Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புகளை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு - நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார்.

அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர். போர் மூலமான தீர்வைத் திணிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு ஒரு மித்த சக்தியாக அணிதிரள வேண்டும். சிங்கள அரச இயந்திரம் பலவீனமாகப் போய்கொண்டிருக்கும் தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களாகிய நாம் தாயக விடுதலைக்காக என்னென்ன செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் செய்வதற்கு தயாராக வேண்டும்.

இலங்கை படையினர் களத்தில் இப்போது அழிந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்பினை பிடித்த வரலாறு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உள்ளது. பலமான ஒரு காலத்தில் பலமான ஒரு நேரத்தில் மக்கள் அனைவரும் எழுச்சி கொண்டிருக்கின்றோம். போராளிகள் தாய் மண்மீட்பிற்குச் செல்லும்போது மக்களுக்கு பல பணிகள் உண்டு. அப்பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதன் ஊடாக விடுதலை வரைவுபடுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:) மக்களை போராட்டத்தின்பால் ஈர்த்து வைத்திருப்பதற்கு முன்பு நடந்த சாதனைகள் ஒரு கட்டத்திற்கு மேல் உதவாது. வெறுமனே பழங்கதைகள் சொல்லிக் காலம் கடத்துவதை விட இழப்புகளையாவது தடுப்பதுதான் இன்று தேவையானது. நிலங்கள் பறிபோனால்ப் பரவாயில்லை, எமது இன்னுயிர்கள் பறிபோகாமல்ப் பார்த்துக்கொள்ளுங்கள்.

10 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை..........அதற்குப் பிறகு சொல்லுவதற்கு எம்மிடம் கதைகளில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழம் பெருமை பேசுவது தான் தமிழர் மரபு......

கங்கை வெண்டான்.....

கடாரம் வெண்டான்......

இதுக்கு இது பரவாயில்லை .

வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு தலைவர் அவர்கள் செயற்படுகிறார்கள். அவர் பழையதை நினைக்கு கற்பனையில் மிதப்பவரல்ல. ஜெயசிக்குறுவில் பிடித்த பாரிய நிலப்பகுதியை சில நாட்களில் பிடித்தோம்தானே இப்போது மன்னாரில் வவுனியாவில் மணலாற்றில் படையினர் நகர்ந்தாலொன்ன முன்னர் நடந்ததுதானே நடக்குமென தலைவர் கனவு காணமாட்டார். சரியான திட்டங்களைத் தீட்டிய பின்னர் வந்த படையினரை எப்படி திருப்பித் தாக்குவது விரட்டியடிப்பது என்பவற்றைத் திட்டமிட்ட பின்னர்தான் படையினரை நிலங்கைள விழுங்குவதற்கு அனுக்கப்படும். எனவே தற்போதைய படையினரின் அகலக்கால் பதிக்க வைப்பது என்பது தலைவர் உருவாக்கிய பொறிக்குள் படையினரை இழுப்பதானது. எனவே பொறிக்குள் படையினர் வந்தபின்னர் தாக்குதல்கள் தொடங்கும்.

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் அவர்கள் இங்கே போரியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரையவில்லை. அதற்கெதிராக நீங்கள் விமர்சிப்பைச் செய்வதற்கு. களத்தில் நாள்தோறும் குண்டு வீச்சுக்குள்ளேயும், எறிகணை மழைக்குள்ளேயும் வாழ்ந்து வரும் மக்களை விரக்கியடையாமல் செய்வதற்கு அம்மக்களை தொடர்ந்து போராட்டத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைப்பதற்காக ஆற்ப்பட்ட உரை. அது அரசியற்துறைப் பொறுப்பாளரான அவரின் கடமை.

இங்கே புலத்தில் இருந்து கொண்டு போராளிகளின் இழப்புக்களைப் பற்றி நீங்கள் கவலை கொண்டு ஏதோ படையினரின் பலமறியாமல் மடத்தனமாகப் போராளிகளை அவர்கள் பலியிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்து கருத்துகளை எழுதாதீர்கள். போராளிகளின் இழப்புக்களின் வலியை நேரடியாக அனுபவிப்பர்கள் அவர்கள். இங்கே ஒளிப்படங்களில் நீங்கள் பார்க்கும் போராளிகளின் வித்துடல்களை அங்கே அவர்கள் நேரில் நின்று பார்க்கிறார்கள். நீங்கள் கேட்க முடியாத வீரச்சாவடைந்த போராளிகளின் உறவுகளின் கதறல்களை அவர்கள் கேட்கிறார்கள். காயமடைந்து இரத்த வெள்ளத்தில், உடல் உறுப்புக்களை இழந்து வரும் போராளிகளை நேரடியாகப் பார்க்கிறார்கள். தம்மால் வளர்க்கப்பட்டவர்கள், தம்முடன் நட்பாயிருந்தவர்கள், ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் என பழகிய தோழர்களை இழக்கும் அவர்களிற்கு அந்த இழப்புக்களைப் பற்றிக் கவலையில்லாது பழைய பல்லவி பாடிக்கொண்டிருப்பதாக உங்களிற்குத் தெரிகிறது.

இங்கே கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு அவர்களிற்கு அறிவுரை சொல்கிறோம். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுதலையை வென்றெடுப்பதற்காக தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டிருக்கிறார்கள். அறிவுரை கூறும் நாம் கொஞ்சம் தாயகத்திற்கான எமது கடமைகளைச் செய்தோம் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்
:) உண்மைதான் மின்னல்.ஆனால் இழப்பு என்று வரும்போதுதான் தாங்க முடியவில்லை. போராளிகளை இப்படி அடுக்கி வைத்ததைப் பார்க்க முடியாமல் ஆதங்கப்பட்டு எழுதியதுதான் அது. மற்றம்படி போராட்டத்திலோ அல்லது தலைவரிலோ கோபப்பட்டு எழுதவில்லை. நாமும் மனிதர் தானே ?!

அரசியற்துறைப் பொறுப்பாளரின் கருத்துத் தொடர்பாக போராளிகளின் இழப்பை தடுக்க அவரிற்கு அறிவுரை கூருகிறீர்களே. அதுதான் தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

:wub: மின்னல் நான் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு நடேசனுக்கு அறிவுரை கூறவில்லை. பொருத்தமான சமயத்தில் வந்த கூற்றுத்தானா அது என்றுதான் எழுதினேன். ஏனென்றால் போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்தில் அதைப்பற்றிக் கதைக்காமல் முன்பு நடந்தவை பற்றிக் கதைப்பதைத்தான் நான் விமர்சித்திருந்தேன். அது தவறென்றால் அதற்கு மன்னிப்பும் கேட்கத் தயார்.

மற்றும்படி உங்கள் மாதிரியே போராட்டம் பற்றிய உயர்ந்த எண்ணங்களும், நம்பிக்கையும் கொண்டு வாழ்பவந்தான் நானும்.

இழப்புக்களில் கலக்கப்படுவது இயல்பு. அதிலும் இதுவொரு போராட்ட கால இழப்பு. இதற்கு முன்பும் இதனைவிடவும் அதிகமான போராளிகளை நாம் இழந்துள்ளோம். ஆனால் போராளிகள் கலங்கவில்லை. அவர்கள் வெல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் என்ன செய்கிறார்???

என்ன செய்யப்போகின்றார்???

இந்த முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியே வரும் பலம் அவருக்கு உண்டா????

இவை இன்று கோடிபெறும் கேள்விகள்.....

ஈழத்தமிழர்கட்கு அல்ல

உலகத்தமிழர்கட்கு....அல்ல

உலகத்திற்கு.....அல்ல

ஏன் சிறீலங்காவுக்கு கூட ...... இதே கேள்விதான் மனதில்குடைகிறது????

இதற்கு பதில் அவரைத்தவிர யாருக்குமே தெரியாது

இந்தக்கேள்விக்கு பதில் தெரியாதததால் தான்

இத்தனை அறிக்கைகள்????

அலசல்கள்???

கட்டுரைகள்???

எல்லாமே

ஆனால் இதற்கு பதிலை அவர் கொடுக்கும்போது...

ஈழத்தமிழர்கள் அல்ல உலகத்தமிழர்கள்....

அல்ல உலகம்....

ஏன் சிறீலங்கா கூட அவரை அங்கீகரிக்கும்......

வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு தலைவர் அவர்கள் செயற்படுகிறார்கள். அவர் பழையதை நினைக்கு கற்பனையில் மிதப்பவரல்ல. ஜெயசிக்குறுவில் பிடித்த பாரிய நிலப்பகுதியை சில நாட்களில் பிடித்தோம்தானே இப்போது மன்னாரில் வவுனியாவில் மணலாற்றில் படையினர் நகர்ந்தாலொன்ன முன்னர் நடந்ததுதானே நடக்குமென தலைவர் கனவு காணமாட்டார். சரியான திட்டங்களைத் தீட்டிய பின்னர் வந்த படையினரை எப்படி திருப்பித் தாக்குவது விரட்டியடிப்பது என்பவற்றைத் திட்டமிட்ட பின்னர்தான் படையினரை நிலங்கைள விழுங்குவதற்கு அனுக்கப்படும். எனவே தற்போதைய படையினரின் அகலக்கால் பதிக்க வைப்பது என்பது தலைவர் உருவாக்கிய பொறிக்குள் படையினரை இழுப்பதானது. எனவே பொறிக்குள் படையினர் வந்தபின்னர் தாக்குதல்கள் தொடங்கும்.

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் அவர்கள் இங்கே போரியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரையவில்லை. அதற்கெதிராக நீங்கள் விமர்சிப்பைச் செய்வதற்கு. களத்தில் நாள்தோறும் குண்டு வீச்சுக்குள்ளேயும், எறிகணை மழைக்குள்ளேயும் வாழ்ந்து வரும் மக்களை விரக்கியடையாமல் செய்வதற்கு அம்மக்களை தொடர்ந்து போராட்டத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைப்பதற்காக ஆற்ப்பட்ட உரை. அது அரசியற்துறைப் பொறுப்பாளரான அவரின் கடமை.

இங்கே புலத்தில் இருந்து கொண்டு போராளிகளின் இழப்புக்களைப் பற்றி நீங்கள் கவலை கொண்டு ஏதோ படையினரின் பலமறியாமல் மடத்தனமாகப் போராளிகளை அவர்கள் பலியிட்டுக் கொண்டிருப்பதாக நினைத்து கருத்துகளை எழுதாதீர்கள். போராளிகளின் இழப்புக்களின் வலியை நேரடியாக அனுபவிப்பர்கள் அவர்கள். இங்கே ஒளிப்படங்களில் நீங்கள் பார்க்கும் போராளிகளின் வித்துடல்களை அங்கே அவர்கள் நேரில் நின்று பார்க்கிறார்கள். நீங்கள் கேட்க முடியாத வீரச்சாவடைந்த போராளிகளின் உறவுகளின் கதறல்களை அவர்கள் கேட்கிறார்கள். காயமடைந்து இரத்த வெள்ளத்தில், உடல் உறுப்புக்களை இழந்து வரும் போராளிகளை நேரடியாகப் பார்க்கிறார்கள். தம்மால் வளர்க்கப்பட்டவர்கள், தம்முடன் நட்பாயிருந்தவர்கள், ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள் என பழகிய தோழர்களை இழக்கும் அவர்களிற்கு அந்த இழப்புக்களைப் பற்றிக் கவலையில்லாது பழைய பல்லவி பாடிக்கொண்டிருப்பதாக உங்களிற்குத் தெரிகிறது.

இங்கே கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு அவர்களிற்கு அறிவுரை சொல்கிறோம். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுதலையை வென்றெடுப்பதற்காக தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டிருக்கிறார்கள். அறிவுரை கூறும் நாம் கொஞ்சம் தாயகத்திற்கான எமது கடமைகளைச் செய்தோம் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

நன்றி உங்கள் கருத்திற்கு...உணர்வை வெளிப்படுத்தியுள்ளீர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்புக்களை கண்களால் காண்கின்ற போது கவலையினாலும் ஏக்கத்தினாலும் உண்டாகின்ற சில கருத்துகளால் நாம் நமக்குள்ளே முரண்பட்டுக்கொள்ளாமல் தொடர்ந்தும் போராட்டத்தின் பால் காத்திரமான கருத்துக்களால் சோர்ந்திருக்கின்ற தமிழ் உறவுகளின் உணர்வலைகளை கட்டியெழுப்புவோம்.வெற்றியின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.