Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் சுண்டல்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நேயர்களே....

உங்கள் அனைவரையும் சுண்டலின் சுண்டல நிகழ்சியின் ஊடாக சந்திபதில் பெரும்மகிழ்ச்சி...

நான் வாசிக்கும் விடயங்களை ஒருங்கினைத்து இந்த பகுதியினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இதை யாழ் களத்தின் ஊடாக உங்கள கணணிகளுக்கு எடுத்த வருகின்றேன்...

படியுங்கள் சுவையுங்கள்...அவ்வபபோது நீங்க அறிந்தவற்றையும் இதணூடாக பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள...புதிய கண்டுபிடிப்பு

பூமியைப் போல வேறு கிரகங்கள் எதுவும் தொலைதூர வான்வெளியில் இருக்கிறதா? என்று விண்வெளி விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான பணியில் ஹப்பிள் டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஈ.எஸ்.ஏ ஆகியவை இணைந்து பிற விண்வெளி கோள்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகின்றன. பூமி சார்ந்துள்ள சூரிய மண்டலத்தை தவிர வேறு பல கிரக மண்டலங்கள் இருப்பதையும், அவற்றில் ஏராளமான கிரகங்களும், நட்சத்திரங்களும் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு ஹப்பிள் டெலஸ்கோப் கண்டுபிடித்த தொலைதூர புதிய கிரகம் தான் எச்.டி.189733 பி. நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு பூமி, செவ்வாய், புதன் என்று பெயர் இருப்பது போல புதிய கிரகங்களுக்கு பெயர் சூட்டுவதற்கு பதிலாக எண்களை பெயர்களாக சூட்டி இருக்கிறார்கள். இந்த புதிய கிரகத்தை ஆராய்ந்த போது இதில் ஆவியான தண்ணீர் படிவம் மற்றும் மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்தது. இந்த வாயு இருப்பதன் மூலம் அங்கு உயிரினம் வாழும் அமைப்பு காணப்படுகிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் மீத்தேன் வாயு இருப்பது சகஜமான ஒன்று தான். ஆனால் தொலைதூரத்தில் உள்ள கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பது இப்போது தான் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் சுழன்று வருகிறது. ஒரு ஒளி ஆண்டு என்பது 94,60,73,04,72,580.8 கிலோமீட்டர் தூரமாகும். அதாவது ஒரு ஒளி ஆண்டு என்பது சுமாராக 91/2 லட்சம் கோடி கிலோ மீட்டர் ஆகும். இதில் 63 ஒளி ஆண்டு என்பது 5 கோடியே 96 லட்சத்து 260 கோடி கிலோமீட்டர் தூரம் ஆகும்.

நீண்ட நெடிய தூரத்தில் உள்ள இந்த புதிய கிரகம் அதிக வெப்பம் நிறைந்தது. இங்கு 900 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உஷ்ணம் நிலவுகிறது. இந்த கிரகத்தின் அமைப்பு ஜுபிடர் கிரகத்தை போன்று இருப்பதால் இதை ஜுபிடரின் நகல் என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

இது வரை தொலைதூரத்தில் உள்ள கிரகங்களின் தட்ப வெப்பம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் மிக அதிக தொலைவில் உள்ள கிரகம் ஒன்றில் மீத்தேன் வாயு இருப்பது கண்டறியப்பட்டிருப்பது, விண்வெளி ஆய்வில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது. இதே போல வேறு தொலைதூர கிரகத்திலும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கிறது.

முட்டாள் யார்?

பெர்னாட்ஷாவை அவமானப்படுத்தும் நோக்கில் ஒருவர் அவரிடம், "உலகிலேயே முதலிடத்தில் உள்ள முட்டாள் யார்? எனக் கேட்டால் நான் உங்கள் பெயரைத்தான் சொல்வேன்?'' என்றார்.

அதற்கு பெர்னாட்ஷாவோ, "அப்படித்தான் நானும் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது எனக்கு இரண்டாம் இடம்தான் கிடைக்குமென்று'' கூறினார்.

மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு தென் ஆப்பிரிக்கா.

செவ்வாயில் 250 நாட்கள் பகலாக இருக்கும்.

1981-ம் ஆண்டில், கென்ய கிராமம் ஒன்றில் ஆறு பேரை கொன்று விட்டதாகக் கூறி ஒரு பெரிய ஆமைக்கு மரண தண்டனை விதித்தார்கள் கிராமவாசிகள். ஆனால் மரண தண்டனையை நிறைவேற்றாமல் அந்த ஆமையை ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டார்கள். ஆறு ஆண் டுகளுக்குப் பினëபே அதை அவிழ்த்து விட்டார்கள்.

புன்னகையின் ரகசியம்

புனëனகை என்பது, நாம் விரும்பியோ அல்லது அனிச்சையாகவோ முகத்தில் தோன் றும் ஒரு பாவம்.

இயல்பான நகைச்சுவை உணர்வு ஏற்படும்போது, தெரிந்தவர், அறிந்தவரைப் பார்க்கும் போது ஏற்படுவது அனிச்சையான புன்னகை.

இவ்வகைப் புன்னகை, நம் வாயின் இருபுற மும் அமைந்துள்ள `ஜைகோமேட்டிக்கஸ்' தசை களாலும், கண்களுக்குக் கீழேயுள்ள `ஆர்பி குலேரியஸ் ஆக்குலி' தசைகளாலும் ஏற்படுத் தப்படுகிறது.

விருப்பப் புன்னகை என்பது நாம் விரும்பும் போது வலிந்து புன்னகைப்பது. இந்த விருப்பப் புன்னகை, வாய்பë பகுதìயில் அமைந்துள்ள தசைகளால் மட்டுமே ஏற்படுத்தப்படுகிறது. அதனால் இவ்வேளையில், கண்கள் புன்ன கையை வெளிப்படுத்துவது இல்லை.

அனிச்சையான புன்னகையை `டச்சென்னி புன்னகை' என்றும் கூறுகிறார்கள்.

காரணம், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மருத்துவரான `கில்லேம் டச்சென்னி', வாய்ப்பகுதி தசைகளால் மட்டுமின்றி, கண்பகுதி தசைகளாலும் வெளிப்படுத்தப்படும் அனிச்சைப் புன்னகை, உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்று முதல் முறையாகக் கண்டறிந்து கூறினார்.

கொலை சதியிலிருந்து 600 முறை தப்பியவர்!

கியூபா நாட்டின் அதிபராக 32 ஆண்டு காலம் இருந்தவர் பிடல் காஸ்ட்ரோ. கியூபாவின் அதிபராக இருந்த இவருக்கு, அமெரிக்க அதிபர்களால் தொடர்ந்து தலைவலி தான். அவரை துõக்கியெறிய வேண்டும் என்று பல முறை முயன்றும் முடியவில்லை; அவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சி.ஐ.ஏ.,600 முறை முயற்சித்ததாக தகவல் உண்டு. இவர் பாசமாக பிடிக்கும், சுருட்டில் இருந்து, பலவற்றிலும் விஷம் கலக்கப்பட்டது. அமெரிக்காவில் ஒன்பது அதிபர்கள் வந்து சென்று விட்டாலும், காஸ்ட்ரோ மட்டும் ஆணி அடித்தாற் போல கியூபா மக்களின் ஏகோபித்த அதிபராக இருந்தார். அமெரிக்கா அசைக்க முடியாத இவரை, 90 வயதை கடந்த முதுமை தான், பதவியில் இருந்து ஓய்வு பெற வைத்துள்ளது. இப்போது, அவர் தம்பி ராவுல், புது அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

சரி இன்றையதினம் இவற்றை உங்களுடன் பகிர்நது கொண்டு செய்திகளை எடுப்பதற்க்கு உதவிய அனைத்து இனைதளங்களுக்கும் மனம்மார்ந்த நன்றிகளை nதிரிவித்துக்கொண்டு...

நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடுபெரிது என்று வாழ் என்ற Nதிசியத்தலைவனின் என்னங்களை நெஞ்ஞங்களில் நிறுத்தி மீண்டும் இதே பகுதியினூடாக சந்திக்கும் ஆவலில்.. விடைபெற்றுக்கொள்வது உங்களின் பிரியமுடன்

சுண்டல்

எப்படி சுண்டல் இப்படியெல்லாம் . தெரியாத பல விடயங்கள் அறிந்துகொள்ள முடிந்தது . நன்றி சுண்டல் இணைப்புக்கு. தொடர்ந்து நல்ல தகவல்களை தாருங்கள். :rolleyes::D

தொகுப்புக்கு நன்றி சுண்டல்.

இண்டைகு தான் ஒரு உருப்படியான வேலை செய்திருக்கிறியள் போல

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலின் சுண்டல் தந்தது தரமான செய்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் செவ்வந்தி நிச்சயமாக தொடரும்..

ஹிஹிஹி வெண்ணிலா தாங்ஸ்....

கப்பி அக்கா நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கு...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவிற்கு நன்றி சுண்டல் . ஒரு வேண்டுகோள் பதியும்போது பச்சை , நாவல் போன்ற நிறங்களை தவிர்க்கலாமே வாசிப்பதற்கு உறுத்தலாக உள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சிறி அடுத்த பதிவின் போது கவணத்தில் எடுக்கின்றேன்..

வணக்கம் சுண்டல் மாமா..(உங்க நிகழ்ச்சி என்றா நேக்கு நன்ன விருப்பம் பாருங்கோ ஒரு நாள் கூட மிஸ் பண்ணுறதில்ல என்றா பாருங்கோ :unsure: )...அட இன்னைக்கா வெஸ்ட் டைம்மா செய்யிறியள் அது தெரியாம உளறிட்டனாக்கும்..(சரி அதை விடுவோம்).. :o

ம்ம்ம்..எனக்காக ஒரு பாடலை ஒலிபரப்புவீங்களோ சுண்டல் மாமா..(அட இது நேயர் நேரம் இல்ல என்ன வெறி சாறி சுண்டல் மாமா :) )..ம்ம் சுண்டலின் சுண்டல் நேரம் பல சுண்டல்களை வாறி வழங்கும் விதம் பேஷ்..பேஷ்..(அதை பற்றி சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன் ஆனா வார்த்தைகள் வராம தவிர்க்கிறது என்றா பாருங்கோவேன் :lol: )..

பெர்னாட்ஷாவை அவமானப்படுத்தும் நோக்கில் ஒருவர் அவரிடம், "உலகிலேயே முதலிடத்தில் உள்ள முட்டாள் யார்? எனக் கேட்டால் நான் உங்கள் பெயரைத்தான் சொல்வேன்?'' என்றார்.

அதற்கு பெர்னாட்ஷாவோ, "அப்படித்தான் நானும் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது எனக்கு இரண்டாம் இடம்தான் கிடைக்குமென்று'' கூறினார்.

ம்ம்..நான் கூட உவ்வளவு நாளும் நான் தான் முட்டாள் என்று நினைத்து கொண்டிருந்தனான் பரவால்ல எனக்கு முன்னால இரண்டு பேர் இருக்கீனம் :o ..(நிசமா முடியல்ல)...அது சரி சுண்டல் மாமா எத்தனையாவது இடம் பாருங்கோ.. :lol:

ம்ம்ம்..பலவித சுண்டல்களை வாறி இணைத்த அன்பு அறிவிப்பாளர் சுண்டல் மாமாவிற்கு நன்றி கூறி அவரின் சேவைகள் தொடரட்டும் என வாழ்த்தி மீண்டு மற்றுமொரு இனிய நன்நாளிள் இனிய பொழுதில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் என்று கூறி விடைபெறும் அன்பு நேயர் :o ..(தெய்வேந்திரன் அம்மா :rolleyes: )...சா..சா தங் சிலிப் ஆகிட்டு ஜம்மு பேபி..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா மனதில நான் பெரியவன் என்று நினைக்கிறது பிழை அல்ல ஆனா எல்லாரையும் விட நான் தான் பெரிசு என்று நினைக்கிறது தப்பு கண்ணா" :o

சந்திபோம் சிந்திப்போம்!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஜமுனா உங்கள் கருத்துப்பகிர்வுக்கு...........

நன்றிகள் ஜமுனா உங்கள் கருத்துப்பகிர்வுக்கு...........

இத்தோடா நன்றி எல்லாம் சொல்லுறார்...(நாசமா போச்சு :rolleyes: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நேயர்களே!

மீண்டும் ஒரு ரம்யமான இரவுபொழுதில் சுண்டலின் சுண்டல் ஊடாக சந்திப்பதில் மகிழ்சி...

உ.பி.இயில்இ 105 வயது நிரம்பிய பெண்ணுக்குஇ பல் முளைக்கிறது; தலை முடி மீண்டும் கறுப்பாகிறது.நம்ப முடியவில்லையா? ஆனால்இ உண்மை!

உ.பி.இயில்இ லகீம்புர் கேரி மாவட்டம் உள்ளது. இங்குஇ ஹிதாயத் நகரில்இ பிஸ்மில்லா என்றஇ 105 வயது பெண் வாழ்கிறார். இவரின் கணவர் கலீல்இ இறந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர் தவிரஇ இவருடைய மூன்று மகன்கள்இ ஒரு பெண்இ ஒரு மருமகளும் இறந்துவிட்டனர். நான்கு தலைமுறைகள் கண்ட இவருடைய குடும்பத்தில்இ தற்போது 80 பேர் உள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்இ இவருக்குஇ அனைத்து பற்களும் விழுந்து விட்டன. தலைமுடியும் பஞ்சு போல் வெண்மையாகிவிட்டது. ஆனால்இ நினைவுத்திறன்இ கண் பார்வைஇ செவித்திறன்இ அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. பனிஇ கொசுக்கடி இவரை ஒன்றும் செய்வதில்லை. ஏழ்மையில் வாடினாலும்இ ஆரோக்கியமாக உள்ள இவருக்குஇ சமீப காலமாகஇ பற்கள் மீண்டும் முளைக்கின்றன. தலைமுடியும் கறுமையாக மாறி வருகிறது. இதுகுறித்துஇ உ.பி.இயில் பிரபல டாக்டர் ஜி.பி. அவஸ்தி கூறுகையில்இ "இந்த வயதில் முடி கறுப்பாவது மிகவும் ஆச்சரியம். நல்ல ரத்த ஓட்டம்இ சாப்பாட்டில் நேரம் தவறாமைஇ மனத்துணிவு தான் இவர் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருப்பதற்கு காரணம்' என்றார்.

ஒரு நாள் கோவையில் இருந்து சென்னைக்கு வர ரயில் நிலையத்துக்கு வந் தார் ஜி.டி.நாயுடு. அவர் முதல் வகுப்பு டிக்கெட்இ "ரிசர்வ்' செய்திருந்தார். அந்த ரயிலில் ஈ.வெ.ரா.இ மூன்றாம் வகுப்புப் பெட்டியில் இருந்தார். அவரும்இ ஜி.டி.நாயுடுவும் நெருங்கிய நண்பர்கள். அவரை ஜி.டி.நாயுடு பார்த்து விட்டார். "இந்த இட நெருக்கடியில் மூச்சு முட்ட ஏன் பயணம் செய்கிறீர்கள்? முதல் வகுப்பில் வசதியாகப் போகலாமே! நானே டிக்கெட் எடுத்துத் தருகிறேன்!' என்று சொன்னார் ஜி.டி.நாயுடு.

டிக்கெட்டு எடுக்க ஓர் ஆளிடம் பணம் கொடுத்து அனுப்பி விட்டுஇ முதல் வகுப்புப் பெட்டியில் ஏறிக் கொள்ளச் சென்றார் ஜி.டி.நாயுடு.

அவர் தலை மறைந்தது தான் தாமதம்; ஈ.வெ.ரா.இ ஓர் ஆளை அனுப்பிஇ டிக்கெட்டு எடுக்கப் போனவரை அழைத்து வரச் சொன்னார். ஜி.டி.நாயுடு கொடுத்து அனுப்பிய பணத்தை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டுஇ மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்தார்!

இன்னும் சில வருடங்கள் கழித்துஇ ஹவிபத்தில் கார் நசுங்கியது'- என்பதுபோன்ற செய்திகள் வருவது அரிதாகும் போல தெரிகிறது. விபத்து ஏற்பட்டாலும் உருக்குலையாத காரை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதே இதற்கு காரணம். இதன்படி காரின்மீது வாகனமோஇ மரமோ மோதும் நிலை வந்தால்இ காரின் உள்ளே உள்ள உறுதியான உருக்கு தகடுகள்இ காரின் கதவுகளுக்கு ஆதரவாக வந்து விடும். இதனால் எவ்வளவு வேகமாக மோதினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.

எதிரிலோஇ பக்கவாட்டிலோ மோத வரும் பொருளை கண்டறியும் வண்ணம்இ வீடியோ கேமிராக்கள் காரில் பொருத்தப்பட்டிருக்கும். 0.2 வினாடிகளில் மோதவரும் பொருளை உணர்ந்து செயல்படும் வகையில்இ இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காரின்மீது மற்ற வாகனங்கள் மோதும்போது கார் வளைந்து கொடுத்துஇ பாதிப்பிலிருந்து தப்பும் வகையிலும்இ கார்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன்படி உருவாக்கப்படும் கார்கள் விபத்துகளின் போது வளைந்து சுருங்கி பாதிப்பிலிருந்து தப்பும்.

இந்த கார்கள் விற்பனைக்கு வந்தால் விபத்தால் பாதிப்பு என்ற பேச்சே இருக்காது அல்லவா?

ab-க்கு போரடிச்சா cd- போட்டு பார்க்கும். ef-க்கு உடம்பு சரியில்லைனா gh-க்கு போகும். ijkl -க்கு எதிரி யாரு? mn (எமன்தான்). op -க்கள் சினிமாவுக்குப் போனா ண - q வில்தான் நிற்கணும். rs -க்கு தலைவலிச்சா t-குடிக்கும். uvwxy - க்கு பறக்கணும்னு ஆசைப்பட்டா z (ஜெட்டில்) போகும்.

(இப்போது உங்களுக்கு தலை சுற்றுகிறதா...?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இன்றைய நிகழ்சியின் தொகுப்பு...

சுண்டலின் சுண்டல் நிகழ்சிக்காக செய்திகளை தொகுக்க உதவிய அனைத்து இனைதளங்களுக்கும் நன்றிகளை கூறி மீண்டும் சந்திக்கும் ஆவலுடன் நல்லவர்கள் எப்போதும் உயர்ந்த நோக்கமுடைய கருத்துக்களையே பிறருக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் உயர்ந்த நோக்கமுள்ள கருத்துக்களை உபதேசம் செய்பவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான் என்று எண்ணிவிடக் கூடாது..

என்ற அறிஞனின் கருத்தை நெஞ்ஞங்களில் நிறுத்தி அனைவருக்கும் வருகின்றவாரம் நல்லவாலமாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுபவர் உங்களின் பிரியமுடன் சுண்டல்...

நல்ல பல தகவல்கள்...

தொடருங்கள் சுந்து...

  • கருத்துக்கள உறவுகள்

சுன்டல்! மிகவும் சுவையாக அவித்துப் பரிமாறுகிறீர்கள். தொடர்ந்து அவியுங்கள்!!! :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை மாதிரி அவியிறதுக்கு கொஞ்சப்பேர் இருக்கேக்கை சுண்டல் நீங்கள் எப்பவும் அவிச்சுக்கொண்டே இருக்கலாம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் துயா

சுவி அவிச்சிட்டா போச்சு...

கும்ஸ்; றொம்ப அவிஞ்விடாதேங்கோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.