Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா அழைப்பிதழ்!- சீறுமா இந்துத்வா அமைப்புகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமாவில் இந்து கடவுள்களை கொச்சைபடுத்தி வருவதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது இந்துத்வா அமைப்புகள். இது குறித்து பகிரங்கமாகவே பலமுறை எச்சரித்திருக்கிறார் இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன். இந்நிலையில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி ஒரு காரியத்தை செய்திருக்கிறது புதிய திரைப்படத்திற்கான அழைப்பிதழ் ஒன்று.

vanakkamma.jpg

வணக்கம்மா என்ற படத்தின் அழைப்பிதழில், இராமனும், அனுமனும் சிறுநீர் கழிப்பது போன்ற படத்தை அச்சிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வருகிற புதனன்று நடைபெறவிருக்கும் படத்துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் இதே படத்தை பிரமாண்ட போஸ்டராகவும் ஒட்டப் போகிறார்களாம்.

படத்தின் தயாரிப்பாளர் அன்புத் தென்னரசன், கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். பெரியார் திடலுக்கு நெருக்கமானவர். இவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. சுப.வீரபாண்டியன், இயக்குனர் சீமான் என்று கடவுள் மறுப்பாளர்களின் வாழ்த்துக்களுடன் இந்த திரைப்படத்தை துவங்குகிறார் தென்னரசன்.

படத்தில் இதுமட்டும்தானா? இன்னும் இருக்கிறதா என்று வணக்கம்மா படக்குழுவினரிடம் கேட்டால், இராமனும், அனுமனும் சேர்ந்து தண்ணியடிப்பது போலவும், தம் அடிப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன என்கிறார்கள். எங்கே போய் முடியுமோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

Tamilcinema.com

தூயவன் நீங்கள் கில்லி மற்றும் ஈ படம் பார்க்கேல்லையா?

அந்த படங்களில வாற பாடல்கள் இரண்டில நம்மட கடவுள்கள்

எப்படி எல்லாம் கேவலமா ஆடுகினம் அதோட சிவபெருமான்

அனுமான் பீடி குடிக்கிறது மாதிரி எல்லாம் காட்டுறாங்கள்..

ஏன் அப்ப சத்தம் போடாம இருந்தினமாம் தமிழ்சினிமா.கொம்

ஆக்கள்.. :wub:

ஆனா தூயவன் இதை நாங்கள் பெரிசுபடுத்த தேவையில்லை

எல்லாம் ஒரு நகைச்சுவைக்காகத்தானே? கடவுளே இதை

ரசிக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.. ஏனென்றால்

இப்படி படம் எடுத்தவயையும் பார்த்தவயையும் கடவுள் தண்டிக்காமல்

விட்டுவைத்திருக்கிறாரே..! :):D

அப்ப கடவுள் இதையெல்லாம் ரசிக்கிறார்தானே?

'இல்ல நான் ரசிக்கேல்லை' என்றால் இன்டைக்கு இரவு

என்னோட தொடர்பு கொள்ளும்படி கடவுளை கேட்கிறன்.. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்!

உங்களைப் போன்றவர்களுக்கு விளக்கம் சொல்லி ஓய்ந்து விட்டோம்

இராவணன் போன்ற மறத்தமிழர்களை ஆரியர்கள் கபடமாகக் கொலை செய்தார்கள். இது வரலாறு. அந்த இராவணனுக்கு பத்துத் தலைகள் கற்பித்தது, அவன் கைலைநாதரை மயக்கியது, வரையினை தோளால் அசைத்து இத்தியாதி இத்தியாதி கட்டி விடப்பட்ட கற்பனைகள். நாம் அதை நம்பவில்லை!

இளங்கோ பிளீஸ் நிறுத்துங்களய்யா.. கேட்டுக்கேட்டு புளிச்சுப்போட்டுது..

எந்த பக்கத்துக்க போனாலும் இதே விவாதம்தான்... :D

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

உங்களைப் போன்றவர்களுக்கு விளக்கம் சொல்லி ஓய்ந்து விட்டோம்

இராவணன் போன்ற மறத்தமிழர்களை ஆரியர்கள் கபடமாகக் கொலை செய்தார்கள். இது வரலாறு. அந்த இராவணனுக்கு பத்துத் தலைகள் கற்பித்தது, அவன் கைலைநாதரை மயக்கியது, வரையினை தோளால் அசைத்து இத்தியாதி இத்தியாதி கட்டி விடப்பட்ட கற்பனைகள். நாம் அதை நம்பவில்லை!

வாங்கோ! வாங்கோ!

கடைசியில் பரதம், கல்நாட்டு இசையை வெட்கமில்லாமல் சமஸ்கிருதம் இருந்தும், தேவதாசிகள் ஆடிய நடனமாக இருந்தபோதும், தமிழர் கலையாக எடுத்துக் கொண்டது போல இராமயணத்தையும் எடுத்துக் கொள்ளுவீர்கள் என்று தெரியும். பாதையைப் பிடித்துவிட்டீர்கள். அப்படியே லைன் கட்டி வாருங்கள்.

முந்தி இராமயணமே பொய், இராவணனே பொய் என்று தான் சொல்லிக் கொண்டு திரிந்தீர்கள். இப்போது ஏதோ முன்பு சொன்ன மாதிரிக் காட்டிக் கொள்ளாதீர்கள்.

வசி

நாங்களா இத்தலைப்பு வேண்டும் என்று கேட்டோம். முன்பு அமைதியாக இருந்தாய். இப்போதும் அமைதியாக இரு என்பது எவ்வகை நியாயம். எதிர்காலத்தில் அதை விடக்கூடாது.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்த ரமரையும் அனுமனையும் நான் கண்டிக்கிறேன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தெருவுக்குத் தெரு மலசலகூடம் கட்டியிருந்தால் இப்படி ராமரும், அனுமனும் ரோட்டில அடிக்க வேண்டி வந்திருக்காது ?

யாரது அங்கே ? இழுத்து வாருங்கள் அந்த கக்கூ...கட்டுபவனை !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவிகளை உசுப்பேற்றும் “வணக்கம்மா”!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008( 16:35 IST )

ஒன்றுமில்லாததற்கே உரல் இடிப்பவர்கள் இந்துத்வா கட்சியனர். அவர்களுக்கு உரலும் அவலும் ஒன்றாக கிடைத்தால் விடுவார்களா? அப்படியொரு விஷயத்தை (வேண்டுமென்றே) செய்திருக்கிறார் இயக்குனர் ஹரிராம்.

webdunia photo WD

இவர் இயக்கும் வணக்கம்மா படம் நாளை தொடங்குகிறது. அழைப்பிதழில் ராமனும், ஹனுமானும் ஒன்னுக்கு போவதுபோல் புகைப்படம் அச்சிட்டு பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ஹரிராமுக்கு இத்தனை தைரியம் அளித்தவர் படத்தின் தயாரிப்பாளர் அன்பு தென்னரசன். இவர் ஒரு கடவுள் மறுப்பாளர்.

பருத்தி வீரன் சரவணன்தான் வணக்கம்மாவுக்கு ஹீரோ. இன்னொரு இளம் ஜோடியும் படத்தில் உண்டு.

ராமன், ஹனுமான் வேஷம் போட்டவர்கள் தண்ணியடிக்கிற காட்சிகளும் படத்தில் உண்டாம். காவிகள் இப்போதே பல்லை நறநறவென கடிக்க ஆரம்பித்துவிட்டதால், தொடக்க நாளிலேயே தொந்தரவுகள் ஆரம்பிக்கலாம்!

செய்யற வேலையை விட்டுவிட்டு சினையாட்டுக்கு மயிர் பிடுங்கிற வேலையிது என்கிறது சினிமா வட்டாரம்.

எல்லாம் ஒரு விளம்பர யுக்தியப்பா என்றும் சிலர் கூறுகின்றனர்.

webulagam.com

ஈழத்தில் சிங்களவன் இந்துக்களின் ஆலயங்களையும் ,கிறிஸ்தவர்களின் தேவாலயங்களையும் இடிக்கிறான்.அதுமட்டுமில்லாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இ‌ந்து‌க்களை அவம‌தி‌த்ததாக புகா‌ர் எழு‌ந்ததை அடு‌த்து நடிக‌ர் சரவண‌னி‌ன் 'வண‌க்க‌ம்மா' பட‌த்‌தி‌ன் பூஜை‌க்கு‌க் காவ‌ல் துறை‌யின‌ர் தடை ‌வி‌தி‌த்தன‌ர்.

இய‌க்குந‌ர் ஹ‌ரிரா‌ம் இய‌க்கு‌ம் பட‌ம் 'வண‌க்க‌ம்மா'. இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் அழை‌ப்‌‌பித‌ழி‌ல் ராமனு‌ம் ஹனுமானு‌ம் ஒ‌ன்னு‌க்கு‌ப் போவதுபோல புகை‌ப்ப‌ட‌ம் அ‌ச்‌சி‌ட்டு‌ப் பா‌ர்‌ப்பவ‌ர்களை அ‌தி‌ர்‌ச்‌சியடைய வை‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ப்பட‌த்‌தி‌ல் நடிக‌ர் சரவண‌ன், வெ‌ண்‌ணிற ஆடை மூ‌ர்‌த்‌தி, மத‌ன்பா‌ப், ‌தியாகு, ‌வி‌ஷ்ணு‌ப் ‌பி‌ரிய‌ன் ஆ‌கியோ‌ர் நடி‌க்‌கி‌ன்றன‌ர். சுவா‌தி எ‌ன்ற புதுமுக‌ம் கதாநாய‌கியாக அ‌றிமுக‌மா‌கிறா‌ர்.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ன் துவ‌க்க‌விழா பூஜை ஏ.‌வி.எ‌ம். ‌ஸ்டுடியோ‌வி‌ல் இ‌ன்று காலை நட‌ப்பதாக இரு‌ந்தது. இதைமு‌ன்‌னி‌ட்டு ஏராளமான ‌சி‌னிமா ‌பிரப‌லங்க‌ள் அ‌ங்கு கு‌வி‌ந்தன‌ர்.

இ‌வ்‌விழாவை‌க் க‌ண்டி‌த்து இ‌ந்து மு‌ன்ன‌ணி‌யினரு‌ம் அ‌ங்கு ‌திர‌ண்டன‌ர். இ‌ந்து‌க்களை அவம‌தி‌‌க்கு‌ம் வகை‌யி‌ல் அழை‌ப்‌பித‌ழ் அ‌ச்சடி‌த்த 'வண‌க்க‌ம்மா' பட‌க்குழு‌வினரை‌க் க‌ண்டி‌த்து அவ‌ர்க‌ள் முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

webulagam.com

இதுகு‌றி‌த்து‌ தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் பட பூஜை‌க்கு‌த் தடை ‌வி‌தி‌த்தன‌ர். இதையடு‌த்து ‌விழா ர‌த்து செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

பட‌த்‌தி‌ற்காக அ‌ச்‌சிட‌ப்ப‌ட்டிரு‌ந்த சுவரொ‌ட்டிக‌ள், அழை‌ப்‌பித‌ழ்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை‌க் காவ‌ல்துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். ஏ‌ற்கெனவே ஒ‌ட்ட‌ப்ப‌ட்டிரு‌ந்த சுவரொ‌ட்டிகளு‌ம் ‌கி‌‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டன.

Edited by கறுப்பன்

பதிலுக்கு, வேறு சில கிழடுகள் சிறுநீர் கழிப்ப்து போல் ஒரு நாடக போஸ்டர் ஒட்டி விடவேண்டியது தான்.

ஆனால் காணத்தான் சகிக்காது!!! :D :D :lol:

நாடகத்தின் தலைப்பு " எனக்கு எழுபது! உனக்கு இருபது!!" :lol: :lol: :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு சந்தேகம்

இந்த உடைக்கும் ஜிப் இருக்கிறதா ? இல்லையெனில் எங்ஙனம் முடியும் ?

vanakkammafc1.jpg

"வணக்கம்மா" என்ற திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் இருந்த படம்தான் இது. கடைசியில் இந்தப் படத்தால் திரைப்படத்தின் தொடக்க விழா நின்று விட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தும் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டின் காவல்துறையினர் தொடக்க விழாவிற்கு தடை விதித்து விட்டனர்.

ராமனும் அனுமனும் சிறிநீர் கழிப்பது போன்ற இந்தக் காட்சி திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சியாகத்தான் இருக்க முடியும். ராமன், அனுமான் வேடம் தரித்த இரண்டு நாடக நடிகர்கள் சிறுநீர் கழிக்கும் காட்சியாகவே இது பெரும்பாலும் இருக்கலாம். இது போன்று இந்துக் கடவுள்களை பயன்படுத்தி நிறைய நகைச்சுவைக் காட்சிகளை தமிழ் திரையுலகம் உருவாக்கியிருக்கிறது.

ரஜனிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தை ஒரு உதாரணமாக சொல்லலாம். அதில் ரஜனிகாந்த் சிவபெருமான் வேடத்தை போட்டுக் கொண்டு தன்னை துரத்துபவர்களிடம் இருந்து தப்பி ஓடுவார். மிகவும் புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது. ஒரு பார்ப்பனருடன் மோட்டர்சைக்கிளில் தப்பிப் போகின்ற ரஜனி, கடைசியில் ஒரு விரலைக் காட்டி தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதாக சொல்லி, மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குவார். ரஜனி ஒரு விரலைக் காட்டியதும், "பகவானுக்கே வந்தா அது மழை பெஞ்ச மாதிரி" என்று அந்த பார்ப்பனர் சொல்வார்.

இதை விட கடவுள் வேடம் தரித்தவர்கள் பீடி குடிப்பது மாதிரியும், மது அருந்துவது மாதிரியுமான காட்சிகள் பல படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் இவைகள் எவைக்குமே இந்துத்துவ கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சிகள் தமது கடவுள்களை இழிவுபடுத்துகின்றன என்று அந்த கட்சிகள் கூறவில்லை. தற்பொழுது "வணக்கம்மா" படத்திற்கு மட்டும் பிரச்சனை கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதற்குக் காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகத்துடன் ஈடுபாடு உள்ளவர் என்பதுதான்.

இந்துத்துவ அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் வலுவில்லாதவை என்பது நடுநிலையாக சிந்திக்கின்ற அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்தான்.

ஆனால் ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கும் அழைப்பிதழை தமிழ்நாடு அரசோ அல்லது சென்னை மாநகராட்சியோ ஒரு வலுவான காரணத்தை சொல்லி தடைசெய்ய முடியும். உண்மையில் தெருவில் சிறுநீர் கழிப்பது சட்டப்படி குற்றம். ஆகவே ராமனையும், அனுமனையும் கடவுளாக வணங்கும் பக்தர்கள் இந்த அழைப்பிதழைப் பார்த்து, அவர்களும் தெருவில் சிறுநீர் கழித்தால், தமிழ்நாடே நாறி விடும். ஒரு குரங்கை கடவுள் என்று வணங்கும் "அறிவோடு" இருப்பவர்கள் இதைச் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டின் சுகாதாரம் கருதி இந்த அழைப்பிதழை தடை செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு முழு உரிமையும் இருக்கிறது.

அதே வேளை இந்த அழைப்பிதழ் கடவுளை இழிவுபடுத்துகிறதா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. கடவுள்களாகிய ராமனும் அனுமனும் சிறுநீர் கழிக்கின்ற காட்சி கடவுள்களை இழிவுபடுத்துவது போல் இருக்கின்றது என்பது இந்துத்துவ அமைப்புக்களின் வாதம். இப்பொழுது என்னுடைய கேள்வி எதுவென்றால், கடவுளுக்கு இயற்கை உபாதை உண்டா? கடவுள் மலம், சலம் கழிப்பாரா? அல்லது தன்னுடைய சக்தியால் அடக்கி வைத்திருப்பாரா? அல்லது கடவுளுக்கு அப்படி ஒன்றே இல்லையா?

இவைகளை அசட்டுத்தனமான கேள்விகள் என்று யாரும் புறந்தள்ள வேண்டாம். உண்மையில் இவைகள் ஆராயப்பட வேண்டிய கேள்விகள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! கடவுளுக்கு நித்திரை வருகிறது, கடவுளுக்கு பசிக்கிறது, கடவுளுக்கு அன்பு, கோபம், பழி என்று அனைத்து உணர்ச்சிகளும் வருகிறது, கடவுளுக்கு காமம் வருகிறது, கடவுளுக்குள் உடலறுவு நடக்கிறது, கடவுளுக்கு பிள்ளை பிறக்கிறது. இப்படி எல்லாமே மனிதனைப் போல் கடவுளுக்கு நடைபெறுகின்ற போது, ஏன் இந்த மலம், சலம் என்று எதுவும் வருவது இல்லை?

நித்திரை கொள்கின்ற கடவுளை காலையில் திருப்பள்ளிஎழுச்சி பாடி எழுப்புகின்றனர். பின்பு அவருக்கு பசிக்கும் என்று நிறைய தின்பண்டங்களை படைக்கின்றனர். கடவுள் உணவு அருந்துவதாக வேதங்களும் சொல்கின்றன. உணவு மட்டும் அல்ல, சோமபானமும் கடவுள் அருந்துகிறாராம். இவைகள் எல்லாம் வயிற்றுக்குள் சென்று ஒன்றுமே செய்யாதா? திருப்பள்ளியெழுச்சி பாடி கடவுளை துயில் எழுப்புபவர்கள், அவர் சாப்பிடுவதற்கு முதல் ஒரு திருமலசலகூடத்திற்கு அவரை அழைத்துச் செல்லாததன் காரணம் என்ன?

அனைத்து சக்திகளையும் கொண்ட கடவுளுக்கு எந்தப் பலவீனமும் இல்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் பசி, காமம் இவை எல்லாம் ஒரு பலவீனம்தானே. தன்னுடைய மனைவியுடன் மட்டும் நின்று விடாது, வேறு பெண்களிடமும் இச்சை தீர்க்கின்ற நிலையில் கடவுள் இருப்பதாகத்தானே சொல்லப்படுகிறது.

வைணவ ஆலயங்களில் பரிவேட்டை என்று ஒரு விழா நடத்துவார்கள். அன்றைக்கு பெருமாளை கொண்டு போய் ஒரு தெருவில் வைத்துவிடுவார்கள். பெருமாளுக்கு தன்னுடைய துணைவியை பார்த்துப் பார்த்து அலுத்து விட்டதாம், அதனால் வேறு பெண்களிடம் செல்கிறார் என்பதுதான் இந்த விழாவின் பொருள். முன்பு பெருமாளைக் கொண்டு தாசிகள் வசிக்கும் தெருவில் வைப்பார்கள். தற்பொழுது ஏதோ ஒரு தெருவில் வைத்துவிட்டு வருவார்கள்.

பெருமாளுக்கே தாசிகளிடம் செல்லும் பலவீனம் இருக்கிறது. இதை விட கடவுளுக்கு நோய், தோசம் போன்றவைகளும் இருக்கிறன. இந்திரனுக்கு பால்வினை நோய்களில் ஒன்றாகிய "படர்தொடை வாழை" வந்தது. இந்திரனை கடவுள் இல்லை என்று விட்டு விட்டாலும், சிவபெருமானுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருந்ததே!

மோகினியாக உருமாறிய விஸ்ணு மீது காமம் கொண்டு அவரை துரத்திக் கொண்டு ஓடுகின்ற போதே, சிவனுக்கு விந்து வெளியேறி விடுகிறது. மருத்துவ உலகில் இதையும் ஒரு பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். இந்தப் பிரச்சனையை மாற்றுவதற்கான சிகிச்சைகளும் இருக்கின்றன. எல்லாம் அறிந்த சிவன் இதை அறியாமல் போனது ஆச்சரியம்தான்.

மொத்தத்தில் கடவுள்களுக்கு நோய் நொடியில் இருந்து அனைத்துப் பிரச்சனைகளும் இருக்கின்றன. ஆனால் கடவுள்களுக்கு இயற்கை உபாதைகளான மலமும் சலமும் வருமா என்கின்ற கேள்விக்குத்தான் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலம், சலம் என்பன நாற்றமடிக்கும் விடயங்கள் என்பதால், இவைகள் தமக்கு வராத மாதிரி கடவுள்கள் செய்திருக்கின்றார்கள் என்ற முடிவுக்குத்தான் கடைசியில் என்னால் வர முடிந்தது.

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????

- வி.சபேசன்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்பொழுது எனக்குள் இன்னொரு கேள்வி எழுந்து, என்னை மிகவும் குழப்பி விட்டது. கடவுளுக்கு மலமும் சலமும் வராது என்பது சரி, ஆனால் தம்மை கடவுள்கள் என்று சொல்கின்ற புட்டபர்த்தி சாஜிபாபாவிற்கும், டென்மார்க் லலிதாவிற்கும் மலம், சலம் வருமா? வராதா? அப்படி வரும் என்றால், இவர்களை கடவுள் என்று எப்படிச் சொல்ல முடியும்?????

ஆஆஆஆஆஆ..........உங்களுக்குள் வந்த கேள்வி நியாயமானதுதான்.

"பதில்களை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது, அவர் கேட்க்கும் கேள்விகளில் இருந்து அவரை இலகுவாக எடை போடு " எண்ற ஒரு சீனப்பழமொழி உள்ளது...!

உங்களின் கேள்வி கட்டுரை, உங்களை எடை போட வசதியாக சிலருக்கு இருக்கலாம்( எனக்கு இல்லை எண்டாலும்)...

கடவுள் எப்படி இருப்பார் எண்ட கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது... இப்படித்தான் இருப்பார் எண்டு அறுதியிட முடியாது, ஆனால் அவரவர் தங்களின் எண்ணத்துக்கு ஏற்ப உருக்கொடுப்பதை சமயங்கள் சில( எல்லாம் இல்லை) எதிர்க்கவில்லை...

மனிதனின் உருவத்தில் இல்லாத ஒருவர் உங்களை விட மேன்மையானவராக இருப்பதாகவும் அவருக்கு கீழ் நீங்கள் வேலை செய்வதாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா....??? ( எருதின் தலையும் தீக்கோழியின் உடலும் கொண்ட ஒரு உருவம்.? ) அப்படி உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும் எண்றால் நீங்கள்தான் மகாஞானி...!

"ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி கடவுள் என்கிறது சைவ சமயம்"... ஆகவே கடவுளுக்கு உருவம் இல்லை ஆனால் உங்களின் விருப்பத்துக்கு ஒரு உருவத்தை வைத்து இருக்க சுதந்திரம் தரப்பட்டு உள்ளது என்கிறது சைவம்... கடவுளை உங்களின் உறவுகளில் ஒருவராக வணங்க மாமன் எண்றால் விண்னு, தகப்பன் எண்றா சிவன், தாய் எண்றால் பார்வதி, தம்பி எண்றால் முருகன்...

இப்படி எல்லாம் சொல்லி தந்தாப்பிறகு உங்களுக்கு இப்படியான கேள்விவருவது கேலிக்குரியது...!!

எனக்கு தெரிய நீங்கள் உண்மையான நாத்தீகர்களை கேவலப்படுத்துகிறீர்கள்....!

ஒரிடத்தில் பெரியார் கேட்பார். "" ராமர் அணிலை தொட்டார் முதுகில் கோடுவந்தது அப்படி எண்றால் ராமர் சீதையை தொட்டதே இல்லையா, கோடுகள் உள்ளதா..?? " எண்று கேட்பார்... அதுதான் கேள்வி...!! அப்படியான கேள்விகளை கேட்டு பாருங்கள்...!!

நானும் கேள்வி கேட்க்கும் ரகம்தான் ஆனால் இப்ப இல்லை.. அதுக்கு இது காலமும் இல்லை...!

Edited by தயா

கேள்விகள் எழுந்ததன் பின்புதான் சைவத்திற்கு சித்தாந்தமே உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு புதிய புதிய கேள்விகளும் மற்றைய மதங்களின் தாக்கமும் அதிகரித்தவுடன், மேலும் புதிய விளக்கங்களை சிலர் சைவத்திற்கு கொடுக்கிறார்கள்.

சைவத்தில் சிவன்தான் கடவுள். சிவனை உருவம் உள்ளவனாகவும், உருவம் அற்றவனாகவும், அருஉருவானாகவும் வணங்கலாம். சிவனை உன்னுடைய தந்தையாக, நண்பனாக, காதலனாக வணங்கலாம்.

சைவம் இதற்கு மேல் போனதாக எனக்குத் தெரியவில்லை.

உன்னுடைய கடவுளை நீ உன்னுடைய தம்பி வடிவில் கண்டால் அதற்கு முருகனை வணங்கு என்று சைவம் எங்கே சொன்னது? இது எங்கே எழுதப்பட்டுள்ளது? கடவுளை மாமன் வடிவில் கண்டால் விஸ்ணுவை வணங்கு என்று சைவம் எங்கே சொன்னது?

இதைப் பற்றி ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா?

பொழுது போகாதவர்கள் கடவுளை உருவாக்கி அதற்கு சொந்தம், பந்தம், மனைவி, பிள்ளைகுட்டி, போதக்குறைக்கு வைப்பாட்டி எல்லாம் உருவாக்கி விட்டார்கள். சற்று நாகரீகம் அடைந்து மதங்கள் புதிய தத்துவங்களுடன் வந்த பொழுது, சிலர் சைவத்தில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தத்துவம் சொல்ல முயல்கிறார்கள்.

சைவத்திற்கு என்று கற்பிக்கப்படுகின்ற தத்துவங்களில் பெரும்பாலானவை சென்ற நூற்றாண்டில் அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்டவை.

ஒரு கேள்வி!

கடவுளை ஒருவன் எப்படியும், யாராகவும் வணங்கலாம் என்றால், கடவுளை புத்தராகவோ அருகராகவோ வணங்க சைவம் ஏன் அனுமதிக்கவில்லை?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய நீங்கள் உண்மையான நாத்தீகர்களை கேவலப்படுத்துகிறீர்கள்....!

ஒரிடத்தில் பெரியார் கேட்பார். "" ராமர் அணிலை தொட்டார் முதுகில் கோடுவந்தது அப்படி எண்றால் ராமர் சீதையை தொட்டதே இல்லையா, கோடுகள் உள்ளதா..?? " எண்று கேட்பார்... அதுதான் கேள்வி...!! அப்படியான கேள்விகளை கேட்டு பாருங்கள்...!!

பெரியார் கேட்ட கேள்வியும் நியாயம்தான், சபேசன் கேட்ட கேள்வியும் நியாயம்தான்.

Edited by இளங்கோ

கடவுளை ஒருவன் எப்படியும், யாராகவும் வணங்கலாம் என்றால், கடவுளை புத்தராகவோ அருகராகவோ வணங்க சைவம் ஏன் அனுமதிக்கவில்லை?

உங்களை வணங்க வேண்டாம் எண்று சைவம் எங்கை எழுதி வைத்து இருக்கு...?? சிறப்பாக வணங்கலாமே....

வீரபத்திரர், வைரவன், காலபைரவன், நந்தி , தட்சனாமூர்த்தி , சண்டேசுரர். எண்டு கன கடவுள் சிலைகளை சைவர்கள் கும்பிடுவார்கள்....

சபேசா..! சைவர்களில் வீரசைவர் , காளமுகர் எண்டு இன்னும் பல உள்பிரிவுகள் இருக்கப்பன்...!! அங்கை எல்லாம் சுடலைச் சிவன் கழுத்திலை மண்டையோட்டு மாலை அணிந்து இருப்பார்...!! நீங்கள் அறிய வேண்டி இன்னும் பலது இருக்கு எண்டு உங்கட கேள்வி தெரிவிக்குது...

சூரசிங்கனை வீரன் முருகன் வெண்றபோது சிவனின் ஏவலாள் வீரபத்திரன் துணை இருந்தார் எண்று கந்த புராணம் சொல்கிறது....!

அதையும் விட ஒருவரின் கேடுகாலத்தை சனியன் பிடிப்பு என்பார்கள்... அதுக்கு எள்ளெண்னை எரிக்க சிவன் கோயில்தான் சிறந்த இடம் எண்று போய் சனியனை வணங்குவார்கள்.....

ஆகவே சபேசன் அவர்களே உங்களின் கேள்விகள் உங்களின் வெற்றிடங்களை மட்டும் வெளிச்சம் போடுகிறது...

பெரியார் கேட்ட கேள்வியும் நியாயம்தான், சபேசன் கேட்ட கேள்வியும் நியாயம்தான்.

சக்தியை ( அதாவது எனேஜி) கடவுள் எண்று சொல்லும் ஆட்கள் சைவர்கள்.... அதனால்தான் இறைவனை அரும்பெரும் சோதி என்கிறார்கள்...

ஒரு கதைக்கு உங்களுக்கு என்னை விட சக்தி அதிகம்... உங்களால் என்னை காக்க முடிந்தால் நீங்களும் கடவுள்தான்... அதைத்தான் சைவர்கள் " அன்பே சிவம் " எண்று சொல்வார்கள்... உங்களுக்கு இன்னும் விளக்கமாக சொன்னால் அன்புள்ளம் கொண்ட உங்களுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... ஆகவே உங்களுக்கு மலமும் சலமும் வரும், ஆதலால் நீங்கள் கடவுள் இல்லை எண்டா நிறுவ முடியும்....!!

உங்களுக்கு ஒருவிடயம் தெரியுமா... இப்படியான கேவலமான வசைவுகள் பெரியார் செய்தது இல்லை...

ஒரு கோயிலை பார்த்து பெரியார். கோயிலில் இருப்பது கல்தான் என்பார்... அதை அழகாக நிறுவியும் காட்டினார்... ஆனால் உங்களால் கடவுள் மலசலம் களிப்பது உண்டா இல்லையா எண்ட கேள்வியை ஆதரிக்க மட்டும்தான் முடியுது...! ்

  • கருத்துக்கள உறவுகள்

அபச்சராம்,அபச்சாரம் இதையே ஒரு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதங்களை சார்ந்தவர்களை புண்படுத்தும்படி செய்வார்களா அப்படி செய்தாலும் உடனே சிறுபான்மையினரை தாக்குகிறார்கள் என்று கொடி தூக்கிவிடுவார்கள் ஆனால் இந்து மதத்தை எவ்வளவு கேவலமாக சித்தரிக்கிறார்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.இதை தடுக்க நாங்கள் என்ன செய்யலாம் என்று யாழில் ஒரு கருத்து கணிப்பு நடத்த வேண்டும் முடிந்தால் உங்களது கண்டன கடிதங்களை ஜக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பவும் அத்துடன் உலக தமிழர் நாயகன் கருணாநிதிக்கும் தந்தி அடிக்கவும்,அறிக்கையும் விடவும். :icon_mrgreen:

தயா,

ஒரு புறம் புராணங்களுக்கு மதத்திற்கும் சம்பந்தம் இல்லை, அதை வைத்துக் கொண்டு மதத்தை எடை போடக் கூடாது என்கிறீர்கள். இன்னொரு பக்கம் புராணக் கதைகளை வைத்து விளக்கம் சொல்ல முயற்சிக்கிறீர்கள்.

ஏன் இந்தக் குழப்பம்?

புத்தரைப் பற்றியும் அருகரைப் பற்றியும் சைவம் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களை வணங்குபவர்கள் பற்றி சைவம் என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா? இதற்கு ஆதாரமாக இருக்கின்ற தேவாரங்களை நீங்கள் கேள்விப்படவில்லையா?

புத்தர், அருகர் என்று அல்ல சிவனைத் தவிர மற்றவர்களை வணங்குவதே பாவம் என்று சொல்கின்ற "புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்" என்ற திருவாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பதற்குள் இது மிகவும் மென்மையானது. மற்றைய கடவுள்களை வணங்குபவர்களைப் பற்றி சைவம் கொண்டிருக்கும் மிகக் கடுமையான கருத்துக்களை என்னால் தர முடியும்.

வீரபத்திரர், வைரவன் போன்றவைகள் யார் என்ற கேள்விக்கு அவர்கள் சிவனின் பிள்ளைகள் என்றுதானே சைவம் பதில் சொல்கிறது! கடவுளுக்கு பிள்ளைகள் பிறக்கின்றன என்ற உதாரணத்தையும் நான் சொல்லியிருந்தேன் என்பதை இங்கே நீங்கள் கவனிக்க வேண்டும்.

தூயவன் சொன்னதை நான் சொன்னதாக நீங்கள்தான் திரிக்கிறீர்கள் சபேசன்...!!

கதைகள் சொல்லாமல் எந்த மதமும் கிடையாது ...!! நீங்கள் சொல்லும் புத்தர் அருகருக்கு கூட அருமையான கதைகள் இருக்கிறது... அதைத்தான் புராணம் என்கிறார்கள்...!

கடவுளால் ஒருவர் அனுப்ப பட்ட மனிதன் எண்று ஒருவரை அடையாளம் கணப்படால் அதை மக்கள் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும், வைனவத்திலும் அவதார் அல்லது அவதாரம் என்பார்கள்....!! ஆனால் சைவர்கள் கடவுளின் குழந்தை என்பார்கள்...

திருமறைகளில் மற்றய மதங்களை போற்றி பாடவேணும் எண்டு எதிர்பார்க்கிறீர்களே. அப்படி சிங்கள தேரவாய புத்தரைபற்றி. அனுராதபுரம் போதி மரத்தை பற்றியும், தலதாமாளிகை பற்றி போற்றி ஒரு கவிதை தமிழில் எழுதிப்பாருங்களேன்....!! அதை உங்களின் தளத்தில் போட்டும் பாருங்களேன்... விபரம்தானாக தெரியும்...!!

சமணர்கள், சிவனடியார்கள், பட்டர்கள் யாரும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு தங்களின் கடவுள்களை பாடினர் என்பதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது.... அப்படி உனது பெரிதா எனது பெரிதா எனும் போட்டி இருப்பது மனித இயல்பு... சிவனடியார்களும், பட்டர்களும் சமணர்களும் ஒண்றும் கடவுள் இல்லை அவர்களும் மனிதர்களே..!

Edited by தயா

கிறிஸ்தவம் சொல்கின்ற "தேவகுமாரன்" என்பதற்கு இணையாக சைவத்தில் உள்ள சிவனின் குழந்தைகளை வைப்பதற்கு முனைகிறீர்கள்.

சைவத்திலும் மற்றைய இந்து மதங்களுக்குள்ளும் உள்ள இலட்சக்கணக்கான கடவுள்களுக்கும் அதற்கு உள்ள மாமன், மச்சான், மகன், மனைவி, ஆசைநாயகி போன்ற உறவுகளும் இந்த "கடவுளின் குழந்தை", "கடவுளின் தூதுவர்" போன்றவையும் ஒன்று அல்ல.

நீங்கள் ஒழுங்கு முறையை மாற்றிச் சொல்கிறீர்கள். நான் சொல்கின்ற ஒழுங்குமுறையை கவனியுங்கள்.

ஆதிகாலத்தில் மனிதன் நிறையக் கடவுள்களை வணங்கினான். ஒவ்வொரு சிறிய மனிதர் கூட்டமும் தனித் தனிக் கடவுள்களை வணங்கி, அந்த மனிதர் கூட்டங்கள் இணைகின்ற போது, பல கடவுள்கள் அமைந்தன.

இதை விட ஒரு கடவுளால் இத்தனை மனிதர்களையும் காக்க முடியுமா என்ற கேள்வியும் பல கடவுள்களையும், பல தேவர்களையும் உருவாக்க வைத்தன.

ஒவ்வொரு இயற்கை உருவாக்கங்களையும் (நீர், நெருப்பு, ஆகாயம், காற்று....) கடவுள்கள் என்று நம்பி, அப்படியும் புதிய கடவுள்கள் உருவாகின.

இந்தக் கடவுள்கள் பற்றிய புராணக் கதைகளையும் மனிதர்கள் உருவாக்கினார்கள்.

உலகம் முழுவதும் இப்படித்தான் இருந்தது. பின்பு "கடவுள் ஒருவரே" என்ற சிந்தனை பல நாடுகளில் பரவியது. முன்பு இருந்த பல கடவுள் வழிபாடுகளையும், புராணக் கதைகளையும் இந்தக் கருத்து அர்த்தமற்றதாக்கியது. மனிதனிடம் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியும் நாகரீக வளர்ச்சியும் இதற்கு காரணம் ஆகின.

ஆனால் இந்திய துணைக் கண்டத்தில் புராணங்களின் மீதானதும், பல கடவுள்களின் மீதானதுமான நம்பிக்கை பேணப்பட்டது. அத்துடன் அங்கே அனைத்துக் கடவுள்களுக்கு உறவு முறைகள் உருவாக்கப்பட்டன. ஒரு புறம் "ஒரு கடவுள்" என்ற சிந்தனை பழைய கடவுள்களையும் புராணங்களையும் இல்லாமல் செய்தது. மறுபும் இந்தியாவில் அனைத்துக் கடவுள்களும் "ஒரு குடும்பம்" என்ற சிந்தனையை வைத்து பல கடவுள் முறையும் புராணங்களும் காப்பாற்றப்பட்டது.

"கடவுள் ஒருவரே" என்ற சிந்தனைக்கு அடுத்தபடியாக "கடவுளுக்கு உருவம் இல்லை" என்ற சிந்தனை உருவானது. இது கடவுள் பற்றிய சிந்தனையில் பெரும் புரட்சி என்று சொல்லலாம்.

இந்த சிந்தனை மாற்றத்தில் அமிழ்ந்து போய்விடாது இருப்பதற்கு இந்தியாவின் இந்து மதப் பிரிவுகளும் இந்த சிந்தனையோடு சமரசம் செய்து கொண்டன. இதற்கு பௌத்தம், சமணம் போன்ற கோட்பாடுகள் பெரும் தாக்கத்தை விளைவித்தன.

இன்றைக்கு இந்து மதம் சார்ந்தவர்கள் சொல்கின்ற தத்துவ விளக்கங்கள் அனைத்தும், மற்றைய மதங்களின் தாக்கத்தினால் உருவானவை. மற்றைய மதத்தவர்கள் ஒரு புதிய விடயத்தை சொல்ல, "நாங்களும் அப்படித்தான்" என்று இந்து மதமும் சொல்கிறது. இதற்காக புராணக் கதைகளுக்கு புதிய விளக்கங்களும் சொல்லப்படுகின்றன.

இதை விட இந்த புராணங்களையும், பல கடவுள்களையும் சாடிய சித்தர்களை தமது மதத்திற்குள் அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே உள்வாங்கியதும் ஒரு வசதியாகப் போய் விட்டது.

இன்றைக்கு சொல்கின்ற தத்துவ விளக்கங்களுக்காக அன்றயை மனிதன் பல கடவுள்களை உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது வரலாற்றுத் திரிபு.

அன்றைக்கு அச்சத்திலும், அறிவின்மையிலும் பல கடவுள்களை மனிதன் உருவாக்கினான். இன்றைக்கு அந்த முட்டாள்தனத்தின் எச்சங்களை காப்பாற்றுவதற்கு அறிவுள்ள மனிதன் புதிய தத்துவ விளக்கம் தருகிறான்.

எப்ப தான் நீங்க எல்லாம் மதத்திற்காக நேரத்தை வீணடிக்காம இருக்க போறீங்களோ தெரியவில்லை,ஜயா சபேசன் உங்களது கருத்துக்கள் ஆணித்தரமாக உள்ளது ஏனையோருடன் ஓப்பிடும் போது :icon_mrgreen:

சைவத்திலும் மற்றைய இந்து மதங்களுக்குள்ளும் உள்ள இலட்சக்கணக்கான கடவுள்களுக்கும் அதற்கு உள்ள மாமன், மச்சான், மகன், மனைவி, ஆசைநாயகி போன்ற உறவுகளும் இந்த "கடவுளின் குழந்தை", "கடவுளின் தூதுவர்" போன்றவையும் ஒன்று அல்ல.

நீங்கள் ஒழுங்கு முறையை மாற்றிச் சொல்கிறீர்கள். நான் சொல்கின்ற ஒழுங்குமுறையை கவனியுங்கள்.

ஆதிகாலத்தில் மனிதன் நிறையக் கடவுள்களை வணங்கினான். ஒவ்வொரு சிறிய மனிதர் கூட்டமும் தனித் தனிக் கடவுள்களை வணங்கி, அந்த மனிதர் கூட்டங்கள் இணைகின்ற போது, பல கடவுள்கள் அமைந்தன.

இதை விட ஒரு கடவுளால் இத்தனை மனிதர்களையும் காக்க முடியுமா என்ற கேள்வியும் பல கடவுள்களையும், பல தேவர்களையும் உருவாக்க வைத்தன.

ஒவ்வொரு இயற்கை உருவாக்கங்களையும் (நீர், நெருப்பு, ஆகாயம், காற்று....) கடவுள்கள் என்று நம்பி, அப்படியும் புதிய கடவுள்கள் உருவாகின.

எந்த அடிப்படையிலை இந்த புழுகை அவிட்டு விடுக்கிறீர்களோ தெரியவில்லை...

ஒருவர் மட்டும் பேசுவது இல்லை மொழி..! ஒரு குழு, பின்னர் கூட்டம், பின்னர் மக்கள் தொகை.. எல்லாருமே ஒரு இலக்கணப்படி பேசினால் அதை மொழி என்கிறீர்கள்... அப்படியேதான் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நம்பிக்கையும் ஒருமித்து இருந்தது.....

சைவம் என்பதுக்கும், இந்து என்பதுக்கும் , எந்தளவான காலம் இணைப்பு இருக்கும் எண்டு நினைகிறீர்கள்....?? இராசராசன் காலம் வரைக்கும் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம் , சௌரம் எல்லாம் பிரிந்தே இருந்ததுக்கான ஆதாரங்கள் அதிமாக இருக்கிறது... அதேகாலப்பகுதியில் வைணவ பட்டர்களில் பாடல்களை படித்து இருந்தால் தெரிந்து இருக்கும்... இராசராசனின் அமைசர்களில் ஒருவர் நம்பீயூடயான் நம்பி எனும் வைணவர்... அவருக்கு வைணவர் என்பதால் ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம்..

ஆரம்பம் முதல் சைவம் என்பது சக்திகளின் தொகுப்பே... ஒரு சுடலை காப்பவனாக கடவுளை சொன்னது சைவம் தான்...! சுடலை சாம்பலை நெற்றியில் இட்டும் உனது முடிவுகாலம் நெருங்குகிறது என்பதை சொல்வதும் சைவமே...! அன்பை கடவுள் என்பதும் சைவமே, இப்படி சக்திகளின் வெளிப்பாட்டைத்தான் கடவுள் என்கிறது சைவம்..

ஐம்பூதங்களாகட்டும் , ஐம்பூலன்களாகட்டும் , ஐநிலங்களாகட்டும் எதுவுமே இந்துத்துவத்தில் இருந்து தமிழர்களிடம் வரவில்லை... சைவத்தில் இருந்து செண்றவையே...!

முல்லை, மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி என்பது எல்லாம் தமிழனுக்கு உதவியாகவும் உபத்திரவமாகவும் இருந்ததினால் அதுக்காக ஒரு கடவுளை வைத்து வணங்கினான் தமிழன்... இது சைவத்தின் சக்தி வாளிபாட்டுக்கு ஏதுவானதுதான்... அதுக்கும் முன்னம் இந்த நிலங்களின்(கடலினதும்) அதிபதியாக கொற்றவை போற்றப்பட்டாள்..

தமிழர்களின் ஆட்ச்சி முடிவில் மொகாலயார்கள் தமிழர் இடங்களை வல்வளைப்பு செய்கிறார்கள்... அதன் பின்னர் மொகாலையர்களால் "ஹிந்துஸ்தான்" தோற்றம் பெற்றது... எல்லா மதங்களின் இணைப்பான ஹிந்து கூட அதனோடுதான் உருப்பெற்றதாக இருக்க வேண்டும்....!!

நீங்கள் வேலை மினக்கெட்டு கேவலப்படுத்தும் வேதங்கள் புராணங்கள் எல்லாம் வைணவர்களினிடையது... சைவர்களுக்கு அப்படியான எதுவுமே இல்லை... நீங்கள் சுதந்திரமானவர் விரும்பினால் கோயிலுக்கு போங்கள் வேண்டாம் எண்றால் இருங்கள் எண்று சொல்லும் மதம் சைவம்... ஏன் எண்டால் நீங்கள் வாழும் இடமே கோயில்தான்... அன்புள்ளம் இருந்தால் நீங்கள் கூட கடவுள்... ( போலி சாமியார்.?? )

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.