Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலி- 17 பேர் படுகாயம்

Featured Replies

தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி

மன்னார் விவத்தன்குளம் (Vivattankulam) பகுதியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் 16 பதுங்கு குழிகளை அழித்ததுடன் 22 புலிகள் பலியானதாகவும் சிங்கள ஊடகங்களுக்கு இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஜானா

  • தொடங்கியவர்

மன்னார் மடுவில் சிறீலங்காப் படையினர் பாடசாலை பேருந்து மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மன்னார் மடுப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினாரின் ஆழ ஊடுருவும் அணியினர், பேரூந்து மீது கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 35 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

3RD LEAD

SLA attacks bus carrying school children in Madu, 17 killed, 17 wounded

[TamilNet, Tuesday, 29 January 2008, 09:59 GMT]

At least 11 school children and the principal of the displaced Chinna Pa'ndivirichchaan school were killed and 17 wounded when a Deep Penetration Unit of Sri Lanka Army triggered a Claymore mine targeting the bus carrying school children in Madu division of the Liberation Tigers of Tamileelam controlled territory Tuesday at 2:25 p.m. Pa'l'lamadu hospital authorities told TamilNet that 11 of 17 civilians killed in the attack were school children.

The principal was among the dead. 7 children were critically wounded. 12 of the 17 wounded were in critical state.

The attack has taken place within the area of the holy Madu shrine, according to Tamileelam police officials.

Further details are not available at the moment.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பாடசாலைப் பேருந்து மீது கிளைமோர் தாக்குதல்:17 பேர் பலி! 17 பேர் காயம்

29.01.2008 / நிருபர் எல்லாளன்

மன்னார் மடுவில் சிறீலங்காப் படையினர் பாடசாலை பேருந்து மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மன்னார் மடுப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினாரின் ஆழ ஊடுருவும் அணியினர், பேரூந்து மீது கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 17பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 17பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன.மன்னார் மடுப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினாரின் ஆழ ஊடுருவும் அணியினர், பேரூந்து மீது கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 17பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 17 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

sankathi.com

மன்னார் மாவட்டம் தட்சணாமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று பிற்பகல் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

ஏன் இன்னமும் படங்கள் வெளியிடப்படவில்லை? தமிழர் தாயகத்து மனித அவலங்களை படங்களோடு ஆதாரபூர்வமாக வெளியுலகிற்கு கொண்டு வருவதற்கு ஏன் தமிழ்தேசிய ஆதரவு ஊடகங்கள் பின்னுக்கு நிக்கிறார்கள்?

தப்பித் தவறி சிறீலங்கா விமானப்படை விமானத்தில இருந்து பழயை மண்ணெண்ணைக் கான் விழுந்தாலே உடன மாறி மாறி சோடிச்சு செய்தி விடுவினம் விதம் விதமான கோணத்தில படங்களும் பிடிச்சு விடுவினம் தங்கடை வான்காப்பு பிரிவு புடுங்கி அடுக்கிப் போட்டுது எண்டு. ஆனா 17 பொதுமக்கள் இறந்த நிகழ்விற்கு 1 படம் கூட இன்னமும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை தற்போது நடைபெறும் பகுதியாகையால் படங்கள் வர தாமதமாகலாம். பார்ப்போம் தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப்போகின்றன என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது கிடைக்கப்பட்ட செய்திகளின் படி

மன்னார் விவத்தன்குளம் (Vivattankulam) பகுதியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் 16 பதுங்கு குழிகளை அழித்ததுடன் 22 புலிகள் பலியானதாகவும் சிங்கள ஊடகங்களுக்கு இராணுவப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

ஜானா

மாசி 4ம் திகதி வரை நிறைய சொல்லுவினம் நடந்ததோ நடக்கவில்லையோ இவையள் நியை இடத்தை பிடிப்பினம்.

இராணுவ தந்திரோபாயமான பின்வாங்கல் :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ தந்திரோபாயமான பின்வாங்கல் :mellow:

களத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் கள நிலைமை.

தலைமைப்பீடம் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும்.

எமது தந்திர உபாயத்தில் சிங்கள இராணுவம் சிக்கியுள்ளது.

15 ஆட்டிலறி அடித்ததால் சிங்களத்தின் முதுகெலும்பு தகர்க்கப் பட வாய்ப்புகள் அதிகமா காணப்படுகிறது

Edited by tamillinux

விளாத்திக்குள சமர் போர் உத்தியை மாற்றுமா?

-அருஸ் (வேல்ஸ்)-

http://www.tamilnaatham.com/articles/2007/jun/arush/12.htm

  • கருத்துக்கள உறவுகள்

உதய நாணயக்கார இச்சம்பவத்துக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை எனவும், சம்பவம் நடந்த இடத்தில் எந்த இராணுவ குழுவும் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்

Military denies any involvement in Mannar incident

Military Spokesman Brigadier Udaya Nanayakkara totally denied LTTE allegations that Sri Lanka Army deep penetration unit attacked a civilian school bus in the Madhu area. He stressed that there were no military teams operating in those areas.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=5163

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் என்ன மோடனா எம்மைப் போல கொக்கரிக்க

கவலைப்படத் தேவையில்லை!!! தமிழினம் 10 கோடிக்கு மேல் இருக்கிறது. அதுவும் உலகம் முழுவதும்!! சிங்களவன் ஈழத்தில் மட்டும்தான் அழிக்க முடியும்!!!! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

றம்புக்கல போன்றவர்கள் கொக்கரிக்காமல் கனைக்கினமோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது வரை புலிகள் காலம் கனியட்டும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள் போலத் தான் இருக்கு.

றம்புக்கல போன்றவர்கள் கொக்கரிக்காமல் கனைக்கினமோ???

தாங்கள் தான் என்று சொன்னாரா?

29_01_08_madu_01.jpg

29_01_08_madu_02.jpg

Names of the students killed in the Claymore blast follow (Initials and age of the deceases

were yet to be registered by the hospital authorities):

Anton Sathees

Tesmon

Ajith

Bernard George

Jude Coston

Rony

Ganarthan

Milton

Bruno

Rohan

Samson

The names of the other deceased:

Latha (teacher at Thadcha'naamaruthamadu RCTMS)

arasi

Reeta (hospital employee)

Jerad (driver of the bus)

Stanley Lambert (conductor of the bus)

Sundaram (security guard of the Madu hospital)

Wounded passengers:

Francis Xavier Mathusa, 15, student

Sivalingam Anita, 16, student

Ranjan Udoxika, 11, student

Gunaseelan Boin Tharshana, 12, student

Jeyaganesan Sobana, 23

Fuline, 08

Jenistan Peiris, 12, student

A. Consita, 16,

Reverend Sister Ranjani, 35,

Nirushanthan, 08,

S.M.G. Lambert, 46, principal of Chinnna Pa'ndivirichchaan school

Antony Jacintha, 58,

Packiyanathan, 55

Gunaseelan Gunaseeli, 48,

A. Ganansooriyan, 35,

Dharsika, 14, student

Duluxan, 15, student

TamilNet.com

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24462

  • கருத்துக்கள உறவுகள்

29.01.2008 / நிருபர் எல்லாளன்

கொல்லப்பட்டோரினதும், காயமடைந்தோரினதும் பெயர் விபரங்கள்

மன்னார் தட்ணாமடுப்பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழஊடுருவும் அணியினர் பயணிகளின் பேருந்தை இலக்குவைத்து கிளேமோர்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இத் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும் 9 மாணவர்கள் உட்பட 17பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான மன்னார் மடுப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினாரின் ஆழ ஊடுருவும் அணியினர், பேரூந்து மீது கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

19624159cd4.png

unbenanntpc8.png

சின்னபண்டிவிரிச்சான் அ.த.க. வித்தியாலய பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

39209272dm2.png

19171153dd3.png

37721078vj8.png

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இக்கோரச் சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் பள்ளமடு மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சம்பவ இடத்தில் வாகனங்கள் இல்லாதிருந்த காரணத்தால் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதல் குறித்தும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்தும் பள்ளமடு மருத்துவமனை மருத்துவர் வெற்றிமாறனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

இது வரை 17 சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 17 பேர் மோசமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக இவர்களை கிளிநொச்சி மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சடலங்களில் 11 சடலங்கள் மாணவர்களினுடையது. அதேநேரம் காயமடைந்தவர்களில் 9 பேர் மாணவர்கள் ஆவர்.

படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு கண்களிலும் காயமடைந்துள்ளனர். சிலரது உடல் அவயங்கள் சிதறிக் காணப்படுகின்றன.

இவர்களுக்கான முதலுதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஏனையோர் படுகாயமடைந்த நிலையிலும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தமது பிள்ளைகளைத் தேடி வருகின்றனர். சிலர் தங்களின் பிள்ளைகளைக் காணவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரம்:

01.மேரி ஜோசப்பின் பெண் 31 பொதுமகன்

02.றீற்றா பெண் 39 மடு மருத்துவமனைத் தாதி

03. கி.ஜெராட் ஆண் 32 சாரதி

04. சுரேஸ் ஆண் 25நடத்துனர்

05. ராஜசூரியன் அரசி பெண் 37கல்வித் திணைக்கள ஊழியர்

06. சுந்தரம் ஆண் 61 மடு மருத்துவமனைக் காவலாளி

07. சத்சன் ஆண் 11மாணவன்

08. கு.பேஸ்மன் ஆண் 11மாணவன்

09. சு.பேணாட் ஜோர்ச் ஆண் 16மாணவன்

10.பே.யூட் கொண்ஸ்ரன் ஆண் 16 மாணவன்

11.பே.ஜெனி ஆண் 13மாணவன்

12.ப.ஜனார்த்தன் ஆண் 13மாணவன்

13.மில்ரன் ஆண் 16மாணவன்

14.யொ.புருனோஸ் ஆண் 13 மாணவன்

15.யொ.பறீற்ரோ ஆண் 15மாணவன்

16.றொசான் ஆண் 12மாணவன்

17.பி.சமசன் அண் 16மாணவன்

காயமடைந்தவர்களின் விபரம்

01. கு.வியூலின் பெண் மாணவி

02.ர.தர்சிகா பெண் 16 மாணவி

03.பி.மதுசாளின் பெண் 16 மாணவி

04.அனித்தா பெண் 16 மாணவி

05.யுதர்சிகா பெண் 12 மாணவி

06.கு.தர்சிகா பெண் 13 மாணவி

07.பொ.புன்சிற்ரா பெண் 16மாணவி

08.தே.டியு}ஸ்லஸ் ஆண் 15 மாணவன்

09.அ.ஜெனிற்ரன் பீரிஸ் ஆண் 12 மாணவன்

10.மா.கிருசாந் ஆண் 8 மாணவன்

11.கோ.லம்பேட் பெண் 51 பாடசாலை அதிபர்

12.ருசிற்றா பெண் 38 ஆசிரியர்

13.யுகிலா பெண் 35 ஆசிரியர்

14.அருட்சகோதரி நிர்மலா ரஞ்சினி பெண் 36 ஆசிரியர்

15.கு.குணசீலி பெண் 45 ஆசிரியர்

16. ஞானசூரியர் ஆண் 35 தபால் ஊளியர்

17.ஜசிற்ரா பெண் 55 பொதுமகன்

18. பாக்கியநாதன் ஆண் 60 பொதுமகன்

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொல்லப்பட்ட இளங்குருத்துக்களுக்கும் மக்களுக்கும் என் கண்ணீர் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: கொல்லப்பட்டவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்.

எப்போதுதான் இந்தப் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படப் போகின்றன ?

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட சிறுவர்கட்கு கண்ணீர் அஞ்சலிகள்.குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

துன்பத்தில் ஆழ்த்தும் செய்தி.

அஞ்சலிகள்.

சிங்கள வெறியர்களி;ன் கொலை தாண்டவத்தில் பலியான எமது ரத்த உறவுகளிற்கு

தொலைவில் இருந்து எதுவமே செய்திட முடியவிட்டாலும் எமது நெஞ்சினில் உங்கள் உருவங்களை நிறுத்தி ஓரு கணம் கண்கலங்குகிறேன் ! என் உறவுககே மன்னித்துக் கொள்ளுங்கள். ....... ஆனால் உமை இன் நிலைக்கு விட்டவர்களின் பிள்ளைகளிற்கும் இவ் நிலை ஏற்பட வழிபடுகின்றேன்.

எவ்வளவு ஆசையுடன் வெள்ளை உடையுடுத்து நீர் சென்றிருப்பீர் இன்று வெறும் புகைப்படமாக உங்களை இணையத்தில் காணும் பொழுதே எம் நெஞ்சு எவ்வளவு பதறுகிறதே ! உம்மை பெற்ற தாயுஙள்ளங்களின் வேதனையும் புலம்பலும் நாம் அருகில் இருந்து கேட்கத் தேவையில்லை ஏன் எனில் ஏற்கனவே ஓலித்துக் கொண்டிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.