Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம்

வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்]

நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு

உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும்,

தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என

அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில்

அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம்

25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில்

மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கான தீர்ப்பை இன்று வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய மனித

உரிமைகள் நீதிமன்றம், அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில்

கொழும்புக்கு நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்கா

பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து, விசாரணைகளுக்கு

உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவோர் முன்னரும் கைது

செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது தொடர்பான பதிவுகள் சிறீலங்கா

அரசாங்கத்தின் வசம் இருக்கக்கூடும் என்றும், அவ்வாறானோரின்

உடலில் காயங்கள் எவையும் இருந்தால், அது அவர்கள் கைது

செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலைக்கு இடமளிக்கும் என்றும்

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறான அபாயத்தை எதிர்நோக்கக்கூடிய விண்ணப்பதாரிகளை

கொழும்புக்கு நாடுகடத்துவது, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய

சாசனத்தின் மூன்றாவது சரத்தை மீறும் செயலாக அமையும் என்றும்

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் கொழும்பு நகரில் கைது

செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களை விட, கட்டுநாயக்கா பன்னாட்டு

விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்

அதிகமாக இருப்பதாகவும், எனினும் எந்தவொரு அகதித் தஞ்ச

விண்ணப்பமும் பொதுப்படையாக அல்லாது, தனிப்பட்ட சூழ்நிலைகளின்

அடிப்படையிலேயே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும்,

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வகையில், கொழும்புக்கு நாடுகடத்தப்படும் அனைத்துத்

தமிழர்களும், அபாயத்தை எதிர்நோக்ககூடும் எனக் கூற முடியாது

என்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், துரோகிகளாகவும், எதிரிகளாகவும் இனம்காணப்படுவோர்

தவிர்ந்த ஏனைய சாதாரண பொதுமக்களுக்கு, கொழும்பில் தமிழீழ

விடுதலைப் புலிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படப் போவதில்லை

என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

http://www.pathivu.com/?p=2136

பதிவு.கொம்

தமிழர்களுக்கு சிறீலங்காவில் பாதுகாப்பு இல்லை என்பதை, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று, இன்று வழங்கிய தீர்ப்பு ஒன்றின்மூலம் அனைத்துலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய தமிழர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அவரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என, ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானிய அரசினால் 1999ஆம் ஆண்டு 33 அகவுடைய தமிழர் ஒருவரது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

குறிப்பிட்ட இளைஞருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறீலங்காவில் 7 வருடங்களில் 6 தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை மீண்டும் சிறீலங்காவிற்கு அனுப்பினால் அவர் மீண்டும் வதைகளுக்கு உட்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று இன்றைய தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றின் இந்த தீர்ப்பு ஐரோப்பாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களிடம் இருந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று, பிரித்தானிய அரசு தமிழர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனவும், தமது நிதிமன்றில் நிலுவையிலுள்ள 342 வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் சிறீலங்காவில் அனைத்து தமிழர்களுக்கும் பிரச்சினை இல்லை என்ற பிரித்தானிய சட்டவாளர் தரப்பு வாதத்தையும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilseythi.com/srilanka/The-Eu...2008-07-17.html

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகங்களில்

Court stops UK from returning Tamil to Sri Lanka

Thu Jul 17, 2008 8:24pm IST Email | Print | Share| Single Page[-] Text [+] STRASBOURG, France (Reuters) - The European Court of Human Rights ruled on Thursday that an ethnic Tamil man denied asylum in Britain could not be sent back to his native Sri Lanka because he would be at risk of torture there.

The ruling could have implications for hundreds of other Tamils trying to avoid expulsion from Britain to Sri Lanka.

Thursday's ruling centred on a 33-year-old man who sought asylum in Britain in 1999 citing fears of ill-treatment by the Sri Lankan authorities, who had detained him six times in seven years on suspicion of involvement with the rebel Tamil Tigers.

The man had been released without charge every time. He was ill-treated during at least one of his detentions and his legs bear scars from being beaten with batons.

The man also feared the Tigers because his father had done some work for the Sri Lankan army, which has been fighting the rebels for 25 years in a civil war estimated to have killed 70,000 people.

The European Court of Human Rights said it had received an increasing number of petitions from ethnic Tamils facing expulsion to Sri Lanka from Britain and it had asked British authorities to suspend 342 procedures pending rulings.

Fighting has intensified in the north of Sri Lanka after the army, which has vowed to finish off the Tigers this year, drove the rebels out of their eastern enclave in 2007.

The Tigers, fighting for an independent state for the ethnic Tamil minority in predominantly Sinhalese Sri Lanka, regularly retaliate with suicide attacks.

In its ruling, the European Court of Human Rights "took note of the current climate of general violence in Sri Lanka", according to a summary posted on the court's website.

The court agreed with British authorities that the deterioration in security did not create a general risk for all Tamils returning to Sri Lanka, but it found there were specific risk factors in the case they were examining.

The court said the man's father had signed a document to ensure his release from detention and therefore it was possible authorities would have records of him and would detain him on arrival in Colombo.

"The court considered that where there was a sufficient risk that an applicant would be detained ... the presence of scarring, with all the significance that the Sri Lankan authorities were then likely to attach to it, had to be taken as greatly increasing the cumulative risk of ill-treatment."

http://in.reuters.com/article/southAsiaNew...ews&sp=true

Court backs Tamil asylum seeker

The European Court of Human Rights has ruled in favour of an ethnic Tamil who has been fighting efforts to return him to Sri Lanka from Britain.

The asylum seeker, who has not been named, said he feared ill-treatment by both Tamil Tiger rebels and the army.

In its judgement the court took into account what it called the systematic use of torture by the military in its efforts to combat the Tigers.

It is understood that the verdict could set an important legal precedent.

Several other similar cases brought by Sri Lankan asylum seekers are pending.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7512485.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

342 இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக ஐரேப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

[வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008, 01:39 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

பிரித்தானியாவிலிருந்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பொன்றை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தான் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு தான் பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என்று 33 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர், தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணை செய்தது.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், குறிப்பிட்ட நபரை அவரின் விருப்பத்துக்கு மாறாக – தாயகத்துக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று பிரித்தானிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் இலங்கையில் வசித்த காலப்பகுதியில், ஏழு வருடங்களில் ஆறு தடவைகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

ஆனால், எந்தக் குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை. காரணமின்றி கைது செய்யப்பட்ட இவர், ஒரு தடவை விடுதலை செய்யப்படும்போது கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றார்.

இவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு மீணடும் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

ஆகவே, இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள - இப்படியான இலங்கைத் தமிழர்கள் 342 பேரின் வழக்குகளை தாம் தற்போது விசாரித்த வருவதாகவும் -

இந்த வழக்கு தொடர்பான தீரப்பை தாம் அறிவிக்கும்வரை அவர்கள் எவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் பிரித்தானிய அதிகாரிகளை கோரியுள்ளது.

மூலம்: புதினம்

பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது.

பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகள் வேறு பலரின் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மனுதாரருக்காக வாதாடிய வழக்குறைஞர் நுவாலா மோல் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.