Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கர அமைப்பினூடு வன்னி மக்களின் கரங்களை பற்றுவோம்.

Featured Replies

நான் இங்கு என்னால் முடிந்தவற்றை செய்தாலும்,

யாழின் "நேசக்கரம்" ஊடாகவும் செய்யவிரும்புகிறேன் எப்படி அனுப்புவது என்று அறியத்தரவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு என்னால் முடிந்தவற்றை செய்தாலும்,

யாழின் "நேசக்கரம்" ஊடாகவும் செய்யவிரும்புகிறேன் எப்படி அனுப்புவது என்று அறியத்தரவும்.

ராஜா கீழுள்ள இணைப்பில் முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் நாட்டுக்குரிய நேசக்கரப் பொறுப்பாளருடன் தனிமடலில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

யாழில் கள உறவாகி உள்நுழைந்தால் மட்டுமே இந்தப் பக்கத்தை பார்க்க முடியும்..!

http://www.yarl.com/forum3/index.php?showt...=42893&st=0

நெடுக்ஸ் மிக்கநன்றிகள்

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிவாரணம் வழங்காமல் படைகள் தடுப்பதுக்கு இலங்கை பொருளாதாரத்தில் அமிழ்ந்து போவது கூட ஒரு முக்கிய காரணங்களில் ஒண்று... நிவாரணம் கொடுக்கும் அளவுக்கு தேவையான நிதியை இலங்கை அரசு கொண்டு இருக்க வில்லை... ஈழத்தின் மீதான அரசின் பிடியே இந்த உணவு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதில் தான் தங்கி இருக்கிறது... அப்படி இருந்தும் அரசு பொருட்களை அனுப்பவில்லை என்பது எதை கோடிட்டு காட்டுகிறது எண்றால் அதன் நிதி பற்றாக்குறையைத்தான்...

இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை நிறுத்துவது என்பது நீண்டகால அளவில் அரசுக்கு வெளிவிவகாரங்களில் எவ்வளவு பாதிப்பை குடுக்கும் என்பது, பத்திரிகை சுதந்திரம் இலங்கை அரசுக்கு மீது சர்வதேச அரங்கில் தனிப்பட சுமத்தப்பட்ட பழியை நோக்கினால் புரியும்...

இலங்கை பொருளாதாரத்தில் அமிழ்ந்து போவதால் பாதிக்கப்படப்போவது எமது உறவுகளும்தான்.... ஆதலால் இலங்கையை பொருளாதாரத்தால் கட்டி எழுப்பி ஆயுதங்கள் வாங்கி போராட வசதி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் புலம்பெயர்ந்தவர்களுக்கு இல்லை... இல்லை கப்பல்களில் புலிகளுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டிய அவசியமும் இல்லை...

செய்ய வேண்டியது எல்லாம் உங்களின் உறவுகளை காக்க கொஞ்ச பணம்... ஒருநாளைக்கு குறைந்தது ஒரு £,$, Euro ஏதாவது ஒண்றை உண்டியலில் போட்டு சேமித்து மாத முடிவில் ( புலிகளுக்கு அனுப்பாவிட்டாலும்) ஊரில் இருக்கும் உங்களின் உறவுகளின் செலவுகளுக்கு அனுப்பி வையுங்கள்... புண்ணியமாக போகும்...

ஊரில் உறவுகள் இல்லை எண்றால் வெண்புறா, Sedot அல்லது (யாழின்) நேசக்கரமூடாக அனுப்புங்கள் (TRO தடை செய்ய படாத நாடுகளில் அவர்களூடாகவும் அனுப்பலாம்) அங்கு பயன் பெறப்போவது உங்களி உறவுகளின் உறவுகள்தான்....

தமிழீழ தேசத்தை கட்டி எழுப்ப உறவுகளுக்கு உதவுங்கள்...

Edited by தயா

***

நீங்கள் யாழ் நேசக்கரம் என்ற பெயரில் உதவி செய்ய முயற்சி எடுத்ததால் அதிலும் பங்கு எடுக்க விரும்புகிறேன்.

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் உறவுகள் இல்லை எண்றால் வெண்புறா, Sedot அல்லது (யாழின்) நேசக்கரமூடாக அனுப்புங்கள் (TRO தடை செய்ய படாத நாடுகளில் அவர்களூடாகவும் அனுப்பலாம்) அங்கு பயன் பெறப்போவது உங்களி உறவுகளின் உறவுகள்தான்....

தமிழீழ தேசத்தை கட்டி எழுப்ப உறவுகளுக்கு உதவுங்கள்...

நான் அறிந்த வரையில் TRO எந்தவொரு நாட்டிலும் (இதுவரை) தடைசெய்யப்படவில்லை. மக்களிடம் தவறான செய்திகளைத் தொடர்ந்து பரப்பாதீர்கள்.

நீங்கள் நீங்கள் வாழும் நாடுகளில் இருக்கும் நாடுகளில் உள்ள பொதுவான அமைப்பு ஒன்றின் மூலம் நிதியினைப் பரிமாறிக்கொள்ளுங்கள். ஒரு நாட்டிலிருந்து 3,4 வேறு வேறு இடங்களினூடாக தாயகத்திற்கு நிதி அனுப்பும் போதும் மேலதிகச் செலவுகள் ஏற்படும். அத்தகைய செலவுகளையும் குறைத்து மக்களிற்கு பெறப்படும் நிதியினால் உச்ச பயன் அடைக்கூடிய வழிகளினால் அனுப்பிக் கொள்ளுங்கள்.

நான் அறிந்த வரையில் TRO எந்தவொரு நாட்டிலும் (இதுவரை) தடைசெய்யப்படவில்லை. மக்களிடம் தவறான செய்திகளைத் தொடர்ந்து பரப்பாதீர்கள்.

2000 ஆண்டே இங்கிலாந்தில் தடை செய்ய பட்டு விட்டது... அதனை ஓட்டி வைத்தியர் மூர்த்தி அவர்களால் ஊனமுற்றோர் நலன் காப்பகமான வெண்புறா தோற்றம் கண்டது...

விடயம் தெரிந்த நீங்கள் இங்கிலாந்தில் TRO இயக்குனர்களின் பெயர் விபரத்தை, விலாசம் தொலை தொடர்பு இலக்கம், அறிய தந்தால் நல்லது... நான் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்...!!!

முடியவில்லை எண்றால் மற்றவரை முட்டாளாக்கும் வேலையை அடியோடு நிறுத்தி கொள்ளுங்கள்....!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலும் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் தடை செய்யப்பட்டுள்ளது. 2000ல் விடுதலைப்புலிகளை பிரித்தானியாவில் தடை செய்யும் போது தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தையும் தடை செய்தார்கள். தயா சொன்னது சரியே.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கர அமைப்புக்கு இடையூறு வரக்கூடாது என்பதிற்காக எனது கருத்துப்பகிர்வை தவிர்த்துக்கொள்கின்றேன்.

இருந்தும் பங்களிப்பு பற்றி சஹாராவுடன் தொடர்பு கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் மனிதாபிமான நெருக்கடி

வன்னியில் மனிதாபிமான நெருக்கடி, பாம்புக் கடியில் 23 பேர் பாதிப்பு, தொற்றுநோய் பரவும் ஆபத்து :

வன்னியில் உக்கிரமாக மோதல்கள் தொடரும் நிலையில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்து வருவதால் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் பெரும் திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இருப்பிடங்களைவிட்டு வெளியேறியோர் தொகை தற்போது 2 இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

srilanka20vanni201.jpg

இராணுவ நடவடிக்கை காரணமாக 5 முறை இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி புதுமுறிப்பு பாடசாலையில் தங்கியுள்ள சிறுவர்களே இவர்கள் உணவுகள் சீரானமுறையில் கிடைக்கப்பெறாத நிலையில் பசியினால தக்காளிப்பழத்தினை உட்கொள்ளும் காட்சி படப்பிடிப்பு க.ப.பிரபு

இன்று தங்கியிருக்கும் இடத்தில் நாளைக்கும் தொடர்ந்து இருக்க முடியுமா என்ற நிச்சயமற்ற, நிலையற்ற, பதற்றமுற்ற பேரவல நிலையிலேயே வன்னியில் மக்கள் நாள்களை கழிக்க நேரிட்டுள்ளது. களநிலைமை மோசமடைய, மோசமடைய மக்களின் அன்றாட வாழ்க்கையும் மேலும் மேலும் சீரழிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை 10 லொறிகளில் உரமும் 2 லொறிகளில் உணவுப் பொருட்களும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

ஏற்கனவே வாரத்தில் 5 தினங்களில் 20 லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேலதிகமாக சனிக்கிழமைகளில் மட்டும் உரமும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்துள்ள அகதிகளை க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லையாயினும் அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை பரீட்சை நடைபெறாத பாடசாலைகளில் அனுமதித்துள்ளோம்.

இன்று நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சைக்காக இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள பாடசாலைகளில் சில மண்டபங்களை ஒதுக்கியுள்ளோம்.

எமக்கு உலர் உணவுப் பொருட்கள் ஒழுங்காக கிடைக்குமாயின் எந்த பிரச்சினையுமில்லை. எமக்கு அரிசியே அதிகளவு வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஓரளவு தேவையான அரிசி உள்ள நிலையில் பருப்பு, சீனி, மா போன்றவை அதிகமாகக் கிடைத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் மேற்கொள்ள முடியும்.

இதேவேளை, ஆஸ்பத்திரியின் மின் பிறப்பாக்கி மற்றும் பாவனைக்கு எரிபொருளின் தேவை அதிகமாக தேவைப்படுவதனால் இதன் அளவை அதிகரிக்குமாறு நான் கோரிக்கை விடுத்ததையடுத்து இதனை அதிகரிப்பதற்கு அரசு இணங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

2759853190_163ef466e0_m.jpg2759017375_86428ca944_m.jpg

இது தொடர்பில் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பார்த்தீபன் கருத்துத் தெரிவிக்கையில்;

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 31,080 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,267 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது. நாம் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. முகவரமைப்புக்களுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றோம்.

அத்துடன் இடம்பெயர்ந்தோருக்கான குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளை மேற்கொள்ளும் அதேநேரம் உலக உணவுத்திட்டம் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் உதவியைக் கொண்டு இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கு ஏற்ற வகையில் உதவிகள் போதாமல் உள்ளது.

இதேவேளை, பருவகால மழை தொடங்கவுள்ள நிலையில் ஏற்கனவே நெரிசலுடன் வாழும் இம்மக்களுக்கு தொற்று நோய் ஏற்படுவதற்கான பிரச்சினை உள்ளது.

தற்போது இடம்பெயர்வோர் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குடும்பம் குடும்பமாக மரங்களின் கீழ் வாழும் குடும்பங்களின் தொகை அதிகரித்து வருகின்றது.

இவர்களுக்கு தற்காலிக வாழ்விடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உதவிகள் தேவையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் த.சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்;

கிளிநொச்சி மாவட்டத்துக்கான மூன்றாம் காலாண்டுக்கான மருந்துகள் எமக்கு கிடைத்துள்ளது. எனினும் சில வகையான பொருட்கள் அதாவது பனடோல் சிரப் போன்றவை வரவில்லை.

வைத்தியசாலைகளின் செயற்பாட்டுக்கு வழங்கப்பட்ட எரிபொருளின் (டீசலின்) அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் தேவைக்கு மாதாந்தம் 15 ஆயிரம் லீற்றர் டீசல் வழங்கப்பட்டுவந்தது. கடந்த ஜனவரி தொடக்கம் அந்த அளவு 6250 லீற்றராக குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 2500 லீற்றராக குறைக்கப்பட்டு விட்டது.

இதன் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலை இயங்க முடியாத நிலை தோன்றியுள்ளது. இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர், குடியமர்வதற்கு பொருத்தமற்ற காடுகள், வாய்க்கால்கள், வீதிகளில் தங்கியுள்ளதனால் பாம்புக்கடிக்கு பலர் இலக்காகியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் மட்டும் 23 பேர் பாம்புக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றுள்ள நிலையில் இதனால் உயிரிழந்தவர்கள் மற்றும் தொற்றுநோயால் மரணித்தவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாமலேயே சடங்குகளை மேற்கொள்வதால் உண்மையான விபரங்கள் எம்மிடம் இல்லை.

கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவானோர் கிளிநொச்சிக்கே வந்துள்ளனர்.

வரவிருக்கும் பருவ மழை காலத்தில் பலர் தொற்று நோய்க்கு இலக்காவதற்கு இடமுண்டு. இவர்களுக்கு போசாக்கான உணவு கிடைக்காத நிலைமை அதிகரித்து வருகின்றதனால் ஆபத்து அதிகமாகவுள்ளது.

எனினும் இடம்பெயர்ந்தவர்களை தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இதனை எதிர்காலத்தில் சமாளிப்பதற்கு தேவையானவற்றை மேற்கொள்வதற்கும் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்துக்கு எவரும் இடம்பெயர்ந்து வரவில்லையென வவுனியா மாவட்ட அரச அதிபர் தெரிவித்ததுடன் தீயினால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த முகாமிலுள்ளோரை தற்காலிகமாக தங்க வைத்துள்ளோம். இவர்களை மீள குடியமர்த்துவதற்கு பொருத்தமான இடம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதிகாலை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

2000 ஆண்டே இங்கிலாந்தில் தடை செய்ய பட்டு விட்டது... அதனை ஓட்டி வைத்தியர் மூர்த்தி அவர்களால் ஊனமுற்றோர் நலன் காப்பகமான வெண்புறா தோற்றம் கண்டது...

விடயம் தெரிந்த நீங்கள் இங்கிலாந்தில் TRO இயக்குனர்களின் பெயர் விபரத்தை, விலாசம் தொலை தொடர்பு இலக்கம், அறிய தந்தால் நல்லது... நான் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்...!!!

முடியவில்லை எண்றால் மற்றவரை முட்டாளாக்கும் வேலையை அடியோடு நிறுத்தி கொள்ளுங்கள்....!!

பிரித்தானிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

www.trouk.org.uk

020 8733 8283

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.