Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • 2 weeks later...
  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல்களும். அவற்றின் பரப்பளவும்

உலகில் உள்ள கடல்களும். அவற்றின் பரப்பளவும் (சதுரக்கிலோமீட்டர்)

1.தென் சீனக் கடல் --- 29,64,615.

2.கரீபியன் கடல --- 25,15,926.

3.மத்திய தரைக் கடல --- 25,09,969.

4.பேரிங் கடல் --- 22,61,070.

5.மெக்சிகோ வளைகுடா --- 15,07,639.

6.ஜப்பான் வளைகுடா --- 10,12,949.

7.ஒக்கோட்ஸ்க் கடல் --- 13,92,125.

8.ஹட்சன் வளைகுடா --- 7,30,121.

9.அந்தமான் கடல் --- 5,64,879.

10.கருங்கடல் --- 5,07,899.

11.செங்கடல் --- 4,52,991.

12.வடகடல் --- 4,27,091.

13.பால்டிக் கடல் --- 3,82,025.

14.கிழக்கு சீனக்கடல் --- 12,52,180.

15.கலிஃபோர்னியா வளைகுடா --- 1,61,897.

16.அரபிக் கடல் --- 2,25,480.

17.ஐரிஸ் கடல் --- 8,650.

18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா --- 2,28,475

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்)

410862582_924abc5320_o.jpg

1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான வேடிக்கை

கடந்த July 4 ஆம் தேதி டெம்பல்-1 என்ற வால் நட்சத்திரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலனை மோதி நாசா விஞ்ஞானிகள் சாதனை புரிந்தார்கள் அல்லவா?

டீப் இம்பாக்ட் என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு விதை 1998 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டது. அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஹhலி வால் நட்சத்திரத்திலுள்ள கருமையான மேற்பகு தியை ஆராய்வதற்காக ஒரு விண்கலனை அதில் மோதவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால் விண் கலனை சரியான பாதையில் செலுத்தக்கூடிய உயர் தொழில்நுட்பம் இல்லாததால் அப்போது அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் தற்போது விண்ணியல் தொழில் நுட்பங்கள் பெருமளவு முன்னேற்ற மடைந்துள்ளதால் நாசா விஞ்ஞானிகள் தைரியத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டனர்.

முயற்சியெல்லாம் சரி, ஆனால் எதற்காக இந்த மோதல்? இதனால் என்ன இலாபம்?

நாம் முன்பே வால் நட்சத்திரங்களை பற்றி கூறும் போது அவை 450 கோடி ஆண்டுகளுக்கு முன் Nரியன் உருவான காலக்கட்டத்தில் வாயுக் களும், தூசு மேகங்களும் சேர்ந்து உருவானவை ஆகையால் அவற்றின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள பகுதிகளை ஆராய்ந்தால் Nரியன் உருவான வரலாற்றை பற்றி மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் பூமிக்கு கொண்டு வந்து ஆராய்வதற்கு இவை ஒன்றும் சிறு கற்களல்லவே, ஒவ்வொன்றும் பல மைல்கள் அளவுக்கு நீண்ட இராட்சத விண் பாறைகளாகையால் இங்கிருந்து ஒரு விண்கலனை ஏவி அதனை வால் நட்சத்திரத்துடன் மோதினால் அதன் மேற்புறத்துக்கு அடியிலுள்ள பகுதிகள் வெளியே தெரியும். அவற்றை ஆராய்ந்து Nரியன் மற்றும் பூமி உருவான வரலாற்றை பற்றி புதிய தகவல்களை அறிய முடியும்.

பூமியிலிருந்து ஒரே பகுதியாக ராக்கெட் மூலம் அனுப்பப் பட்ட டீப் இம்பாக்ட் விண்கலம் டெம்பல்-1 வால் நட்சத் திரத்தை நெருங்குகையில் இரண்டாக பிரிந்து அதில் ஒரு பகுதி டெம்பல்-1 நோக்கி மோதுவதற்கு புறப்பட்டது. மற்றெhரு பகுதி இந்த மோதலை படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது. தாய்க் கலத்திலிருந்து பிரிந்த 24 மணி நேரத்தில் 371

கிலோ எடையுள்ள மோதும் கலன் மணிக்கு 70,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று டெம்பல்-1 வால் நட்சத்திரத்தை தாக்கி பெரும் தீப்பிழம்பு களுடன் வெடித்து சிதறியது. இது பார்ப்பதற்கு வாண வேடிக்கையை போல தோற்றமளித்தது. இந்த மோதலின் மூலம் 5 டன் எடை வெடிப் பொருட்களுக்கு இணையான சக்தி டெம்பல்-1 வால் நட்சத்திரத்தில் உண்டாகியது. இதனால் 325 அடி அகலமும், 80 அடி ஆழம் கொண்ட பள்ளம் இந்த வால் நட்சத்திரத்தில் உருவாகி யுள்ளது. இந்த மோதல் முயற்சிக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா 1500 கோடி ரூபாய்கள்.

டீப் இம்பாக்ட் விண்கலன் பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் இங்கிருந்து நாம் அதனை கட்டுப்படுத்த நாம் இடும் கட்டளைகள் 7-1 2 நிமிடங்களுக்கு பிறகு தான் விண்கலனுக்கு போய் சேரும். இதனால் விண்கலனை நகர்த்துவதற்கு முன்கூட்டியே அதன் பாதையை தெரிந்து வைத்து அதற்கேற்ப கட்டளை களை இங்கிருந்து செயல்படுத்த வேண்டும்.

இந்த டீப் இம்பாக்ட் மோதலினால் டெம்பல்-1 வால் நட்சத்திரத்தின் பாதையில் பெருமளவு மாற்றங்கள் நிகழப் போவதில்லை. அதன் வேகம் மட்டும் மணிக்கு 0.014 அங்குலம் என்ற ரீதியில் குறைகிறது. இதனால் பூமிக்கோ, டெம்பல்-1 வால் நட்சத்திரத்துக்கோ எந்த ஆபத்துமில்லை.

தினகரன்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணக்கார்வலர்களுக்கு ஒரு

சிறிய தகவல்...

5ல் முடியும் எந்தவொரு

எண்ணின்

வர்க்கத்தை(இருமடியை)யும்

எளிதில் கணக்கிடும் முறை...

முதலில் எண்ணின்

கடைசியிலுள்ள 5ஐ

நீக்கிவிட்டு(கவனிக்கவும்...கழ??த்துவிட்டு

அல்ல) எஞ்சிய எண்ணை அதற்கு

அடுத்த எண்ணுடன் (இங்கு 1ஐக்

கூட்டவும்) பெருக்கி வரும்

எண்ணுடன் 25ஐ

சேர்த்தால்(கவனிக்கவும்

இங்கு கூட்டல் அல்ல)

தேவையான விடை

கிடைத்துவிடும்..

----------

உதாரணம் ...

25 x 25 = 625

படி.1 ) 25ல் உள்ள 5ஐ

நீக்கவும்..........எண் 2

படி.2 ) 2உடன் 1ஐக் கூட்டவும்

...........எண் 3.

படி.3 ) இரண்டையும்

பெருக்கவும் .......2x3 = 6

படி.4 ) 25ஐ சேர்க்கவும்

.........................எண் 625 (தேவையான

விடை)

எத்தனை இலக்க எண்ணுக்கும்

இது பொருந்தும்..

----------------------------------------------------------------------------------------------------------------------------

11ன் வர்க்கம் (இருமடி) 121

என்று உங்களுக்கு

தெரிந்திருக்கும்.....

111ன் வர்க்கம் என்ன என்று

எளிதாக கூறமுடியுமா ??

முடியும்.. 12321 என்று ஒரு

வினாடிக்கும் குறைவான

நேரத்தில் சொல்லமுடியும்..

இதேபோல மற்ற

எண்களுக்கும்....

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

...

...

111111111 x 111111111 = 12345678987654321

_dancetothebeat__by_InvaderMar.gif

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் அடி உயரத்தில்...

குரங்குகள் மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான். ஆனால் மிக அதிகமான மலைப் பகுதியில் குரங்குகளை பார்க்க முடியுமா?... முடியும். சீனா திபெத்திய பீட பூமியின் தென்பகுதிகளில் காணப்படும் தங்க நிறக் குரங்குகள் 10 ஆயிரம் அடி உயரமான மலையில் அதிகம் வசிக்கின்றன. இது அபூர்வ வகை இனக் குரங்காகும்.

பனி காலத்தில் இவை கடும் குளிரைத் தாங்க முடியாமல் மலையடிவாரத்திற்கு வந்து விடும்.

இதன் உடல் நீள அளவிற்கு வாலின் நீளமும் இருக்கும். வால் இரண்டரை அடி நீளம் வரை வளரும்.

அண்மையில் சீனாவின் சான்டோங் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தங்க நிற பெண் குரங்கு ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. அந்தக் குட்டியை முதன் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு அனுமதித்தார்கள்.

நன்றி தினதந்தி.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Theorem : 3=4

Proof:

கணக்கு வாத்தியாரை மடக்கமுடியுமா?

Suppose: a + b = c

This can also be written as:

4a - 3a + 4b - 3b = 4c - 3c

After reorganising:

4a + 4b - 4c = 3a + 3b - 3c

Take the constants out of the brackets:

4 * (a+b-c) = 3 * (a+b-c)

Remove the same term left and right:

4 = 3

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Theorem: 4 = 5

Proof:

16 - 36 = 25 - 45

4^2 - 9*4 = 5^2 - 9*5

4^2 - 9*4 + 81/4 = 5^2 - 9*5 + 81/4

(4 - 9/2)^2 = (5 - 9/2)^2

4 - 9/2 = 5 - 9/2

4 = 5

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்

உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்.

எனவே நாமும் நமது முன்னேற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.

webdunia

Theorem : 3=4

Proof:

கணக்கு வாத்தியாரை மடக்கமுடியுமா?

Suppose: a + b = c

This can also be written as:

4a - 3a + 4b - 3b = 4c - 3c

After reorganising:

4a + 4b - 4c = 3a + 3b - 3c

Take the constants out of the brackets:

4 * (a+b-c) = 3 * (a+b-c)

Remove the same term left and right:

4 = 3

a+b=c

a+b-c=0....

ஆகவே இதனால் வகுக்க முடியாது....0 அல்லாத பெறுமானம் என்றால் மட்டுமே வகுக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

Theorem: 4 = 5

Proof:

16 - 36 = 25 - 45

4^2 - 9*4 = 5^2 - 9*5

4^2 - 9*4 + 81/4 = 5^2 - 9*5 + 81/4

(4 - 9/2)^2 = (5 - 9/2)^2

4 - 9/2 = 5 - 9/2

4 = 5

(4-9/2)^2 =(5-9/2)^2

4-9/2 = -1/2

5-9/2= 1/2

-1/2 =/= 1/2

அடிகள் (Bases) சமனில்லாததால் அடுக்குகளை (powers) சமன் செய்ய முடியாது.

ஆகவே நீங்கள் (4-9/2) = (5-9/2) என்று எழுத முடியாது. இந்த இடத்தில் உங்கள் சமன்பாடு தவறி இருக்கிறது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Cartoon எப்படி வந்தது..?

இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.

கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.

1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.

கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.

காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்தான் நமக்கு சீனியர்.

நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர்.

முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது.

அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது.

முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1888 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈ - மெயில் வந்த பிறகு... சாதாரண தபால்களை எல்லாம் ஸ்னெயில் மெயில் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நத்தை அத்தனை சாதாரணமானது இல்லை. படா கில்லாடி. அதற்கென பல சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டது.இதனை வீட்டு தோட்டங்களிலும், வயல் வெளிகளிலும் பார்த்து இருக்கலாம்.

snail01.gif

மோலஸ்க் பைலம் என்ற தொகுதியில் ஒரு வகையான கேஸ்ட்ரோபோட்ஸ் (gastropods.) என்ற வகையை சார்ந்தது தான் நத்தை.இதற்கு தூரத்து சொந்தம் ஆக்டோபஸ். கிரீக்கில் காஸ்ட்ரோ என்றால் வயிறு, போடோஸ் என்றால் கால்கள் , வயிற்றில் கால்களைக்கொண்டது என பொருள். நத்தை வயிற்றின் மீது தான் ஊர்ந்து செல்கிறது, அதன் வாயும் அங்கே தான் இருக்கிறது, தட்டு , ஸ்பூன் எல்லாம் வைத்து சாப்பிடாது, அதன் சாப்பாடே தட்டு தான் , எதன் மீது ஊர்ந்து செல்கிறதோ அதனை உண்ணும்.

நில நத்தைகள், கடல் நத்தைகள் என்று இரண்டு வகை உண்டு , வயல்களிலும் தோட்டத்திலும் காண்பது நிலவகை. முன்னால் இரண்டு நுகர் உணர்வு கொம்புகள் உண்டு அதன் முனையில் சக்திவாய்ந்த கண்கள் உண்டு!அவை ஊர்ந்து செல்லும் போது ஒரு கோழை படிவத்தை விட்டு செல்லும் அது எளிதாக நகர உதவுகிறது.மேலும் அதன் உடல் உலராமல் இருக்கவும் பயன்படுகிறது.கோடைகாலத்தில் நீண்டகால உறக்கத்தில்(hybernation) சென்று விடும் நத்தை அப்போது இந்த கோழைபடிவத்தை வைத்து தான் உடலை போர்த்திக்கொள்ளும். மீண்டும் மழை பெய்தவுடன் வெளிவரும்.

* ஒரு நத்தையால் கூர்மையான பிளேடு் ஒன்றின் விளிம்பில் கூட நகர்ந்து செல்ல முடியும் அத்தனை வலிமையானது அதன் பாதங்கள் மற்றும் அடிவயிறு!

*மூல வியாதிக்கு நத்தை கறி சாப்பிடுவது இன்றும் இருக்கும் நாட்டு வைத்தியம்!

* சில நத்தைகள் விஷத்தன்மை கொண்டது , பெப்டைட்(peptides) வகை விஷம்.அதிலும் கடலில் வாழும் கூம்பு வடிவ நத்தையின்

கூம்பு வடிவ நத்தை

(Conus magus,Conus geographus) விஷம் வீரியமானது அதன் இரைகளை விஷம் கொண்ட நாக்கால் அம்புவிடுவது போன்று விட்டு தீண்டி செயலிழக்க செய்து சாப்பிடும். அதன் விஷம் ஒரு வினாடியில் 10 இல் ஒரு பகுதி நேரத்தில் தாக்கி செயலிழக்க செய்யும், இயற்கை விஷத்தில் வேகமானது இது தான். ஆனால் மனிதர்களை தாக்குவதில்லை. தெரியாதனமாக நாமே கையால் தொட்டு கொட்டு வாங்கினால் உடல் உறுப்புகள் செயல் இழக்கப்படலாம்,மரணம் வெகு அரிதே!

Conus magus

c_magus1919.jpg

Conus geographus

kegelschnecke1.jpg

* இந்த விஷத்தையும் விஞ்ஞானிகள் சும்மா விடவில்லை ஆராய்ந்து பார்த்து உடல் வலி நீக்கும் வலி நிவாரணி மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்.ரியால்ட் (Prialt ) என்று பெயர்.முதுகெலும்பு வலிக்கு நல்ல மருந்தாம்.

*நத்தைகளில் ஆண் பெண் என்று தனியே கிடையாது , ஒரு நத்தையிடமே ஆண்,பெண் பால் உறுப்புகள் (hermaphroditic.) இருக்கும். இரண்டு நத்தைகள் சேர்ந்தும் இனப்பெருக்கம் செய்யும், ஒரே நத்தையே அதன் ஆண்,பெண் உறுப்புகளைக்கொண்டு தனக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியும்!

shutterstock_1045514.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ரகசியங்கள்

இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.

இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.

இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.

இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.

1911ஆ‌ம் ஆ‌ண்‌டி‌ல் இரு‌ந்துதா‌ன் புதுடெ‌ல்‌லி இ‌ந்‌தியா‌வி‌ன் தலைநக‌ராக செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ல் உ‌‌ள்ள ‌மிக‌ப்பெ‌ரிய ஏ‌ரி ஒ‌ரிசா‌விலு‌ள்ள ‌சி‌லிகா ஏ‌ரிதா‌ன். இத‌ன் பர‌ப்பளவு 100 ‌கி.‌மீ‌ட்ட‌ர் ஆகு‌ம்.

இ‌ந்‌திய தே‌சிய‌க் கொடியை வடிவமை‌த்தவ‌ர் சுரே‌ந்‌திரநா‌த் பான‌ர்‌‌ஜி. ஆ‌ண்டு 1906.

இ‌ந்‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இ‌ல்லாத மா‌நில‌ம் மேகாலயா.

இ‌ந்‌தியா பரு‌த்‌தி உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது.

இ‌ந்‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இ‌ங்கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அ‌திக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இ‌ந்‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா.

webulagam

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சிக் குடிக்கும்.

* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

* புறா ஓய்வெடுக்காமல் 1000 கி.மீ. வரை பறக்கும்.

* நீண்ட நேரமும், நீண்ட தூரமும் பறக்கும் ஒரே பறவை புறா.

* மனிதன் ஆயுளில் சுமார் 23 வருடம் தூங்குகிறான்.

* பிறந்த குழந்தை நாளொன்றுக்கு சுமார் பதினெட்டு மணி நேரம் வரை தூங்குகிறது.

* மூன்று வயதிலிருந்து ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் நாளொன்றுக்கு பதினோறு மணி நேரம் வரை தூங்குகின்றது.

நன்றி: முத்தமிழ்மன்றம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரைக்கு அடியில் 1 கிலோ மீட்டரிலிருந்து 6 கிலோ மீட்டர் வரையான பகுதியில் காணப்படும் பிசு பிசுப்பான, குழம்பு போன்ற எண்ணெய்ப் பொருளைக் கனிம எண்ணெய் என அழைப்பர். உலகின் இன்றைய பல கண்டுபிடிப்புகளுக்கு இந்த எண்ணெய்ப் பொருளே மூல காரணமாய் விளங்குகிறதெனலாம். சுமார் 90% புதிய பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு இதுவே மூலப் பொருளாக விளங்குகிறது.

எட்வின் எல். டிராக் (Edwin L Drake) என்ற எழுத்தறிவற்ற, வேலை ஏதுமில்லாத அமெரிக்கர் ஒருவரே 1859இல் இந்த எண்ணெயைக் கண்டுபிடித்தவர். அவருக்கு இக்கண்டுபிடிப்புக்கான ஊக்கம் அளித்தவர் நியூயார்க் வழக்குரைஞர் ஒருவராவார். ஜார்ஜ் எச். பிசெல் எனும் அந்த வழக்குரைஞருக்கு, 1854ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பேராசிரியர் ஒருவர் கனிம எண்ணெயின் சிறிதளவு மாதிரியைக் காட்டினார். இப்பேராசிரியர் தமது ஆய்வுக்கூடத்தில் அம்மாதிரியைப் பயன்படுத்திச் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று பிசெலிடம் உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பரிசோதனை அக்காலத்தில் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பேராசிரியரின் கருத்துகள் பிசெல் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. கனிம எண்ணெயைத் தூய்மைப் படுத்துவதற்கான புதிய நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். இதன் விளைவாக கெரசின் எனப்பட்ட மண்ணெண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 20 டாலர் வரை கொடுத்து வாங்க வர்த்தகர்கள் முன்வந்தனர்.

ஆனால் பிசெலின் முயற்சிகள் வெற்றியடையவில்லை; கையிலிருந்த பணம் எல்லாம் செலவழிந்து விட்டது. இந்நிலையில் எட்வின் எல் டிராக் தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். டிட்ஸ்வெல் என்னுமிடத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றைத் தோண்டினார். உள்ளூர் மக்கள் அவரை நையாண்டி செய்த போதிலும் அவரது முயற்சி வெற்றி பெற்றது; ஒரு நாள் 69 அடி ஆழத்தில் எண்ணெய் வெளிப்பட்டது. எண்ணெய் பம்பின் துணை கொண்டு டிராக் ஒவ்வொரு நாளும் 20 பீப்பாய் எண்ணெயை வெளிக்கொணர்ந்தார்.

1867ஆம் ஆண்டு வாக்கில் நிலக்கரி எண்ணெய்க்குப் பதிலாக, முழுதுமாய் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்க நாடுகளின் உள்நாட்டுப் போரின் போதும் இந்த மண்ணெண்ணெயே பயன்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பருத்திக்குப் பதிலாக இந்த எண்ணெயைக் கொண்டு அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டது. சண்டைக்குப் பின்னர் அமெரிக்காவின் தொழில்மயத்துக்கு மண்ணெண்ணெய் பேருதவி புரிந்தது. பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பல இடங்கள் ஆகியவற்றில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கிழக்கில், எண்ணெய் வளப் பகுதிகள் கண்டுகொள்ளப் படாமலே இருந்தன.

1870ஆம் ஆண்டில் லார்ட் ராய்ட்டர் கனிமம் மற்றும் எண்ணெய்க்கான உரிமைகளைக் குத்தகையாக பாரசீக அரசிடமிருந்து பெற்றார். ராய்ட்டரைத் தொடர்ந்து, வில்லியம் காக்ஸ் டா உர்ச்சி இத்துறையில் நுழைந்தார். இவர் ஆஸ்திரேலியத் தங்கச் சுரங்கங்களிலிருந்து ஏராளமாகப் பொருளீட்டியவர். இவர் இருபதாயிரம் பவுண்டுகளைப் பாரசீக அரசுக்கு அளித்து சுமார் ஐந்து இலட்சம் சதுர மைல் பரப்பில் எண்ணெய் எடுக்கும் உரிமையைப் பெற்றார். ரேனால்ட்ஸ் என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் எண்ணெய் எடுப்பதற்கு, நிலத்தைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1904ஆம் ஆண்டு ஜனவரியில் நிலத்தடியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அக்கிணற்றில் எண்ணெய் உடனடியாக வறண்டு விட்டது. இதற்குள் டா உர்ச்சி சுமார் ஒன்றேகால் இலட்சம் பவுண்ட் பணத்தை, மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவழித்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் ரேனால்ட்சின் முயற்சி 1908 மே 26இல் வெற்றியடைந்து பாரசீகத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலோ பெர்சியன் எண்ணெய்க் கம்பெனி என்றதொரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. சுமார் 130 மைல் நீளத்திற்கு எண்ணெயை எடுத்துச் செல்வதற்கான குழாய் ஒன்றைப் புதைக்க வேண்டி இருந்ததாலும், ஒரு சொட்டு எண்ணெயைக் கூட விற்க முடியாததாலும் கம்பெனி நட்டத்தில் இயங்கிப் பொருளாதார நெருக்கடி உண்டாயிற்று. இந்த நிலையில் பிரிட்டனின் கப்பல் துறை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் பாரசீக எண்ணெய்த் தொழிலின் கொள்கையை மறு பரிசீலனை செய்து எண்ணெய்க்குப் பதிலாக நீராவியைக் கப்பலின் எரிபொருளாகப் பயன்படுத்த முடிவெடுத்தார். இதனால் பாரசீகத்தின் நலிந்த எண்ணெய்த் தொழில் புத்துயிர் பெற்றது. இதற்குள் முதல் உலகப் போரின் போது மத்தியக் கிழக்கின் எண்ணெய்த் தொழில் புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்ததோடு, பிரிட்டனும் வலிமையடைந்தது.

இந்தியாவில் எண்ணெய்க் கண்டுபிடிப்பு

இந்தியாவின் முதல் எண்ணெய்க் கிணறு 1866ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நஹர் பங்க் என்னுமிடத்தில் தோண்டப்பட்டது. ஆனால் இக்கிணற்றில் எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் அசாமின் மகம் எனுமிடத்தில் 1867இல் தோண்டப்பெற்ற கிணற்றில் எண்ணெய் கிடைத்தது. அசாம் இரயில்வே கம்பெனி மற்றும் சிண்டிகேட் ஆகியன 1890-93 ஆம் ஆண்டுகளில் நான்கு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டின. இரு கம்பெனிகள் சார்பிலும் சுமார் 15 எண்ணெய்க் கிணறுகள் 1898ஆம் ஆண்டுவரை தோண்டப்பெற்று அவை பெரும் வெற்றி பெற்றன. பின்னர் இரு கம்பெனிகளும் ஒன்றிணைந்து அசாம் எண்ணெய்க் கம்பெனி என்ற பெயரால் விளங்கியது. சில காலம் கழித்து 1901ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் தூய்மைப்படுத்தும்சாலை ஒன்று திக்பாய் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டு வாக்கில் அசாம் எண்ணெய் ஆலை 80 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி நாளொன்றுக்கு 14000 காலன் கனிம எண்ணெயை வெளியேற்றியது. அதே ஆண்டு பர்மா எண்ணெய்க் கம்பெனி இதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

1959ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் காம்பத் என்னுமிடத்தில் முதன்முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காம்பத் தவிர குஜராத்தின் அங்க்லேஷ்வர் மற்றும் கல்லோல் ஆகிய இடங்களில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

இந்தியாவின் எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கு, சோவியத் ஒன்றியம் பேருதவி புரிந்துள்ளது. எண்ணெயைக் கண்டுபிடித்தல், வெளிக்கொணர்தல், தூய்மைப்படுத்தல் ஆகிய அனைத்திலும் அந்நாடு உதவியுள்ளது. அவர்கள் கருத்துப்படி நமது நாட்டில் தற்போது சுமார் 4 மில்லியன் டன் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது; அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 150 மில்லியன் டன் எண்ணெயை நமது நாடு உற்பத்தி செய்ய இயலும். இதற்கேற்ப பல இடங்களில் எண்ணெய் வள ஆய்வும், புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற நாடுகளில் எண்ணெய் உற்பத்திப் பணிகள்

எண்ணெய் வளத் தொழில் இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது உலகம் முழுதும் வட துருவம் முதல் தென் துருவம் வரை எண்ணெய் வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மத்தியக் கிழக்கு நாடுகள் எண்ணெய் வளத்தில் மிகவும் சிறந்து விளங்குகின்றன. மத்தியக் கிழக்கு நாடுகள் தவிர்த்து ரஷ்யா, ருமேனியா ஆகிய நாடுகளிலும் எண்ணெய் வளம் மிகுந்திருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாகரீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததாக விளங்குகிறது. போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பிளாஸ்டிக், நைலான், டெரிலின், சிந்தெட்டிக் பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் எண்ணெய் வளம் மிக, மிகத் தேவை. எண்ணெயிலிருந்து புரதச் சத்தும் கூடத் தயாரிக்கப்பட முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே எண்ணெய் வளம் மனித குலத்தின் ஆக்கத்திற்குப் பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: உணர்வுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு "எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது" எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு மிக அதிகம்.

தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில் வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது. இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன் ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால் பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப் பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை. பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் வகைகள்:

அறிவியல் முறையில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பல்வகைப்படும். சில வகைகள் பின் வருமாறு: பினோலிக், அமினோ, செல்லுலோசிக், பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன பிற.

பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள செயல்முறை பின்வருமாறு: முதலில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர் சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர் தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பினோலிக் பிளாஸ்டிக்:

பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள், பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம் அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப் பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக் பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

அமினோ பிளாஸ்டிக்:

அமினோ பிளாஸ்டிக்கில் "யூரியா" மற்றும் "மெலாமைன்" வகைகள் மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பலவற்றையும் செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது. மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது. எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது.

செல்லுலோசிக்:

செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில் நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை, குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப் பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும் செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

செல்லுலோஸ் அசிடேட்:

இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக் துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத் தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும். எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும் இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன.

எதனாய்ட்:

இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின், பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன் ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல் காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப் பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு.

பாலிவினைல் குளோரைட் (பிவிசி):

வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால் செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப் பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது ஈரமாவதில்லை.

செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்:

பாலி மீதைல் மெதாக்ரைலேட் எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தெள்ளத் தெளிவானது; பிளாஸ்டிக் தடிகள், குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது. இவ்வகைப் பிளாஸ்டிக்கில் வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக் கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

பாலி எதிலின்:

பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும். இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது.

நைலான் பொருட்கள்:

நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச் சார்ந்தது; இழைகள், துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால் சேதமடையாதது.

ஆல்கைட்:

ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில் பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா, நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.

நன்றி:உணர்வுகள்

நல்ல பல தகவல்கள்..

தந்தைமார் பற்றியது சுவாரசியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயங்களை இணைத்துள்ளீர்கள் நுணாவில்.வாழ்த்துகள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி கு.மா. அண்ணா, தூயா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வான்வெளியில் ஒரு வட்டம்

சூரியனைவிட 300 மடங்கு பெரிய நட்சத்திரம் பீட்டர்ஸ்கிஸ்.

நட்சத்திரம் என்பது தானாக ஒளிவீசக்கூடியது.

கிரகம் என்பது பூமி, செவ்வாய் போன்றவை. இவைகள் சூரியனைச் சுற்றி வருகின்றன.

துணைக் கோள்கள் என்பன கிரகத்தினை சுற்றி வருவது.

நமது சூரியக் குடும்பத்திலேயே செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை மிகப்பெரியது.

நிலவு சாதாரணமாக இருப்பதை விட ஒன்பது மடங்கு பெளர்ணமியன்று அதிகமாகப் பிரகாசிக்கும்.

சனி கிரகத்தைச் சுற்றி வளையங்கள் இருப்பது போல யுரேனஸ் கோளைச் சுற்றி ஒன்பது வளையங்கள் உள்ளன.

சந்திரனுக்குச் சென்ற ஆய்வாளர்கள் அதிலிருந்து பூமிக்கு எடுத்து வரப்பட்ட பாறைகள் 472 கோடி ஆண்டுகளுக்கு பழமையானது என்று கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து 250 நாட்களுக்குப் பகலாகவே இருக்கும் கிரகம் செவ்வாய்.

webulagam

நன்றி நுணாவிலான் இணைப்பிற்கு

Edited by Vasampu

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உற்சாகமூட்டலுக்கு நன்றி, வசம்பு.

உலக தினங்களின் பட்டியல்

பிப்ரவரி 14, காதலர் தினம்

‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்

மார்ச் 2, உலக புத்தக தினம்

மார்ச் 8, உலக மகளிர் தினம்

மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22, உலக பூமி தினம்

ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்

மே 1, உழைப்பாளர் தினம்

மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்

மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்

மே 15, உலக குடும்பங்கள் தினம்

மே 18, உலக அருங்காட்சியக தினம்

மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்

ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்

ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்

செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்

அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்

அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்

அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்

நவம்பர் 16, உலக பொறுமை தினம்

நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்

நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்

டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

warren_buffet.jpg

வியாபாரி

இரண்டாம் இடம் அவ்வளவாய் போற்றப்படுவதில்லை. ஆம்ஸ்ட்ராங்கை பற்றி பேசுவோர் ஆல்டிரிங்கை பற்றி பேசுவதில்லை, ஆஸ்திரேலியா பற்றி பேசுவோர் இலங்கை பற்றி பேசுவதில்லை. அது போல் தான் பில்கேட்ஸ் பற்றி நன்கு தெரிந்த உலகம் வாரன் பப்பே (Warren Buffet) பற்றி அவ்வளவாய் தெரிந்திருப்பதில்லை.உலகின் இரண்டாம் பெரும் பணக்காரர். மைக்ரோசாப்ட் போல் பிரபல பிராண்ட் ஒன்றும் அவரிடம் இல்லை.Berkshire Hathaway என்ற கம்பெனி பற்றி எத்தனை பேர் கேள்வி பட்டிருக்கிறோம்.11 வயதில் ஷேர் மார்கெட்டில் பங்குகள் வாங்க தொடங்கினாராம். இப்போது அவர் சொத்து மதிப்பு 52 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.அட ரொம்ப லேட்டா தொடங்கிவிட்டோம்பா என்று பீல் வேற பண்ணுக்கிறாராம்.

இவர் கீழ் 63 கம்பெனிகள் உள்ளனவாம். வருடத்துக்கு ஒரு ஈமெயில் அதன் CEO களுக்கு அனுப்பப்படும்.மற்ற படி சராசரியான ரெகுலர் மீட்டிங்,மெயில் சமாசாரம் எல்லாம் கிடையாது.

அவரின் CEO களுக்கான இரட்டை கட்டளை

Rule number 1: Do not lose any of your share holder's money.

Rule number 2: Do not forget rule number 1.

அவ்வளோதான்.

அவரவர் இஷ்டம் போல் வேலை செய்யவிட்டு பணம் பண்ணிகொண்டிருக்கிறார்.எது உனக்கு பிடிக்கிறதோ அதையே தொடர்ந்து செய்.ஒரு நாள் வெல்வாய் என்பதே இவர் தாரக மந்திரம். ஆனாலும் ஏதோ ஒரு மாஜிக் இவரிடம் இருப்பதாக எல்லாரும் நம்புகிறார்கள்.தொடுவதெல்லாம

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.