Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகழ்பூத்த ஈழத்து கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" சின்னஞ்சிறு கதைகள் நூல்வெளியீட்டு விழா: 22.03.2008

Featured Replies

annaiqa1.jpg

விடயம்: ஈழத்து புகழ்பூத்த கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" 51 சின்னஞ்சிறு கதைகள் நூல் வெளியீட்டுவிழா!

காலம்: மார்ச் 22, 2008 சனிக்கிழமை மாலை 3.00 மணி

இடம்: Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto, Canada

வாழ்த்துரை: திரு. நக்கீரன் தங்கவேலு, திரு.செ.தலையசிங்கம்

நூலை வெளியிட்டு வைப்பவர்: பேராசிரியர் பொ.பாலசுந்தரம்

ஆய்வுரை: திரு.பொன்னையா விவேகானந்தன், திரு. இரா. சம்மந்தன், கலாநிதி எஸ்.சிவவிநாயகம்மூர்த்தி

வரவேற்புரை: திரு.ஆர்.எம்.கிருபா

நன்றியுரை: திரு.ப. வேழத்தெழிலன்

கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட அழகிய தமிழீழ விடுதலை கானங்களை எழுதி உள்ளார். இதுவரை 52 நூல்களை வெளியிட்டு உள்ளார். இவரது எழிலி காவியம் சாகித்திய மண்டல பரிசை பெற்றது. இதுதவிர, மாணவர்களிற்கு பயன்படும் தமிழ் இலக்கண நூல்களையும் இவர் எழுதி உள்ளார்.

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய சில விடுதலை கானங்கள்:

  • சாகத்துணிந்தவர் கூட்டம்..
  • ஆழக்கடலோடிகளே ஈழக்கடலோடிகளே..
  • சாதனைக் கடற்கரும்புலிகள்..
  • பிரபாகரன் எங்கள் தலைவன்..
  • சாவுக்குள் வாழ்வெனும் தத்துவம்..

"அன்னை மண்" சிறுகதை 51 சிறுகதைகள் நூல் வெளியீடு சிறப்பாக அமையவும், கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் இன்னும் பல சிறந்த படைப்புக்களை எதிர்காலத்தில் வழங்கவும் யாழ் இணையம் சார்ப்பாக எமது வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!

தகவல்: கலைஞன், யாழ் இணையம்

நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் கலைஞன். யாழ் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்.

குருவே சுவாரசியமான உரையாடல்..(பேட்டி :D )...பல விசயங்களை உள்வாங்க முடிந்தது உங்கள் இருவரின் உரையாடலிலும்...(மனமார்ந்த நன்றிகள் :lol: )...இன்று தான் முதன் முதலில் இவரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது :( எனக்கு இவர் யாரென்றே தெரியாது :) ..மேலும் குரு இவ்வாறான பேட்டிகளை எமக்கு தந்து இவ்வாறானவர்களையும் பற்றி எமக்கு அறிய தந்தா மிகவும் நல்லது.. :D (வாழ்த்துக்கள் குருவே :D )...

(குருவிற்கு சோதணை நேரத்தில தான் இப்படியான ஜடியாக்கள் எல்லாம் வருது :D நிசமா என்னால முடியல்ல :( )...

அப்ப நான் வரட்டா!!

ச.வே அவர்களிடம் 10ம் வகுப்பில் இணுவிலில் உள்ள தனியார் கல்வி நிலையமான N.E.C யில் தமிழ் படித்தேன். தமிழ் மீது எனக்கு ஆர்வம் வரக் காரணமாக இருந்தவர்களில் ச.வே அவர்களும் ஒருவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இந்துவில் தமிழ் சமயம் பாடங்கள் படித்தவன்.

அப்போது அவரது மகன் போராளியாக இருந்தார். அப்போதைய பெருஞ்சமர்க்காலங்களில் ஒரு தந்தைக்கும் விடுதலையை நேசிக்கும் மனிதர் என்ற உணர்வுக்கும் இடையிலான உணர்வுகளை எம்மால் நேரடியாக தரிசிக்க முடிந்தது.

2002 இல் மானுடத்தின் தமிழ்கூடலில் அவரை சந்தித்து பேசியிருந்தேன்.

கலைஞன் அவரைத் தொடர்பு கொள்ளகூடிய வழியை தனிமடலில் தரமுடியுமா ?

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றிகள் கலைஞன். யாழ் இந்துக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்.

நன்றி கந்தப்பு. நான் இதுபற்றி அவரிடம் கேட்டு சொல்கின்றேன்.

இன்று தான் முதன் முதலில் இவரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது :wub: எனக்கு இவர் யாரென்றே தெரியாது :unsure: ..மேலும் குரு இவ்வாறான பேட்டிகளை எமக்கு தந்து இவ்வாறானவர்களையும் பற்றி எமக்கு அறிய தந்தா மிகவும் நல்லது.. :lol: (வாழ்த்துக்கள் குருவே :wub: )

இவர் தாயகம், கனடாவில் தமிழ் மக்கள் பெரும்பாலானோரால் அறியப்பட்டவர். இதுவே, கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் பற்றிய முதலாவது இணையம் மூலமான ஆவணம் என்று நினைக்கின்றேன். அவர் தனது உரையாடலில் பல விசயங்களை தெளிவாகவும், விளக்கமாகவும் கூறி உள்ளார். இவர் எமக்கு - தமிழ் மக்களிற்கு கிடைத்த ஒரு சொத்து எனக்கூற வேண்டும்.

இவரது ஆற்றல்களிற்கு அவரது படைப்புக்களே சாட்சி.

நேரம் கிடைக்கும்போது கனடாவில் வாழும் ஈழத்து கலைஞர்கள், இலக்கியவாதிகளை இவ்வாறு யாழ் இணையம் மூலம் அறிமுகம் செய்து வைக்கின்றேன்.

இவரது சந்திப்பு தற்செயலானது. தனது நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதன்பின்பே யாழ் இணையம் சார்பாக கவிஞர் அவர்களுடன் உரையாடலாமே என்று நினைத்துவிட்டு அவர் வீட்டுக்கு சென்று உரையாடலை பதிவு செய்தேன்.

ச.வே அவர்களிடம் 10ம் வகுப்பில் இணுவிலில் உள்ள தனியார் கல்வி நிலையமான N.E.C யில் தமிழ் படித்தேன். தமிழ் மீது எனக்கு ஆர்வம் வரக் காரணமாக இருந்தவர்களில் ச.வே அவர்களும் ஒருவர்.

ஓம் அரவிந்தன். எனது யாழ் இந்து நண்பர்கள் பலரும் ச.வே இடம் தமிழ் கற்றவர்களே.

சயந்தன் நான் அறியத்தருகின்றேன். யாழிலும் ச.வே யின் மாணவர்கள் பலர் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். யாழ். இந்துவில் தமிழ், சமயம் கற்றவர்கள் பெரும்பாலும் இவரிடம் பயின்று இருப்பார்கள். யாழ். இந்துவில் கற்ற பலருக்கும் ச.வே யை தெரிந்து இருக்கும்.

யாழ் வாசகர்களிலும் பலர் ச.வே யின் பழைய மாணவர்களாக இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலைஞன், நட்புக்கினியவரும் உண்மையான மண்ணின் மைந்தருமான கவிஞர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்களது குரலை கேட்டது மகிழ்ழ்சியாக இருக்கு. கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவிஞர் தலைமைதாங்கிய கவியரங்க மொன்றில் பங்குபற்றிய ஞாபகம். கவிஞருக்கு என் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவியுங்கள். வ

நான் படிக்கும் காலத்தில் எங்களுக்கு சண்முகலிங்கம் மாஸ்ரர் தான் படிப்பித்தார். அவருக்கு ஒரு முறை சுகயீனம் காரணமாக கொஞ்சக்காலம் பஞ்சாட்சரம் படிப்பித்தார். இவரிடம் தான் முதன் முதலாக 'புளகாங்கிதம்' என்றா வார்த்தையை கேட்டேன் என்பது இன்னமும் மறக்காமல் உள்ளது.

நன்றி கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நண்றிகள்

  • தொடங்கியவர்

நன்றி பொயட், ஈஸ், புத்தன்.

கந்தப்பு, நான் அவரிடம் கேட்டேன். தான் இந்திய இராணுவத்தின் சித்திரவதைகளிற்கு ஆளானதாக கூறி இருந்தார். வன்னியில் இருந்துவிட்டு சமாதானம் நடைபெற்ற காலத்தில் கனடா வந்துவிட்டதால் பின்னர் சிறீ லங்கா ஆமியின் சீண்டல்களில் இருந்து தப்பிவிட்டதாய் கூறினார்.

பொயட் அண்ணை, அவரும் உங்களிற்கு தனது அன்பையும், நன்றிகளையும் தெரிவித்ததாய் கூறச்சொன்னார்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினால் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டதாக 90 களின் ஆரம்ப காலங்களில் அறிந்தேன். இப்பொழுது பல வருடங்கள் சென்றதினால் இலங்கை இராணுவத்தினாலோ, இந்தியா இராணுவத்தினாலோ அவர் சித்திரை செய்யப்பட்டார் என்ற குழப்பம் ஏற்பட்டது

  • 1 month later...

அண்டைக்கு நடந்த விழாவில எடுக்கப்பட்ட சில படங்கள இணைக்கிறன் எல்லாரும் பாருங்கோ..

00190010tw5.jpg

00190020tp2.jpg

00190022kz9.jpg

00200003tl2.jpg

00200011xu4.jpg

00200015qb2.jpg

00200017bm2.jpg

00200018iq5.jpg

பட இணைப்புக்கு நன்றிகள் குருவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.