Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைப் போரில் இந்தியப் படை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் போரில் இந்தியப் படை?

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான யுத்தம், புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. 'இலங்கை ராணுவம் தமிழர் பகுதி களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழர் பகுதிகளும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விடுதலைப்புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் படுவார்கள்' என்று தொடர்ந்து இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. இங்கே கிடைக்கின்ற செய்திகளும் ஒருதலைப் பட்சமானவையாகவே இருப்பதால், உண்மை நிலவரம் எதுவென்று நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் இலங்கை அரசின் பிரசாரத்தை உண்மையென்று நாமும் நம்புகிற சூழல்!

p39wz6.jpg

இதற்கிடையே, இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து 260 கிலோமீட்டர் தொலை வில் உள்ள வன்னியில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவத்தின் சிறப்புப்படை தலைமையகத்தின் மீது, விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ள செய்தி வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அதிகாலை அந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

வன்னியில் நடைபெற்ற தாக்குதல்சுமார் மூன்று மணி நேரம் நீடித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டுவீசுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல. கடந்த ஆண்டு அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட முதல் விமானத் தாக்குதலுக்குப் பிறகு பலமுறை புலிகளின் விமானங்கள் இலங்கையின் ராணுவ இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாகத் தாக்கு தலை நடத்திவிட்டு அவை பத்திரமாகத் தமது தளங்களுக்குத் திரும்பியுள்ளன. இந்த முறை வன்னியில் நடத்தப்பட்டத் தாக்குதல் சற்றே வித்தியாசமானது. விமானங்கள் குண்டு வீசுவதற்கு முன்பு, புலிகளின் தரைப்படை முதலில் பீரங்கித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. பீரங்கிகள் குண்டு களை வீசிக்கொண்டிருந்த வேளையிலேயே புலிகளின் தற்கொலைப்படை அந்த ராணுவ தலைமையகத்துக்குள் ஊடுருவி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பத்துப் பேர்களைக்கொண்ட அந்த கரும்புலிகளின் தற்கொலைப்படையில், ஐந்து பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது! தரைப் படை, தற்கொலைப்படை, விமானப்படை என மும்முனைத் தாக்குதலைப் புலிகள் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்திக் காட்டியுள்ளனர்.

''அதிகாலை 3.26-க்கு எங்களது ராடாரில் புலிகளின் விமானம் ஒன்று தென்பட்டது. உடனே நாங்கள் விமான எதிர்ப்புப் பீரங்கிகளால் அந்த இலக்கை நோக்கிச் சுட்டோம். 3.31 மணிக்கெல்லாம் இன்னொரு விமானம் வருவதை ராடாரில் பார்த்தோம். கட்டுநாயகே விமான தளத்தில் இருந்து ஜெட் விமானங்கள் புலிகளின் விமானங்களை விரட்டிக் கொண்டு வந்தன. ஆனால், அந்த விமானங்கள் தப்பித்துச் சென்றுவிட்டன'' என்று இலங்கையின் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார்.

புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற இலங்கை ராணுவத்தின் ஜெட் விமானங்கள், முல்லைத்தீவுப் பகுதியில் புலிகளின் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக இலங்கை ராணுவம் கூறியபோதிலும்... அதை நிரூபிக்க அவர் களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. இந்தச் சண்டையில் சுமார் இருபது இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும், புலிகளின் தரப்பில் தற்கொலைப் படையைச் சேர்ந்த கரும்புலிகள் பத்துப் பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

வன்னியில் நடந்த புலிகளின் விமானத் தாக்குதலின் முக்கிய இலக்கு, இலங்கை ராணுவத் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த 'இந்த்ரா-II' என்ற ராடார்தான். 'இந்தியன் டாப்ளர் ராடார்' (Indian Doppler Radar-INDRA) என்பதன் சுருக்கமே 'இந்த்ரா' என்பதாகும். இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வால் உருவாக்கப்பட்டது இந்த ராடார். இது, தரைக்கு மிக அருகாமையில் பறக்கும் விமானங்களைத் திறமையாகக் கண்டறியக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இந்திய அரசாங்கம் அத்தகைய ராடார்களை இலங்கைக்கு வழங்கி வருகிறது என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு முன்பே சுட்டிக்காட்டியிருந்தன. இன அழித்தொழிப்பில் ஈடுபடும் இலங்கை அரசுக்கு இத்தகைய ராணுவத் தளவாடங்களைக் கொடுக்கக்கூடாது என்று அக்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அப்படி கண்டனக்குரல்கள் எழுந்தபோதெல்லாம் 'இலங்கைக்கு ராணுவ உதவி எதையும் செய்யவில்லை. சிவில் உதவிகளையே இந்திய அரசு செய்கிறது' என்று மத்திய அரசின் சார்பில் பதில் சொல்லப்பட்டு வந்தது.

p38ib1.jpg

ஆனால், அப்படிச் சொல்லப்பட்டவை யாவும் அப்பட்டமான பொய் என்பது இப்போது அம்பல மாகி விட்டது. இலங்கைக்கு ராடார் கருவியை வழங்கியது மட்டுமல்லாமல், அதை இயக்குவதற்கு தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்தியா அனுப்பி வைத்திருப்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. வன்னியில் நடந்த புலிகளின் விமானத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ராடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் சிகிச்சைக்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

வன்னியில் உள்ள இலங்கையின் ராணுவத் தலைமை யகத்தில் இந்தியாவைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்களைத் தவிர இலங்கையின் சிறப்புப்படைக்குப் பயிற்சி அளிப்பதற் காக வெளிநாடுகளைச் சேர்ந்த சில நிபுணர்கள் தங்கியிருப்பதாகவும் 'தமிழ் நெட்' இணைய இதழ் குறிப்பிட்டுள்ளது.

புலிகளின் தாக்குதலில் இந்த்ரா-மிமி ராடாருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறியபோதிலும், அந்த ராடார் சற்றே சேதமடைந் திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இலங்கைக் கப்பற்படை இணைய தளத்தில் அதை ஒப்புக்கொண்டு செய்தி வெளியாகி இருப்பதாக இந்திய ராணுவ விமர்சகர் பி.ராமன் குறிப்பிட்டிருக்கிறார்.

''இந்த ராடார் சேதமடைந்திருப்பதால் இலங்கை ராணுவ நடவடிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படாது. அதுபோலவே இலங்கையின் விமானப்படை விமானங் கள் பகல் நேரத்தில் தமிழர் பகுதிகளில் தமது இஷ்டம் போல தாக்குதல் நடத்துவதையும் அது தடுத்துவிடப் போவதில்லை. ஆனால், தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்ற புலிகளுக்கு இம்முறை நிகழ்ந்தது ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்'' என்று பி.ராமன் கூறியிருப்பது ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மையாகும்.

வன்னியில் நடத்தப்பட்ட தாக்குதலையட்டி, இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இலங்கை அரசின்மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கி யுள்ளன. ''விமானப்படை தளமும், காவல் துறை தலைமையகமும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளன. ராடார் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துருப்புகளால் விடுவிக்கப்பட்ட பிரதேசம் என்று இலங்கை அரசால் பீற்றிக்கொள்ளப்பட்ட பகுதியில்தான் இத்தனையும் நடந் திருக்கிறது'' என்று

யு.என்.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமண் செனவிரத்னே சாடியிருக்கிறார். 'புலிகள் இந்த அளவுக்குப் பீரங்கி களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் இன்னமும் கிழக்குப் பகுதியில் பலமோடு இருக் கிறார்கள் என்றுதானே அர்த்தம்?' என்று அவர் கேட்டிருக்கிறார்.

''கடந்த இரண் டாண்டுகளில் 1800 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 9901 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். ஐந்தா யிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கை, கால்களை இழந்து முடமாகி இருக்கிறார்கள். அவர்களால் மீண்டும் ராணுவத்தில் வந்து பணியாற்ற முடியாது'' என்று குறிப்பிட்டுள்ள அவர்,

''புலிகளின் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக எஃப்-27 மற்றும் எஃப்-29 ரக விமானங்களை வாங்குவதாக இலங்கை அரசு கூறியது. அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், அமைச்சர்கள் தங்கள் பாக்கெட்களில் போட்டுக்கொண்டது எவ்வளவு என்பதை நாமெல்லாம் அறிவோம். இன்னமும் புலிகளின் விமானங்கள் வானில் பறந்து கொண்டுதான் இருக்கின்றன'' என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கையின் இனப்பிரச்னையில் இந்திய அரசு சில எல்லைகளைத் தாண்டி தலையிட்டு வருகிறது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டு, இப்போது மேலும் மெய்யாகி இருக்கிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்த இந்தியா, அதன்பிறகு அவர்களை அடக்கி ஒடுக்கத் தனது ராணுவத்தையே இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அரசாங்கத்தைக் காட்டிப் போராளி குழுக்களையும், அவர்களைக் காட்டி இலங்கை அரசையும் மிரட்டுவது என்பதுதான் ஒரு கட்டம் வரை இந்திய அரசின் அணுகுமுறையாக இருந்தது. அதன்பின்னர் ஒரேயடியாக இலங்கை அரசாங்கத்தோடு இந்தியா கூடிக்குலாவ ஆரம்பித்தது. இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளித்தல், இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை வழங்குதல், அதற்குப் பொருளாதார உதவிகளைச் செய்தல் என்பதாக இந்தக் கூட்டணி செயல்பட்டு வந்தது. இதனிடையே இலங்கையில் அமைதியை ஏற்படுத்த நார்வே மூலமாக நடைபெற்ற அமைதி முயற்சிகளின் பின்னணியிலும்கூட இந்திய அரசின் கை இருந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இத்தகைய தகவல்களைத் தொடர்ந்து இந்திய அரசு மறுத்தே வந்தது.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சுட்டுக்கொன்றபோதிலும், அதைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இது தொடர் பாகத் தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் முன்வைத்த கோரிக்கை களையும்கூட இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவதை மட்டும் அது நிறுத்தவில்லை. இந்திய அரசு இலங்கைக்கு இதுவரை ராணுவ உதவியை மட்டும்தான் செய்து வருகிறது என்று நாமெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தோம். இந்திய ராணுவத்தினர் இலங்கை ராணுவத்தோடு இணைந்து செயல்படுவார்கள் என்று யாரும் கற்பனைகூட செய்ததில்லை. இலங்கையில் நடந்து வரும் யுத்தத்தில் இந்தியாவின் பங்கு என்ன? இலங்கைக்கு ராடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டும்தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்களா? விமானப்படை வீரர்களும் அனுப்பப்பட்டு இருக்கிறார்களா? இதற்கெல்லாம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இவை அரசியல் தலைமையால் எடுக்கப்பட்ட முடிவா? இப்படிப் பல கேள்விகள் நமக்குள் அடுக்கடுக்காய் எழுகின்றன.

விகடன்.

காந்தி தேசமே நீதி இல்லையா?

நீதி கொன்றிட வெட்கமில்லையா??

காந்தி தேசமே நீதி இல்லையா?

நீதி கொன்றிட வெட்கமில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: காதியை சுட்டுக் கொன்ரவனுக்கு விழா எடுக்கும் தேசம் தானே அது ? பிறகு என்ன காந்தி தேசமும், நேரு தேசமும் ?

அது ஒரு போலி ஜனநாயக தேசம். மக்களின் வறுமையில் அரசியல் நடத்தி வயிறு வளர்க்கும் தேசம். அயலவனை நிம்மதியாக வாழ விடாது குடி அழிக்கும் தேசம். பார்ப்பணிய முதளாளிகளின் கைவண்ணத்தில் ஆடிவரும் தேசம். காந்தி இன்று இருந்திருந்தால் தூக்குப்போட்டுச் செத்திருக்கும் தேசம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் குடிமக்கள், பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு அடிமைகள்(அ) விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஓட்டு பொறுக்கி கட்சிகளுக்கு அல்லல்படும் ஈழத்தமிழர்கள் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் பாடெல்லாம் அவரவர் மகனை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்பதே.

பாவம் அப்பாவி தமிழன் ரஜினி படத்திற்கு பால் குடம் எடுப்பதா? பீர் குடம் எடுப்பதா?? என்ற கவலையில் ஆழ்ந்து நித்திரையில் உள்ளான்.

மொத்தத்தில் பார்ப்பன அதிகார வர்க்கம் மீண்டும் தனது இன ஒடுக்குமுறையை பரிசீலித்து பார்க்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அநியாயம் வேறு எங்கு நடக்காது. தமிழகத்தில் தமிழன் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான், வேற்று மாநிலத்தவன் அவர்களை ஆண்டு கொண்டு அடிமையாக்கிச் சுரண்டிக் கொண்டிருக்கிறான். சினிமா மோகத்துக்குள்ளும், போலி தேசியவாதத்துக்குள்ளும் தமது அடையாளத்தைத் தொலைத்து விட்டுத் தமிழன் ஏதிலிகளாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் துயில் முறித்து எழும்போதுதான் அவனைச் சுற்றி இறுகியிருக்கும் அடி :icon_idea: மைச்சங்கிலி உடைந்து விழும் !!!!!

நீங்க வேறு அவர்கள் இப்போது ஓணம் பண்டிகை தான் கொண்டாடுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க ரகு நாதன் அவங்க அடுத்த பப்படம் என்ன வரும் எப்படி வரும் வரும் என்றுதானே யோசித்து கொண்டு இருக்கிறாங்க அந்தப்க்கம் மலையாளி அடுத்த பக்கம் தண்ணி கொடுக்க மறுக்கும் இன்னொருத்தன் இவனுகளுக்கே ஒன்றும் செய்ய முடியல்ல நமக்கா??? :icon_idea::lol:

அடுத்தது எவனுக்கு கோவில் கட்டுவது எவள முதலை அமைச்சர் ஆக்குவது பால் வாப்பது பற்றிதானே சிந்தனை :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்குக்காரனான கருணாநிதி முதலமைச்சர், மலையாள பார்ப்பணச்சி எதிர்கட்சித்தலைவி, மும்பைக்கார ரஜினி கடவுள், தெலுங்குக்கார விஜயகாந் அரசியல்வாதி, குஜாராத்தி நமீதா கனவு தேவதை......இப்படி எல்லாருமே தமிழகத்துக்குச் சுரண்ட வந்தவர்கள் தான். அவர்கள் நமீதாவுக்குக் கோயில் கட்டி, ரஜினிக்கு பாலாபிஷேகம் பண்ணி முடிக்கவே உழைக்கும் பணம் போதாது, இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழ்பற்றி நினைப்பதாவது ?! ஓணம் பண்டிகையும், கோலிப் பண்டிகையும் கொண்டாடி தாண்டியா ஆட்டமும் ஆடிக்கொண்டிருங்கோ....கொஞ்சக்க

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் குடிமக்கள், பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு அடிமைகள்(அ) விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஓட்டு பொறுக்கி கட்சிகளுக்கு அல்லல்படும் ஈழத்தமிழர்கள் பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்கள் பாடெல்லாம் அவரவர் மகனை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்பதே.

பாவம் அப்பாவி தமிழன் ரஜினி படத்திற்கு பால் குடம் எடுப்பதா? பீர் குடம் எடுப்பதா?? என்ற கவலையில் ஆழ்ந்து நித்திரையில் உள்ளான்.

மொத்தத்தில் பார்ப்பன அதிகார வர்க்கம் மீண்டும் தனது இன ஒடுக்குமுறையை பரிசீலித்து பார்க்கிறது!

புரியவில்லை. மத்தியில் இருபவர்களோ, அல்லது அதற்கு தமிழகத்தில் இருந்து முண்டு கொடுத்திருப்பவர்களோ பார்ப்பானிகளா?

நீங்கள் என்ன வஞ்சகத்தை இதில் செய்கின்றீர்கள் என்றால், பார்ப்பானியை மட்டுமே குற்றம்சாட்டி மற்றவர்களைத் தப்ப வைக்க முயல்கின்றீர்கள். எமக்கும் பிழையான கண்ணோட்டத்தை உருவாக்க முனைகின்றீர்கள்.

இந்தக் கட்டுரை எழுதிய பத்திரிகை கூடப் பார்ப்பானி தான் இயக்குகின்றான். அவனுக்குள்ள உணர்வு கூட திராவிடம் பேசுகின்ற எத்தனை பேரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின

வெளிப்படையாக இந்தியஇராணுவம் இலங்கைக்குள் வந்தால் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும் அதுதான் இப்படி ஏதாவது இரகசிய வழியில் வந்து முந்தி விட்டு போன மிச்ச தமிழர்களை ஏதாவது சாப்பிடலாம் என்று தான் வந்தவர்கள் ஆனால் என்ன செய்வது முந்திய மாதிரி இல்லையே இப்ப தமிழர் படை .

இந்தியன் தன்னை நம்ப வேண்டாம் என்று 1989களிலே அமைதிப்படை என்று வந்து ஆக்கிரமிப்பு படையாக மாறியதில் இருந்து உணர்த்திவிட்டது, அதற்கு பிந்தான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார் ஆனால் இப்போ மாறி ராஜிவ்காந்தியை கொன்றது தமிழர்கள்தான் அதுதான் இந்திய தமிழனை கடலிலும் , ஈழத்தமிழனை ஈழத்திலும் அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு உதவுகிறது;

தமிழக மக்களிடம் எமக்கு ஆதரவாக இருப்பதற்கு நாம் கோருவது என்னவோ பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்பது போல் உள்ளது,, அங்கு இருக்கும் ஒருசில தமிழ் உணர்வாளர்களைவிட ,,,,,,

Edited by கிருபா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலருக்கு பார்ப்பணரைக் குறை சொன்னவுடன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அதற்கு அவர்கள் கூறும் விளக்கம், "பார்ப்பணரைக் குறை கூறுவதன் மூலம் மற்றயவர்களை தப்ப விடுகிறீர்கள் " என்பதுதான். இங்கு பிரச்சனை பார்ப்பணர்களைக் குறை கூறுவதாலா அல்லது மற்றவர்கள் தப்பிவிடுகிறார்கள் என்பதாலா என்று தெரியவில்லை. மற்றையவர்கள் தப்பிவிடுகிறார்கள் என்பதால்த்தான் அந்தக் கவலை என்றால் தவறுதான். அதற்காக பார்ப்பணர்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இங்கு பார்ப்பணர்கள் மட்டும் விமர்சிக்கப்படுவதில்லை. கருணாநிதி, வைக்கோ, விஜயகாந், ரஜினி என்று எல்லோருமேதான் விமர்சிக்கப்படுகிறார்கள், ஆனால் விமர்சனத்தில் ஒருபகுதியை மட்டும் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு" பார்ப்பணர்களை விமர்சிப்பது தவறு" என்றால் என்ன செய்வது ?

ஆனந்த விகடன் தமிழ்நாட்டில் உள்ள 6.5 கோடி மக்களுக்காக விற்கப்படுகிறது. இதில் எத்தனை வீதம் பார்ப்பணர்கள்? அகில இந்திய அளவில் விற்கப்படும் ராமின்"இந்துவில்" எமக்குச் சார்பாத்தான் ஆக்கங்கள் வருகின்றனவா? அதையேன் சொல்ல மறந்தீர்கள்? அல்லது "இந்து" ஒரு பார்ப்பணப் பத்திரிகையே இல்லை என்று சொல்கிறீர்களா?

ஈழப் போராட்டத்தை நசுக்கவென இந்தியாவால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பார்ப்பணரின் பங்கு குறிப்பிடத்தக்களவு உள்ளது. இதை எவர் நினைத்தாலும் மறுக்க முடியாது. டிக்சீத், ராஜீவ், பண்டாரி, நாராயணன், சிவ ஷங்கர் மேனன்,ராம் மாணிக்கலிங்கம், ஜெயலலிதா, சும்ரமணிய சுவாமி, துக்ளக் சோ என்று ஒரு பட்டியலே இருக்கு. இவர்களுடன் பார்ப்பணர் இல்லாத அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இங்கு விமர்சிக்கப்படுவது ஈழத்துக்கு எதிரான இந்திய பார்ப்பணியர்கள் மற்றும், பார்ப்பணியர் அல்லாத இந்தியர்களின் செயல்ப்பாடுகள்தான். இதை பார்ப்பணியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகக் காண்பிக்க முயலும் எவரும் முதலில் பார்ப்பணியர்கள் ஈழத்துக்கு எதிராக எந்தத் துரோகமும் செய்யவில்லை என்று நிரூபிக்கட்டும். பின்னர் அந்த விமர்சனங்களை நீக்குவது பற்றிப் பார்க்கலாம் ! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விவாத தலைப்புக்கும் விவாதத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பத்திரிகா தர்மம் என்பது தனக்கு நியாயம் என்பதை எழுதுவதே. இதில் நாம் " அவன், இவன்" என ஏன் எழுமானங்களை எடுக்க வேண்டும்??

இந்தியாவில் தமிழர்கள் இரண்டாம் குடிமக்கள், பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கு அடிமைகள்(அ) விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கப்பட்டுள்ளது.

சோனியாவும், மன்மோகனும் பார்ப்பணரோ...?? இல்லை அந்த முட்டாள்களை ஆட்டு விக்கிறவைதான் பார்ப்பணரோ...??

ஈழத்தவை திசை திருப்ப எண்டே கங்கணம் கட்டீட்டாங்கப்பா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.