Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர்க் கந்தனுக்கு சிறிலங்கா இராணுவம் பூக்களையும் பிரசாதத்தையும் வழங்குகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் எழுதுபவை எல்லாம் அவரின் அனுமானக்கள் தான் அவற்றிற்கு எந்த ஆதராமோ அடிப்படையோ கிடையாது.

ஈலிங் துர்க்கை அம்மன் விவகாராம் யாழ்க் களத்திலையே விபரமாக எழுதப்பட்டள்ளது.

கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம்

லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து தன்னார்வ தொண்டர் தலமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் தமது கடமை உணர்ந்து தாயக உறவுகளின் துயர்துடைப்பில் தம்பணியை தொடங்கியது.

1. வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் கணனி கல்வி நிலையங்கள்(12)

2. வடக்கு கிழக்கு பகுதியில் விதவைகளுக்கு தையல் பயிற்சியும், உதவியும்

3. வடக்கு கிழக்கு பகுதியில் அங்கவீனர்களுக்கு அவயங்கள் பொருத்துதல் (வெண்புறா ஊடாக 1250க்கும்மேல்)

4. வடக்கு கிழக்கு பகுதியில் 483க்கு மேற்பட்ட அனாதைப்பிள்ளை பொறுப்பேற்று பராமரித்தல் மற்றும் அதன் நிலையங்கள்.

5. ஒரு லட்சம் பவுண்ட்ஸ் அதாவது 2 கோடி ருபாய் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவியும் வீடுகள் கட்டி மீள்குடியேற்றலும்.

6. வடக்கு கிழக்கில் முதியோர், வலது குறைந்தோர் காப்பகங்கள்.

7. அனாதைச் சிறார் இல்லங்களை தாயகத்தின் சகல பகுதிகளிலும் நிறுவிபரமரித்தலுடன் ஏனையோரின் இல்லங்களையும் பராமரித்தல்.

சதிசெய்து சூழ்ச்சியுடன் பொறுப்பேற்றவர்கள் என்ன செய்தனர்? கருணைலிங்கம் தலமையிலான நிர்வாககாலப்பகுயில் வருடத்திற்கு 10 லட்சம் பவுண்ட்ஸ்கள் செலவில் அமுல்படுத்திய செயற்திட்டங்கள் அனைத்தும் தேசவிரோதிகளுடன் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்ட முறையில் வடக்கு கிழக்கிற்கு அனுப்பபட்ட நிதிகள் நிறுத்தபட்டது.

தற்போதய நிர்வாக குழு என்ன செய்துள்ளது? அனைத்தையும் நிறுத்தி நமது சொந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கும் தமது உறவினருக்கும் அனுப்பி வருகின்றனர். ஏதற்கும் கணக்ககள் இல்லை. கணனி பயிற்சிலையங்களுக்கு மூடுவிழா நடந்துள்ளது. ஆலயத்தின் பெயரில் பராமரிக்கப்பட்ட சில அனாதை இல்லங்கள் இழுத்து மூடி அனாதைச்சிறார்களை நடு வீதிக்கு அனுப்பிய செயல் ஏன்? ஆலய அடியார்கள் தரும் பணத்தில் ஒரு குழந்தை ஒருநேர கஞ்சி குடிப்பதையே தடுத்து நிறுத்தியவர்கள் எம்மவர்களின் துயர் துடைக்க முன்வருவார்களா?

- நிதர்சனம்

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry319507

இதற்கு மட்டும் என்ன ஆதார அடிப்படைகளை முன் வைத்திருக்கிறீர்கள். நானும் ஒரு சப்பைக் கட்டு இலக்கத்தைப் போட்டு நிதர்சனம் போல எழுதுவன்.

ஆனால் நான் எனது கருத்துக்கு போதுமான ஆதாரங்களை தந்திருக்கிறேன்.

1. தமிழ் பாடசாலைகள் நடத்தப்படும் கோவில்கள் ஆகக்குறைந்தது 3 ஐ இனங்காட்டி இருக்கிறேன்.

2. ஈலிங் அம்மன் ஆலய பராமரிப்பில் இருக்கும் ஈழத்துச் சிறார்களுக்கான திட்டங்கள் பற்றிய இணைப்புக்களை தந்திருக்கிறேன்.

3. சிவயோகத்துக்கு ஆகும் செலவுகளுக்கான அடிப்படைகளை ஆதாரம் சகிதம் தந்திருக்கிறேன்.

4. கோவில்களின் தொடக்கம் மற்றும் பள்ளிகளின் தொடக்கங்களின் பின்னால் இருக்கும் ஒரே கவுன்சிலர்கள் பற்றிய குறிப்பை வெளியிட்டிருக்கிறேன்.

5. சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொள்வதற்குரிய எல்லா வழிமுறைகளையும் தந்திருக்கிறேன்.

இவை அனுமானங்கள் அல்ல. கிடைக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் வந்தது.

ஆனால் நிதர்சன இணையம்.. பல சோடிப்புக்களை வெளியிட்டு வந்த ஒரு இணையம் என்ற பலமான குற்றச்சாட்டு இக்களத்தில் தாங்கள் உட்பட பலரும் பதிவு செய்துள்ள நிலையில்.. ஈழத்தில் மக்களுக்காகவும்.. ஈழப்போராட்டத்திற்கு தங்கள் சக்திக்கு உட்பட்டு உபத்திரபம் செய்யாது செயற்படும் ஒரு ஆலய நிர்வாகத்தின் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவது வேடிக்கையான விடயமாக இருப்பதுடன்... இது லண்டன் கோவில்களுக்கும் நாத்தியகவாதிகளுக்கும் இடையே இருக்கும் உள்ளக முரண்பாட்டின் வெளிப்பாடுகளின் ஒன்றெனவே எண்ணத் தோன்றுகிறது..!

Edited by nedukkalapoovan

  • Replies 52
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஓடி வந்து விட்டோம் ஆகவே இனி இவை பற்றிக் கதைக்காமால் நாங்கள் எங்கட திருவிழாக்களைச் செய்து கொண்டிருப்போம்.

ஆமாம். கதைக்க என்ன உரிமை இருக்கின்றது. கிடையவே கிடையாது. நீங்கள் ஓடிவரும் போது என்ன அரசியல் சிந்தனை கொண்டா ஓடி வந்தீர்கள்? அந்த இலட்சணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு அரசியல் சிந்தனை கிடையாது என்று ஏக்காளம் வேறு போடுகின்றீர்கள்.

மக்டொனல்ஸ்ரிசும், கேஎவ்சியிலும்- தண்ணிக்கும் மாதாமாதம் செலவளிப்பது வீண் செலவு தான். அதை விட நினைச்ச நேரத்தில் கியுபா, இத்தாலி என்று ஊர் மேய்வதும் ஊதாரித்தனம் தான். இப்படியான வீண்செலவுகளையும் தவிர்த்து உதவிடலாம்.

இது லண்டன் கோவில்களுக்கும் நாத்தியகவாதிகளுக்கும் இடையே இருக்கும் உள்ளக முரண்பாட்டின் வெளிப்பாடுகளின் ஒன்றெனவே எண்ணத் தோன்றுகிறது..!

ஓ இவர் நாத்திகவாதியா? ஐயா உங்களிடம் ஒரு கேள்வி.

ஆலயங்கள் பற்றி இப்படிக் கிழிக்கின்றீரே, நாத்திகம் பேசுகின்றவர்கள் இது வரை என்ன ஈழத்திற்காக, ஈழமக்களுக்காகப் புடுங்கினார்கள் என்று பட்டியல் தர முடியுமா?

  • தொடங்கியவர்

//1. தமிழ் பாடசாலைகள் நடத்தப்படும் கோவில்கள் ஆகக்குறைந்தது 3 ஐ இனங்காட்டி இருக்கிறேன்.//

ஒரு கோவிலில் தமிழ்ப் பாடசாலை இயங்கிறதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயம்.ஆகக் குறைந்தது முப்பத்தி மூன்று பாடசாலைகள் இயங்கும் போது உங்கள் கணக்குப்படியே மூன்றே மூன்று பாடசாலைகளில் தான் கோவிலின் ஆதாரத்துடன் இயங்குகின்றன.இதன் அடிப்படையில் கூட இந்துக் கோவில்கள் தான் தமிழ் பரப்புகின்றன என்னும் முடிவுக்கு எவ்வாறு வர முடியும்.

//2. ஈலிங் அம்மன் ஆலய பராமரிப்பில் இருக்கும் ஈழத்துச் சிறார்களுக்கான திட்டங்கள் பற்றிய இணைப்புக்களை தந்திருக்கிறேன்.//

அவை பழைய நிர்வாகத்தின் கீழ் அமுல் படுதப்பட்ட திட்டங்கள், புதிய நிர்வாகத்தின் கீழ் இந்த வருடம் வந்த வருமானத்தில் எவ்வளவு தொகை நாட்டுக்கு அனுப்பப்பட்டது?

//3. சிவயோகத்துக்கு ஆகும் செலவுகளுக்கான அடிப்படைகளை ஆதாரம் சகிதம் தந்திருக்கிறேன்.//

சிவயோகம் ற்றஸ்ட் பரிபாலிக்கும் கோவில்கள் இரண்டே இரண்டு தான். நான் அவர்கள் சமூக நோக்கோடு நியாயமாகத் தான் செயற்படுகிறார்கள் என்று தான் எழுதி இருக்கிறேன்.

//4. கோவில்களின் தொடக்கம் மற்றும் பள்ளிகளின் தொடக்கங்களின் பின்னால் இருக்கும் ஒரே கவுன்சிலர்கள் பற்றிய குறிப்பை வெளியிட்டிருக்கிறேன்.//

ஒரே கவுண்சிலர்கள் பற்றி அல்ல இங்கே கருத்து எழுதப்பட்டது.கோவில்களின் ஆதாரத்துடன் தமிழ்ப் பள்ளிகள் நடக்கின்றனவா என்பதே கேட்கப்பட்ட கேள்வி.கவுண்சிலர்கள் எல்லா இடத்திலும் தலை காட்டுவர்காள், அதன் மூலம் தான் அவர்கள் வாக்குக் கேட்க முடியும்.அவர்கள் தலை காட்டுவதால் கோவிலின் தயவில் தான் தமிழ்ப் பள்ளி நடக்கிறது என்று எவ்வாறு கூற முடியும்?அது உண்மை இல்லை, வெறும் அனுமானம்.

//5. சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொள்வதற்குரிய எல்லா வழிமுறைகளையும் தந்திருக்கிறேன்.//

ஆதாரம் இன்றி அனுமானத்தை எழுதி விட்டு, ஆதாரம் கேட்டால் அதனை நான் தான் தர வேண்டுமா? நகைப்புக்கிடமாக இருக்கிறது.

உங்கள் நிலைதான் நகைப்புக்கு இடமாக இருக்கிறது. நான் ஆதாரத்தைப் பெறுவதற்குரிய வழியைக் காட்டுகிறேன். நீங்கள் என்னைக் கொண்டு வா எங்கிறீர்கள். நான் அடிப்படையில் அவர்களின் செயற்பாட்டை நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எனது நம்பிக்கைக்கு இவ்வளவு ஆதாரங்களும் போதும். உங்களுக்கு மேலதிகமாக தேவை என்றால் அதை நீங்களே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். பெற்றுக் கொடுப்பதுவல்ல எனது வேலை இங்கு. :lol:

புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் என்பதெல்லாம் எமக்கு அவசியமற்றவை. எமக்குத் தேவை.. குறித்த தொண்டு நிறுவனம் அது ஆலயமாக இருந்து கொண்டு செய்யும் செயல்கள் மக்கள் பயனுடையவையாக அமைந்திருக்கிறதா என்று நோக்குவதும் பங்களிப்பதும் மட்டுமே. நாம் அவர்களிடம் நிர்வாகத்தில் அங்கத்துவம் கோர அல்ல.. கருத்துப் பகர்கின்றோம். <_<

  • தொடங்கியவர்

உங்கள் நிலைதான் நகைப்புக்கு இடமாக இருக்கிறது. நான் ஆதாரத்தைப் பெறுவதற்குரிய வழியைக் காட்டுகிறேன். நீங்கள் என்னைக் கொண்டு வா எங்கிறீர்கள். நான் அடிப்படையில் அவர்களின் செயற்பாட்டை நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை எனது நம்பிக்கைக்கு இவ்வளவு ஆதாரங்களும் போதும். உங்களுக்கு மேலதிகமாக தேவை என்றால் அதை நீங்களே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். பெற்றுக் கொடுப்பதுவல்ல எனது வேலை இங்கு. :D

புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் என்பதெல்லாம் எமக்கு அவசியமற்றவை. எமக்குத் தேவை.. குறித்த தொண்டு நிறுவனம் அது ஆலயமாக இருந்து கொண்டு செய்யும் செயல்கள் மக்கள் பயனுடையவையாக அமைந்திருக்கிறதா என்று நோக்குவதும் பங்களிப்பதும் மட்டுமே. நாம் அவர்களிடம் நிர்வாகத்தில் அங்கத்துவம் கோர அல்ல.. கருத்துப் பகர்கின்றோம். :lol:

ஆதாரம் எதுவும் இன்றி சுய அனுமாங்களைத் தகவலாக எழுதுவது , எழுதியதற்கான ஆதாரம் எங்கே என்று கேட்டால் அது எனது நம்பிக்கை என்பது.உங்கள் நம்பிக்கைகள் அனுமாங்கள் எல்லாம் உங்கள் குருட்டு நம்பிக்கைகளை நியாயப்படுத்தச் சொல்லப்படும் பொய்கள்.

ஆதாரத்துடன் வாருங்கள் நாங்களும் நம்பலாம்.அதுவரை இப்படி நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று எழுதிக் கொண்டிருங்கள் ஒருவரும் உங்களைக் கண்டு கொள்ளமாட்டர்கள். நீங்கள் இவ்வாறு சொல்பனவற்றிற்கு எந்த உண்மைத் தன்மையும் கிடையாது.

நீங்கள் கருதுவதற்காக அவை அனுமானங்கள் அல்ல.

நான் எழுதிய கருத்தில்..

ஆலயங்கள் தமிழ் மற்றும் தமிழர் கலை வளர்ப்பில் பங்களிக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.

(ஆலயங்கள் மட்டும் தான் தமிழ் வளர்ப்பதில் ஈடுபடுகின்றன என்பதை கருத்தாகப் பதியவில்லை இங்கு.)

நீங்கள் சொல்லிக் கொண்டீர்கள்.. ஆதரம் காட்டும் படி. ஆதாரம் தரப்பட்டதும்.. அது 30க்கு 3 என்று சமாளிக்க முனைந்தீர்கள். கோவில்களில் சைவ சித்தாந்தம் மட்டுமே போதிக்கப்படுவதாக நிறுவ முற்பட்டீர்கள். அதுவும் பொய் என்று கண்டதும்.. வெறும் 3 றே மூன்று என்று சப்பைக்கட்டுக் கட்டினீர்கள்.

பின்னர் ஈலிங் அம்மன் கோவில் தொடர்பில் அது ஈழத்துக்கு உதவுவது குறித்து ஆதாரம் கேட்டீர்கள். அதற்கும் ஆதாரம் தரப்பட்ட போது.. புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் என்று கதையளந்துவிட்டுப் போனீர்கள்.

(இன்னும் ஆதாரத்துக்கு ஈழமுரசு இவ்வாரப் பதிப்பை படிக்கவும்.)

அப்புறம் சிவயோகத்தை இழுத்தீர்கள். அதற்கும் ஆதாரம் காட்ட நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதினேன் என்று சமாளித்தீர்கள்.

கோவில் கணக்கு வழக்கை காட்டு என்று ஒரு பொதுமகனிடம் கேட்டீர்கள். சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் கோவில் கணக்கு வழக்குகளை நிர்வாக உறுப்பினர்கள் தான் கோர முடியும் என்பது. அதுமட்டுமன்றி தொண்டு அமைப்பினர் கோவில் கணக்கு வழக்குகளை குறிப்பிட்ட நாட்டு அரசுகளுக்கு காட்டியாக வேண்டும் என்ற நிலை இருக்கிறதே தவிர.. பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. அப்படி இருக்க ஒரு அபாண்டமான கோரிக்கையை வைத்தீர்கள். இறுதியில் அதை வைத்து மொத்தக் கருத்தையும் அனுமானம் என்று காட்ட முனைந்தீர்கள்.

இப்ப வரையும் அதையே சாதிக்க நினைக்கிறீர்கள். இந்த நிலையில் மீண்டும் வழமையான முயலுக்கு மூன்று கால் என்ற மூடநம்பிக்கை (எங்காவது முயலுக்கு மூன்று கால் என்று கண்டிருக்கிறீர்களா) யின் அடிப்படையில் வரும் பழமொழியை கொண்டு வந்து என் மீது கட்டிவிட்டு.. நீங்கள் நிதர்சனத்தில் வந்த அண்டப் புளுகை சமர்ப்பித்த வெற்றிக் களிப்பை முதலாக்குவோம் என்று நினைக்கிறீர்கள்.

இத்தலைப்பின் நோக்கம்.. நல்லூர் திருவிழா பற்றியது. ஆனால் அது திசை மாறி புலம்பெயர் தேசங்களில் பல இடர்கள் மத்தியிலும் தமிழ் மக்களுக்கு தாயக மக்களுக்கு சேவையாற்ற முனையும் கோவில் நிர்வாகங்களில் குறைபிடித்து... அதற்குள் நாத்திக வாதத்தை திணிப்பதால்.. மக்கள் வெறுப்புணர்வை கோவில்கள் மீது ஊட்டி தாயக மக்களுக்கு கோவில்கள் மூலம் சென்றடையும் பயனைக் கூட தடுக்க முனைகிறீர்கள். இதைத்தான் சிங்கள அரசும் செய்கிறது...! உங்களுக்கும் அவர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு..??! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

//நீங்கள் சொல்லிக் கொண்டீர்கள்.. ஆதரம் காட்டும் படி. ஆதாரம் தரப்பட்டதும்.. அது 30க்கு 3 என்று சமாளிக்க முனைந்தீர்கள்./

முப்பதுக்கு மூன்று அல்ல, ஒன்று சைவ சித்தாந்தப் பாடசாலை, மற்றொன்று உறுதி செய்ப்படாதா தகவல்.ஒன்றுக்கு முப்பத்தி மூன்று.எந்தக் கணித சூதிரத்தின் படியும் இத் தரவுகளின் அடிப்படையில் 'தமிழை வளர்ப்பன இந்துக் கோவில்கள் என்னும் கூற்றை நிறுவ முடியாது.

//பின்னர் ஈலிங் அம்மன் கோவில் தொடர்பில் அது ஈழத்துக்கு உதவுவது குறித்து ஆதாரம் கேட்டீர்கள். அதற்கும் ஆதாரம் தரப்பட்ட போது.. புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் என்று கதையளந்துவிட்டுப் போனீர்கள்.//

ஈலிங் அம்மன் கோவிலைப் பொறுதவரை நான் கேட்ட ஆதாராம் இந்த வருடத்தில் எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது என்பதே.அதற்கு நீங்கள் எந்த ஆதரத்தையும் தரவில்லை.மீண்டும் சென்று வாசியுங்கள்.கதையளப்பது யார் என்பது புரியும்.

//அப்புறம் சிவயோகத்தை இழுத்தீர்கள். அதற்கும் ஆதாரம் காட்ட நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதினேன் என்று சமாளித்தீர்கள்.//

சிவயோகத்தை எங்கே இழுத்தேன்? சிவயோகம் மட்டுமே சமூகக்கண்ணோட்டதோடு செயற்படுகிறது என்றே ஆரம்பம் முதல் எழுதி இருக்கிறேன்.மீண்டும் எழுதியவற்றை வாசிக்கவும்.

//கோவில் கணக்கு வழக்கை காட்டு என்று ஒரு பொதுமகனிடம் கேட்டீர்கள். சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் கோவில் கணக்கு வழக்குகளை நிர்வாக உறுப்பினர்கள் தான் கோர முடியும் என்பது. அதுமட்டுமன்றி தொண்டு அமைப்பினர் கோவில் கணக்கு வழக்குகளை குறிப்பிட்ட நாட்டு அரசுகளுக்கு காட்டியாக வேண்டும் என்ற நிலை இருக்கிறதே தவிர.. பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. அப்படி இருக்கு ஒரு அபாண்டமான கோரிக்கையை வைத்தீர்கள். இறுதியில் அதை வைத்து மொத்தக் கருத்தையும் அனுமானம் என்று காட்ட முனைந்தீர்கள்.//

ஈலிங் கோவில் பணம் அனுப்புகிறது என்று எழுதியவர் நீங்கள் அதற்காகத் தான் கேட்டேன் உங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன என்று? ஆதாரம் இல்லாமால் சும்மா தான் எழுதினேன் என்று சொல்லுங்கள்.

இவை எல்லாவற்றியும் இந்தத் தலைப்பில் எழுத வேண்டி வந்தது நீங்கள் புலத்தில் இந்துக் கோவில்களே தமிழையும் கலைகளையும் வளர்க்கின்றன என எழுதிய எதுவித ஆதரமும் அற்ற உங்கள் பொய்யைக் கட்டுடைக்கத் தான்.

புலத்தில் தமிழயும் கலைகளையும் வளர்ப்பன தமிழ்ப் பாடசாலைகள்.அதனால் தான் புலத்தில் 'தமிழ் ஆலயங்கள் 'நிறுவப்பட்டன.புலத்தில் இருக்கும் இந்துக் கோவில்களின் பிரதான நோக்கம் பணம் சம்பாதிப்பது, கோவில் சொத்தைப் பெருக்குவது.கோவில் முதலாளியின் சொத்தைப் பெருக்குவது.சமூக நோக்கோடு இயங்கும் ஒரே நிறுவனம் சிவயோகம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னையா.. மதத்துவேசிகள் இந்த விடயத்தை தமது பிரச்சார நோக்கிற்கு பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் இவர்களுக்கும் சிறீலங்கா பயங்கரவாத அரசுக்கும் பிரச்சார ரீதியில் வேறுபாடு இல்லை.

மக்களின் இதயங்களை தங்களின் இயல்பான செயற்பாட்டால் வெல்ல முடியாதவர்கள்.. மக்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்குள் வலிந்து நுழைந்து தம்மை முன்னிலைப்படுத்த நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில்.. தாம் மக்களுடன் உள்ளோம் என்ற ஒரு போலித் தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காகத்தான் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தெளிவு.

நான் புகலிடத்தில் காண்கிறேன்.. நாத்திகவாதம் பேசும் இளைஞர்கள் யுவதிகளைக் காட்டிலும்.. கோவிலில் கலை, தமிழ் கற்கும்.. இளையோர் அதிகம். அவர்களின் பின்னணியில் வந்தவர்கள் தான் இன்று புகலிடத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பங்களிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஒரு பொங்கு தமிழ் மக்களை எழுச்சி ஊட்டப் போதுமானதல்ல. ஆலயங்கள் மக்களுக்கு போராட்ட உணர்வுகளை இன்னும் தெளித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில ஆலயங்கள் புறநடைகளாக மாறி இருக்கலாம். ஆனால்.. இன்றைய இக்கட்டான சூழலில்.. மக்கள் மத்தியில் போராட்டம் பற்றி விழிப்புணர்வு மற்றும் பங்களிப்புக்கள் தொடர்பில் ஆலயங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தி வருகின்றன.

தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்.

கலாசாரம் காலத்தோடு மாறுவது என்று சொல்லி.. தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தைக் கூட அடையாளம் காண முடியாதபடி செய்து கொள்ள.. சிந்தனை செய்பவர்களால்.. மாறு நிலைக் கலாசாரத்துக்குள்ளும் தமிழரின் பாரம்பரியத்தை சில மணி நேரங்களாவது நினைக்க வைப்பதில்.. இனங்காட்டுவதில்.. புலம்பெயர்ந்த ஆலயங்களுக்குள்ள பணி போற்றத்தக்கது. தென்னிலங்கை ஆலயங்கள் கூட இவ்வ்வாறு செய்யாத போதும்.. புகலிடத்து ஆலயங்கள் பல துணிச்சலான விடயங்களை போராட்டம் சார்ந்து செய்கின்றன.

கறுப்பு உடை அணிந்த நாத்திகவாதிகள்.. தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனரே தவிர.. தாயகத்தில் இருந்து பிரிந்து.. வாழும் புகலிட இளையோருக்கு அவர்கள் இனங்காட்டும் தமிழர் அடையாளங்களை கிரமமாக அவர்கள் உள்வாங்க ஏதாவது ஏற்பாடுகளை செய்திருக்கிறார்களா என்றால்... அது கிடையாது.

அடிப்படையில் தமது கொள்கைத் தோல்வியை மறைக்க சிறீலங்கா அரச பயங்கரவாதம்.. ஆலய திருவிழாக்களை பாவித்து பிரச்சாரம் செய்வது போல.. நாத்திகவாதிகள் காலம் காலமாய் மக்களிடம் தோற்றுப் போன கொள்கைகளுக்கு பிரச்சாரம் செய்ய அதே ஆலயங்களையும் சிறீலங்கா பயங்கரவாதத்தின் செயற்பாட்டையும் கலந்தடித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவை இரண்டுக்கும் எதிராக ஒரே நேரத்தில் மக்கள் விழிப்புடனிருந்து செயற்படுவது அவசியம்.

மக்களுக்கு உலகம் அளித்துள்ள சுதந்திரங்களில் மதச் சுதந்திரமும் ஒன்று. மதம் மட்டும் மாயை என்று சொல்பவர்கள்.. ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஆரம்பம் முடிவுக்கு பின்னால் அவனின் நிலையை விளக்கட்டும் பார்க்கலாம். வாழ்க்கையே ஒரு குறுகிய கால மாயைத்தனமான விளையாட்டின் ஒரு பகுதியே..! அப்படி இருக்க.. மதம் மட்டும் மாயையானது என்பது தவறான எண்ணக் கருதுகோளாகும்.

மதம்.. அடிப்படையில் மனிதாபிமானத்தை ஊட்ட வேண்டும்; மக்கள் வாழும் வரை ஒருவருக்கு ஒருவர் எதிர்பார்ப்பின்றி உதவவும் அன்பு செலுத்தவும் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; சுயநலம்.. மனித நேயமற்ற குணங்களை.. ஜீவகாருணியமற்ற செயற்பாடுகளை இல்லாது செய்ய வேண்டும்... என்பதைத்தான் சொல்கிறது.

மக்களுக்கு போராட உள்ள வழிகளை தீர்மானிப்பதில் எதிரியின் இருப்புப் பலமும் ஒரு காரணமாகி இருக்கிறது. எதுஎப்படியோ மக்களின் மதச் சுதந்திரத்தைக் கூட தட்டிப்பறிக்க முனையும் சிங்களப் பேரினவாத அரசின் செயற்பாட்டிற்கு, அதன் பிரச்சார நோக்கிற்கு.. கோவில் திருவிழாக்களை பயன்படுத்துவது தொடர்பில் அதை எதிர்த்து.. எதிர்காலத்தில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று மக்களின் மத சுதந்திரத்தை பறிக்க முனையும் நாத்திகவாதிகளின் ஊடுருவல்களையும் முறியடிக்க வேண்டும். மத வெறியை ஊட்டும்.. மதத் தீவிரவாதத்தையும் மக்கள் அனுமதிக்கக் கூடாது. மதம் என்பது ஒரு நெறி. மனிதனை மனிதனாக்க.. அவனை மனித நேயத்தோடு வாழ வகை செய்ய என்று மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர.. அது மாயை அல்ல..! :lol:

இதுதான் நான் பதிந்த இன்றைய முதற்பதிவு.

இதில் எங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.. தமிழை கோவில் மட்டும் தான் வளர்க்கின்றன என்று..??!

இப்படித்தான் குறிப்பிட்டிருக்கிறேன்..

"தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்."

ஈலிங் அம்மன் ஆலயம் வருடம் தோறும் தன்னால் பராமரிக்கப்படும் தாயகக் குழந்தைகளுக்கு செலவை கவனித்து வருவது.. யாவரும் அறிந்த விடயம். அதற்கான ஆதாரம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வருடமும் அவை போயே சேரும். அந்தப் பிள்ளைகளை பாதி வழியில் கைவிட மாட்டார்கள். என்பது சாதாரண உண்மை.

அதுமட்டுமன்றி அவர்களின் இதர திட்டங்கள் பற்றி கீழ் உள்ள இணைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://ammanealing.com/arivuchudar2007.pdf

எவ்வளவு தொகை செலவு என்பது கணக்கியலாளர்கள் சொல்ல வேண்டியவை. பொதுமக்கள் அல்ல. ஆனால் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டியது.. தாயக உறவுகளுக்கு பங்களிப்புப் போய் சேர்கிறது என்பதே..!

சிவயோகம் பற்றி நாம் இங்கு குறிப்பிடாத போதும்.. அதுவும் இந்து மதம் சார்ந்தே அதன் பணிகளைச் செய்கிறது.

அதுமட்டுமன்றி ஈலிங் அம்மன் ஆலயத்தில்.. தமிழ் மற்றும் இசை, சைவ வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Saiva Sidhanta School

School Head Mr Kandiah Rajamanoharan

Teachers

Pannisai & Thirumuraigal Mr Sami Thandapani

Saivam & Tamil Dr (Mrs) Sasikala Rajamanoharan

Mrs Sivayini Krishnakumar

http://ammanealing.com/

Mr T Manivasakan

Mr N Nithiyananthan

இப்படி தேவையான ஆதாரங்கள் தரப்பட்ட பின்னும்.. அதை ஏற்க மறுத்து... விதண்டாவதம் செய்வது.. எமது நிலை அல்ல..! அது தாங்கள் நினைக்கும் அல்லது தங்கள் கருத்தே சரியான அனுமானத்தின் வழி வந்தது என்பதைச் சொல்லும் கருத்தியல் திரிப்பின் நிலையாகும்..! :D

  • தொடங்கியவர்

[

//"தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்."//

இன்னும் இந்த ஆலயங்கள் தான் என்னும் கூற்று சொல்லும் செய்தி என்ன நெடுக்காலபோவான்?இந்த ஆலாயங்கள் இல்லாது விட்டால் தமிழ் மொழி காப்போ தமிழர் கலை வடிவங்களோ அழிந்து விடுமா? அது எப்படி?

தமிழ் மொழி காப்போ தமிழர் கலை வடிவங்களைப் பயில்விப்பதோ புலத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளே செய்கின்றன.ஆலயங்கள் அல்ல.ஆகவே மேல் உள்ள வசனம் முற்றிலும் பிழையான தகவலைத் தருகிறது.எல்லோரும் அறிந்த வகையில் அவ்வாறு செய்யும் ஆலயம் சிவயோகம் றஸ்ட் நிர்வகிக்கும் டூடிங் அம்மன் கோவில்.ஈலிங்க் அம்மன் கோவில் நாடத்துவது சைவசித்தாந்தப் பாடசாலை.வேறு எந்தக் கோவிலும் பாடசாலைகள் எதுவும் நடத்துவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை.லண்டனில் மட்டும் ஏறக்குறைய இருபது இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

//ஈலிங் அம்மன் ஆலயம் வருடம் தோறும் தன்னால் பராமரிக்கப்படும் தாயகக் குழந்தைகளுக்கு செலவை கவனித்து வருவது.. யாவரும் அறிந்த விடயம். அதற்கான ஆதாரம் தரப்பட்டுள்ளது.//

இணையத்தில் நிதர்சனம் தரும் செய்திக்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர் இணையத்தில் இருக்கும் பழைய புகைப்படங்களைக் காட்டி இது தான் ஆதாரம் என்கிறார். நிதர்ச்னம் செய்தியாளரின் கூற்றுப் படி கொடுக்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.இல்லை இந்த வருடமும் உதவிகள் வழங்கப்பட்டன என்பதற்கான ஆதாரதைத் தந்தால் ஏற்று கொள்ளத் தயராக இருக்கிறேன்.ஏனெனில் கஸ்ட்டப்படும் வன்னி மக்களுக்கு இப்போது உதவிகள் செல்ல வேண்டும்.மக்களிடம் இருந்து பெறப்பட்ட உண்டியல் வசூலிப்புக்கள் கஸ்ட்டப்படும் மக்களுக்குச் செல்ல வேண்டும்.கோவிலின் சொத்தை அதிகரிப்பதற்கு அல்ல.

//அந்த வகையில் இவ்வருடமும் அவை போயே சேரும். அந்தப் பிள்ளைகளை பாதி வழியில் கைவிட மாட்டார்கள். என்பது சாதாரண உண்மை.//

உந்தச் சாதரண உண்மைக்கான ஆதாரம் என்ன என்று தான் கேட்கிறேன்.வன்னிக்கு உதவிகள் போய்ச் சேர வேண்டும் என்பதே என் நோக்கம்.அதை உறுதி செய்து விட்டுப் பேசுங்கள்.

//அதுமட்டுமன்றி ஈலிங் அம்மன் ஆலயத்தில்.. தமிழ் மற்றும் இசை, சைவ வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.//

Saiva Sidhanta School சைவ சித்தாந்தப் பாடசாலை , தமிழ் ஒரு உப பாடம்.

School Head Mr Kandiah Rajamanoharan

Teachers

Pannisai & Thirumuraigal Mr Sami Thandapani

Saivam & Tamil Dr (Mrs) Sasikala Rajamanoharan

Mrs Sivayini Krishnakumar

http://ammanealing.com/

Mr T Manivasakan

Mr N Nithiyananthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி காப்போ தமிழர் கலை வடிவங்களைப் பயில்விப்பதோ புலத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளே செய்கின்றன.ஆலயங்கள் அல்ல.ஆகவே மேல் உள்ள வசனம் முற்றிலும் பிழையான தகவலைத் தருகிறது.எல்லோரும் அறிந்த வகையில் அவ்வாறு செய்யும் ஆலயம் சிவயோகம் றஸ்ட் நிர்வகிக்கும் டூடிங் அம்மன் கோவில்.ஈலிங்க் அம்மன் கோவில் நாடத்துவது சைவசித்தாந்தப் பாடசாலை.வேறு எந்தக் கோவிலும் பாடசாலைகள் எதுவும் நடத்துவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை.லண்டனில் மட்டும் ஏறக்குறைய இருபது இந்துக் கோவில்கள் இருக்கின்றன.

தங்களின் கருத்துக்கள் வெறும் அனுமானங்கள் அடிப்படையில் மட்டுமன்றி விதண்டாவாத அடிப்படையில் அமைந்தது என்பதை நிரூபிக்கும் வகையிலான கருத்து இங்கே..

Dance located in London Tamil temples

There is too a new growth in the teaching of Bharatanatyam dance and of dance

performances in the Tamil temples indicating a greater concern for the

transmission of traditional culture to the young people. This is also indicative of

the greater establishment and growing confidence of the community enabling the

devotion of extra time and energy to cultural practices. One Tamil professional

dancer and teacher told me how the evidence of dance classes in the temples

was a UK phenomenon, as in India there were more independent dance schools

which catered to the need for dance classes. It too reveals the different role that

the UK temples have assumed one of providing community care (spiritual,

moral, cultural and even medical) as well as traditional ritual worship. The UK

temples for example, provide facilities for hosting small puja ceremonies for

families which would normally take place in the home in India or Sri Lanka.

Of the seventeen London Tamil Hindu temples, seven have been visited for this

research. Three at present offer regular dance classes. the Shree Ghanapathy

Temple in Wimbledon, the London Sri Murugan Temple in East Ham and the

new Sri Thiruthanigai Murugan Temple in Surbiton. Dance classes were taught

at the London Sri Mahalakshmi Temple in East Ham, but have now moved to a

local church hall. The dancers from this school still perform at the temple on

festival occasions. The Sri Muthumari Amman Temple in Tooting, South London

ran Bharatanatyam dance classes but these stopped a few years ago because of

organisational difficulties. On January 1st 2004, however, a Bharatanatyam

dance performance was given in that temple by students of the Harrow Tamil

Sunday school, for celebrations for New Year’s Day (January 1st). The small

stage was placed at the back of the temple, facing the deities, allowing the

devotees to simply turn their sitting positions around to watch after the main

evening puja had finished. The stage was well decorated and lit and provided an

entirely appropriate performing space for a devotional programme of

Bharatanatyam dance. Six of the main temples have had performances of

Bharatanatyam dance at festival times, although for the Sri Highgatehill Murugan

temple, the festival of Sivaratri in March 2002 was the first time a dance

performance had been held in the temple area.

Trance and possession in Tamil culture

Ethnographic research at these temples has revealed other forms of dance

taking place in addition to the teaching and performing of Bharatanatyam. During

the summer chariot festival at the Ealing Amman Temple, and the Wimbledon

Ghanapathy Temple, some of the men devotees performed the kavadi dance.vii

This too takes place at the annual Tai Pusam festival at the East Ham Murugan

Temple. The men carried the kavadi on their shoulders large, heavy wooden

frames decorated with peacock feathers and flowers, with hanging metal bowls of

milk. The coloured structure symbolises the legendary mountain of sins that the

God carries on his shoulders on behalf of mankind, and milk is carried as an

offering to the deity, purified by the men’s devotion through their dance. These

men moved to the sound of the temple musicians playing the traditional

instruments of nagaswaram, a double-reeded flute (like an oboe), the tavil, a

large, outdoor drum beaten with a curved stick, and the Indian cymbals (talam).viii

The dancers performed as the deity was carried out of the temple and placed on

the chariot, and continued to dance in front of its path with the musicians as it

processed around the local streets. Hundreds of people lined the route. It was

an extraordinary and powerful sight to witness. Already at 8.30am the temple

was packed full of people; it was warm and the sound of the two drummers,

cymbals and two reed instruments extremely loud. The air was heavy with the

scents of incense, flowers, fire burning and of cut fruit, and the intense colours of

the decorated deities, the flowers and the women’s silk sarees seemed to

8

intoxicate the viewer’s senses. The sounds of the rhythmic music competed with

the ringing of the bell and the chants of the priests as they continued their

oblations to the deities.

http://www.basas.ac.uk/conference05/david,%20ann.pdf

நான் சொன்ன (1) என்ன கருத்து அனுமானத்தின் அடிப்படையில் விதண்டாவத்தின் அடிப்படியில் ஆனது என்பதை மேற்படி கட்டுரையில் வரும் (2)எது நிரூபிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன (1) என்ன கருத்து அனுமானத்தின் அடிப்படையில் விதண்டாவத்தின் அடிப்படியில் ஆனது என்பதை மேற்படி கட்டுரையில் வரும் (2)எது நிரூபிக்கிறது?

தமிழ் மொழி காப்போ தமிழர் கலை வடிவங்களைப் பயில்விப்பதோ புலத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளே செய்கின்றன.ஆலயங்கள் அல்ல.

இந்தக் கூற்றை தவறென நிரூபிக்கிறது.

அதுமட்டுமன்றி கோவில்களில் நடத்தப்பட்ட பள்ளிகள் [கலைகள் கற்பிக்கும் பள்ளிகளை குறித்த ஆய்வு கருத்தில் கொண்டுள்ளதால்.. அது கலைப்பள்ளிகள் பற்றிப் பேசுகிறது. (இவ்வாறுதான் தமிழ் மொழிப்பள்ளிகளும் கோவில்களை விட்டு வெளியேறின.. என்பதை ஏலவே நான் முன்னர் ஒரு கருத்தில் தெரிவித்திருந்தேன். எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில். அது உண்மை என்பது நிரூபணமாகிறது.)] எவ்வாறு குடிபெயர்ந்து போயின.. பள்ளிகளின் ஆரம்பங்கள் கோவில்களை மையமாகக் கொண்டு இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் சொல்லப்பட்டுள்ளன.

ஈலிங் அம்மன் ஆலயத் தகவல் கூட இதை மெய்ப்பிக்கிறது.

அதுமட்டுமன்றி.. கோவில் தமிழ் சமூகத்தின் மீது செய்யும் பணிகளின் தன்மையை விளக்குகிறது.

It too reveals the different role that the UK temples have assumed one of providing community care (spiritual,

moral, cultural and even medical) as well as traditional ritual worship.

எனவே கோவில்களை கலை வளர்க்கவும் இல்லை.. தமிழ் காக்கவும் இல்லை.. யாரோ தமிழ் பாடசாலை நடத்துபவர்கள் மட்டும் தான் அதைச் செய்கின்றனர் என்ற நாத்திக வாத திணிப்பு பூரணமாக முறியடிக்கப்படுகிறது.. இங்கு..!

எனவே அதைத் தூக்கிக் குப்பையில் போட்டிவிட்டு.. யதார்த்த உலகில் உண்மையோடு கருத்துக்களைச் சொல்வது சிறப்பு..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தமிழ் காப்பதில் இருந்து இப்போது பரத நாட்டியமா?

தமிழ் ஓலைகள் என்னும் பக்கத்தில் இருந்து இலண்டனில் தமிழர் கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் பட்டியல் இருக்கிறது.

http://www.tamilpages.org/categoryview.php?catID=5

ஏறக்குறையை ஐம்பது கலைப் பள்ளிகள் இருக்கின்றன.இதில் மூன்றே மூன்று கோவில்களில் பரத நாட்டியம் பயிற்றுவிக்கபடுவதால் தான் பரத நாட்டியமும் மற்றும் தமிழர் கலைகளும் பாதுக்கப்படுகிறதோ? :lol:

Arts Organisation

Academy of Fine Arts Place : • Hounslow

Academy of South Indian Arts Place : • Northolt

Academy of Tamil Arts Place : • London

Akademi South Asian Dance UK Place : • Not Provided

Ascension Inspiration & Ascension Foundation Place : • Bournemouth

Bharatiya Vidya Bhavan Place : • West Kensington

Carnatica Festival Place : • Not Provided

Eastern Fine Arts Promotions Place : • Kingsbury

Eelam Friends Film Association Place : • Surbiton

Eelavar Cine Arts Council Place : • Walthamstow

Euro Cine Arts Creations Place : • Not Provided

Flute Institute UK Place : • Potters Bar

Institute of Fine Arts Place : • Hendon Central

Institute of Fine Arts(Shruthi Laya Shangam) Place : • Sydenham

ISTD Dance Examination Board Place : • Not Provided

Kalaimanram Place : • Rayners Lane

Kalaimanram Place : • Not Provided

Kalasagara (Institute of Bharatanatyam) Place : • Not Provided

Kalpanas Stage Prod'n & Mgt Place : • East Croydon

Kavin Kalai Place : • Not Provided

Little Lions Dance Club Place : • Not Provided

London Tamil Literary Association Place : • Not Provided

London School of Carnatic Music Place : • Not Provided

London Tamil Arts Society Place : • Southall

London Tamil Drama School Place : • South Harrow

London Veena Music Group Place : • Wimbledon

Luxmy Arts Centre Place : • Harrow

Mathangy Fine Arts Academy Place : • South Harrow

Mudralaya Place : • Not Provided

Naatiyalaya Place : • Not Provided

Narthana Kalalaya Place : • Walthamstow

Narthananjali Nattiyappalli Place : • Northampton

Nupura Kendra School of Dance Place : • Not Provided

Oriental Examination Board Place : • Wembley

Oriental Fine Arts Academy Of London Place : • Edgware

Ruksha narthanalaya Place : • Not Provided

Salangai Narthanalayam Place : • Harrow

Sanskriti Place : • Not Provided

Santhalaya Arts Foundation Place : • East Ham / Ilford

Shakthi Arts Place : • Ilford

Shankara Asian Arts Place : • Paddington

Siva Sakthi Natiyalayam Place : • Hayes

Sree Veena Kalai Koodam Place : • Manor Park

Sri Krishna Arts Academy Place : • Not Provided

Sri Meenatchi Bharatha Natya Palli Place : • Not Provided

Srishti - Nina Rajarani Dancce School Place : • Rayners Lane

Tamil Academy of Language and Arts Place : • Sydenham

Tamil Educational & Cultural Ass?n Place : • Thornton Heath

Tamil Performing Arts Society Place : • Not Provided

Trinities School of Music Place : • Not Provided

TWAN Place : • Manor Park

Vijayanarthanalaya Place : • Manor Park

Yarl Centre for Performing Arts Place : • Bromley

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் காப்பதில் இருந்து இப்போது பரத நாட்டியமா?

தமிழ் ஓலைகள் என்னும் பக்கத்தில் இருந்து இலண்டனில் தமிழர் கலைகளைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் பட்டியல் இருக்கிறது.

http://www.tamilpages.org/categoryview.php?catID=5

ஏறக்குறையை ஐம்பது கலைப் பள்ளிகள் இருக்கின்றன.இதில் மூன்றே மூன்று கோவில்களில் பரத நாட்டியம் பயிற்றுவிக்கபடுவதால் தான் பரத நாட்டியமும் மற்றும் தமிழர் கலைகளும் பாதுக்கப்படுகிறதோ? :D

சொல்லப்பட்ட விடயத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.. தமிழ் காப்பு.. கலை பயில்விப்பு.. அதற்கான மேடை வழங்கல்.. போன்ற பதங்களை பாவித்திருக்கிறேன்.

"தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்."

தமிழ் மொழிக்காப்பு இன்னும் செய்யப்படுகிறது என்பதற்கு.. கோவில்கள் 3 இன்னும் தமிழைப் போதிப்பது சான்றாகத் தரப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கலை வளர்ப்பில்.. தமிழ் சமூகத்தின் நலன் காப்பில் என்று கோவில்களின் பங்களிப்பை திறமையாகச் சொல்கிறது மேலுள்ள கட்டுரை. பரத நாட்டியம் காவடியாட்டம் எல்லாம் தமிழர்களின் கலை என்று வாதிட்டவர்களே இன்று.. பரதநாட்டியமா என்று கேள்வி எழுப்புகின்றனர்..??! ஆம்... அவை லண்டனைப் பொறுத்தவரை தமிழர்களின் கலை கலாசார அடையாளங்களாகத்தான் இனங்காணப்படுகின்றன.

இன்று புலம்பெயரும் ஒவ்வொரு நாட்டிய ஆசிரியரும் மூலைக்கொரு நாட்டிய கூடம் அமைத்து வியாபாரம் நடத்துவது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இன்றும் அன்றும் கோவில்கள் தான் தமிழ் காப்பிலாகட்டும்.. கலை பயில்விப்பு.. மேடை ஏற்றுதல் என்று எல்லாவற்றிலும் முன்னின்று செயற்படுகின்றன.. என்பது மேற்படி கட்டுரையூடு தெளிவாக நிறுவப்பட்டுள்ளது..!

இதற்கு மேலும் உங்களின் விதண்டாவாதத்தோடு வாதம் செய்து எப்பயனும் கிடைக்கப் போவதில்லை. நிய உலகில் சஞ்சரிக்க மறுப்பவர்களோடு.. வாதம் செய்து பயனும் இல்லை..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

//அதுமட்டுமன்றி கோவில்களில் நடத்தப்பட்ட பள்ளிகள் [கலைகள் கற்பிக்கும் பள்ளிகளை குறித்த ஆய்வு கருத்தில் கொண்டுள்ளதால்.. அது கலைப்பள்ளிகள் பற்றிப் பேசுகிறது. (இவ்வாறுதான் தமிழ் மொழிப்பள்ளிகளும் கோவில்களை விட்டு வெளியேறின.. என்பதை ஏலவே நான் முன்னர் ஒரு கருத்தில் தெரிவித்திருந்தேன். எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில். அது உண்மை என்பது நிரூபணமாகிறது.)] எவ்வாறு குடிபெயர்ந்து போயின.. பள்ளிகளின் ஆரம்பங்கள் கோவில்களை மையமாகக் கொண்டு இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் சொல்லப்பட்டுள்ளன.//

நகைப்புக்கிடமாக இருக்கிறது அம்மையார் இலண்டனில் இருக்கும் இருபது முப்பது கோவில்களில் தேர்ந்தெடுத்து ஏழு கோவில்களுக்குச் செல்கிறார் அங்கு மூன்று கோவில்களில் பரத நாட்டியம் படிப்பிக்கிறார்கள் என்று சொல்கிறார்.இதன் மூலம் தமிழர் கலைகள் கோவில்களால் தான் பாதுகாக்கப்படுகிறது என்பது எவ்வாறு நிறுவப்படுகிறது? அம்மையார் லண்டனில் எத்தினை நாட்டியப்பள்ளிகள் இருக்கின்றன? அவற்றில் எத்தினை கோவில்களால் நடாத்தப்படுகின்றன என எதாவது எழுதி இருக்கிறாரா? அவர் சொல்லாததை ஆய்வு செய்யாததைக் காட்டி இது நான் சொன்னதை நிருபிக்கிறது என்று சொன்னால் யார் ஏற்றுகொள்வார்கள்?

அத்தோடு நட்டியப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளிகளும் ஏன் கோவிலை விட்டு அகன்றன? அவற்றால் பெரிய வருமானம் இல்லை என்பதாலா? பூசை அர்ச்சனை செய்யும் நேரத்தில் வகுப்புக்கள் நடாத்த முடியாது பிழைப்புக் கெட்டு விடும் என்பதாலா அவை அங்கிருந்து நகர்ந்தன?அப்படியாயின் கோவில்களின் நோக்கம் தமிழை தமிழர் கலைகளைப் பாதுகாப்பது அன்றி யாவாரம் செய்வது என்றல்லவா ஆகிவிடுகிறது?

//ஈலிங் அம்மன் ஆலயத் தகவல் கூட இதை மெய்ப்பிக்கிறது.//

எதை மெய்பிக்கிறது? தமிழை வளர்ப்பதால் தமிழர் கலைகளைப் பயிற்று விப்பதால் கோவிலுக்கு அதிக வருமனம் இல்லை என்பதையா?

அதுமட்டுமன்றி.. கோவில் தமிழ் சமூகத்தின் மீது செய்யும் பணிகளின் தன்மையை விளக்குகிறது.

It too reveals the different role that the UK temples have assumed one of providing community care (spiritual,

moral, cultural and even medical) as well as traditional ritual worship.

அமையாரின் மேற்படி கூற்றுக்கு ஆன கள ஆய்வு எங்கே இருக்கிறது? அவர் ஏழு கோவிலுக்குப் போய் வந்து எழுதியது எப்படி தமிழ்ச் சமூகத்தில் தமிழ்ப்பள்ளிகள் கலைப்பள்ளிகள் செய்யும் பணியை ஆய்வு செய்ய உதவும்?

//எனவே கோவில்களை கலை வளர்க்கவும் இல்லை.. தமிழ் காக்கவும் இல்லை.. யாரோ தமிழ் பாடசாலை நடத்துபவர்கள் மட்டும் தான் அதைச் செய்கின்றனர் என்ற நாத்திக வாத திணிப்பு பூரணமாக முறியடிக்கப்படுகிறது.. இங்கு..!//

//எனவே அதைத் தூக்கிக் குப்பையில் போட்டிவிட்டு.. யதார்த்த உலகில் உண்மையோடு கருத்துக்களைச் சொல்வது சிறப்பு..! :D :lol://

யதார்த்த உலகு என்ன என்பதை கொன்சம் வெளியால் போய் வந்தால் தெரியும்.ஆகக்குறைந்தது ஒரு டிரக்ரரி எடுத்துப் பார்தால் தெரியும் எத்தினை தமிழ்பள்ளிகள் தமிழ் நடனப்பள்ளிகள் இருக்கு என்று.கோவில்களில் இருந்து வெளியேறி விட்ட பள்ளிகள் ஏன் வெளியேறின அப்படியாயின் கோவில்கள் தமிழை நடனத்தை வளர்க்க உகந்த இடம் இல்லையா? ஏன்? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம்.. என்பது போன்று.. இறுதியில் ஆய்வுக்கட்டுரை எழுதியவர் மீதே பாய்ச்சல் செய்கிறார்கள்..! அவர் 7 கோவிலை என்றாலும் ஆய்வு செய்தார். நீங்கள் ஒரு கோவிலையும் கருத்தில் எடுக்கவில்லையே.. எது மோசமான நிலை..! :D:D

நாத்திக வாதத் திணிப்பு யதார்த்த உலகில் எடுபடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளும் மட்டும்.. இவ்வாறான தலைப்புக்கள்.. நாத்திக வாததை பிரசவிக்க பாவிக்கப்படுமே அன்றி தாயக மக்களின் நிலைக்காக உருகா என்பதும் இதனூடு நிறுவப்படுகிறது..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

"தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்."

..

இன்று புலம்பெயரும் ஒவ்வொரு நாட்டிய ஆசிரியரும் மூலைக்கொரு நாட்டிய கூடம் அமைத்து வியாபாரம் நடத்துவது எல்லோரும் அறிந்ததே.

இதற்கு மேலும் உங்களின் விதண்டாவாதத்தோடு வாதம் செய்து எப்பயனும் கிடைக்கப் போவதில்லை. நிய உலகில் சஞ்சரிக்க மறுப்பவர்களோடு.. வாதம் செய்து பயனும் இல்லை..!

:lol::D:D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம்பெயரும் ஒவ்வொரு நாட்டிய ஆசிரியரும் மூலைக்கொரு நாட்டிய கூடம் அமைத்து வியாபாரம் நடத்துவது எல்லோரும் அறிந்ததே.

:D:unsure::unsure::unsure:

இதில் சிரிப்பு எதுவும் இல்லை. லண்டனில் உள்ள பாடசாலைகள் தேவையான கவனிப்புக்களோடு சரியாகப் போதிக்கின்ற போதும்.. மூலைக்கொரு தனியார் வகுப்புக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் இருக்கும் நிலையில்.. இவ்வாறான மூலைக்கொரு.. நாட்டிய தாரகைகள் நாட்டிய கூடம் அமைப்பது.. ஒன்றும் அதிசயமில்லை. மட்டுப்படுத்திய வளங்களோடு இயங்கும் கோவில்கள் இவர்களின் காளான் முளைச்சலை தடுப்பதும் இல்லை..! :lol:

அதற்காக கோவில்கள் ஆரம்பித்த பணிகளை மறைக்கவோ.. மறுக்கவோ அல்லது நாத்திக வாதத்தால் மூடிமறைக்கவோ முடியாது.. என்பதற்கு ஆய்வுகள் சான்று சொல்கின்றன..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்! இவர்கள் தாங்கள் ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன செய்தாலும் உடனே ஒப்பாரி வைப்பார்கள். உரல் போறதைக் காணாமல், உலக்கை போறதைக் காண்பது போல, தான் இவர்களின் செயற்பாடு. கனடாவிற்கெல்லாம் போவார்கள். அங்கே மக்டொனால்ஸ்சில் ஒரு பிடி பிடிப்பார்கள். ஆனால் அதெல்லாம் அனுப்பினாலும் தமிழீழ மக்களுக்குப் போய் சேரும் என்று வாதிடமாட்டார்கள்.

-------------------------

வாங்க உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

ஒரு பவுணுக்கு 3 தேங்காய் கொடுக்கிறாங்க.. ஆனால் கே எப் சியில் ஒரு சிமோல் சிக்கின் பொப்கோன் 1 பவுண்.

பிள்ளை குட்டியோட போய் அங்க கும்மாள அடிக்கிற காசில.. ஒரு பகுதியை மிச்சம் பண்ணி ஊருக்கு அனுப்பட்டு பார்ப்பம்.. இந்த தேங்காய்.. கோவில் என்று அழும் நாத்திகவாதிகள்.

சில கோவில்கள் வியாபார நோக்கோடு இயங்கின்ற போதும் சில தாயகப் பணியில் ஆர்வத்தோடு இயங்கும் நிலை இன்னும் இருக்கிறது. அது வரவேற்கப்பட வேண்டும். மக்கள் விரயமாக்கும் பணத்தை.. அவர்கள் முதலீடாக்கி தாயகத்துக்கு உதவ முன் வருவதை வரவேற்க வேண்டும்..!

மக்களை திட்டிக் கொண்டிருந்தால்.. வன்னி மண்ணுக்கு உணவு போகாது. வெறும் காத்துதான் போகும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயவன். மீண்டும் யாழ் களத்தில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ்! இவர்கள் தாங்கள் ஒன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன செய்தாலும் உடனே ஒப்பாரி வைப்பார்கள். உரல் போறதைக் காணாமல், உலக்கை போறதைக் காண்பது போல, தான் இவர்களின் செயற்பாடு. கனடாவிற்கெல்லாம் போவார்கள். அங்கே மக்டொனால்ஸ்சில் ஒரு பிடி பிடிப்பார்கள். ஆனால் அதெல்லாம் அனுப்பினாலும் தமிழீழ மக்களுக்குப் போய் சேரும் என்று வாதிடமாட்டார்கள்.

-------------------------

இவர் திரும்பி வந்துட்டாரா :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அது கவலையில்லை. எப்படியாவது இந்து மதத்திற்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் எதிரான நிலையை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு பிரச்சாரத்தை மக்களுக்குள் கொண்டு சென்று, தங்களுடைய கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்பதே இந்த வெறிக்கு அர்த்தங்கள்.

சில தேவைகள் தவிர்க்க முடியாது. புலத்தில் பொங்குதமிழ் செய்யப்படுகின்றது. ஏன் ஊர் ஒன்றுகூடல் செய்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் செலவு ஆகத் தான் செய்கின்றது. தமிழர் பண்பாட்டைப் பேணுவதற்குக் கோவில்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஏன் எம் வீட்டுக் குழந்தைகள் கோவிலுக்குப் போகின்ற நேரங்களில் தான் பாவடை சட்டையோ, வேட்டியோ அணிகின்றனர். அந்த நேரங்களில் தான் இது எம் பண்பாடு என்பதை உணர்த்த வழி ஏற்படுகின்றது.

தமிழ்ப்பாடசாலைகள் சிலவற்றைக் கோவில்கள் நிர்வகிக்கின்றன. சில கோவில்களுக்கு நிர்வகிக்க வசதியில்லை. ஆனால் எந்த நாஸ்திகக் கும்பலும் தமிழ்ப்பாடசாலைகளைப் புலத்தில் நிர்வகிக்கின்றன என்றோ, அங்கே தங்களுடைய கொள்கையை முன்னிலைப்படுத்துகின்றன என்றோ சொல்ல முடியுமா?

கனடாத் தமிழ்பாடசாலைகளில் எனக்குள்ள தனிப்பட்ட தொடர்பால் அங்குள்ள பாடசாலைகளில் மதக்கல்வி கற்பிக்கப்படாவிட்டாலும்,(கார

ணம் கிறிஸ்தவ மாணவர்கள் உள்ளார்கள்) அங்கே நாஸ்திகம் வலியுறுத்தப்படுவதில்லை.

சொல்லப் போனால் இந்த நாஸ்திகவாதிகள் மேடை போட்டு முழங்கமட்டுமே இலாயக்குள்ளவர்கள்

வணக்கம் தூயவன். மீண்டும் யாழ் களத்தில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.

எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியில்லை. நான் ஒதுங்கியதால், இப்படிப்பட்ட பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என நம்பியிருந்தேன். ஆனால் திரும்பவும் ஏதோ ஒரு வகையில் இங்கே அது கிளப்பபடுவதால் தவிர்க்க முடியவில்லை.

  • தொடங்கியவர்

ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம்.. என்பது போன்று.. இறுதியில் ஆய்வுக்கட்டுரை எழுதியவர் மீதே பாய்ச்சல் செய்கிறார்கள்..!

நாத்திக வாதத் திணிப்பு யதார்த்த உலகில் எடுபடாது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளும் மட்டும்.. இவ்வாறான தலைப்புக்கள்.. நாத்திக வாததை பிரசவிக்க பாவிக்கப்படுமே அன்றி தாயக மக்களின் நிலைக்காக உருகா என்பதும் இதனூடு நிறுவப்படுகிறது..! :lol:

கட்டுரையாளர் ஆட்டைப் பற்றிச் சொல்ல நெடுக்கல்போவான் அது மாட்டைப் பற்றிய ஆய்வென்று கூறுகிறார், முடியல,

கட்டுரையின் நோக்கை அதன் தலைப்புக் கூறுகிறது, அதன் தலைப்பு என்ன?

Dance Practices in the Sri Lankan London Tamil Community: Are they

markers to sustain national, cultural and ethnic identity?

சிறிலங்கா தமிழ் சமூகத்தில் இருக்கும் நாட்டிய வகைகள்: அவர்களின் தேசிய கலாச்சார இன அடையாளங்களைக் குறிக்கின்றனவா? என்னும் கேள்வி தான் தலைப்பு.

// Scholars and many dancers acknowledge, with professional

distance and some cynicism, the common view that Bharatantyam is a marker of

supposed ‘tradition’, embodying traditional Indian values.//

கட்டுரையாளர் பரத நாடியம் என்பதை இந்தியப் பாரம்பரியம் என்றே கூறி உள்ளார், இது எங்கனம் தமிழர் பாரம்பரியம் ஆனது? கட்டுரையாளருக்கு தமிழ் அடையாளதுக்கும் இந்திய அடையாளதுக்குமான வித்தியாசம் கூடப் புலப்படவில்லை?

ஒரு சமூகவியல் ஆய்வென்றால் அது கட்டுரையாளரின் (openion) சுய கூற்று அல்ல.எடுகோளை மெய்ப்பிப்பதற்கான கள ஆய்வுடன் கூடியதே சமூகவியல் ஆய்வு.இது வெறும் கட்டுரையே அன்றி ஆய்வு அல்ல.ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரையில் குறிப்படப்படும் ஒவ்வொரு விடயதுக்கும் ஒரு முன்னைய ஆய்வின் மேற் கோளோ அல்லது கள ஆய்வோ ஆதாரமாக இருக்கும்.

நெடுக்கல்போவான் கூறிய எடுகோள்,ஆலயங்களே தமிழையும் தமிழ்க்கலைகளையும் பாதுகாக்கின்றன என்பது.ஆனால் நடைமுறையில் அவ்வாறு நிகழ்வது குறிப்பட்ட ஒரு சில ஆலயங்களிலையே லண்டனில் இருக்கும் பல தமிழ்ப் பள்ளிகள் நடனப்பள்ளிகளிலையே தமிழ் மொழியும் தமிழ்க்கலைகளும் பயிற்று விக்கப் படுகின்றன. நிலமை இவ்வாறு இருக்க எந்தக் கள ஆய்வுமே தமிழ் சமூகத்தில் கோவில்களால் தான் இவை பாதுகாகப்படுகின்றன எனக் கூற முடியாது. நெடுக்கலபோவான் தந்த கட்டுரையில் அதன் ஆசிரியர் ஏழு கோவில்களுக்கு ஒரு fலயிங் விசிட் அடித்து விட்டு அங்கு என்ன வகை நாட்டியங்கள் நடக்கிறது என்று தனது பார்வையை கட்டுரையாக எழுதியது முழுத் தமிழ் சமூகத்தைப் பற்றிய சமூகவியல் ஆய்வு அல்ல.

  • தொடங்கியவர்

சில கோவில்கள் வியாபார நோக்கோடு இயங்கின்ற போதும் சில தாயகப் பணியில் ஆர்வத்தோடு இயங்கும் நிலை இன்னும் இருக்கிறது. அது வரவேற்கப்பட வேண்டும். மக்கள் விரயமாக்கும் பணத்தை.. அவர்கள் முதலீடாக்கி தாயகத்துக்கு உதவ முன் வருவதை வரவேற்க வேண்டும்..!

மக்களை திட்டிக் கொண்டிருந்தால்.. வன்னி மண்ணுக்கு உணவு போகாது. வெறும் காத்துதான் போகும்..! :lol:

இதைத் தான் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.சில கோவில்கள் என்பதற்க்குப் பதிலாக பல கோவில்கள் வியாபார நோக்கோடு இயங்கின்றன சில கோவில்கள் மட்டுமே தாயகப் பணியில் தம்மை இணைத்து உள்ளன என்பதே உண்மையான நிலை.அதை விட்டு விட்டு கோவில்கள் தமிழை வளர்க்கின்றன தமிழர் கலைகளைப் பாதுகாக்கின்றன தாயகதுக்கு உதவி செய்கின்றன் என்பது தான் பிழையான வாதம் என்று சொல்லி இருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.