Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம்

Featured Replies

ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம்

[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை:

ஜூலை 25, 1983..! இலங்கையில் இனவெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள இராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!

அரை நூற்றாண்டு காலமாக போரின் இரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, 'தமிழீழ விடுதலைப் புலிகள்'!

அனைத்துலக தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப் புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற சிறிலங்கா இராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

"இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை மீளச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். புலிகளை வீழ்த்த இன்னும் 10 ஆயிரம் வீரர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்!" என்று அறிவிக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமா உலகின் மற்ற தீவிரவாத அமைப்புகளைக் கண்டிக்கிறார். ஆனால், புலிகள் பற்றிய கேள்விகளுக்கு அவரது பதில் மௌனம்தான். "செல்லடிக்கிற இரவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆமிக்காரர்களும் இல்லாத எங்கட மண் வேண்டும்" என ஏங்கிக்கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது, அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? அன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர்களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புக்களில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக்களத்தில் புலிகள் கண்ட இழப்புக்கள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக்குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் அனைத்துலக பார்வையாளர்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள இராணுவம் முன்னேறி வருகிறது என சிறிலங்கா அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழீழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

"ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் தொடக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் இராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள இராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் நம்பிக்கையாக!

புலிகளின் நிரந்தர ஆதரவாளரான தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், "போர் தந்திரங்களின்படி சில இடங்களில் முன்னேறி, சில இடங்களில் பின்வாங்கினாலும் புலிகள் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவி பெறும் சிங்கள இராணுவத்திடம் பறித்தெடுத்த ஆயுதங்களைக்கொண்டே இத்தனை காலமும் வளமான போராட்டம் நடத்தி வருகிறார்கள் புலிகள்!" என்கிறார்.

"தமிழீழப் போராளிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அறிவியல்பூர்வமாகவும் இராணுவ ரீதியாகவும் பெரும் வெற்றியைச் சந்தித்திருக்கிறது. அனைத்துலக அளவில் தமிழீழம் அங்கீகரிக்கப்படவில்லையே தவிர, இலங்கையில் தமிழீழத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழீழத்துக்கான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நீதி, காவல், கல்வி, மருத்துவம், நிதி என அனைத்துத்துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன. சிறிலங்கா சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை ஒட்டி, புலிகள் அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் புலிகளின் நேர்மையை உலகுக்குக் காட்டுவதாக இருக்கிறது!" என்று பெருமிதப்படுகிறார் தொல்.திருமாவளவன்.

"ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால் தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை" என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரனோ "ஒவ்வொரு முறை சமரச உடன்படிக்கை ஏற்படும்போதும், சிறிலங்கா அரசுதான் அதை மீறிச் செயற்பட்டு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சம உரிமை வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டு, ஒரே வாரத்தில் கொடுத்த வாக்குறுதியைக் குப்பையில்தான் சிறிலங்கா அரசு போடும். இதற்கு தனி ஈழம் அமைவது ஒன்றுதான் இறுதித் தீர்வாக அமையும்" என்கிறார் ஆவேசமாக.

"இதுவரை பாகிஸ்தான் உட்பட அசாதாரணச் சூழ்நிலை நிலவும் பல அண்டை நாடுகளில் எல்லாம் சார்க் மாநாடுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மூன்று கப்பல்களில் ஆயுதங்களும் 3 ஆயிரம் போர் வீரர்களும் பிரதமரின் பாதுகாப்புக்கு என்று போனதில்லை. இப்போதுதான் இந்த வேடிக்கை நடக்கிறது.

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது இந்திய அரசு. சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்த பல லட்சம் இந்தியத் தமிழர்களை ஒன்றுமில்லாத பிச்சைக்காரர்களாகத் திரும்பப் பெற்றது, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது, அதன் பலனாக இன்றும் தமிழக மீனவர்களைப் பலி கொடுப்பது வரை இது தொடர்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நாடுகளுடன் சிறிலங்கா உறவு வைத்துக்கொள்ளாது என்று நினைக்கிறது இந்திய அரசு. ஆனால், பாகிஸ்தானிய வானோடிகள்தான் சிங்களப் போர் வானூர்திகளை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவும் தன் இராணுவ தளத்தை இலங்கையில் அமைப்பதற்கு நேரம் பார்த்துவிட்டது. இதெல்லாம் தெரிந்தும் நம் டெல்லி அறிவுஜீவிகள் இப்படி இருக்கிறார்கள்!" என்று காட்டமாகிறார் பழ.நெடுமாறன்.

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக்கோப்போடு முன்னெடுத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. "பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்" - சமீபத்தில் இலங்கை இணையத்தளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விடயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்துகொள்ள தமிழகம் முழுவதும் கணித்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவவேண்டும் என்பதே அது! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஏழு, எட்டு வயசுப் பசங்களை எல்லாம் தீவிரவாதிகளாக மாத்துறதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையா இருந்தா, அப்படி ஒரு இயக்கம் எதுக்கு? தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இங்கே இருந்துதான் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கடத்துறாங்க புலிகள். இதனால் தமிழகத்துக்கு எப்பவும் பாதிப்புதான். இப்போ இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் சரி. தனி ஈழம் சரியான தீர்வு இல்லை" என்று காரசாரமான விமர்சனத்தைப் புலிகள் மீது வைக்கிறார் சோ.

தமிழனின் பணத்திலே தமிழ்நாட்டிலே வாழ்ந்து கொண்டு இப்படி பேசும் இது போன்ற கேடுகெட்ட வந்தேறிகளால் தான் தமிழர்களுக்கு மிகப்பெரும் பிரச்சனை.

சோவினுடைய கருத்தை நாம் புறக்கணக்கலாம்.நம்மவரிடத்தி

ஈழத்துக்கு எதிரான கருத்தும் தமிழக பார்ப்பனர்களின் விகிதாசாரமும் கிட்டத்தட்டச்சரியாத்தானிரு

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ , வந்தோரை வாழவைக்கும் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டுதான் தமிழருக்கு எதிராக குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றா

சர்வே முடிவுகள்:

1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை...

(அ)எப்போதும் ஆதரிக்கிறேன் 54.25%

(ஆ)எப்போதும் எதிர்க்கிறேன் 17.40%

(இ)ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் 28.34

2. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் அமைப்பது...

(அ)சரியான தீர்வு 55.44

(ஆ)தேவையில்லை 9.91

(இ)சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் 34.63

3. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை....

(அ)தொடர வேண்டும் 27.43%

(ஆ)தடையை நீக்க வேண்டும் 47.65

(இ)பொறுத்திருந்து பார்க்கலாம் 24.91%

4. விடுதலைப்புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது...

(அ)சரியான நிலைப்பாடுதான் 49.46

(ஆ)ஆபத்தான கொள்கை 13.61

(இ)வேறு லாப நோக்கத்துக்காக 37.02

5. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றவாளியான பிரபாகரன்...

(அ) தண்டிக்கப்பட வேண்டியவர் 43.02% , 1805

(ஆ)குற்றமற்றவர் 16.9% , 709

(இ)குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம் 40.07% , 1681

6. இலங்கைப் பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்.?

(அ) தலையிடவே கூடாது 12.58

(ஆ)தலையிட்டு தீர்வு காணலாம் 62.59

(இ)நிலைமை கைமீறினால் மட்டுமே தலையிட வேண்டும் 24.81

7. கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்வது...

(அ)ஏற்றுக்கொள்ளவே முடியாது 43.14

(ஆ)தவிர்க்க முடியாத அணுகுமுறைதான் 25.95

(இ)அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை 30.89

8. தரைப் படை, கடற் படை, வான் படை என்று விடுதலைப்புலிகள் வளர்ச்சி அடைவது...

(அ)பெருமைக்குரிய விஷயம் 46.24

(ஆ)இந்தியாவுக்கு ஆபத்து 18.59

(இ)இரண்டுமே இல்லை 35.16

9. விடுதலைப்புலிகளை தி.மு.க....

(அ)இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் 22.71

(ஆ)ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும் 47.48

(இ)பட்டும் படாமலேயே இருக்கலாம் 29.79

10.தண்டனைக் காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை.....

(அ)விடுதலை செய்ய வேண்டும் 41.64

(ஆ)விடுவித்து கண்காணிப்பில் வைத்திருக்கலாம் 37.64

(இ)சிறைத் தண்டனை தொடரட்டும் 20.71

11. கச்சத் தீவை இந்தியா...

(அ)திரும்பப் பெற வேண்டும் 65.76

(ஆ)விட்டுவிடலாம் 6.26

(இ)குறைந்தபட்சம் அந்தப் பகுதிக்குப் போகும் உரிமையாவது

பெற வேண்டும் 27.96

12. இலங்கை கடற் படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு...

(அ)ஆயுத ரீதியாக பதிலடி கொடுக்கலாம் 29.65

(ஆ)பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் 34.89

(இ)சர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக கண்டிக்கலாம் 35.44

நன்றி-ஆர்குட்

"விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன்

தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?

உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகுவிரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.