Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதித் நாராயணனும் தமிழும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதித் நாராயணனும் தமிழும்

எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே!

என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டு டாய்லட்டில் பிரம்மபிரயத்தனம் செய்யும் போது ஏ.ஆர்.ரஹ்மான் ரீரெக்கார்டிங்க் வைத்திருப்பார் போலும். ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் பாவம்.

பிற மாநில பாடகர்களை வைத்து தமிழ்பாடல்களை பாட வைக்கும் போது இசை அமைப்பாளர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும். யேசுதாஸ், சித்ரா, ஹரிஹரன்(?) போன்ற பிற மா நில பாடகர்கள் தம் கடும் உழைப்பால் தமிழர் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டனர். இந்த வரிசையில் ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம் போன்றோரும் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

இப்போ நம் பதிவின் நாயகன், உதித் நாராயண் பத்தி சில வரிகள் சொல்லியே ஆகனும். பல மொழிகளிலும், அவரது தாய்மொழியாம் போஜ் புரியிலும் பல பாடல்கள் பாடி உள்ளார். "மெஹந்தி ரஹா கே ரஹ்னா"வையும், லகானில் வரும் "மிட்டுவா! அரே மிட்டுவா!"வையும் யாராலும் மறக்க முடியாது. எல்லாம் சரி தான்.

இந்த சப்பாத்தி தேசகாரங்களுக்கு 'ச' 'ஸ'காரங்களில் உள்ள வித்யாசம் அவ்ளோ லேசில் வராது. டென் தெளசண்ட் என நாம் சொன்னால் டென் தெளஜண்ட் என அவர்கள் உச்சரிப்பார்கள். என் மீது நம்பிக்கை இல்லையானால் உங்க ஆபிஸில் இருக்கும் ஒரு சப்பாத்தியிடம் (பிகராய் இருத்தல் சால சிறந்தது) வாயை கிண்டி பாருங்கள்.

நமது அண்ணன் உதித் தென்னிந்திய மொழி அனைத்திலும் இப்போ சக்கை போடு போடுகிறார். ரன் படத்தில், "காதல் பிசாசே! ஏதோ சவ்க்யம் பரவாயில்லே!" என இவரின் பாடலை கேட்டு புளங்காகிதமடைந்த தமிழர்கள் ஏராளம். சரி விடுங்க, மாதவனே அப்படி தான் தமிழ் பேசறார், அதான் உதித்தை பாட வெச்ருகாங்க, இல்லையா?னு சமாதானம் சொல்லி கொண்டேன்.

இந்த ஹீரோக்கள் தண்ணீயடித்து விட்டு "ஏரோப்ளேன் பறக்குது பார் மேல"னு ஒரு தத்துவ பாடல் பாடுவார்கள் நம் தமிழ் சினிமாவில். அந்த பாடல்களுக்கு கூப்டுடா உதித் அண்ணனை!னு கோடம்பாக்கம் சிவப்பு கம்பளம் விரித்தது. பின் மெல்ல மெல்ல "சோனியா! சோனியா சொக்க வைக்கும் சோனியா" என டூயட் எல்லாம் உதித் குரலில் நம் ஹீரோக்கள் பாடி ஆடினார்கள். இப்போ என்னடானா மெலடில கூட உதித் அண்ணன்,ஏழரை கட்டையில் பாட ஆரம்பித்து விட்டார்.

எந்த பாடலுக்கு யாரை பாட வைத்தால் அந்த பாடல் சிறப்பாக அமையும்? என திறமையான இசையமைப்பாளருக்கு கணிக்க தெரிய வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு தெரிந்து ராஜா, ரகுமானை விட விஞ்சி நிற்கிறார் என கருதுகிறேன். (ரகுமான் ரசிகர்கள் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நேரிடலாம்).

பல புதிய குரல்களை நமக்கு அறிமுகபடுத்தியதில் ரகுமான் கிங்க் தான். ஆனால் சிவாஜியின் சஹானாவை உதித் அண்ணனுக்கு தாரை வார்த்தது எல்லாம் டூ மச்சோ மச்! ஆமா!

இதே பாடலை, ஒரு மது பாலகிருஷ்ணனோ, ஷ்ரிராம் பார்த்தசாரதிக்கோ ஹரிஷ் ராகவேந்திராவுக்கோ குடுத்து இருந்தால் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள். தமிழில் தான் உதித் அண்ணன் தாண்டவமாடுகிறார் என பார்த்தால் இங்கு கன்னடத்திலும் அண்ணன் பட்டய கிளப்புகிறார் என கன்னட கண்மணிகள் புலம்புகிறார்கள்.

பள்ளி காலங்களில் கோனார் தமிழ் உரைகளை படிக்காத மாணவர்களே இருக்க முடியாது. அதுபோல உதித் நாராயண் தமிழ் உரைனு யாரேனும் கைடு போட்டால் கொஞ்சம் உபயோகமாய் இருக்கும். திரைபடங்களுக்கு தமிழில் பெயர் வைத்து வரிவிலக்கு வாங்குபவர்கள் நல்ல தமிழ் பாடல் உச்சரிப்புக்களில் அசட்டையாக இருப்பது ஏனோ? எனபது புரியாத புதிராகவே உள்ளது.

http://ammanchi.blogspot.com/2008/04/utith-narayan.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழைக் கொலை செய்யும் உதித் நாரயணனின் தென்னிந்தியத் தமிழ் பாடல்களின் உற்சரிப்பு சிறிலங்கா இராணுவத்தினர் தமிழில் கதைப்பது போல இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்தவை

யாரடி மோகினி படத்தில்("யங்கயோ பார்த்தெ மயெக்கம், யெப்போதோ வாழ்ழுந்த நெரக்கம்" ) பாடிய உதித் நாராயணன் பாடலைக் கேட்டுபொங்கி எழுந்த மானமுள்ள ஒரு தமிழன் எழுதியுள்ள ஆதங்க மடல்

உயர்திரு உதித் நாராயண் அவர்களுக்கு,

உங்களுக்கு தமிழ் தெரியாதுதான். இருந்தாலும் இந்தக் கடிதம் தமிழில் எழுதப்படுவதன் காரணம், உங்களுக்கு தமிழ் திரைப்படத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பதைவிட, நான் சொல்ல வருவது அரை மயக்கத்திலிருக்கும் என் இனிய தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதுதான்.

சமீபத்தில் வெளியான 'யாரடி நீ மோகினி' என்ற திரைப்படத்தில் நீங்கள் பாடிய 'எங்கேயோ பார்த்த மயக்கம்...' என்ற பாடலை கேட்க வேண்டிய துர்பாக்கியத்தை நான் அடைந்தேன். நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான தமிழ்ப் படுகொலை. ஒவ்வெரு வார்த்தையையும் கடித்து, துப்பியிருக்கிறீர்கள். உங்கள் வரிகள், எங்கள் காதுகளுக்குப் போய், சிறிது கால அவகாசத்துக்கு பிறகு, புத்தி மூலமாக மொழிமாற்றம்(!) ஆன பிறகுதான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது.

நீங்கள் தமிழில் பாடுவது புதிதல்ல என்றாலும், நீங்கள் முன்பு பாடியது சின்னச் சின்ன கொலைகள் என்றால் (காதல் பிச்சாசே... பரவாயில்லை...), இது ஈவு இரக்கமற்ற படுகொலை. சிறிதளவேனும் மானமும், தமிழ் உணர்வும் கொண்ட எந்தத் தமிழனும், உங்களின் இந்த 'சீரிய தமிழ் பங்களிப்புக்கு' சிறிதளவேனும் வருத்தப்பட்டிருப்பான். இந்த தொடர் தமிழ் படுகொலைகளுக்கு, ஒட்டு மொத்த தமிழ்த் திரைப்படத்துறையும் பக்க பலமாக இருப்பதுதான் தமிழின் மானக்கேடு.

துதிபாடிகளை கொஞ்சம் ஓரம் கட்டுங்கள். உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள ஒரு தமிழனை கூப்பிட்டு அந்தப் பாடலைக் கேட்கச் சொல்லுங்கள். உண்மையான மதிப்பீடை நீங்களே கேளுங்கள். ஒரே ஒரு நிமிஷம் கண் மூடி யோசியுங்கள். கலை மதிக்கப்பட வேண்டும். அது விற்பனைக்கு அல்ல. அப்படி விற்கப்படும்போது,கலைஞனின் தன்மானமும் விலை போகிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் மிகச் சிறந்த பாடகர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. உங்களுடைய 'பாப்பா கஹதேஹைங் படா நாம் கரேகா.' என்ற முதல் பாடல் வெளியானதும் இந்தித் திரைப்படவுலகம் உங்களை ஆச்சர்யத்தோடு பார்த்தது. உங்களுடைய 'பெஹலா நஷா' (முதல் மயக்கம்) பாடலுக்கு கோடிக்கணக்கான இசை ரசிகர்கள் உங்கள் குரலில் மயங்கிப் போனார்கள். இன்றும் உங்களின் ஹிந்திப்பாடலை ரசிக்க முடிகிறது. அதற்குக் காரணம், நீங்கள் அறிந்த மொழியில் பாடுவதால்தான்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பாடும் நிலா பாலு எங்களால் அன்போடு அழைக்கப்படுகிற திரு எஸ்.பி.பி. அவர்கள் தெலுங்கு மொழிக்காரர். ஒரு முறை அவர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் தெலுங்கு பாடல் பதிவில் பாடிக்கொண்டிருந்தாராம். அது ஒரு மிக பிரபலமான தமிழ்ப் பாடலின் தெலுங்கு வடிவம். அதே ஸ்டூடியோவில், இன்னொரு படப்பிடிப்பில் திரு எம்.ஜி.ரின் காதுகளுக்கு அது சென்றிருக்கிறது. உடனே எம்.ஜி.ர். அவரை அழைத்து விசாரித்தாராம். தனது அடுத்த படத்தில் அவரை பயன்படுத்திக் கொள்ளுமாறு இசையமைப்பாளரை கேட்டுக் கொண்டாராம். அதற்கு இசையமைப்பாளர், எஸ்.பி.பியிடம் 'உனக்கு தமிழ் தெரியுமா?' என்றாராம். எஸ்.பி.பி. 'தெரியாது' என்று சொல்ல, 'தமிழ் உச்சரிப்பு சரியாக தெரிந்து கொண்ட பிறகுதான் உனக்கு சான்ஸ்' என்று சொல்லிவிட்டாரம். அதன் பிறகு நல்ல தமிழ் கற்றுக் கொண்டு எஸ்.பி.பி. பாடி எங்களுக்கு கிடைத்ததுதான், 'இயற்கையெனும் இளைய கன்னி', 'ஆயிரம் நிலவே வா', 'பொட்டு வைத்த முகமோ' போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள்.

மீண்டும் உங்களிடம் வருகிறேன். உங்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். யாராவது ஒருத்தர் வடநாட்டில் போய் ஹிந்திப்பாடலை சரியாக உச்சரிக்காமல் பாடினால், அவர் எவ்வளவு அவமானத்துக்கு உள்ளாவார்? ஆனால் இங்கே, நிலமை தலைகீழாக இருக்கிறதே. உங்கள் சக பாடகியான சாதனா சர்கமும் சளைத்தவர் இல்லை. 'கொஞ்சும் மைனாக்களே, கொஞ்சும் மைனாக்களே வந்து குளக்கேற்றில் (குளக்கரையில்?) வந்து கூடுங்கள்.... தேபாவளி (தீபாவளி?) பண்டிகை' என்று பாடியவர்தானே!

உங்களைச் சொல்லிச் குற்றமில்லை. 'இளையராஜா' என்று அழகிய தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திருமகன் பெற்றெடுத்த தவப்புதல்வர்தான், உங்களை வலிய வரவழைத்து பாட வைக்கிறார். தனது திரைப்படங்களில் அழகிய தமிழ்ப்பெயர்களை வைக்கும் சூப்பர் ஸ்டாரின் மருமகன்தான் படத்தின் ஹீரோவாக

இருக்கிறார். செல்வராகவன் என்ற அழகிய தமிழ்ப்பெயரைக் கொண்டவரின் கதைதான் படமாகியிருக்கிறது. யாருக்கும் தமிழுக்கு நடக்கும் படுகொலையைப் பற்றி கவலையில்லை. வியாபாரம் ஆனால் சரி. யாருக்கும் வெட்கமில்லை என்ற 'சோ' வின் திரைப்படப் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது,

'யாரடி நீ மோகினி' என்று அழகிய தமிழ்ப் பெயர் வைத்தால், அந்த திரைப்படத்திற்கு புனிதத்துவம் கிடைத்துவிட்டதாக தமிழக அரசு கருதுகிறது. தமிழ் மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரியை, அந்த தமிழ்ப் பாதுகாவலர்களுக்கு சீதனமாக கொடுக்கிறது. ஆனால் அந்த பெயருக்கு கீழே நடக்கும் தமிழ் அத்துமீறல்களை கொஞ்சம் கூட கவனிப்பதில்லை. இதுவும் ஒரு காலத்தின் கோலம்.

உங்களை தமிழில் பாடக்கூடாது என்று தடுக்கவில்லை. தயவு செய்து மொழி உச்சரிப்பைப் புரிந்து கொண்டு பாட வாருங்கள். வரவில்லையா? விட்டுவிடுங்கள். தமிழை கடித்துத் துப்புவதை எந்த மானமுள்ள தமிழனும்

பொறுத்துக் கொள்ள மாட்டான். நீங்கள் தமிழில் பாடித்தான் பெயரும் புகழும் இனி அடையவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ நல்ல குரல்வளம் கொண்ட தமிழ் உச்சரிப்பு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளே வரட்டும். முடிந்தால் கைகாட்டுங்கள். அது உங்களுக்கும், தமிழுக்கும் புண்ணியமாகப் போகும்.

நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், இப்படியே தொடர்ந்தால், வருங்காலம் உங்களை மன்னிக்காது. 'உதித் நாராயணணா? அவர் நல்ல பாடகர்தான். ஆனால் அவர் மொழியறியாமல் கொன்று குவித்த தமிழ்ப்பாடல்கள் ஏராளம்' என்ற அவப்பெயரை சிலுவையாக சுமக்க வேண்டியதை இப்போதிருந்துதே தவிர்க்கப்பாருங்கள்.

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். ஊதவேண்டிய சங்கை ஊதியாகிவிட்டது. இனி

உங்கள் இஷ்டம்.

இப்படிக்கு

மானமுள்ள ஒரு தமிழன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை..அருமை..மிக அருமையான பதிப்புகள்.தமிழ் கொலை அதை உதித் நாராயணந்தான் செய்யவேண்டியதில்லை.இலங்கையி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சக்தி தொலைக்காட்சியில் செய்திவாசிப்பவர்கள் செய்யும் தமிழ்க் கொலைகள் ஏராளம் கடந்த வாரதினக்குரலில் கூட ஒரு அன்பர் இதனைப் பற்றி காரசாரமாக எழுதியிருந்தார். செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

அட நீங்களெல்லாம் அடுத்த மொழிக்காரன் எங்கடை மொழியைக் கொலை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறியள். அதைவிட மோசமான விடயமொன்றை சமீபத்தில் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் எம்மவர் வானொலியொன்றில் கேட்டேன். :lol:

வானொலிப் பணிபாளரே பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்று நடாத்திக் கொண்டிருந்தார். அதில் அவர் கேட்ட கேள்வி உலகத்தில் சனத்தொகை அதிகளவில் கொண்ட நாடுகளில் முதலாவது சீனா இரண்டாவது இந்தியா. இதில் மூன்றாவது நான்காவது இடங்களில் எந்த நாடுகள் உள்ளன??

சரி இதில் என்ன தவறென்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :) எனித் தான் விடயமே. உலகத்தில் சனத்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவின் சனத்தொகை 1.3 கோடியாம். இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சனத்தொகை 1.08 கோடியாம். இதில் வேதனையென்னவெனில் அவரின் தவறை நிகழ்ச்சியில் பங்குபற்றிய நேயர்கள் கூட திருத்தாமல் சென்றது. எங்கே போய் முட்டிக்கொள்வது!!!! :rolleyes::unsure:

சரி இதில் என்ன தவறென்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. எனித் தான் விடயமே. உலகத்தில் சனத்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவின் சனத்தொகை 1.3 கோடியாம். இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சனத்தொகை 1.08 கோடியாம். இதில் வேதனையென்னவெனில் அவரின் தவறை நிகழ்ச்சியில் பங்குபற்றிய நேயர்கள் கூட திருத்தாமல் சென்றது. எங்கே போய் முட்டிக்கொள்வது!!!!

இதுல தமிழ் கொலை எங்கை? சொன்னால் கணக்கு பிழைஇருக்க்ம்

அட நீங்களெல்லாம் அடுத்த மொழிக்காரன் எங்கடை மொழியைக் கொலை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறியள். அதைவிட மோசமான விடயமொன்றை சமீபத்தில் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் எம்மவர் வானொலியொன்றில் கேட்டேன். :lol:

வானொலிப் பணிபாளரே பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்று நடாத்திக் கொண்டிருந்தார். அதில் அவர் கேட்ட கேள்வி உலகத்தில் சனத்தொகை அதிகளவில் கொண்ட நாடுகளில் முதலாவது சீனா இரண்டாவது இந்தியா. இதில் மூன்றாவது நான்காவது இடங்களில் எந்த நாடுகள் உள்ளன??

சரி இதில் என்ன தவறென்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :) எனித் தான் விடயமே. உலகத்தில் சனத்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவின் சனத்தொகை 1.3 கோடியாம். இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சனத்தொகை 1.08 கோடியாம். இதில் வேதனையென்னவெனில் அவரின் தவறை நிகழ்ச்சியில் பங்குபற்றிய நேயர்கள் கூட திருத்தாமல் சென்றது. எங்கே போய் முட்டிக்கொள்வது!!!! :rolleyes::unsure:

இதுல தமிழ் கொலை எங்கை? சொன்னால் கணக்கு பிழைஇருக்க்ம்

மேலே இதுவும் தமிழ்க் கொலையென நான் குறிப்பிடவில்லையே. அதைவிட மோசமான விடயம் எனவே குறிப்பிட்டுள்ளேன். தமிழை ஒருவர் தவறாக உச்சரிக்கும் போது அவர் எதைக் குறிப்பிடுகின்றார் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு தகவலை பிழையாகச் சொல்லும் போது, அது பலரின் மனதில் சரியான பதிலாக தவறாக பதிந்துவிடும். இதனால் வரும் பாதிப்பு மிகமிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உதித் நாராயண் னின் உச்சரிப்பு பற்றி யோசிக்கனும் தான்.

ஆனால்..............எனக்கு அவரின் பாட்டு விருப்பம்.

உதித் நாராயண் னின் உச்சரிப்பு பற்றி யோசிக்கனும் தான்.

ஆனால்..............எனக்கு அவரின் பாட்டு விருப்பம்.

உண்மை தான். அவரின் குரலில் உள்ள உற்சாகம் தனி தான். அதனால் தான் அவரது உற்சாகப்பாடல்கள் மிகவும் பிரசித்தம்.

அண்மையில் வந்த குருவி படத்தின் 'தேன் தேன்' பாடலில் ஷ்ரேயா நன்றாக பாடியுள்ளார். உதித் நிலைமை கவலைக்கிடம் தான்.

மேலும் இசையமைப்பாளர்கள் தான் அதைத்திருத்தி பாட வைக்க வேண்டும். இளையராஜாவின் இசையில் பாடுபவர்கள் தெளிவாக உச்சரிக்க முயல்வார்கள். சாதனா, ஷ்ரேயா போன்றோர் முன்னேறியுள்ளார்கள். அவரது இசையில் சாதனாவுக்கு தேசியவிருது கூட கிடைத்துள்ளது.

லதா மங்கேஷ்கர் கூட சத்யா படத்தில் வரும் 'வளையோசை' பாடலை வேகமான கதியில் கூட சிறப்பாக பாடியுள்ளார். லதாவாச்சே என்று இளையராஜா இலகுவாக அவரை விட்டுவிடவில்லை. மேலும் லதாவுக்கும் சிறப்பாக பாடவேண்டும் என்ற ஆவலும் இருந்திருக்கும்.

மின்னஞ்சலில் வந்தவை

யாரடி மோகினி படத்தில்("யங்கயோ பார்த்தெ மயெக்கம், யெப்போதோ வாழ்ழுந்த நெரக்கம்" ) பாடிய உதித் நாராயணன் பாடலைக் கேட்டுபொங்கி எழுந்த மானமுள்ள ஒரு தமிழன் எழுதியுள்ள ஆதங்க மடல்

இந்தியத்தமிழர்கள் எங்கேயும் என்பதை ஆங்கிலத்தில் ஏனோ 'yengeyum' [instead of 'engeyum'] என்று எழுதுவார்கள். அதனால் தான் அப்படிப்பாடிகிறாரோ தெரியவில்லை.

அவர்கள் மேலும் தமிழரை Tamilian என்று எழுதுவது எனக்கு பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rajinikanth3.jpgapr07-ph09.jpg

கொன்னைத்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் இரு மேதாவிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கொன்னைத்தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் இரு மேதாவிகள். :)

உண்மைதான், இரகுமான் இசை அமைப்பாளராக வந்தபின்பு தான் தமிழ்ப் பாடல்களில் ஆங்கில மோகம், தமிழ்க் கொலைகள் அதிகமாகி விட்டது.

அட நீங்களெல்லாம் அடுத்த மொழிக்காரன் எங்கடை மொழியைக் கொலை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறியள். அதைவிட மோசமான விடயமொன்றை சமீபத்தில் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் எம்மவர் வானொலியொன்றில் கேட்டேன். :(

வானொலிப் பணிபாளரே பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்று நடாத்திக் கொண்டிருந்தார். அதில் அவர் கேட்ட கேள்வி உலகத்தில் சனத்தொகை அதிகளவில் கொண்ட நாடுகளில் முதலாவது சீனா இரண்டாவது இந்தியா. இதில் மூன்றாவது நான்காவது இடங்களில் எந்த நாடுகள் உள்ளன??

சரி இதில் என்ன தவறென்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :( எனித் தான் விடயமே. உலகத்தில் சனத்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவின் சனத்தொகை 1.3 கோடியாம். இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சனத்தொகை 1.08 கோடியாம். இதில் வேதனையென்னவெனில் அவரின் தவறை நிகழ்ச்சியில் பங்குபற்றிய நேயர்கள் கூட திருத்தாமல் சென்றது. எங்கே போய் முட்டிக்கொள்வது!!!! :):(

கேட்டுக்கொண்டிருந்த நீங்கள் தொலைபேசியில சொல்லியிருக்கலாம்தானே. அதைவிட்டிட்டு இங்க வந்து எழுதுவதில என்ன அர்த்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி நிகழ்ச்சிகளில் இணைப்பு ஏற்படுத்துவது மிக சிரமமானது இல்லையா

அட நீங்களெல்லாம் அடுத்த மொழிக்காரன் எங்கடை மொழியைக் கொலை செய்யிறதைப் பற்றிக் கதைக்கிறியள். அதைவிட மோசமான விடயமொன்றை சமீபத்தில் ஐரோப்பாவில் ஒலிபரப்பாகும் எம்மவர் வானொலியொன்றில் கேட்டேன். :(

வானொலிப் பணிபாளரே பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்று நடாத்திக் கொண்டிருந்தார். அதில் அவர் கேட்ட கேள்வி உலகத்தில் சனத்தொகை அதிகளவில் கொண்ட நாடுகளில் முதலாவது சீனா இரண்டாவது இந்தியா. இதில் மூன்றாவது நான்காவது இடங்களில் எந்த நாடுகள் உள்ளன??

சரி இதில் என்ன தவறென்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. :( எனித் தான் விடயமே. உலகத்தில் சனத்தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனாவின் சனத்தொகை 1.3 கோடியாம். இரண்டாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் சனத்தொகை 1.08 கோடியாம். இதில் வேதனையென்னவெனில் அவரின் தவறை நிகழ்ச்சியில் பங்குபற்றிய நேயர்கள் கூட திருத்தாமல் சென்றது. எங்கே போய் முட்டிக்கொள்வது!!!! :):(

கேட்டுக்கொண்டிருந்த நீங்கள் தொலைபேசியில சொல்லியிருக்கலாம்தானே. அதைவிட்டிட்டு இங்க வந்து எழுதுவதில என்ன அர்த்தம்?

நான் தொலைபேசியில் அழைத்து தவறைச் சுட்டிக் காட்ட முற்பட்டேன். ஆனால் அழைப்பு ஏற்படுத்த முடியவில்லை. அதனால்த் தான் இங்கு எழுதினேன். இதன் மூலமாவது தவறைச் செய்வோரும் தவறுக்குத் துணை போவோரும் அவற்றைத் திருத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்.

போட்டி நிகழ்ச்சிகளில் இணைப்பு ஏற்படுத்துவது மிக சிரமமானது இல்லையா

உங்களுக்கே தெரிந்த இந்த விடயம் சிவகுமாரனுக்குத் தெரியவில்லையே!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.