Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் செய்தது சரியா?

Featured Replies

புலிகளிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றது என்பது யாருக்காவது தெரியுமா? கேள்விக்கு பதில் இல்லை, ஏனெனில் அது இராணுவ ரகசியம் அதுதான் புலிகளின் வெற்றி, இது இராணுவத்தின் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், இப்படியிருக்கும் போது புலிகள் தங்களிடம் எத்தனை விமானப்படை வீரர்கள் இருக்கின்றார்கள் என்னபதை ஊகிக்க வசதியாக விமானப்படை வீரர்களின் படங்களை முதல் தாக்குதலில் இருந்து கடைசி தாக்குதல் வரை ஒரு சிலரின் படங்களை பிரசுரித்துள்ளனர், என்ட கேள்வியென்னவென்றால் இதையும் ஒரு உத்தியாக மறைத்திருந்தால் சிங்கள முட்டாள் பயலுகளுக்கு ஒரு பீதியை கொடுத்து ஒரு பேதியை கொடுத்த மாதிரி செய்திருக்கலாமே? ஏன் புலிகள் இதை செய்யவில்லை?

முதலில் வெளியான படம்

2dcidg8.jpg

கடைசியில் வெளியான படம்

21or2wy.jpg

இப்படி கண்ணை மறைத்து போட்டதில் முழு பயனை அடைந்த்துள்ளனரா? இதற்கு பதிலாக முழுமையாக முகத்தை மறத்திருக்கலமே!

ஒரு சிறு துரும்பும் பல்குத்த உதவும் போல் இதுவும் ஏதாவது ஒரு வழியில் சிங்கள புல நாய்களுக்கு உதவியாக இருக்காதா? அதுவும் சிலர் துரோகிகளாக மாறி இருக்கும் இச்சந்தர்ப்பத்தில்

நண்பர்களே உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Edited by மோகன்

கண்ணை மறைத்த காரணம் எனக்கும் புரியவில்லை.

தெரிந்தவர்கள் சொல்வீர்களா?

  • தொடங்கியவர்

தூயா நீங்கள் சொல்லவது முழுமையாக மறத்திருக்கலாம் என்றா ?அல்லது மறைக்காமல் போட்டிருக்கலாம் என்றா?

Edited by hari

முதலாவது தான் அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை ஹரி அவர்களே..... புலிகள் வெளியிட்டது சரி. நீங்கள் சொல்வது போல படங்களை வெளியிடாமல் இருந்தால் சிங்கள இராணுவம் நினைக்ககூடும் புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டவராக இருக்கலாம் என்று ஆனால் புலிகள் படங்களை வெளியிட்டதன் மூலம் தமக்கு ஒரு வான் படையை வைத்திருக்கவும் விமானங்களை செலுத்தவும் அவற்றை பராமரிக்கவும் முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள் இதை வைத்து சிங்கள இராணுவம் புலிகளிடம் இப்படியான தொழில்நுட்பங்கள் இருக்கின்றபோது அவர்கள் பல புதுமையான ஆயுதங்களையும் புதுமையான வழிமுறைகளையும் சமர் களங்களில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் அதுவே அவர்களின் உளவுரனை குறைத்துவிடும்.மற்றையது இந்த படங்களில் கண்ணை மட்டும் மறைத்திருப்பது பிரச்சனையாக தெரியவில்லை ஏனேன்றால் இந்த படங்களில் நிற்பவர்களை யாரும் நெருங்க முடியாது ஆகவே நாம் அதைபத்தி கவலைபடதேவையில்லை(தலைவரின் படம் கூடத்தான் இருக்குது ஆனால் யாரால் என்ன செய்யமுடியும்???).

ம்ம்ம்ம்ம்ம்ம் யோசிக்க வைக்கும் கருத்து

நண்பர்களே...நான் நினைக்கிறேன்...இதுகூட ஓர் உளவியல் தாக்கம்.. முகத்தை மறைத்தால் இந்த படத்தை வைத்துக்கொண்டு எதிரி அலையமாட்டான்..குழம்பமாட்டான்

..

அதே கண்ணில்லாமல் ஒருவரை உறுதிசெய்ய முடியாத.. மற்றது.. இந்த விமானப்படை பயிற்சியை இவர்;கள் வெளிநாடுகளில் பெற்றதால் அவர்கள் இனங்காணப்படுதலோ அந்த நாடுகள் இனங்காணப்படுதலோ..எதிரகால நகர்வுகளைப்பாதிக்கலாம் அல்லவா...

என்ன இளந்திரையன் அண்ணா சொல்றமாதிரி இருக்கா..இருக்கும் இருக்கும் :-)

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வதும் சரிதான், ஆனால் எங்கள் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை ஊகிக்க கூடியதாக இருக்கிறதே? முதல் தாக்குதலில் பங்காற்றியவர்களே கடைசி தாகுதலிலும் பங்காற்றியுள்ளனர் என்பதை கண்ணை மறைத்தும் அறியக்கூடியதாக இருக்கின்றதே?

அதுக்காக பொய் பேசப்படாது...

அது தலைமைக்கு தெரியாது...

சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் கௌரவிக்கப்படுகின்ற படம்.. எதிரிக்கு..ஏதோ திருப்பியை கொடுக்கட்டும்..

ஆனால் நிறைய பேர் இருந்தாலும்...அந்த விமானத்தினல ரெண்டு பேர்தான் பறக்கிறவை போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வதும் சரிதான், ஆனால் எங்கள் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை ஊகிக்க கூடியதாக இருக்கிறதே? முதல் தாக்குதலில் பங்காற்றியவர்களே கடைசி தாகுதலிலும் பங்காற்றியுள்ளனர் என்பதை கண்ணை மறைத்தும் அறியக்கூடியதாக இருக்கின்றதே?

ஹரி அந்த படத்தில் இருப்பவர்களை வைத்து எவரும் புலிகளின் விமானப்படையினரின் எண்ணிக்கையை கணக்கிடமாட்டார்கள் ஏனேன்றால் அந்த படத்தில் இருப்பவர்கள் குறிப்பிட்ட தாக்குதலில் பங்குபற்றிய புலிகள் மட்டுமே ஒட்டுமொத்த வான்படையினரும் இல்லை. அத்தோடு விமானப்படையின் பலம் என்பது வீரர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து மதிப்பிடுவதல்ல விமானப்படையின் பலம் அவர்களிடம் இருக்கும் நவீன விமானங்கள் நவீன போர்க்கருவிகள் தாக்குதல் யுக்திகள் என்பனவற்றிலேயே தங்கியிருக்கும் காலாட்படையின் பலத்தை கூறுவதற்குதான் அவர்களின் எண்ணிக்கையும் ஒரு முக்கியமான காரணியாக கொள்ளப்படும்.

  • தொடங்கியவர்

அவசரமான கெளரவிப்பு அவசியமில்லை என்றே நான் நினைக்கின்றேன், எத்தனை வீரர்கள் முகம் தெரியாமலே கருகி இருக்கின்றனர்,

  • தொடங்கியவர்

ஆனால் சுப்பண்ணை, சிங்கள படையில் அதிகம் படித்தவர்கள் கிடையாது, இவர்களின் பலவீனத்தை நாங்கள் பயன்படுத்தியிருக்க கூடாதா? ஒருவரின் பலவீனம் தான் மற்றவருக்கு பலம், வீரர்கள் மட்டுமல்ல விமானத்தையும் காட்டியது என்னை பொருத்தவரையில் சரியாக படவில்லை, இந்த உளவியல் யுத்தத்தில்

புலிகள் விமானத்தை காட்டினார்களா? என்ன சொல்கிறீர்கள்? :lol::lol::)

  • தொடங்கியவர்

புலிகள் விமானத்தை காட்டினார்களா? என்ன சொல்கிறீர்கள்? :lol::lol::)

taf_5_60638_435.jpg

taf_11_60654_435.jpg

  • தொடங்கியவர்

இல்லை ஹரி அவர்களே..... புலிகள் வெளியிட்டது சரி. நீங்கள் சொல்வது போல படங்களை வெளியிடாமல் இருந்தால் சிங்கள இராணுவம் நினைக்ககூடும் புலிகளின் விமானங்களை செலுத்துபவர்கள் வெளிநாட்டவராக இருக்கலாம் என்று ஆனால் புலிகள் படங்களை வெளியிட்டதன் மூலம் தமக்கு ஒரு வான் படையை வைத்திருக்கவும் விமானங்களை செலுத்தவும் அவற்றை பராமரிக்கவும் முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள் இதை வைத்து சிங்கள இராணுவம் புலிகளிடம் இப்படியான தொழில்நுட்பங்கள் இருக்கின்றபோது அவர்கள் பல புதுமையான ஆயுதங்களையும் புதுமையான வழிமுறைகளையும் சமர் களங்களில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் அதுவே அவர்களின் உளவுரனை குறைத்துவிடும்.மற்றையது இந்த படங்களில் கண்ணை மட்டும் மறைத்திருப்பது பிரச்சனையாக தெரியவில்லை ஏனேன்றால் இந்த படங்களில் நிற்பவர்களை யாரும் நெருங்க முடியாது ஆகவே நாம் அதைபத்தி கவலைபடதேவையில்லை(தலைவரின் படம் கூடத்தான் இருக்குது ஆனால் யாரால் என்ன செய்யமுடியும்???).

அப்படி நினைத்திருந்தாலும் எங்களுக்கு அதுவும் சாதகமாக அமைந்திருக்ககூடும், ஊகத்தின் பெயரில் வெளி நாடுகளுடன் முறுகல் நிலை ஏற்பட்டு இருக்குமே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஹரி,இதுவும் ஒரு வித யுக்தியே. ஆனால் இந்த படத்தில் இருக்கும் விமானம் தான் தாக்குதல்களில் ஈடுபடுகின்றது என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியுமா? இல்லை இதுவரை அரசாங்கம் சொல்கிறது புலிகள் தாக்குதலுக்கு சிலின் ரக இலகு விமானங்களை தான் பயன்படுத்துகிறார்கள் என்று ஆனால் உறுதிப்படுத்தவில்லை. இனிவரும் காலங்களில் பதில் கிடைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி நினைத்திருந்தாலும் எங்களுக்கு அதுவும் சாதகமாக அமைந்திருக்ககூடும், ஊகத்தின் பெயரில் வெளி நாடுகளுடன் முறுகல் நிலை ஏற்பட்டு இருக்குமே ?

ஸ்ரீலங்கா எந்த நாட்டின் மீது ஊகம் கொள்வது எந்த நாட்டோடு முறுகுவது? ஸ்ரீலங்கா அரசுக்கு புலிகள் தமது படங்களை வெளியிடாவிட்டாலும் தெரிந்திருக்கும் புலிகளின் விமானங்களை புலிகளே இயக்குகிறார்கள் என்று ஏனேன்றால் புலிகளின் விமானம் தாக்குதலில் ஈடுபடும் போது சிறிலங்கா அரச படைகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டால் விமானத்தை இயக்கியவர் யார் என்று தெரிவதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எந்த ஒரு நாடும் அவ்வளவு ஆபத்திலும் உதவி செய்ய முன்வராது ஆகவே புலிகள் தான் இயக்குகிறார்கள் என்ற முடிவுக்கு அரசாங்கம் இலகுவாக வரமுடியும்.

  • தொடங்கியவர்

இதையும் கவனிக்க வேண்டும், அதாவது புலிகளின் முதலாவது தாக்குதல் கட்டு நாயக்க அல்ல , அது பலாலி ஆனால் புலிகள் அதை உரிமை கோரவில்லை, அதற்கான காரணம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கவனிக்க வேண்டும், அதாவது புலிகளின் முதலாவது தாக்குதல் கட்டு நாயக்க அல்ல , அது பலாலி ஆனால் புலிகள் அதை உரிமை கோரவில்லை, அதற்கான காரணம் என்ன?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43643

ஆம் பலாலியில் தான் முதல் தாக்குதல் நடந்தது.அதைபத்தி முதலும் குறிப்பிட்டுள்ளோம் இணைப்பை பார்க்கவும்..புலிகள் முதல் தாக்குதலை உரிமைகோராததுக்கு காரணங்கள் பல இருக்கலாம் முதலாவது புலிகள் பலாலியில் தாக்குதல் நடத்திய போதும் அதற்கு உரிமைகோரவில்லை ஏனேன்றால் அவர்கள் உலக நாடுகளின் கருத்துக்களை அறியவிரும்பினார்கள். தமிழீழ விடுதலை புலிகளை கணிசமான நாடுகள் பயங்கரவாதிகள் என்கின்றன அப்படி அவர்கள் பயங்கரவதிகளாக புலிகளை பார்க்கும் போது எம்மிடம் விமானப்படையும் இருக்கின்றது என்பதை உலக நாடுகள் எப்படி எடுத்துக்கொள்கின்றன என்பது முக்கியம்.அதில் புலிகள் வெற்றி கண்டார்கள் அதன் பிரகாரம் ரெண்டாவது தாக்குதல் உரிமை புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.வெளியி

  • தொடங்கியவர்

நன்றி சுப்பண்ணை! மற்ற உறவுகள் என்ன சொல்கினம் என்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வானோடிகள்.. விமானம் ஒன்றுக்கு தலா இரண்டு பேர் வீதம்.. எனவே இரண்டு விமானங்கள் மட்டும்தான் உள்ளன என்று கணக்கு சொல்கிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.