Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீஜிங்க் ஒலிம்பிக் 2008

Featured Replies

Img214070082.jpg

இனிய வணக்கங்கள்,

2008 ஒலிம்பிக் இன்னும் சில கிழமைகளில சீனாவில ஆரம்பமாக இருக்கிது. இந்த ஒலிம்பிக் பற்றிய கலந்துரையாடல், வர்ணனைகளிற்காக இந்த தலைப்பை ஆரம்பிக்கின்றேன். இதில நீங்கள் வாழுற நாடுகளில ஒலிம்பிக் சம்மந்தமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நம்மோட கனடா நாடு கடந்த 2004 ஒலிம்பிக்கில் 12 பதக்கங்கள் பெற்று 21ம் இடத்தில வந்திச்சிது. இந்தமுறையும் அவ்வாறே 20 சொச்சத்தில வரக்கூடும்.

இந்தமுறை சீனா பதக்க பட்டியலில முதலாம் இடம் பெறும் எண்டு கூறப்படுகிது. ஒரு பதக்கம் குறைவாக எடுத்து அமெரிக்கா இரண்டாம் இடத்தில வரும் எண்டு சொல்லப்படுகிது.

முக்கியமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் கதாநாயகனாக அமெரிக்காவின் நீச்சல் வீரர் Michael Phelps விளங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவர் ஆகக்குறைந்தது ஐந்து தங்க பதக்கங்கள் பெறலாம் என்று கூறப்படுவதோடு 7 தங்கங்கள் பெற்று ஒரே போட்டியில் அதிக தங்கங்கள் பெற்ற பழைய தனிநபர் சாதனையை முறியடிக்கவும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதில Michael Phelps இண்ட ஒரு காணொளி ரெண்டு போடுறன் பாருங்கோ. மனித மீன் ஒண்டு தண்ணியுக்க சீறிக்கொண்டு போகிது.

]

Edited by முரளி

  • Replies 81
  • Views 12.6k
  • Created
  • Last Reply

கண்டிப்பா சீனா ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கலாம். தங்கப்பதக்கங்கள் 40 வரை எடுக்கக் கூடும். இலங்கை ஏதாவது எடுக்குமோ தெரியாது..?

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பா சீனா ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கலாம். தங்கப்பதக்கங்கள் 40 வரை எடுக்கக் கூடும். இலங்கை ஏதாவது எடுக்குமோ தெரியாது..?

இந்தப் பெரிய இந்தியாவே ஒரு தங்கப்பதக்கமும் போனமுறை எடுக்கவில்லை ,

பார்ப்போம்... இந்த முறை இலங்கை எத்தனை எடுக்கின்றது என்று ,

எப்படியோ ஆசியர்களின் மானத்தை காப்பாற்ற சீனாவும் , யப்பானும் , கொரியாவும் உள்ளது சந்தோசம் .

அதுவும் இல்லாவிட்டால் மற்றவர்கள் , ஆசியா ஒரு சோத்து மாடு என்று திட்டுவார்கள் . :lol:

ஐரோப்பிய தேசங்களான பிரிட்டன், பிரான்ஸை விட சீனா, ஜப்பான், தென் கொரியா அதிக பதக்கம் எடுப்பது வழக்கம். யார் யாரை நக்கல் பண்றது..? எடுத்துச்சொல்லுங்கள் தமிழ் சிறி

இந்தியா ஏன் ஒரு தங்கம் கூட எடுக்கலை..சீனாக்கு அடுத்த பெரிய நாடு...அவர்களில் பாதியாவது எடுக்க முடியாதா??

எப்போ ஈழம் இதில் சேரும்? சேர்ந்தால் மற்றயத விட்டாலும், நீச்சலிலும் சுடுவதிலும் எப்போதும் நாம் தான் அனைத்து பதக்கங்களையும் வெல்வோம்.இல்லையா?

இந்தியா ஏன் ஒரு தங்கம் கூட எடுக்கலை..சீனாக்கு அடுத்த பெரிய நாடு...அவர்களில் பாதியாவது எடுக்க முடியாதா??

எப்போ ஈழம் இதில் சேரும்? சேர்ந்தால் மற்றயத விட்டாலும், நீச்சலிலும் சுடுவதிலும் எப்போதும் நாம் தான் அனைத்து பதக்கங்களையும் வெல்வோம்.இல்லையா?

அடுத்தவர் காலை வாருவது என்று ஒரு போட்டி இருந்தா கட்டாயம் இந்தியாவுக்கு தான் தங்கம், வெள்ளி, வெண்கலம் எல்லாம். :)

துப்பாக்கி சுடுதலில் பிரபலமான இந்தியர்கள் உள்ளனர் (ஜஸ்பால் ராணா). அவர்கள் மூலம் ஏதாவது 1, 2 பதக்கம் கிடைக்க கூடும்.

நாம சுடுறதும் நீந்திறது வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில்....

  • தொடங்கியவர்

தங்கவேட்டைக்கு புறப்பட்டுள்ள அமெரிக்க படை..

:)

Olympic Trials Mens 100 Final 2008 USA Track & Field

Olympic Trials Womens 100 Final 2008 USA Track & Field

Olympic Trials Mens 400h Final 2008 USA Track & Field

Olympic Trials Womens 400h Final 2008 USA Track & Field

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெரிய இந்தியாவே ஒரு தங்கப்பதக்கமும் போனமுறை எடுக்கவில்லை ,

பார்ப்போம்... இந்த முறை இலங்கை எத்தனை எடுக்கின்றது என்று ,

எப்படியோ ஆசியர்களின் மானத்தை காப்பாற்ற சீனாவும் , யப்பானும் , கொரியாவும் உள்ளது சந்தோசம் .

அதுவும் இல்லாவிட்டால் மற்றவர்கள் , ஆசியா ஒரு சோத்து மாடு என்று திட்டுவார்கள் .

ஐரோப்பிய தேசங்களான பிரிட்டன், பிரான்ஸை விட சீனா, ஜப்பான், தென் கொரியா அதிக பதக்கம் எடுப்பது வழக்கம். யார் யாரை நக்கல் பண்றது..? எடுத்துச்சொல்லுங்கள் தமிழ் சிறி

இதில் நக்கல் என்று எதனை கருதுகின்றீர்கள் லீ . ஒலிம்பிக்போட்டியில் ஆசியாவில் சீனா , யப்பான் , கொரியா தான் அதிக பதக்கம் எடுப்பது என்று பொருள்பட குறிப்பிட்டேன் .

குட்டி நாடான இலங்கை , போன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் குறிப்பிட்ட அளவு முன்னேறி வந்து , பதக்கத்தை தவறவிட்டதாக ஞாபகம்.

உலகின் இரண்டாவது சனத்தொகையை கொண்ட இந்தியாவால் ஏன் ஒரு தங்கப்பதக்கமும் எடுக்க முடியவில்லை என்பதே என் ஆதங்கம் .

இதில் நக்கல் என்று எதனை கருதுகின்றீர்கள் லீ . ஒலிம்பிக்போட்டியில் ஆசியாவில் சீனா , யப்பான் , கொரியா தான் அதிக பதக்கம் எடுப்பது என்று பொருள்பட குறிப்பிட்டேன் .

குட்டி நாடான இலங்கை , போன ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் குறிப்பிட்ட அளவு முன்னேறி வந்து , பதக்கத்தை தவறவிட்டதாக ஞாபகம்.

உலகின் இரண்டாவது சனத்தொகையை கொண்ட இந்தியாவால் ஏன் ஒரு தங்கப்பதக்கமும் எடுக்க முடியவில்லை என்பதே என் ஆதங்கம் .

அதைதான் நானும் சொல்றன் தமிழ் சிறி.. ஆசியாக்காரரை நக்கல் பண்றதுதானே பிரிட்டன்காரரின் வேலை. (உங்களை சொல்லவில்லை :) )

  • கருத்துக்கள உறவுகள்

முரளி, இம்முறை 100மீ ல்(ஆண்கள்) ஜமேக்கர்களுக்கு தான் அதிக வாய்ப்பு உண்டு. அவர்கள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.பார்ப்

  • கருத்துக்கள உறவுகள்

அதைதான் நானும் சொல்றன் தமிழ் சிறி.. ஆசியாக்காரரை நக்கல் பண்றதுதானே பிரிட்டன்காரரின் வேலை. (உங்களை சொல்லவில்லை :lol: )

நான் தவறாக விளங்கி கொண்டு விட்டேன் , மன்னிக்கவும் லீ . :wub:

  • தொடங்கியவர்

நுணாவிலான்,

நீங்கள் சொல்லிறதும் சரிதான். ஜமாய்க்கா வீரருக்கும், அமெரிக்க வீரருக்கும் இடையில 100m sprint இல பலத்த போட்டி நிலவப்போகிது. எண்டாலும் இறுதிவரை சொல்ல ஏலாது யாருக்கு தங்கம் கிடைக்கும் எண்டு. பொறுத்து இருந்து பாப்பம் என்ன நடக்கிது எண்டு. கீழ இருக்கிற இந்த காணொளியில ஜமாய்க்காய் வீரர் தான் அமெரிகாவிண்ட டைசனை வெற்றிபெறுவன் எண்டு சொல்லி இருக்கிறார்.

ம்ம்..நல்லதொரு கலந்துரையாடல்..(உலக பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்)..இங்கே கலந்துரையாட போறார்கள் சப்பா இப்பவே கண்ண கட்டுதே :lol: ..சரி..சரி நான் பகிடிக்கு...போன முறை நம்மண்ட அவுஸ்ரெலியா நான்காம் இடத்தை பெற்றிருக்கு இந்த முறை எப்படியாவது மூனாம் இடத்தை பெறனும் இது தான் எண்ட விருப்பம்.. :lol:

ஆனபடியா நானும் ஒலிம்பிக்கில ஓடுவோமோ எண்டு யோசித்திருக்கிறன்..(இதை பத்தி எல்லாரும் என்ன நினைக்கிறியள் பாருங்கோ)... :o

அது சரி நீங்க எந்த போட்டியினை ஒலிம்பிக்கில மிகவும் ரசிப்பீர்கள்..??..எனக்கு வந்து நீச்சல் போட்டி மற்றும் ஓட்ட போட்டி மட்டும் தான்..(மிச்சம் எல்லாம் இருந்து பார்க்கிற அளவிற்கு நம்மளிட்ட பொறுமை இல்லை) <_< ..ஆனா நான் நினைக்கிறன் இந்த முறையும் அமெரிக்கா தான் கூடுதலான பதக்கங்களை பெறும் எண்டு..இது என்னுடைய கணிப்பு பொறுத்திருந்து பார்போம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

முதலாவது தங்கம்.. Katerina Emmons - Czech Republic

Img214520419.jpg

ரெண்டாவது தங்கம்... Chen Xiexia - China

Img214520556.jpg

உலகின் சிகரமாய் எழுந்து நிற்கிறது சீனா. இப்போதைக்கு இதைத்தான் கூறமுடியும். வியக்கத்தக்க வகையில் ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி எங்க பீஜிங்கிலையோ நிற்கிறீங்கள்.அங்கு இணைய வசதி எப்படி?நீங்க வரகுள்ள என்ன பதக்கதோட வர போறியள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில், இத்தாலி அணிகள் வெற்றி

[Font Size - A - A - A]

ஒலிம்பிக் தொடரை பிரேஸில், இத்தாலி கால்பந்து அணிகள் வெற்றியுடன் தொடக்கியுள்ளன. நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் பிரேஸில் 1 -- 0 என பெல்ஜியத்தையும், இத்தாலி 3 -- 0 என ஹொண்டுராஸ் அணியையும் வீழ்த்தின.

சீனத் தலைநகர் பீஜிங்கில் 29 ஆவது ஒலிம்பிக் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. இதற்கு முன்னதாக ஆண்கள் கால்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. இதில் பிரேஸில், ஆர்ஜென்ரீனா உள்ளிட்ட 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகின்றன. வியாழக்கிழமை "சி' பிரிவில் நடந்த போட்டியில் பிரேஸில், பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கத்திலிருந்தே வெற்றிக்காக கடுமையாக போராடின. இதையடுத்து முதல் பாதி கோலின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியின் 79 ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் ஹெர்னானிஸ் வெற்றி கோல் அடித்து அசத்தினார். இறுதியில் பிரேஸில் 1 -- 0 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் சீன அணி, நியூஸிலாந்தை 1 - 1 என "டிரா' செய்தது.

இத்தாலி அபாரம்: "டி' பிரிவில் நடந்த போட்டியில் இத்தாலி, ஹொண்டுராஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய உலக சாம்பியன் இத்தாலி 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. இத்தாலி சார்பில் செபஸ்ரியன் கிளோவின்கோ (41 ஆவது நிமிடம்), கியுசெப்பி ரோஸி (45 ஆவது நிமிடம்), ராபர்ட் அகுவாபெரஸ்கா (52 ஆவது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆர்ஜென்ரீனா வெற்றி

"ஏ' பிரிவில் நடந்த போட்டியில் ஆர்ஜென்ரீனா 2 - 1 என ஐவரி கோஸ்ட் அணியை வென்றது. அவுஸ்திரேலியா சேர்பியா மோதிய மற்றொரு போட்டி தலா ஒரு கோலுடன் "டிரா' ஆனது. "பி' பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்கா 1 -- 0 என ஜப்பானை வீழ்த்தியது. நைஜீரியாவுக்கு எதிரான போட்டியை நெதர்லாந்து "டிரா' செய்தது.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை நடந்த ஏழு போட்டிகளின் படி ;

தங்க பதக்கத்தை பெற்றவர்கள் பட்டியலில் :

சீனா ------------------------ 2

அமெரிக்கா ---------------- 1

தென் கொரியா ----------- 1

  • கருத்துக்கள உறவுகள்

பீஜிங் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல் நாடுகள் வாரியாக கீழ் வரும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..!

http://results.beijing2008.cn/WRM/ENG/INF/...GL0000000.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் பந்தயத்தில் தனது மகள் பாரம் தூக்கும் போட்டியில் தங்கபதக்கம் பெறும் போது பெற்றோர் மகிழ்ச்சி கடலில்

xin55208050917104841721me7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை , முதல் ஐந்து நாடுகள் வருமாறு

Regions G S B Total

1 China 9 3 2 14

2 South Korea 4 4 0 8

3 USA 3 4 5 12

4 Italy 3 3 2 8

5 Australia 2 0 3 5

யாழ்களப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும் என்பதை 3போட்டியாளர்கள் சரியாகக் கணித்திருக்கிறார்கள். முதல் இடத்தில் யமுனாவும், 2ம் இடத்தில் கறுப்பியும், 3ம் இடத்தில் சுப்பண்ணாவும் இருக்கிறார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=436978

  • கருத்துக்கள உறவுகள்

1,104 ரொக்கெட்டுகள் மூலம் கருமேகக்கூட்டங்களை கலைத்து தொடக்க நிகழ்வை சிறப்புறச் செய்த சீனா

[11 - August - 2008] [Font Size - A - A - A]

உலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஒலிம்பிக் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

அதற்காக பிரமிக்கத்தக்க வகையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது போட்டி அமைப்புக்குழு. இதற்கிடையே வானிலை ஆய்வு மையத்தின் மழை அச்சுறுத்தல் எச்சரிக்கை அவர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

"நஷனல் ஸ்ரேடியத்தில்' தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அரங்கிற்கு மேலே கருமேகங்கள் சூழ்ந்தன. இது,ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இதுபோன்ற சூழ்நிலை உருவாகலாம் என சீன அரசு முன்னரே கணித்திருந்தது.அதற்காக தயார் நிலையில் ரொக்கெட்டுகளை வைத்திருந்தது.மேகக்கூட்டம் எந்நேரமும் மழையைக் கொட்டலாம் என உணர்ந்த சமயத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த ரொக்கெட்டுகளை கருமேகங்களை நோக்கிச் செலுத்தி கருமேகக்கூட்டங்களை சிதறடித்து, அனைவரது மனதிலும் மகிழ்ச்சி மழையைப் பொழிய வைத்தது.

மேகத்தைக் கலைக்க நகரில் 21 இடங்களிலிருந்து ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன.அதற்கான பணி உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்குத் தொடங்கி,இரவு 11.30 மணி வரை நீடித்தது.

மொத்தம் 1,104 ரொக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பெய்ஜிங் நகர வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் குயூ ஹு தெரிவித்தார்.

கருமேகங்களை சிதறடிக்க வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பணிதான், சீனாவில் இதுவரை அதற்காக மேற்கொண்ட பணிகளில் நீண்டது.அத்துடன் மேகங்களை சிதறடிக்க ரொக்கட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது சீனாவில் இதுவே முதல் முறை என்கிறார் அவர்.

thinakural.com

WOW :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Beijing 2008 Medal Table

R NOC Tot.

1 CHN 13 3 4 = 20

2 USA 7+ 6+ 8 =21

3 KOR 5+ 6 +1 =12

4 ITA 3+ 4+ 2 = 9

5 AUS 3+ 1 +5 = 9

6 JPN 3 +1+ 2 = 6

7 RUS 2+ 4+ 3 = 9

8 GER 2+ 1+ 1 = 4

9 GBR 2 +1 +1 = 4

10 CZE 2+ 0+ 0 = 2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.