Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரத் காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுக்கு விஜயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..!

அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த இந்திய - பாகிஸ்தான் கார்கில் ( http://en.wikipedia.org/wiki/Kargil_War ) போரில் பயன்படுத்தப்பட்ட சூட்டாதரவு உக்திகளை சிறீலங்காப் படை வன்னி மற்றும் யாழ்குடா தமிழீழ முன்னரங்க எல்லைக்கோடுகள் எங்கனும் பிரயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது..!

இருப்பினும் தீரமிகு தமிழ்ப் புலிவீரர்கள் அனைத்துலக இராணுவ உக்திகளையும் மிகச் சாதுரியமாக எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Fonseka in Kashmir

Army chief Lt. Gen. Sarath Fonseka began his weeklong tour of India today by visiting northern Kashmir where he received a briefing from top Indian military commanders about the prevailing situation along the Line of Control which divides Kashmir between India and Pakistan.

- dailymirror

மன்னார், வவுனியா, மணலாறு, யாழ் குடா போர் முன்னரங்குகளில் கடந்த 9 மாதமாக பலமான சூட்டாதரவோடு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தந்த பலன்... மன்னார் முன்னரங்கை சற்று வியாபித்தது மட்டுமே..!

Mannar-2.3.2008.jpg

படம்:sundaytimes.lk - 02.03.2008 நிலவரப்படி.

******* - பழைய எல்லைக்கோடு.

------- - புதிய எல்லைக்கோடு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சி இது எல்லாம் பச்ச பொய். அங்கே எல்லையில் எந்த நாட்டு முள்ளு கம்பி அடித்திருக்கின்றார்கள். அதை தானும் வாங்கினா எவ்வளவு தரகு பணம் கிடைக்கும் என்று ஆராய தான் போயிருப்பார் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்கில் போரரங்களில் மல்ரி பரல்கள்.. 155mm ஆட்லறிகள்.. லேசர் கைடட் மிசைல்ஸ்.. மிக் 27, 21 போன்றன இந்தியத் தரப்பால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. சிறீலங்கா அரசும் இதே வகை ஆயுதங்களையும் இதை விட மேலதிகமாகவும் வன்னி மீது பயன்படுத்தி வருகிறது.

கார்கில் போரில் இந்தியப்படை சில போர்விமானங்களை இழந்த போதும் பாகிஸ்தானியப்படைகளை தமது பழைய நிலைகளை நோக்கி பிந்தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்தப் போரில் அப்போதைய கிளிங்டன் நிர்வாகம் இந்திய சார்ப்பு போக்கை காண்பித்திருந்தது. அமெரிக்கா சோவியத் காலத்திலேயே இந்தியாவுடன் ரகசிய உறவுகளைப் பேணி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதி எண்டு அவரையும் போட்டுத்தள்ளிடப்போறாங்க

கார்கில்போரிலை இறந்த இந்திய இராணுவத்தின் தொகை போராளிகளை விட அதிகம்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I believe he is using our struggle again to make money by selling these "Top Secrets" to Pakistan when he meets the top officials of Pakistan.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: சிலவேளை இந்தியாவில பிச்சை எடுத்து முடிந்த பிறகு பாக்கிச்தானுக்கும் போய் பிச்சை எடுக்கலாம் எண்டுதான் காஷ்மீருக்குப் போயிருப்பர் எண்டு நினைக்கிறன். சுத்திப் போறதுக்கு காசு கொடுக்க வேணும், வேலியால ஏறி உள்ளுக்குப் பாய்ந்தால் செலவு மிச்சம். என்ன நான் சொல்லுறது ?

தயா,

கார்க்கில் போரில 400 இந்திய ஜவான்கள் செத்ததாகவும், சுமார் 1000 பாகிச்தானிய மற்றும் காஷ்மீர்ப் போராளிகள் செத்ததாகவும்தான் இந்தியா அறிக்கை விட்டதாக நினைவு. யார் கண்டார், இந்தியா இலங்கையின் ஒன்றுவிட்ட சித்தப்பா அல்லவா, அதனால கெகெலிய ரம்புக்வெல்லவின் பாணியில பெரிய பூவாச் சுத்தினாலும் சுத்தியிருப்பினம்.

புதியவன்,

வாருங்கள், எந்த ரகசியத்தை பாகிச்தானுக்கு விற்கப் போனவர் எண்டு சொல்லுறியள் ?

பொன்னர் ஓசி றம்மை குடிச்சுப் போட்டு தோம் தோம்பி அழுறாராம் தனக்கு திரும்பிப் போக பயமா இருக்கு எண்டு.

ரகு.

524 இந்திய படைகள் இறந்து 1369 பேர் காயம் அடைந்னராம்... இந்த சண்டைக்காக இந்திய முப்படையின் 7 லச்சத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்... 60 தாக்குதல் விமானங்கள் ஈடு படுத்த பட்டன...!! 300 ஆட்லறி ஏவு தள்ளங்களில் இருந்து தினமும் 5000 குண்டுகள் வீதம் 250 000 குண்டுகள் வீசப்பட்டன, 3000 விமானங்கள் (உலங்கு வானூர்திகள் வேவு விமானங்கள் உட்பட) பாவிக்க பட்டனவாம்...

krg3.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.