Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை?

Featured Replies

வணக்கம் எல்லோருக்கும்

நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு விவாவதத் தலைப்புடன்

கள உறவுகளைச் சந்திப்பதில் ஆனந்தம். தலைப்பைப் பார்த்தவுடன்

விளங்கியிருக்கும், நாங்கள் களத்தில் நெடுக காதலைப் பற்றி மிகவும்

அதிகமாகவே கதைத்து விட்டோம், ஆகவே தற்போது கொஞ்சம்

நட்பைப் பற்றியும் பேசலாமே என்ற எண்ணத்தில் உங்களுடன்..

சும்மா நட்பு என்றால் அதில் அனைவருக்கும் ஒரே கருத்துதான்

இருக்கும் அதாவது அது உயர்வானதென்று, ஆதலால் சற்று

மாறுதலுக்கா விவாதத்திற்கு ஏற்புடையதாக தலைப்பை இன்றைய

சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை? எல்லொரும் உடனே நட்பில்

ஆண் என்ன பெண் என்ன அது போன்ற வித்தியாசம் ஏதுமில்லையென்று

சுருக்கமாகக் கூறி முடித்துவிடாதீர்கள், இதில் நிச்சயம் நிறைய வேறுபாடுகள்

உண்டு. ஒருவேளை அது அந்த நண்பர்களுக்குள் இல்லாமலிருக்கலாமே

தவிர மற்றவர்களால் நிச்சயம் அந்த வேறுபாடுகள் இருக்கும்.

சரி முதல் உறவுகளிடம் நான் முன்வைக்கும் சில கேள்விகளுக்கு உங்கள்

பதில் என்ன எனப் பார்ப்போம்.,

இன்றைய சூழலில் ஆண், பெண் நட்பைப் பற்றிய தங்கள் கருத்துத்தான் என்ன?

இன்றைய சூழலில் ஆணும், பெண்னும் பழகுவது சாதாரணமாகிவிட்ட

நிலையில் அந்த நட்பின் ஆழம் எந்த அளவு, நான் இந்தக் கேள்வியைக்

கேட்பதன் காரணம் இன்று சாதாரணமாகவே எனக்கு Girl / Boy Friends

நிறைய இருக்கிறார்கள் எண்டு சொல்றது ஒரு நாகரீகமாகிவிட்டதால்,

தன்னுடைய நண்பர்கள் மத்தியில் இதை ஒரு அத்தியாவசியமான

தகுதியாக இளைஞர்கள் கருதுவதால் இந்த நட்பின் உறுதியைக் கேள்வி

கேட்க வேண்டிய நிலை வருகிறது.

அடுத்து இரு ஆண்களுக்குள்ளோ அல்லது இரு பெண்களுக்குள்ளோ

இருக்கும் நட்பிற்கும், ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கும் உள்ள நட்பிற்கும்

என்ன வேறுபாடுகள் இருக்குமென்று நினைக்கிறீர்கள்.

இவை அனைத்தையும் தாண்டி நல்ல நண்பர்களா ஆணும் பெண்ணும்

இருந்தாலும், அந்த நட்பின் ஆயுள் காலம் எதுவரை இருக்கும் என்பதே

என் முக்கியமான கேள்வி? காரணம் பல நட்புக்கள் ஆணாக இருந்தாலும்

சரி பெண்ணாக இருந்தாலும் சரி திருமணத்திற்குப் பிறகு அந்த நட்புக்கள் பல

காணாமல் போகின்றது இதற்கு என்ன காரணங்கள்?

மேலுள்ள கேள்விகளுக்கு உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

நன்றி.

நட்புடன்

இரசிகை

Edited by Rasikai

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பால் ஈர்ப்பென்பது உடலோடு உள்ளவரை. ஆண் பெண் நட்பு சந்தேகத்திற்குரியதே. ஒரு குறிக்கோளின் பால் இன்றி அல்லது ஒரு இலடசியத்திற்காக (இலக்கு) இணையும் போது அந்த இலக்கே இருவர் உள்ளங்களிலும் முனைப்பாய் இருக்கும் ஆகவே அங்கே ஒரு நட்புடனான செயற்பாடு இருக்குமென்பதில் எனக்கு எதிர் கருத்த கிடையாது. அதைவிடுத்து ஒரு ஆணும் பெண்ணும் எமக்கிடையிலான நட்பு புனிதமானதென்பது.............. புனிதமென்றால் என்ன என்ற வாதத்திற்கு மட்டுமே உகந்தது நட்பிற்கு உதவாது என்பதே எனது கருத்து. எவ்வாறெனில் ஒரு ஆணுக்கும் இன்னொரு பெண்ணுகும் இடையே நட்பு மலர்கிறது என வைப்போமானால். அந்த பெண் சொல்கிறாள் எமது நட்பு புனிதமானது என்று........... இவ்விடத்தில் அந்த ஆணுடைய மனதை எவ்வாறு அவளால் ஆதாரங்காண முடியும்??? அவளுடை நட்பு வேண்டுமெனில் புனிதமானதாக இருக்கலாம். ஆனால் நிச்சயமமாக இன்னொருவரை மற்றைய ஒருவர் ஆதாரம் காட்ட முடியாது. இந்த நட்பினால் ஒரு பெண்ணுடன் அருகாக நின்று பேசவாவது முடிகிறதே என்று அவன் மனதிற்குள் கொள்ளலாம். அதற்காக நான் புனிதம் காக்க வேண்டுமென்று அவன் புனிதம் காக்கலாம். அதை எவ்வாறு அந்த பெண் ஆதாரம் காட்ட முடியும்?????

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குத் தெரியாம எத்தனை நட்பும் வைக்கலாம். ஏன்னா அது நட்பா இருந்தா என்ன.. இல்ல வேறாதுமா இருந்தா என்ன சிரசுக்கு தேசாரம் வாராது தானே..!

குறிப்பா பெண்கள் இப்ப இந்த ரெக்னிக்கைத்தான் பாவிக்கிறாங்க..! சோ சோ இழிச்ச வாய் ஆண்களுக்கு... எதுகிடைச்சாலும்... சோ சோ... அசடு வழியத்தான் செய்யும்..! :lol::huh:

Edited by nedukkalapoovan

ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், தமிழ் சமுதாயம் அவர்களை வேறு நோக்குடன் தான் பார்க்கும். :unsure:

ஆனால் முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களா என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆண்கள் முதலில் நண்பர்கள் போல் பழகுவார்கள், அப்புறம் ஐ லவ் யூ என்று சொல்லிடுவார்கள்... :huh::unsure: இதில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். :lol::unsure:

ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், தமிழ் சமுதாயம் அவர்களை வேறு நோக்குடன் தான் பார்க்கும்.

ஆனால் முதலில் அவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக இருக்கிறார்களா என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆண்கள் முதலில் நண்பர்கள் போல் பழகுவார்கள், அப்புறம் ஐ லவ் யூ என்று சொல்லிடுவார்கள்... இதில் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

நானும் அதைதான் சொல்லுகிறன். ஒரு ஆணால் ஒரு பெண்ணுடன் நல்ல நண்பனாக இருக்கமுடியாது. தெஸ்தெஸ்ரரோனின் பிரச்சனையோ தெரியாது :huh:

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வணக்கம்...(என்ன பார்க்கிறியள் வணக்கம் சொன்னனான்)..நீண்ட நாளின் பின் இரசிகை அக்காவிற்கு எங்களை சந்திபதில் ஆனந்தமோ நமக்கு அப்படி இல்லை அச்சோ சும்மா சொன்னனான் கோவித்து போடாதையுங்கோ.. :D

ம்ம்ம்....ஆண்,பெண் நட்பின் நிலை பற்றி கேட்கிறீங்க..(என்னால முடியல்ல)...நட்பு நன்னா தான் இருக்கு ஆனா பார்க்கும் கண்களை பொறுத்து வேறுபடுகிறது பாருங்கோ..(இப்ப பாருங்கோ பாலும்,கள்ளும் ஒரே நிறம் ஆனா பார்க்கும் கண்கள்)..இதை எங்கையோ கேட்ட டயலக்கா இருக்கோ சரி எனி மாட்டருக்கு வாரன் என்ன.. :(

ம்ம்...ஆண்,பெண் நட்பின் நிலை ரசிகை அக்கா எமது சமூகத்தை உற்று நோக்குவோமாயின்...(ரொம்ப வீக்கா இருக்கு பாருங்கோ)...நட்பு வந்து யூனியோட முடிந்திடும் அதாவது யூனியில நல்ல பிரண்ஸா கதைப்பீன சிரிப்பீனம் அப்படியே வேலையிலையும் ஆனா வீட்டிற்கு பயந்து அதை எல்லாம் வீட்ட சொல்ல மாட்டீனமே பல கேள்ஸ்..(இது தான் இன்றைய ஆண்,பெண் நட்பின் நிலை).. :D

அப்படி தாண்டி ஒரு 20% இதை விட குறைவான ஆட்கள் தான் உண்மையான நட்பு ரீதியில் பழகுகிறார்கள் மற்றவர்கள்..நெடுக்ஸ் தாத்தா சொன்ன மாதிரி வீட்டிற்கு தெரியாம மறைக்கிறார்கள்..(இதை எல்லாம் நட்பு என்று சொல்ல முடியாது)...ஆனால் நட்பின் கட்டகரிகுள் அடக்குகிறார்கள்...(ரொம்ப கொடுமையாக்கும்).. :lol:

ஆனால் இவர்கள் ஏன் வீட்டை சொல்வதில்ல என்பதனையும் நாம் சிந்திக்க வேண்டும் பிகோஸ் வீட்ட இதை சொன்னா..(வித்தியாசமான பார்வை ஏளனமான கேள்விகள்)...என்பனவற்றால் தங்களை தாங்களே இவர்கள் ஏமாற்றுகிறார்கள்...(சோ ஆண்,பெண் நட்பை கொச்சைபடுத்துவது எமது சமூகம் தான் :D )..இதில் மறுபதற்கு எதுவிமில்லை பாருங்கோ...

அதற்காக எல்லா நட்பையும் கொச்சைபடுத்தவில்லை உறுதியான அசைக்க முடியாத நட்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன..அதோடு இரு ஆண்களுகுள்ள உள்ள நட்பிற்கும் இரு பெண்களுக்கு இடையில் உள்ள நட்பிற்கும் ஆண்,பெண் நட்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்றே கூறலாம் பாருங்கோ.. :D

ஒரு பெண் எல்லா விசயத்தையும் ஒரு ஆண் நண்பனொடு பகிர முடியுமா இல்லையே அதை போல் எல்லா விசயங்களையும் ஆண்களும் பகிர்ந்து கொள்ள மாட்டீனம் ஆனால் இரு ஆண்களோ அல்லது இரு பெண்களோ நட்பு கொண்டா அதனை இலகுவா பகிர்ந்து கொள்வார்கள் பாருங்கோ அங்க தான் மாட்டரே இருக்கு ரசிகை அக்கோய்.. :(

சொல்ல போனா ஆண்,பெண் நட்பு அநேகமானவை திருமணத்தோட சரி அதுக்கு பிறகு நீங்க யாரோ நான் யாரோ கோவிலில கண்டாலும் காணாத மாதிரி போவீனம்...(இல்லாட்டி சில பேர் புருசனிற்கு தெரியாம வைத்து கொள்ளுவீனம் அது தான் நட்பை)...என்னால முடியல்ல இப்படி தான் நடக்குது லோகத்தில என்ன கொடுமை இது..ஒரு சிலரை தவிர..(திருமணதிற்கு பின்பும் தூய நட்பை தொடர்பவர்கள் இருக்கவே செய்யீனம் :rolleyes: )..

இதற்கு முக்கிய காரணம் வேலை முடிந்தா பிறகு வெட்டி விடுற கோஷ்டி...(நெடுக்ஸ் தாத்தா நான் சொல்லுறது சரி தானே)...மற்றது சமூகத்தின் மீதுள்ள பயம்..(அவர்களே நட்பை நட்பு ரீதியாக பார்க்காத படியா தான் இந்த பயம் எல்லாம்)...இல்லாதுவிடில் பயப்பிட வேண்டிய அவசியமில்லை பாருங்கோ.. :D

சோ இது தான் என்ட கருத்து..(எங்க எல்லாரும் எனகொருக்கா ஜோரா கையை தட்டி விடுங்கோ)...அதோட இன்னொரு மாட்டர் முக்கியமான மாட்டர்..

கவரிமான் அக்கா,கவி அக்கா

ஆண்கள் நண்பர்கள் போல் பழகுவார்கள் அதற்கு பிறகு ஜ லவ் யூ சொல்லுவார்கள் என்றா அந்த பெண்கள் ஆண்களை ஜ லவ் யூ சொல்ல தக்க வகையில் நடந்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டும் பாருங்கோ..பெண்கள் ஒழுங்கா இருந்தா ஏன் அவர்கள் சொல்லுகிறார்கள் அதை கொஞ்சம் திங் பண்ணுங்கோ..(என்ன நான் சொல்லுறது சரியோ)..சோ பெண்கள் ஒழுங்கா இருந்தா ஆண்களும் ஒழுங்கா தான் இருப்பார்கள் விளங்கிச்சோ..(என்னால முடியல்ல)... :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கண்ணுக்கு தெரியாதது நட்பு தெரிந்தா அது தப்பு"

அப்ப நான் வரட்டா!!

நெடுக்ஸ் தாத்தா,

ரசிக மன்ற தலைவர்,

ஜம்மு பேபி!!

கவரிமான் அக்கா,கவி அக்கா

ஆண்கள் நண்பர்கள் போல் பழகுவார்கள் அதற்கு பிறகு ஜ லவ் யூ சொல்லுவார்கள் என்றா அந்த பெண்கள் ஆண்களை ஜ லவ் யூ சொல்ல தக்க வகையில் நடந்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டும் பாருங்கோ..பெண்கள் ஒழுங்கா இருந்தா ஏன் அவர்கள் சொல்லுகிறார்கள் அதை கொஞ்சம் திங் பண்ணுங்கோ..(என்ன நான் சொல்லுறது சரியோ)..சோ பெண்கள் ஒழுங்கா இருந்தா ஆண்களும் ஒழுங்கா தான் இருப்பார்கள் விளங்கிச்சோ..(என்னால முடியல்ல)... :lol:

சோ நீங்கள் சொல்றீங்க, ஆண்கள் எடுத்த முடிவில் திடமாக இருக்கமாட்டார்கள் என்று.... ம்ம்ம் இருக்காலாம். :D

பட் பெண்கள் அவர்களை மாற்றனும் என்று நினைக்கிறதில்லை... காதலுக்காக கூடுதலா அலைபவர்களும் பெண்கள் இல்லை.... :D:lol:

காதல் எப்படி நட்பு ஆகாதோ அதேபோல் நட்பும் காதல் ஆக கூடாது. என்னாலையும் முடியல...... :(

Edited by Kavarimaan

சோ நீங்கள் சொல்றீங்க, ஆண்கள் எடுத்த முடிவில் திடமாக இருக்கமாட்டார்கள் என்று.... ம்ம்ம் இருக்காலாம்.

பட் பெண்கள் அவர்களை மாற்றனும் என்று நினைக்கிறதில்லை... காதலுக்காக கூடுதலா அலைபவர்களும் பெண்கள் இல்லை....

காதல் எப்படி நட்பு ஆகாதோ அதேபோல் நட்பும் காதல் ஆக கூடாது. என்னாலையும் முடியல......

நெவர் கவரிமான் அக்கா..(ஆண்கள் முடிவில் திடமாக தான் இருக்கிறார்கள் :D )ஆனால் பெண்கள் அப்படி இல்லை..(அவர்களினால்)...தான் ஆண்கள் ஜ லவ் யூ சொல்லுகிறார்கள்... :( (பெண்கள் நட்பை திடமா வைத்திருந்தா நிச்சயமா எந்த ஒரு ஆணும் ஜ லவ் யூ சொல்ல மாட்டான் அக்கா)..பொயின்டை கச் பண்ணிட்டியளே.. :lol:

ம்ம்ம்...பெண்கள் அவர்களை மாற்றனும் என்று நினைக்கிறதில்ல சரி ஒகே ஆனா பெண்களின் மனது..(மங்கி மாதிரி)...மாறிடுதே... :lol: (இது தான் மாட்டரே)..ம்ம்ம் பெண்கள் காதலுக்காக அலைவர்கள் இல்லை ம்ம்ம்ம் ஆனா என்ன மனதில காதலை வைத்து கொண்டு தவியா தவிக்கிறவை :D ஆனா ஆண்கள் அப்படி இல்லை கவரிமான் அக்கா..(எப்பவுமே ஓபின் மைன்ட்)..பெண்கள் அப்படியா?? :lol:

என்ன கவரிமான் அக்கா நான் சொல்லுறது சரி தானே..(தம்பி சொன்னா கேட்க வேண்டும் இல்லாட்டி அழுதிடுவன் :) )..

ம்ம்ம்..காதல் எப்படி திருமணம் ஆகாதோ அதை போல் நட்பும்....(என்னால முடியல்ல :( )..வீட்டு கேட்டை திறக்க மட்டும் தான்.. :D

அப்ப நான் வரட்டா!!

நெவர் கவரிமான் அக்கா..(ஆண்கள் முடிவில் திடமாக தான் இருக்கிறார்கள் :D )ஆனால் பெண்கள் அப்படி இல்லை..(அவர்களினால்)...தான் ஆண்கள் ஜ லவ் யூ சொல்லுகிறார்கள்... :lol: (பெண்கள் நட்பை திடமா வைத்திருந்தா நிச்சயமா எந்த ஒரு ஆணும் ஜ லவ் யூ சொல்ல மாட்டான் அக்கா)..பொயின்டை கச் பண்ணிட்டியளே.. :unsure:

ம்ம்ம்...பெண்கள் அவர்களை மாற்றனும் என்று நினைக்கிறதில்ல சரி ஒகே ஆனா பெண்களின் மனது..(மங்கி மாதிரி)...மாறிடுதே... :D (இது தான் மாட்டரே)..ம்ம்ம் பெண்கள் காதலுக்காக அலைவர்கள் இல்லை ம்ம்ம்ம் ஆனா என்ன மனதில காதலை வைத்து கொண்டு தவியா தவிக்கிறவை :D ஆனா ஆண்கள் அப்படி இல்லை கவரிமான் அக்கா..(எப்பவுமே ஓபின் மைன்ட்)..பெண்கள் அப்படியா??

என்ன கவரிமான் அக்கா நான் சொல்லுறது சரி தானே..(தம்பி சொன்னா கேட்க வேண்டும் இல்லாட்டி அழுதிடுவன் :( )..

அப்ப நான் வரட்டா!!

சில ஆண்கள் நண்பர்களாக பழகுவதே காதல் என்ற ஒன்றை மைன்டில வைச்சிடு தான்.... ஓர் இரு வருடம் நண்பர்கள் போல பழகுவார்கள் அப்புறம் காதல் என்று சொல்வார்கள்.... (எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.... ) :D

பெண்கள் மனது மாறிடுது என்று சொல்றீங்க... நண்பர்களாக பழகும் போது முதலில் காதல் என்று சொல்வது ஆண்கள் தானே... அப்படி சொல்லியதால் நட்பு பிரித்து போவதும் உண்டு அல்லவா???

அச்சோ இதுக்கு போய் அழுதிடுவன் என்டு சொல்றீங்க... அழ எல்லாம் கூடாது என்ன.. :lol::lol:

Edited by Kavarimaan

சில ஆண்கள் நண்பர்களாக பழகுவதே காதல் என்ற ஒன்றை மைன்டில வைச்சிடு தான்.... ஓர் இரு வருடம் நண்பர்கள் போல பழகுவார்கள் அப்புறம் காதல் என்று சொல்வார்கள்.... (எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.... )

பெண்கள் மனது மாறிடுது என்று சொல்றீங்க... நண்பர்களாக பழகும் போது முதலில் காதல் என்று சொல்வது ஆண்கள் தானே... அப்படி சொல்லியதால் நட்பு பிரித்து போவதும் உண்டு அல்லவா???

அச்சோ இதுக்கு போய் அழுதிடுவன் என்டு சொல்றீங்க... அழ எல்லாம் கூடாது என்ன..

சப்ப்பா...முடியல்ல..(இப்பவே கண்ணை கட்டுதே :D )..ம்ம்ம் ஆண்கள் மைன்டில வேண்டும் என்றா காதலை வைத்திட்டு பழகுவார்கள் ஆனா பொண்ணுங்க மனதில காதலை வைத்திட்டு பழகுறாங்க கவரிமான் அக்கா..(நான் சொல்லுறது சரி தானே :D )..ம்ம்...ஆண்கள் மைன்டில இருக்கிறதை ஓபினா சொல்லிடுவார்கள் ஆனா பொண்ணுங்க அப்படியா இல்லையே அக்கா..(அப்படி பார்க்கும் போது ஆண்கள் கிரேட் தானே அக்கா :lol: )..நான் கூட எல்லா பெண்களையும் சொல்லவில்லை.. :D

ம்ம்ம்..நண்பர்களாக பழகும் போது ஆண்கள் முதலில் காதலை சொல்கிறார்கள் இஸ் ஒகே ஆனா சொல்ல வைக்கிற மாதிரி நடக்கிறவர்கள் மேல தானே பிழையே..(கச் பண்ணிட்டியளே பொயின்டை)..இப்ப பாருங்கோ கொலை செய்யிறான் ஒருத்தன் அவனை விட கொலை செய்ய தூண்டியவன் மீது தானே தப்பு அப்படினு நான் சொல்லல்ல சட்டம் சொல்லுது..(அப்படி பார்க்கும் போது யார் மேல குற்றம் அக்கா)... :D

ம்ம்ம்..சில நேரம் பிரிந்து போகிறது சில நேரம் காதலில போய் முடிந்து திருமணதிற்கு பிறகு பிரிகிறது அதை விட நட்பு பிரிந்து போறது கிரேட் ஆக்கும்... :unsure:

உண்மையான நட்பு ஒருவர் மேல் கொண்டிருந்தா அது என்றைக்கு யாராலையும் பிரிக்க ஏலாது அப்படி பிரிந்து போகும் நட்பு என்னை பொறுத்தவரை நட்பில்லை..(டைம் பாஸிங் ஆக்கும் :( )..அது பிரிந்து போவதில் தப்பில்லை என்று நினைக்கிறன் நீங்க என்ன நினைக்கிறீங்க.. :lol:

ம்ம்ம்...அக்கா சொல்லுறபடியா அழாம போறன் சரியோ பிறகு அழபண்ணுறதில்ல சொல்லிட்டன்.. :D:lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் பெண்களுடன் காதல மையமா வைச்சு தான் பழகினம் என்டு சொல்லுறது வண்மையாக கண்டிக்கிறேன்....

இப்படி எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் கருத்துக்களை தவிர்க்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை?

பொழுதுபோக்கு

ஆண்கள் பெண்களுடன் காதல மையமா வைச்சு தான் பழகினம் என்டு சொல்லுறது வண்மையாக கண்டிக்கிறேன்....

இப்படி எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் கருத்துக்களை தவிர்க்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

ஆண் பெண் நட்பை கேட்டால் எல்லோரும் காதலை பற்றி தான் எழுதிறியள். இது எப்படி இருக்கு! புரிந்து கொண்ட இருவருக்குமிடையில் காதலா நட்பா என்பதை சூழ்நிலை தான் தீர்மானிக்குது.

அன்பிற்கு,ஆசைக்கு

பாசதிற்கு,பழகதிற்கு

என்று எல்லாவற்றிற்கும்

ஓர் எல்லை இருக்கிறது.

அப்படி தான் நட்பிற்கும்

ஒர் எல்லை இருக்கிறது.

இதில் ஆண்,பெண் என்று

பிரிக்க தேவையில்லை

அளவோடு இருக்கும் வரை

எதற்கும் பயப்பிட தேவையில்லை. :D

மிகச்சரியான கருத்து...

அன்பிற்கு,ஆசைக்கு

பாசதிற்கு,பழகதிற்கு

என்று எல்லாவற்றிற்கும்

ஓர் எல்லை இருக்கிறது.

அப்படி தான் நட்பிற்கும்

ஒர் எல்லை இருக்கிறது.

இதில் ஆண்,பெண் என்று

பிரிக்க தேவையில்லை

அளவோடு இருக்கும் வரை

எதற்கும் பயப்பிட தேவையில்லை. :unsure:

எப்படிம்மா இப்படியெல்லாம் முடியல்ல என்னால...(பட் கருத்து ரொம்பவே பிடித்திருந்தது :wub: )...

அப்ப நான் வரட்டா!!

ஆண்கள் பெண்களுடன் காதல மையமா வைச்சு தான் பழகினம் என்டு சொல்லுறது வண்மையாக கண்டிக்கிறேன்....

இப்படி எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் கருத்துக்களை தவிர்க்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

ஜம்முவின் கருத்தே என்னுடைய கருத்தும்.

ஆண் பெண் நட்பு இடையில் முறிவதற்கு முக்கிய காரணம் எமது சமூக அமைப்பு என்றே கூறுவேன். அதையும் மீறி எத்தனையோ நட்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், இதன் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது. தாயகத்தில் எனக்கு எந்த ஆண்களோடும் நட்பு இருந்ததில்லை :lol: (இருந்திருந்தால் நான் செத்தேன், வீட்டிலை அவ்வளவு கட்டுப்பாடு. ஆனால் வெளிநாடு வந்தபிறகு, படிப்படியாகக் குறைந்துவிட்டது). :lol: ஆனால், புலம்பெயர் நாட்டில் நான் அதிகம் விரும்பிப் பழகுவது ஆண்களிடம்தான். (பெண்களோடு பேசும்போது, அவர்களின் பேச்சுக்கள், வீட்டு விவகாரங்கள், ஆடை ஆபரணங்கள், வம்புகள் போன்றவை பற்றியே அதிகமாக இருக்கும். ஆனால், ஆண்கள் பலதரப்பட்ட விடயங்களைப் பற்றியும் பேசுவார்கள்.) எல்லை மீறுவதற்கு ஆண், பெண் இருவருமே பொறுப்பாவார்கள். ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ எல்லை மீறுவதை உணரத் தொடங்கியதுமே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். நட்பாக இருக்கும்போது, இதை மிகவும் இலகுவாக உணரமுடியும். உணர முடியாது என்று சொல்பவர்கள் உண்மையாக நட்பைப் பேணவில்லை என்றே அர்த்தம். இப்படி ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, தன்னிலை உணர்ந்து நடந்து கொள்வதே நல்லது.

ஜம்முவின் கருத்தே என்னுடைய கருத்தும்.

ம்ம்ம்..உண்மையாவோ நிலா அக்கா :) ...நட்பை நட்பாக பார்க்க மட்டும் அது நட்பு..(அப்படி பார்க்காது விடில் அது டைம் பாஸிங் அக்கா :wub: )...

அப்ப நான் வரட்டா!!

எல்லை மீறுவதற்கு ஆண், பெண் இருவருமே பொறுப்பாவார்கள். ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ எல்லை மீறுவதை உணரத் தொடங்கியதுமே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.

அருமையான கருத்து நன்றாக நட்பை புரிந்து வைத்திருக்கிறீங்க தமிழச்சி அக்கா...நானும் உங்கள் கருத்துடன் ஒத்து போகின்றேன்.. :wub::)

அப்ப நான் வரட்டா!!

:wub: நட்பு..கற்பு பற்றி யோசிக்காத பெண்களோடு நீடூழி வாழும்...

காசைப் பற்றி யோசிக்காத ஆண்களோட கனகாலம் நீளும்.. :)

ம்ம்ம்..உண்மையாவோ நிலா அக்கா :) ...நட்பை நட்பாக பார்க்க மட்டும் அது நட்பு..(அப்படி பார்க்காது விடில் அது டைம் பாஸிங் அக்கா :wub: )...

அப்ப நான் வரட்டா!!

:wub: யரௌக்கோ கடிக்கிறா போல இருக்குதே :)

:wub: யரௌக்கோ கடிக்கிறா போல இருக்குதே :)

நிசமா நான் யாரையுமே கடிக்கல்ல :wub: ..(அப்படி கடிப்பேனா நிலா அக்கா :) )...நிசத்தை சொன்னேன்..!! :)

ஜம்மு பேபி பஞ் -

கண்ணா நாங்க மாமியையும் கடிப்போம் முடிந்தா அந்த சாமியை கடிபோம்.. :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.