க என்ன பண்ணிணாங்க ஏன் அந்த ஈரான் காரரு எங்க போனாரு

இல்ல அந்த சிரியாக்காரரு எங்க போனாரு

சும்மா போங்க நெடுக்கு :lol:

கியுபா மக்களை யார் வெளியில் கதைக்க விட்டது?கதைக்க விட்டால்த்தானே உண்மைபொய் வெளியில் வரும் :lol:

:D:lol:

:( இதற்கெல்லாம் காரணம் கொண்டலிசா றைஸ் என்னும் பெண்தான். எப்பொழுது பெண்கள் அரசியலுக்கு வருகிறார்களோ அப்பொழுது பிரச்சினைதான்.

இந்தப் பெண்கள் வந்தாலே குழப்பம் தான். இதுவரையி;ல அமெரிக்கா எவ்வளவு நியாயமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. பெண்ணின் வருகையின் பின்னர் தான் அமெரிக்கா அநியாயம் செய்கிறது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( இதற்கெல்லாம் காரணம் கொண்டலிசா றைஸ் என்னும் பெண்தான். எப்பொழுது பெண்கள் அரசியலுக்கு வருகிறார்களோ அப்பொழுது பிரச்சினைதான்.

இந்தப் பெண்கள் வந்தாலே குழப்பம் தான். இதுவரையி;ல அமெரிக்கா எவ்வளவு நியாயமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. பெண்ணின் வருகையின் பின்னர் தான் அமெரிக்கா அநியாயம் செய்கிறது. :(

உங்களுக்கு அமெரிக்காவின் பழையவரலாறுகள் தெரியவில்லை போலிருக்கின்றது :(

அல்லது நெடுக்குசாமியை வம்புக்கு இழுக்கின்றீர்களா? :(

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவிற்கு என்ன நடந்தாலும் பாதிக்கப் போற நாடு கனடா தான். அவர்களின் பணத்துக்குக் குறைவான பெறுமதியை வைத்துக் கொண்டிருந்தால் தான் கனடாவின் பிழைப்பே ஓடுகின்றது.

இல்லாவிட்டால் கனடாச் சமான்களை வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு என்ன நடந்தாலும் பாதிக்கப் போற நாடு கனடா தான். அவர்களின் பணத்துக்குக் குறைவான பெறுமதியை வைத்துக் கொண்டிருந்தால் தான் கனடாவின் பிழைப்பே ஓடுகின்றது.

இல்லாவிட்டால் கனடாச் சமான்களை வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய முதலீட்டாளர்களுக்கு கடந்த 7 நாட்களில் இழப்பு 13 இலட்சம் கோடி ருபாய்கள்

http://eelamtube.com/3365a46c9077ebb5e35c....சந்தை

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவிற்கு என்ன நடந்தாலும் பாதிக்கப் போற நாடு கனடா தான். அவர்களின் பணத்துக்குக் குறைவான பெறுமதியை வைத்துக் கொண்டிருந்தால் தான் கனடாவின் பிழைப்பே ஓடுகின்றது.

இல்லாவிட்டால் கனடாச் சமான்களை வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

இரண்டு நாடுகளும்($) இப்போ சரிசமமாக தானே இருக்கின்றன. (சிறிய தளம்பல்)

1975ம் ஆண்டு வரை கனடிய நாணயத்தின் பெறுமதி அதிகமாக இருந்து 1975ன் பின்பு தான் குறைந்து இப்போ மீண்டும் சரிசமமாக நிற்கின்றன.

Edited by tamillinux

அமெரிக்காவின் கையில்தான் உலக பொறுளாதாரம் இருக்கிறது, மிகப்பெரிய பேரிழப்பு இந்திய முதலீட்டாலர்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றமை தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்தளவு வளர்ச்சியையே காட்டியுள்ளது. இது 2002 இக்குப் பின்னர் அமெரிக்கப் பொருளாதாரம் 2007 இல் மோசமான சரிவைக் கண்டுள்ளதை உறுதிப் படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பிற உலக நாடுகளிலும் செல்வாக்குச் செய்யும் அதேவேளை அமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளதால் பிரிட்டனிலும் வீட்டு மனைகளில் பெறுமதியும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அண்மையில் உலக பங்குச் சந்தை வியாபாரமும் அமெரிக்க பொருளாதார தளம்பலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-----------------

மூலம் இணைப்பு:

US economic growth drops sharply

US economic growth fell sharply in the last three months of 2007 as the credit crunch took effect, figures show.

http://news.bbc.co.uk/1/hi/business/7217769.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.