Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈன்ற தாயை கொச்சைப்படுத்தும் மந்திரங்கள்

Featured Replies

மணமுடிக்கும் மனைவியை ஏற்கனவே மூவருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.

இப் பொழுது எமை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் நிறைய முட்டாள்தனமான விடயங்களைச் செய்து வருகின்றார்கள். பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா

தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப

பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா

ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம

கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...

இந்த மத்திரத்தின் அர்த்தம்:

என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும்.

அப்பாவிற்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் அம்மாவிற்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை.

அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம்

என்மே மாதா ப்ரவது லோபசரதி

அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ

பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா

அவபத்ய நாம....

என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

சரி! நண்பர்களே

மேலும் இரண்டு மந்திரங்களை அர்த்தங்களோடு தந்துள்ளேன். இந்த அர்த்தங்கள் சரியானவை என்பதற்கும் என்னிடம் ஆதரங்கள் இருக்கின்றன. யாரும் சப்பைக்கட்டு கட்ட முனைய வேண்டாம்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு கள உறவு மதத்தை அப்பா அம்மாவோடு ஒப்பிட்டு கருத்துச் சொன்னார். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இருந்தால்தான் உங்கள் அப்பா அம்மாவை நம்புவீர்களாக என்று கேட்டார்.

அம்மா மீது உள்ள நம்பிக்கையில் அவர் கை காட்டுபவரை அப்பா என்று நம்புவது போன்று மதத்தையும் நம்ப வேண்டும் என்று சொல்கின்ற பல முட்டாள்களை நான் சந்தித்திருக்கின்றேன்.

இதில் வேதனை என்னவென்றால், உங்களுடைய மத சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது.

சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் புரியாமொழியில் இருக்கிறது இந்த மந்திரங்கள் எல்லாம். அதுவும் நல்லதுக்குத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் புரியாமொழியில் இருக்கிறது இந்த மந்திரங்கள் எல்லாம். அதுவும் நல்லதுக்குத்தான்

புரியாத மொழியில் உள்ளதை மொழிபெயர்கிறவை மட்டும் என்ன யோக்கியமாப் பெயர்க்கினமா..! தங்கட வக்கிரங்களையும் கலந்தடிச்சு விடுறதுதான். அது இங்க தாராளமா நடக்குது. முன்னர் வெற்றிவேல் என்ற கள உறவு உதுகளைத் தோலுரிச்சுக் காட்டியும் சிலர் திருந்திறதா இல்ல..! :lol::)

  • தொடங்கியவர்

வெற்றிவேல் எதையும் தோலுரித்துக் காட்டவில்லை.

பார்ப்பனர்கள் செய்கின்ற அதே ஏமாற்று வேலையை அவரும் செய்யப் பார்த்தார். ஆனால் இங்கே இளைஞன் போன்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவர் போட்ட வயதுக் கணக்கு எதன் அடிப்படையில் வந்தது என்பதற்கும் பதில் சொல்லவில்லை.

அதை விட இன்றைக்கு மேலும் ஒரு மந்திரத்தை தந்து "கந்தர்வன் போன்றவர்கள் கணவனாக இருந்தார்கள்" என்பதை நிறுவி இருக்கிறேன்.

மற்றைய மந்திரங்களில் எழுத்துப் பிழை இருக்கிறது, அதனால் விளங்கவில்லை என்றார்.

இங்கே களத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ எழுத்துப் பிழைகளோடு எழுதுகிறார்கள். அது எல்லோருக்கும் விளங்குகிறது. சமஸ்கிருதம் தெரிந்த அவருக்கு எழுத்துப் பிழைகளின் ஊடாகவே என்ன உள்ளது என்று புரிந்திருக்கும். ஆனால் மளுப்பி விட்டார்.

இப்படித்தான் இவர்கள் சமாளிக்கின்றார்கள்.

இந்த மந்திரங்களுக்கு விளக்கம் தந்தவர் பற்றி சிறு குறிப்பைத் தருகின்றேன். லோககுரு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சங்கராச்சாரியாரிடம் (தற்பொழுது இருப்பவர் அல்ல, அதற்கு முன்பு இருந்தவர்) உதவியாளராக இருந்தவர்.

இந்து மத தர்மங்கள் காக்கப்பட வேண்டும் என்று சங்கராச்சாரி சார்பில் அன்றைய காலனிய அரசோடும், பின்பு நேருவின் அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தியவர்.

பெரும் சமஸ்கிருத பண்டிதர். தமிழில் வழிபாடு செய்வதற்கு ஏற்ற மந்திரங்களையும் தமிழில் எழுதிக் கொடுத்தவர்

அவருக்கு எந்த ஒரு வக்கிர சிந்தனையும் இல்லை. மந்திரங்கள்தான் வக்கிரமாக இருக்கின்றன. பார்ப்பனர் என்றாலும் மனச்சாட்சி உறுத்தியதால், இந்த மந்திர மோசடிகளை தோலுரிக்கின்றார்.

இந்து மதம் சீர்பட வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். இந்த மந்திரங்களை கட்டிக் காக்க நினைக்கும் உங்களுடைய நோக்கமோ அதற்கு எதிரானது. இந்த மதத்தின் உண்மையான எதிரிகள் உங்களைப் போன்றவர்கள்தான்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனுக்கு கிணற்று தவளை போல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு சதா இதே சிந்தனை போல் இருக்கின்றது.

வெளியே வாருங்கள்.பரந்துபட்ட இந்த உலகத்தை பாருங்கள் வாதாடுவதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ நிறைய விடயங்கள் உள்ளன.

நீங்கள் அதிகமாக தூக்கிப் பிடிக்கும் விடயங்களான சாதிமத பிரச்சனைகள் அழிவதற்கு இன்னும் சில காலங்கள் செல்லும்.அதாவது ஒருசில சந்ததிகள் அழிய வேண்டும்.

அதிலும் உங்களைப் போன்றவர்கள் அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் அதற்கும் சாத்தியமில்லை :)

  • தொடங்கியவர்

நான் என்றைக்கோ வெளியே வந்து விட்டேன். நீங்களும் மதங்கள் என்ற கிணறுகளை விட்டு வாருங்கள்!

நான் எழுதியது வேறு எதோ ஒரு விடயம். மதத்தின் பெயரில் புரியாத மொழியில் சிலர் உங்கள் வீட்டுப் பெண்களை அசிங்கப்படுத்துவதை சுட்டிக் காட்டுகிறேன்.

ஆனால் கொஞ்சம் கூட உறைக்காமல் எனக்கு புத்திமதி சொல்கிறீர்களே!

சிலர் "பகுத்தறிவு" என்று நாம் உச்சரிப்பதை எதிர்ப்பது உண்டு. மத எதிர்ப்பு பகுத்தறிவு இல்லை என்று வாதிடுவார்கள். "மதஇழிவுவாதிகள்" என்று புதுப் பெயர்கள் எல்லாம் சூட்டிப் பார்த்தார்கள்.

நாம் எம்மை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்வதன் காரணத்தை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.

மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. மிருகங்களிடம் போய் அவைகளின் இணையையோ, தாய் மிருகத்தையோ திட்டினால், அது ஒன்றும் பேசாது இருக்கும். என்ன திட்டுகிறோம் என்றும் அதற்கு புரியாது. புரிந்தாலும் அதனால் ஆத்திரப்படவும் மாட்டாது.

ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கிறது. ஒரு பகுத்தறிவு உள்ள மனிதன் தனக்கு புரியாத மொழியில் எதையும் செய்ய மாட்டான்.

ஆனால் இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். புரியாத மொழியில் பிறப்பில் இருந்து இறப்பு வரை எல்லாச் சடங்குகளையும் செய்கிறீர்கள். புரியாத மொழியில் அசிங்கமாக திட்டுவதை தலையாட்டிக் கேட்கிறீர்கள்.

இப்படியானவர்களுக்கு ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

ஆனால் இந்தச் சடங்குகளை மறுக்கின்ற பகுத்தறிவு எம்மிடம் உண்டு. இப்படியான பல காரணங்களினால் எம்மை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்கின்றோம்.

நீங்கள் கடவுளை நம்புங்கள்! மதத்தை வைத்திருங்கள்! ஆனால் மனிதர்களுக்கு உள்ள ஆறாவது அறிவை இழந்து விடாதீர்கள்.

அது உங்களுக்கு இருந்தால்தான் நான் பரந்து பட்ட மற்றைய விடயங்களைப் பற்றியும் உங்களுடன் பேச முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகி.... எனக்கும் பகுத்தறிவு வந்திட்டுது. எனக்கு பகுத்தறிவு இருக்கு.... என்னால என்னையே நம்ப முடியவில்லை. எனக்கு பகுத்தறிவு இருக்கு.....

என்ன நானே புலம்பிகொண்டு நிக்கிறேன்.... நீங்களும் கொஞ்சப்பேர் எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதெண்டு சொல்லுங்கோ.....

எனக்கு பகுத்தறிவு வந்த சந்தோசத்தில கால் நிலத்திலை நிக்குதில்லை.... நீங்களும் எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதிண்டு சொல்லுங்கோ... ஜயோ...பிச்சை கேக்கிற மாதிரி கேக்கிறேன்... எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதெண்டு சொல்லுங்கேவேன்....

எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதெண்டு சொல்லுற நம்பிற எல்லாருக்கும் அட்வான்சா நன்றி.

எனக்கு பகுத்தறிவு வந்த சந்தோசத்தில கால் நிலத்திலை நிக்குதில்லை.... நீங்களும் எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதிண்டு சொல்லுங்கோ... ஜயோ...பிச்சை கேக்கிற மாதிரி கேக்கிறேன்... எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதெண்டு சொல்லுங்கேவேன்....

எனக்கு பகுத்தறிவு வந்திட்டுதெண்டு சொல்லுற நம்பிற எல்லாருக்கும் அட்வான்சா நன்றி.

ம்ம்ம்..இதில பிரச்சினை இல்லை நான் சொல்லுறேன் மாம்ஸ் உங்களிற்கு பகுத்தறிவு வந்திட்டு என்று பதிலிற்கு நீங்க என்ன செய்ய வேண்டும் என்றா எனக்கு பகுத்தறிவு வந்திட்டுது என்று சொல்ல வேண்டும் சரியோ :lol: ..எப்படி நம்ம அக்ரிமன்ட் :) ....எல்லாம் சரி மாம்ஸ் "பகுத்தறிவு வந்தா" பிறகு புலம்பி கொண்டு இருக்காம அதை விட வராமலே இருக்கிறது நல்லது என்று நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறியள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"மண்ணிற்குள்ள போகும் போது கடைசியா ஒன்றும் நம்மோட வராது" :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எங்கேயோ படித்த ஞாபகம்!!!

தாவரங்களுக்கு ஓர் அறிவு.

மீன், நத்தை போன்றவைக்கு ஈரறிவு. மற்றும்

விலங்கினங்கள் ஆடு, மாடு, நாய் போன்ற ஏனையவை மூன்றறிவு. நானும் என்னைப் பற்றி யோசிக்கும் போது இதுக்குமேல எனக்கு அறிவு வளர்ந்ததா எனது அறிவால அறிய முடியல.

காரணம் மேற்குறிப்பிட்ட மிருகங்கள் செய்வதைத்தான் கொஞ்சம் நாகரீகமா? நான் செய்கிறேன் போல கிடக்கு.

அவை: --- உணவுக்காக அலைதல்.

---- வருடத்தில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இனவிருத்தியை மட்டும் முன்னிட்டு சேர்ந்திருத்தல்.

---- செலவில்லாத பிரயாணங்கள்.

---- உடைப் பிரச்சனை அவையளுக்கில்லை. ஒரே ஆடையையே மழையிலும், ஆறு, குளங்களிலும் கழுவிக், கழுவிப் போட்டுக் கொள்ளுவினம்.

---- கிடைத்த இடத்தில் நிம்மதியான உறக்கம்.

--- மேலும் அவை தமது சிற்றறிவை உபயோகித்து சாப்பிடக் கூடியவற்றை தெரிந்து , மற்றயதை தவிர்த்து சாப்பிடுகின்றன. நாய் தெருவில் சிக்னல் பார்த்து குருடனைக் கவனமாகக் கூட்டிச் செல்கிறது.

நான்: உணவு பெறுவதற்காக பணம் தேடி அலைதல். பணத்திற்காக வேலைதேடி அலைதல். இந்நிலையில் முதலாளியிடம் பேச்சு வாங்குதல், இன்னோரன்ன அவமானங்கள் அடைதல் எக்செட்ரா...எக்செட்ரா...

---- இவ்விடயத்தில் நான் மிகவும் மட்டம். ( ஒரு சிறு தேங்காய்ச் சொட்டுக்கு ஆசைப்பட்டு பொறிக்குள் பாய்ந்த வீரமான எலி பலியாகி , அதைத் தொடர்ந்து வாழ்க்கையின் தேவைகள் அதிகமாகி ..... ம்...அதிகமாகி ம்... புரிகிறதா உங்களுக்கு!! ஆனாலும் இது ஒரு அழகான சுகமுங்க..)

---- நிம்மதியான உறக்கம்?

உறங்குவதற்கு வீடு, கட்டில்,மெத்தை.

அணிவதற்கு விதம்விதமான ஆடைகள், ஆபரணங்கள், பிரயாணத்திற்கு வாகணங்கள். இவைகளுக்காக கடன்கள். இப்படி... இப்படியே!!!

இந் நிலையில் எனக்கு எப்படிங்க நாலாவது அறிவே கிட்டாமல் கிடக்கு.

பகுத்தறிவெல்லாம். அப்படியென்றால்? :unsure::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.