Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம்

வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது.

pathivu.com

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி யாழில் ஆரம்பம்

வடக்கின் பெரும் போர் என வாண்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையேயான துடுப்பாட்டப் போட்டி நேற்று காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் பூவா தலையா போட்டதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 102 வது தடவையான போட்டி முதல் மூன்று நாட்களுக்கு இடம் பெறவுள்ளது.

pathivu.com

தொடர்ந்து விபரங்கள் கிடைத்தால் அறியத்தாருங்கள் நுணாவிலான். நன்றி

சென் ஜோன்ஸ் வெற்றி பெற்றா சொல்லுங்கோ அண்ணே நானும் அங்க தான் பந்து பொறுக்கினான் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சென் ஜோன்சுக்கு முதன் இனிங்ஸ் படுத்துக்கிச்சு..

சென்றலுன்னா என்னான்னு நினைச்சீங்க... centralflagme3.gif

Date: Thu, 17 Apr 2008 14:29:11 +0100

Day 1 Close of Play. SJC - 64 all out

JCC - 210/5

St. Johns College 1st Innings

01. Jayanthan ................................... 24

02. Preyatharsan ............................. 03

03. Yogeswaran .............................. 01

04. HariPraveen ............................... 00

05. Janusan ...................................... 00

06. Suhathas .................................... 00

07. Pranavan .................................... 04

08. Achuthan .................................. 04

09. Harivathanan .............................. 13

10. Evonshan .................................... 01

11. Thavaneethan ............................. 02

exts 12

----------------

64 all out

JCC Overs Wickets Maiden Runs

01. Navaneeth 10 04 01 22

02. Kopigan 10.1 03 02 18

03. Sheltan 10 03 03 15

Jaffna Central College 1st Innings 210/5

01. Steebanraj ..................................11

02. Nirmalkanth .............................. 38

03. Sheltan ....................................... 32

04. James Jansan .......................... 38

05. Navaneeth ..................not out 71

06. Dhayan ....................................... 00

07. Sivakaran ...................not out 02

S.J.C. Bowlers

01. Harivathanan 17 04 04 51

02. Haripraveen 08 01 ........ 34

நன்றி:- http://www.jccoba.com/news_events.html

Edited by nedukkalapoovan

சென்ரல் காசை கொடுத்து நடுவர்களை வாங்கிட்டாங்க போல :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரல் காசை கொடுத்து நடுவர்களை வாங்கிட்டாங்க போல

நடுவர்களும், வீரர்களும் விலைபோவதற்கு இது என்ன ஏதோசில அஞ்சாறு நாடுகளுக்க நடக்கும் விளையாட்டா? :(:lol:

தமிழீழத்தின் தலையாய கல்லூரிகளில் இரன்டாண சென்ட்ரலும், சென். ஜோன்ஸ்சுமாக்கும்!!!! :icon_mrgreen::icon_mrgreen:

My husband says that Central College always tamper with ball & do some magic on the pitch.

well , They are doing it this year aswell ?????

போற போக்கைப் பார்த்தால் இம்முறை நமக்கு தோல்வி தான்...!

என்னதான் சென்ரல் நம் பரமவைரியானாலும் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதில்லை ....! ஏட்டிக்கு போட்டியான எதிரிகள்..! அவ்வளவு தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் தலையாய கல்லூரிகளில் இரன்டாண சென்ட்ரலும், சென். ஜோன்ஸ்சுமாக்கும்!!!! :icon_mrgreen::icon_mrgreen:

And the first one has always been the Hartley College...! :(

My husband says that Central College always tamper with ball & do some magic on the pitch.

well , They are doing it this year aswell ?????

So the Centralites have been the forefathers to Pakistanis in ball tampering..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

My husband says that Central College always tamper with ball & do some magic on the pitch.

well , They are doing it this year aswell ?????

That's right. Bad weather bothers a lot to st.johns college. :icon_mrgreen::icon_mrgreen:

தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்பதை விட்டு விட்டு...............

My husband says that Central College always tamper with ball & do some magic on the pitch.

well , They are doing it this year aswell ?????

தேவகி.. உங்களுடைய கஸ்பண்ட்; இங்கிலீசிலையா சொன்னவர்.. temper என்று சொல்லியிருப்பார்.. கோபக்காரர் என்ற நினைப்பில்.. நீங்கள் பிழையாய் விளங்கியிட்டீங்கள். அக்கக்கா... திருப்பி ஒருக்கா கேளுங்கோ..

சென்ரல் காசை கொடுத்து நடுவர்களை வாங்கிட்டாங்க போல :icon_mrgreen:

ஜில் ஜில்.. ஆத்திரம் தீர கொஞ்சம் ஜில்லாய் குடியுங்கோ. வயிற்றெரிச்சல் நிற்கும்

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட போட்டி என்றால் யாழ்.மத்திய கல்லூரியும் , உதை பந்தாட்ட போட்டி என்றால் யாழ்.இந்துக்கல்லூரியும் வெல்ல வேண்டும் என்று நினைப்பேன்.

பாராட்ட தக்க வகையில் யாழ்.பரியோவான் கல்லூரியின் ஒழுங்குமுறை நன்றாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்பவும் சென்றலுக்குத்தான் சப்போட். சென் ஜோன்ஸ் ஆக்களைப் பிடிக்கிறதில்ல. தண்ணி அடிச்சிட்டு வந்து ஆடுவாங்க.. சென்ரல் கிரவுண்டுக்க..! அதுமட்டுமில்ல. சென் ஜோன்ஸ் கிரவுண்ட் ஒரு குட்டி. அவங்க பார்வையாளர்களை அவ்வளவு ரெஸ்பெக்ட் பண்ணுறதில்ல. சென்ரல் பார்வையாளர்களுக்கு நல்ல மரியாதை செய்வாங்க. தண்ணி அடிச்சிட்டு.. சென் ஜோன்ஸ் பண்ணுற கூத்து.. ஐ டோண்ட் லைக் தட்..! சென்றல் கள் அடிச்சிட்டு.. பம்மிட்டு இருக்குங்கள்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு ,

விளையாட்டு நடக்கிறதே , நூறாண்டுக்கு மேலாக அதுகும் ஆறுமுகநாவலர் படித்த பள்ளி அல்லவா ?

சென்றல் பம்மீட்டு இருக்கிறது பக்கத்திலுள்ள வேம்படியை பாத்துதான். சென்.ஜோன்ஸிற்கு சுண்டுக்குளி தூரம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு ,

விளையாட்டு நடக்கிறதே , நூறாண்டுக்கு மேலாக அதுகும் ஆறுமுகநாவலர் படித்த பள்ளி அல்லவா ?

சென்றல் பம்மீட்டு இருக்கிறது பக்கத்திலுள்ள வேம்படியை பாத்துதான். சென்.ஜோன்ஸிற்கு சுண்டுக்குளி தூரம் தானே.

கலியாணம் கட்டினாத்தான் பொண்டாட்டிக்குப் பயப்பிடுவினம் என்பார்கள்.. இது கட்ட முதலே பயமா.. நான் நினைக்கல்ல.. சென்ரல் பொடியள்.. அந்தளவுக்கு.. வீக் என்று..! :icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பழம் தின்றும் கொட்டை போடாத ஆட்கள் ஆக்கும்.

கலியாணம் கட்டினாத்தான் பொண்டாட்டிக்குப் பயப்பிடுவினம் என்பார்கள்.. இது கட்ட முதலே பயமா.. நான் நினைக்கல்ல.. சென்ரல் பொடியள்.. அந்தளவுக்கு.. வீக் என்று..! :(:lol:

நெடுக்ஸ் தம்பி..நான் உங்கள் பக்கம்.. சென்றல் வாழ்க.(உரத்த குரலில்). சென்.ஜோன்ஸ்ம் வாழ்க (மெல்லிய குரலில்) இந்துவும் வாழ்க.(அதே குரலில்). வாழ்கவே

சென் ஜோன்ஸ் படுத்துக்கிச்சு..

சென்றலுன்னா என்னான்னு நினைச்சீங்க... centralflagme3.gif

நெடுக்ஸ்..சென்ரல் வெற்றி.........................இன்னிங்ஸ் ஆலும் 133 ஓட்டங்களலாலும்.. தேவகி. ஜில்..எப்படி..

சென் ஜோன்ஸ் முதல் இன்னிங்ஸ் - 64

சென்றல் முதல் இன்னிங்ஸ் - 301/8

சென் ஜோன்ஸ் இரண்டாவது இன்னிங்ஸ் - 104

Edited by Ponniyinselvan

சென்ரல் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்..!

ஜொனியன்ஷ்...! அடுத்த முறை வெல்ல வாழ்த்துக்கள்...!

சென்ரல் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்..!

ஜொனியன்ஷ்...! அடுத்த முறை வெல்ல வாழ்த்துக்கள்...!

நன்றி லீ...

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் மாபெரும் துடுப்பெடுத்தாட்டம் யாழ் மத்திய கல்லூரிக்கு அபார வெற்றி

[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008, 06:19.22 PM GMT +05:30 ]

வடக்கின் மாபெரும் துடுப்பெடுத்தாட்டமென வர்ணிக்கப்படுகின்ற யாழ் மத்திய கல்லூரி யாழ் பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையேயான 102வது மாபெரும் துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 1 இனிங்ஸ் 133 ஓட்டங்களினால் யாழ் மத்திய கல்லூரி அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிய இத்துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய யாழ் மத்திய கல்லூரி அணித்தலைவர் டயான் பரியோவான் கல்லூரி அணித்தலைவர் கரிபிரவீன் தலைமையிலான அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடும்படி கேட்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி அணியினர் யாழப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையில் 64 ஓட்டங்களுடன் சகல இலக்குகளையும் இழந்திருந்தனர். பரியோவான் கல்லூரி அணியின் சார்பில் ஜெயந்தன் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் நவநீத் 4 இலக்குகளையும் கோபிகன் செல்டன் ஆகியோர் தலா 3 இலக்குகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டி முழுவதிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 8 இலக்குகள் இழந்த நிலையில் 301 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர். மத்திய கல்லாரி அணிக்காக மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நவநீத் 73 ஓட்டங்களையும் சிவகரன் 44 ஓட்டங்களையும் நிர்மலகாந் ஜயன்சன் ஆகியோர் தலா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பரியோவான் கல்லூரி அணிவீரர் ஹரிவதனன் 4 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

இனிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி அணியினர் தனது இரண்டாவது இனிங்சில் சகல இலக்குகளையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பரியோவான் கல்லூரி அணித்தலைவர் கரிபிரவீன் அணிக்காக 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதிலும் இனிங்ஸ் தோல்வியிலிருந்து அணியினைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. வழமையாக மூன்றுநாட்கள் நடைபெறுகின்ற இம் மாபெரும் துடுப்பெடுத்தாட்டம் இவ்வருடம் இரண்டு நாட்களில் முடிவிற்கு வந்தமை இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆட்ட நாயகனுக்கான விருதுகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் நவநீத்திற்கும் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது யாழ் மத்திய கல்லூரி வீரர் கோபிகனுக்கும் சகலதுறை ஆட்டக்காரருக்கான விருது யாழ் மத்திய கல்லூரி வீரர் செல்டனிற்கும் சிறந்த பந்து தடுப்பாளருக்கான விருது பரியோவான் கல்லூரி வீரர் பிரியதர்சனுக்கும் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக சுவிஸ் யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கல்வியுடன் நின்றுவிடாது விளையாட்டுத் துறையிலும் யாழப்பாணம் மத்திய கல்லூரி மிகச் சிறப்பான இடத்தில் இருப்பதையிட்டு மகிழ்சியடைவதுடன் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிவீரர்களுக்கும் பயிற்றுனருக்கும் சுவிஸ்வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் இவ் வீரர்களையும் பயிற்றுனரையும் மதிப்பளிப்பதற்கான ஒழுங்குகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபரூடாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சென்றல்...! :lol:centralflagme3.gif

சென் ஜோன்ஸுக்கு.......

-Just for fun..!

Edited by nedukkalapoovan

வாழ்த்துக்கள் சென்றல்...! :lol:centralflagme3.gif

சென் ஜோன்ஸுக்கு.......

-Just for fun..!

நெடுக்ஸ்..எங்கே இதைக்கண்டுபிடித்தீர்கள். சிரித்து சிரித்து ... தாங்கமுடியாமல் இருக்கிறது. ஜில்லையுல் தேவகியின் கஸ்பெண்டையும் நினைத்துக்கொள்கிறேன்.

நுணாவிலானுக்கும் நன்றி..

:(:(

  • கருத்துக்கள உறவுகள்

பட இணைப்பிற்கு நன்றி நெடுக்கு .

ம்ம்...இப்படியும் ஒரு மாட்டர் இருக்கா...எனிவே வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள் ஜம்மு பேபியின் :lol: ...ம்ம்ம் யாழ்கள மெம்பர்ஸ் யாரும் இந்த அணிகளுக்காக விளையாடி இருக்கிறீங்களோ முந்தி இல்ல கேட்டனான் :lol: ..(நீங்க அடிபடுறதை பார்த்தா சரி அத விடுவோம் என்ன :wub: )...

ம்ம்..எப்பவுமே விளையாடுற ஆட்களை விட பார்க்கிற ஆட்கள் தான் டென்சன் ஆகிறது என்பது நேக்கு நன்னா விளங்குது பாருங்கோ :lol: ..எனிவே யாழில போட்டி போட்ட இரு அணி ஆதரவாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் :lol: ..(நிசமா என்னால முடியல்ல :lol: )...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா எனக்கு போட்டியில சிக்சர் அடிக்கிறவனை பிடிக்கும் ஆனா வாயால சிக்சர் அடிக்கிறவனை பிடிகாது" :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.