Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருக்காய் தன் உயிரை........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிருக்காய் தன் உயிரை........

சிறுகதை....

எம் தாய் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடந்துவிட்ட, நடந்து கொண்டிருக்கும் நடக்கப்போகும் இது போன்ற தியாகங்களால் நடந்தேறும் உண்மைச் சம்பவங்களை சிறிது கற்பனை கலந்து தந்திருக்கிறேன்

''எவ்வளவு நேரமாய் இவவை பார்த்துக்கொண்டு நிக்கிறது ஒரு நாளைக்கு ரியுசனுக்குப் போகாட்டி என்ன செத்தாபோயிடுவ'' என்று தனக்குள்ளே யாழினியைப் பேசிக்கொண்டான் ஆதவன்.

அந்த ஒடுங்கிய ஒழுங்கையில் இருபக்கமும் உள்ள பனை வடலியொன்றில் தனது சயிக்கிலை சாத்திவிட்டு வெள்ளை மணலில் தனது சயிக்கிலுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான் அவன். சிறிது நேரம் செல்ல பொறுமையிழந்தவனாய் சயிக்கிலையும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றதும் யாரோ கூப்பிடுவது கேட்டு திரும்பி பார்த்ததும் ஒரு கணம் சந்தோசம்.... மறுகணம் கோவம்....

ஆம் யாழினியேதான் ! ''ஏய்.... ஆதவன் நில்லு.....'' என்றபடி அடிக்கப்பிடிக்க அந்த மணலுக்குள் கால்கள் புதையப்புதைய வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் அவள். கிட்ட வந்தது அவன் சயிக்கில் சீற்ரை எட்டிப்பிடித்தவடி '' நான் லேற் என்று கோவமா ? நேற்று நடக்காத பாடமொன்றை வாத்தி இன்றைக்கு வைச்சிட்டுது, அதுதான் 1 மணத்தியாலம் சுணங்கிப்போச்சு....'' என்று ஒருவாறு படபடத்தபடி சொல்லி முடித்தாள் யாழினி. அவள் சொல்லி முடிக்கவும்... '' சரி பரவாயில்லை ''...... என்று அவன் சொல்லவும், ''...அது சரி.. ஏன் என்னை வரச்சொன்னனீங்கள்... எனக்கு இன்னும் சில மாதங்கள் தானே ஆ/ள் சோதனைக்கு இருக்கு, நான் படிக்க வேணுமல்லவா''.... என்றாள் யாழினி. ... ''அது சரி, இங்க மனிசன் கிடந்து கஷ்ரப்படுகிறான் என்று உமக்கு கவலையில்லையோ''......என்ற ஆதவனைப்பார்த்து, ''ஏன் சொல்ல மாட்டீங்கள்.. நீங்கள் பாஸ் பண்ணி பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துவிட்டு என்னை படிக்க வேண்டாமென்று சொல்லிறீங்களோ..? என்றால் செல்லமாகக் கோவித்தபடி.. யாழினி.

இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கவும், அவர்களின் பேச்சை குழப்புவது போல தென்றல் காற்றோ இதமாக வீசிக்கொண்டிருக்க, அந்தக் காற்றின் விசையில் வடலிகளின் ஓலைகள் சலசலக்க.. , பறவைகளின் ஒலியும், குருவிகளின் சத்தமுமாக அந்த மாலைப்பொழுதை அணுஅணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்... ஆதவன், அத்துடன் அவனின் முதலானதும், புதிதானதும் முடிவானதுமான காதலி பக்கத்திலிருந்தால் எந்த ஆணிற்கும் சொல்லவா வேண்டும். அவனுக்கோ அந்த மாலையின் ஒவ்வொரு வினாடியும் சொர்க்கத்திலிருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. ''அப்ப நான் வெளிக்கிடப்போறன் ஆதவன் 6.30 மனியாச்சு அப்பா தேடப்போறார்''.... என்ற யாழினியின் குரல் கேட்டு அந்தக் கணப்பொழுகளின் கனவிலிருந்து விடுபட்டவனாக..

''என்ன போகப்போறியள.. என்ன பகிடியா ? இன்னும் கதைக்கவே இல்லை... என்றபடி வேலியில்லாத அந்த காணியின் ஒரு மரத்தின் கீழ் கிடந்த மரக்குத்தியை காட்டி கொஞ்ச நேரம் அதில இருப்பம் வாங்கோ என அவன் கேட்க...'' இல்லை ஆதவன்.. யாரும் கண்டு போய் அப்பாட்டை சொல்லிட்டால் பிறகு அடிதான் விழும்...'' என்றபடி... அவள் மறுத்தாள். ''உங்கடை அப்பா என்றால் பெரிய சண்டியர் தானே அடிக்கிறத்துக்கு.. என்றான் நக்கலாக...!. ''ஓமோம், என்ர அப்பாட்ட அடிவாங்கியது மறந்து போச்சோ......'' என்றாள் சிரித்தபடி.., ''இல்ல அது உங்களை மடக்கிறத்துக்காகவல்லோ..... அடி வாங்கவேண்டி இருந்தது, ஆனால் இப்ப அந்த அலுவல் முடிஞ்சுது தானே ! என்று சொல்லி விட்டு.., எல்லாம் உங்களுக்காக தானே இவ்வளவும் கஸ்ரப்பட்டனான்..'' என்று சொன்னான் ஆதவன். ''அதுதான் பாவமென்று நானும் ஓமென்று சொன்னனான் '' என்றாள் சிரிது நக்கல் கலந்த வெக்கப் புன்னகையுடன்....'' யாழினி.

இவர்களின் காதல் என்ற பூ பூத்து சில வாரங்களும், அவர்கள் தனிமையில் சந்திக்கத் தொடங்கி சில நாட்களும் தான் ஆகியிருந்தது. ஆதவனுக்கு 2 அண்னன்மார்கள், 1 தங்கை, அனால் ஒரு அண்ணன் யாழ்ப்பாணத்தில் விமானக்குண்டு வீச்சில் அகப்பட்டு சில வருடங்களுக்குப் முன் இறந்துவிட்டான், வறிய குடும்பம் இவனது, அதனால் ஆதவனுக்கோ நாட்டுக்காக முன்னின்று போராடும் விடுதலை இயக்கத்துடன் தொடர்பிருந்தது அத்துடன் தாய் நாட்டுப்பற்றும் மேலோங்கியே இருந்தது.

யாழினி வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் அண்ணா, அக்கா, 2 தம்பிமார்கள், எமது மக்கள் படும் கஸ்ரங்களைப் பற்றி சில சமயம் யோசித்து இருப்பாள், ஆனால் பெரிதாக நாட்டைபற்றி சிந்திப்பதில்லை. கடந்த சில வாரங்களில் அவனுடன் நாட்டைப்பற்றி கதைத்தபடியால் தாய் நாட்டைப்பற்றியும், நம் மக்களைப் பற்றியும் அக்கறை கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

''அது சரி ஏன் வரச்சொன்னனான் தெரியுமா...? என்று கேட்டுவிட்டு , நான் லண்டனுக்கு படிக்கப் போகப்போறேன் தெரியுமா என் சித்தப்பா எனக்கு ''ஏரொனாட்டிகல் எஞ்ஜினியெரிங்'' படிப்புக்காக அட்மிசனும் விசா எடுத்து அனுப்பீட்டார் அடுத்த மாதம் வெளிக்கிடப்போறேன்'' என்று ஒருவாறு சொல்லி முடித்தான் ஆதவன்.

அவன் சொல்லிமுடித்ததைக் கேட்டதும், யாழினியின் கண்கள் சிறிது கலங்கியதை அவதானித்த ஆதவன் அவளைச் சமாளிக்க, '' என்ன யோசிக்கிறியளே ? '' என்று கேட்டபடி அவள் கையையெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் ஆதவன் . அவன் தொட்டதும் அவளின் அடக்கிவைத்திருந்த கவலையெல்லாம் வெடித்து கண்கள் வழியே நீராக வழிய ஆரம்பித்ததும் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் யாழினி. அவள் அழுகையைக்கண்டு மனம் கலங்கியவனாக....''ஏய்... யாழி.....அழாதேங்கோ'' என்றபடி அவளின் முகத்தை நிமிர்த்தினான் அவன். அவன் முகத்தை நிமிர்த்தவும் அவன் முகத்தை பார்க்க சக்தியற்றவளாக அழுதவண்ணம் அவன் மார்பில் சாய்ந்தாள் அவள்.

கவலையின் உச்சத்தில் இருந்தவளை சமாளிக்க வழியொன்றும் தெரியாதவனாய், அவளின் முகத்தை நிமிர்த்தி திடீரென.... அவள் இதழோடு இதழ் பதித்தான் ஆதவன்....!

காதலனின் முத்தத்தினால் ஏங்கி ஏங்கி அழுத அவளின் அழுகை நின்றுகொண்டது, இருவரும் பிரியப்போகும் நிலையினால் ஏற்பட்ட கவலையினால் ஏற்பட்ட முதல் அணைப்பினால் கவலை ஓரளவு மறைந்து பின்னர் அது அவர்களின் அன்பின் ஆழத்தின் தொடர்ச்சியாக நீளத்தொடங்கியதும் அவர்களது அணைப்பும் சில நிமிடம் தொடரவே காதலர்களின் எல்லையை சிறிது தாண்டிவிட்டிருந்தனர்........ அவர்களின் கலச்சார எல்லையையும் மீறிவிட்டிருந்தனர்.

இவர்களின் காதலின் தூய்மையை இயற்கையே காத்தது போல் அவர்களின் அருகிலிருந்த பனைமரம் ஒன்றிலிருந்து பனம்பழம் ஒன்று கீழே விழவே அந்த சத்தம் கேட்டு இருவருமே தங்கள் நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து கொண்டனர்.

ஆதவன் எழுந்தவுடன் '' யாழினி மன்னிச்சுகொள்ளுங்கோ.... தெரியாம...ஐ.. ஆம்... சொறி.... யாழி.. சரி வாங்கோ போவம் என்றதும், அவளும் பதிலுக்கு '' என்னால தானே இதெல்லாம் சரி நான் போட்டு வாறன்'' என்று நடந்ததற்கு ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டபடி புறுப்படத்தயாராகினர்.

'' சரி யாழி, அந்தச்சந்தி வரைக்கும் வாறன் பிறகு நீங்கள் போக நானும் அந்த பாதையால போயிடுவன்'' என்று சொல்லி அவன் பின் தொடர, அவளோ நடந்த சம்பவத்திற்காக அவனைப்பார்க்க கூச்சப்பட்டவளாக தலையைக் குனிந்தவண்ணம், ''இல்லை....இல்லை... இந்தப்பாதையில் சந்தியில் ஆமி நிப்பாங்கலல்லா, நீங்கள் உங்கடை பாதையாலேயே போங்கோ பயமில்லை'' எனவும் அவளின் சொல் கேளாதவனாய் அவனும் பின் தொடர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும், யாழினி கேட்டாள், சரி ஏன் இந்தப்படிப்பை தேர்வு செய்தனீங்கள் என ஆதவனோ பதிலுக்கு, இந்தப்படிப்பு முடித்துவிட்டு இங்கே வந்து எங்களை குண்டு போட்டு அழிக்கிற அவங்களை நாங்களும் அவங்கடை இடத்திலே போய் அழிக்க என் படிப்பு உதவுமல்லலவா.. என்று சொல்லவும், அவர்கள் சந்தியை அண்மிக்கவும்...... யாழினி..'' சரி ஆதவன் போட்டுவாறன்....'' என்று செல்ல இவனும் ..'' சரி கவனம் நாளைக்கு சந்திக்கிறேன்...'' எனச்சொல்லிவிட்டு தன் பாதையில் சயிக்கிலில் ஏறியபடி செல்லத்தொடங்கினான்.

அவன் அங்கிருந்து சென்றதும் யாழினி சிறிது தோரம் நடந்துவிட்டு ஒருகணம் திரும்பிப்பார்த்தாள் ஆதவனோ தூரத்தில் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவள் தன் நடையைத் தொடர்ந்தவண்ணம், சில வாரங்களுக்கு முன் அவனை விரும்பத்தொடங்கியதிலிருந்த அவன் வெளினாடு போகிறான் என்றதும் தனக்கு ஏன்... இந்தளவு கவலை தோன்றியது ? அவன் அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டானா...? தன்னை முழுதாகவல்லவா பறிகொடுத்திருப்பேன்...என்று பல கேள்விகளை தன்னுள் கேட்டபடி நடயைத்தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

சிறிது தூரம் சென்றது தூரத்தில் ஆதவனின் நண்பன் பாலன் சயிக்கிலில் வருவதைக் கண்டுவிட்டு, '' அடடா....இவன் வாரானே.... தெரிஞ்சுகொண்டும் கேள்வி கேட்டு கடிப்பானே....... என்று யோசிக்கவும் அவனும் வந்து அவள் முன்னால் சயிக்கிலை நிறுத்தியபடி..'' ஆதவனைக் கண்டனீங்களே....? என்று கேட்க யாழினி மனதில் நினைத்துக்கொண்டவளாக, ஆதவன் என்னோடுதான் இருந்திருப்பான் என்று தெரிஞ்சுகொண்டும் கேட்கிறான் பாரு..., இவனுக்கு கொழுப்புத்தானே... என்று நினத்தவளாய், ...இல்..லை அவர்.. இப்பத்தான் போறார் என , '' இல்லை அந்தச் சந்தியில் ஆமி நிக்கிறாங்கள் அதுதான் இவனைக்கண்டால் சொல்லுவம் என்று......'' சொல்லி முடித்தான். சரி நான் போய் பார்க்கிறன் நீங்கள் கவனமாகப் போங்கோ.. என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பவும்..., சரி என்று சொல்லிவிட்டு அவளும் தொடர்ந்தாள்.

சில நிமிட நடையின் பின் அவள் வீட்டை நெருங்கவும்... தூரத்தில் யாழினி....யாழினி... என்றபடி அவளைக் கூப்பிட்டபடி பாலன் சயிக்கிலில் வேகமாக வந்துகொண்டிருந்தான். அவனின் அவசரத்தை கண்டவள் ஏதோ பிரச்சனை போல இருக்கு என்று சிந்திக்கவும்...... அவனும் முகமெல்லாம் வேர்த்தபடி ...'' யாழி நான் போய் ஆதவனை..கண்டதும் இரண்டுபேரும் ஒண்டாய் போகும் போது..போகு..ம் போ...து, இவள் பொறுமை இளந்தவளாக..

''சொல்லுங்கோ...பாலன்.. சொல்லுங்கோ, ஆதவன் எங்கே..? சொல்லுங்கோ.. பாலன்..என... பதற, பாலன் இளைத்தபடி... ''தூரத்தில் ஆமி எங்களைக் கண்டுவிட்டு..... கைகாட்டி நிற்கச்சொல்ல.. நாங்கள் நிக்காம திரும்பி ஓடிவர....ஆமி சுட்டுட்டாங்கள்... அது அவனுக்கு குண்டு பட்டிட்டுப் போல இருக்கு ஆதவன் கத்தியபடி....என்னை ஓடச்சொல்லிப்போட்டு......''என்ன சொல்லிப்போட்டு....'' என்று அவள் கேட்கவும்..? '' இல்ல.. சொல்லிப்போட்டு ஒழுங்கையால திரும்பிட்டான்... அதன் பின் என்ன நடந்ததோ தெரியேலே..'' என்று சொல்லி முடிக்க முதல் '' சரி பாலன் வாங்கோ.... ஆதவனுக்கு என்ன நடந்துதோ தெரியல போய் பார்ப்பம் என்றாள்...'' அழுதபடி.

இருவரும் அவசரமாய் முச்சந்திவரைக்கும் வேகமாய் சயிக்கிலிலே போய் மறைந்து நின்று தூரத்தில் பார்க்க ஆமியின் நடமாட்டம் ஒன்றும் காணவில்லை. கையெல்லாம் படபடக்க யாழினி... '' எதால ஆதவன் போனவன்...? பாலன்..'' என கேட்க அந்த ஒழுங்கயால தான்...என்று காட்டவும்...இருவருமாக அந்த ஒழுங்கயில் சயிக்கில திருப்பி இருபக்கமும் ஆமி நிக்கிறாங்களோ என் கவனமாகப் பார்த்தபடி....சிறிது தூரம் செல்லவும்...... அவர்கள் கண்ட காட்சி...?, இருவரும் அப்படியே உறைந்து போயினர்.......!

ஆம்..ஆதவன் இரத்தவெள்ளத்தில் சயிக்கிலோடு கிடந்தான்.....,அதைக்கண்டதும்.. ''ஆதவ....ன் ..ஆத...வ....ன்... என்ற படி இருவரும் அவனை நோக்கி ஓடிப்போய் பார்த்ததும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..... அதவன் இறந்து விட்டிருந்தான்... அவன் இரத்தமெல்லாம் அவன் முகத்தில் உறைந்து கருப்பாக மாறிப்போயிருந்தது, அவன் இறந்து சில நிமிடமாகியிருக்க வேன்டும். அவன் இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டதும் ''...ஆதவ...... ஆதவ......ன்...... '' ..என்று அவனின் உடம்பு மேல் விழுந்து சத்தமாய் குலுங்கிக்... குலுங்கி... அழ ஆரம்பித்தாள்......''ஆதவா...அதவா....சொன்னேன் கேட்டியா...ஆதவன்...'' அவள் அழுகை நீண்டது.....

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பாலனில் கண்களெல்லாம் நீர் வழிய.... நிலமையை உணர்ந்து தன்னை சுதாகரித்தவனுக்கு.... அவளை தேற்ற முடியவில்லை. இருந்தும் அவளின் முகமெல்லாம் ஆதவனின் ரத்தமாய்...இருந்ததை கண்டவன் '' யாழி எழும்புங்...கோ.. எழும்புங்கோ...இதெல்லாம் எங்களின் சாபக்கேடு.... எங்கடை பூமில இந்த நாய்களின் கையால அடிபட்டுச் சாகவேனும் என்று தலை விதி போல...'' என்று சொல்லி அவளைத் தூக்கிவிட்டு... ''சரி...சரி நீங்கள் கெதியாய் வீட்டுக்கு போங்கோ..., நான் அவனின் அண்ணா, அப்பாவிற்கு விசயத்தைச் சொல்லி கூட்டிவாரன், மிச்சத்தை நாளைக்கு கதைக்கலாம்....'' என்று அவளை அவசரப்படுத்தினான்.

அவளோ அவனின் இறந்த உடலையும் விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் அவனில் விழுந்து அழ ஆரம்பிக்க... பாலன் அவளைத் தூக்கிவிட்டு...'' யாழி சொன்னாக் கேளுங்கோ..... , போ..ங்....கோ, எல்லாம் நாளைக்குப் பார்க்கலாம்'' என அவளும் இறுதியாய் ஒருதடவை அவனைப் பார்த்து விக்கி.. விக்கி.. அழுதுவிட்டு புத்தகப் பையையும் தூக்கியபடி அழுதவண்னம் வீட்டுக்கு ஓட ஆரம்பித்தாள். பாலனும் ஆதவனின் வீடு நோக்கி சயிக்கிலை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்றான்.

அவசரமாய் அழுதவண்ணம் யாழினி வீடுவந்த கோலத்தைப் பார்த்ததும் அவள் குடும்பத்தார் எல்லாரும் பதறியடித்து...'' ஏய்.... யாழினி... என்ன..என்ன... நடந்தது என்று வினாவ.. '' அம்மா.... ஆ..ஆத......ஆ.த..வ..னை ஆமி சுட்டுடாங்கள் அவன்...அவ.....ன் இறந்துட்டான்.....'' என்றபடி மறுபடியும் ஓவென அழ ஆரம்பித்தாள்.

அதை கேட்டதும் அவள் அம்மா..'' யார் அந்தப்பெடியனே...அப்பாட்டை அடிவாங்கிய..... அந்தப்...பெடிய...னே, சரி..சரி... அக்கம் பக்கத்திலே ஆரும் பார்த்த..... பெரிய பிரச்சனையாயிடும் உடுப்பெல்லாம் ரத்தமாய் இருக்கு ஓடிப்போய் குளி...கெதியா..ஓடு'' என விரட்ட ஏற்கனவே தன் கண்ணீரினால் குளித்து விட்டவளுக்கு அவர்களின் சொற்கள் காதில் விழவில்லை.

பின்னர் தாய் கோமதி அவளை கிணற்றடிக்கு கூட்டிகொண்டு போய் குளிக்கவார்த்த பின்னர், அவளின் அப்பா ''சரி அழுகையை நிப்பாட்டு, படிக்கிறத்துக்கு அனுப்பினால் அவனுடன சுத்திட்டு இன்றைக்கு இப்படி வந்து நிக்கிறாய், இண்டையோட உனக்கு அந்தப்பிரச்சனை தீர்ந்தது, என்று பணக்கார அப்பாவின் தொனியில் பேசவும் பதில் சொல்ல சத்தியற்றவளாக அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு படுக்கையில் சரிந்து கொண்டாள்.

காலை விடிந்தாலும் அது அவளுக்கு இருண்டதாகவே இருந்ததை உணர்ந்தவள் பாடசாலைக்கும் போகவில்லை ரியூசனுக்கும், போகவில்லை, ஆதவனின் நினவு அவளை விட்டு அகலவேயில்லை...!

''எத்தனை கனவுகளைச் சுமந்தவன், நாட்டு மக்களில் எவ்வளவு பற்றுக்கொண்டவன் , தன்னையும் எவ்வளவு நேசித்தவன், தன் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் விட்டு விட்டுவெளி நாடு சென்று படித்து புலி வீரர்களில் ஒருவனாய் தாய் நாட்டிற்காய் சேவை செய்யக் காத்திருந்தவன்..... ஒரு காரணமுமின்றி கொல்லப்பட்டுள்ளான்.... '' ஏன்... ..எதற்கு......எங்கள் மண்ணில் நாங்கள் ஏன் நாய் போல... சாகவேணும்....'' என.. பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் சில நாட்கள் சென்றுவிட விரக்த்தியின் விளிம்பில் இருந்தவளுக்கு மனதில் ஏதோ பதில் கிடைத்து.

அண்மிக்கும் பரீட்ச்சைக்காக கவனமாகப் படிக்க ஆரம்பித்தாள். அவள் தன் அம்மா, அப்பாவுடன் முன் போல் கல கலப்பாய் பேசாவிட்டாலும் அவள் படிக்கும் ஆர்வம் அவர்களை பிரமிக்க வைத்தது. அதுசரி ..''சனியன் கழிஞ்சுது தானே... அது தான் பிள்ளை..இப்ப இப்படிப் படிக்கிறாள்.. ...எப்படியோ நல்லது நடந்திட்டுது...'' என்று அவளின் காதுபடக் கூறியது அவலின் மனத்தில் காயத்தை ஏற்படித்தினாலும் தாங்கிக் கொண்டு... பரீட்சைக்காக படிக்கவும் பரீட்சையும் தொடங்கி இனிதே முடிந்தது.

தான் மிகவும் நன்றாய் செய்துவிட்ட திருப்தியில்.... நிம்மதியான நித்திரைக்கு படுக்கைக்கு சென்றதும்.... ஆதவனுடன் அவள் தன்னை முழுதாய் இழக்கப்போய் சிறு அரும்பில் தவறிவிட்ட அந்த மாலை நினைவு அவள் மனதில் தோன்றி மறைந்த நினைவுகளாய் நெஞ்சில் நெருட......., அவனுக்கு முழுதாய் தன்னையே அளித்திருக்கலாம் தானே... என்னை பாதுகாக்க என் வழியில் வந்துதானே தன்னையே இழந்துவிட்டான்...ஏன் இயற்கை எமை தடுத்தது...என்று மனதில் கேட்டவண்னம்..கண்ணால் நீர் வழிய நித்திரை அவளை அணைத்துக்கொள்ள நித்திரையாகிவிட்டாள்.

அடுத்தனாள் காலை ''என்ன 10 மணியாச்சு யாழினி இன்னும் எழும்பேல்...ல, யாழி.. ஏய்..யாழி... எழும்பு ! என்றபடி கோமதி கதவை திறக்க.... அம்மா கோமதிக்கு அதிர்ச்சி அவளை படுக்கையில் காணவில்லை, ஓர் கடிதம் மட்டும்.......'' அப்பா இங்க ஒருக்காய் ஓடிவாங்கோ....'' என்றதும் அவரும் வர கோமதி கடிதத்தை காட்டினாள்....'' அம்மா, அப்பா மற்றும் எல்லோருக்கும் ஆதவனின் சேவை தொடர நான் என்னை எங்கள் தாய் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன் என்னை தேடவேண்டாம்....அன்புடன் யாழினி....''

ஆம்.... இன்று காலை அவளுக்கு வன்னி மன்ணில் சுதந்திரமாய் விடிந்தது. '' அன்புடன் தலைவருக்கு.. என்பெயர் யாழினி, நான் என் ஆதவன் கண்ட கனவை நினைவாக்கவும் நம் விடுதலையை மீட்கவும் உங்கள் விடுதை இயக்கத்தில் புதிதாய் சேர்ந்த போராளி, நான் க/பொ/ த/ உயர்தரத்தில் அதி சித்தி பெறுவேன், அந்தப் பரீட்சை முடிவுடன் நீங்கள் என்னை உங்கள் விமானப்படையில் சேர்த்து என் ஆதவன் கன்ட கனவை என் மூலம் நிறைவேற்ற என்னை வெளி நாட்டுப் படிப்பிற்காய் அனுப்ப வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்'' என கடிததை முடித்துவிட்டு முதல் நாள் பயிற்சிக்காக ஆதவனின் நினைவுகளுடன் களத்தில் இறங்குகிறாள்........

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளம் கவிக்கு .......உயிருக்கு உயிராய் நல்லதொரு படைப்பு ஒரு சிறு பிழை யை தவிர

, உங்களிடம் கவி வளம் ,கதை எழுதும் திறமை இருக்கிறது மெருகூட்டி வளம் பெற வாழ்த்துக்கள் ,

( எ எல் ) AL என்பதை பரீட்சை நெருங்கு கிறது ,என்று சொல்லி இருக்கலாம் . மொத்தத்தில்

காதலுடன் ,இனிமையாக தொடக்கி ,சோகத்தில் முடிந்த கதை . மேலும் வளர வாழ்த்துக்கள் ..

Edited by nillamathy

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை இளங்கவி

தொடரட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவிற்கு

நான் ''A/ L'' பரீட்சை என்று குறிப்பிட்ட்டு சொன்னதற்கு ஓர் காரணம் உண்டு. கதையில் வரும் நாயகி இறுதியில் இயக்கத்தில் சேர்வதாயும், நம் தலைவரிடம் நாட்டுக்கு சேவை செய்ய மேற்படிப்புக்கு அனுப்பும்படியும் வேண்டுவதாகச் சொல்லியுள்ளேன். ''Aeronautical engineering'' படிப்புக்காக வெளி நாடு செல்வதென்றால் குறைந்தது A/L முடித்திருந்தால் தான் Admission எடுக்கலாம், அடுத்தது, பொதுவாகப் பரீட்சை என்று சொன்னால் O/L என்று வாசகர்கள் நினைத்துவிட்டால் 15 அல்லது 16 வயதுள்ள பிள்ளையை அதாவது வயது குறைந்த பிள்ளையை புலிகள் இயக்கம் சேர்ப்பதாக ஒரு கருத்து வருமல்லவா, அது புலிகள் இயக்கத்துக்கு கெட்ட பெயரல்லவா ? . இந்த மாதிரி குழப்பங்களை தவிர்க்கவே அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன்.

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனிவருக்கு

நன்றி எனது நீ......ளமான கதையை வாசித்ததற்கு,

'' முனிவரென்றால் பொறுமையென்றுதானே அர்த்தம்'' :D

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

நிளமான கதையை இப்பதான் வாசித்து முடிச்சேன் .....தொடரடும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனுக்கு

என் நீ......ளமான கதையை வாசித்து முடித்ததற்கு மிக்க நன்றி

இளங்கவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.