Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம் - புலம்பெயர் இளைஞர்கள்

Featured Replies

நீங்கள் மட்டுமல்ல நானும் தேசியத்தலைவர் மேல் அதீத நம்பிக்கை வைத்திருகின்றேன் ஆனால் அண்மைக்கால நடவடிக்கைகளில் தமிழக சக்திகளை அரவணைத்து போகும் நிகழ்வுகளை அடிக்கடி நீங்கள் காண முடியும் அந்த நகர்வுகளுக்கு நாம் எந்த விதத்திலும் முட்டுகட்டையாக இருக்க வேண்டாம் எனவே நான் சொல்கின்ரேன்.

அதையே தான் நான் உங்களுக்கும் சொல்கிறேன்....!!

தமிழக தமிழர்கள் எல்லாரும் திராவிட இயக்கத்தினர் அல்ல... எல்லாரும் இந்துக்களும் அல்ல கிறிஸ்தவர், இஸ்லாமியர் எண்டு எல்லாரும் இருக்கிறார்கள்... இந்து மதத்தை எதிர்ப்பதால் மட்டும் நீங்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்துவையும் நம்பி பின் தொடர்பவர்களின் மனங்களையும் வெல்ல முடியாது... இந்து மதத்தை போல நீங்கள் அவர்களையும் எதிர்பீர்கள் என்பது தெரியாமலா போய்விடும்...??

திராவிட முன்னேற்ற கழகம் எண்டு பெயர் வைத்தாப்போல அங்கை(ஆதரவாக) இருக்கும் எல்லாரும் மதத்தை எதிப்பவர்கள் எண்டு நீங்கள் நினைச்சா நான் ஓண்டுமே செய்ய முடியாது....

மதம் வேண்டுமா வேண்டாமா எனும் கருத்தை புலிகள் எண்றைக்கும் சொல்ல இல்லை..... வேணும் என்பவர்கள் வைத்து இருக்கட்டும் வேண்டாம் என்பவர்கள் ஒதுங்கி இருக்களேன்...!

நடேசன் அண்ணா சொல்ல தமிழர்களை பழித்து எழுத பட்டவைகளை மாற்றி எழுதுங்கள் என்னும் நிலைப்பாடு பிழை எண்று சொல்வதைவிட , அவர் இந்து மதத்தை எதிர்க்கவும் எண்று சொல்லவில்லை என்பதுதான் உண்மையானது

  • Replies 65
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிறஸ்துவ மதத்தையும் இஸடலாமிய மதத்தையும் எதிhத்தால் அரசியல் நடத்த முடியுமா என்ன?

மற்றது எதிக்க பயம் கூட இந்துக்கள் தான் இழிச்சவாயல் எது சொன்னாலும் அப்பிடியே கேட்டிட்டு இருப்பாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அம்மணியாரே... நான் புகுத்தாத ஈ வெ ராமிசாமியை நீங்களே புகுத்திட்டு எனக்கு விளக்கம் சொல்லுறாப் போல சொல்லுறது.. முடியல்ல...!

ஆரியவாதம்.. இந்துமதத்தின் ஊடு மட்டும் தான் தமிழர்களை அடைகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..??! வேறேதும் வடிவங்களில் ஆரியவாதம் வரவில்லையா..?!

ஐரோப்பிய கொள்கைகளுக்குள்ளும்... ஆரியவாதம் என்பதை ஏற்றுக் கொள்ளுறவையின்ர வடிவத்தில வைச்சுப் பார்க்கேக்க.. அங்கும் ஆரியவாதம் இருக்குது. வெறுமனவே ஆரியவாதம் என்பது வட இந்தியா சார்ந்து இந்துசமயம், பார்பர்ணியம் (பிராமண சமூகம்) சார்ந்து மட்டும் தான் இருக்கு என்ற சிந்தனை வரையறையை மாற்றிக் கொள்ளுங்க..!

ஆரியவாதத்தை தமிழர்களின் வரலாற்றுத் திரிவுக்காகப் பயன்படுத்தியதை.. இன்னொரு போலிவாதத்தால சரிக்கட்ட முடியாது. ஆதாரமுள்ள வகையில அதைத் திருத்த முயல வேண்டும். அதற்கு தமிழர்களின் தொன்மையை தனித்துவத்தோட நிரூபிக்கக் கூடியவற்றுக்கான சான்று தேடல் அவசியம். அதைச் செய்யாம.. வெறும் வாயால வெட்டி வீழ்த்த நினைப்பது.. இந்த ஆரியவாதம் தமிழர்களின் வரலாற்றுத் திரிபைச் செய்ததாகச் சொல்வதற்கு ( உச்சரிக்க) மட்டும் உதவுமே தவிர.. நிரந்தரத் தீர்வைத் தேடித்தராது. :lol:

கலோ நெடுக்ஸ்

உங்களின் இந்த கருத்தோடு எனக்கும் நிறைய உடன்பாடு உண்டு. இதை நிச்சயமாக நான் ஏற்று கொள்ளுகிறேன். தவறு ஆரியரிடம்தான் என்பது என்னுடைய வாதமில்லை............ ஆனால் தனிதமிழுக்குள் இந்துமதம் ஊடாக செருகபட்ட ஆரியவாதத்தை நான் முழு மனதுடன் எதிர்க்கிறேன். அது தமிழில் இருந்து களையபட்டு எறிய பட வேண்டும் என் கருத்து. முடிந்த அளவில் நாம் (நான்) தேடினால் ஆரியவாதம் இந்துமதத்தின் ஊடாகவே உள் நுழைகின்றது இதனாலேயே நான் இரண்டையும் வெறுக்கிறேன் காரணம் இரண்டும் ஒன்றொடு ஒன்று நெருங்கிய தொடர்பை வைத்திருக்கின்றது

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நான் உங்களுக்கும் சொல்கிறேன்....!!

தமிழக தமிழர்கள் எல்லாரும் திராவிட இயக்கத்தினர் அல்ல... எல்லாரும் இந்துக்களும் அல்ல கிறிஸ்தவர், இஸ்லாமியர் எண்டு எல்லாரும் இருக்கிறார்கள்... இந்து மதத்தை எதிர்ப்பதால் மட்டும் நீங்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்துவையும் நம்பி பின் தொடர்பவர்களின் மனங்களையும் வெல்ல முடியாது... இந்து மதத்தை போல நீங்கள் அவர்களையும் எதிர்பீர்கள் என்பது தெரியாமலா போய்விடும்...??

திராவிட முன்னேற்ற கழகம் எண்டு பெயர் வைத்தாப்போல அங்கை(ஆதரவாக) இருக்கும் எல்லாரும் மதத்தை எதிப்பவர்கள் எண்டு நீங்கள் நினைச்சா நான் ஓண்டுமே செய்ய முடியாது....

மதம் வேண்டுமா வேண்டாமா எனும் கருத்தை புலிகள் எண்றைக்கும் சொல்ல இல்லை..... வேணும் என்பவர்கள் வைத்து இருக்கட்டும் வேண்டாம் என்பவர்கள் ஒதுங்கி இருக்களேன்...!

நடேசன் அண்ணா சொல்ல தமிழர்களை பழித்து எழுத பட்டவைகளை மாற்றி எழுதுங்கள் என்னும் நிலைப்பாடு பிழை எண்று சொல்வதைவிட , அவர் இந்து மதத்தை எதிர்க்கவும் எண்று சொல்லவில்லை என்பதுதான் உண்மையானது

தயா எந்த மதத்தையும் யாரும் இங்கே எதிர்க்கவில்லை இதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். ஆனால் இந்துமதம் தமிழினத்தை பல இடங்களில் பல விதமாக இழிவுபடுத்துகின்றது............ இதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களே இந்து மதத்திற்கு ஏதிரானவையாக தோற்றமளிக்கிறது. இந்து மதம் அது இந்துக்களின் உரிமையோடு சம்ந்தப்ட்டது. அதேபோல் தமிழினம் தமிழரோடு சம்ந்தப்ட்டது.

நான் எந்த மதத்தையும் எதிர்கவில்லை நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.நான் சொல்வது இந்த விவாத்துக்கு புலிகள் இழுக்க தேவையில்லை என்பதே

நான் களத்தில் இணைந்த புதிதில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை பற்றி தொடராக எழுத முனைந்தேன் அந்த நேரம் சபேசனும் அந்த தலைபில் எழுத ஆரம்பித்தார் எனக்கு பலத்த எதிர்ப்பு களத்தில் கிடைத்தது பழையதை மற என சொன்ன கள உறவுகளே இன்று இங்கு திராவிடத்தினை இழுத்தார்கள்.செய்த அட்டூழியங்களையே மற என சொன்னவர்கள் ஏன் மத உணர்வினால் சிலதை விட்டு கொடுக்க கூடாது

http://www.yarl.com/forum3/index.php?showt...216&hl=ipkf

அதற்காக நான் யாரையும் மத்த்தை விட்டு கொடு என கேட்கவில்லை அதற்கு எனக்கு உரிமையும் இல்லை ஆனால் பெரியார் என்பவரை மதிப்பவர்கள் நிறையவே தமிழகத்தில் உண்டு அவரினை கொச்சைபடுத்த இந்த தலைப்பில் தேவையற்றது.தனித்தலைப்பில் எப்படியும் வாதிடுங்கள் ஆனால் இந்த தலைப்பில் வேண்டாம் எனவே சொல்கின்றேன் எவரின் ஆதரவினையும் புலிகளையும் இதற்குள் இழுத்து வீணடிக்க வேண்டாம் எந்த ஆதரவும் நமக்கு பலம் சேர்க்குமே தவிர பலவீனமாக்காது

சென்சிட்டிவான விடயங்களை பேசி நமக்கு நாமே குழியை பறிக்க தேவையில்லை

எனக்கு ipkf சம்பந்தமான பதிவில் கிடைத்த பதில்கள் சில முக்கியமாக நீங்கள் எழுதிய பதில்

இருக்கும் ஈழத்து மக்களை காப்பாற்ற தமிழகம் குரல் குடுக்கிறது... போனதுக்காக கவலை கொண்டு இருப்பதை இளக்காமல் இருப்பது நல்லது....

ஆகவே தமிழக மக்களின் அன்புக்காக இந்தியா மீதான வெறுப்பில் இருந்து பின்வாங்கலாம் தவறு அல்ல...!

பழைய கறைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனக் குரல்கள் எழதம்போது, மீண்டும் தற்காலத்தில் அது கிளறப்பட வேண்டுமா என்பது தெரியவில்லை

ஈழவன் "85" இப்போ "06" ஆகி விட்டது!!

தேவையற்ற விவாதங்கள், தேவையற்ற காலத்தில் ஏன்??????

இல்லை, குட்டையை குழப்புவதில் ஒரு சந்தோசாமா??? இல்லை, வேறேதும் பின்னனியா????????????

எந்தப் புத்தில் எந்தப் பாம்பு .......??????????

இது தேவையற்ற விடயம் என்றே நானும் நினைக்கின்றேன்.

இவ்விடயம் பற்றி ஏற்கனவே பலர் இதே களத்தில் நிறைய எழுதிவிட்டார்கள். இவ்விடயத்தில் இருதரப்பிலும் நிறையத் தவறுகளுண்டு.

தற்போது தமிழக அரசு மற்றும் மக்களின் ஆதரவு நிலைகளும் மத்திய அரசின் மனமாற்றங்களும் இருக்கும் தற்போதய நிலையில் இவ்விடயம் எமக்குப் பாதிப்புக்களையே ஏற்படுத்தலாம். இதனையே மற்றவர்களும் குறிப்பிடுகின்றார்கள். நடந்த சம்பவங்கள் எமக்கு மாறாத வடுக்களாகிவிட்டபோதிலும் நல்லது நடக்க வேண்டுமென்ற ஆசையில் அவற்றை மறந்தல்ல சற்று நினைவுூட்டாமல் இருப்பது எமக்குத்தான் நல்லது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் பெரும் பாதிப்புக்குள்ளான யப்பான் மீண்டும் அமெரிக்காவுடன் கைகுலுக்க முடியுமென்றால். எங்களால்????

தயா எந்த மதத்தையும் யாரும் இங்கே எதிர்க்கவில்லை இதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். ஆனால் இந்துமதம் தமிழினத்தை பல இடங்களில் பல விதமாக இழிவுபடுத்துகின்றது............ இதற்காக முன்வைக்கப்படும் கருத்துக்களே இந்து மதத்திற்கு ஏதிரானவையாக தோற்றமளிக்கிறது. இந்து மதம் அது இந்துக்களின் உரிமையோடு சம்ந்தப்ட்டது. அதேபோல் தமிழினம் தமிழரோடு சம்ந்தப்ட்டது.

நாங்கள் இந்துக்கள் என்பதைவிட தமிழர்கள் ஒத்து கொள்கிறேன்... ஆனால் இண்று தமிழன் இறந்து கொண்டு இருப்பதுக்கு மேற்குலக கிறீஸ்தவமும், மத்திய கிழக்கின் இஸ்லாமும் , இலங்கையின் பௌத்தமும் காரணமாக இருக்கிறது.... அதுக்கு எதிராக எப்போது கிழம்ப போகிறீர்கள்...????

குர் ஆன் பல வளிகளிலும் பெண்களை தாள்த்துகிறது அதுக்கு எதிராக உங்களின் குரல் உயருமா..?? கிறிஸ்தவ பிரிவு ஒண்று மருத்துவம் செய்வது கடவுளின் படைப்புக்கு எதிரானது எண்டு பிரச்சாரம் செய்கிறது அதுக்கு எதிராக குரல் உயர்த்துவீர்களா...???

ஏதும் அறியா சிறார்களை துறவிகள் ஆக்கும் பௌத்தம் அதை நீங்கள் எதிர்ப்பீர்களா..??

Edited by தயா

நாங்கள் இந்துக்கள் என்பதைவிட தமிழர்கள் ஒத்து கொள்கிறேன்... ஆனால் இண்று தமிழன் இறந்து கொண்டு இருப்பதுக்கு மேற்குலக கிறீஸ்தவமும், கிழக்கின் இஸ்லாமும் , இலங்கையின் பௌத்தமும் காரணமாக இருக்கிறது.... அதுக்கு எதிராக எப்போது கிழம்ப போகிறீர்கள்...????

அண்ணை மேற்குலக கிறிஸ்த்தவம், கிழக்கு இஸ்லாம் இலங்கை பவுத்தம் எல்லாம் தமிழனின் சாவுக்கு காரணமெண்டால் வடக்கத்தைய இந்துத்துவம் என்ன தமிழனைக் காப்பாத்திக் கொண்டு இருக்கோ?

அண்ணை மேற்குலக கிறிஸ்த்தவம், கிழக்கு இஸ்லாம் இலங்கை பவுத்தம் எல்லாம் தமிழனின் சாவுக்கு காரணமெண்டால் வடக்கத்தைய இந்துத்துவம் என்ன தமிழனைக் காப்பாத்திக் கொண்டு இருக்கோ?

காப்பாத்துகினம் எண்டு ஒருவேளை எங்கையாவது எழுதி இருக்கிறனே எண்டு தேடிப்பாத்தன்... கிடைக்க வில்லை.. அந்த இடத்தை ஒருக்கா சுட்டி காட்டுங்கோவன்....! ***

இந்திய வடக்கன் இந்து சரி...! அப்ப அமெரிக்கனும் பாக்கிஸ்தான் காறனும் யார்..?? சீனன்.?? அவர்களின் மதங்களை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை...??

கேட்டா ஆதரவு போய்விடும் எண்டுவியள்... ஆனா நீங்கள் எதிர்த்தாலும் இந்தியர்கள் உங்களுக்கு ஆதரவு தரவேணும்... அப்பிடித்தானே...

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நீங்கள் இந்துவம் தமிழனைக் காக்குது எண்டு எழுதுயிருக்கிறீர்கள் எண்டு நான் எழுதிப்போட்டனோ எண்டு நானும் என்ர பதிவை படித்துப் பார்த்தன் அப்படி ஒண்டையும் காணேல்ல. அப்படி இருந்தா சுட்டிக்காட்டுங்கோ. ***

அண்ணை இப்ப எங்களிற்குள்ள இந்து மதம் எண்ட போர்வையில் வந்து குவிஞ்சிருக்கிற சாக்கடைகளைக் கழுவிச் சுத்தம் செய்து போட்டு அமெரிக்க சீனன் பாகிஸ்தான் காரன்ரயிலை ஒட்டியிருக்கிற சாக்கடையைப் பிறகு கழுவும்.

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

மின்னல் அண்ட் தயா எனக்கு நீங்கள் இருவரும் இந்த தலைப்பில் தொடர்ந்து கருத்தாடுவது சரியாக படவில்லை :D

இந்துத்துவம் மட்டும் அல்ல காரணம் என்பதுதான் எனது வாதமே ஒழிய இந்துத்துவம் காரணம் இல்லை எண்டு நான் எங்கும் சொல்ல இல்லை...

இந்துத்துவதை மட்டும் எதிர்க்காதீர்கள். அப்படியானால் எல்லாரையும் சேர்த்து எதிர்ப்பதுதானே ஒழுங்கு...! அதை தான் நான் மதுரகாந்திக்கு எழுதி இருந்தேன்... முன்னைய கருத்தாடல்களில் அவருடன் செய்ததின் தொடர்ச்சிதான் அது...

***

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியங்கள் எங்கனும் "ஆரியவாதம்" என்ற மாயை வாதம் உள்ளதுதான். அதேபோல் "திராவிடவாத" மாயையும் உள்ளது. இந்துமதத்துள்ளும் அது இருக்கலாம். ஆனால் இந்துமதத்துள் "திராவிடவாதமும்" உண்டு.. "தமிழ் தேசியவாதமும்" உண்டு என்பதை மறைச்சிடுறீங்க. முருகனைத் தமிழ் கடவுள் என்றீங்க.. சிவபூசை செய்த இராவணனை தமிழன் என்றீங்க.. நீங்களே சுயமுரண்படுறீங்களே.

தமிழீழ விடுதலைப் போராட்டம்.. ஆரியவாதத்தை அழிக்க மையப்படுத்தியா எழுப்பப்பட்டது. சிங்கள பேரினவாதத்தின் தமிழர் இன அழிப்புக்கு எதிராகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பிரதான இலக்கை முதலில் அடைய நில்லுங்கள். அதன் பின்னர் ஆரியவாதத்தை அழிக்கிற பணியையும் தமிழ் சுத்திகரிப்பையும் செய்யலாம்.

அங்கால ஒன்றாக் கிடந்த கிழக்கைப் பிரிச்சு.. கூத்து நடக்குது.. அதைக் கவனிக்க ஆக்களில்ல... ஆரியவாதத்தில இருந்து இந்துமதத்துக்க சுத்திகரிக்க வெளிக்கிட்டு.. உள்ளதையும் காவு கொடுக்காம இருந்தால் சுபம்..! :D:D

இந்துத்துவம் மட்டும் அல்ல காரணம் என்பதுதான் எனது வாதமே ஒழிய இந்துத்துவம் காரணம் இல்லை எண்டு நான் எங்கும் சொல்ல இல்லை...

இந்துத்துவதை மட்டும் எதிர்க்காதீர்கள். அப்படியானால் எல்லாரையும் சேர்த்து எதிர்ப்பதுதானே ஒழுங்கு...! அதை தான் நான் மதுரகாந்திக்கு எழுதி இருந்தேன்... முன்னைய கருத்தாடல்களில் அவருடன் செய்ததின் தொடர்ச்சிதான் அது...

நீங்கள் அவரின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதியதில் இன்று தமிழனின் சாவிற்கு (அவர் தமிழனின் இன்றைய சாவைப் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை) மேற்குலக கிறிஸ்தவம் கிழக்கு இஸ்லாம் இலங்கைப் பவுத்தம் இந்த மூன்றும எழுதியிருந்தீர்கள். இந்துத்துவம் மட்டும் காரணமில்லையென்றால் ஏன் இந்துத்துவத்தை மட்டும் விட்டுப்போட்டு மற்றைய மூன்றை மட்டும்தான் காரணமெனக் குறிப்பிட்டீர்களாக்கும்.?

***

*** மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நீங்கள் அவரின் கருத்தை மேற்கோள் காட்டி எழுதியதில் இன்று தமிழனின் சாவிற்கு (அவர் தமிழனின் இன்றைய சாவைப் பற்றியெல்லாம் குறிப்பிடவில்லை) மேற்குலக கிறிஸ்தவம் கிழக்கு இஸ்லாம் இலங்கைப் பவுத்தம் இந்த மூன்றும எழுதியிருந்தீர்கள். இந்துத்துவம் மட்டும் காரணமில்லையென்றால் ஏன் இந்துத்துவத்தை மட்டும் விட்டுப்போட்டு மற்றைய மூன்றை மட்டும்தான் காரணமெனக் குறிப்பிட்டீர்களாக்கும்.?

இந்தியா செய்த கொலைகளை நான் சொன்னால்தான் நம்புவீங்களோ....??

இழிவு படுத்தலுக்காக கெம்பி எழும் நீங்கள் ஏன் கொலைகளுக்காக மௌனம் காக்கிறனீங்கள்... இதுதான் எனது கேள்வி...

உங்களுக்காக எல்லாம் எழுதினதுகளை திரும்பவும் எழுத ஏலாமல் கிடக்கு...

இந்தியா செய்த கொலைகளை நான் சொன்னால்தான் நம்புவீங்களோ....??

உங்கடை வாதத்தை நியாயப்படுத்த இன்றைய எமது போராட்டத்திற்கெதிராக செயற்படும் சக்திகளில் இந்தியாவை வேண்டுமென்று தவிர்த்திருந்தீர்கள். நீங்கள் குறிப்பிட்ட மூன்றோடு முக்கிய ஒன்றாக இருக்கிற இந்துத்துவ இந்தியாவும் இருக்கு என்பதையே நாம் சுட்டிக்காட்டினோம்.

இழிவு படுத்தலுக்காக கெம்பி எழும் நீங்கள் ஏன் கொலைகளுக்காக மௌனம் காக்கிறனீங்கள்... இதுதான் எனது கேள்வி...

சிறிலங்கா அரசிற்கு எதிராக தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை நசுக்க பிற சக்திகள் சிறிலங்காவிற்கு முண்டு கொடுக்கிறபோதும் தொடர்ந்தும் தமிழர்கள் தமது போராட்டத்தை எந்தவித அடிபணியலுக்கும் இடமில்லாது முன்னெடுத்துச் செல்கிறார்களே...! அந்த போராட்டம் தனியே சிறிலங்காவிற்கு எதிரானதல்ல, முண்டு கொடுக்கிற சக்திகளிற்கும் எதிரானது. சிறிலங்காவிற்கு முண்டு கொடுப்பதற்காக அந்த நாடுகளிற்கு எதிராகச் செயற்படத்தேவையில்லை. எமது போராட்டத்தை நாம் வென்றெடுப்பதே எம்மை எதிர்த்து நின்கிற சக்திகளிற்கு நாம் கொடுக்கிற பதிலடி.

எது ஆரியம்? எது திராவிடம்? பிரித்தறியக் கூடிய விடயமாக இது இல்லை. அப்படி வேறுபடுத்திப் பார்ப்பதென்றாலும், ஒரு எல்லைக்குட்பட்டுத்தான் இது நிற்கும். அப்படி இல்லையென்று ஒரு அளவிற்குப் பிரித்தறிந்தாலும் அந்தத் திராவிடத்துள்ளோ, ஆரியத்துள்ளோ சென்று பின்பன்ற முடியுமா?

ஆரிய திராவிட வாதங்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதேயில்லை. அரசியற் பொறுப்பாளர் நடேசனின் கூற்று தவறாக முன்னெடுக்கப்படுகிறது.

ஆரியத்திணிப்புகளில் உள்ள பொய்கள், என்றுபார்த்தால் திராவிடத்திலும் அப்படிப்பட்ட பொய்களும், மூடநம்பிக்கைகளும் உண்டு. ஆரியத்திலோ திராவிடத்திலோ இருக்கின்ற வழிநடத்தல்களில் பிழையானவை நீக்கப்படவேண்டும் என்ற கருத்தே நடேசனால் முன்வைக்கப்பட்டிருக்கும்.

உலகத்திலுள்ள எல்லா சமூகங்களிலும் மதங்களிலும் குறைபாடுகளுண்டு. அதனைப் பின்பற்றுபவர்களிடம் தெளிவில்லாவிடின் அவற்றுக்கு மாற்று வழி காண்பது கடினம். தான் கொண்டதே சரியென உடும்புப்பிடி பிடித்துக் கொண்டிருந்தால், முக்கியமற்றதான ஒரு விடயம், இந்தப் பகுதியைப் போன்று சூடாகிக் கொண்டே செல்லும்.

நடேசனது கருத்து குறை அகற்றுதல் என்ற பொருள்படவே கூறப்பட்டதேயன்றி, திராவிடத்தையும் ஆரியத்தையும் பிரித்தல் என்ற பொருளில் அமையவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.