Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்ம மனிதனை துரத்திய மக்கள் - நள்ளிரவில் சென்னையில் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.

கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்தக் காயத்துடன் ஒரு மர்ம நபரைப் பார்த்த அப்பகுதியினர், அவர் சைக்கோ மனிதனாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் கம்பு, கட்டைகளுடன் திரண்டனர். அந்த மர்ம நரபரை துரத்தினர். அவர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடினார். மேலும், வித்தியாசமான முறையில், கூட்டத்தைப் பார்த்து மிரட்டலாக உருமியதால் மக்கள் பீதியடைந்து இவர் நிச்சயம் சைக்கோதான் என்ற முடிவுக்கு வந்து துணிச்சலுடன் அவரைத்துரத்தினர்.

ஆனால் அந்த நபர் மக்களிடம் பிடிபடாமல் ஒவ்வொரு கட்டடமாக தாண்டி குதித்து ஓடியுள்ளார். ஆனாலும் விடாமல் பொதுமக்கள் அவரைத் துரத்தினர்.

இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாகி விட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கம்பு, கட்டைகளுடன் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அரிந்ததும் கே.கே.நகர் போலீஸார் விரைந்து வந்து அந்த மர்ம நபரைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.

இதையடுத்து ஜீப்பை சூழ்ந்த மக்கள், அந்த நபரை அடிக்க முயன்றனர். அவர்களிடமிருந்து அந்த நபரைக் காக்க பெரும்பாடு பட்ட போலீஸார், ஒரு வழியாக பொதுமக்களை விரட்டி விட்டு ஜீப்புடன் கிளம்பினர்.

இந்த களேபரத்தில் அந்த சாலை வழியாக வந்த சில வாகனங்கள் மீதும் மக்கள் தாக்குதல் நடத்தினர்.

மர்ம நபர் சிக்கியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதியே விடிய விடிய களேபரமாக இருந்தது. பிடிபட்ட நபர் யார் என்பது குறித்து போலீஸார் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகே உண்மை தெரிய வரும் எனத் தெரிகிறது.

thatstamil.oneindia.in

அவன் எனவனோ?... இவன் தானோ?

போலீஸுக்கு வழமையாக மாமூல் கொடுப்பவனோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

காவலாளியைக் கொன்றதாக நம்பிற :lol: ஆளுக்கு எதிரா இவ்வளவு ஆவேசப் படும் சென்னைவாசிகள் தென்கோடியில மீனவரைக் கொத்துக்கொத்தா கொன்று குவிக்கிற இலங்கை அரசாங்கத்தில ஏன் அதே ஆவேசத்தைக் காட்டுறதில்லை? :D மீனவன் செத்தால் பரவாயில்லை ஆனால் தன் வீட்டுக்கு ஒண்டும் ஆகக் கூடாது ஏண்ட சுயநலமோ? அல்லது நெருப்பு தூரத்திலதானே எரியிது எண்ட அசட்டையா? :lol:

காவலாளியைக் கொன்றதாக நம்பிற :o ஆளுக்கு எதிரா இவ்வளவு ஆவேசப் படும் சென்னைவாசிகள் தென்கோடியில மீனவரைக் கொத்துக்கொத்தா கொன்று குவிக்கிற இலங்கை அரசாங்கத்தில ஏன் அதே ஆவேசத்தைக் காட்டுறதில்லை? :lol: மீனவன் செத்தால் பரவாயில்லை ஆனால் தன் வீட்டுக்கு ஒண்டும் ஆகக் கூடாது ஏண்ட சுயநலமோ? அல்லது நெருப்பு தூரத்திலதானே எரியிது எண்ட அசட்டையா? :D

உஸ்ஸ்......... :D:lol::D !

நம்மட வீக் பாயின்ட்ல கைவைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

காவலாளியைக் கொன்றதாக நம்பிற :D ஆளுக்கு எதிரா இவ்வளவு ஆவேசப் படும் சென்னைவாசிகள் தென்கோடியில மீனவரைக் கொத்துக்கொத்தா கொன்று குவிக்கிற இலங்கை அரசாங்கத்தில ஏன் அதே ஆவேசத்தைக் காட்டுறதில்லை? :D மீனவன் செத்தால் பரவாயில்லை ஆனால் தன் வீட்டுக்கு ஒண்டும் ஆகக் கூடாது ஏண்ட சுயநலமோ? அல்லது நெருப்பு தூரத்திலதானே எரியிது எண்ட அசட்டையா? :lol:

அது தானே . :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jamuna

எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்) :D ..என்ன உவன் உந்த பக்கம் நிற்கிறானே எண்டு பார்க்கிறது விளங்குது சரி..சரி சொல்லுறன்..அது என்னவெண்டா நானும் என் வானரபடைகளும் எங்கள் ஊரில் இருந்து இன்னோரு ஊருக்கு செல்வதினால்..யாழ்கள கோகுலதில் இருந்து மறைகிறோம்.. :lol:

இந்த செய்தியை கேட்டவுடன் நீங்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கமாட்டீர்கள் எண்டு எனக்கு தெரியும் எண்டாலும் சொல்லிட்டு போவோம் எண்டு தான் பாருங்கோ :lol: ..நான் சென்று வரமட்டும் ராதைகள் எல்லாரும் பத்திரமாக இருகட்டும் சரியோ..அப்ப நான் போயிற்று வாரன்... :D

அட நீங்கள் நினைக்கிற மாதிரி கூட நாள் இல்லை வந்திடுவன் அது வரைக்கும் சந்தோஷமா இருங்கோ..அதுவரை உங்களை எல்லாரையும் கம்சனிடம் இருந்து சித்தப்பு காப்பாத்துவாராக.. :o

அப்ப நான் வரட்டா!!

confused0006.gif:Dconfused0006.gifyes4mf.gif

ஜமுனாவுக்கு என்ன நாந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.