Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பியக்கிண்ணம் 2008 :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியை ஸ்பெயின் வீழ்த்தும். ஜேர்மனி லூத்தர் மாத்தியூ, கிளீன்ஸ்மன், றூடி வொலர் போன்றவர்களின் விளையாட்டோடு பயிற்சியாளர்களாக பெக்கன் பௌவர், றூடி வொலர், கிளீன்ஸ்மன் போன்றவர்களின் பயிற்சியால் பல வெற்றி களங்களை கண்டவர்கள். இம்முறை ஜேர்மனிய பயிற்சியாளர் மிகவும் கேள்விக்குரியவராக உள்ளார்.இதே குழு குரோசியாவிடம் 2---0 என்ற கணக்கில் தோல்வியுற்றமை குறிப்பிட தக்கது.அத்தோடு உலகின் அதிசய நட்சத்திரம் குளோஸ் பெரிதாக ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் ஒன்றையும் சாதிக்கவில்லை. ஸ்பெயின் எந்த வொரு போட்டியிலும் தோல்வியுறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

  • Replies 296
  • Views 27.4k
  • Created
  • Last Reply

இம்முறை பயிற்சியாளராக இருக்கும் லோ 2006 ம் ஆண்டு உலககோப்பையின்போது பயிற்சியாளராக இருந்த கிளிஸ்மேனின் உதவியாளராக இருந்தவர். கிளிஸ்பேன் அதிரடி ஆட்டத்தால் ஜேர்மனியை அரைஇறுதி வரை கொண்டு சென்றார். ஆனால் லோ தற்காப்பு ஆட்டத்தில் தான் ஆர்வம் காட்டுகிறார். ஸ்பெயின் தான் வெற்றி பெறும் என்ற கணிப்பு ஜேர்மனிக்கு மறைமுகமாக உதவலாம். ஏனென்டால் எதிர்பார்ப்பு ஸ்பெயின் மேல். எதிர்பார்ப்பு இல்லாமல் ஜேர்மனி வென்றதற்கு 1974, 1990, உலககிண்ணங்கள் சாட்சி (எதிர்பார்க்கப் பட்ட அணிகள் முறையே 1974 நெதர்லாந்து, 1990 ல் மரடோனாவின் ஆர்ஜென்டைனா)

இங்கிலாந்தின் STEVEN GERRARD போல இன்னும் ஒரு விளையாட்டை தீர்மானிக்க்கும் வீரர் எண்றான் அது ஸ்பெயினின் Cesc Fabregas தான். எனும் அளவுக்கு அற்புதமான வீரர். 21 வயதாகும் இவர் 18வது வயதில் இருந்து இங்கிலாந்தின் Arsenal களகத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

ரஸ்யாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான்காவது கோலை போட்டவர், இரண்டாவது ஆட்டத்தில் David villa 36 நிமிடத்தில் காயம் காரணமாக வெளியேற உள்வந்தவர் அதன் பின்னர்தான் ஆட்டம் சூடும் பிடித்தது. அதோடு இரண்டாம் மூண்றாம் கோல்களுக்கான பந்து பரிமாற்றம் செய்து அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றவர்.

இவர் முதல் அணியில் பங்கு பற்றினால் ஸ்பெயினின் முன்னேறி தாக்கும் ஆட்ட வீச்சு இரட்டிப்பாகும்.

Cesc Fabregas

fabregas_280x390_461571a.jpg

Edited by பொய்கை

ஸ்பெயின் இவரை போட்டியில் இறக்குமிடத்து அவர்கள் 5 மத்திய ஆட்டக்காரர்களுடன் இறங்குவார்கள். பெரும்பாலும் அவர்கள் ஆட்டம் 4 - 5 - 1 அல்லது 4 - 1- 4 - 1 ஆக அமையும். வெபர்காஸை விட ஷாவி, சில்வா, இனிஸ்டா, அலோன்ஸா, சென்னா என்று பஞ்சமே இல்லாமல் சிறந்த மத்திய ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். ரோரஸ் தனி ஒரு முன்னணி ஆட்டக்காரராக இறங்குவார்.

பார்ப்போம் ஜேர்மனி என்ன செய்யப்போகுது என்று..?

ஜேர்மனியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அவர்களின் பலவீனமே கோல் காப்பாளர் "லேமன்" தான். ஏதாவது புதுமையாக செய்யுறன் எண்று எல்லாத்தையும் சொதப்புவார். துருக்கியை மிக இலகுவாக வெண்று இருக்க வேண்டிய ஜேர்மனி இவரின் தவறினால் 2-2 எனும் நிலமைக்கு போனது.

முன்னாள் Arsenal வீரர் ஆகிய இவர் அந்த களக ஆதரவாளர்களை கடைசிக்காலத்தில் நல்லாவே கடுப்படித்தார்.

Jens Lehmann

0005A7E2-E0B4-140F-9A060C01AC1BF814.jpg

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fpn_mix1.jpg

ஜேர்மனி வெண்டால் என்ன ஸ்பெயின் வெண்டால் என்ன எங்களுக்கு ஒண்டும் கிடைக்கப்போறது இல்ல. சரி எல்லாரும் இண்டைக்கு மச்சப்பாருங்கோ நானும் பாத்துப்போட்டு பிறகு எனது வர்ணனைய சொல்லிறன்.

அடிக்கப்படப்போற கோலுகள விட இண்டைக்கு எத்தினபேருக்கு சிவப்பு, மஞ்சள் மட்டைகள் கிடைக்கும், எத்தினபேருக்கு காயங்கள் வரும் எண்டுறத பார்க்கிறதில நான் ஆர்வமா இருக்கிறன். அதிலதான் த்ரில்லிங் இருக்கிது. தற்செயலா ஜேர்மனி தோல்வி அடைஞ்சால் ஒருத்தரும் அழுது கவலைப்படாதிங்கோ என. :D

கு.சா அண்ணை, சோழியன் எல்லாரும் பியர் போத்தலும் கையுமா தயாரா இருப்பினம் போல..

அன்பர்களே அடியார்களே.. மன்னிக்கவும்.. உதைபந்தாட்ட அடியார்களே.. யேர்மனிக்கும் ஸ்பெயினுக்கும் உதைபந்தாட்டம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழியும் நேரத்தில், யேர்மனி மிகவும் திறமையாக விளையாடிக் கொண்டிருக்கிறது. ஊலே.. ஓலே.. ஒலே..

அரகர நம யேர்மனி ஓலே

நம யேர்மனி ஓலே!!!!!!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஸ்பெஜின் தனது முதலாவது கோலைப் போட்டு முன்னணியில் இருக்கிறது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் தான் வெல்லனும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் தான் வெல்லனும்.

எனக்கும் தான். :D

தோல்வி நிலைதனை நெருங்க மனுசன் வாழ்வை வெறுக்கலாமா.. டுயிங்க்.. :D

வழமையாக மற்ற ஆக்களக் காயப்படுத்துற ஜேர்மன் அணித்தலைவர் கண்களில காயம் அடைஞ்சதோட மட்டுமல்லாமல் பாராட்டத் தக்கவகையில மஞ்சள் அட்டையும் வாங்கி இருக்கிறார். :D

உண்மையில ஜேர்மனிய விட ஸ்பெயின் நன்னா விளையாடுது. அருமையான 02 கோலுகள ஸ்பெயின் மிஸ் பண்ணீட்டிது. ஜேர்மன் எருமைமாடுகள் மன்னிக்கவும் வீரர்கள் பந்தை ஒழுங்கா பாஸ் பண்ணி விளையாடுறத காண இல்ல. :D

ஒரு கோல் போட்ட உடன பக்கம் மாறீட்டாங்கடோய்.. முடிவில நாமதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோல் போட்ட உடன பக்கம் மாறீட்டாங்கடோய்.. முடிவில நாமதான்.. :D

என்னைச் சொல்லப்படாது. நான் ஆட்ட ஆரம்பம் முதல் ஸ்பெயின் சப்போட்டர். எனக்கு ஜேர்மனி ஆக்களின்ர திமிர் பிடிக்கிறதில்ல..! :D

இப்பிடிச் சொல்லி ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். :D

முன்னுக்கு உவர் கப்டனுண்ட கண்ணுல ஒழுகிற ரத்தம் ஒழுங்கா நிக்கவேணும். ரெண்டு கண்ணால வடிவாப்பாத்து விளையாடுறதே கஸ்டமா இருக்கிதாம். ஒற்றைக்கண்ணால பாத்து எப்பிடி விளையாடுறது? :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு அணியின் தலைவர்களுக்கும் மஞ்சள் மட்டை,

ஜேர்மன் அணியின் தலைவருக்கு வலது கண்ணில் காயம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கோல் போட்ட உடன பக்கம் மாறீட்டாங்கடோய்.. முடிவில நாமதான்.. :D

அதானே பொறுங்கோ....

இப்பதானே 45 நிமிசம் போயிருக்கு.......

வெல்லுவோம்......................

யெர்மனியா கொக்கா......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோல் போட்ட உடன பக்கம் மாறீட்டாங்கடோய்.. முடிவில நாமதான்.. :D

அப்படி சொல்ல படாது :D யெர்மனி விளையாடுறவையள்ள ஒரு கறுப்பர் கூட இல்லையே. அதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Michael_Ballack_3_Footballpictures.net.jpg

அணித்தலைவர் michael ballack கண்ணில் காயமடைந்தாலும் தொடர்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்பெயின் தான் வெல்லனும்.

எனக்கும் தான். :D

ஸ்பானியன் வெண்டால் உங்களுக்கு ஏதும் லாபம் தலையிலை இடி விழmad0251.gifmad0251.gif

தோல்வி நிலைதனை நெருங்க மனுசன் வாழ்வை வெறுக்கலாமா.. டுயிங்க்.. :D

வழமையாக மற்ற ஆக்களக் காயப்படுத்துற ஜேர்மன் அணித்தலைவர் கண்களில காயம் அடைஞ்சதோட மட்டுமல்லாமல் பாராட்டத் தக்கவகையில மஞ்சள் அட்டையும் வாங்கி இருக்கிறார். :lol:

உண்மையில ஜேர்மனிய விட ஸ்பெயின் நன்னா விளையாடுது. அருமையான 02 கோலுகள ஸ்பெயின் மிஸ் பண்ணீட்டிது. ஜேர்மன் எருமைமாடுகள் மன்னிக்கவும் வீரர்கள் பந்தை ஒழுங்கா பாஸ் பண்ணி விளையாடுறத காண இல்ல. :D

mad0251.gif

யாரை பார்த்து என்ன சொன்னீர்கள்

அப்படி சொல்ல படாது :D யெர்மனி விளையாடுறவையள்ள ஒரு கறுப்பர் கூட இல்லையே. அதுதான்.

அதில கறுப்பன் இல்லாட்டி என்ன? யாழ் களத்தில ஒருத்தர் யேர்மன் பக்கம் இருக்கிறார்தானே.. மேல பாருங்கோ.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதில கறுப்பன் இல்லாட்டி என்ன? யாழ் களத்தில ஒருத்தர் யேர்மன் பக்கம் இருக்கிறார்தானே.. மேல பாருங்கோ.. :D

அது.....

  • கருத்துக்கள உறவுகள்

அதில கறுப்பன் இல்லாட்டி என்ன? யாழ் களத்தில ஒருத்தர் யேர்மன் பக்கம் இருக்கிறார்தானே.. மேல பாருங்கோ.. :D

யாழ்களத்துல்ல இருந்து என்ன பிரயோசனம்.

யேர்மன் பந்தை உருட்டும்போது பயம் தான் எங்கே போட்டு விடுவாங்களோ எண்டு.

ஸ்பெயின் சில்வாவுக்கு சிவப்பு மட்டை காட்டியிருக்க வேணும்.. தலையால பொடோல்ஸ்கிய தாக்கிட்டாான்பா.. இந்த நடுவர் ஸ்பெயினன்காரரனிட்ட துட்டு வாங்கியிருப்பானோ?!! :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.