Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஜினி காலில் விழுந்தாலும் கவலை இல்லை - சீமான்

Featured Replies

சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்...

2yvt45l.jpg

30u6044.jpg

2pr9ste.jpg

30rsciv.jpg

Thanks idlyvadai.blogspot.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் ரஜனி இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் விலாங்கு மீன்கள்.

தமிழ்நாட்டு மக்களை சினிமாபோதையில் மழுங்கடித்து விட்டு அதில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான்யா விட்டு வாங்கியிருக்கிறார் சீமான்..! :(

  • தொடங்கியவர்

நன்றி : குமுதம்

அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.

அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.

முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.

அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.

ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?

`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.

பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?'

இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.

ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.

இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.

உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !

குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.

(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.

இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.

எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.

அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.

சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.

அதில் ஆச்சரியம் இல்லை.

மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற

சீமான் புத்திசாலி..

சீமான்:

இப்ப அவர் என்ன சொல்லிட்டார்னு இவங்கல்லாம் குதிக்கிறாங்க... இந்த விளக்கத்தைக் கூட அவர் சொல்லாம விட்டிருக்கலாம். அதனால அவருக்கொண்ணும் நஷ்டமில்லை. ஆனா, இதனால ஒரு வன்முறை வெடிச்சி தியேட்டர்காரங்களும், அப்பாவி ரசிகர்களும், படத்தை விநியோகம் பண்ணியவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே வருத்தம் தெரிவிச்சார்.

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களா நாம். ரஜினி ஒரு அரசியல்வாதியல்ல. அவரும் மனிதர்தானே... இங்கே தமிழ்நாட்டில் தமிழர்களோடு வசிக்கிற ஒரு தமிழ் நடிகரை எதற்காக இப்படி அவமானப்படுத்த வேண்டும்.

குசேலன் திரைப்படத்துக்கு வந்த பிரச்சனையை தமிழினினத்துக்கே வந்த சோதனையாகத்தான் நான் பார்க்கிறேன். அதை நாமெல்லோரும் முன்வந்து தீர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் ரஜினி, தனி மனிதராகவே நின்று அதைத் தீர்த்த விதத்தைப் பாராட்டுகிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

யாரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்குப் பெயர் பகுத்தறிவுமல்ல என்றார்.

முழுவதும் படிக்க: http://thatstamil.oneindia.in/movies/speci...-his-stand.html

இப்படிச் சொன்ன சீமான், இப்போ யாருக்காக பல்டி அடித்திருக்கின்றார். ரஜனி சொன்னால் அது அவமானம், அதையே சீமான் செய்தால் என்னங்கோ?? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் பல்டி (குத்துக்கரணம்)அடிக்கிற போட்டியை ஒலிம்பிக்கில் இணைத்தால் தமிழ் நாட்டிற்கு பல பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதில் அதிக பதக்கங்களை வாங்கி குவித்த பெருமை கருணா நிதியை சேரும்

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.