Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பரியோவான் கல்லூரி (சென்.ஜோன்ஸ் கொலீஜ்) ...!!!

Featured Replies

logote1.jpg

எல்லாருக்கும் வணக்கம்,

இன்று நான் யூரியூப்பில் சுத்தி அடித்தபோது எனது பாடசாலை பற்றிய ஓர் காணொளியைக் கண்டேன். எத்தனையோ வருடங்களின் பின் எனது பாடசாலையை காணொளியில் பார்த்தபோது மிகவும் சந்தோசமாக இருந்தது. இங்கும் பல ஆக்கள், வாசகர்கள் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர்களாக இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்காகவும் மற்றும் எமது கல்லூரி பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களிற்காகவும் நான் இணையத்தில் செ.ஜோன்ஸ் கல்லூரி பற்றி பெற்ற தகவல்களை இங்கு இணைக்கின்றேன்.

கீழுள்ள காணொளியில் பார்த்தபோது பாடசாலையில் பல மாற்றங்கள் தெரிகின்றது. பல புதிய கட்டடங்கள் வந்துள்ளன. ஏராளம் வித்தியாசங்கள் தெரிகின்றன. பழைய பாடசாலை அனுபவங்கள் எல்லாம் இதை பார்த்தபோது வந்துபோயின.

Edited by முரளி

  • Replies 52
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

logote1.jpg

பி/கு: செ.ஜோன்ஸில் படித்தவர்களுக்கு கொழுப்பு, சுயநலம் கொஞ்சம் அதிகம். இதுகள் பற்றி நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது. :o:lol:

உண்மை தான் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது... என் கூட ஆண்டு ஜந்தில் படித்த (வேறு ஒரு கல்லூரியில்) ஒரு மாணவன் கல்லூரி நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் எங்கள் பாடசாலையில் ஆண்டு ஆறுக்கு அனுமதி மறுக்கப்பட்ட வுடன்.....................சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஒரு தொகை பணத்தைக் கொடுத்து அவரது பெற்றோர் சேர்த்து விட்டார்கள்....

சில மாதங்களின் முன்னர் அவரை வேறு ஒரு நாட்டில் இன்னும் சில நண்பர்களுடன் சந்தித்த போது, தனது பாடசாலை திறமைகளை புகழ் பாடிக்கொண்டிருந்தார் எப்படி சேர்ந்தார் என்பதை மறந்து.......

Edited by chumma....

இங்கு படித்த நாட்களை மறக்கமுடியாது...இடம்பெயர்வு காரணமாக 2 ஆண்டுகள் மட்டுமே படிக்கமுடிந்தது..இன்று வரை என் மனதில் நிறைந்த பாடசாலை. ரம்யமான சூழல், மாகோகனி காற்று, கண்டிப்பான ஆனால் நல்வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்களான ரொபேட் (தமிழ், வரலாறு), அந்தனிப்பிள்ளை (தலமை ஆசிரியர்), ஜோசப் (கணிதம்), சந்திரமொஉலி, ரொனி கணேசன் மற்றும் இன்னும் பலர்..

சுப்பர்சோனிக்கு பயந்து அடிக்கடி வெளியே ஒடுவதும் (பக்கத்தில் பழைய பூங்கா), கிரிக்கட் போட்டிகளுக்காக கோஷம் போடுவதும், சுண்டுகுளியை வம்புக்கு இழுப்பதும் என்று ஒரே அஜால் குஜால் தான்.

  • தொடங்கியவர்

உண்மை தான் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது... என் கூட ஆண்டு ஜந்தில் படித்த (வேறு ஒரு கல்லூரியில்) ஒரு மாணவன் கல்லூரி நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தால் எங்கள் பாடசாலையில் ஆண்டு ஆறுக்கு அனுமதி மறுக்கப்பட்ட வுடன்.....................சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஒரு தொகை பணத்தைக் கொடுத்து அவரது பெற்றோர் சேர்த்து விட்டார்கள்....

சில மாதங்களின் முன்னர் அவரை வேறு ஒரு நாட்டில் இன்னும் சில நண்பர்களுடன் சந்தித்த போது, தனது பாடசாலை திறமைகளை புகழ் பாடிக்கொண்டிருந்தார் எப்படி சேர்ந்தார் என்பதை மறந்து.......

நான் சென்.ஜோன்சிற்கு போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து சென்றேன். டொனேசன் கட்டி சேர்வது மிகவும் கஸ்டம், அப்பிடியெண்டால் நிறைய தொகை கொடுத்து இருப்பார் என்று நினைக்கின்றேன், இதைவிட செல்வாக்கும் அவருக்கு இருந்து இருக்கலாம்.. (அவரது உறவினர்கள் பழைய மாணவர்களாக இருந்து இருக்கலாம்). வழமையாக ஏ.எல் இல் டொனேசன் கட்டி சேர்வது தவிர 10, 10ம் வகுப்புகளிற்கு கீழ் டொனேசன் மூலம் சேர்வது கூட மிகவும் கஸ்டம். நான் படித்தபோது நிலமை அப்படி. இப்போது எப்படி என்று தெரியாது. நான் கற்ற ஏ.எல் - உயிரியல் வகுப்பில் கற்ற 28 மாணவர்களில் 15 பேர் - வகுப்பு நண்பர்கள் தற்போது மருத்துவர்களாக இருக்கின்றார்கள். ஒருகாலத்தில் கல்விக்கு மிகவும் சிறந்த பாடசாலை என்று பெயர் பெற்றது. பிறகு பிரச்சனைகள் காரணமாக விழுந்துவிட்டது.

ஒரு சுவாரசியமான அனுபவம் இப்போது நினைவுக்கு வருகின்றது. நான் பத்தாம் வகுப்பு படித்தபோது பாடசாலை கடைசி நாள் அன்று அதாவது ஓ.எல் பரீட்சைக்கு முதல் விடும் ஸ்டடிலீவ் அன்று.. பெடியங்கள் ஆளாளுக்கு பேனை மை (இங்க்) மூலம் உடுப்புகளில் தெளித்து சேட்டைவிட்டார்கள். நாலு வகுப்புகளில் இருந்த சுமார் 100 மாணவர்களின் வெள்ளைச் சேர்ட்டு எல்லாம் ஒரே நீலம், சிவப்பு நிற மைகளினால் வண்ண மயமாக இருந்தது. பலர் மீது பலாத்காரமாக மை தெளிக்கப்பட்டது. நான் வகுப்பைவிட்டு இடைவேளை - இண்டவலின் போது வெளியில் போகாமல் உள்ளுக்க இருந்தபடியால் மை தெளி வாங்காமல் தப்பிவிட்டேன். பிறகு பகிடி என்ன என்றால் சேர்டில் மை ஊற்று அடையாளம் பெற்ற எல்லாருக்கும் நல்ல பூசை (பிரம்பினால் அந்தமாதிரி சூப்பரான அடி.. :lol: ) விழுந்தது. ஹாஹா.. இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கிது. எல்லாரும் லைனில ஒபிசுக்கு போய் அடிவாங்கிக்கொண்டு அமைதியா வந்திச்சீனம். :o எங்கட வகுப்பில நானும் இன்னும் ரெண்டு மூண்டுபேரும் தான் அடி வாங்க இல்ல. ஆசிரியர் ஒருவர் பிரின்சிப்பலோட வந்து ஒவ்வொருத்தரா ஆக்களிண்ட உடுப்புக்கள செக் பண்னி - அதில பேனை மை அடையாளம் இருந்தால் அடி வாங்குவதற்காக பிரபாகரன் என்று ஒரு ஆசிரியரிடம் அனுப்பி வைத்தார்கள். பிரபாகரன் மாஸ்டர் அப்போது டிசுபிலினுக்கு பொறுப்பாக இருந்தா. மிகவும் உயரமானவர், உடம்பும் இருக்கிது. அவரிட்ட பிரம்பால அடி வாங்கினால் சொல்லி வேலை இல்லை. ஹாஹா.... :D இவேள் கடைசி நாளன்று சும்மா முஸ்பாத்திக்கு மை தெளிச்சு விளையாடி கடைசியில பரிதாபமா அடிவாங்கினத இப்ப நினைக்கவும் பாவமா இருக்கிது... :wub: நான் படித்த காலத்தில் மிகவும் அமைதி. நல்ல பிள்ளை. குழப்படி ஒண்டும் செய்வதில்லை. :wub:

இங்கு படித்த நாட்களை மறக்கமுடியாது...இடம்பெயர்வு காரணமாக 2 ஆண்டுகள் மட்டுமே படிக்கமுடிந்தது..இன்று வரை என் மனதில் நிறைந்த பாடசாலை. ரம்யமான சூழல், மாகோகனி காற்று, கண்டிப்பான ஆனால் நல்வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்களான ரொபேட் (தமிழ், வரலாறு), அந்தனிப்பிள்ளை (தலமை ஆசிரியர்), ஜோசப் (கணிதம்), சந்திரமொஉலி, ரொனி கணேசன் மற்றும் இன்னும் பலர்..

சுப்பர்சோனிக்கு பயந்து அடிக்கடி வெளியே ஒடுவதும் (பக்கத்தில் பழைய பூங்கா), கிரிக்கட் போட்டிகளுக்காக கோஷம் போடுவதும், சுண்டுகுளியை வம்புக்கு இழுப்பதும் என்று ஒரே அஜால் குஜால் தான்.

ஓம் நான் மட்ஸ் படிச்சது அந்தனிப்பிள்ளை மாஸ்டரிடம். மிகவும் நல்லவர்...

சந்திரமொளலி கொஞ்சநாள் எங்களுக்கு சமயம் படிப்பிச்சவர்...

பிறகு தமிழ் மயில்வாகனம் மாஸ்டர், சமூகக்கல்வி கணபதிப்பிள்ளை மாஸ்டர்..

கொமர்ஸ் டொங்கர் - உண்மையான பெயர் மறந்துபோச்சிது. பட்டபெயர்தான் நினைவில இருக்கிது.

நான் படிக்கேக்க தனபாலன் மாஸ்டர் பிரினிசியா இருந்தவர். இப்ப செத்துபோனார்..

  • தொடங்கியவர்

நான் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வருடத்தை தவறுதலாக 1893 என்று போட்டுவிட்டேன். உண்மையில் 1823ம் ஆண்டு யாழ் பரியோவான் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது எமது கல்லூரிக்கு வயது 185!!! :lol:

St. John's College is a private secondary school in Jaffna, Sri Lanka. It was founded in 1823. It is among the oldest and most distinguished of the modern secondary schools in South Asia.

-Wikipedia

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா இருக்கிறீங்களா..! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்குள்ளும் சோமரைப் (ஒரு உதாரணத்துக்கு) பிடிச்சு.. உள்ள வந்தவை.. இருக்கினம்..! தமிழற்ற வரலாற்றில செல்வாக்கை திறமைக்கு முன்னால் தூக்கி எறிஞ்சா.. எலும்பு கண்ட நாய் மாதிரி பின்னால ஓடுவதுதான் இயல்பு..! அதோட காசும் சேர்த்திச்சு என்றால்.. தாய் மண்ணைக் கூட காட்டிக் கொடுக்க தயங்கான்..!

பரியோவான் கல்லூரியை விட சுண்டுக்குளி அழகு. இரண்டு வகையில அழகு. ஒன்று அமைவிடம் மற்றது அங்க படிக்கிறவையிட யூனிபோர்ம்..! சுண்டுக்குளியைப் பற்றி பெருமையா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. பிக் மச்சுக்கு வந்து கத்திக் கூச்சல் போடுறதுக்கு நன்றி தெரிவிக்க வேணாமோ.. பரியோவான் பழசுகள். :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

துரோகிகள் எல்லா இடங்களிலும்தான் இருக்கின்றார்கள். அது யாழ்.மத்திய கல்லூரியாக இருக்கட்டும், யாழ். இந்துவாக இருக்கட்டும். அது ஒவ்வொரு பாடசாலையினதும் தனித்தன்மை. ஆனால்... யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி எத்தனை மாவீரர்களை உருவாக்கியது, எத்தனை மாணவச்செல்வங்களை விடுதலைப் போராட்டத்தில் ஆகுதி ஆக்கிக்கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை.

என்ன இருந்தாலும் இவ்வளவு காலமும் நடைபெற்ற பிக் மட்சுகளை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்தால் சென்ரல். கொலீஜ் நம்மட்ட வாங்கின அடிய இந்த ஜென்மத்துக்கு மறக்க ஏலாது.. ஹாஹா... :D:wub:

வேம்படி, வேம்படி போங்கடி போங்கடி... :wub::lol:

ஆனாலும், நான் படித்த காலத்தில் எனக்கு சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யூனிப்போர்மை விட வேம்படி மகளிர் கல்லூரி யூனிபோர்ம் தான் பிடிக்கும். முக்கியமாக வேம்படியின் கழுத்துப்பட்டி ஒரு வித்தியாசமான மஞ்சள் நிறத்தில் இன்னொரு கலருடன் (தற்போது நினைவில்லை), ஸ்ரைப் நல்லாக இருக்கும்.

நான் படித்த காலத்தில் எனது மனதை மிகவும் வேதனைப்படுத்திய இரு சம்பவங்கள், எமது பாடசாலை மாணவர்களான அகிலன் அண்ணா (முன்னால் முரசொலி பத்திரிகை நிருவாகியின் மகன்), மற்றது தேவகுமார் அண்ணா (அறிவாளி) ஆகியோர் ஈப்பி கூலிக்குழுக்களினால் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த சம்பவங்கள் உளவியல் ரீதியாகவும் என்னை மிகவும் பாதித்தது. அவர்கள் இருவரதும் செத்தவீடுகளுக்கு போய் வந்தது இப்பவும் மனத்திரையில் படமாக ஓடுகின்றது. மனதை உருக்கும் துயர சம்பவங்கள் இவை.

இதிலும் கொடுமை என்ன என்றால், அகிலன் அண்ணாவின் சாவு பற்றிய தகவல்களை ஒரு ஆசிரியருக்கு பாடசாலையின் வாசலில் வைத்து கூறிக்கொண்டு இருந்த (அகிலன் அண்ணா காலை 6.00 மணியளவில் பிரவுண் ரோட், தட்டார்தெரு சந்தியில் வைத்து என்று நினைக்கின்றேன், கதறி தன்னை சுடவேண்டாம் என்று கெஞ்சியும் கேளாது ஈப்பி கூலிகளால் சுடப்பட்டார். அன்று நாங்கள் பாடசாலைக்கும் போனபோது இதுபற்றி அறிந்தோம்) தேவகுமார் அண்ணா அவர்களும் அதேபாணியில் கூலிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைவிட ஈப்பி கூலிகளினால் நிகழ்த்தப்பட்ட எத்தனையோ கொலைகள், அட்டகாசங்கள்.. இதனாலேயே யாழ் மாணவர்களின் படிப்பு நாசமாப் போனது. கோபால் அண்ணா என்று யாழ்.மத்திய கல்லூரி மாணவன் இவரும் ஈப்பியினால் கொல்லப்பட்டார். உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஏ.எல் கணிதப் பிரிவில் என்னுடன் படித்தவன்; அறிவாளி. வகுப்பிற்கு கொப்பி கொண்டு வர மாட்டான்;. இரண்டொரு பேப்பர் கொண்டுவருவான்;. கணக்குச் செய்வதற்கு. (எல்லாம் சரியாகவே இருக்கும்).

ஆசிரியர் விளங்கப்படுத்தும் எல்லாவற்றையும் தலையிலேயே எழுதிக் கொள்வான்;. மிகவும் கெட்டிக் காரன்.

அகிலன் அருமையான வேகப்பந்து வீச்சாளன்.

துரோகக் கும்பல் எத்தனை திறமையானவர்களை எம்மிடமிருந்து பறித்து விட்டது.

Who shot your principal Mr C.E.Anandarajan ????????????????

Why ??????????????

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இவ்வளவு காலமும் நடைபெற்ற பிக் மட்சுகளை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்தால் சென்ரல். கொலீஜ் நம்மட்ட வாங்கின அடிய இந்த ஜென்மத்துக்கு மறக்க ஏலாது.. ஹாஹா...

வேம்படி, வேம்படி போங்கடி போங்கடி...

இப்படிச் சொல்லப்படாது. சென்ரல் அடிச்ச அடிகளும் நமக்குத் தெரியும்..! சென்ரல் போட்ட மசிவ் சிக்ஸ் இன்னும் உடைக்கப்படல்ல என்று நினைக்கிறன். மணிக்கூட்டுக் கோபுர உச்சியை தாக்கிய சிக்ஸ்..!

அண்மையில் 100வது போட்டியை (2006 இல்) விளையாடினதா பத்திரிகையில் படித்தேன்..!

சென்ரல் அதுவரை 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. சென் ஜோன்ஸ் அதுவரை 33 போட்டிகளில் வெற்றி. மிகுதி 45 வெற்றி தோல்வி இன்றி முடிந்தவை. ஆக சென்றல் சும்மா இருக்கல்ல என்பதை ஏற்றுக் கொண்டாகனும்..! :lol:

சென்ரல் யாழ்ப்பாண நகரின் மிகப் பழைய பாடசாலையாகும். அது ஆங்கிலேயருக்குச் சொந்தமான பாடசாலை..!

சென்ரல் பற்றிய குறிப்புகள்: http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College

Edited by nedukkalapoovan

ஒருக்கா UNDER 17 மட்சில் சென்ரல் சிக்ச் அடிக்க கொஞ்ச நேரதில் ஆர்மியும் ஷெல் அடித்தது...!

  • தொடங்கியவர்

ஓம் நெடுக்காலபோவான், உண்மைதான். சென்ரல் கொலீஜும் நீண்ட வரலாற்றை கொண்ட யாழில் உள்ள பிரபல பாடசாலை. ஆனால் மிகவும் சிறந்து விளங்கிய பாடசாலை யாழ் கோட்டை அருகில் இருந்ததன் காரணமாக சீரழிந்து போனது கொடுமையிலும் கொடுமை. மத்திய கல்லூரியில் குண்டு அடிபடாத ஒரு சுவர் இல்லை. எத்தனை கட்டடங்கள் குண்டடி மூலம் சேதப்படுத்தப்பட்டது. இது மிகவும் துரதிஸ்டம். ஏராளம் மாணவர்களும் கொல்லப்பட்டார்கள் செல்லடி, சினைப்பர் தாக்குதல்கள் மூலம் என்று நினைக்கின்றேன். அதிலும் 4ஏ எடுத்த மாணவன் ஒருத்தன் பிறகு விமானக்குண்டு வீச்சில் பலியானது இதைவிடக்கொடுமை. இந்த வடுக்கள் எல்லாம் மாறுமா? பழைய நிலமை வருமா என்பது எல்லாம் சந்தேகமே. எனக்கு யாழ்.மத்திய கல்லூரி ஊடாக பயணம் செய்யும்போது அங்குள்ள மைதானத்தில் விளையாடும்போது கல்லூரியை பார்க்கும்போது, அந்த ஸ்டேடியத்தில் உட்கார்ந்து இருக்கும் போதெல்லாம் இனம்புரியாத ஒரு வெறுமை, சூனீயம், சோக உணர்வு ஏற்படும்.

Who shot your principal Mr C.E.Anandarajan ????????????????

Why ??????????????

நான் அப்ப சின்னப் பெடியன் தேவகி அக்கா. எனக்கு இதுபற்றி பெரிதாக தெரியாது. ஆனால் பிறகு வளர்ந்து ஆக்களுடன் கதைத்தபோது கீழ்க்கண்ட ரெண்டு விசயங்களே சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணம் என அறிந்தேன். உண்மை பொய் தெரியாது.

1. சென்.ஜோன்ஸ் மாணவர்களை கூட்டிக்கொண்டுபோய் யாழ் கோட்டையினுள் சிறீ லங்கா இராணுவத்துடன் உதைபந்தாட்ட மச்சில் - சொக்கர் - பங்குபெற வைத்ததற்கு காரணமாக இருந்தமை.

2. கல்லூரி மைதானத்தின் ஒரு எல்லையாக இருந்த பழைய பூங்கா (ஓல் பார்க்) மதில் சுவரை உயர்த்தி கட்டியமை. (முன்பு அது சுமார் மூன்று நாங்கு அடி உயரமாக இருந்ததாகவும், பின்னர் ஆறு அடிக்கு உயர்த்தப்பட்டதாகவும்)... இது பழைய பூங்காவில் பயிற்சி பெறும் போராளிகளின் பார்வை மாணவர் பக்கம் வராமல் இருப்பதற்காகவும் அல்லது மாணவர் பார்வை பயிற்சி பெறும் போராளிகள் பக்கம் போகாமல் இருப்பதற்காகவும் உள்நோக்கில் அதிபர் ஆனந்த ராஜா அவர்களால் செய்யப்பட்டதாம். இப்படி யாரோ சொன்னார்கள். எனக்கு தெரியாது. முதலில் அந்த நேரம் போராளிகள் பழைய பூங்காவில் பயிற்சி எடுக்கின்றவர்களா என்பதே எனக்கு தெரியாது. :D

அதுசரி, யாழ் மத்திய கல்லூரி அதிபர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் தானே? அது என்ன காரணம்? இதுகள் எமது அறிவுக்கு அப்பாற்பட்டது. மேலதிகமாக எதுவும் தெரியாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபரும் கொல்லப்பட்டார். அது இராணுவப் புலானாய்வுக்காரர்கின் வேலை என அறிந்த செய்தி. இவர்களும் இப்படியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தராஜாவைக் கொன்றது புலிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட போதும் உண்மையில் அப்போதைய ரெலோ அமைப்பினரே சுட்டுக் கொன்றனர் என்று பிந்நாளில் ஈபிடிபி தினமுரசு அற்புதன் எழுதி இருந்தார்.

பின்னர் தினமுரசில் புலிகள் சார்பாக சில உண்மைகளை எழுதி வந்த அற்புதனும் ஈபிடிபியால் கொல்லப்பட்டார்..!

அதுசரி, யாழ் மத்திய கல்லூரி அதிபர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார் தானே? அது என்ன காரணம்? இதுகள் எமது அறிவுக்கு அப்பாற்பட்டது. மேலதிகமாக எதுவும் தெரியாது.

அவர் அதிபராக மட்டுமன்றி ஈபிடிபியின் ஆலோசகராகவும் விளங்கியவர் என்று அப்போது செய்திகளில் படித்த ஞாபகம்..! அவரையும் ஈபிடிபியேதான் கொன்றதா அல்லது வேறு யாரேனும் கொன்றார்களா என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது..!

Edited by nedukkalapoovan

நானும் 1 வருடம் கல்வி கற்றிருகின்ரேன் பரியோவான் கல்லூரியில் சென் பொஸ்கோவில் ஆரம்பகல்வி முடித்து பரியோவான் கல்லூரியில் இணைந்து கொண்டேன் 6ம் வகுப்பில்.வகுப்புக்கு கடமைக்கு வரும் மாணவர் தலைவர்களுடன் சேட்டை விட்டு அடிக்கடி அன்ரனிபிள்ளை ஆசிரியரிடம் அடிவாங்குவேன்.சங்கீத ஆசிரியர் [பெயர் ஞாபகம் இல்லை]அவருக்கும் எனக்கும் என்றும் ஆகாது நிச்சயம் ஒவ்வொரு வகுப்பிலும் கட்டாயம் அடிவாங்குவேன்

பேச்சுவார்த்தை குழுவினர் பாடசாலை மைதானத்தில் உலங்குவானூர்தியில் இறங்கியது நான் படித்த காலத்தில் ஒரு வருடம் படித்தாலும் நான் மிகவும் நேசிக்கும் பாடசாலை பரியோவான் கல்லூரி

நானும் பரியோவானில் படித்த பழைய மாணவன்... 92ஆம் ஆண்டு ஏ/எல் 'பட்ச்'.. ஆனால் நாலாம் வகுப்பில் இருந்து ஓ/எல் வரைக்கும் தான் அங்கே படித்தனான்.

அங்கே படிபித்த ஆசிரியர்கள் எவரையும் மறக்க முடியுமா என்ன? கந்தசாமி சேர் (தமிழ் பாடம்), சந்திர மெளலீசன் சேர், நரேந்திரன் சேர், யுகபால சிங்கம் சேர் (லொஜிக்), கதிர்காமத் தம்பி, தேவராஜன் சேர் (வரைதல்), கணபதிப் பிள்ளை சேர், தனபாலன் சேர் (முன்னால் அதிபர்: இறந்து விட்டார்), ஷிரானி மிஸ்..... மறக்க முடியுமா எம்மை செதுக்கியவர்களை?

ஜுப்ளி அரங்கும் (), பரந்த மைதானமும், சோலையாக வளர்து நிற்கும் மரங்களும்....நினைக்கும் போதே நெஞ்சம் கனக்குது....

வகுப்பில் இருந்த நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நான் இருந்த அந்த நூலகம்....அதில் பணியாற்றிய நூலக பணியாளர்கள்.. (ஒருவை மிக அழகிய பெண்மணி, யாழ் பல்கலை கழக முன்னால் துணைவேந்தரின் மகள்)..

...அகிலன் அண்ணாவின் மரணம் எம்மை உலுக்கி, வருத்தி எடுத்த துயர சம்பவம். சுடப்பட்டதை கேள்விப் பட்டவுடன், மோட்ச்சரி சென்று, லாச்சி போன்ற ஒன்றை இழுத்து உடலை பார்த்து அழுததும், அப்போது அவரின் கையில் கட்டி இருந்த நீல டயல் மணிக்கூடும் இன்னமும் வலி ஏற்படுத்தும் ரணங்கள்..

....

கடைசியாக, 2004இலும் பள்ளிக்கூடத்தை போய் பார்த்தேன். தனபாலசிங்கம் சேர் என்னை மறக்காமல் இருந்தை எண்ணி இப்பவும் எனக்குள் ஆச்சரியம் ஏற்படுகின்றது (...நானோ சர்வ மொக்கு... எப்படி என்னை நினைவு வைத்திருந்தாரோ தெரியவில்லை...). நிறைய மாறுதல்கள். தேவராஜன் சேர், கந்தசாமி சேர், நரேந்திரன் சேர், சந்திர மெளலீசன் சேர் ஆகியோரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது...

இன்னும் எழுத எவ்வளவோ இருக்கு....

  • தொடங்கியவர்

நிறைய சென்.ஜோன்ஸ் OLD BOYS இருக்கிறீங்கள். மிகவும் சந்தோசம். :) ஒரு கிரிக்கட் மச் விளையாடலாம் போல இருக்கிது சென்ரலோட. வேணுமென்டால் இதுக்கையே ஒரு ST.JOHN'S பழைய மாணவர் சங்கமும் துவங்கலாம்.. இந்த தலைப்பில் நான் தொடர்ந்து எமது கல்லூரி பற்றி அப்டேட் ஆன தகவல்களை இணைக்கின்றேன். நீங்களும் ஏதாவது தகவலகள் கிடைக்கும்போது இங்கே இணையுங்கள். நன்றி!

அங்கே படிபித்த ஆசிரியர்கள் எவரையும் மறக்க முடியுமா என்ன? கந்தசாமி சேர் (தமிழ் பாடம்), சந்திர மெளலீசன் சேர், நரேந்திரன் சேர், யுகபால சிங்கம் சேர் (லொஜிக்), கதிர்காமத் தம்பி, தேவராஜன் சேர் (வரைதல்), கணபதிப் பிள்ளை சேர், தனபாலன் சேர் (முன்னால் அதிபர்: இறந்து விட்டார்), ஷிரானி மிஸ்..... மறக்க முடியுமா எம்மை செதுக்கியவர்களை?

யாரை மறந்தாலும் பொல்லர் நரேந்திரனை மறக்க முடியாது....! அவரை கண்டால் கண்டும் காணாதது போல் ஒடுங்கள் என்று சீனியர் எங்களுக்கு அட்வைச் பண்ணினவை...! :)

கந்தசாமி ஒரு காமெடி சாமி..! கதிர்காமத் தம்பி ஆசிரியர் சுருட்டு பிடிக்கும் அழகே தனி...!

கதிர்காமத் தம்பி ஆசிரியர் சுருட்டு பிடிக்கும் அழகே தனி...!

யாற்றேக்க? :)

  • தொடங்கியவர்

நான் கதிர்காமத்தம்பி மாஸ்டரிட்ட படிக்க இல்ல. ஆனால் அவர நாங்கள் கம்பித்தம்பி எண்டு செல்லமா கூப்பிடுறது...

நானும் நரேந்திரன் மாஸ்டரிட்ட படிச்சு இருக்கிறன். ஆள் கொஞ்சம் ஜாலியான ஆள். கோவக்காரனும். ஒருக்கால் சொக்கர் மட்சில அவர் விளையாடிக்கொண்டு இருக்கேக்க எதிரணி ஆள் யாருக்கோ அடித்ததாய் சொன்னார்கள்.

பிறகு அங்கால பொன்னையா மாஸ்டர் - பொன்ஸ்

ராஜராஜ சோழன் - சோழன்

மணியம் மாஸ்டர் - (மணி - pபிள்லைகல் சுகமா இரிக்கிரீங்கலே? :icon_mrgreen: )

ரவீந்திரன் மாஸ்டர்

சிவகுமார் மாஸ்டர் -

அருள்தாசன் மாஸ்டர் - இப்ப கனடாவில எண்டு நினைக்கிறன்

சிறீகரன் மாஸ்டர் - சுடுதண்ணி..

இன்னும் நிறைய நிறையப்பேர்... ஸ்கூலிக நடந்த பகிடிகள் கொஞ்சம் பிறகு சொல்லிறன். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1990 தொடக்கம் 1992 வரை நானும் படித்தேன். ஜீவானந்தம் மாஸ்டரின் கண்டிப்பு மறக்கவியலாதது. அப்புறம் பிரபாகரன் காதுக்கால கோச்சி ஓட்டுவார். ஆங்கிலம் படிப்பிக்கும் உடுவிலை சேர்ந்த டீச்சர். தனபாலனிடம் படித்தது இல்லை ஆனால் அவர் மகன் எம் வகுப்புத்தோழன். நான் சேரும் போது தேவசகாயம் என்பவரே அதிபர்.

இங்கே எல்லோரும் டொனேசனை பற்றி கதைதீர்கள். ஆறாம் வகுப்பிலே, கணித அறிவையும் தமிழ் அறிவையும் மட்டுமே வைத்து, மாணவர்களை தேர்ந்தெடுக்கும் கல்லூரிகள் மத்தியில், மாணவர்களிர்ர்கு 6ம் வகுப்புக்கு பிறகும் மூளை வளரும் என்பதை நம்பி இயங்கிய பாடசாலை எமது.

என்னுடன் படித்த பலரே அவர்களின் தந்தையார் படித்ததாலும், கல்லூரிக்கு அருகில் வசித்தாலும் படித்துள்ளனர்.

அட்மிஸன் டெஸ்டும், -கொலசிப்பும் பாஸ்பண்ணும் மாணவர்கள் மட்டுமே மாணவர்கள் மற்ற மாணவர் எல்லோரும் ரோட்டு கூட்ட போகலாம் என்று சிந்திக்கும் பாடசாலைகளிற்க்கு மத்தியில் பரியோவான் ஒரு முன்மாதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தராஜாவின் கொலை ஒரு மிலேச்சதனம். கோட்டைக்குள் போய் புட் போல் ஆடியது மிகப்பெரும் தவறுதான். அதுக்காக கொல்லணுமா? எச்சரித்து விட்டு விட்டிருக்கலாம். அல்லது யாழை விட்டு வெளியேற்றி இருக்கலாம்.

  • தொடங்கியவர்

ஓம் எங்கட பள்ளிக்கூடத்தில அப்ப படிப்பிச்சது எல்லாம் மாஸ்டருகள். ஒரே ஒரு டீச்சர் மாத்திரம் படிப்பிச்சவ. அவவிட்ட நான் படிக்க இல்ல.

நான் படிக்கேக்கயும் தேவசகாயம் பிரின்சியா இருந்தவர். குணசீலன், பூரணம்பிள்ளை, மற்றது பொன்னையா, மற்றது தனபாலன் இவேளும் நான் படிக்கேக்க பிரின்சியா இருந்தவேள்.

என்னை மிகவும் கவந்த சூப்பரான 03 வாத்திகள் என்றால்

ஓஎல் க்கு கீழ் - மயில்வாகனம், அன்ரனிப்பிள்ளை, சித்திர வாத்தி - பெயர் இப்ப மறந்து போச்சிது.

ஏஎல் - மணி, அருள்தாசன், சிவகுமார்

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தராஜாவின் கொலை ஒரு மிலேச்சதனம். கோட்டைக்குள் போய் புட் போல் ஆடியது மிகப்பெரும் தவறுதான். அதுக்காக கொல்லணுமா? எச்சரித்து விட்டு விட்டிருக்கலாம். அல்லது யாழை விட்டு வெளியேற்றி இருக்கலாம்.

நான் கொலைகளை ஆதரிப்பவன் அல்ல. நான் வாசித்து அறிந்தவற்றில் இருந்து ஆனந்தராஜாவின் செயற்பாடுகள் தேசத்துரோகமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்களை இராணுவம் கடத்திச் சென்று சுட்டுக்கொன்ற சம்பவங்கள் நடந்த பின்னரும் கோட்டைக்குள் சென்று சிங்களப் படைகளுடன் உறவாட வேண்டிய தேவை என்பது அர்த்தமற்ற ஒன்று. ஒரு கல்வியாளனுக்குரிய செயலல்ல..! மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டது. அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மிலேச்சத்தனம் என்ற சொல்லைப் பாவிக்க முதல்..! :icon_mrgreen:

மாணவர்களிர்ர்கு 6ம் வகுப்புக்கு பிறகும் மூளை வளரும் என்பதை நம்பி இயங்கிய பாடசாலை எமது.

உங்கள் பாடசாலை உங்களுக்கு தவறாகக் கற்றுத் தந்துள்ளது. 6ம் வகுப்பில் மூளை வளராது.. மூளையின் செயற்பாட்டில் அறிவு விருத்தி இருக்கும். மூளையின் வளர்ச்சி 5-6 வயது வரை மட்டுமே..! :wub::wub:

Edited by nedukkalapoovan

சித்திர ஆசிரியர் ரொம்ப நல்லவர்....வடிவா படம் கீறினா நல்ல மார்க்கும் தந்து... கண்காட்சிக்கும் வைப்பார்...நம் பெயருடன்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.