Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் படையினரது 19 உடலங்களை கிளிநொச்சி மக்கள் பார்வையிடுகின்றனர்

Featured Replies

Army_Bodies_20080903_001.jpgவன்னி களமுனைகளில் கைப்பற்றப்பட்ட சிறீலங்கா படையினரது 19 உடலங்களை மக்கள் தற்பொழுது பார்வையிட்டு வருவதாக, எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மோதல்களில் நாச்சிக்குடா, மற்றும் வன்னேரிக்குளம் 8ஆம் கட்டை பிரதேசங்களில் இந்த உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இன்று அல்லது நாளை இந்த உடலங்கள் செஞ்சிலுவை அனைத்துலக சங்கம் ஊடாக சிறீலங்கா படையினரிடம் கையளிப்படவுள்ளன.

கிளிநொச்சி நாச்சிக்குடா, வன்னேரிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 75 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 100 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்களை பார்வையிட..........

Edited by தராக்கி

ஐயோ இந்த நேரத்திலை குறுக்காலை போனதுகள் மெளனமாக இருந்துவிடுவினம். சிலவேளை இறந்து போன இராணுவத்தினருக்காக பிரித் ஓதுகினமோ என்னவோ?

ஐயோ இந்த நேரத்திலை குறுக்காலை போனதுகள் மெளனமாக இருந்துவிடுவினம். சிலவேளை இறந்து போன இராணுவத்தினருக்காக பிரித் ஓதுகினமோ என்னவோ?

:)

என்ன கோதாரிக்கு அந்த குறுக்குகால போனதுகளை கூப்பிட்டு வேலியில போற ஓணானை தூக்கி சாறத்துக்கள்ள விடுகிறிர் ?????

  • கருத்துக்கள உறவுகள்

:)

என்ன கோதாரிக்கு அந்த குறுக்குகால போனதுகளை கூப்பிட்டு வேலியில போற ஓணானை தூக்கி சாறத்துக்கள்ள விடுகிறிர் ?????

:D:D:D

கீரைக்கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் :D:D:D:D

:D:D:D

கீரைக்கடைக்கும் எதிர்க் கடை வேண்டும் :D:D:D:)

:D

எதிர் கடை வேணும் தான் அதுக்காக உதே கேக்கிறது ???

ஓணான் பிச்சு மேச்சிடாது ? பிறகு என்ன பேசாதையுங்கோ !

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்களமுனையில் இருந்து இன்று மேலதிகமாக 10 சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் உடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் சடலங்கள் போர்க்களத்தில் பரவிக் கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 உடலங்கள் இன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 உடலங்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வன்னிச் சண்டையில் சிறீலங்காப் படையினர் பேரிழப்பை சந்தித்திருப்பதை அரசு சார்பு ஊடகங்கள் மறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tigers locate 29 SLA bodies, 75 SLA killed, 100 wounded in Vanni

[TamilNet, Tuesday, 02 September 2008, 15:06 GMT]

The Liberation Tigers of Tamileelam, on Wednesday recovered further 10 dead bodies of the SLA soldiers, in addition to the 19 bodies handed over to the ICRC, from the battlefield after Tuesday's heavy fighting on two fronts in Vanni. 45 Sri Lanka Army (SLA) soldiers were killed and more than 51 wounded in Naachchikkudaa when Liberation Tigers of Tamileelam (LTTE) confronted the SLA in a stiff fighting throughout Monday night, and on Tuesday, 30 more SLA soldiers were killed and 50 wounded in another front, between Akkaraayan and Vannearikku'lam, where Tiger fighters fought against the SLA from 5:30 a.m. till 6:00 p.m., on Tuesday, LTTE officials in Vanni told TamilNet.

Dead bodies of SLA soldiers were still scattered around in the no-man zone between the front line of the SLA and the LTTE, according to the latest updates.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26812

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தளபதி குறைஞ்சது 4 மாதமாகும் கிளி நொச்சிக்கு போக எண்டார் இவை பத்தொன்பது பேரும் வெகு வேகமா வந்து சேர்ந்திட்டினம்,பொன்சேகாவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த அன் கோ க்கு இது அறுவடை காலம். விளைச்சல் எல்லாம் இனிமல் தான் தென்பகுதிக்கு போகப்போகுது

சிங்களத்தளபதி குறைஞ்சது 4 மாதமாகும் கிளி நொச்சிக்கு போக எண்டார் இவை பத்தொன்பது பேரும் வெகு வேகமா வந்து சேர்ந்திட்டினம்,பொன்சேகாவும

இராணுவத்தின் உடல்களை தாயகத்தில் ஆக்கிரமிப்பை எதிர்கொள்பவர்கள் பார்பதற்கு காரணம் இருக்கு தேவையிருக்கு. அதை வெளிநாட்டுக்கு காட்டி என்ன பயன்? தமிழ்நெற் கடந்த சில வாரங்களாக இராணுவத்தின் உடலங்களை காட்சிக்கு வைக்கும் படங்களை வெளியிடுவதை நிறுத்தியிருந்தது. திருப்பி முருங்கை மரத்தில் ஏறிவிட்டது போல கிடக்கு.

defense.lk MCSN இல வருகுது என்று போட்டிக்கு நாங்களும் பிணக்கண்காட்சி படங்களை உலகுக்கு காட்டி என்ன சொல்ல முனைகிறம்? ஆக்கிரமிப்பை எதிர்கொள்பவர்கள் பார்ப்பதற்காக உள்ளுர் கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட படங்கள் ஏன் வெளியில் வருகிறது?

உடலங்கள் கைப்பற்றியதை செய்தியாக்க வேண்டும் என்றாலும் அதை செஞ்சிலுவை சங்கத்திடம் கைய்யளிக்கும் நிகழ்வின் படங்களை காட்டினால் போதாதா?

அதன் மூலம் சொல்ல வரும் செய்தியை நாகரீகமாக சொல்லாம் தானே.

எமது அவலங்களை தான் அதன் கோரவடித்தில் பல கோணத்தில் காட்சிப்படுத்த வேண்டும் வெளியுலகிற்கு:

-1- அங்கிகாரம் வேண்டி நிற்பதால் நியாயத்தை உறைக்க வைக்க.

-2- புலம்பெயர்ந்தவர்கள்; தாயகத்தின் அவலத்தை அதன் தேவை உணர்ந்து பணியாற்ற வைக்க.

சிங்களப்படைகளின் உடலங்களை பல கோணத்தில் படம் பிடித்து காட்டி என்ன சொல்ல முனைகிறம்?

களத்தில் நிக்கும் சிங்கள சிப்பாய்கு தன்னை சுற்றியுள்ள சகபாடிகளின் இழப்பை தமிழ்நெற்றில் தான் அறிய வேண்டுமா? அப்படி அறிவதற்கான வசதிதான் களத்தில் இருக்கிறதா?

சிங்களவர்களிற்கு உண்மை மறைக்கப்படுகிறது என்றால் செஞ்சிலுவை சங்கத்தின் கைய்யளிப்பு படங்கள் போதாதா? சாதாரண சிங்கள மக்களிற்கு 70 என்ன 700 சிங்கள சிப்பாய்களின் உடலங்களை கைப்பற்றி படம் எடுத்து விட்டாலும் யுத்தத்தை நிறுத்த முடியாது.

எமது அமைதி பொறுமை யுத்தநிறுத்த அறிவுப்புகளின் நோக்கம் என்ன? அந்த நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்றதா இந்த போட்டிக்கு நடத்தும் பிணக் கண்காட்சிகள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தப் போராட்ட சூழ்நிலையிலும், அந்தந்த மக்களின் மனநிலையைப் பேணுவதில் தான் வெற்றி தங்கியிருக்கின்றது, நாம் தோற்றுப் போகின்றோம் என்று நமக்குள்ளேயே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் இருந்து மாறி வெல்வோம் எ;ற நம்பிக்கை மக்களிடமும் வரவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன கவலை, மந்தைகள் மண்ணாங்கட்டிகள் என்று எழுதுவதால் எந்தப் பிரியோசமும் இல்லை. அந்த மக்களுக்கு அப்படியான உணர்வு என்றால் அதனூடகத் தான் போராட்டத்திற்கான பங்களிப்பை வரவேற்க வேண்டும்.

ஆகவே இப்படிப் படங்கள் இணைப்பதில் தவறே இல்லை.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று எமக்குள்ள ஒரு நம்பிக்கை இருப்பதால் தான், அது பற்றிய உணர்வில் ஊற்றாக இருக்கின்றோம். அது போல போராட்டத்தின் வெற்றி பற்றிய நம்பிக்கையும் அவசியமானது.

அப்ப பல கோணத்திலை சர்வதேசத்துக்கு வெளியிடப்பட்டிருக்கிற உந்த சிங்கள இராணுவத்தின் உடலங்களின் படங்கள் சோர்ந்து போயிருக்கிற புலம்பெயர்ந்த மக்களுக்கு நம்பிக்கி கொடுக்கிறதுக்கு என்றியள்?

சிங்களவரின் பிணங்களை வைச்சுத்தான் புலம்பெயர்ந்த தமிழரிற்கு போராட்டத்தில் நம்பிக்கையை பேணலாம். 70... 71 ...19 ..22 என்று பிணங்களை எண்ணி வரிசைப்படுத்தி காட்டித்தான் நம்பிக்கை வருவதற்கு புலிகள் ஒரு பிஸ்டலும் சைக்கிலுமாக ஓடித்திரியிற நிலமையிலா போராட்டம் இருக்கு? முப்படைகள் விசேட படையணிகள் தேசிய கட்டுமானங்கள் நடைமுறை அரசு இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி என்று எல்லாம் வைத்துக் கொண்டு சில்லறைத்தனமாக பிணங்களை எண்ணி பிணக்கண்காட்சி படங்களை சர்வதேசத்துக்கு வெளியிட்டு என்னத்தை சொல்லிறம்? அங்கீகாரம் வேண்டி நிக்கிறம் படைவலுச் சமநிலை இருக்கு எண்டு எல்லாம் சொன்னம். ஆனால் மீண்டும் ஆரம்பகால கரந்தடி போராட்டம் போல் 19, 20 70 என்று எதிரியின் உடல்களை சர்வதேசத்துக்கு காட்சிப்படுத்திறம். இன்று எமது போராட்டத்தை பொறுத்தவரை 19 இராணுவ உடல்களை வைச்சு கண்காட்சி நடத்தி சர்வதேசத்துக்கு படங்கள் வெளியிடுவதா சாதானையான ஆதாரங்களோடு நீரூபிக்க வேண்டிய விடையம்? அந்தளவிற்கு போராட்டம் பின்தள்ளப்பட்டுவிட்டதா? இல்லை நாம் என்னமும் பழய மனநிலை பழக்க வழக்கங்களில் இருந்து மீளாது எம்மை அறியாமலேயே தவறுவிடுகிறோமா?

இந்தப் சிப்பாய்களின் பிணங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் பார்த்து அதாலை அவர்களுக்குள் ஊற்றெடுக்கிற உணர்வில சர்வதேச சமூகத்தை நோக்கி அங்கீகாரம் வேண்டி பரப்புரை lobbying செய்யப்போகினம்?

எமது போராட்டத்தை தர்க்கரீதியாக விளங்கப்படுத்தும் மேற்குல மொழித்திறமை கொண்ட எதிர்கால ஊடகவியலாளர்களை உருவாக்கலாம் புலம்பெயர்ந்த சமூகத்தில?

உதுகளை பாத்துட்டு சர்வதேசமும் புலிகள் அழியவில்லை பலமாகத்தான் இருக்கினம் எண்டு உடன் தமிழீழத்தை அப்காசியாவுக்கு போட்டியாக அங்கீகரிக்கும் எண்டோ?

http://news.bbc.co.uk/2/hi/south_asia/7307349.stm

சிறீலங்கா முழுமையான அங்கீகாரம் கொண்ட தரப்பு. அது செய்யும் ஒவ்வொன்றிற்கும் எதிர்வினையாக நாமும் செய்வதால் எமது இலக்கை அடைய முடியாது. ஆனால் நாம் அப்படி எதிர்மறையாக இயங்கும் மனநிலையில் இருக்க வேண்டும் அந்த வட்டத்தினுள் சிக்கியிருக்க வேண்டும் என்று தான் சிறீலங்காவும் தந்திரமாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

முழுமையான அங்கீகாரம் கொண்ட சிறீலங்காவால் பல தவறுகளை விட முடியும். அதிகப்படியாக அதற்கு கிடைக்கக் கூடிய தண்டை ஆட்சியில் இருக்கும்-இருந்த அரச தலைவர்கள் நீக்கப்படுவது தண்டிக்கப்படுவது மாத்திரமே. ஆனால் எம்மைப் பொறுத்தவரை கொடுக்கப்படக் கூடி விலையின் ஆழ அகலத்தில் இருந்து மீளமுடியாத நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர்,

19, 20, 21... எண்டு சாகிற ராணுவத்தின்ர உடல்களைக் காட்டித்தான் புலத்திலுள்ளவர்கள் உத்வேகம் பெறவேண்டுமா என்று கேட்கிறீர்கள்? அல்லது அவ்வளவு தூரத்திற்குப் போராட்டம் கீழிறங்கி விட்டதா என்று கேட்கிறீர்கள்.

இதில் உண்மை என்னெவென்றால், புலிகள் உண்மையிலேயே பலமிழந்து விட்டார்களா அல்லது தேவையின் நிமித்தம் பின்வாங்குகிறார்களா என்று கூடத் தெரியாமல், தாமே உருவாக்கிய கோட்டை கொத்தளங்கள் உடைந்து தரைமட்டமாகும்போது ஒரு மக்கள கூட்டாம் தாமாகவே தாம் தோற்பது போன்ற பிரமயை ஏற்படுத்திக் கொள்கிறது. ஆகவே இப்படியான தருணங்களில் இவர்கள் 19, 20, 21...என்று படம் போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

1996 இல் முல்லைத்தீவைல் கொல்லப்பட்ட 1300 ராணுவத்தின் சடலங்களை அடுக்கி வைத்தபோது இருந்ததைக் காட்டிலும், இப்போது இந்த 19 உடலங்களுக்கும் மவுசு அதிகம் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அப்போது மக்களின் பார்வையில் புலிகள் பலமிழக்கவில்லை, ஆனால் இன்றோ புலிகள் பலமிழந்துவிட்டதாக மக்கள் நினைக்குமளவிற்கு அரசின் பிரச்சாரமும், புலிகளின் சில நகர்வுகளும் இருந்து விட்டன.

புலிகளின் எல்லா நகர்வுகளுக்கும் காரணம் தேட முயலும் மக்களுக்கு கிடைப்பதெல்லாம் புலிகள் தோற்கிறார்கள் என்ற விடைதான். இது அவர்களே கேள்வியும் கேட்டு விடையும் தேடும் நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.

இதை நிவர்த்தி செய்வதற்கு விரும்பியோ விரும்பாமலோ புலிகளும் இவ்வாறான கண்காட்சிகளை வைக்க வேண்டிய தேவைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.இது புலிகள் பலமாக உள்ளபோதும் அவர்களால் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.