Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு. இருவர் பலி

Featured Replies

வெள்ளவத்தையில் சற்றுமுன் குண்டொன்று வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Blast in Wellawatte

Blast in Wellawatte...Await details

Three injured in explosion

At least three people were injured following a minor explosion along the Galle road in Wellawatte a short while ago. Initial reports suggest the blast was caused by a hand grenade.

ஆதாரம் Dailymirror

Edited by ஔவையார்

ஓ..அப்படியோ பாட்டி..வெள்ளவத்தை (Arpico) நிறுவனதிற்கு அருகாமையில் என்டு சொல்லிச்சீனம் எதுக்கும் செய்தி வரட்டும் என்ன..சரி பாட்டி நான் போய் நித்தா கொள்ளுறன் என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

வெள்ளவத்தய் காலி வீதியில் இடம்பெற்ற கிறனேற் தாக்குதலில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்

சற்று நேரத்திற்கு முன் வெள்ளவத்தை ராஜசிங்க வீதியில் குண்டு வெடித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காலிறோட் வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு 10 பேர் காயம் : இருவர் உயிரிழந்தனர்.

31.05.2008 / நிருபர் எல்லாளன்

காலிறோட் வெள்ளவத்தைப் பகுதியில் இன்று கை;குண்டு வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் மின்மாற்றியொன்று வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

- சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

2 killed, 8 injured in Wellwatte blast

[TamilNet, Saturday, 31 May 2008, 16:13 GMT]

Two have been killed and more than 8 injured due to a grenade blast near a bus stop in Rajasinghe Mawatte on Galle Road close to Richard Peries supermarket at 9:00 p.m. Saturday night, according to Wellawatte police.

Sources in Colombo quoting hospital staffs said at least 10 persons have been admitted to the Kalubowila general hospital.

Separately, a transformer exploaded at Grandpass around 8:30 p.m., police in Colombo said.

ஓ அப்படியா சங்கதி முழுவிபரமும் தாருங்கள்..

மன்னிச்சு கொள்ளுங்கள் இந்த தலைப்பை பார்க்காமல் புதிய தலைப்பை தொடங்கிவிட்டேன், மோகன் அண்ணா அதை இதனுடன் இணைத்து விடுங்கள்

2 killed, 8 injured in Wellwatte blast

[TamilNet, Saturday, 31 May 2008, 16:13 GMT]

Two have been killed and more than 8 injured due to a grenade blast near a bus stop in Rajasinghe Mawatte on Galle Road close to Richard Peries supermarket at 9:00 p.m. Saturday night, according to Wellawatte police.

Sources in Colombo quoting hospital staffs said at least 10 persons have been admitted to the Kalubowila general hospital.

Separately, a transformer exploaded at Grandpass around 8:30 p.m., police in Colombo said.

  • தொடங்கியவர்

xbllqq453t5pphitsrdst45cy2.jpg

xbllqq453t5pphitsrdst45zx3.jpg

xbllqq453t5pphitsrdst45dk2.jpg

படங்கள்: Daily Mirror இணையத்தளம்

வெள்ளவத்தையில் கைக்குண்டுத் தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 8 பேர் காயம்- கிராண்ட்பாசில் மின்மாற்றி தகர்ப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:44 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலி வீதி வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் றொலக்சிக்கும் ஹோட்டல் ஒமோகா இன்னிற்கும் இடையில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அண்மையில் உள்ள மருந்தகத்திற்கு முன்பாக இக் கைக்குண்டுத் தாக்குதல் நேற்று சனிக்கிழமை இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றது.

உந்துருளியில் வந்த இருவரே இக் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவரும், காயமடைந்தவருமான ஒருவர் தெரிவித்தார்.

இவரது நண்பர் இத்தாக்குதலில் தலையின் பின்புறத்தில் காயமடைந்த நிலையில் களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிரிழந்துள்ளார்.

ஹோட்டல் றொலக்சில் இரவு உணவுப் பொதியை எடுத்துக்கொண்டு வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே எமக்கு அருகில் குண்டு வெடித்தது என்று சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தெரிவித்தார்.

இக் கைக்குண்டுத் தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்தில் காயமடைந்து களுபோவில மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைச் சேர்ந்த வை.கீதன் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கிராண்ட்பாசிலும் குண்டுத்தாக்குதல்

வெள்ளவத்தை கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற சில விநாடிகளில் கிராண்ட்பாஸ் வீதியில் மின்மாற்றி கபினட் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

குண்டுத்தாக்குதல் மூலமே இந்த மின்மாற்றி வெடித்துச் சிதறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படாத போதும் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவியது.

ஆமர் வீதியில் இருந்து கொஸ்கஸ் சந்திப் பகுதிக்குச் செல்லும் கிராண்ட்பாஸ் வீதியிலேயே இந்த மின்னமாற்றி அமைந்திருந்தது.

சம்பவத்தை அடுத்து இந்த வீதி படையினரால் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தையிலும் கிராண்ட்பாசிலும் நேற்று இரவு இடம்பெற்ற இக் குண்டுத்தாக்குதல்களால் பதற்றமான நிலை நிலவியது.

இதேவேளை இக் குண்டுத்தாக்கதல்களையடுத்து கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான வீதிகளில் சோதனைகளை அதிகப்படுத்தியிருந்த படையினர், பயணிகளின் வாகனங்களை கடுமையான சோதனைகளை நடத்தியதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

களனி பாலத்தில் நடைபெற்ற சோதனைகளால் பல மணிநேரமாக வாகனங்கள் தரித்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

புதினம்

வெள்ளவத்தை, மூதூர் என்று மீண்டும் ஒரு 83 இற்கான சகுனங்கள் தென்படுகின்றன போல?

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை, மூதூர் என்று மீண்டும் ஒரு 83 இற்கான சகுனங்கள் தென்படுகின்றன போல?

சாணக்கியன் மீண்டுமொரு இனகலவரமா? நான் நினைக்கவில்லை. கடத்துதல், பிறகு கொலை செய்து வாவியோ,குளத்திலோ வீசுவது மிக இலகுவானது அரசுக்கு. யாரும் பழி போடவே மாட்டார்கள்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைச் சேர்ந்த வை.கீதன் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கொல்லப்பட்ட மற்றைய நபர், சுந்தர் என அழைக்கப்படும் (50 வயது) மொத்த விற்பனை நிலையமொன்றில் பணிபுரியும் கொள்ளுபிட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியாவார். இவர் பணி முடிவடைந்து, வீட்டிற்கு செல்வதற்காக பஸ்தரிப்பு நிலையத்தில் காத்து நின்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்து.

காயமடைந்த இன்னுமொருநபரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இத்தாக்குதல் பற்றி பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்ற போதும், தெகிவளை தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாகவே, உள்ளுர் பாதாள உலக கும்பல்களால் அல்லது படைகளோடு சேர்ந்து இயங்கும் இனவாதக் கும்பல்களால் தமிழர்களை பொதுவாக குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகவே உணர முடிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த எந்த ஒரு குழுவையும் சாராத பொதுமக்களாவார். ஆனபோதிலும் பொலிசார் இது ஒரு தனிப்பட்ட பகை காரணமான தாக்குதல் சம்பவம் என்ற கோணத்தில் பொதுமக்களை திசை திருப்ப முயல்கின்றனர். இருட்டான நேரத்தில் மக்கள் கூட்டமொன்றில் கைக்குண்டை வீசி பகையாளியை கொல்வது எப்படி என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.