Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி- 100 பேர் காயம்

Featured Replies

மின்னல் அண்ணை எங்கடை கைய்யில என்ன இருக்கு. எல்லாம் கடவுள் விட்ட வழி அண்ணை. நாங்கள் எவ்வளவு தான் முக்கி முனகினாலும் அவன் இன்றி அணுவும் அசையாது.

நீங்கள் சொல்லிறமாதிரி சிங்களவரை எல்லாம் அடிச்சுக்கலைச்சுப் போட்டு தமிழரின்ரை கைய்யில நிர்வாகத்தை கொண்டுவாறது பிறகு அதை ஏனைய நாடுகளை அங்கீகரிக்க வைக்கிறது எல்லாம் தமிழரின் விதியில இருந்தா அது கட்டாயம் நடக்கும். கடுமையாக யோசிச்சு பயப்பட்டு ஒண்டையும் காண முடியாது நம்பிக்கையோடு இருப்பம் நம்பிக்கை தானே வாழ்க்கை அண்ணை.

நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படித்தான் போராட்டம் வெற்றி பெறும் எண்ட நம்பிக்கையிலைதான் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறம். அந்த நம்பிக்கையிலைதான் போராடத்திற்கான பங்களிப்புக்கள் செல்கின்றன.

எனவே அந்த நம்பிக்கையைக் கெடுக்கிறமாதரி நையாண்டித்தனமாக எழுதாமல் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புக்கள் அதிகரிக்கிறமாதிரி, அவர்களை உற்சாகப்படுத்துற மாதரி கருத்துக்களை முன்வையுங்கள்.

  • Replies 91
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படித்தான் போராட்டம் வெற்றி பெறும் எண்ட நம்பிக்கையிலைதான் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறம். அந்த நம்பிக்கையிலைதான் போராடத்திற்கான பங்களிப்புக்கள் செல்கின்றன.

எனவே அந்த நம்பிக்கையைக் கெடுக்கிறமாதரி நையாண்டித்தனமாக எழுதாமல் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புக்கள் அதிகரிக்கிறமாதிரி, அவர்களை உற்சாகப்படுத்துற மாதரி கருத்துக்களை முன்வையுங்கள்.

அதிரடி மலிவில் தமிழீழம் . பத்துவீத விலைக்கழிவில் அதுவும் மாதா மாதம் கட்டுபணத்தில் கிடைக்கவிருக்கின்றது தமிழீழம் . சொகுசாய் சுகமாய் உல்லாசமாய் உங்கள் பொழுதைப்போக்க வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். இதோ தமிழீழம். போனல் வராது பொழுதானால் கிடைக்காது ஓடிவாருங்கள் தமிழீழம். முன் பதிவிற்கு முந்துங்கள். இப்ப உற்சாகமாய் இருக்கா .

குறுக்கால போவான் அவர்களின் எதிர்மறையான கருத்துகள் பலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்

இன அழிப்பில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற சிறு எண்ணம் கூட இல்லாத ஒரு பிறவியுடன் வாதாடிக் கொண்டு இருக்கிறீர்கள்

அதற்காக இப்படியான கருத்துகளை தயவு செய்து நிறுத்துங்கள் குறுகால போவான் செய்யும் செயற்பாடுகள் அதிகம் யாழ் களத்தினூடாக பெயர் குறிப்பிடாமல் பல செயற்பாடுகளில் அவரும் முன்னின்று செய்கின்றார் உதாரணத்துக்கு கருத்துபடங்களை சொல்லலாம் இதனை செய்திகுழுமத்தில் இருக்கும் அனைவரும் அறிவார்கள்

குறுகால போவான் சொல்லுவதில் தப்பேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை ஆனால் அவர் கருத்துகளை சொல்லும் விதம் சற்று காரமாக இருப்பது உண்மைதான்.

எமது வெற்றி நிரந்தர வெற்றியாக இருக்க வேண்டும் என அவர் ஆதங்கப்படுவது புரிகின்றது.சற்று ஆழமாக சிந்தித்துபாருங்கள் எல்லோருக்கும் புரியும்.

விமானம் வன்னியில் தரையிறங்கியதா,நடந்தது என்ன ,யாரின் கோமணம் அவிழ்ந்தது,அரசின் தந்திரமும் புலிகளின் எதிர்வினையும் என பிதற்றிகொண்டு இருக்கும் பத்திரிகை எழுத்தாளர்களின் கட்டுரைகளால் என்ன பயன்? வீணான அதீத எதிர்பார்புகளை புலிகள் மேல் ஏற்படுத்தும் ஒருவித அரசுக்கு உதவியான செயற்பாட்டை செய்து கொண்டிருக்கும் பத்திரிகை பந்தி எழுத்தாளர்கள் சிந்திப்பார்களா?எந்தவிதமான எதிர்வுகூறலும் வேண்டாம் உண்மையாக நடந்தாலும் நடந்தது என்ன என விபச்சாரம் செய்ய வேண்டாம் என்றாவது புலிகள் நடந்தது என்ன என கூறியிருகின்றார்களா அதற்கு சில காரணங்கள் உண்டு அது எதிர்காலத்தை முன்னிட்டும் இருக்கலாம் ஆகவே பலம் பலவீனம் பற்றி அலசி ஆராயாமல் புலிகளின் பலம் பலவீனம் பற்றி எவராலும் அலச முடியாதது வேற கதை நாட்டின் எதிர்காலத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும் எம்மை நாம் எவ்வாறு தயார்படுத்த வேண்டும் சிக்கலான நிலை ஏற்படும் போது நாட்டில் அந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்லப்போகின்றோம் என ஆராய்வோம்

தமிழனின் வெற்றி என்பது நிச்சயமானது ஆனால் அது எம்மவர் எழுதுவது போல எளிதானது அல்ல காற்றுப்போகமுடியாத இடத்தில் எல்லாம் எம்மவர் போகிறார்கள் என்கின்றோம் ஆனால் சில இடங்களில் சிக்கலாகும் போது அல்லது தந்திரோபாய நடவடிக்கை செய்யும் போது வீணாக சலிப்படைகின்றோம் இதற்கெல்லாம் காரணம் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஒவ்வொரு வீரர்களும் செய்யும் தியாகங்கள் அதில் இருக்கும் நடமுறை சிக்கல்கள் போன்றவற்றை கணக்கஎடுகாது கண்ணை மூடிக்கொண்டு கட்டுரை எழுதிறேன் பேர்வழி என கற்பனை குதிரைகளை தட்டி விடுவதே ஆகும்

நாங்கள் செய்கிறது குறுகிய காலத்திற்கான செயற்பாடுகள் என்றால் குறுக்காலபோவான் செய்வது எந்தக் காலத்திலும் ஒத்துவராத ஒன்று. எங்கள் கையில் நேரம் இல்லை. கழியும் ஒவ்வொரு மணித்துளியும் எத்தனையோ உயிர்கள் காவுகொள்ளப்பட்டுக்கொண்டிரு

நண்பர் சுஜீந்தன் குறுகியகால தீர்வினால் எமது பிரச்சினைகள் தீரும் என நீங்கள் சொல்வது வித்தியாசமாக உள்ளது நீண்டகால தீர்வே தமிழ் மக்களின் தேவை இன்று போல எமது சந்ததியினர் வாழ முடியாது ஆகவே நீண்டகால இறுதி தீர்வே முக்கியம் அதனை நோக்கியே தமிழர் தரப்பு முன்னேறுகின்றது இதுவரை கால மவுனம் எதற்காக என யோசியுங்கள்.எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்தி ஒட்டு மொத்ததையும் வீணாக்க முடியாது.தேசியத்தலைவர் காலத்தில் இறுதி தீர்வை காண்போம் எமக்கு கிடைத்த வரலாற்றின் பரிசு தலைவர்.வரும் காலத்தில் எமது சந்ததியினரின் உயிர்கள் காவுகொள்ளப்படாமல் எம் சந்ததி தமிழீழத்தில் வாழ வேண்டுமாயின் பொறுமை மிக மிக அவசியம்

அதிரடி மலிவில் தமிழீழம் . பத்துவீத விலைக்கழிவில் அதுவும் மாதா மாதம் கட்டுபணத்தில் கிடைக்கவிருக்கின்றது தமிழீழம் . சொகுசாய் சுகமாய் உல்லாசமாய் உங்கள் பொழுதைப்போக்க வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். இதோ தமிழீழம். போனல் வராது பொழுதானால் கிடைக்காது ஓடிவாருங்கள் தமிழீழம். முன் பதிவிற்கு முந்துங்கள். இப்ப உற்சாகமாய் இருக்கா .

சூப்பரா இருக்கண்ணா, பரவாயில்லை குறுக்கண்ணைக்கு இன்னொரு பக்க வாத்தியம் கிடைச்சிருக்கு.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

............. இல்லாத ஒரு பிறவியுடன் ............... கொண்டிருக்கு இந்தப் பிறப்பு .............

வைக்கொல் பட்டடை நாய் .................. அதுதான்..... விடாது.

இப்படி ஒரு பிறவி?!................. தேவைதானா ?

......... ஒரு அற்பப் பதருடன் நாம் இனியும் வாதாடத்தான் வேண்டுமா ?

இதற்குப் பதில் எழுதுவதைவிட ............ ரோட்டில் நாய் குலைக்குது எண்டு நாமும் குலைக்க முடியுமா? ...........

...............நிர்வாகத்திற்கு இதன் எழுத்துத் தேவைப் படுகிறது. ............. இதைப் புறக்கணிக்கப் பாருங்கள். குலைத்து விட்டுக் களைத்துப்போய் படுத்து விடும். அப்படியும் குலைப்பது நிற்கவில்லை என்றால் வேற வருத்தம் !

ரகுநாதன் என்கிற கருத்துக்கள உறவின் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகத்தை கண்டிக்கிறேன்!

சுயகட்டுப்பாட்டை இழப்பது, எதிர் கருத்தாளருக்கெதிராக நடவடிக்கை எடுக்க நிர்வாகத்தை அழைப்பது, பின்னர் நிர்வாகத்தினரிடம் கருத்துச் சுதந்திரத்தை பறிகொடுப்பது போன்றவை நிறுத்தப்பட வேண்டும்.

- சுதந்திர கருத்தாளர் சங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன், ஈழவன்!

நான் எழுதியது சிறிது அநாகரீகமாக இருக்கலாம். ஆனால் குறுக்காலபோவானின் "கோமணம்", "பனக்கொட்டை"....என்பதுபோன்ற அரிய சொற்தொடர்களை ஏன் யாரும் கண்டிக்க முன்வரவில்லை ? அவரது எழுத்தில் இருக்கும் நக்கலும் சீண்டலும் சரியென்று படுகிறதா உங்களுக்கு ? அவர் கிண்டலடிக்கும் விடயம் வெறுமனே நீங்களும் நானும் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக நாம் அனைவரும் எமது உயிருனும் மேலாக நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்த் தேசியமும், அதன் தலைமையில் நடக்கும் எமது போராட்டமும் சம்பந்தப்பட்டது. 20,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும், 80,000 பொதுமக்களினதும் உயிருடன் சம்பந்தப்பட்டது. எமது எதிர்கால இருப்பு சம்பந்தப்பட்டது.

இதையெல்லாம் ஒருவர் கிண்டலடிக்கும்போது நீங்கள் அதைச் சரியென்பதும், அதை எதிர்த்து நான் எழுதும்போது "நாகரீகம் தவறிவிட்டார்" என்று புலம்புவதும் என்ன நியாயம் ?

தமிழ்த்தேசியம் பற்றி இவர் எழுதிய நேரான கருத்து ஒன்றையாவது உங்களால் காட்ட முடியுமா? பின் எப்படி அவர் சொல்லும் கருத்துச் சரியானது, ஆனால் அவர் சொல்லும் விதம்தான் பிழை என்று கூறுகிறீர்கள்? புலம்பெயர்ந்தவர்களைக் கிண்டலடிப்பதும், அவர்கள் நம்பும், அல்லது எழுதும் தேசியம் சம்பந்தமான கருத்துக்களை தனக்கே உரிய பாணியில் விதண்டாவாதம் செய்வதும் தான் சரி என்கிறீர்களா?

உங்களில் பலருக்கு குறுக்காலபோவானின் கருத்துக்களை விமர்சிக்கப் பயம். அப்படி விமர்சிக்கப் போய் முறையாக வாங்கிக் கட்ட வேண்டி வரும் என்ற பயம். தேசியத்துக்கு எதிராகக் கதைக்கும் அவருக்கே இவ்வளவு தைரியம் இருக்கும்போது, தேசியத்தை ஆதரிக்கும் எங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் ?

எனக்குச் சரியென்று பட்டதை நான் எழுதுவேன். எனது எழுத்தில் நாகரீகம் இல்லாதிருந்தால் நிர்வாகம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் தயார். இதற்காக எமது போராட்டம் கொச்சைப் படுத்தப்படும்போது சும்மா பார்த்துக் கொண்டிருக்க நான் தயாரில்லை.

இவர்கள் தமது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது மற்றவர்களையாவது தமது கருத்துக்களைச் சொல்ல இடம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்கருத்துக்கள் வருவது தடுக்க முடியாது.

  • தொடங்கியவர்

ரகுநாதன்,

1) அநாகரீகமான வார்த்தையை யார் முதலில் உபயோகித்தது?

2) யாருடைய வார்த்தை அதிகம் அநாகரீகமானது?

போன்ற கேள்விகள் ஆக்கபூர்வமானவை அல்ல. இது தொடர்ந்து பிணக்கை நீடிக்கவே செய்யும் என்பது எனது தாழ்மையான கருத்து. அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், குறித்த கருத்தாளரையும் அவர் சார்ந்த கருத்துத்தையும் பார்வையாளர்களிடையே மேலும் பலவீனமடைவே உதவும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

மற்றும் படி நீங்களும் குறுக்ஸ்சும் ஒரே இறுதி நோக்கத்தையும் அதற்கான இரு வேறு வழிமுறைகளையும் கொண்டவர்களாகத்தான் எனக்குத் தெரிகிறீர்கள்!

அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் வடம் பிடிக்க வாழ்த்துகள்!

அன்புடன்,

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன்மாரே இங்க தலைப்பு கோட்டை தொடரூந்து நிலயத்தில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி-100 பேர் காயம்.

நீங்களும் ஒருக்கா பாத்து உறுதி படுத்தி கொள்ளுங்கோ...................

ஈழம்பற்றிய கரிசனை நல்லதுதான். ஆனால் இந்த விவாதப்போக்கு மாறுபட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது. தமிழீழத்தை எதிர்ப்பவர்களாக இங்கு யாரையும் காணவில்லை. தமிழீழம் பற்றிய கருத்தானது, ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயமுமன்று. அது ஒரு சமூகத்தின் அபிலாசை. அதனை எல்லோரும் ஞாபகத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும்.

நகைச்சுவைக்காக சிலர் எழுதுகின்ற விடயங்களை உண்மையாக விவாதிக்கப்படும் கருத்தா எடுக்கத் தேவையில்லை. எதிர்க்கருத்துகள் என்ற விடயம், ஈழம் பற்றியதாக முன்வைக்கப்படும்போது அதில் ஒன்றுமில்லாததைத்தான் நான் காண்கிறேன்.

மாற்றுக் கருத்து என்று உளறலுடன் வெளிப்படுத்தும் விடயம், எவருக்காகவோ பேசும் வாடகையாளராகத்தான் இருக்கும். தமிழீழம் அடையப்படுவது இறுதி இலக்கு. அந்த இலக்கின் அடுத்த செயற்பாடு அதனைப் பாதுகாத்தல் என்ற நிலைமட்டுமல்ல, உலக நாடுகளிடை தன்னையுமிணைத்து தனக்கொரு இடத்தினைத் தக்கவைத்துக் கொள்ளுதலும், என்ற முக்கிய அடைவையும் கொண்டது.

வேடிக்கையாக உள்ளது... குறுக்கால போனவரும் வேறும் சிலரும் கருத்து எழுதும் போது ஏனைய கருத்தை எழுதுபவர்களையும் நாகரிகமில்லாமல் எழுதுபோது சொல்லாததை ஏன் இப்போ சொல்லுவான்?

கருத்துக்கள் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் போவது ஏதோ உண்மை என்றே வைச்சுக்கொள்ளுவோம்... அதுக்காக குறுக்காலபோவார் சொன்னதுகள் எல்லாம் சரி அதுக்கு பதில் அழுதினாதான் பிழையா?

இது தமிழர்கள் சாகும் போது சும்மா இருந்துட்டு சிங்களவங்கள் சாகும்போது கண்டிப்பதை போன்றது...

இங்கு நடுநிலையாளரென்று சொல்லுபவர்களெல்லாம் உண்மையை உணர்ந்து ஆராய்ந்து சொல்லவேண்டும்...

இல்லையெண்டா யாழ்களத்தில இப்பிடித்தான் மற்றவர்கள் எளுதவேடுமென்று சொல்லப்படவேண்டும்...

சூறாவளி,

எங்களுக்குள் நாங்கள் மோதிக் கொள்வதன் அவசியமே, இறுதி இலக்கை அடைவதற்கான ஈழத்தின் பெறுபேற்றைக் காண்பதற்குத்தான். சிலரது கருத்துக்கள் தமிழீழத்திற்கு எதிரானதாகத்தானுள்ளது. அதுவும் வெளிப்படையானதாக இல்லாமல் மறைமுகமாகவே அதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு எதிர்க்கருத்து உருவாகும்போது அதற்கான எதிர்ப்புகள் களத்தில் உடனடியாகவே தோன்றிவிடுகிறது. அதனை வாசிப்பவர்கள், சரியான முறையில் நிலைமையைப் புரிந்துகொள்ளல் வேண்டும். அவ்வாறான கருத்தாடல் பலனைத்தரும். அந்த விடயம் கையாளப்படவேண்டியது ஒரு கருத்துடன் யாழ் களத்தில் எழுதுபவர்களால் செயற்படுத்த முடியும்.

நடுநிலையாளர் சமாதானத்தை உண்டுபண்ணுவோர் என்பவற்றையெல்லாம் கடந்தகாலத்தில் நாம் கண்டவர்கள்தானே. அதன்பின்பும் அதிலேன் நம்பிக்கை. யாரும் சொல்லாத விடயத்தை இந்த நடுநிலைவகிப்போர் சொல்லப் போகின்றார்களா?

நடுநலை பற்றி தேசியத்தலைவர் சொன்ன கருத்தொன்று. "நடுநிலையாளன் பழையானவற்றையும் அனுமதிக்கிறான்" என்பது. ஆகவே நடுநிலையாளன் என்றொருவன் இல்லை. ஏதோ ஒன்றைச் சார்ந்துதான் ஒவ்வொருவரும் இருத்தல் வேண்டும். ஒன்றாயிருக்கும் நமக்குள் குழப்பமேற்படுத்துபவர்களிடம

இறைவன்!

தமிழ் ஈழம் தான் முடிவென்று எப்போதோ முடிவாகிவிட்டது, அது நாம் பிறக்குமுன்னமே தெளிவாகிவிட்டது. தலைவரின் சொல்லை மாத்திரமில்லை அவரது சிந்தனைகளுமே எமக்கு வேத வாக்குத்தான்.

விமர்சனத்தின் மூலனாகவோ எதிர்க்கருத்தின் மூலமாகவோ விடுதலையை விதைக்கவோ போராட்டத்தை கொச்சை படுத்துவத்துவதன் மூலமாக பொரட்டத்துக்கான ஆதரவை உறுதி படுத்த முடியும் என்று நினைப்பது எதிர் வினையையே ஏற்படுத்தும் ... இதை சம்பந்தபட்டவர்கள் உணர்வது நல்லது.

இறைவன்!

தமிழ் ஈழம் தான் முடிவென்று எப்போதோ முடிவாகிவிட்டது, அது நாம் பிறக்குமுன்னமே தெளிவாகிவிட்டது. தலைவரின் சொல்லை மாத்திரமில்லை அவரது சிந்தனைகளுமே எமக்கு வேத வாக்குத்தான்.

விமர்சனத்தின் மூலனாகவோ எதிர்க்கருத்தின் மூலமாகவோ விடுதலையை விதைக்கவோ போராட்டத்தை கொச்சை படுத்துவத்துவதன் மூலமாக பொரட்டத்துக்கான ஆதரவை உறுதி படுத்த முடியும் என்று நினைப்பது எதிர் வினையையே ஏற்படுத்தும் ... இதை சம்பந்தபட்டவர்கள் உணர்வது நல்லது.

ஏற்றுக்கொள்கிறேன்.

இறைவன்!

தமிழ் ஈழம் தான் முடிவென்று எப்போதோ முடிவாகிவிட்டது, அது நாம் பிறக்குமுன்னமே தெளிவாகிவிட்டது. தலைவரின் சொல்லை மாத்திரமில்லை அவரது சிந்தனைகளுமே எமக்கு வேத வாக்குத்தான்.

விமர்சனத்தின் மூலனாகவோ எதிர்க்கருத்தின் மூலமாகவோ விடுதலையை விதைக்கவோ போராட்டத்தை கொச்சை படுத்துவத்துவதன் மூலமாக பொரட்டத்துக்கான ஆதரவை உறுதி படுத்த முடியும் என்று நினைப்பது எதிர் வினையையே ஏற்படுத்தும் ... இதை சம்பந்தபட்டவர்கள் உணர்வது நல்லது.

நிச்சயமாக!

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் சூராவளி.

சிலரது நக்கலும் நளினமும் போராட்டத்துக்கு எந்தவித நண்மையையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் போராட்டத்தின்பால் மக்களுக்கு சலிப்பை உண்டாக்கி பின்னர் படிபடியாக அவர்களை அதிலிருந்து விலக வைப்பதுதான் இச்செயற்பாடுகளின் நோக்கம். இதை அவர்கள் மாற்றுக் கருத்து என்ற பெயரில் கனகச்சிதமாகச் செய்து வருகிறார்கள்.

இப்படியானவர்களின் கருத்துக்களுக்காக வக்காலத்து வாங்கும் சிலரிடம் ஒரு கேள்வி, நீங்கள் ஆதரிக்கும் இவ்வாறான கருத்துக்களால் எதை இறுதியில் அடையலாம் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? அவர் கருத்துப்படம் போட்டார், அதைச் செய்தார், இதைச் செய்தார் என்கிறீர்கள், எல்லாம் சரி, என்ன எழுதுகிறார் என்று யாரும் ஏன் ஒன்றும் கூறவில்லை ?

எதை எடுத்தாலும் கிண்டலடிக்கும் ஒருவரிடம் இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை. போராட்டம் பற்றிக் கிண்டல், மாவீரர்கள் பற்றிக் கிண்டல், புலம்பெயர்ந்தவர்களின் உதவி பற்றிக் கிண்டல், அவர்களது நம்பிக்கை பற்றிக் கிண்டல், எழுத்தாளர்கள் பற்றிக் கிண்டல், நடக்கும் தாக்குதல்கள் பற்றிக் கிண்டல்(டோரா அடித்தாலும் கிண்டல்....ஒற்றைத்துப்பாக்கி எடுத்தாலும் கிண்டல்)....இதைவிட என்னத்தைக் கண்டோம் ? இவர்களைப் பொறுத்தவரை புலிகள் போராடுவதுதான் பிழை. போராட்டம் நின்றால் எல்லாம் சரியாக நடக்கும். சிங்களவன் பலமானவன், அதனால் நாங்கள் எல்லோரும் போராட்டத்தை கைவிட்டு விட்டு சரணடைவோம்........

அவரின் இந்த அயராத நடவடிக்கைக்கும், அதைச் சரியென்று வாதிடுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்தக் கிண்டல் எல்லாம் எங்களுக்கு நிச்சயமாக போராட்டத்தில் வெற்றியைத் தரும் என்று நம்புவோமாக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.