Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 100 பேர் காயம்

Featured Replies

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

3ஆவது மேடையில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது!

Edited by சாணக்கியன்

  • Replies 91
  • Views 12.1k
  • Created
  • Last Reply

கோட்டை தொடருந்து நிலையத்துள் குண்டு வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தினுள் மூன்றாவது மேடைக்கருகில் வெடிச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பலர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசரப் பிரிவுக்குக் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 70 பேர் வரை காயப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளன் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜானா

Edited by Janarthanan

என்னங்கோ சுதந்திர தினம் கொழும்பில களை கட்டீட்டிது போல இருக்கிது. வாழ்துகள்!

தமிழர் எல்லாரூம் வெளியில போகாமல் வீடுகளுக்கு கவனமா இருங்கோ. இனி அடுத்த சீனரி.. தமிழர கைது செய்து உள்ளுக்க போடுறது தானே?

ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன. மேலும் காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவசரசிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அரச ஊடகமான நேத்திராவில் நீர்கொழும்பில் இருந்து வந்த தொடருந்தில் வந்த தற்கொலைக் குண்டுதாரிப் பெண்னொருவரே இக் குண்டை வெடிக்க வைத்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

ஜானா

Edited by Janarthanan

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

3ஆவது மேடையில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது!

அது என்ன சாணக்கியன் அண்ணை மூண்டாவது மேடை? என்ன நாடகமோ நடக்கிது உங்க? :mellow:

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 94-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

மரணம் 06 பேர்

காயம் 94 பேர்

காயமடைந்த சிலர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபடப்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் 06 பேர்

காயம் 94 பேர்

ஸ்கோர் போட் போடுறீங்களோ. இது எல்லாம் சரியில்லாத பழக்கம். இறப்பது என்னவோ அப்பாவிச் சனங்கள் தானே. சிங்களவன் விரும்பின போர் அவனையே அழிக்குது.. இதை உணர்ந்தாங்க என்றால் போதும். :D:mellow:

ஒவ்வொருவருக்கும் தெரிந்த பாசையில் தான் பதில் சொல்ல வேணும்.

யுத்த பீதி சிங்களவருக்கும் வந்து யுத்தம் வேண்டாம் என்று அவர்கள் உரத்துச் சொன்னால் ஒழிய றாஜபக்சக்களின்; அராஜகம் ஓயாது.

ஸ்கோர் போட் போடுறீங்களோ. இது எல்லாம் சரியில்லாத பழக்கம். இறப்பது என்னவோ அப்பாவிச் சனங்கள் தானே. சிங்களவன் விரும்பின போர் அவனையே அழிக்குது.. இதை உணர்ந்தாங்க என்றால் போதும். :D:mellow:

சிங்களவனாவது உதுகள உணர்ந்துகொள்ளுறதாவது...

சிங்களவன் ஒருத்தன் நாங்கள் யூரியூப்பில ஒட்டின மடு கிளைமோர் காணொளி ஒண்டுக்கு என்ன பதில் எழுதி இருக்கிறான் எண்டு பாருங்கோ...

o1Traitor: Tamils are very nice People.They dont kill any body at all. Today in Dambulla Sinhalease did it.Snihalease this is an easy game.Select a bus Full of Tamils in Baticaloa or Vaunia. C4+Bicycle Balls+Electric detonater+NE555 Timer IC+9V Battery this combination always work.If you cant find C4 use ordinary Gun Powder or Dynamite. you can obtain it from a Metal crusher.

கொழும்பில நடக்கிறதுகளுக்கு கண்ணீர் விடுறனீங்கள் இதுகளுக்கும் சேத்து விடுங்கோ... (நான் நெடுக்காலபோவான சொல்ல இல்ல...)

-------------------------------------------------------------------------------------------------------------------------

குண்ட வெடிக்க வச்சது.. ஒரு பெண் தற்கொலைதாரியாம் எண்டு ஏ.எப்.பி சொல்லிது.

Sri Lanka Bombing Kills 6, Wounds 95

11 minutes ago

COLOMBO, Sri Lanka (AP) — A female suicide bomber blew herself up at the main railway station in the Sri Lankan capital Sunday, killing six travelers and wounding 95 others, the military and a hospital official said.

"It is a suicide blast on Platform 3. The bomber has got down from a train and exploded," military spokesman Brig. Udaya Nanayakkara said.

He said six travelers were killed in the blast.

Pushpa Soysa, a nurse at Colombo National Hospital said that 95 people have been brought to the hospital with injuries.

மூலம்: http://ap.google.com/article/ALeqM5gK_BQ9k...vXSXJQD8UIONHG0

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

அது என்ன சாணக்கியன் அண்ணை மூண்டாவது மேடை? என்ன நாடகமோ நடக்கிது உங்க? :mellow:

அது புகையிரத தரிப்பு மேடையுங்கோ!

இதுவும் ஒரு நாடகம் தானுங்கோ.... விடுதலைப் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி நடிச்சவை எல்லோரும் போடுற நாடகமுங்கோ!

அப்பாவிகளுக்கு எதிரான தாக்குதல்களின் பரிமாணம், சிங்களவருக்கும் புரிதல் வேண்டும். பேரினவாதிகளுக்கெதிரான தாக்குதல்கள்தான் திருப்பங்களை ஏற்படுத்தும். இந்தப் பேரினவாதம் தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதுதான்.

  • தொடங்கியவர்

ஸ்கோர் போட் போடுறீங்களோ. இது எல்லாம் சரியில்லாத பழக்கம். இறப்பது என்னவோ அப்பாவிச் சனங்கள் தானே. சிங்களவன் விரும்பின போர் அவனையே அழிக்குது.. இதை உணர்ந்தாங்க என்றால் போதும். :D:mellow:

போடுற ஸ்கோரை வடிவா போடுங்கோவன்,

தெகிவளை (06) + புறக்கோட்டை (95) = 101 காயம்!

உதுக்குள்ளை தமிழ் எத்தினையோ தெரியாது!

அந்த அப்பாவிச் சனங்கள் தான் பட்டினிகிடந்தாலும் பரவாயில்லை தமிழனுக்கு ஏதும் கொடுக்காதே யுத்தத்தை கொண்டு நடத்து என்று பயங்கரவாத அரசுக்கும் அதைனை அண்டிப்பிழைக்கும் கட்சிகளுக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தக் கொண்டு ஒரு வேளை உண்ண வழியில்லாமல் கஸ்டப்பட்ட அப்பாவி ஈழத்துப் பாடசாலைச் சிறார்களை விமானக் குண்டு விசிக் கொன்று வெடி கொழுத்தி பால்ச் சோறு உண்டு கழித்தவர்கள். இது அவர்களின் பாஷை பல்லுக்குப் பல் இரத்தத்திற்கு இரத்தம் என்பது. தமிழரின் பண்பாடல்ல. ஆயினும் அவலத்தைக் கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுத்தால் தான் அவன் அடங்குவான். அவனுக்கு அந்த வேதனை புரியும்.

யாருடைய மரணத்திலும் மகிழும் எண்ணம் எமக்கில்லை.அது தமிழரின் பண்பாடுமல்ல். அது இராணுவ ஸ்கோராக இருப்பின் மட்டுமே நாம் மகிழ்ச்சியடைவோம்.

காயமடைந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றார்களாம் என்று அடிக்கடி பிரச்சாரப் படுத்துகின்றார்கள். மடுவில் இறந்தவர்ளில் பெண்களும் சிறுவர்களும் இருக்கவில்லையா?

தற்போது மரணம் 08 பேர் என்ற செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

07 ஆண்கள் + 01 பெண் சாணக்கியன் வடிவா இருக்குத் தானே.

Edited by Janarthanan

1.செஞ்சோலை 57 மாணவர்

2.கிளிநொஞ்சி 13 மாணவர்

3.இரணைமடு 09 மாணவர்

4.கிள்நொச்சி 02 மாணவர்

5.தட்சனாமடு 20 மாணவர்

மொத்தம் 101 மாணவர்

இன்னும் மாணவர் போகவில்லையே தென்பகுதியில ஆகவே ..... 101 மாணவர் சரிசமானகவேண்டும் தென்பகுதியில .

  • தொடங்கியவர்

தற்போது மரணம் 08 பேர் என்ற செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

07 ஆண்கள் + 01 பெண் சாணக்கியன் வடிவா இருக்குத் தானே.

மரணம் 09 பேர் !

இராணுவ இறப்புகளிலும் நாங்கள் மகிழ கூடாதுதான். அவர்களும் பிழைக்கத்தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞர்களே....! இறப்புகள் எங்கள் மீது திணிக்கப்படும் போது பிழைக்க வேறுவழியில்லை!

இந்த இறப்புகள் பெரிய மாற்றம் எதனையும் கொண்டுவரப் போவதில்லை! இவை மேலும் நிலமையை மோசமடையச் செய்தாலும் ஆச்சரியமில்லை. போர்களத்திலும் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும்! அப்போது தான் தலைக்கேறிய இனவாத பித்தம் குறையும்!

Edited by சாணக்கியன்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

3ஆவது மேடையில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது!

மூண்டாவது மேடையிலை இருந்து ரயில் எந்த ஊருக்கு புறப்பட இருந்ததாம்...??? பொல்காவலை, பதுளை பக்கமோ இல்லை வவுனியாவுக்கோ ....???

வவுனியா வண்டி காலை 9.30 ? மணி மாலை 4.45 இரவு 9.30 க்கு நடை மேடை 1,2,3 ல இருந்து புறப்படுகிறது... ஆனால் குண்டு வெடிச்ச நேரம் மாலை 2.10 ஆகவே இது பொல்காவளை பதுளை போகும் ரயிலாக இருக்கலாம்..

மாலை 2.10 க்கு வெடிச்சு இருக்கு ஒருவேளை வவுனியா ரயிலுக்கு வச்சது முன்னமே வெடிச்சிட்டுதோ எண்டு தோணுது.. அந்த குண்டை ரயிலுக்கை வைக்காமல் நடை மேலையிலை வைச்சு இருக்கிறார்கள் (ரயிலுக்கு சேதம் வராமல் இருக்கட்டும் எண்ட கரிசனையாக கூட இருக்கலாம்) தமிழர் அதிகம் பாதிக்க வேணும் எண்டும் அதுக்கு தமிழரையே குறை சொல்ல வேணும் ( அப்ப தான் இளந்த சர்வதேச அனுதாபத்தை மீட்டு போர் பிரகடனத்தை நியாயப்படுத்தலாம்) அதுக்காகதான் வீசாரணைக்கு முன்னம் பெண் தற்கொலை தாரி எண்டு அவசரமாக கதை விட்டவை போலயும்கிடக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

86 % பேர் யுத்தத்துக்கு ஆதரவாக அபிப்பிராயம் சொன்னபோது இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் அவர்களிட்ட சொல்லவில்லையோ ? தெரிந்திருந்தால் ஆதரித்திருக்க மாட்டார்களோ என்னவோ!!!!!

தமிழன் மட்டும்தானே சாகப்போறான் என்று சந்தோஷமாக மகிந்தவுக்கு ஆணை குடுத்திருப்பினம்.

சிங்களவரோ அவர்களின் ராணுவமோ கொல்லப்படும்போது நாம் மகிழக்கூடாதுதான், ஆனால் சிங்கள அரசின் இனவாத யுத்தத்தின் கருவிகளாக இருக்குமட்டும் அவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

உடனே சிலர் வரக்கூடும் " என்ன, இதைப் புலிகள்தான் செய்தார்கள் என்று நீங்கள் உரிமை கோறுகிறீர்களா " என்று. யார் செய்தால்த்தான் என்ன, யுத்தத்தின் தாக்கத்தை எல்லாரும் உணர வேண்டும், அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்

தயா,

நீங்க எங்கயோ போயிட்டீங்க..... ஆனா ரயில் அம்பேபுசவுக்கு போகஇருந்ததாம்!

The bomb had exploded on platform 3 beside a slow passenger train destined to Ambepusssa. A spokesman for the Colombo Fort Railway station said that all incoming trains to Fort Railway station have been temporarily halted.
  • தொடங்கியவர்

(6ம் இணைப்பு) கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 94 பேர் காயம்

[sunday February 03 2008 10:17:34 AM GMT] [யாழினி]

Tamilwin.com சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தின் ஊடான தொடருந்து போக்குவரத்துக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு இடம்பெற்றபோது கோட்டையிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் தொடருந்துகள் பல புறப்படத் தயாராக இருந்ததாகவும், வெளியிடங்களிலிருந்தும் பல தொடருந்துகள் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தொடருந்து நிலையத்தில் பெருமளவு சனநெரிசல் அப்போது காணப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:10 மணியளவில் தொடருந்து நிலையத்தின் 3 ஆவது இலக்க மேடையில் குண்டு வெடித்தது.

சம்பவ இடத்திலேயே 9 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒருவருடைய உடல் வயிற்றுப் பகுதியுடன் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட சடலம் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவருடையதாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்ற உடனடியாகவே காவல்துறையினரும், பெருமளவு படையினரும் தொடருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டனர். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக கோட்டைக்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் 94 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவு

தயா,

நீங்க எங்கயோ போயிட்டீங்க..... ஆனா ரயில் அம்பேபுசவுக்கு போகஇருந்ததாம்!

அப்ப அது பொல்காவலை...! திருகோண மலைக்கு அவசரமாக போபவர்கள் போய் மாறும் இடம்...!

  • தொடங்கியவர்

ஏற்கனவே தம்புள்ளை சம்பவத்தை அடுத்து தமிழ்மக்களை பாதுகாப்பதற்காக கொழும்பு வவுனியா சேவை மதவாச்சியோட மட்டுப்படுத்தப் பட்டிருந்ததாம் என்று இலங்கக்கோன் தெரிவித்தார்!

மன்னார் கொழும்பு வீதியும் முடப்பட்டுள்ளதாம்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் புகையிரதம் மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிச் செல்லும் புகையிரதம் எண்டு தமிழ்நெட் செய்தி வெளியிட்டு இருக்கு. சிலவேளை தயா சொன்னமாதிரி எங்களுக்கு ஆப்பு வைக்கப்போய் தாங்களே அப்பிழுத்த கதையோ தெரியாது ! சிதறுண்ட உடல்களில் ஒன்றை எடுத்து இதுதான் தற்கொலை குண்டுதாரி எண்டு சொல்றது அவ்வளவு ஒண்டும் கஷ்ட்டமான காரியம் இல்லையே ?

உப்பிடி எத்தினை விசாரணைகளைப் பாத்தாச்சு ?

இவ்வளவு காலமும் தலை தான் தனியே போய் விழுந்தது, இப்போது வயிறோடு சேர்ந்தெல்லோ விழுகுது ?

ஏற்கனவே தம்புள்ளை சம்பவத்தை அடுத்து தமிழ்மக்களை பாதுகாப்பதற்காக கொழும்பு வவுனியா சேவை மதவாச்சியோட மட்டுப்படுத்தப் பட்டிருந்ததாம் என்று இலங்கக்கோன் தெரிவித்தார்!

மன்னார் கொழும்பு வீதியும் முடப்பட்டுள்ளதாம்!

அதுக்கு காரணம் ஒண்று சிங்கள வெறியர்கள் வடக்கு நோக்கி போகமல் இருக்க, ( சிங்களவனை வெறியர்கள் எண்டு அரசு ஒத்து கொள்கிறது) இல்லை குண்டுகள் அந்த பக்கத்திலை இருந்து வராமல் இருக்க( இராணுவ வேலிகளை தாண்டி குண்டு வந்தால்தான் வீதியாலை வர முடியும்) அதுக்கு இராணுவ வேலிகளை பலப்படுத்தினால் போதாதா என்ன....??. எவ்வளவுகாலத்துக்கு இதை தொடர்ந்து செய்ய முடியும்...??

சிதறுண்ட உடல்களில் ஒன்றை எடுத்து இதுதான் தற்கொலை குண்டுதாரி எண்டு சொல்றது அவ்வளவு ஒண்டும் கஷ்ட்டமான காரியம் இல்லையே ?

கீழ கிடந்த பாசலுக்கு பக்கத்திலை நிண்டாலும் நெஞ்சுக்கு கீழ சிதறித்தான் போகும்... ஆனா இடுப்பிலை கட்டி இருந்தது வெடிச்சா உடம்பு இரண்டு துண்டுகளா ஆகி இருக்கணுமே...!! ஏன் எண்டா மேல் துண்டு கிடைச்சா கீழ் துண்டும் மட்டும் முற்றாக சேதமாகி இருந்திருக்க முடியாது...!!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.