Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்டாசி 24ம் திகதி 10 மணியில் இருந்து 2மணிவரை நடக்கவிருக்கும் அமைதிப் பேரணியில் அமெரிக்க வாழ் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் எமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.

மேலதிக விபரங்கள் விரைவில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கிய நாடுகளின் 63வது கூட்டத் தொடருக்காக வரும் சிறிலங்கா அரச பயங்கரவாத தலைவர் 24ம் திகதி உரையாற்ற இருக்கிறார்.

எனவே அன்றைய தினம் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி எமது மக்களுக்காக குரல் கொடுப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு வருகை தரும் மகிந்தவை எதிர்த்து ஐ.நா. முன்பாக கண்டனப் பேரணி

[வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 11:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்காக எதிர்வரும் புதன்கிழமை (24.09.08) நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளார்.

இது தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:

தமிழர் தாயகத்தில் கொடிய தமிழின அழிப்பை நிகழ்த்தி வரும் முதன்மைப் போர்க்குற்றவாளி, உலக மனச்சாட்சியை ஏமாற்றுவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு வரவுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்" அமைப்பு தமிழர்கள் நியூயோர்க் நகரில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு அனுமதி பெற்று ஒழுங்கு செய்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை முற்பகல் 9:30 நிமிடம் முதல் பிற்பகல் 2:30 நிமிடம் வரைக்கும் நியூயோர்க் மாநகரில் முதலாம் அவென்யூவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக கூடி நமது எதிர்ப்பைப் பறைசாற்றுவோம்.

ராஜபக்ச வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைக் கண்டித்தும்-

வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையை வேண்டியும்

இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ரொறன்ரோவிலிருந்து பேரணிக்குப் போய்வர பயண ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. விபரங்களுக்கு தயவு செய்து வார இறுதி நாட்களில் தமிழ் வானொலி அறிவிப்புகளைக் கேளுங்கள்.

உலக உதவி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு, தமிழ் மக்களைக் கொன்றொழித்து மிகப்பெரிய இனச் சுத்திகரிப்புக்கு ஆயத்தமாகி வரும் மகிந்தவைக் கண்டிக்கவும், இந்த உலகத்திற்கு உண்மை நிலவரத்தை உணர்த்தவும் தமிழர்கள் எல்லோரும் திரண்டு வாருங்கள்.

நமது மக்களின் அவலங்களை நாம் தான் இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி

இன்று ஜக்கிய நாடுகள் முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி நினைத்ததை விட மிகவும் சிறப்பாக நடை பெற்றது.வழமையில் 200-300 பேருடன் நடை பெறும் ஆர்ப்பாட்டம் இம்முறை 1200-1500 பேர்வரை வந்து மிகவும் உற்சாகமாக எமது உறவுகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தார்கள்.கனடாவிலிருந்த

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் நீங்கள் நியுயோர்க்கில் இருந்து போய் பங்கேற்றிருக்கிறீர்கள். உண்மையில் வரவேற்க வேண்டிய விடயம். பல்லாயிரக்கணக்கானோர் எமது போராட்டத்தைக் காட்டி புலம்பெயர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே தவிர போராட்டத்தைப் பற்றிய அக்கறை கிஞ்சிதமும் அவர்கள் பலரிடம் இல்லை.

உண்மையில் இவ்வாறான போராட்டங்கள் தான் சர்வதேசத்திற்கு எமது போராட்டம் மீதான மக்கள் ஆதரவை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது. எதிரிக்கு தமிழ் மக்களின் பலத்தை அச்சத்தை உணர்த்தக் கூடியது.

என் போன்றவர்களுக்கு இவ்வாறான நிகழ்வுகளில் துரிதமாக வந்து பங்கெடுக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. பயண அனுமதிக்கே வாரக்கணக்கில் செலவிட வேண்டி இருக்கிறது. ஆனால் பல ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களுக்கு இலகுவாக போய் வர வசதி இருந்தும் அவர்கள் "பிசி" ஆட்களாகிவிட்டனர்.. தங்கள் சொகுசுக்காக..! ஆனால் சாமத்தியவீடு என்றால் போவார்கள்..! லூட்ஸ் மாதா கோவிலுக்கு கோச் பிடித்துக் கூட்டம் கூட்டமாக போவார்கள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ,ஈழப்பிரியன் உட்பட அனைத்து உள்ளங்களுக்கும். வேலை பளு காரணமாக இவ்வளவு தூரத்தில் இருந்து பங்கு பற்ற முடியவில்லை. மனம் வருந்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாதத்தில் எல்லோரும் படங்களைப் பார்த்திருப்பீர்கள்.கடைசி படத்தில் அரச சார்பாக தமிழ் தேசியத்திற்கு எதிராக 30-40 பேருடன் நடந்த காட்சியையும் பார்க்கலாம்.

உண்மையில் இவை எதைக் காட்டுகின்றன.

இணைய முடியாத இரு இனங்கள்

இணைய முடியாத இரு நாடுகள்

அரசுக்காக சிறிது கூட்டமும்

உரிமைக்காக எத்தனையோ மடங்கு பெரிய கூட்டமும் பக்கம் பக்கமாக உணர்ச்சி பொங்க குரல் கொடுத்ததையும் வெளியில் நின்று பார்த்தவர்களுக்கு மிகவும் சுலபமாக புரிந்திருக்கும்.

http://www.tamilnaatham.com/photos/2008/sep/20080925/USA/

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் ஐக்கியநாடுகள் முன்றலில் இடம்பெற்ற பேரணியில் கனடாவில் இருந்து சென்றவர்களுடன் அங்கு சென்று கலந்து கொண்டதன் மூலம் ஒரு அத்தியாவசிய வரலாற்றுக் கடமையில் பங்கெடுத்துக் கொண்ட திருப்தியைப் பெற்றுக் கொண்டேன். உலகிலேயே மிகவும் பிரபலமான இந்நகரத்தின் மையப்பகுதியில் எங்கள் குரல்களை ஓங்கி ஒலித்து பல்லின ஊடகங்களையும், பன்னாட்டுப் பார்வைகளையும் ஒருசேர பெற்றுக் கொண்ட ஒரு கவனஈர்ப்புப் போராட்டமாக இப்பேரணி இடம் பெற்றது என்றால் மிகையாகாது. சுமார் காலை 9.30 அளவில் ஆரம்பித்த இப்போராட்டம், தாயகத்தில் எம்மக்கள் எதிர்கொள்ளும் அவல வாழ்வை வெளிக் கொணரும் பதாதைகளைச் சுமந்தும், உணவு, மருந்து என்று எந்த ஒரு வசதியும் இன்றி வாழ்விடங்கள் இன்றி அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கான குரல் எழுப்பும் நிகழ்வாகவும் வடிவம் பெற்றிருந்தது.

இவ்வொலியெழுப்பும் பேரணியில் ஒரு பெரும் மக்கள் எழுச்சி புலம் பெயர்ந்த நாடுகளில் அதிலும் தமிழர் தரப்புகள் மேல் தடைகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் கனடா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாட்டில் தோற்றம் பெற்றுள்ளதை பறைசாற்றும் ஓர் ஆரம்ப நிகழ்வாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது என்பது மறுக்க முடியாது. எங்கள் இனத்தை காக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று உணர்வுத் தீ ஓங்க இப்போராட்டத்தில் இணைந்திருந்த தமிழ்மக்கள் தமிழீழத் தாயகத்திற்காக தங்கள் குரல்களை சுமார் 6-7 மணி நேரம் இடைவிடாது ஓங்கி ஒலித்தவண்ணம் இருந்தனர். மதியம் நெருங்க நெருங்க அங்கு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் நிறைந்து பக்கத்தில் வேறு நாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை குறுக வைத்து எங்களுக்காக எங்கள் பகுதியை விசாலித்துத் தந்த காவல்துறையினர் சில மணித்துளிகளிலேயே அவ்விடமும் நிறைந்து விட ஏற்கனவே மூடப்பட்டிருந்த சாலையை எங்கள் மக்கள் நிற்பதற்காக தயார்ப்படுத்தி உதவி செய்தார்கள்.

இந்த முன்றலிலேயே நீங்க வேறு நாடய்யா.. நாங்க வேறு நாடய்யா என்பது போல் சிங்கள அரசிற்காக அவர்களின் தேசியக் கொடி ஏந்திய 30 இலிருந்து நாற்பது வரையான சிங்களர்கள் இன்னொரு புறத்தில் மதியம்12 மணியளவில் வந்து நின்று விட்டு ஒரு சில மணிநேரத்திலேயே தங்கள் தேசியக் கொடி நிலத்தில் விழுந்து தேயத் தேய திரும்பிச் சென்றகாட்சியை காணக்கூடியதாக இருந்தது. இதில் உள்ள உண்மைகள் சிலவற்றை சொல்லித்தான் ஆகவேண்டும். ஏற்கனவே கனடாவில் இடம் பெற்ற எங்கள் கவன ஈர்ப்புகளில் கலந்து கொண்ட சிங்கள அரசாங்கங்கத்தின் புலன் விசாரணையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு எம் மக்களால் அடையாளங்காணப்பட்டவர்கள் பிக்குகள் போன்று காவியை உடுத்திக் கொண்டு ஐ. நா முன்றலில் நின்றதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

இங்கு எங்களுடன் பேசிக் கொண்ட பல்லின மக்களும் ஊடகங்களும் எங்களுடைய பிரச்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று நாங்கள் வினாவிய போது நாங்கள் அணிந்திருந்த ரீசேர்ட்டில் எழுதியிருந்த "Yesterdays Rwanda Todays Srilanka" என்ற வாசகத்தைச் சுட்டிக்காட்டி, இது போதும் எங்களுக்கு உங்கள் கதையைப் புரிந்து கொள்ள என்றார்கள். உடனடியாக இக்கவன ஈர்ப்பிற்கான பலன்கள்; தெரியாவிட்டாலும் தொடர்ந்து வரும் காலங்கள் இதற்கான பதில்களைச் சுமந்து வரும் என்பதில் ஐயமில்லை.

வல்வை சகாரா, ஈழப்பிரியன் மற்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா, சகாரா மற்றம், கலந்து கொண்ட அனைவருக்கும்.

எதிரி வெற்றி பெற விடக்கூடாது என்ற உணர்வு இப்போது எம்மக்கள் அனைவரினதும் மனங்களில் பெரு எழுச்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றதை உணரமுடிகின்றது. வழமையாக வன்னிமக்களின் துயர் தீர்க்க பங்களிப்பு வழங்காத மக்கள் மட்டுமல்லாமல், எதிராக நடந்து கொண்ட பலர் இம்முறை பங்களிப்பினை வழங்குவதை அறிய முடிகின்றது.

இந்த எழுச்சி தொடரட்டும். கனடாவிற்கு இலங்கை கிரிக்கட் அணி வருகின்றது. அதற்குள் எம்மக்களின் பிரச்சனையை எடுத்துக்காட்டும் வண்ணம் கனடா உறவுகள் பங்களித்திடல் வேண்டும்.

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி

இன்று ஜக்கிய நாடுகள் முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி நினைத்ததை விட மிகவும் சிறப்பாக நடை பெற்றது.வழமையில் 200-300 பேருடன் நடை பெறும் ஆர்ப்பாட்டம் இம்முறை 1200-1500 பேர்வரை வந்து மிகவும் உற்சாகமாக எமது உறவுகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தார்கள்.கனடாவிலிருந்த?? குறுகிய கால இடை வெளியில் 300-400 பேர் வரை வந்து மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார்கள்.வந்தவர்களில் யாழ் கள சகாராவையும் காணக் கூடியதாக இருந்தது.கனடாவிலிருந்து வந்தவர்கள் ஆரப்பாட்டங்கள் அடிக்கடி நடத்தி பழக்கப்பட்டவர்கள் போல் மிகவும் சிறப்பாக செய்தார்கள்.இடை நடுவில் அரச சார்பாகவும் எமதருகில் 50 பேர் வரையான சிங்கள மக்களும் வந்து அரசுக்காக குரல் கொடுத்தார்கள்.அவர்கள் வந்ததும் எம்மவர்கள் வானைப் பிழக்க குரல் கொடுத்தனர்.எந்த செவிடர் காதுகளிலும் விழாவிட்டாலும் எமது நாட்டில் அல்லலுறும் எம்மக்களுக்கு இச்செய்தி போய்ச் சேரும் போது எமக்காக குரல் கொடுக்க எம்மவர்கள் இருக்கிறார்கள் என்று நிச்சயம் உற்சாகமடைவர்.நாளை படங்களை தமிழ்நாதத்தில் பார்க்கலாம்.

நக்கல் தானே இது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.