Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது

Featured Replies

கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது

[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:06.14 AM GMT +05:30 ]

இலங்கை வான்படையின் கிபிர் ரக தாக்குல் விமானமொன்று கட்டுநாயக்க வான்படை இறங்குதளத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 4.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதென தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களில் குறித்த விமானம் முக்கிய பங்காற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/view.php?2a0sE9DFb...G7fed0e3Fh2g8de

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலதிக செய்திகள் வெளிவந்த பின்புதான் சந்தோசமா இல்லையா என்று தெரியும் ! வினித் நீண்டகாலங்களின் பின்பு ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கிறிங்களா என்று பார்ப்போம்?

எப்பிடி விழுந்தாலென்ன... விழுந்தெழும்பேலாமல் இருந்தா சந்தோசம் தான்..

அது சரி சுப்பண்ணைக்கு வினித்தை முன்னமே தெரியுமா?.. ஆச்சரியமா இருக்கு!

தாக்குதல் நடத்திவிட்டு வந்த வானூர்தி தரையிறங்கும் போது சேதம்

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 05:51 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]

வன்னிப் பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய மிக்-27 ரக தாக்குதல் வானூர்தி கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் ஓடுபாதையில் இருந்து விலகியதால் சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா வான்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வான்படையினர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதலை நடத்திவிட்டு கொழும்பு திரும்பிய சிறிலங்கா வான்படையினரின் மிக்-27 தாக்குதல் வானூர்தி கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் தரையிறங்கிய போது பாதையை விட்டு விலகியதால் சேதமடைந்துள்ளது.

வானூர்தியின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இச்சம்பவத்துக்கு காரணம் எனவும், இதன் போது வானோடி உயிர்தப்பி விட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை சூறாவளி, எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு :lol:

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கு வடக்கில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேசத்தின் மீது இன்று மாலை 3.30 அளவில் விடுதலைப்புலிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்திய 27 வானூர்தி இன்று பிற்பகல் 4 – 4.15 ற்கிடையில் கட்டுநாயக்கா வான்தளத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதெனவும், விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படையினர் தெரிவிக்கின்ற போதும்

இன்று மாலை வன்னியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் கிடைக்கும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலிலேயே இந்த தாக்குதல் விமானம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A Sri Lanka Air Force (SLAF) MiG-27 fighter jet was forced to return after it sustained damage in anti-aircraft fire over Ki'linochchi area in Vanni Sunday afternoon, LTTE officials told media in Vanni. Meanwhile, Sri Lanka Air Force (SLAF) officials in Colombo, admitting that an aircraft had a troubled landing at Katunayaka military airbase in Colombo after carrying out an air strike, said that the fighter jet had 'skidded off' the runway while landing.

Independent TamilNet sources in Vaddakkachchi area confirmed that there was anti-aircraft gunfire that targeted the SLAF bombers, which engaged in the bombardment and that the bombers avoided circling over the area due to the attack from the ground.

Four persons were wounded in the air raid in Vaddakkachchi near Ki'linochchi. The wounded have been admitted to Ki'linochchi hospital.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

இன்று மாலை வன்னியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் கிடைக்கும் தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலிலேயே இந்த தாக்குதல் விமானம் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் யாரிடமிருந்து கிடைத்த தகவல்??????

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் வன்னியில் ஏவுகணை தாக்குதல். கொழும்பு வரை விமானம் சென்று தரை இறங்கியுள்ளது. நம்பமுடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ப முடியவில்லை இல்லை ல்லை லைலைலை.....

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க:

ஏவுகணைத் தாக்குதல் என்று செய்தியில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு(anti-aircraft gunfire ) என்றுதான் போட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூர்யா நான் த.தே.தொ செய்தி பார்த்தனான் அதில விபத்து என்டு தான் சொன்னது

  • தொடங்கியவர்

தமிழ்நெற்றில் வந்த செய்தி?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற்றில் வந்த செய்தி தவறாகத் தெரியவில்லை. விமானம் விமான எதிர்ப்பு பீரங்கித் தாக்குதலில் சக்கரப்பகுதியில் சேதமடைந்து தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம்.

கிழக்கில் மகிந்தவின் பாதுகாப்புக் கெலியும் விமானப்படையால் விபத்துக்கு உள்ளானது என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் சன்னம் பட்டு எரிபொருள் தாங்கி சேதம் என்றார்கள்..!

ஏன் 1995 இல் யாழ் குடாவில் வைத்து அவ்ரோ சுட்டு வீழ்த்தப்பட்ட போதும் கூட இயந்திரக் கோளாறு என்றார்கள். இறுதியில் இரண்டாவது அவ்ரோவும் விழுந்ததன் பின்னர் தான்.. மென்று விழுங்கி உண்மையைச் சொல்ல முன் வந்தார்கள்..! முதலாவது அவ்ரோ விழுந்த போது புலிகளின் குரலும் விபத்து என்றுதான் சொன்னது..! :lol:

Edited by nedukkalapoovan

சிறீலங்கா மிக்-27 ரக குண்டுவீச்சு வானூர்தி மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்!

சிறீலங்கா வான்படை மிக்27 ரக குண்டுவீச்சு வானூர்தி மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதல் நடத்தியதில், அந்த வானூர்தி சேதமடைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டகச்சியில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்திய வானூர்தியே, விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவேளை, நேற்று கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் மிக்௨7 ரக வானூர்தி ஒன்று விபத்தில் சேதமடைந்துள்ளதாக, சிறீலங்கா வான்படையினர் அறிவித்துள்ளனர்.வன்னியில் தாக்குதல் நடத்திவிட்டு தளம் திரும்பிய வானூர்தி, தரையிறங்கும்போது ஓடு பாதையைவிட்டு விலகியதால் சேதமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வானூர்தியை செலுத்திய வான்படை உறுப்பினர் உயிர் தப்பியிருப்பதாக, சிறீலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-07-07.html

நிருபர்:ஈழச்செல்வன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.