Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன்

திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்]

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்பிட்டிருக்கின்றார். இதனை அடுத்து முல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியான மாந்தை கிழக்கு பிரதேசச் செயலகப்பிரிவுக்குட்பட்ட பனங்காமம், நட்டாங்கண்டல், ஒட்டங்குளம், கரும்புள்ளியான், பாண்டியன்குளம், செல்வபுரம், கிடாய்ப்பிடித்தகுளம் (வவுனிக்குளத்தின் வால்கட்டுப்பகுதி), சிவபுரம், பாலிநகர், பட்டுப்பூச்சி, கொல்லவிளாங்குளத்தின் சில பகுதிகள், ஆகியன படையினர் வசம் சென்றிருக்கி;றது. உண்மையி;ல் இப்பிரதேசங்களின் வீழ்ச்சி யாருடைய யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்? என்பதை சரத்பென்சேகா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனக்கூறலாம்.

கடந்த 24ஆம் திகதி இராணுவத்தின் 57வது டிவிசன் கட்டளைத்தளபதி மேஜர். ஜென்ரல் ஜெகத் டயஸ் தலைமையில் டிவிசன் 57-1 வது படையணி வவுனிக்குளத்தின் அணைக்கட்டுப் பகுதியினை இரகசிய நகர்வின் மூலம் கைப்பற்றியதை அடுத்து அப்பிரதேசத்தின் பிரதான நகரான மல்லாவியை நெருங்கிவிட்டோம் என அரசதரப்பு மார்பு தட்ட. சிங்கள ஊடகங்கள் இதனை முக்கியத்துவப் படுத்தி தலைப்புச் செய்தியாக்கின.

உண்மையில் இந்தப்பிரதேசத்தின் இராணுவ நடவடிக்கை என்பது இராணுவ, அரசியல், பொருளாதார முப்பரிமான இலக்குக் கொண்டதாக அமைகின்றது. கிட்டத்தட்ட கடந்த இருவருடங்களாக வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் வன்னியின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான கட்டுக்கரைக் குளமும, அதன் வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து தற்போது. வன்னியின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கமான வவுனிக்குளப் பகுதியும் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதனால் வன்னி மக்களின் வாழ்வாதாரமான பரந்த நெல்வயல் நிலங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வன்னியின் குளத்தர வரிசைகளில் பெரிய குளங்களான முறையே 1வது இரணைமடு, 4வது முத்தையன்கட்டு, 5வது தண்ணிமுறிப்பு, என்பனவே எஞ்சியிருக்கின்றன. எனவே ஐந்தில் இரண்டை விழுங்கியதன் மூலம் வன்னி மக்களை மண்டியிடச் செய்ய அரசு எத்தணிக்கின்றது. அத்தோடு மன்னார் மாவட்டத்தின் முழுப்பகுதியையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதன் மூலம் புலிகளை மன்னார்ப் பிரதேசத்திலிருந்து வெகு தூரத்திற்குப் பின்தள்ளி மன்னார்க் கடற்ப்பரப்பின் எண்ணை வளத்தினை பிராந்திய ஏகாதிபத்தியங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து தமிழீழத்தின் மிகப்பெரிய தேசிய வளமான மன்னார் எண்ணை வளத்தினை விற்று பெறுகின்ற பணத்தைக் கொண்டு தமிழ்த் தேசியத்தை அழித்து தமிழினத்தை அடிமை கொள்ளப் பார்க்கின்றது.

அடுத்து வவுனிக்குளப் பிரதேசத்தின் மீதான இராணுவப் பிரசன்னம் என்பது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரு மாவட்;டங்களில் இராணுவம் மன்னார் மாவட்டத்தைக் கடந்து முல்லை மாவட்டத்தின் இரண்டு பிரதேசச் செயலகங்களான துணுக்காய், மாந்தை கிழக்கு (நட்டாங்கண்டல்), ஆகியவற்றை கைப்பற்றுவதன் மூலம் முல்லை மாவட்டத்தின் ஏறக்குறைய அரைவாசிப் பகுதியை (ஏ9 வீதிக்கு மேற்குப் பக்கம்) அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்து விட்டதாகவும் அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் நுழை வாயிலில் நிற்பதாகவும் காட்டி அரசியல் இலாபம் தேட அரசு முற்படுகின்றது. இதற்கிடையில் பனங்காமம் வன்னி மன்னர்களின் பழைய தலைநகரம் இதனைக் கைப்பற்றியதை சிங்கள ஊடகங்கள் மறந்து விட்டது ஏனோ தெரியவில்லை.

இனி இப்பிரதேசத்தினுடைய புவியியல், இராணுவச் சாதகத்தன்மை பற்றி நோக்குவோமாயின் தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள பிரதேசமானது. பறங்கியாறு, பாலியாறு, உப்பனாறு ஆகிய மூன்று ஆற்றுப் பள்ளத்தாக்குச் சமவெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இராணுவத்தின் மன்னார்ப் படைநடவடிக்கை பறங்கியாற்றின் தெற்குப் பிரதேசத்தினை கைப்பற்றுவதை நோக்காகக் கொண்டு அவ்வாற்றுப் பிரதேசத்தின் காடுகளினூடாக நகர்ந்ததனால் பெருமளவு பிரதேசம் சண்டைகளின்றியே இராணுவ வசமானது. ஆனால் அடுத்த கட்டமாக மல்லாவி நோக்கிய நகர்வென்பது பாலியாற்றின் இருமருங்கிலுமுள்ள பரந்து விரிந்த வயல் நிலங்களினூடாகவே மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதாவது நட்டாங்கண்டலினூடாக பாண்டியன் குளத்தை அடைந்து அதிலிருந்து சிவபுரத்தை பாலியாறும் உப்பனாறும் சந்திக்கும் பற்றைக்காட்டுப் பிரதேசத்தினூடாக இரகசியமாக நகர்ந்து சிவபுரம் சிவன் கோயிலுக்கு அண்மையில் உள்ள வவுனிக்குளத்தின் வான்கட்டுப்;பிரதேசத்தில் (மேலதிக நீர் வெளியேறும் பகுதி) நிலைகொண்டிருந்த புலிகளின் சிறிய அணியின் மீது திடீர்த் தாக்குதலை மேற்கொண்டு அப்பிரதேசத்ததை கைப்பற்றியதன் மூலம் வவுனிக்குளத்தின் அணைக்கட்டுப்பகுதி முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது. மற்றொரு அணி பாண்டியன் குளத்திலிருந்து பாலியாற்றைத் கடந்து பாலிநகரின் வயல் வெளிப்பகுதிக்குப் பின்னுள்ள பற்றைக்காடுகளால் நகர்ந்து பாலிநகரைக் கைப்பற்றியிருக்கின்றது. இதன்போது புலிகளின் சில உடலங்களையும் அவர்கள் கைப்பற்றியிருக்கின்றார்கள்.

இச்சண்டையை அடுத்து விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்பரண் வரிசையை பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார்கள். இனிவரும் சண்டைகள் பெரும்பாலும் பாலியாற்றில் இருமருங்கிலும் நிகழப் போகின்றது. பாலியாறு என்பது. ஓமந்தைப் பிரதேசத்திலிருந்து தொடங்கி வெள்ளாங்குளம் கடற்பரப்பில் (மூன்றாம் பிட்டிக்கும் வெள்ளாங்குளத்திற்கும் இடையில் ) கடலுடன் கலக்கின்றது. இதற்குக் குறுக்கே தமிழ் மன்னனான எல்லாள மன்னனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் சிறிய அணையைக் கட்டி ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. அழிவடைந்த நிலையில் இருந்த அந்நீர்த்தேக்கத்தினை 1950 களில் விரிவு படுத்தி வவுனிக்குளம் நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இதனால் பாலியாற்றின் நீர் முழுவதும் வவுனிக்குளத்தினால் சிறைப்படுத்தப்பட்டிருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசினை முழிப்பில் வைத்திருக்கச் சொல்லிக் கட்டுரையாளர் சொல்ல வருகின்றாரோ?

ஆதாரத்துடனான தமிழீழ வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களுடன்தான் கட்டுரையாளர் நகர்ந்திருக்கிறார். திருப்புமுனை எந்த இடத்தில் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துடனான தமிழீழ வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களுடன்தான் கட்டுரையாளர் நகர்ந்திருக்கிறார். திருப்புமுனை எந்த இடத்தில் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

உலகத்தில உள்ள எல்லாருக்கும் தெரியும் புலிகள் தாக்குவார்கள் என்று. ஆனால் எப்ப என்பது எவருக்குமே தெரியாது. அங்கு தான் புலிப்படையின் பலம் தங்கி இருக்கிறது. எதிரி பலவீனமாக உள்ள தருணமே.. புலிக்கு சாதகமான தளம்.

பலவீனம் என்பது பல விடயங்கள் சார்ந்திருக்கிறது. வெறும் ஆயுத பலம் மட்டும் படைப்பலத்தை தீர்மானிக்காது. அப்படி தீர்மானித்திருந்தால்.. ரஷ்சியா ஜேர்மனியிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! வியட்நாம் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! :icon_idea:

மிகச் சரியான கருத்து. ஏற்றுக்கொள்கிறேன். ஆய்வாளர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், எதிரிகள் கூட எந்த இடத்தில் எந்த வடிவத்தில் நிலை திரும்பும் என்பதை எதிர்பார்க்கின்றார்கள். இந்தியப் புலனாய்வுத் துறையினரின் இலங்கைக்கான எச்சரிக்கையின் தொனிப் பொருளும் இதுவாகத்தானிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில உள்ள எல்லாருக்கும் தெரியும் புலிகள் தாக்குவார்கள் என்று. ஆனால் எப்ப என்பது எவருக்குமே தெரியாது. அங்கு தான் புலிப்படையின் பலம் தங்கி இருக்கிறது. எதிரி பலவீனமாக உள்ள தருணமே.. புலிக்கு சாதகமான தளம்.

பலவீனம் என்பது பல விடயங்கள் சார்ந்திருக்கிறது. வெறும் ஆயுத பலம் மட்டும் படைப்பலத்தை தீர்மானிக்காது. அப்படி தீர்மானித்திருந்தால்.. ரஷ்சியா ஜேர்மனியிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! வியட்நாம் அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்க வேண்டும்..! :icon_idea:

உண்மைதான்

அதுமாத்திரமல்ல

கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல்

போரும் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் அதனாலேயே............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு கட்டுரையில் வவுனிக்குளம் முக்கியம் என்றார், வவுனிக்குளம் போய்விட்டது. தற்போது முழங்காவில், நாச்சிக்குடா, மாங்குளம், பாலமோட்டை முக்கியமான இடங்கள் என்கிறார். எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கின்றது என்று பார்ப்போம்!

:(

நானும் கிருபனுக்கு அவருடைய ஆய்வு பிடிச்சுத்தான் கொண்டு வந்து இணைக்கிறார் எண்டு கொண்டு இருக்கிறன். வர வர களத்தில ஒருவருமே சீரியசா எழுதுறாங்கள் இல்லை

:(நானும் கிருபனுக்கு அவருடைய ஆய்வு பிடிச்சுத்தான் கொண்டு வந்து இணைக்கிறார் எண்டு கொண்டு இருக்கிறன். வர வர களத்தில ஒருவருமே சீரியசா எழுதுறாங்கள் இல்லை

என்னத்தை சொல்ல குருக்ஸ் மதில் மேல் பூனையாக நின்று கருத்து எழுத தான் எல்லோரும் விரும்புகிறார்கள் .

நல்ல காலம் மோகன் அண்ணாவுக்கும் அந்த என்னம் வரவில்லை, அப்படி வந்தால் நடுநிலை அது இது என்று கருணாவையும் டக்கிளைசையும் யாழ்கள மட்டு நிறுத்தினராக போட்டு இருப்பார்.......

ஆனாலும் எங்களுக்கும் உங்கள விட உள்ளுக்க உதறல் தான் ஆனா காட்டி கொள்ளவில்லை :D

Edited by I.V.Sasi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியனின் கட்டுரையில் உள்ள விடயங்களை டி.பி.எஸ். ஜெயராஜும் தனது ஆங்கிலக் கட்டுரையில் ( http://transcurrents.com/tc/2008/08/post_18.html ) தாராளமாகப் பாவித்துள்ளார்.. வரும்படியில் ஏதாவது பங்கு கொடுத்தால் நல்லது..

Edited by kirubans

தமிழில் இருக்கோ?

தமிழீழம் கிடைக்கும் என்று ஆங்கிலமும் ஏறவில்லை.....

அட பாவியள் கடசியா உங்கடை இங்கிலீசுப் பிரச்சனையையும் தமிழீழத்தின்ரை தலையில கட்டிப்போட்டியளே? தமிழில மே மே எண்டு ஒற்றைக்காலில கத்தினாலும் ஒருவரும் தமிழீழம் தரமாட்டாங்கள்.

பிறகு எழுதாதேங்கோ கரும்புலிகள் என்ன செய்கிறார்கள் அப்பிடி நாங்களும் செய்யப் போறம் எண்டு.

உவர் மோகன் யாழ் களத்தில அங்கத்தவர்களாக இருப்பதற்கு கட்டணம் ஒரு நாளைக் இத்தனை பதிவுகளுக்கு அதிகமாக பதியிறவைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டு அதை புனர்வாழ்வுக்கழகத்துக்கு குடுத்தார் எண்டா யாழ்களத்தில கன பிரச்சனை தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் இந்தாள் வயித்தெரிச்சல் பட்டு கடைசியாய் அல்சர் வந்து கிடக்கப்போகுது. :lol:

அட பாவியள் கடசியா உங்கடை இங்கிலீசுப் பிரச்சனையையும் தமிழீழத்தின்ரை தலையில கட்டிப்போட்டியளே? தமிழில மே மே எண்டு ஒற்றைக்காலில கத்தினாலும் ஒருவரும் தமிழீழம் தரமாட்டாங்கள்.

பிறகு எழுதாதேங்கோ கரும்புலிகள் என்ன செய்கிறார்கள் அப்பிடி நாங்களும் செய்யப் போறம் எண்டு.

உவர் மோகன் யாழ் களத்தில அங்கத்தவர்களாக இருப்பதற்கு கட்டணம் ஒரு நாளைக் இத்தனை பதிவுகளுக்கு அதிகமாக பதியிறவைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டு அதை புனர்வாழ்வுக்கழகத்துக்கு குடுத்தார் எண்டா யாழ்களத்தில கன பிரச்சனை தீர்ந்துவிடும்.

என்ன செய்வது கோவில் மணிகளை கழட்டி கொடுத்தும் ஒரு விமானமும் விழவில்லை பெரியாரின் சிலை தலைகளை கழட்டி கேற்ற போல் மாதிரி அடிச்சசவது விழுத்துவம் என்றால் அதுக்கும் வழி இல்லை.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.