Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் படையினர் வசம். புலிகள் விலகல். - அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மன்னார் மாவட்டம் முழுவதையும் படையினர் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகள் அற்ற சுத்திகரிக்கப்பட்ட மன்னாரை தாம் விடுவித்துள்ளதாகப் படையினர் அறிவித்துள்ளனர்.

Military clears Mannar - State media

State electronic media quoted military sources while ago saying that troops today completed its moves to clear Mannar of the LTTE and as a result entire district is now under government control.

டெயிலிமிரர்.கொம்

Edited by nedukkalapoovan

  • Replies 53
  • Views 8.3k
  • Created
  • Last Reply

புலிகள் விலகல் எண்டு செய்தியில் இல்லை

தனிய தலையங்கத்தில மாத்திரம் கிடக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விலகல் எண்டு செய்தியில் இல்லை

தனிய தலையங்கத்தில மாத்திரம் கிடக்கு....

சரி அப்ப புலிகள் வரவேற்றனர் என்று போடலாம் என்றீங்களா...??! :wub:

சரி அப்ப புலிகள் வரவேற்றனர் என்று போடலாம் என்றீங்களா...??! :D

நீங்கள் எப்பிடி வேண்டுமெண்டாலும் போடுங்கள்...

வாசிப்பது எவனோ ஒருத்தன் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில பகுதிகளை மேலதிகமாகப் பிடித்திருக்கலாம். ஆனால் முழுமையான பிடிப்பு என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. நேற்று நான் சொன்னது போல், வெள்ளங்குளம் பகுதி வரை இராணுவம் வரவைக்கப்பட்டாலும், அது பற்றி அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.

450px-Sri_Lanka_Mannar_District.jpg

ஏற்கனவே பல பிரதேசங்கள் இராணுவத்தின் கையில் இருந்தவை தான். இச் செய்தி பொருள்மயக்கத்திற்காக எழுதப்பட்டது. நெடுககாலபோவனும் அந்த மயக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றார்.

நாம் செய்கின்ற பங்களிப்பு போதவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்ஸ் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்கோ "entire district is now under government control".

நான் அதில உள்ளதைத்தான் செய்தி ஆக்கினன். புலிகளை சுத்திகரிச்சது என்றால் ஒன்றில் அவை அழிக்கப்பட்டுட்டினம்.. அல்லது விலகிட்டினம் என்றதுதானே அர்த்தம். அந்தச் செய்திக்கு அப்படி ஒரு அர்த்தம் அவை கொடுக்கினம். நாங்கள் அதைத் தடுக்க ஏலாது. அவைட ஊடக சுதந்திரம் அது. நாங்கள் சொல்லுறதைக் கேட்க வேண்டியவர்கள்.

எங்கள் தரப்புத்தான் இப்ப 3 நாளா மூச்சுக் கூட விடல்லையே..! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தரப்பு மூச்சு விடவில்லை என்றது சிரிக்கக்கூடியதாகவா உங்களுக்கு இருக்கின்றது. அதற்கு ஏன் அப்படி முகக்குறி போடுகின்றீர்கள்??

எங்கள் தரப்பு மூச்சு விடவில்லை என்றால் சிங்களதரப்பின் செய்தியை நம்பலாம் என்கின்றீர்களா? ஒவ்வொரு நாளும் உங்களுக்கு போராட்ட உணர்வு பற்றி ஊட்டிக் கொள்ளாவிட்டால் சக்தி இறங்கிவிடுமா? செய்தியில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கின்றது பற்றி எனக்குச் சந்தேகம் வந்தது அதனால் கேட்டேன்..

என்னிடம் கேட்டு என்ன பயன். டெயிலிமிரரிடம் கேளுங்கள்.

இவ்வளவும் நடப்பதாக அரசு சொல்லுது. 25 உடலங்களையும் வைச்சுக்கொண்டு அனுமதி கேட்டிருக்குது வந்து எடுக்கிறியளோ என்று.. அதற்கும் இன்னும் பதில் சொல்லாம.. இருக்கினம் என்றால்...???! வழமையா இளந்திரையன் ஒரு அறிக்கை விடுறவர் தானே. அவை மடுவில நின்றால் நாங்கள் மதவாச்சியில நிப்பம் என்று. அதைக் கூடக் காணேல்லையே..??! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்....அறிக்கை ஒன்றையும் காணேல்ல.

பொருத்திருப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுங்காலபோவன்

இது விபச்சாரம் அல்ல. போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டு கருத்தெழுதுகின்றீர்களா? இளந்திரையன் என்ன உங்களைப் போல, ஒரு போராட்டம் நடக்கின்றபோது, மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு வெளிநாடு ஓடிவந்து நியாயமா கதைக்கின்றார். உமக்கு என்ன யேர்ககிதம் இருக்கின்றது, அவரையோ அவர்களைப் பற்றியோ கதைக்க?

முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் 2000 உடல்களைத் தமிழர் தரப்பு கைப்பற்றியது, கிளிநொச்சிச் சமரில் 300 வரையிலான உடல்களும் சென்ற முகமாலையில் நடந்த சமரில் மொத்தமாக 250 வரையிலான உடல்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதைப் போன்று ஜயசிக்குறுச் சமரில் பல தடவைகள் இவ்வாறு நடந்தன.

அது போல மணலாறுச் சமர் ஒன்றில் துரோகி ஒருவன் செய்த சூதினால் 175 வரையிலான போராளிகளின் உடல்களைச் சிங்கள அரசு கைப்பற்றியது. அதில் பெண்களின் உடல்களை அசிங்கமாக வெட்டியது. சிதைத்தது. அதற்காக எந்தப் போராட்டமும் சோர்ந்து விடவில்லை.

உண்மையான ஆதரவாளன் போராட்டத்தின் சூழ்நிலையைக் கருத்தில் நின்று சோர்ந்து விடும் மக்களுக்கு உண்ர்வூட்டுகின்றவனாகவே இருப்பான். இளந்திரையன் செய்தி தரவில்லை என்றால், உடனே சிங்கள அரசுக்கு வால்பிடிக்க மாட்டான்.

களமாடிச் சாகின்றவர்களும், களமாடுவதும் தாங்களில்லாதபோது உங்களின் எழுத்து என்ன மாதிரியும் அமையும் தானே. ஆனால் நிச்சயம் இப்படி எழுதுவதற்காக ஒருநாள் வருத்தப்படுவீர்கள்.

எனக்குப் பதில் எழுதுவதாக நினைத்து எழுதாமல் சிந்தித்து எழுதுங்கள்.

நெடுக்கு செய்தியை அரசாங்கம் அறிவிப்பு எண்று போடுங்கள். இதில் நம்பும் படியாக ஒண்டுமே இல்லை.

நான் இலுப்பை கடவையை பிறப்பிடமாக சேர்ந்தவன் எனும் அடிப்படையில் எனக்கு தெரிந்ததை சொல்கிற்றேன்.

மன்னார் மாந்தை அடம்பம் பகுதியில் இருந்து மன்னாரின் பூநகரி நோக்கிய எல்லையாகிய முழங்காவில் வீதி வளி கிட்டத்தட்ட 40 மைல் தூரம் இருக்கும். அடம்பனில், பெரிய மடுவில் காட்ச்சி அளித்த இராணுவம் வாகனத்தில் வேகமாக வந்தால் கூட அதிகாலையில் இருந்து பின்னேரம் ஆகிவிடும்.

சுத்திகரிப்பு நடவடிக்கைகளோடு வரும் இராணுவம் இண்று விடத்தல் தீவு வந்தாலே பெரிய விடயம்.

இராணுவம் பொட்டல் வெளிகளைத்தாண்டி அங்கு வர வேண்டுமானால் புலிகளின் எதிர்ப்பு அறவே இருக்க கூடாது. அப்போதுதான் சாத்தியம்.

எனக்கு தெரிய இராணுவம் மன்னார் பிடிக்க சாத்தியமான பாதை ஒண்று மட்டும்தான் இப்போது இருக்கிறது. அது வவுனியாவில் இருந்து புறப்பட்டு மூண்று முறிப்பிலிருக்கும் இராணுவம் பனம்காமம் ஊடாக முன்னேறி பாண்டியன்குளத்தை முதலில் பிடிக்க வேண்டும். பின்னர் மல்லாவி வந்தால் மட்டுமே சாத்தியம் ஆகலாம்.

காரணம் மல்லாவியில் இருந்து( பாண்டியன்குளத்தில் இருந்தும்) இலகுவாக மாங்குளம் நோக்கியும் போகலாம், மன்னார் முழங்காவிலை குறிவைத்து ஸ்கந்தபுரம் நோக்கியும் போகலாம்.

Edited by பொய்கை

பொன்னையாண்ண.. இப்ப என்ன சொல்ல வாறீங்கள்... முந்தி எல்லாம் அப்படிச் செய்தம்.. அப்ப இப்ப இந்த உடலங்களை வாங்காமல் விடுவது நல்லம் என்றா..???!

அனுராதபுரத்தில இருந்து தரல்ல என்ற அறிக்கையா விட்டம்... இப்ப வாங்கச் சொல்ல மெளனமா இருக்கிறம்.. அதுதான் ஏனண்ணை. அவையள் போராளியள் இல்லையோ..??!

நாங்கள் எப்பவும் போராட்டத்தை விட்டு ஓடின ஆக்களில்ல. ஆனால் நியாயத்தை கேட்க தயங்கினதும் இல்ல.

நீங்கள் திட்டினாப் போல நான் என்னை மாற்றிக்கனும் என்றில்லை. நான் எனக்கு வாசிக்கக் கிடைத்த செய்தியைப் பகிர்ந்து கொண்டன். முன்பெல்லாம் அரசின் பொய் பிரச்சாரம் என்று சொல்லி அறிக்கை வாறது ஏன் இப்ப வரல்ல என்று ஆதங்கப்பட்டுக் கொண்டன். அதற்குக் கூட எனக்கு உரிமை இல்லையா..??! :D:D

நெடுக்கு செய்தியை அரசாங்கம் அறிவிப்பு எண்று போடுங்கள். இதில் நம்பும் படியாக ஒண்டுமே இல்லை.

நான் இலுப்பை கடவையை பிறப்பிடமாக சேர்ந்தவன் எனும் அடிப்படையில் எனக்கு தெரிந்ததை சொல்கிற்றேன்.

மன்னார் மாந்தை அடம்பம் பகுதியில் இருந்து மன்னாரின் பூநகரி நோக்கிய எல்லையாகிய முழங்காவில் வீதி வளி கிட்டத்தட்ட 40 மைல் தூரம் இருக்கும். அடம்பனில், பெரிய மடுவில் காட்ச்சி அளித்த இராணுவம் வாகனத்தில் வேகமாக வந்தால் கூட அதிகாலையில் இருந்து பின்னேரம் ஆகிவிடும்.

சுத்திகரிப்பு நடவடிக்கைகளோடு வரும் இராணுவம் இண்று விடத்தல் தீவு வந்தாலே பெரிய விடயம்.

இராணுவம் பொட்டல் வெளிகளைத்தாண்டி அங்கு வர வேண்டுமானால் புலிகளின் எதிர்ப்பு அறவே இருக்க கூடாது. அப்போதுதான் சாத்தியம்.

எனக்கு தெரிய இராணுவம் மன்னார் பிடிக்க சாத்தியமான பாதை ஒண்று மட்டும்தான் இப்போது இருக்கிறது. அது வவுனியாவில் இருந்து புறப்பட்டு மூண்று முறிப்பிலிருக்கும் இராணுவம் பனம்காமம் ஊடாக முன்னேறி பாண்டியன்குளத்தை முதலில் பிடிக்க வேண்டும். பின்னர் மல்லாவி வந்தால் மட்டுமே சாத்தியம் ஆகலாம்.

காரணம் மல்லாவியில் இருந்து( பாண்டியன்குளத்தில் இருந்தும்) இலகுவாக மாங்குளம் நோக்கியும் போகலாம், மன்னார் முழங்காவிலை குறிவைத்து ஸ்கந்தபுரம் நோக்கியும் போகலாம்.

நன்றி பொய்கை உங்கள் அனுபவப் பகிர்வுக்கு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா விடயங்களையும் உங்களுக்கு அறிவித்து விட்டுத் தான் செய்ய வேண்டும் என்ற தேவையில்லையே? உங்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எத்தனை வீதம் உரித்துடையவர்.

போரளிகளின் உடல்களை அவர்கள் வாங்கவில்லை என்றால் நீங்கள் வாங்கி அடக்கம் செய்யப் போகின்றீர்களா?

எந்தக் காலத்திலும் அவர்கள் இழப்புக்களை மறைத்ததில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சென்ற மாதம் வீரச்சாவடைந்த மொத்த போராளிகளின் எண்ணிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதற்கு அவசியமே இல்லையே...

மீண்டும் சொல்கின்றேன். உங்களுக்கு என்ன செய்கின்றோம் என்று பற்றி அறிவிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. அதைக் கேட்கின்ற தகுதி உங்களுக்கும் கிடையாது..

மன்னார் மாவட்டம் முழுவதும் படையினர் வசம் என்ற அரச ஊடகம் புரளி கிளப்பி விட்டிருக்கிறது. அதனை உண்மையென நெடுக்காலை போவான் நம்பி விட்டீர்கள் எண்டு நினைக்கிறன்

மாந்தை மேற்கு அரச அதியர் பிரிவில் உள்ள மேலும் சில பகுதிகளைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மன்னார் கரையோரத்தில் ஏற்கனவே படையினர் முன்னேறியிருந்த மல்லிகைத்திடலுக்கு அடுத்த ஊரான மினுக்குளம் பகுதி மற்றும் அதற்கு கிழக்கு பக்க வாட்டாக ஏற்கனவே முன்னேறியிருந்த ஆண்டான்குளம் ஆட்காட்டிவெளிப்பகுதிகளிலிர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டம் இன்னும் முழுமையாக சுத்திகரிக்கப் படவில்லையாம். இன்னும் சுத்திகரிக்க இடம் இருக்காம்.. என்று முன்னர் அரசு விட்ட அறிக்கைக்கு தலைகீழா இன்னொரு அறிக்கையை சற்று முன்னர் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார விட்டிருக்கிறார் . இப்போ முக்கிய பகுதி ஒன்றை மட்டும் தானாம் தாம் கைப்பற்றி உள்ளனர்.

Military spokesman says more to be cleared in Mannar

Military spokesman Brigadier Udaya Nanayakkara says that there are more areas to be cleared in Mannar from the LTTE, and it was only the strategic ‘Rice Bowl’ which was captured today.

டெயிலி மிரர்.

என்னையா இப்படிக் குழம்பிட்டே இருக்கீங்க..??! என்ன பிரச்சனை..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராணுவம் சொன்னால் உண்மையாக இக்கும் நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் சொன்னால் உண்மையாக இக்கும் நெடுக்ஸ்.

அண்ணை ஊடக சுதந்திரத்தில இப்படியெல்லாம் செய்தி வந்திட்டு இருக்கு அதற்கு நான் என்ன செய்யுறது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களுக்கு என்ன மாதிரியும் எழுதத் தோன்றும், அதை இணைக்கின்ற உங்களுக்கு அல்லவா பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். அவர்களை நொந்து இதில் பலன் ஏதுமில்i

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு என்ன மாதிரியும் எழுதத் தோன்றும், அதை இணைக்கின்ற உங்களுக்கு அல்லவா பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். அவர்களை நொந்து இதில் பலன் ஏதுமில்i

நாங்க இதை இணைக்கல்லை என்றால்.. இது பெரிய பூதமா உருவெடுக்கும். அதிலும் இணைச்சு.. தெளிவுபடுத்திக் கொள்ளுவது சிறப்பு. இப்ப உண்மை வந்து கொண்டிருக்கிறது அல்லவா..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பது சரி. அதற்கு நீங்கள் வக்களாத்து வாங்குவதும், இளந்திரையனைச் சாடுவதும் அதே எண்ணத்தில் எழுந்தவையா? அற்கான தார்ப்பரியம் அதில் தெரியவில்லையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பது சரி. அதற்கு நீங்கள் வக்களாத்து வாங்குவதும், இளந்திரையனைச் சாடுவதும் அதே எண்ணத்தில் எழுந்தவையா? அற்கான தார்ப்பரியம் அதில் தெரியவில்லையே?

படைத்துறைப் பேச்சாளரா அவருக்குத்தான் இந்த அரசு வெளியிடும் தகவல்கள் குறித்து உண்மைகளை விளக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அரசு தன்னைப் பற்றி சொல்லப்படும் போது உடனடியாக மறுப்புச் சொல்கிறது. அது சர்வதேச ஊடகங்களிலும் இடம்பிடித்து விடுகிறது. ஆனால் இவ்விடயத்தில் சர்வதேச ஊடகங்களோ தாம் புலிகளின் படைத்துறைப் பேச்சாளரை தொடர்பு கொள்ள முயன்றும் தொடர்பு கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் ஆறிய பின்.. மடு மதவாச்சி என்று அறிக்கை விடுவதில் என்ன பயன்..??! எனக்குப் புரியவில்லை படைத்துறைப் பேச்சாளரின் பணி என்ன என்று..! அதுதான் கேட்டேன்..! :D

அனுராதபுரத்தில இருந்து தரல்ல என்ற அறிக்கையா விட்டம்... இப்ப வாங்கச் சொல்ல மெளனமா இருக்கிறம்.. அதுதான் ஏனண்ணை. அவையள் போராளியள் இல்லையோ..??!

நெடுக்காலைபோவான் மடத்தனமாகக் கருத்துக்களை எழுதாதீர்கள்.

போராளிகளின் வித்துடல்கள் படையினரால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்படும்போது என்றைக்குமே புலிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்ததில்லை. சிராட்டிக்குளத்தில் கைப்பற்றப்பட்ட போராளிகளின் வித்துடல்களை வாங்க மாட்டோம் என்று புலிகள் சொன்னரா? அல்லது செஞ்சிலுவைச் சங்கம் புலிகளைத் தொடர்பு கொண்டபோது புலிகள் மௌனம் சாதித்தனரா? ஏன் அரச படைகளே செய்யாத ஒரு கேவலமான செயலைச் செய்ய முற்படுகிறீர்கள்.

ஒரு போராளியின் வித்துடலை மீட்பதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட போராளிகள் தங்கள் உயிரை ஈந்த சம்பவங்களும் பல எமது போராட்டத்தில் நடைபெற்றிருக்கின்றன. அண்மைய மன்னார் களத்தில் இம்ரான் பாண்டின் படையினின் தளபதிகளில் ஒருவர் எதிரியால் தாக்கப்பட்ட ஒரு காப்பரணில் வீரச்சாவடைந்திருந்த போராளிகளின் உடல்களை மீட்கும் போது வீரச்சாவடைந்திருக்கிறார். முதலில் ஒரு போராளியின் வித்துடலை மீட்டுவந்தவர் மீண்டும் சென்று இன்னொரு போராளியின் வித்துடலை மீட்கும் முயற்சியில் அவர் வீரச்சாவடைந்திருக்கிறார். இதுதான் ஒரு போராளியின் வித்துடலுக்ககு புலிகள் கொடுக்கும் மதிப்பு. வீரச்சாவடையும் போராளிக்குரிய உச்ச மதிப்பை மாவீரர் துயிலும் இல்லத்தில் அந்தப் போராளியின் வித்துடலை விதைப்பதிலேயே கொடுக்க முடியும் என்று நினைப்பவர்கள் புலிகள்.

எதிரியால் இந்த ஆண்டில் கைப்பற்றி கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 200 வரையான போராளிகளின் வித்துடல்களில் ஒன்றைக்கூட ஏற்காமல் புலிகள் மறுத்தது கிடையாது. இதற்கு முன்னரும் அப்படி நடந்ததும் கிடையாது. படை வல்வளைப்புப் பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களுடன் தம்மால் சுட்டுக்கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களையும் சேர்த்து ஒப்படைக்க படையினர் பலமுறை முயன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவ்வேளைகளில் பொதுமக்களின் உடல்களை ஏற்காமல் தனியே போராளிகளின் வித்துடல்களை மாத்திரம் புலிகள் பெற்றுக் கொண்டனர்.

ஒரு இழப்பை மறைப்பதற்காக அச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை தலைமை பெற்றுக் கொள்ள மறுப்பதாக நீங்கள் சேறு பூச முயற்படுவது ஏன்?

நெடுக்ஸ்

சொல்லவாறதெல்லாம் பிழையும் மில்லை... அதுக்காக அதை கேள்விகேட்பதும் தவறில்லை.

தமிழ் மக்களின் நிலைதொடர்பாக அறிக்கை வராதவிடத்து.... மற்றவற்ற அறிகைகளை அவர் பிரசுரிக்கிறார்.

அந்த செய்திகளுக்கு அவர் பொறுப்பாக முடியாது... ஆனாலும் அந்த செய்தியை நியாப்படுத்துவது கொஞ்சம் நெருகல்தான்.

நியாப்படுத்துவது அந்த செய்திகளையா அல்லது அதை இங்கு மீழ் பிரசுரித்தமையா? இதுதான் குழப்பமா இருக்கு.

அதுக்காக எந்த செய்தியையும் உதாசினம் செய்யாது இருப்பது நெடுக்கரின் தனி அழகு.

***

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் அதற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில தளத்தில் வந்த செய்தி பக்கசார்பாக வெளியிட்டிருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக் என்ன சொல்ல வாறார் என்றால்

அரசாங்கம் போல..

முன்னப்பின்னை ஆனாலும் பரவாயில்லை

சரியாய்ப் பிழையாய் இருந்தாலும் ஓகே..

ஆனா..

ஒவ்வொரு நாளும் இளந்திரையன் ஏதாவது அறிக்கை விட்டு கொண்டிருக்கவேணும்.

அப்பதான் அவரது தேசிய உணர்வுக்கு தண்ணி விட்ட மாதிரி இருக்கும். இல்லாட்டி வாடிப்போகுமாக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.