Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் நகரப் பகுதியிலிருந்து பலத்த பீரங்கி, ஷெல் தாக்குதல்!

Featured Replies

மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர்.

இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர்.

இதற்கிடையில்

வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலில் ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்தனர் என்றும், பல பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன என்றும் தமது தரப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் கொல்லிமடுப்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற மோதல்களில் 13 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் மூன்று பதுங்குகுழிகள் முற்றாக அழிக்கப்பட்டன என்றும் தமது தரப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.

இதேசமயம்இ மணலாறு, அண்டங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 3.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் நான்கு விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர் என்றும்இமோதலின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின்போது விடுதலைப் புலிகளால் விட்டுச் சென்றதெனக் கூறப்படும் ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதியில் இராணுவத்தினர் தாம் மேற்கொண்ட தேடுதலின்போது 43 நிலக்கண்ணிவெடிகளை மீட்டுள்ளனர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.

யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலில் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்தனர் என்றும் தமது தரப்பில் எவ்வித சேதமும் இல்லை என்றும் படைத்தரப்பில் மேலும் அறிவிக்கப்பட்டது.

இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாக புலிகள் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

நன்றி சுடர்ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படை இன்று ஞாயிற்றுகிழமை 11 பேர் கொல்லப்பட்டு 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.5 மணிதியாலமாக சண்டை நடைபெற்ற இடம் பாலக்குழி, மன்னார்.10 மணிக்கு(காலை) இராணுவம் பழைய இடத்துக்கு சென்றதாகவும் வி.புலிகள் அறிவித்துள்ளனர்.

11 SLA killed in Paalaikkuzhi, Mannaar - LTTE

[TamilNet, Sunday, 24 February 2008, 17:45 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) Operations Command in Mannaar said Sunday that 11 Sri Lanka Army (SLA) soldiers were killed and 23 SLA soldiers wounded in a five-hour fighting erupted in Paalaikkuzhi Sunday. The SLA withdrew its forces at 10:00 a.m., the Tigers said.

The LTTE has put up stiff resistance amid heavy artillery firing and Sri Lanka Air Force (SLAF) bombardment, the Tigers said.

The ground push by the SLA was launched at 5:00 a.m.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுனாவிலான்.

சிலர் இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் அறிக்கைகளை இங்கு இணைப்பது தேவையற்றது. ஏனென்றால் அரசின் பிரச்சாரத்தை நாமும் இங்கு முன்னெடுக்க வேண்டுமா? செய்தி தேவை என்றால் தமிழ்நெட்டிலோ அல்லது புதினத்திலோ இருந்து எடுத்துப் போடலாம்தானே ? இதைப் பார்த்தால் நாங்களே எங்கள் வாயால் புலிகள் தினமும் 10 பேர் கொல்லப்படுகின்றனர் என்று சொல்வதைப் போலல்லவா இருக்கு ?

இலங்கையில் இருக்கும்போதுதான் இந்தப் பிரச்சாரப் புழுகுகளை சகித்துக் கொள்ளமுடியாமல் வருந்தினால் இங்கேயுமா ?

சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் சொல்லுறது சரிதான்

இருந்தாலும் நடுநிலமையான செய்திகளை ஆராயலாம் தானே? பாதுகாப்பு அமைச்சின் செய்திகளை வேணுமெண்டா தவிர்க்கலாம்... அந்த செய்தியைத்தானே எவ்பி, சீ என் என், பீ பீ சி எல்லரும் கொப்பி அடிச்சு போடுறாங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.