Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிக் விண்கலம் இன்று புறப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிக் விண்கலம் இன்று புறப்படுகிறது

[07 - February - 2008] [Font Size - A - A - A]

வாஷிங்டன் : அட்லாண்டிக் விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் இன்று விண்ணுக்குப் புறப்படத் தயாராக உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் இக்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது.

நாசாவால் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக கட்டுமானப் பொருட்கள், ஆய்வகக் கருவிகள், விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல அட்லாண்டிக் விண்வெளி ஓடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு இந்த ஓடம் பலமுறை விண்ணுக்குச் சென்று வந்துள்ளது.

இந்நிலையில், டிசம்பரில் விண்ணுக்குச் செல்வதில் தடைபட்ட ஓடம் இன்று மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் திங்கட்கிழமை மதியம் முதல் ஆரம்பித்துள்ளது.

அட்லாண்டிஸை ஏவுவதற்கான ஏற்பாடுகளை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையம் செய்து வருகிறது. தட்ப வெப்ப சூழ்நிலையும் அட்லாண்டிஸ் புறப்படுவதற்கு ஏற்றதாக உள்ளது.

இருப்பினும் அட்லாண்டிஸ் புறப்படும்போது உள்ள தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே புறப்படும் நேரம் அமையும் என நாசா தெரிவிக்கிறது.

இந்த அட்லாண்டிஸ் ஓடம் விண்ணுக்குப் புறப்படும்போது ஜப்பான் விண்வெளி மைய ஆய்வகத்தை உடன் கொண்டு செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் விண்வெளி மைய அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விண்வெளி சர்வதேச நிலையத்தில் உள்ளது.

இந்த ஓடத்தில் புறப்படுவதற்காக பிரான்ஸைச் சேர்ந்த லியோபோல்ட் இகார்ட்ஸ், ஸ்டான்லி, ஜெர்மனியின் ரெக்ஸ் வால்ஹியம், லெலான்ட் மெல்வின், பைலட் ஆலன் பாயின்டெக்ஸர் மற்றும் ஸ்டீபன் பிரிக் ஆகியோர் திங்கட்கிழமை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்துக்கு வந்தடைந்துள்ளனர்.

நாசாவின் விண்வெளி ஓடங்களில் சில வரும் 2010 க்குள் தனது வலு, ஆயுளை இழக்கும் என்பதால் சரக்கு அனுப்பும் விண்வெளி ஓடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க நாசா திட்டமிட்டுள்ளதுடன், இதற்காக ஏராளமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

thinakural.com

ம்ம்ம்....புறப்படுறது எல்லாம் ஒகே "தேசிக்காயை" கட்டினவையோ :icon_mrgreen: விண்கலத்தில ஏனேன்றா எவ்வளவு தூரம் போயினம் எல்லாரும் கவனமா வரவேண்டும் அல்லோ கட்டாட்டி கட்டிட்டு போக சொல்லுங்கோ இல்லாட்டி தெய்வகுற்றம் ஆக போது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஆவ்ரரோல் தேசிக்காய் மேல கொண்ட நம்பிக்கையை நம்ம மேல கொண்டா எல்லாம் வெற்றி" :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசனிக்காய் கட்டினவையாம் நாவூறு படாமல் இருக்க. :icon_mrgreen::lol:

கோள்களில் விண்கலங்களைத் தரையிறக்கி ஆய்வு நடத்துற வெள்ளைக்காரங்கள் அங்கை ஆட்களையும் தரையிறக்கி ஆய்வு நடாத்த தயாராகிக் கொண்டிருக்கேக்கை அவனுக்கு தேசிக்காய், பூசணிக்காய் எண்டு காட்டி அவனையும் கோள்களிற்கு கோயில் கட்டி கும்பாவிசேடம் செய்ய வைப்பியள் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.