Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதறல்கள்

சொற்களால் கட்டிய புஸ்பக விமானம்

----- கவிதை

அகிலத்தை வாழ்த்தும் ஆனந்தக் கண்ணீர்

----- மழை

மனதுக்குள் பூப்பூக்கும் நந்தவனம்

-----அன்பு

காதலுக்கும் கனவுக்கும் பிறப்பிடம்

-----விழி

கண்ணுக்குப் புலப்படாத காந்தர்வ சக்தி

-----கடவுள்

நாதியற்றுப்போன நம்மில் ஒருவன்

----- அநாதை

கதியற்றுப் போன காற்றுப் பைகள்

----- அகதி

இறையுணர்வால் உடலுணர்வை வென்றவர்கள்

----- துறவி

உயிரின் வருகைக்காய் உண்டான பூகம்பம்

----- பிரசவம்

அணைக்க அணைக்க அத்துமீறும் காட்டுத்தீ

-----ஆசை

பாதிநாள் நோயாளி மீதிநாள் சுகவாசி

----- நிலவு

உணர்வுகளின் கனவுத் தொழிற்சாலை

----- நினைவு

அவனாக அவளாக இப்போ அதுவாக

----- பிணம்

உறவுகளை உடைத்துவிடும் சம்மட்டி

----- பணம்

எரிந்தால் அழிவு அணைந்தால் உயர்வு

----- சாதி

இருதுருவங்களின் எல்லைக் கோடு

----- விவாகரத்து

தரைக்கும் தண்ணீருக்கும் துணையாகும் பிணை

----- அணை

அகத்தில் உருவாகும் ஆனந்த ராகம்

----- சிரிப்பு

மனதுக்குள் வீசும் மணற்புயல்

----- வெறுப்பு

இருப்போர் இல்லை என்பார் இல்லாதோர் இருக்குதென்பார்

---- பசி

ப+ங்காற்றாய் வீசி நீங்கிடும் பனிப்போர்

----- இளமை

வாசமில்லா மலர்களின் வாடாத மலர்வனம்

----- பாசம்

வருடினால் மென்மை வளைத்தாலோ திண்மை

----- பெண்மை

பெண்மைக்குள் எரியும் பெரும் தீ

----- கற்பு

சிட்டுக்களின் சுட்டும் விழிச்சுடர்

----- பொட்டு

பொன்னகையின் மதிப்பினை பொய்யாக்கும் செய்மதி

----- புன்னகை

பகலுக்கு மட்டுமல்ல இரவுக்கும் இவனே சக்கரவர்த்தி

----- சூரியன்

நிழலில் நிம்மதி நித்தமும் சந்நிதி தினமும் நீ வளி

----- மரம்

பேச்சுக்கும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் விலங்கு

---- மூச்சு

அடுத்தவர் போட்டாலும் அவரவர் போட்டாலும் தடுத்திடும் உறை

---- சிறை

உணர்வுகளின் உயிர்ப்பு

---- கவிதை

இதயங்கள் இடம்மாறும் உணர்வு

---- காதல்

சிலருக்கு சிறகு பலருக்குச் சிலுவை

---- கல்யாணம்

மயக்கும் மந்திரம் மனங்கவர் சித்திரம்

-----மழலை

நித்தமும் எமைக் காக்கும் சத்திய நெறி

---- மதம்

ஓசையின் வெளிப்பாடு உணர்வின் வெளிப்பாடு

----- மொழி

வார்த்தைக்குள் அடக்க முடியாத வரம்

----- தாய்

எம் முகவரிகளுக்கு முதல் எழுத்து

-----தந்தை

அகரம் அறிய வைத்த சிகரம்

----- ஆசிரியர்

எவரும் எட்ட முடியாத இடைவெளி

---- மரணம்

ஒரு கூட்டுப் பறவைகளின் உப்பரிகை

---- வீடு

வாடகையற்ற வசந்த மாளிகை

----- பாடசாலை

ரயில் பயணங்களில் தண்டவாளங்கள்

----சொந்தம்

சிலருக்குத் தேவதை பலருக்குத் தேகவதை

----- மனைவி

சிலருக்கு கண்அவன் பலருக்கு புண்அவன்

---- கணவன்

சரமானால் கூந்தலில் சருகானால் குப்பையில்

---- மலர்கள்

தான் அசையாமல் உலகையே அசைக்கும் இசை

---- மனம்

கூலியின்றி எம்மைக் காக்கும் வேலி

----- மானம்

புன்னகைக்கும் போதிமரம்

---- வானம்

இளமைக்க இனிமைதரும் தவம்

----முத்தம்

இனிதாய் அமிழ்தாய் உயிராய் உணர்வாய் எம் மொழியாய்

---- தமிழ்

தீண்டித் தீண்டி மீண்டும் உனக்குள் நீ

----- கடலலை

பிறந்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம் வாழ்ந்திடச் செல்வதோ வேறிடம்

--- நதி

ஞாலச் சக்கரத்தை சழற்றும் அச்சாணி

--- காலம்

குதித்தால் சலங்கை கொட்டினால் ஜலதரங்கம்

--- நயகரா

மந்திரம் சொல்லவும் மார்புடன் அணைக்கவும் மெல்லத் தலை சாய்க்கவும் செல்லப் பிள்ளை

--- தலையணை

அலையும் மனதை அடக்கிடும் அங்குசம்

--- ஆலயம்

அனுபவப் பாடத்தின் அதிசிறந்த அரிச்சவடி

--- முதுமை

நிலத்தில் அழியும் ஓவியம் நினைவில் அழியாத காவியம்

---- கோலம்

நிலவொயியில் குளித்த நினைவலையின் நீச்சல் தடாகம்

----- முற்றம்

தனைமிஞ்ச யாருமில்லை என்று தலையாட்டும் தமிழீழ அழகு

----- பனை

கொட்டவும் கொத்தவும் செய்யும் கொள்ளிடம்

----- வார்த்தை

அமைதியின் பிடியில் அவர்கள் அமைதியின்றி இவர்கள்

----- இழப்பு

வளைந்து வளைந்து வலுவிழந்த வரலாறு

----- நாணல்

வெல்லும்வரை தேவை புள்ளடிகள்

---- தேர்தல்

இன்று பெண்களுக்குப் பதிலாய் பொம்மைகள் கொலுவில்

----- நவராத்திரி

அடங்கு அடங்கு என்று சொல்ல விலங்குடைத்த பறவை

----- பெண்

அடக்கி அடக்கி அச்சாணி உடைந்த சக்கரம்

----ஆண்

பெற்று வளர்த்தபின் எதுவுமே பெறாதோர்

---- பெற்றோர்

அடடா அடடா... அருமை அருமை... :D

இது என்ன வித்தியாசனமான ஹைக்கூ - ஆத்திசூடி மாதிரி இருக்கிது?

ஐபோல் அக்கா, மிகச்சிறந்த முதிர்ந்த சிந்தனைகளை உதிர்ந்தமைக்காக உங்களுக்கு யாழ் இணையம் சார்பாக சிந்தனைச்செல்வி என்ற பட்டம் தந்து கெளரவிக்கின்றோம்.. :D

எல்லாத்தையும் பற்றி மூச்சுவிடாமல் சொல்லி இருக்கிறீங்கள்.

மேலும்..

யாழ் இணையத்தையும் பற்றி ஒரு வரியில ஒரு ஹைக்கூ சொல்லிவிடுங்கோ..

Edited by முரளி

மூச்சுமுட்டுகிறது...சிந்தனை

இல்லாத மூளையைக் கூடதேடித் தட்டுகிறது...

அருமை.. அருமை அருமை....

ஆனா கண்மணி

அடக்கி அடக்கி அச்சாணி உடைந்த சக்கரம்

----ஆண்

இதை மட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்...

இல்லத்தின் கல்தூண்

ஆண்

(பெண் ஆளும் வீடுகள் இறப்பர் தூணில் நிற்கிறதா.. என்று கேட்காதீர்கள் நிறைய அப்படித்தான்)

அகிலத்தின் அஸ்திவாரம்

ஆண்..

பெண்ணைக் கரை சேர்ப்பது

ஆண்

தாய்மையை இதயத்தில் கொண்டவன்

ஆண்

வெற்றி பெற்ற பெண்களுக்கு பின்னால் கூட

ஆண்

வெற்றி பெற்ற பெண்களுக்கு முன்னால் கூட

ஆண்

சக்கரம் இல்லாத வண்டி

ஆணை துரத்திய பெண்கள்

பெண் குழந்தையும் சுமக்கும்போது

அவளையும் சேர்த்து சுமக்கும்..ஆணை

அவமதித்ததை.. நான் வன்மையாக கவனிக்கிறேன்... :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி மனதிற்குள் மத்தாப்பூ பூக்கிறது

உங்கள் சிதறல்கள் அற்புதமாக இருக்கின்றன.

வாடகை அற்ற வசந்த மாளிகையில் மறுபடியும் போய் இணையலாமா என்று ஏங்க வைக்கிறது உங்கள் படைப்பு. என் நட்பின் வெளிகளில் நான் கண்ட அற்புதத்தோழியே! வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருது கொடுத்த முரளிக்குப் பரிசாக ஒரு சிதறல்

தமிழுடன் விளையாடி தரணியில் உறவாட விழுதுகள் பல கொண்ட விருட்சம்

----யாழ்களம்

விகடகவி

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கூழாங்கற்களும் கூடஇருக்கும்

மாணிக்கக் கற்களைப்பற்றி மனதுக்குள் பூரிப்பு

கூழாங்கற்களைப் பற்றி......

சகாரா

அற்புதத் தோழி என்று செப்பிய உன் வார்த்தைகளில் சொக்கிப் போய்விட்டேன்

படித்துப் பாராட்டிய முரளி விகடகவி சகாரா அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியக்கா உங்கள் சிதறல்களை கூட்டியள்ளி பார்த்துப் படித்தில் எனக்கு உறுத்தலான சில மணிகள்

எரிந்தால் அழிவு அணைந்தால் உயர்வு

----- சாதி

பெண்மைக்குள் எரியும் பெரும் தீ

----- கற்பு

சிலருக்கு சிறகு பலருக்குச் சிலுவை

---- கல்யாணம்

விளக்கம் தருவீங்களா?? :D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.