Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது புதிய புள்ளி நிறுவனம்..!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. :D வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இருக்க நியாயம் இல்ல.

அது என்ன புள்ளி நிறுவனம் எண்டு நீங்கள் முளுசுறது தெரியுது. அது என்ன வெண்டால் dot.com ஐ செந்தமிழில புள்ளி நிறுவனம் எண்டு மொழிபெயர்த்து சொன்னன். இப்ப எல்லாரும் தமிழில கதைக்கவேணும் எண்டு ஆசைப்படுறீனம் தானே? பாரதியார் சொன்ன மாதிரி தமிழ் மெல்லச் சாகக்கூடாது அத நாங்கள் எல்லாருமாச் சேந்து கட்டிப்பிடிச்சாவது காப்பாத்த வேணும் எண்டுற நல்ல நோக்கத்தில நானும் ஒரு பக்கத்தால இஞ்ச காரியத்தில இறங்கி இருக்கிறன்.

அப்ப பிறகு என்ன எண்டால்..

இப்ப உலகத்தில எல்லாரும் - நிறையப்பேர் புள்ளி நிறுவனங்கள் வச்சு இருக்கிறீனம். என்னை மாதிரி எல்லாரும் சும்மா ஓசியில மற்ற ஆக்களுக்கு உழுந்து அரைச்சுக் குடுக்கிறீனம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. கனசனம் இதன்மூலம் நல்ல காசும் சம்பாதிக்கிதுகள். சின்னச் சின்னப் பெடியங்களே ரெண்டு கணணி (இடையில ஒரு குழப்பம் - ரெண்டு சுழி "னி" யோ இல்லாட்டிக்கு மூண்டு சுழி "ணி" யோ சரி எண்டு தெரிய இல்ல. கூகிளில பரிசோதனை செய்து பார்த்தன். இப்பிடி சொல்லிது: Results 1 - 10 of about 18,500 for கணணி. (0.03 seconds), Results 1 - 10 of about 60,600 for கணனி. (0.04 seconds) ) ஓம் சின்னச் சின்னப் பெடியங்களே ரெண்டு கம்பியூட்டர் வகுப்புகளுக்கு போட்டுவந்து நல்லா காசு உழைக்கிறாங்கள் இணையம் மூலமா யாவாரம் செய்து! ஆனால்..

காசு மாத்திரம் வாழ்க்கை இல்லத்தானே? நாங்கள் இந்தப் பூமிப் பந்தில இருக்கபோறது ஒரு கொஞ்சக் காலம்... ஊரிலதான் நாலுபேரோட கதைச்சு சந்தோசமா இருக்க முடிய இல்ல. கடைசி இணையம் மூலமாவது அரட்டை அடிச்சு கொஞ்சம் கலகலப்பா இருப்பம் எண்டு இந்தப் புள்ளி நிறுவனத்த நான் ஆரம்பிச்சு இருக்கிறன். மற்றது, நான் படிக்கிறதும், படிச்சதும் இதே துறை எண்டுறபடியால் எனக்கும் ஏ.எஸ்.பி, பீ.எச்.பி, ஜாவா ஸ்கிரிப்ட் அது இது எண்டு விளையாட்டுக்கள் காட்டத்தெரியும். சரி படிச்சத கொஞ்சம் யூஸ் பண்ணிப் (பிரயோகிச்சு) பாப்பம் எண்டுறதும் இப்பிடி ஒரு புள்ளி நிறுவனத்த நான் ஆரம்பிச்சு இருக்கிறதுக்கான இன்னொரு காரணம்.

முந்தி ரெண்டு, மூண்டு வருசத்துக்கு முன்னம் எல்லாம் புள்ளி நிறுவனங்கள வாங்கிறது எண்டால் சரியான காசு. இப்ப அப்பிடி இல்ல. நீங்களும் என்னமாதிரி ஒரு டொமயின வாங்கி அரட்டைப் பெட்டிய - இல்லாட்டி ஒரு கடையத் திறக்கலாம். இதுக்கு ஒரு இருவது டொலர் காசு கிரடிட் கார்டில இருந்தால் போதும். 2008ம் ஆண்டு கணக்கின்படி உலகத்தில இப்ப சுமார் 6,676,120,288 பேர் இணையத்தில உலாத்தல் செய்யுறீனமாம்.

எதிர்காலத்தில பொழுதுபோக்கு அம்சங்கள், தகவல்கள்... இப்பிடி உங்களுக்கும் பிரயோசனமான விசயங்கள இதில எழுதிப்போட்டு யாழில இணைப்பு குடுக்கிறன். நீங்களும் என்னை மாதிரி கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீங்கள், இருக்க வேண்டும் எண்டு அப்புச்சாமியிட்ட பிரார்த்தனை செய்யுறன். எனது ஆக்கங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை யாழில சொல்லுங்கோ. எனக்கு msivagur@gmail.com எண்டுற மின்னஞ்சலிலையும் உங்கள் பின்னூட்டல்களை அனுப்பி வைக்கலாம்.

சரி எனக்கு நித்தா வருது. இண்டைக்கு முதல்நாள் இவ்வளவும் காணும். மிச்சம் பிறகு உங்களோட கதைக்கிறன்.. நன்றி! வணக்கம்!

பி/கு: யாழ் இணையத்திலையும் அடியேனின் அருள்வாக்குகள் தொடரும். யாழ் இணையம் நான் வாழுற வீடு எண்டு சொன்னால்... இந்த புதிய புள்ளி நிறுவனம் ஆபத்து காலங்களில நான் ஓடிவந்து ஒளிஞ்சு கொள்ளுற பதுங்குகுழி எண்டு சொல்லலாம்.

பி/கு: எனது புள்ளி நிறுவனத்துக்க வரும்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், பார்க்க முடியாமல் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி! :(

Edited by வலைஞன்
மிகுதிப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகவே நீங்கள் உங்கடை மிச்ச செய்திகளை இல்லாட்டி இரகசிய தகவல்களை இனிமேல் வேறை ஒரு இடத்திலை தான் வைச்சு காட்டப்போறியள் :(

என்னயிருந்தாலும் இஞ்சையிருக்கிற எந்த மகாவிண்ணருக்கும் காலூண்டி நிக்க யாழ்களம் தேவை :D

ஆக மொத்ததில் களம் போர்க்களம் ஆகிவிட்டது..! இரண்டு நாளா நானும் பதுங்குகுழிதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி

பி/கு: யாழ் இணையத்திலையும் அடியேனின் அருள்வாக்குகள் தொடரும். யாழ் இணையம் நான் வாழுற வீடு எண்டு சொன்னால்... இந்த புதிய புள்ளி நிறுவனம் ஆபத்து காலங்களில நான் ஓடிவந்து ஒளிஞ்சு கொள்ளுற பதுங்குகுழி எண்டு சொல்லலாம்.

ஒங்கடை அருல் வாக்கைவைத்து என்ன கடலைக்கொட்டை வியாபாரமே செய்யுறது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும், நடக்கட்டும். :lol::lol:

  • தொடங்கியவர்

வாசகப் பெருமக்களின் உற்சாகமான வரவேற்புக்கு நன்றி!

- - -

ஒங்கடை அருல் வாக்கைவைத்து என்ன கடலைக்கொட்டை வியாபாரமே செய்யுறது :lol:

கடலக்கொட்டை யாவாரம் எண்டால் என்ன அவ்வளவு நக்கலா இருக்கிதோ கு.சா அண்ணா? இஞ்ச இப்ப கடலக்கொட்டை யாவராரத்த நம்பித்தான் அண்டசராசரமும் இயங்கிது எண்டுறது மறந்துபோச்சிதோ?

Edited by வலைஞன்
மூலக் கருத்து நீக்கப்பட்டுள்ளதால், அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகப் பெருமக்களின் உற்சாகமான வரவேற்புக்கு நன்றி!

- - -

கடலக்கொட்டை யாவாரம் எண்டால் என்ன அவ்வளவு நக்கலா இருக்கிதோ கு.சா அண்ணா? இஞ்ச இப்ப கடலக்கொட்டை யாவராரத்த நம்பித்தான் அண்டசராசரமும் இயங்கிது எண்டுறது மறந்துபோச்சிதோ?

மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பு..... :lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

எல்லாப் பக்கத்தாலையும் எல்லாரும் கிளைமோரும் கையுமா திரியுறீனம் நான் என்ன செய்ய கறுப்பன்? இப்போதைக்கு குண்டு துளைக்காத வாகனத்தில பயணிப்பது இல்லாட்டி பதுங்கு குழியுக்க இருப்பது தவிர வேற வழி இல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன கதைக்கிறீங்கள் எண்டு எனக்கு சரியா விளங்கேல்லை இருந்தாலும் உங்கடை பதுங்கு குழிகள் லேட்டஸ்ட் bunker buster ஐ தாக்குப்பிடிக்குமா தெரியேல்லை.

  • தொடங்கியவர்

நான் சொன்ன கருத்து விளங்க இல்லையோ இல்லாட்டி எழுதின எழுத்து விளங்க இல்லையோ இல்லாட்டிக்கு ரெண்டுமே விளங்க இல்லையோ? விளங்காமல் இருக்கிறதும் ஒரு விதத்தில நல்லது எண்டுதான் நினைக்கிறன் வணங்காமுடி.. !

அட..குருவே எப்படி உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது..(என்னால முடியலையே) :lol: ..என்றாலும் புள்ளி நிறுவனம் அந்த மாதிரி இருக்கு ஒரு சிறு புள்ளியிள தான் வாழ்க்கையெ ஆரம்பிக்குது என்பதிற்கு உங்கன்ட புள்ளி நிறுவனம் தான் எடுத்து காட்டு பாருங்கோ.. :D

ம்ம்..நேக்கு கூட குருவே இப்ப எல்லாம் ஏதாச்சும் எழுதாட்டி நித்தாவே வருதில்ல பாருங்கோ..(யார் கூடவும் கோபம் போட்டாலும் இப்ப எல்லாம் என்ன செய்யிறது என்றா ஏதாச்சு ஒன்னை வந்து யாழில எழுதுவன் என்டா பாருங்கோவன்)..இத விட முக்கியமான விசயம் என்னென்டா நான் காலமயில யூனிக்கும் மற்றது வேலைக்கு "டிரெயினில" தான் போறனான் பாருங்கோ..(கிட்டதட்ட 1 மணித்தியாலம் எடுக்கும் போய் சேர).. :rolleyes:

முந்தி என்ன செய்யிறது என்டா..(டிரெயினில வாற ஆட்களை "சைட்" அடிக்கிறது தான்)..என்ன பார்க்கிறியள் எல்லாரும் கண் என்று இருந்தா நாலு இடத்த பார்க்க தான் செய்யும் மனம் என்று இருந்தா நாலு இடத்த பாய தான் செய்யும் அட நன்னா இருக்கே.. :wub:

இப்ப எல்லாம் காலமயே ஏதாச்சும் எழுதி கொண்டு தான் போறனான் என்றா நீங்க நம்பமாட்டியள் என்று தெரியும் ஆனா நிசமா அப்படி தான் பாருங்கோ..(இப்ப எனக்கு இது ஒரு பெரிய பிரச்சினையா போச்சு)..காதில பாட்டையும் கேட்டு கொண்டு ஏதாச்சும் எழுதி கொண்டு போற சுகம் இருக்கே அடடா...

ம்ம்..வர வர நான் திருந்திகொண்டு வாரேன் என்று நினைக்கிறியளோ அது தான் இல்ல எழுதி கொண்டு "சைட்டும்" அடிப்பன் அது வேற விசயம் பாருங்கோ.. :lol:

இப்படி எல்லாம் எழுத கற்று தந்தது என்ட செல்லம் தான் வேற யார் என்ட காதலி "யாழ்களம்" தான் பாருங்கோ இப்ப அவாவின்ட அப்பா வந்து கையில கத்தியோட "நன்ன தமிழ் தெரிந்தா தான்" இந்த பக்கம் வரணும் என்று சொல்லி போட்டார்..கத்தியோட இருக்கிற மாமா கூட நான் எப்படி சண்டை பிடிக்கிறது..

அப்படி நான் சண்டை பிடிக்க அவர் வேற யாருக்கும் கட்டி கொடுத்திட்டார் என்றாலும் என்று போட்டு இருந்து யோசித்தனான் அப்ப குரு சொன்ன வழி தான் சரியாபட்டது..அது தான் என்ட வீட்டு தெருகோடியில இருந்து தமிழிழை கற்று என்ட காதலியை கரம் பிடிப்போம் என்று.. :D

அட செல்லதின்ட உறவுகளோட வழமை போலவே லொள்ளு பண்ணுவன் அந்த கருத்து பிழை என்று என்ட மாமானார் கத்தியோட வந்தாலும் நான் அத பற்றி கவலைபடமாட்டன் ஆனா என்ன மிணகட்டு நான் ரசித்து எழுதுற ஆக்கத்தை என்ட செல்லதிற்கு..(அட உங்களுக்கு ரசனை போல தெரியாட்டியும் நான் ரசித்து தான் எழுதுறனான் பாருங்கோ :lol: )...அட என்ட மாமானார் வந்து கத்திய போட்டிட்டார் என்றா அத என்னால தாங்க ஏலாது அல்லோ..ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா என்ட மாமானார் கத்தியை போட்டாலும் நான் எழுதுறது எல்லாம் ஒரு இடத்தில பத்திரமா இருந்தா அதுவே எனக்கு காணும்..

இல்லாட்டி எனக்கு அன்றைய நாளே ஒரு மாதிரி இருக்கு..(அது உங்களுக்கு விளங்குமோ தெரியலை)..ஆனாபடியா இதை எல்லாத்தையும் பத்திரமா வைக்க சரியான இடம் என்ட வீட்டு தெருகோடி தான் என்று தெரிந்தது பாருங்கோ... :D

இப்ப நான் என்ன சொல்ல வாறேன் என்டா என்ட மாமானர் நான் எழுதுறது என்னத்தையும் வெட்டி போட்டார் என்றா என்ட தெருகோடிக்கு வந்து பார்த்து கொள்ளளாம் பாருங்கோ..ஓம் என்ட தெருகோடி விலாசம் என்ன என்றா இப்ப சொல்லுறன்.. :lol:

ஜம்முபேபியின் தெருக்கோடி......

பி.கு - நான் தெருகோடியில மிணகடமாட்டன் உங்க தான் என்ட செல்லதோட மிணகடுவன் அப்பப்ப நீங்க அங்க தான் போகனும் ஏனேன்ட நம்ம மாமனார் அப்படியாக்கும் என்ட தெருகோடி அப்படி இப்படி தான் இருக்கும் கண்டு கொள்ள கூடாது என்ன... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ட காதலி "யாழ்களம்" தான் பாருங்கோ இப்ப அவாவின்ட அப்பா வந்து கையில கத்தியோட "நன்ன தமிழ் தெரிந்தா தான்" இந்த பக்கம் வரணும் என்று சொல்லி போட்டார்

:D:unsure::lol::lol:

  • தொடங்கியவர்

அட..குருவே எப்படி உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது..(என்னால முடியலையே) ..என்றாலும் புள்ளி நிறுவனம் அந்த மாதிரி இருக்கு ஒரு சிறு புள்ளியிள தான் வாழ்க்கையெ ஆரம்பிக்குது என்பதிற்கு உங்கன்ட புள்ளி நிறுவனம் தான் எடுத்து காட்டு பாருங்கோ..

நன்றி! உங்களுக்கும் உளம்கனிந்த வாழ்த்துகள்!

கடந்த மூன்று நாட்களில எனது புள்ளி நிறுவனத்துக்கு 1000 ற்கும் மேற்பட்ட வெவ்வேறு கணணிகளில இருந்து வாசகர்கள் வந்து இருக்கின்றர்கள்.

நாம் தொடர்ந்து ஆக்கங்கள் படைத்து மக்களை மகிழ்விப்போம் - ENTERTAIN செய்வோம்.

:lol:

நிலா அக்கா என்ன சிரிப்பு..( :unsure: தம்பியை ஆசிர்வாதம் பண்ணுவோம் என்டு இல்ல)..நன்னா இல்ல சொல்லிட்டன் :lol: முதலில என்னை ஆசிர்வதியுங்கோ..(அட பதினாறும் பெற்று ஆசிர்வதித்து போடாதையுங்கோ உது ஆசிர்வாதம் இல்ல)... :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றி! உங்களுக்கும் உளம்கனிந்த வாழ்த்துகள்!

கடந்த மூன்று நாட்களில எனது புள்ளி நிறுவனத்துக்கு 1000 ற்கும் மேற்பட்ட வெவ்வேறு கணணிகளில இருந்து வாசகர்கள் வந்து இருக்கின்றர்கள்.

நாம் தொடர்ந்து ஆக்கங்கள் படைத்து மக்களை மகிழ்விப்போம் - ENTERTAIN செய்வோம்.

நன்றி..நன்றி குருவே..(எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் பாருங்கோ :lol: )...பேஷா செய்திடுவோம் என்ன "காற்றிற்கு ஏது வேலி நம்மளிற்கு ஏது பூட்டு" என்ன குருவே :lol: ..அது சரி குருவே நாம எழுதினதை இருந்து போட்டு எடுத்து வாசிக்கும் போது நாமளா இப்படி எல்லாம் எழுதினாங்க என்ட மாதிரி இருக்கு உங்களுக்கு அப்படி ஏதாச்சும் அநுபவம் இருக்கோ??.. :D

அப்ப நான் வரட்டா!!

நிலா அக்கா என்ன சிரிப்பு..( :rolleyes: தம்பியை ஆசிர்வாதம் பண்ணுவோம் என்டு இல்ல)..நன்னா இல்ல சொல்லிட்டன் :( முதலில என்னை ஆசிர்வதியுங்கோ..(அட பதினாறும் பெற்று ஆசிர்வதித்து போடாதையுங்கோ உது ஆசிர்வாதம் இல்ல)... :D

அப்ப நான் வரட்டா!!

:unsure: தெருக்கோடியில் பத்தோடு பதினொன்றாக எழுதி பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளோடு கூடிய பதிவுகளை இடுமாறு ஆசீர்வாதம் செய்கிறேன். இப்ப சந்தோசமா பேபி :wub:

:unsure: தெருக்கோடியில் பத்தோடு பதினொன்றாக எழுதி பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளோடு கூடிய பதிவுகளை இடுமாறு ஆசீர்வாதம் செய்கிறேன். இப்ப சந்தோசமா பேபி :wub:

சா..சா அங்க எல்லாம் எழுத மாட்டன் நாம உங்க தான் எழுதுவோம் :rolleyes: ..(ஆனா உங்க வெட்டினா மட்டும் அங்க பாதுகாப்பா இருக்கும்)..உது தெரியாதா..ம்ம் ஆசிர்வாததிற்கு நன்றி.. :(

அப்ப நான் வரட்டா!!

சா..சா அங்க எல்லாம் எழுத மாட்டன் நாம உங்க தான் எழுதுவோம் :unsure: ..(ஆனா உங்க வெட்டினா மட்டும் அங்க பாதுகாப்பா இருக்கும்)..உது தெரியாதா..ம்ம் ஆசிர்வாததிற்கு நன்றி.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:( என்னமோ வெட்டுப்படுங்கோ. எப்படி என்றாலும் பாதுகாப்பாக தெருக்கோடியில் இருந்தா சரிதான் பாருங்கோ :rolleyes: ஏன்னா பிற்காலத்தில் உங்கள் திறமையை வாறவாக்கு காட்டலாம் எல்லோ

  • தொடங்கியவர்

நன்றி..நன்றி குருவே..(எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் பாருங்கோ :unsure: )...பேஷா செய்திடுவோம் என்ன "காற்றிற்கு ஏது வேலி நம்மளிற்கு ஏது பூட்டு" என்ன குருவே :wub: ..அது சரி குருவே நாம எழுதினதை இருந்து போட்டு எடுத்து வாசிக்கும் போது நாமளா இப்படி எல்லாம் எழுதினாங்க என்ட மாதிரி இருக்கு உங்களுக்கு அப்படி ஏதாச்சும் அநுபவம் இருக்கோ??.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஓம் நான் எழுதுறதுகள நான் திரும்பவும் வாசிச்சு எனக்கு அனுபவம் இருக்கிது. நான் எழுதுறத நானே வாசிச்சு பார்க்காட்டிக்கு எப்பிடி மற்ற ஆக்கள் வாசிப்பீனம்.

நான் ஒவ்வொரு முறையும் எழுதும்போது விடுகின்ற தவறுகளை நான் அடுத்தமுறை எழுதும்போது விடாமல் இருக்கிறதுக்கு இது உதவும்.

இதுமாதிரி நான் பாடினதுகளையும் நான் திரும்பவும் திரும்பவும் அடிக்கடி கேட்டுப் பார்ப்பன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.