Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

Featured Replies

நீங்கள் எந்த நாட்டை பற்றி பேசுகின்றீர்கள் என புரியவில்லை..புலம் என்று எல்லா நாடுகளையும் ஒன்றாக வைத்து இந்த விவாதத்தை நடத்த முடியாதல்லவா...குறிப்பிட்டு உங்கள் நாட்டில் நடப்பதை சொல்லலாம்...அது தவிர்த்து "புலத்தில்" என்று உங்களுக்கு தெரியாத இடங்களை பற்றி பேசுவதை தவிர்க்கலாமே... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என் பெற்றோர் கூட நான் புறப்படும் போது என்னை எதற்கும் அறிவுறுத்தல்ல. அந்தளவு நம்பிக்கையை வைத்திருந்தாங்க. நான் அவங்க நம்பிக்கையை என்னால இயன்றவரை காத்திருக்கிறன்..! அந்த ஜீன் இருக்குமில்ல..!

அதே போல மற்ற பெற்றோரும் சிந்திக்கலாம் தானே தங்கள் பிள்ளையை நம்பலாமா(Trust) இல்லையா என.

நல்ல ஒரு குடும்ப சூழலில் உள்ள ஆணோ பெண்ணோ இப்படி வழி தவறுவதில்லை என்பது என் கருத்து. தவறை எங்கோ வைத்துவிட்டு, அய்யோ குய்யோ என் குதிப்பதில் என்ன நியாயம்.?

பெண்ணோ ஆணோ, ஒருவருடைய குணம் எங்கு போனாலும் மாறாது...அவங்க யாரோ, அவஙக அவங்களா தான் இருப்பாங்க.

பெண் என்றதும் பெற்றோர் பயப்படுவது, பெண்ணை ஆண்கள் இலகுவில் ஏமாற்றுவது தான் என்று கூட எடுத்துக்கொள்ளலாமா? ;) . பெற்ற தகப்பனுக்கு தெரியும் ஒரு ஆண் எப்படி யோசிப்பான் என. அதனால் கூட பயப்படலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தகப்பனுக்கு தெரியும் ஒரு ஆண் எப்படி யோசிப்பான் என. அதனால் கூட பயப்படலாம்..

பெற்ற தாய்க்குத் தெரியும் தானே ஒரு பெண் எப்படியெல்லாம் யோசிப்பாள் என்று. அதுவும் உண்மைதானே. வசதியா இதை மறந்திடுறீங்க. ஆண்களையும் தகப்பனையும் மட்டும் முன்னுறுத்திறீங்களே ஏன்..??! இதைத்தான் தவறெங்கிறேன்..!

தகப்பன் மாரை விட தாய் மார்தான் பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துவதை நான் அவதானிச்சிருக்கிறேன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

//ஆண்களையும் தகப்பனையும் மட்டும் முன்னுறுத்திறீங்களே ஏன்..??! இதைத்தான் தவறெங்கிறேன்..!//

ரொம்ப சுடுதோ? ;)

உங்க கருத்து உங்களையே தாக்குது போல இருக்கே

//தகப்பன் மாரை விட தாய் மார்தான் பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துவதை நான் அவதானிச்சிருக்கிறேன்..! //

நிச்சயமாக..காரணம் தாயும் கூட ஒரு காலத்தில் ஒரு பெண் பிள்ளை தானே..ஆக அவருக்கு தெரியாதா ஆண்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என.. ;) இப்படி கூட எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

  • தொடங்கியவர்

1. ஒரு நாளும் என் பிள்ளை நான் உங்க கூட இருந்தாத்தான் கெடுவன் தூரப் போனா கெடவே மாட்டன் என்று சொல்லி பெற்றோரை ஏய்க்காது.. அல்லது வசனம் பேசாது. அது யதார்த்தத்தை உணரும் பேசும்.

2. என் பிள்ளை இயலுமானவரை உண்மை பேசும். பெற்றோருக்கு மறைச்சு எதையும் செய்ய வேண்டிய தேவையக் கொண்டிராது.

3. என் பிள்ளை எதையும் பெற்றோரிடம் எதிர்பார்க்காத வகையில் பெற்றோர் செய்வினம். அதேபோல் பெற்றோரின் எதிர்பார்ப்பை பிள்ளை தானா உணர வளர்க்கப்படும்.

4. ஒழுக்கம்.. நீதி.. நேர்மை.. மனித நேயத்தை பிள்ளை தெளிவா அறிஞ்சிருக்கும். கெட்டது கொடியது விலக்க வேண்டியது விலக வேண்டியது இவற்றை தெளிவா அறிஞ்சிருக்கும்.

5. இதையெல்லாம் தெரிஞ்ச பிள்ளை... நிச்சயம் எங்கும் போய் சாதிக்க வேண்டியதை சாதித்து வரும். பெற்றோருக்கு பிள்ளை பற்றிய கவலை தேவையில்லை..!

6. என் பெற்றோர் கூட நான் புறப்படும் போது என்னை எதற்கும் அறிவுறுத்தல்ல. அந்தளவு நம்பிக்கையை வைத்திருந்தாங்க. நான் அவங்க நம்பிக்கையை என்னால இயன்றவரை காத்திருக்கிறன்..! அந்த ஜீன் இருக்குமில்ல..! :):rolleyes:

சரி நீங்கள் சொல்வது போலவே உங்களிற்கு ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவரை நீங்கள் வேறு நாடு சென்று வேற்று நாட்டு மாணவர்களுடன் விடுதியில் இருந்து கல்வி கற்க அனுமதிப்பீங்களா???

என்ன தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்கள் எளிதில் அனுமதிக்க மாட்டார்கள்... வேறு நாட்டவர் கலாச்சாரம் நமக்கும் வந்துவிடும் என்று ஒரு தேவையற்ற பயம்.

  • தொடங்கியவர்

நீங்கள் எந்த நாட்டை பற்றி பேசுகின்றீர்கள் என புரியவில்லை..புலம் என்று எல்லா நாடுகளையும் ஒன்றாக வைத்து இந்த விவாதத்தை நடத்த முடியாதல்லவா...குறிப்பிட்டு உங்கள் நாட்டில் நடப்பதை சொல்லலாம்...அது தவிர்த்து "புலத்தில்" என்று உங்களுக்கு தெரியாத இடங்களை பற்றி பேசுவதை தவிர்க்கலாமே... :rolleyes:

தூயா,

புலம் என்று நான் கூறியது எல்லா நாடுகளையும் கருத்தில் வைத்து. கூடுதலான தமிழ் பெற்றோர்கள் நினைக்கும் விடயம் ஒன்றாக இருக்கும் என்று எண்ணியதால்.

  • கருத்துக்கள உறவுகள்

//ஆண்களையும் தகப்பனையும் மட்டும் முன்னுறுத்திறீங்களே ஏன்..??! இதைத்தான் தவறெங்கிறேன்..!//

ரொம்ப சுடுதோ? ;)

உங்க கருத்து உங்களையே தாக்குது போல இருக்கே

//தகப்பன் மாரை விட தாய் மார்தான் பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துவதை நான் அவதானிச்சிருக்கிறேன்..! //

நிச்சயமாக..காரணம் தாயும் கூட ஒரு காலத்தில் ஒரு பெண் பிள்ளை தானே..ஆக அவருக்கு தெரியாதா ஆண்கள் எப்படி ஏமாற்றுவார்கள் என.. ;) இப்படி கூட எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?

இதில சுடவும் ஆறவும் எனக்கு எதுவுமில்லை. நான் நியாயத்தைப் பேசுகிறேன். நீங்கள் குதர்க்கத்தைப் பதிலாக்கிறீங்க. அப்படி ஆக்கினாலும் கூட.. தகப்பன் மட்டுமல்ல.. தாயும் தான் செய்த தவறுகளை எண்ணி தன் பிள்ளையும் அவ்வழியில் போயிடுமோ என்று பயப்பிடலாம் தானே என்ற நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருக்கன் அதுதான் முக்கியம்..!

ஏன் தாயாக இருக்கிறவை முன்னர் பெட்டையா இருக்கேக்க அடிச்ச கூத்துகளை எண்ணி.. பயப்பிடலாம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் தானே. ஆண்கள் வந்துதான் ஏமாற்றனும் என்றில்லையே..! ஊசி இடங்கொடுக்காம நூல் நுழையுமா என்ன..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்கள் சொல்வது போலவே உங்களிற்கு ஒரு பெண் பிள்ளை இருந்தால் அவரை நீங்கள் வேறு நாடு சென்று வேற்று நாட்டு மாணவர்களுடன் விடுதியில் இருந்து கல்வி கற்க அனுமதிப்பீங்களா???

என்ன தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை இருந்தாலும் அவர்கள் எளிதில் அனுமதிக்க மாட்டார்கள்... வேறு நாட்டவர் கலாச்சாரம் நமக்கும் வந்துவிடும் என்று ஒரு தேவையற்ற பயம்.

நான் கல்வி கற்கும் போது என்னை விடுதிக்கு அனுமதிக்க முதல் கேட்டார்கள்.. உனக்கு ஆண்கள் வாழிடம் வேணுமா.. மிக்ஸ் வேணுமா என்று. நான் ஆண்கள் வாழிடம் என்றேன். நான் "மேல் கவுஸில்" தான் இருந்து படித்தேன். பன்னாட்டு மாணவர்களும் இருந்தார்கள். அவர்கள் என்னை எந்தத் தொந்தரவும் செய்யேல்ல. நானாவும் வழிய அவர்களோட பிரச்சனைக்குப் போகல்ல. எனக்குப் பிடிக்காதது நடந்தால் நான் "நோட்டீஸ் போட்டில்" எழுதிப் போடுவேன். அவர்களா திருந்துவார்கள் அல்லது "கோம் விசிற்றர்" வந்து "வோர்ன்" பண்ணுவாங்க. இப்படி ஒரே ஒரு தடவை மட்டும் நடந்தது. மற்றும்படி இறுதிவரை நல்ல நண்பர்களாகவே இருந்தோம் பிரிந்தோம். நான் எனது 10 வயதில் இருந்து விடுதியில் தங்கிப் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்று எப்போதுமே மிக்ஸ் என்ற நிலையில் இருக்கேல்ல..! அதால அப்ப எல்லாம் கெட்டுப் போகல்லையோ தெரியல்ல..! பெண்கள் கூட இருந்திருந்தா ஒருவேளை சீரழிக்கப்பட்டிருப்பன்..! :)

என் பிள்ளைக்கு நான் சொல்வேன்.. உனக்கு எது பாதுகாப்பு.. எது படிப்புக்கு இலகு என்று கருதிறீயோ அதைத் தெரிவு செய்யென்று. பெண் பிள்ளைகளோட பெண் பிள்ளைகள் தங்கி.. அவங்க பாட்டுக்கு அவங்க இருந்தா யாரும் கையப் பிடிச்சு இழுக்கப் போறதில்ல. அநாவசியமா சேர்ந்து கூத்தடிக்கப் போய்த்தான்.. அவமானப்படுகிறினம் பலர்..! மிக்ஸாக இருந்தால் சில சங்கடங்கள் எழலாம்.. அதைத் தவிர்ப்பது இருபாலாராக்கும் சிறந்தது தானே..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இதில சுடவும் ஆறவும் எனக்கு எதுவுமில்லை. நான் நியாயத்தைப் பேசுகிறேன். நீங்கள் குதர்க்கத்தைப் பதிலாக்கிறீங்க. அப்படி ஆக்கினாலும் கூட.. தகப்பன் மட்டுமல்ல.. தாயும் தான் செய்த தவறுகளை எண்ணி தன் பிள்ளையும் அவ்வழியில் போயிடுமோ என்று பயப்பிடலாம் தானே என்ற நியாயத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருக்கன் அதுதான் முக்கியம்..!

ஏன் தாயாக இருக்கிறவை முன்னர் பெட்டையா இருக்கேக்க அடிச்ச கூத்துகளை எண்ணி.. பயப்பிடலாம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் தானே. ஆண்கள் வந்துதான் ஏமாற்றனும் என்றில்லையே..! ஊசி இடங்கொடுக்காம நூல் நுழையுமா என்ன..??! :lol:

what if இல் கேள்வி கேட்டதற்கே இத்தனையா? :rolleyes::)

[முகக்குறி மட்டும் போட வேணாம்னு யாருப்பா சொன்னது..ரொம்ப கஸ்டமா இருக்கு]

நீங்கள் எந்த நாட்டை பற்றி பேசுகின்றீர்கள் என புரியவில்லை..புலம் என்று எல்லா நாடுகளையும் ஒன்றாக வைத்து இந்த விவாதத்தை நடத்த முடியாதல்லவா...குறிப்பிட்டு உங்கள் நாட்டில் நடப்பதை சொல்லலாம்...அது தவிர்த்து "புலத்தில்" என்று உங்களுக்கு தெரியாத இடங்களை பற்றி பேசுவதை தவிர்க்கலாமே... :)

இன்னும் சரியாகச் சொல்வதானால் ஒரு வீட்டிற்குள் யாரோ ஒருத்தி செய்துவிட்டாள் என்பதற்காக ஒட்டுமொத்தப் பெண்களையே சாடிக் கொண்டு திரிவது தவறு :D

இன்னும் சரியாகச் சொல்வதானால் ஒரு வீட்டிற்குள் யாரோ ஒருத்தி செய்துவிட்டாள் என்பதற்காக ஒட்டுமொத்தப் பெண்களையே சாடிக் கொண்டு திரிவது தவறு :)

நிஜம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

நிஜம் தானே!

நீங்க இனங்காணுற அந்த ஒருத்திகளை உருவாக்கினதும் இந்தச் சமூகம் தானே. அப்படிப் பல ஒருத்திகள் உலகில் இருக்கினம். அதை மூடிமறைக்காதுங்க என்பதுதான் என் நிலைப்பாடு. அவங்கள இனங்காட்டிட்டா பாதிக்கப்படுறவை குறைவினம்..! அதுவும் நிஜம் தானே..! :D:)

Edited by nedukkalapoovan

நீங்க இனங்காணுற அந்த ஒருத்திகளை உருவாக்கினதும் இந்தச் சமூகம் தானே. அப்படிப் பல ஒருத்திகள் உலகில் இருக்கினம். அதை மூடிமறைக்காதுங்க என்பதுதான் என் நிலைப்பாடு. அவங்கள இனங்காட்டிட்டா பாதிக்கப்படுறவை குறைவினம்..! அதுவும் நிஜம் தானே..! :D:D

இதுவும் நிஜம் தான் :D

பல ஒருத்தன்கள் இருக்கும் போது பல ஒருத்திகள் இருப்பது இயற்கை தானே நெடுக்ஸ் :D :D :D:)

நீங்க சொல்றது தான் என் கருத்தும்..

பல குற்றவாளிகள் தப்பிச்சாலும், ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட கூடாதில்லையா..;)

ஆக

அனைவரையும் சாடுவதை நிறுத்தினால்..பிரச்சனையும் ஓயும்..

உங்களுடைய பல நல்ல கருத்துக்கள் தேவையில்லாமல் திசை திருப்பபடுகின்றது. இது உங்களுக்கு தெரியுமா, தெரியவில்லையா என்பது எனக்கு தெரியலை..

என்னுடைய நோக்கம் உங்கள் கருத்துக்களை எதிர்ப்பதல்ல என்பது உங்களுக்கே தெரியும் என நினைக்கின்றேன்.

நீங்க சொல்ல வாற பல நல்ல விடயங்கள், விழிப்புணர்வு கருத்துக்களை "சில" விடயங்கள் முழுங்காமல் பார்த்து கொள்ளுங்கள்..

ஒரு ஆற்றாமை தான்.. :)

Edited by தூயா

1. ஒரு நாளும் என் பிள்ளை நான் உங்க கூட இருந்தாத்தான் கெடுவன் தூரப் போனா கெடவே மாட்டன் என்று சொல்லி பெற்றோரை ஏய்க்காது.. அல்லது வசனம் பேசாது. அது யதார்த்தத்தை உணரும் பேசும்.

2. என் பிள்ளை இயலுமானவரை உண்மை பேசும். பெற்றோருக்கு மறைச்சு எதையும் செய்ய வேண்டிய தேவையக் கொண்டிராது.

3. என் பிள்ளை எதையும் பெற்றோரிடம் எதிர்பார்க்காத வகையில் பெற்றோர் செய்வினம். அதேபோல் பெற்றோரின் எதிர்பார்ப்பை பிள்ளை தானா உணர வளர்க்கப்படும்.

4. ஒழுக்கம்.. நீதி.. நேர்மை.. மனித நேயத்தை பிள்ளை தெளிவா அறிஞ்சிருக்கும். கெட்டது கொடியது விலக்க வேண்டியது விலக வேண்டியது இவற்றை தெளிவா அறிஞ்சிருக்கும்.

5. இதையெல்லாம் தெரிஞ்ச பிள்ளை... நிச்சயம் எங்கும் போய் சாதிக்க வேண்டியதை சாதித்து வரும். பெற்றோருக்கு பிள்ளை பற்றிய கவலை தேவையில்லை..!

6. என் பெற்றோர் கூட நான் புறப்படும் போது என்னை எதற்கும் அறிவுறுத்தல்ல. அந்தளவு நம்பிக்கையை வைத்திருந்தாங்க. நான் அவங்க நம்பிக்கையை என்னால இயன்றவரை காத்திருக்கிறன்..! அந்த ஜீன் இருக்குமில்ல..! :D:)

நான் இன்னொருவன்/ள் வேண்டும் என்றே செய்யும் தவறுக்காக வருந்துவதுமில்ல.. அதைப் பெரிது படுத்துவதுமில்லை. அவர்கள் திருத்தப்படவே முடியாதவர்கள். ஆனால் தவறுகள் திரும்பக் கூடாது.. சமூகம் அதனால் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை இருக்குது.. அதனால் சில சமூக நிகழ்வுகளை கருத்தில் பிரதிபலிப்பேன். அது எனது அனுபவமல்ல. அவதானிப்புகள். :D

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், எமது பெற்றோர்கள் பிள்ளைகளை அப்படி வளர்ப்பதில்லையே. சிறிய வயதிலிருந்தே அவர்களாக முடிவுகளை எடுக்கக் கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது. நீங்கள் சொல்வது போல், பெண்களை அதிகம் கட்டுப்படுத்துவது அவர்களது தாய்மார்தான். அதற்குக் காரணம், அவர்களுக்கு வெளிஉலகம் தெரியாமலிருப்பதோடு, ஊர் வம்புகள் அதிகம் தெரிந்திருப்பதே. மற்றப் பிள்ளைகள் பிழை விட்டால், தனது பிள்ளையும் பிழை விடும் என்ற எண்ணமே. தன்னால் வளர்க்கப்படும் பிள்ளைகளைக்கூட நம்ப முடியாத பெற்றோர்கள்தான் எமது சமூகத்தில் அதிகம். நீங்கள் சொன்ன முறைப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் திருமணத்திற்குப் பின்னரும்கூடப் பெற்றோரின் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாக இருப்பார்கள். ஒரு பிள்ளை பிழை விட்டால், அதற்கான காரண காரியங்களைக் கருத்தில் எடுப்பதில்லை. அப்பிழைக்கு அப்பிள்ளையையே குற்றவாளியாக்கி விடுவார்கள். ஆனால், அப்பிள்ளை வழிதவறுப் போவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெற்றோர்தான் என்பதை உணர மறுக்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். இப்போதிருக்கும் சந்ததியாவது தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடயத்தை இன்னொரு விடயத்துடன் ஒப்பிடுவதால்தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

பெற்றோருக்கு தன்பிள்ளை மீது நம்பிக்கைவேண்டும். அப்படி நம்பிக்கை கொள்ளும்படியாக பிள்ளையை பக்குவபடுத்தி வளர்த்ருக்க வேண்டும்........ அதை செய்ய தவறிய பெற்றோர் சந்தேகம் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

பல்கலையும் கற்க வென்று பல்கலைகளகம் செல்லும் பெண்பிள்ளைகள் ........ ஏதோ உணர்ச்சி தீவீரம் காரணமாக ஒரு இரு ஆண் சக மாணவருடன் உறவை வைத்தால் கூட பரவாயில்லை எனலாம்........... இப்போது ஊரே ? உலகமே பார்க்கும் படிக்கு படமாக எடுத்து நெட்டிலேயும் போடுதுகள்! அப்போ பெற்றேரை மட்டும் எவ்வாறு நோவது?

இது மாத்தி மாத்தி கதைக்க கூடிய விடயம். பாம்பு தன் காலை அறிந்து வைத்திருந்தாலே நன்று!

இந்தப் பிரச்சினை நமது தமிழ் பெற்றோர் மத்தியில் பொதுவாகக் காணப்படுவது ஒன்று இருந்தாலும் ஆண்கள் என்றால் துணிந்து அனுப்ப சம்மதிக்கும் பெற்றோர் பெண்கள் என்றால் கொஞ்சம் தயக்கம் காட்டுகிறார்கள்தான். அதுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முதலில் அவர்கள் தங்கள் பிள்ளையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்தப் பிள்ளை போய் வேற நாட்டில் படிப்பதால் இப்படி இப்படி பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கு அதை நீ எப்படி தீர்க்க வேண்டும் என்டு அறிவுரைகள் கூறி அவளால் சமாளிக்க முடியும் என்டு நம்பிக்கை வைத்து அனுப்பி வைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாய்க்குத் தெரியும் தானே ஒரு பெண் எப்படியெல்லாம் யோசிப்பாள் என்று. அதுவும் உண்மைதானே. வசதியா இதை மறந்திடுறீங்க. ஆண்களையும் தகப்பனையும் மட்டும் முன்னுறுத்திறீங்களே ஏன்..??! இதைத்தான் தவறெங்கிறேன்..!

தகப்பன் மாரை விட தாய் மார்தான் பெண் பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்துவதை நான் அவதானிச்சிருக்கிறேன்..! :)

இல்லை நெடுக்ஸ் அண்ணா..............

ஆண்கள்தான் அதிகம் தவறிழைக்கிறார்கள்............. பெண்களை தவறிளைக்க அழைப்பும் விடுகிறார்கள்.

இது யாதார்த்தமான உண்மை. இதை நீங்கள் ஏற்றாக வேண்டும். அதற்காக நான் பெண்கள் தவறே இழைக்கவில்லையென சொல்ல வரவில்லை. தண்டனையில் பாகுபாடு இருப்பதால்....... இதை கண்ணுடாக பார்க்க முடிகின்றது. தவறிழைத்த ஒரு ஆண் ..... அதை தனது திறமையாகவும் காட்ட முனைகிறான். அதே தவறிழைத்த பெண்ணை ஒரு சமூகமே வஞ்சிக்கிறது. இந்த ஓரே காரணத்தால் தவறிழைக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். சட்டமென்பது ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும் வேறுபட்டிருப்பதை எல்லா தமிழ் குடும்பங்களிலிலும் பார்க்கலாம். ஒடுக்குமுறைகள் பெண்கள் மேல் விரிவதால்தான் எப்போதாவது எங்கோயோ கிடைக்கும் ஒரு சந்தர்ப்த்தையும் கிடைவிடலாமா? என நினைத்து கஜவர்களின் கைகளில் பெண்கள் அகப்படுகின்றார்கள்.

சுருக்கமாக கூறின். ஆண் என்பவன் தனது சகோதரிகளையும் தாயையும் தவிர்த்து...... மற்ற எல்லா பெண்களையும் எவ்வாறு அடையலாம் என்பதில்தான் குறியாய் இருக்கிறான். அந்த குறிக்கோளின் அடிப்படையில்தான் சமூக சட்டங்கள் அனைத்தும் புனையபட்டிருக்கின்றது.

பொதுவாக முஸ்லின் இன பெண்களை பார்த்திருக்கின்றீர்களா? வீட்டில் ஆண்கள் பேச்சை கேட்டு தான் இருப்பது நிற்பது எல்லாமே...ஆனால் வெளியே வந்தால் அவர்களின் முகத்தை மூடும் உடையை விலத்தி புகைப்பிடிப்பார்கள்...ரொம்பவ

அட எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்...(பெரியவா எல்லாம் என்னத்தையோ பற்றி சீரியசா டிஸ்கஸ் பண்ணுறியள் போல இருக்கு)...சோ அதுகுள்ள ஜம்மு பேபியும் வந்திட்டு என்றா பாருங்கோ.. :D (நிசமா என்னால முடியல்ல)..

அட யார் சொன்னது தப்பென்று...(நான் சொல்லுறன் தப்பில்லை என்று)...பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ எங்கையும் சென்று படிக்கலாம்...(படிக்கிற ஆசை மட்டும் மனதில இருந்தா)...இல்லாட்டி எல்லாம் போச்சு சொல்லிட்டன்.. :D

குறிப்பாக முகாமைத்துவம் மற்று மார்கெட்டிங் செக்சனில படிக்கிறவை...(இறுதி வருடம் போயிற்று வாரது நல்லது என்று கூறுவார்கள்)...

ஏனேனில் பிறிதொரு நாட்டின் கலாச்சாரம்.மொழி போன்றவற்றையும் பிறிதொரு நாட்டின் முகாமைத்துவம்.கலாச்சாரம் போன்ற விடயங்களையும் படிப்பதிற்காகவே..(இது தொழில் நிமித்தமும் பெரும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறன்).. :(

சோ..இப்படியான நல்ல மாட்டருக்கு போறதில என்ன தப்பு இருக்கு..(இப்ப எக்சாபிளிற்கு பஸ்சில ஏறி போறோம் ஒரு இடத்தை பஸ் அடிபடும் என்றா ஏறி போறோம் அதை மாதிரி தான் இதுவும் :D )...ஏனப்பா எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்திலையே பாருங்கோ..(சீரழிந்து போக வேண்டும் என்றா பிளேன் ஏறி போய் தான் சீரழிய வேண்டும் என்று இல்லை இங்க இருந்தே சீரழிந்து போகலாம் தானே)...இது என்னடப்பா கொடுமை பாருங்கோ.. :(

தன் பிள்ளை மீது பெற்றோருக்கு நம்பிக்கை இருந்தா..(பெண் பிள்ளை)...கண்டிப்பாக அனுப்புவீனம் அப்படி இல்லை என்று மறுத்தா சம்திங் ரோங் சம்வேயார் என்று தானே அர்த்தம் பாருங்கோ..அத்தோடு உறவினர்கள் இருந்தா அனுப்பலாம் என்று எல்லாம் சொல்வது முட்டாள்தனம்..(உறவினர்கள் முழு நேரமும் பிள்ளைக்கு பின்னால தானே திரிந்து கொண்டு தானே இருக்க போயீனம் பாருங்கோ)... <_<

மற்றது மம்மி,டாடி கூட இருக்கிறவை எல்லாம் என்னவோ 100% பத்தினி என்று சொல்லுறது எல்லாம் சுத்த வேஸ்ட் அவைய விட தனிய இருக்கிற பொண்ணுங்க நல்ல ஒழுக்கமா இருக்கீனம் பாருங்கோ..(இன்னொரு நாட்டிற்கு சென்று தனிய என்று வரும் போது மன்டலி அவை ஸ்ரோங் ஆகுவீனம் :( அவை தான் டிசிசன் மேக் பண்ண வேண்டும் அல்லோ)...அப்ப அந்த டிசிசன் என்றைக்கும் நல்ல டிசிசனா தான் இருக்கும்...(கூடுதலாக தப்பான வழிக்கு செல்ல மாட்டீனம் என்று)...நான் சொல்லிட்டன்..(எங்க எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ எனக்கு)..

சோ கவரிமான் அக்கா உங்க பிள்ளையை பயப்பிடாம அனுப்பி வையுங்கோ நெடுக்ஸ் தாத்தா இப்படி தான் சொல்லுவார் ஆனா தன்ட பிள்ளையை அனுப்பி வைப்பார் சொல்லிட்டன்...(பிறகு நீங்க தான் பீல் பண்ணுவியள் சொல்லிட்டன்).. :D

எல்லாம் சொன்ன ஜம்மு பேபி ஒன்றை சொல்லாம போயிட்டனே படிக்கிற பிள்ளை எங்கே இருந்தாலும் படிக்கும் என்பது அந்த காலம்...(படிக்கிற பிள்ளை அந்த இடத்தில இருந்தா தான் படிக்கும் அது இந்த காலம் :o )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எங்க செல்லுறோம் என்பது முக்கியமல்ல என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்" :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

பொதுவாக முஸ்லின் இன பெண்களை பார்த்திருக்கின்றீர்களா? வீட்டில் ஆண்கள் பேச்சை கேட்டு தான் இருப்பது நிற்பது எல்லாமே...ஆனால் வெளியே வந்தால் அவர்களின் முகத்தை மூடும் உடையை விலத்தி புகைப்பிடிப்பார்கள்...ரொம்பவ
  • தொடங்கியவர்
பொதுவாக முஸ்லின் இன பெண்களை பார்த்திருக்கின்றீர்களா? வீட்டில் ஆண்கள் பேச்சை கேட்டு தான் இருப்பது நிற்பது எல்லாமே...ஆனால் வெளியே வந்தால் அவர்களின் முகத்தை மூடும் உடையை விலத்தி புகைப்பிடிப்பார்கள்...ரொம்பவ

Edited by Kavarimaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.