Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட பகுத்தறிவுக்கு நாங்கள் இறந்தாப்பிறகு எங்கட பிணங்களை இப்பிடிச் செய்யுறதுதான் சரியா இருக்கிது..!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

திரும்பவும்.... சுடலை... பிணம் எண்டு கதைக்கவேண்டி வந்திட்டிது. கோவிக்காதிங்கோ. எல்லாரும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறது. நானும் முன்னுக்கு இருந்து பின்னுக்கு யோசிக்கிறதுதான். ஆனால்... சிலவேளைகளில பின்னுக்கு இருந்தும் முன்னுக்கு யோசிக்கிறது.

இப்ப எல்லாரும் பகுத்தறிவு, பகுத்தறிவு எண்டு பகுத்தறிவு பற்றி கதைக்கிறீனம். அதாவது கண்மூடிப் பழக்க வழக்கங்கள் எண்டு சிலதுகள் இருக்கிது. அதுகள்பற்றி கதைக்கிறீனம். எல்லாரும் முந்தி இருந்து செய்யுறீனம் எண்டுறதுக்காக நாங்களும் சில விசயங்களை அப்பிடியே செய்யுறம். இது சரியானதா?

நியூட்டன் அவர்கள் அப்பிள் பழம் விழேக்க அது மேலபோகாமல் ஏன் கீழ வருகிது எண்டு தன்னப்பார்த்து ஒரு கேள்வி கேட்டு இருந்தார். இதுமாதிரித்தான் நானும் ஒரு சிந்தனை செய்து இருக்கிறன். ஆனால் இது அப்பிள் பழம் பற்றினது இல்ல.... பிணம் - இறந்த உடல்கள் பற்றியது...

எண்ட மில்லியன் டொலர் கேள்வி என்ன எண்டால்... செத்தாப்பிறகு பிணங்களை - இறந்த உடல்களை - புதைக்கும்போது ஏன் கிடையாகப் படுக்கவச்சு புதைக்கவேண்டும் எண்டுறது.. ஏன் நிலைக்குத்தாக ஒரு குழி கிண்டி புதைக்க ஏலாதோ?

இப்ப பாருங்கோ இறந்த உடல்களை கனடாவில சவக்காலையில புதைக்கிறது எண்டால் சரியான காசு. கையில சுமார் ஐயாயிரம் தொடக்கம் பதினையாயிரம் டொலர் காசு சொச்சம் வேணும் இறந்த உடலை ஒரு இடத்தில புதைக்கிறதுக்கு. ஒரு இறந்த உடலை கிடையாக படுக்கவச்சு புதைக்கிறதுக்கு ஆறு அடி நீளமும் மூண்டு அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பு வேணும்.

எண்ட வழிமுறையின்படி பார்த்தால் ஆறு அடி நீளமும், மூண்டு அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில ஒன்றுக்கு பதிலாக மூன்று பிணங்களை புதைக்கமுடியும். எப்பிடி எண்டு கேட்கிறீங்களோ? பிணங்களை கிடையாக புதைக்காமல் நிலைக்குத்தாக புதைச்சால்...

இப்ப கனடாவில - முக்கியமா நகரப்பகுதிகளில - பிணங்களப் புதைக்க இடம் இல்லை எண்டுற ஒருவிசயம் நிறையப்பேருக்கு தெரிஞ்சு இருக்காது. ஏன் எண்டால் எல்லா இடத்திலையும் பிணங்களை புதைக்க ஏலாது. அரசாங்க அனுமதி பெற வேணும், மற்றது கையில காசும் வேணும்.

நீங்கள் சொல்லலாம் அது எப்பிடி நிலைக்குத்தாக புதைக்கிறது... அப்பிடி எண்டால் புதைகுழியை ஆழமாகக் கிண்டவேண்டி வருமே எண்டு. ஏன் இந்த நவீன உலகத்தில ஆழமாக குழி கிண்டுறது கடினமான ஒரு விசயமோ? இல்லத்தானே? மற்றது ஆழமாக் கிண்டினால் தண்ணி வருமே எண்டு நீங்கள் கவலைப்படக்கூடாது. இறந்த பிணங்களுக்கு வாயுக்கு பால் ஊத்துறீங்கள்.. பிணங்களுக்கு தண்ணி தெளிக்கிறீங்கள்.. இறந்த பிணங்களை எரிச்சபிறகு் கங்கையில கொண்டுபோய் அஸ்தியக் கரைக்கிறீங்கள். அப்பிடி எண்டால் பிணத்த நிலத்தில நிலைக்குத்தாக புதைக்கேக்க அதிண்ட காலில தண்ணி படுறது நல்ல விசயம் தானே?

இவ்வளவும் இல்ல... இன்னும் இருக்கிது...

அது ஏனுங்கோ எல்லாரும் செத்தாப்பிறகு பிணங்கள கிடையாக படுக்க வைக்கிறீங்கள்? ஏன் பிணத்தை நிலைக்குத்தாக கிடத்தினால் நிக்காதோ? நிலைக்குத்தாக கிடத்தினால் அஞ்சலி செலுத்துவதற்கும் வசதியாகவும் இருக்குமே? ஓம் பிறகு நீங்கள் கேட்பீங்கள் தானே அப்பிடி எண்டால் எப்பிடி தூக்கிறது எண்டு... சவப்பெட்டிகளையும் நிலைக்குத்தாக கிடத்துவதற்கு ஏற்ற முறையில மாற்றி வடிவமைக்கலாம்.. சவப்பெட்டியை காவும்போது மட்டும் கிடையாகத் தூக்கிக் காவலாம்.

எல்லாரும் ஆளுக்கு ஆள் பகுத்தறிவு எண்டுற பெயரில என்னமோ என்னமோ எல்லாம் பூராயம் சொல்லுறீனம். அதான் நானும் எண்ட பகுத்தறிவைப் பாவிச்சு கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு இருக்கிறன். இத வாசிச்சுப்போட்டு பிறகு என்னை ஒரு மாதிரிப் பாக்காதிங்கோ..

நான் சொன்ன விசயம் சிம்பிளானது. எனது சிந்தனையை நடைமுறை வாழ்வில பிரயோகம் செய்யுறதுக்கு ரெண்டே ரெண்டு மாற்றங்கள்தான் தேவைப்படுகிது.

1. சவப்பெட்டியிண்ட வடிவமைப்பை மாற்றி அமைக்கவேணும்.

2. ஆழமாக புதைகுழியை தோண்ட வேண்டும்..

ஆராய்ச்சிகள் தொடரும்...

அனைவருக்கும் நல்லிரவு! நன்றி! வணக்கம்!

பி/கு: நான் செத்தாப்பிறகு என்னை இப்படி நிலைக்குத்தாக நிறுத்தி அஞ்சலி செலுத்தலாமோ... நிலைக்குத்தாக என்னை புதைக்கலாமோ எண்டு நீங்கள் உங்கட மனதுக்க கேட்கிறது விளங்கிது. ஓம் தாராளமாச் செய்யலாம். எனக்கு இறந்தபிறகு கிடையாக படுத்து இருக்கிறதைவிட நிலைக்குத்தாக எழும்பி நிற்கிறதுதுதான் வசதி! ஹாஹா..

Edited by முரளி

உங்கட ஆராய்ச்சி நல்லாதான் இருக்கு ஆனால் இப்படியான ஆராய்ச்சிகள இரவில செய்யாதீங்கோ

நி;திரை கொள்ளுற நேரத்தில கண்டதெல்லாம் கனவில வந்து துலையப்போகுது

பகல்ல செய்யுங்கோ

எரிச்சிட்டா எல்லா பிரச்சினையும் சுலபமா முடிஞ்சிருமெல்லோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிச்சம் வாசிக்க எதுக்கு அங்கை போகணும் ? இனி வரும் நபர்கள் இங்கேயே படியுங்கள் -

ஆதாரம் : http://www.ybrate.com/thought9.html

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் வாசிக்க இஞ்ச அழுத்துங்கோ :rolleyes::lol: . செய்தியை முழுமையாக போட வேண்டியது தானே முரளி. பிறகென்ன தொடுப்பு?

நன்றி காவடி.

  • தொடங்கியவர்

நல்லது காவடி... இப்படி தினமும் வரும் புதினம்.. மற்றும் மற்றைய கள உறவுகள் இணைக்கும் சுருக்கமான செய்திகளுக்கும்... அவற்றை முழுமையாக இணைத்துவிட்டு ஆதாரம் என்று போட்டால் நன்றாக இருக்கும்.

இதே மாதிரி... நானும் புதினம் செய்திகளை முழுவதுமாக இணைத்துவிட்டு நீங்கள் கேட்டதுபோல்

மிச்சம் வாசிக்க எதுக்கு அங்கை போகணும் ? இனி வரும் நபர்கள் இங்கேயே படியுங்கள் -

என்று போட்டுவிடவா?

மற்ற ஆக்கள் செய்யேக்க கண்ணுக்க குத்த இல்ல... அதையே இப்ப நான் செய்யேக்கதான் உங்கள் எல்லாருக்கும் கண்ணுக்க குத்துதுபோல... வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இங்க தொடுப்பு கொடுக்கவே நிறைய பேர் இருக்கினம் :rolleyes:

இதால எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது

நிலைக்குத்தா தாக்கிறதால கொஞ்சம் இடத்தை மிச்சப்படுத்தலாம்.....

நிறைய பேர புதைக்க வசதியா இருக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லலாம் அது எப்பிடி நிலைக்குத்தாக புதைக்கிறது... அப்பிடி எண்டால் புதைகுழியை ஆழமாகக் கிண்டவேண்டி வருமே எண்டு. ஏன் இந்த நவீன உலகத்தில ஆழமாக குழி கிண்டுறது கடினமான ஒரு விசயமோ? இல்லத்தானே? மற்றது ஆழமாக் கிண்டினால் தண்ணி வருமே எண்டு நீங்கள் கவலைப்படக்கூடாது. இறந்த பிணங்களுக்கு வாயுக்கு பால் ஊத்துறீங்கள்.. பிணங்களுக்கு தண்ணி தெளிக்கிறீங்கள்.. இறந்த பிணங்களை எரிச்சபிறகு் கங்கையில கொண்டுபோய் அஸ்தியக் கரைக்கிறீங்கள். அப்பிடி எண்டால் பிணத்த நிலத்தில நிலைக்குத்தாக புதைக்கேக்க அதிண்ட காலில தண்ணி படுறது நல்ல விசயம் தானே?

ஊரில வாழைக்கு அதரெடுத்து குலை வெட்டின வாழையை தாழ்க்கிற மாதிரி... சின்ன கிடங்கா வெட்டிட்டு வாழையை சில்லு சில்லா வெட்டுற மாதிரி பொடிய வெட்டினா இன்னும் சின்ன இடம் காணுமே. :lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித இனத்தையே சிந்திக்கத்தூண்டும் இந்த அதி உன்னத கட்டுரையை இணைத்த காவடிக்கு மனமாந்த நன்றிகள்(இப்போது நேரம் 14.52 P.M கிங்குடா அண்ணன் கிங்குடா என்ற பாட்டு சண் ரிவியில் போகின்றது கேட்க,பார்க்க நன்றாக இருக்கின்றது) :unsure:

அட..அட எப்படி இப்படி எல்லாம் குருவே..(ஆனா மில்லியன் டொலருக்கான கேள்வி அந்த மாதிரி இருக்கு :) )..நிசமா என்னால முடியல்ல :D ..இப்ப எனக்கு கூட ஒரு சந்தேகம் வந்திட்டு யாரும் தீர்த்து வையுங்கோ "செத்தா" பிறகு எரிப்பீனம் அல்லோ அப்ப சுடாதோ உண்மையா இந்த சந்தேகம் எனக்கு பல நாளா இருக்கு :D ஆனா யாரிட்டையும் கேட்கிறதில்ல பிறகு என்னை ஒரு மாதிரி நினைத்து போட்டீனம் என்றாலும் என்று போட்டு..

ஆனா இப்ப குரு உந்த கேள்வியை கேட்க நேக்கு பழையபடி அந்த ஞாபகம் வந்திட்டு....(யாரும் ஏசி போடாதையுங்கோ என்ன)..முடிந்தா என்ட சந்தேகத்தை தீர்த்து வையுங்கோ என்ன.. :)

சரி எனி குருவின்ட விசயதிற்கு வருவோம் என்ன இப்ப பிணங்களை கிடையாக புதைப்பதால் ஒன்னு இடபற்றாகுறை மற்றது காசு செலவாகுது என்று சொல்லுறீங்க என்ன குருவே யோசிக்க வேண்டிய விசயம் தான் உங்களின்ட நிலைகுத்து யோசனை நன்னா தான் இருக்கு பாருங்கோ.. :unsure:

ஆனா பாருங்கோ நிற்க வைத்து புதைத்து போட்டு போனா பிறகு எத்தனையோ நாளைக்கு நாம தான் நிற்கனும் பாருங்கோ..(கால் எல்லாம் நோகுமோ )..யாருக்கு தெரியும் அத விட படுக்க வைக்கிறது "பெட்டர்" என்று நினைக்கிறன் நீங்க இதை பற்றி என்ன நினைக்கிறீங்க...நிம்மதியா படுத்திருக்கலாம் நன்ன கனவு எல்லாம் காணலாம் உதை விட்டு போட்டு நிற்கிறது என்றா எப்படி இருக்கும் ஆனபடியா வேற ஏதாவது யோசிப்போம் என்ன குருவே.. :unsure:

இப்ப நிலத்தில வீணா இடம் போகுது என்றா இப்படி செய்யலாம் பாருங்கோ...சின்ன துண்டு காணி வாங்கி அடுக்கு மாடி கட்டிடம் போல..(பிளாட்ஸ்)..போல சின்ன சின்னதா பெரிசா ஒரு தொடர்மாடியை கட்டி போட்டு ஒரு ஒவ்வொரு அறையிலையும் குடும்பத்தில இருக்கிற அத்தனை பேரையும் படுக்க வைக்கிற மாதிரி ஏற்பாடு செய்தா என்ன..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்). :) .

இப்படி செய்ய போனா இடம் வந்து வீணா போகாது..(குடும்பத்தில இருக்கிற எல்லாருக்கும் ஒரு அறை என்கின்ற போது காசும் பெரிதா வராது என்னு நினைக்கிறன்)..இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க குருவே?? :wub:

வேண்டும் என்றா இந்த திட்டத்தை நாங்க இரண்டு பேரும் அறிமுகபடுத்தி நன்னா காசு உழைக்கலாம் உங்களுக்கும் உந்த "ஜடியா" சரியா பட்டா பேசாமா "முரளி அடுக்கு மாடி பிண கட்டிடம்" என்று ஒன்றை தொடங்குறது தானே ...(இந்த திட்டத்தை இரகசியமா வைத்து கொள்ளுங்கோ)..பிறகு யாரும் நம்ம திட்டத்தை அபேஷ் பண்ணிடுவீனம் பாருங்கோ...

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது...(இப்பவே நீங்களும் உங்கள் பதிவுகளுக்கு முந்துங்கள் சில அறைகள் மட்டுமே உள்ளன)...அட நன்னா இருக்கே விளம்பரம்..குருவே இந்த திட்டத்தை நாம சர்வதேச அளவிள வியாபிப்போம் என்ன.. :wub:

அட..உப்படி எல்லாம் கதைச்சிட்டன் இன்னைக்கு எப்படி தான் தனிய படுக்க போறனோ ஆண்டவனுக்கு தான் தெரியும் பாருங்கோ..(சஷ்டியை நோக்க சரவண பவனார்).. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா இன்றைய சனம் நாளைய பிணம் இதை உணருமா மனம்"

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..அட எப்படி இப்படி எல்லாம் குருவே..(ஆனா மில்லியன் டொலருக்கான கேள்வி அந்த மாதிரி இருக்கு :unsure: )..நிசமா என்னால முடியல்ல :) ..இப்ப எனக்கு கூட ஒரு சந்தேகம் வந்திட்டு யாரும் தீர்த்து வையுங்கோ "செத்தா" பிறகு எரிப்பீனம் அல்லோ அப்ப சுடாதோ உண்மையா இந்த சந்தேகம் எனக்கு பல நாளா இருக்கு :D ஆனா யாரிட்டையும் கேட்கிறதில்ல பிறகு என்னை ஒரு மாதிரி நினைத்து போட்டீனம் என்றாலும் என்று போட்டு..<<<

ஜம்மு,,,நீங்க மிகப்பெரும் புத்திசாலி, நிறைந்த மனிதாபிமானம் உள்ளவர், :wub: இந்த அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டால்.."பாவம் பதில் தெரியாதவை ஒரு மாதிரித்தானே பார்ப்பினம் :)

ஆனா பாருங்கோ நிற்க வைத்து புதைத்து போட்டு போனா பிறகு எத்தனையோ நாளைக்கு நாம தான் நிற்கனும் பாருங்கோ..(கால் எல்லாம் நோகுமோ )..யாருக்கு தெரியும் அத விட படுக்க வைக்கிறது "பெட்டர்" என்று நினைக்கிறன் நீங்க இதை பற்றி என்ன நினைக்கிறீங்க...நிம்மதியா படுத்திருக்கலாம் நன்ன கனவு எல்லாம் காணலாம் உதை விட்டு போட்டு நிற்கிறது என்றா எப்படி இருக்கும் ஆனபடியா வேற ஏதாவது யோசிப்போம் என்ன குருவே.. :unsure: <<<

அதுசரி வாழ்நாள் பூரா நின்று நின்றே அலுத்துப்போனவையளுக்கு "படுக்கைதான் நிம்மதி!! அதுக்கும் உலை வைச்சுப்போடாதீங்கோ :))

:அட..உப்படி எல்லாம் கதைச்சிட்டன் இன்னைக்கு எப்படி தான் தனிய படுக்க போறனோ ஆண்டவனுக்கு தான் தெரியும் பாருங்கோ..(சஷ்டியை நோக்க சரவண பவனார்).. :wub: <<

காக்க!!காக்க! கனகவேல் காக்க

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப்பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்"...

இப்படியே சொல்லிக்கொண்டு படுங்கோ ஜம்மு...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா இன்றைய சனம் நாளைய பிணம் இதை உணருமா மனம்"<<<

ஜம்மு தத்துவம் என்று ஒரு தலைப்புத் தொடங்க வேண்டும்...கலக்குறீங்கள் :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Thamilthangai

முரளி

சுவிஸ் வரட்டா என்று கேட்ட போது

தாராளமா என்றேன்.

இப்ப கொஞ்சம் பயமா இருக்கு.......... :unsure:

வந்து போறதுக்குள்ள

என்னையும் நிப்பாட்டி வச்சுட்டு போயிடுவாரோ என்றுதான்? :unsure:

செத்த பிறகு

நம்ம என்ன எழும்பியா பார்க்க போறோம்.

கவலைப்படாம

உயிலை யார் பேரிலையாவது எழுதி வைங்கோ!

அதை எடுக்க வாறவங்கள்

உங்கள் கடைசி காரியத்தை நல்லா முடிப்பாங்க :wub:

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா பயப்படாதிங்கோ... நான் அப்பிடி எல்லாம் செய்யமாட்டன்.

கருத்துச்சொன்ன சிவா அண்ணை, சபேஸ், தமிழ்தங்கை, மற்றும் இணைப்பு கொடுத்த காவடி அதை ஆமோதித்த நுணாவிலானுக்கு நன்றிகள்...

கு.சா அண்ணா... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. நீங்கள் தந்த உற்சாகமும்தான் என்னை இப்படி எல்லாம் எழுத வைக்கின்றது. யாழில் நான் இணைந்தபோது முதலாவது பதில் கருத்து எழுதி என்னை முதலாவதாக வரவேற்றத்ததே நீங்கள் தானே.. எண்டபடியால் இந்த அரிய கண்டுபிடிப்பை உங்களுக்கே சமர்ப்பணம் செய்கின்றேன். ஹிஹி..

ஒரு கருத்தின் - சிந்தனையின் பெறுமதி உங்களுக்கு புரிந்து இருப்பது மகிழ்ச்சி தருகின்றது... (இதற்காக மற்ற ஆக்களுக்கு புரியவில்லை எண்டு நான் சொல்லுறதாக தப்பாக நினைக்க வேண்டாம்..)

மற்றது யமுனா... நீங்கள் சொன்னதும் சிறந்த ஒரு ஐடியாதான்...

நாங்கள் சிலது சொல்லேக்க சிரிக்கிறம்.. ஆனால் அதையே வெள்ளைக்காரன் செய்முறையில செய்து காட்டேக்க... அதையே வெள்ளைக்காரன் வியாபாரமாகச் செய்யேக்க வாயில கை வைக்கிறம்.

நான் சொன்னவிசயம் கூட வியாபார ரீதியாக வெற்றி தரக்கூடிய ஒரு விசயம் எண்டுறது உண்மை.

மேலும்...

உங்களில எத்தின பேருக்கு சவப்பெட்டி செய்யுறது, FUNERAL SERVICES மிகப்பெரும் காசு தருகின்ற வியாபாரம் எண்டுறது தெரியுமோ தெரியாது. பிணங்களுடன் கையாள நேர்ந்தாலும் இந்த வகை யாவாரங்கள் மில்லியன் கணக்கில் காசை அள்ளித்தரும்..

கடைசியாக...

யேசுநாதருக்கு மக்கள் இறந்தபின் அஞ்சலி செலுத்தேக்க அவர் எழுந்துதானே நின்றார்? படுத்தா இருந்தார்? எனக்கு தெரியாது..

ஒரு வீரனை படுக்கவைத்து புதைகுழியில் விதைப்பதைவிட எழுந்து நிற்கத்தக்கதாக புதைகுழியில் விதைத்தால் அது கூடிய அர்த்தம் உடையதாய் இருக்கும் எண்டு நான் நினைக்கிறன்..

நான் இறக்கும்போது - இறந்தபின் என்னை புதைப்பதாக இருந்தால் நான் நிச்சயம் எனது வழிமுறையிலேயே எனது செத்தவீட்டை செய்யுமாறு எனது உயிலில் எழுதி வைப்பேன்.

தவிர... பிரத்தியேகமாக எழுந்து நிற்கக்கூடிய வகையில் கண்ணாடிப் பெட்டியினாலான சவப்பெட்டியையும் உருவாக்குவேன். (நான் புதைக்கப்படுவதாய் இருந்தால்..)

Edited by முரளி

புதைக்்கத்தானே போறாங்க.. பிறகு ஏன் கண்ணாடியிலான சவப் பெட்்டி? பூச்சி, பூரான், மண்புழு எல்லாம் மண்ணுக்்கடியில் அருந்து அந்த அவலட்வணத்தை.. மன்னிக்கவும்.. சவலட்சணத்தைப் பார்த்து இரசிக்கவா?

முரளி! இந்த ஐடியா முழுக்க முழுக்க உங்களது அல்ல.. ஏற்னெவே ஊரில்.. சவத்தை சுடுகாட்டுக்கு எடுத்துப் போகும் பாடையில்.. கதிரையில் இருத்திவைத்து, குடை எல்லாம் கட்டி கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்.. அதிலிருந்து பிறந்த ஐடியா என நினைக்கிறேன்்.. :o

  • தொடங்கியவர்

சரி சோழியன் அங்கிள் எனக்கு எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு கிடைத்தால் அதை ஊரில் உள்ள மக்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

உங்க கல்லறையை எத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்று தெரியாது..! ஆனா இங்க ஒரு 50 வருசம் கழிச்சு.. அதை இட்டிச்சு.. மிச்சங்களை எரிச்சு.. அதுக்கு மேல் பிளாட் கட்டினவங்க..! எனென்டால் நிலப்பற்றாக்குறை..!

ஆகவே.. பேசாமல் இறந்தாப்புறம் எரிச்சா யாருக்கும் எந்தப் பிரச்ச்சினையும் இல்லை..!

  • தொடங்கியவர்

ஆமா இங்க தொடுப்பு கொடுக்கவே நிறைய பேர் இருக்கினம் :o

இதால எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது

நிலைக்குத்தா தாக்கிறதால கொஞ்சம் இடத்தை மிச்சப்படுத்தலாம்.....

நிறைய பேர புதைக்க வசதியா இருக்கும் :huh:

:lol: நீங்களாவது என்னப் போட்டுத் தாக்காமல் இருக்கிறது சந்தோசமா இருக்கிது பித்தன்..

உங்க கல்லறையை எத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்று தெரியாது..! ஆனா இங்க ஒரு 50 வருசம் கழிச்சு.. அதை இட்டிச்சு.. மிச்சங்களை எரிச்சு.. அதுக்கு மேல் பிளாட் கட்டினவங்க..! எனென்டால் நிலப்பற்றாக்குறை..!

ஆகவே.. பேசாமல் இறந்தாப்புறம் எரிச்சா யாருக்கும் எந்தப் பிரச்ச்சினையும் இல்லை..!

ஓம் லீ எரிச்சால் ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனால் சுடும்போது நோகாதோ?

ஓம் லீ எரிச்சால் ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனால் சுடும்போது நோகாதோ?

அது உயிரோடு எரித்தால்... பிறகு நீங்க கம்பிதான் எண்ணவேணும்..!

இங்கு சுவிசில் கூட பல இடங்களில் தற்போது பிரேதத்தை எரித்துவிட்டு நினைவிற்காக ஒரு சிறிய கல்லில் இறந்தவரின் சிறு விபரங்களை ( பெயர், பிறந்த திகதி, இறந்த திகதி போன்றன ) எழுதி நட்டு விடுகின்றார்கள். இப்படிச் செய்வதே சரியாக எனக்குப் படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிப்பதுதான் சுகாதாரம். மண்ணில் இருந்து வந்த உயிர் மண்ணோடு மண்ணாக வேண்டும். விரும்பினால் நம் இறந்த உடலைத் தானமாக்கலாம்..

இறந்த பின்னராவது மத்தவங்களுக்கு பிரச்சனை தராமல் இருக்கிற ஒரு முறையை பின்பற்ற வேண்டியது தான் ;)

ஊரில வாழைக்கு அதரெடுத்து குலை வெட்டின வாழையை தாழ்க்கிற மாதிரி... சின்ன கிடங்கா வெட்டிட்டு வாழையை சில்லு சில்லா வெட்டுற மாதிரி பொடிய வெட்டினா இன்னும் சின்ன இடம் காணுமே. :huh::o

உங்கடை சிந்தனை சரிபோலதான் இருக்கு!!! ஆனால் விஞ்ஞானம் இரட்டை வேகத்தில போறதால அடக்கம் பண்ண லேசான வழியை இப்ப பார்க்கிறார்கள்...இல்லையா?

ஜம்மு,,,நீங்க மிகப்பெரும் புத்திசாலி, நிறைந்த மனிதாபிமானம் உள்ளவர், இந்த அறிவுபூர்வமான கேள்வியைக் கேட்டால்.."பாவம் பதில் தெரியாதவை ஒரு மாதிரித்தானே பார்ப்பினம்

அட..தமிழ் தங்கை அக்கா கண்டு கனகாலம்.. :D (கடசியா இப்படி ஒரு தலைப்பிலையா சந்திகனும்)...ம்ம் வாங்கோ அக்கா எப்படி சுகம் எல்லாம்??.. :D

தமிழ் தங்கை அக்கா எனக்கு அழுகையே வந்திட்டு என்றா பாருங்கோவன்..(உங்களுக்கு தான் ஜம்மு பேபியை பற்றி நன்னா தெரிந்திருக்கு :D )..என்ன போய் புத்திசாலி,மனிதாபிமானம் உள்ளவர் என்று எல்லாம் சொல்லி போட்டியள் அது தான் பாருங்கோ... :D

அட அப்ப பதில் தெரியாத ஆட்கள் தான் ஒரு மாதிரி பார்க்கிறவை என்ன சா..சா உந்த விசயம் நேக்கு உவ்வளவு நாளும் தெரியாம போயிட்டே... :D (எப்பவுமே கேள்விகளை கேட்டு போடலாம் பதில்கள் கிடைப்பது தான் கஷ்டம் என்னு சொல்லுங்கோ :D )..

அதுசரி வாழ்நாள் பூரா நின்று நின்றே அலுத்துப்போனவையளுக்கு "படுக்கைதான் நிம்மதி!! அதுக்கும் உலை வைச்சுப்போடாதீங்கோ

ம்ம்..நீங்க சொல்லுறதும் சரி தான்..(வாழ்நாள் பூரா யாருக்காகவும் காத்திருந்து அலுத்து போனவையள் அங்கையாச்சும் போய் ஒழுங்கா படுகட்டும் என்ன)..அச்சோ..அச்சோ... :D

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசரும்"...

அட..நன்னா இருக்கே அது தான் "கந்தசட்டி கவசத்தை" சொன்னனான் பாருங்கோ..(அதில ஒரு வரியை மாற்றுவோம் என்ன)..

"ஜம்மு பேபியை தொடரும்

பிரம்மராட்சரும் என்னு"

இது எப்படிக்கா இருக்கு...அட அப்படியே படுத்து எழும்பி வந்துட்டன் அல்லோ..(அது சரி நீங்க படுக்கும் போது சஷ்டி கவசம் படித்து போட்டு தான் படுப்பியளோ) :lol: ..நான் வந்து "முன்பே வா என் அன்பே வா" என்று படித்து கொண்டு தான் படுக்கிறனான் அல்லோ.. :D

ஜம்மு தத்துவம் என்று ஒரு தலைப்புத் தொடங்க வேண்டும்...கலக்குறீங்கள்

அட...தமிழ் தங்கை அக்காவே தொடக்கிவிடுறது ஜம்மு பேபியின் யாழ்கள குருக்களிள் தாங்களும் ஒருவா அல்லோ..(ஜம்மு பேபி தவழும் போது அன்பான கண்டிபுடன் சொல்லி தந்த பாடங்களை மறக்கமுடியுமோ).. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.