Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால் புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால்

புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்!

கடல் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கரிசனையும், பிராந்திய ஒத்துழைப்பும் விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றலைப் பாதித்துள்ளன என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்படையைப் பொறுத்தவரை அழிப்பதை விட கண்டுபிடிப்பதே முக்கியமானது எனவும், சர்வதேச அளவில் இதற்கான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் "இந்தோ ஆசிய' செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தமானின் போர்ட் பிளயரில் 12 நாடுகளின் கடற்படைகள் பங்குகொள்ளும் மாநாட்டிற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளதையும் இலங்கையின் "சுரனிமல' எனும் கப்பல் கடற்படையதிகாரியொருவரின் தலைமையில் அதில் கலந்து கொள்ளவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தமான் பகுதியிலேயே ஆயுதக் கடத்தலும், கடற்கொள்ளையும் அதிகம் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கைக் கடற்படையால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கப்பல்கள் ஜாவா தீவிற்கு மேற்கேயே நங்கூரமிட்டு நிற்பது வழமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை இலங்கைப் படைகள் அழித்துள்ளன என இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க "இந்தோ ஆசிய ' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

800 முதல் 1000 தொன் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. பெருமளவு ஆயுதத் தளபாடங்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை விடுதலைப் புலிகளின் கப்பல்களே. அவர்கள் அந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர்களின் பெயர் விவரங்களையும் வெளியிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு அமெரிக்காவின் பாதுகாப்பும் கிடைத்துள்ளது. ஆயுதக் கடத்தல் காரர்கள் அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருகோணமலை கொழும்பு துறைமுகங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை என்கின்றன இராஜதந்திர வட்டாரங்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன்களைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா விசேட தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேற்கு கடலோரத்தைக் கண்காணிப்பதற்கும் "ராடர்'களையும் அது வழங்கவுள்ளது.

கடந்தவருடம் திருகோணமலைக்கு சென்ற அமெரிக்க தூதுவர் "ராடர்'களை அச்சமயம் வழங்கியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் கப்பல்களை இடைமறிப்பதற்கே இவை வழங்கப்படுகின்றன என அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் காரணமாக அமெரிக்கா இராணுவ உபகரணங்கள் எதனையும் வழங்க முடியாவிட்டாலும் கடற்பாதுகாப்பு வகை இராணுவ தளபாடங்களை வழங்கலாம். மேலும் அமெரிக்க கடற்படை தளபதியொருவர் இலங்கைக்கு கடந்த வாரம் வருகைத் தந்திருந்தார்.

இவ்வாறு மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

http://www.sudaroli.com/pages/news/today/03.htm

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீது அனைத்துலக சமூகம் செய்யக் கூடிய அனைத்து அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

* சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை இட்டது.

* தமிழ் அமைப்புக்களின் நிதிகளை உறைய வைத்தமை.

* தமிழர் போராட்ட சர்வதேச பிரதிநிதிகளைக் கைது செய்ததும் கண்காணிப்பதும்.

* உளவு அமைப்புக்களின் செயற்பாட்டை .. சர்வதேசப் பொலீஸ் போன்றவற்றின் செயற்பாட்டை முழு வீச்சில் புலிகளின் சர்வதேச நகர்வுகளைக் கண்காணிக்க தூண்டி விட்டுள்ளமை.

* பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புலிகளையும் உள்ளடக்கி சிறீலங்காவுக்கு ஆயுத உதவி அளித்தல். இராணுவப் பயிற்சி மற்றும் நேரடி உதவியளித்தல்.

* சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளின் நடமாட்டத்தை இல்லாது செய்தல். கடற்கண்காணிப்பை பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

* புலிகளின் இராணுவ பலத்தை அழிக்க தொடர் இராணுவ மற்றும் விமானத் தாக்குதலைச் செய்யத் தூண்டல்.

* நாசகார ஆயுதங்கள் மற்றும் செய்மதி உளவுத் தகவல்களைப் பரிமாறல்.

* தற்போது கடலடி பாதுகாப்பின் மூலம் கடற்புலிகள் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுதல்.

Underwater defence system to track 'Sea Tigers'

The Sri Lankan Navy has put in place an "underwater defence system" between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.

- டெயிலி மிரர்.

* அரசியல் ரீதியில் புலிகளை ஓரங்கட்டி கிழக்கில் தேர்தலும் சர்வ கட்சி குழுவின் அரசில் தீர்வுப் பொதியும் என்று புலிகளிற்கு எதிரானவர்களின் கைகளை ஓங்கச் செய்தல்.

* போர் நிறுத்த ஒப்பந்ததை அரசு தனக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவியமை.

* புலிகள் இயக்கத்துள் பிளவுகளைத் தூண்டி அதனை சிதறடித்து பலவீனப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள்.

* தமிழர் தரப்பில் ஒரு பகுதியை புலிகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் விதைத்து விட்டிருத்தல்.

* புலிகளை தனிமைப்படுத்தி அழிக்க திட்டம் தீட்டியுள்ளமை.

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டின் புலிகள் நிதானமாகச் செயற்படும் அதேவேளை.. புலிகளுக்கு பக்க பலமாக உலகத்தமிழர்கள் என்றும் திகழ வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் போராட்ட பலமான புலிகள் சவால்களை வென்று தமிழ் மக்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திர தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போராட்டம் நீண்ட காலமாக முடிவுறாமல் தொடர்ந்தால் இவை ஏற்படுவது சகயம்.

கடந்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை இலங்கைப் படைகள் அழித்துள்ளன என இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க "இந்தோ ஆசிய ' செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இவர்களின் கணிப்பீட்டின் படி பார்த்தால் உலகிலேயே மிகக்கூடுதலான கப்பல்கள் விடுதலை புலிகளிடம்தான் இருக்கிறது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போராட்டம் நீண்ட காலமாக முடிவுறாமல் தொடர்ந்தால் இவை ஏற்படுவது சகயம்.

நீண்ட காலம் தொடர்வதாலல்ல. *** Bush இன் மிலேச்சத் தனமான வெளியுறவுக் கொள்கை(ளை)களால்.

*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

"கடற்படையைப் பொறுத்தவரை அழிப்பதை விட கண்டுபிடிப்பதே முக்கியமானது எனவும், சர்வதேச அளவில் இதற்கான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் "இந்தோ ஆசிய' செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டுள்ளார்"

உலக நாடுகள் இவ்வளவு அழுத்தங்களை புலிகள் மீது கொடுத்திருந்தும் இலங்கையரசினால் இன்னமும் வெற்றியைப் பெற முடியாதிருப்பதேன். புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டன என்றால் ஆயுதங்கள் எங்கிருந்து எப்படிக் கொண்டுவரப்படுகின்றன. எனக்குள்ள ஒரு கேள்வி புலிகளை வெற்றி கொள்வதற்கு தலையீடு செய்யும் உலக நாடுகள் முயற்சித்தாலும் அதற்கு அனுமதிக்கப்படுமா??????

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை யார் வழங்குகின்றார்கள் என்பது இந்த உலக நாடுகளுக்குத் தெரியாததா என்ன? அப்படியிருக்க கடல் பாதுகாப்பை ஏற்படுத்தி கஷ்ரமடைவதைவிடவும் அந்தந்த நாடுகளை அணுகினால் இவர்கள் நினைக்கின்ற விடயங்கள் சாத்தியமாகுமே.

தாய்லாந்தில்தான் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்பவர்கள் இருப்பதாகப் பரப்புரை செய்து, இவர்தான் அந்த நபர் என்று தெரிந்தும், கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலை இலங்கையரசிற்கு யாரினால் தோற்றுவிக்கப்படுகிறது?

இசையருவியின் கேள்வியும் என்னுள் எழுகிறது. அதுவும் உண்மையான விடயமா?

அந்தமான் கடற்பிரதேசம் பாதுகாப்பானதல்ல, கடற்கொள்ளையர் நிறைந்த இடமாக ஏன் காட்டப்படுகிறது? இந்தக் கடற் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த நாட்டினர்? ஒரு கொள்ளைக் கூட்டத்தினரையே அடக்கியொடுக்க முடியாத நிலையிதான் கடல்வழிப் பாதுகாப்பின் நிலையுள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே விடை மாற்றம் கண்ட உலகபொருளதார முறை

வாங்குபவன் இருக்கும் வரை விற்பவன் எப்படியாவது விற்பான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடல் வழிப் பாதுகாப்பு தீவிரமடைந்ததால் புலிகளின் போரிடும் ஆற்றல் பாதிப்பாம்!

இல்லையே........................யார் சொன்னது???????????

[ஃஉஒடெ நமெ='டமில்லினுx' டடெ='Jஅன் 23 2008, 08:30 ஆM' பொச்ட்='376547']

ஒரு போராட்டம் நீண்ட காலமாக முடிவுறாமல் தொடர்ந்தால் இவை ஏற்படுவது சகயம்.

[/ஃஉஒடெ]

பின்ன உத்தனை துரோகிகளோட கஸ்டபட்டு போராடுரது அவ்வளவு சுலபமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை எல்லாம் முறியடிக்க வேண்டின் புலிகள் நிதானமாகச் செயற்படும் அதேவேளை.. புலிகளுக்கு பக்க பலமாக உலகத்தமிழர்கள் என்றும் திகழ வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் போராட்ட பலமான புலிகள் சவால்களை வென்று தமிழ் மக்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திர தமிழீழத்தை மீட்டெடுக்க முடியும்..!

அது சரி

இந்தக்குறுக்காலபோறவருக்கு என்னஆச்சு????

ரொம்பத்தான் மாறிட்டார்???

அல்லது ???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட காலம் தொடர்வதாலல்ல. *** Bush இன் மிலேச்சத் தனமான வெளியுறவுக் கொள்கை(ளை)களால்.

*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

புஷ் 30வருடமா ஆட்சியிலிருக்கார் என்று இன்று தான் எனக்கு தெரியும் :(:(

எதுக்கு என்ன பதில்? 30 வருடம் புஸ்ஸா?... எதுக்கு இந்த மழுப்பல்? சொல்ல வாறதை தெளிவா சொல்லுங்கோ.... அப்பத்தான் நீங்கயாரென்று தெரியும்... மன்னிக்கவும் என்ன சொல்ல வாறியலென்று தெரியும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.